Friday, April 06, 2012

மின் சார இலாகாவும் மின்சார வாரியமும்.......

மின்சார இலாகாவும் , மின்சார வாரியமும்..........
.
1954-55 ம் ஆண்டு மெட்றாஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷ்ன் பரீட்சை எழுதி மின்சார இலாகாவில் வேலையில் சேர்ந்தேன். மெட்டுர் லொயர் காம்பில் அலுவலகம். எஃப் எம்.ஃப்ரேசர் என்ற ஆங்கிலெயர் தான் சூப்பிரண்டு இஞ்சினீயர். அடிபடைச்சம்பளம். 45/ரூ. பஞ்சப்படி 22/ரூ. அதில் ரெவின்யூ ஸ்டாம்பிக்காக ஒரு அணா பிடித்துக்கொண்டு 66/ரூ 15 அணா கையில்வரும்.

லோயர் காம்பில் இரண்டே ஹோட்டல்கள் தான்.ஒன்று கிருஷ்ணா கபே.மற்றொன்று திருவல்லிக்கேணி லாட்ஜ். மதியம் சாப்பாடு 8அணா.மாதச்சாப்பாடு என்றால் 12/ரூ 8அணா.அதுவே எடுப்பு சாப்பாடு என்றால் 13/ரூ.நானும் என்நண்பர் பிரணதார்த்தி ஹரணும் எடுப்பு சாப்பாடுதான்.6/ ரூ8அணாவில் மதியச்சாப்பாடு 30 நாளுக்கும் முடிந்துவிடும்.

ஒரு அணாவுக்கு நான்கு இட்லி. அல்லது இரண்டு இட்லி ஒருவடை காபி சாப்பிடலாம். சாதா தோசை அரையணா. வெண்ணை ஊத்தப்பம் முக்கால் அணா.(ஒரு அணா என்பது இன்றய கணக்கிற்கு 6பைசா.) என் சம்பளத்தில் மாதம் 20/ரூ வீட்டிற்கு அனுப்பிவிடுவேன்.

மெட்றாஸ் மாகாணத்தில் மின் உற்பத்திக்காக மெட்டுர் சிஸ்டம்,பாபநாசம் சிஸ்டம் என்று இருந்தது. பாபநாசம்சிஸ்டம் மதுரையில் இருந்தது. இது தவிர பைகாரா, எண்ணூர் இருந்தன. ஈரோட்டில் விநியோகப்பிரிவு இருந்தது. பாவநாசத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக தனி கம்பெனிகள் இருந்தன. திருநெல்வேலி-தூத்துக்குடி எலக்டிரிக் சப்ளை கார்ப்பரெஷன் என்ற கம்பெனி ஈனக்கிரயத்திற்கு வாங்கி லாபத்திற்கு விநியோகிக்கும். புதுக்கோட்டை,வடஆற்காடு,தென் ஆற்காடு என்று கம்பெனிகள் இருந்தன . டாடாவுக்குச்சொந்தமானவை.

காமராஜர்தான் முதலமைச்சர். பி.ராமமூர்த்தி, போன்றோர் எதிர்க்கட்சி வரிசையில்".தனியார்முக்காதுட்டு போடாமல் லாபம் சம்பாதிக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கோடியில் அணைகட்டுவது அரசாங்கம். பலனை அனுபவிப்பது தனியார்" இதன மாற்றவேண்டும் என்று அவர்கள்கோஷம்வைத்தார்கள்."ஜனநாயகம் என்பதுபெரும்பான்மையின் ஆட்சி. அதேசமயம் சிறுபான்மை கருத்து பொதுநன்மை பயக்கும் என்றால் அதனையும் அரவணத்து செல்லவதும் ஜனநாயகத்தின் பண்பில் ஒன்று" என்று அன்றய தலைவர்கள் கருதினார்கள். காமராஜர் முடுக்கிவிட்டார். திட்டங்கள் வகுக்கப்பட்டன.

தனியார் வசமிருந்த விநியோக உரிமை பறிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் நிர் வகிக்க தனி வாரியம்" மின்சார வாரியம்" அமைக்கப்பட்டது.

மின் வாரியத்தின் முதல் தலைவராக எஸ்.கே .செட்டுர் என்ற இஞ்சினியர் வந்தார்.

15 comments:

S.Raman, Vellore said...

நல்ல தகவல் தோழரே, தமிழக காங்கிரஸ் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறது. மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியோ மின்சாரச்சட்டம் கொண்டு வந்து மின்சார வாரியங்களை சீரழித்து விட்டார்கள். பொதுத்துறி நிறுவனங்கள் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் துவக்காததும், தனியார் நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி வருவதும் தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி விட்டது.

சிவகுமாரன் said...

"சாலை வெளக்குன்னா...ன்
சர்க்காரு வசதியின்னா..ன்
....................................
...................................
போட்ட வெளக்கு கூட சின்னாத்தா
இப்ப
பொசுக்குன்னு நின்னு போச்சு
செல்லாத்தா "
என்று என் சித்தப்பா சுந்தர பாரதி பாடினார்.
இன்னும் இருளில் தான் இருக்கிறோம்

hariharan said...

நான் உமி கொண்டு வாரேன், நீ அரிசி கொண்டு வா, ஊதி ஊதி திங்கலாம். இது தான் PPP model development.

kashyapan said...

சிவகுமரன் அவர்களே! தோழர் சுந்தர பாரதி அவர்களீன் தொகுப்பு ஒன்றை முடியுமானால் கொண்டு வாருங்களேன்! இன்றய இளைஞர்கள் பயன் படட்டும்---காஸ்யபன்.

அப்பாதுரை said...

மின்சாரம் உற்பத்தியும் வினியோகமும் தனியார் வசம் ஒப்படைத்தால் மின் தட்டுப்பாடு இருக்காது என்று நம்புகிறேன். அரசாங்கம் கை வைத்தால் தான் ஊழலும் செயலின்மையும் உண்டாகின்றன.

எதற்கெடுத்தாலும் அரசாங்கம் தலையிட வேண்டும் என்ற சோம்பேறிகள் வாதம் பழைய காங்கிரசின் ஆசீர்வாதம்.

அப்பாதுரை said...

அட்டகாசமான வரிகள்..
நன்றி சிவகுமாரன்.
காஸ்யபன் சொல்வதை வழிமொழிகிறேன்.

சிவகுமாரன் said...

ஏற்கெனவே 10 வருடங்களுக்கு முன்னர் கவியருவி என்ற பெயரில் தொகுப்பு வெளியிடப்பட்டது. தோழர் பொன்னீலன் வெளியிட்டார். தோழர்கள் கந்தர்வன், முத்துநிலவன் போன்றோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது.என்னிடம் சில பிரதிகள் உள்ளன. கே.எ.குணசேகரன் அவர்களின் " அக்கினிஸ்வரங்கள்" என்னும் தொகுப்பில் சில பாடல்கள் வெளியிடப்பட்டு நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சிகளில் இன்றும் பாடப்படுகிறது. என் சித்தப்பா பிள்ளைகளின் அனுமதி பெற்று சிலவற்றை என் வலையில் வெளியிட எண்ணம்.

சிவகுமாரன் said...

மின்சாரம் உற்பத்தியும் வினியோகமும் தனியார் வசம் ஒப்படைத்தால் மின் தட்டுப்பாடு இருக்காது என்று நம்புகிறேன்.


தனியார் வசமா? அதுவும் அய்யாவிடம் சொல்கிறீர்கள் .... எவ்வளவு தைரியம் உங்களுக்கு அப்பாத்துரை?

kashyapan said...

அப்பதுரை அவர்களே! ஊழலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிலும் ஏற்பாடுகள் உண்டு.Mind the worrd.(கட்டுப்படுத்த).they will never eliminate it. It is Part of their game. The call it as lobying. history book என்றொரு திரைப்படம் பார்த்தேன்.ஆப்பிரிக்க, ஆசிய, தென் அமே ரிக்க கூட்டு தயாரிப்பு.மூலதனத்திற்காக இந்த முதலாளிமார்கள் எவ்வளவு அரக்கத்தனமாக நடந்து கொண்டார்கள் என்பது சித்தரிக்கப்பட்டுள்ளது.மூலதனத்திற்காக கட்ல் கொள்ளையில் ஈடுபட்டர்கள் மிகச்சிறந்த கொள்ளைகாரனுக்கு ."சர்"பட்டம் கொடுத்தார்கள். வால்டர் ஸ்காட் என்ற கொள்ளைக்கரன் சர் வால்டர் ஸ்காட் ஆனான்.அமெரிக்காவில் அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.இந்தியாவில் அதனை விற்க சட்டதிருத்தம் வந்தது.அதனை எதிர்த்தவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே! அம்புட்டு பயபுள்ளைகளும் திருத்தத்தை ஆதரித்தார்கள். இப்போ கூடங்குளம்! ....விடுங்கய்ய! சாபமிட்டுவிட தோன்றுகிறது!---காஸ்யபன்

அப்பாதுரை said...

முடிச்சு போடுவது தெரியாமல் முடிச்சு போட்டால் நன்றாக இருக்கும் - நீங்கள் சொல்வது மொட்டைத்தலை முழங்கால் கேஸ் போலத் தோணுதே சார்?
ஊழல் இல்லாத இடமில்லை சரியே. ஊழலை எதற்காக ஒழிக்க வேண்டும்? ஊழலின் விளைவு பாமரனின் பாமர வாழ்க்கையை பாதிக்காமல் இருந்தால் போதும்.

அமெரிகாவின் lobbyist நோக்கமே வேறே சார். நல்லதோ அல்லதோ, ரொம்ப strategic நோக்குடன் நடபப்வை. சாதாரணன் வீட்டில் மின்சாரம் தேவைப்படும் பொழுது கிடைக்க வேண்டும் என்பதற்கும் lobbyக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நாட்டில் மின்சாரம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் இரண்டே வருடங்களில் மின்சார உற்பத்தி பல மடங்கு பெருகும். ஆயிரக்கணக்கில் கிளம்பியிருக்கும் பொறியியல் கல்லூரிகள் துணையுடன் சில enterprising தனியார் கம்பெனிகள் பத்தே வருடங்களில் solar/wind/hydro மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு/இந்தியா முன்னணியில் வரச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஐடி செலாவணி தாகத்தில் சீரழிந்து கொண்டிருக்கு அறிவும் திறனும் உண்மையான உற்பத்திப் பாதையில் போகும் வழி பிறக்கும்.

price fixing மற்றும் fair trade கான மேற்பார்வை, உற்பத்தி வரிவிலக்கு - இதற்கு மட்டுமே அரசாங்கம் தலையிட வேண்டும். நடக்கிற காரியமா?

எதற்கெடுத்தாலும் இன்னொரு நாட்டை பின்பற்றி (அதுவும் என்ன செய்கிறோம் என்ற அறிவு இல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு போராடும் காட்டுக் கூட்டம்..) ஜபானில் பூகம்பம் வந்து சுனாமி ஏற்பட்டு அணு உலை வெடித்தால் அதற்காக் இந்தியாவிலும் சாத்தியம் வரும் என்று கொடி பிடிக்கும் - சோத்துக்கு லாட்டரி அடிக்கும் நிலையை மறந்து - கூட்டத்தின் நடுவில் தனியாராவது முன்னேற்றமாவது. குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அரசியல்வாதிகள் கைகளில் சிக்கித் தவிக்கிறோம் இந்தியாவில். இந்திய அரசாங்கம் இன்னும் ஆசைகுழந்தைகளின் அறிவுகிழங்களின் கைகளில் சிக்கித் தவிப்பது தான் பரிதாபம்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! மொட்டை தலை, முழங்கால் இல்லாம logical லா லட்சம் தடவை சொல்லியாச்சு. "சாமீ! அத்தனை சாமியார்களுக்கும் தெரியும்.கடவுள் இல்லை.வரவே மாட்டர்னு" பின்னயும்,தியானம் பண்ணு,பஜனை பண்ணுங்கான்.தனியாராவது! மக்களுக்கு நன்மை செய்வதாவது.பாத்துபொழைச்சுக்கிடும் அவ்வளவுதான்---காஸ்யபன்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! மொட்டை தலை, முழங்கால் இல்லாம logical லா லட்சம் தடவை சொல்லியாச்சு. "சாமீ! அத்தனை சாமியார்களுக்கும் தெரியும்.கடவுள் இல்லை.வரவே மாட்டர்னு" பின்னயும்,தியானம் பண்ணு,பஜனை பண்ணுங்கான்.தனியாராவது! மக்களுக்கு நன்மை செய்வதாவது.பாத்துபொழைச்சுக்கிடும் அவ்வளவுதான்---காஸ்யபன்.

kashyapan said...

அப்பதுரை அவர்களே! கண் சூட்சுமம் பத்தல! ஆனா இந்த :-) குறியீட நிறைய பார்த்திருக்கிறேன். அர்த்தம் என்ன? சொல்லுமே!---காஸ்யபன்

அப்பாதுரை said...

சிரிக்கும் முகம் (பக்கவாட்டில் பார்த்தால்).

உங்க கடைசி கமெந்ட் நகைச்சுவையை ரசித்தேன் என்று சொல்ல வந்தேன்.

கணினி செல்போன் யுகத்தின் விளைவு.

ராம்ஜி_யாஹூ said...

nice useful post sir