Sunday, February 09, 2014

"நீயா நானா "

"சபாஷ் ! கொபி நாத்  அவர்களே! "


தனி நபர்களிடம் கடன் வாங்கி சீரழிந்தவர்களின் பாடுகளையும், தேவையற்ற ஆடம்பர செலவிற்காக கடன்கொடுக்கும் கந்து வட்டிக்காரர்களையும் வைத்து ஒரு talk show கடந்த ஞாயிறு விஜய் டி .வி யில் நடந்தது !

இதில் வங்கி அதிகாரிகளும் பங்கு பெற்றனர் !

தனிநபர்களுக்கு வங்கிகள்  கடன் கொடுப்பதில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது !

"தனி நபர்களை நெரடியாகச் சந்தித்து தனியார்கள் கடன் கொடுக்கிறார்கள் ! நாங்கள் வெறும் பேப்பரையும், அதில் ஒட்டியிருக்கும் புகைப்படத்தையும் மட்டுமெ பார்க்கிறோம் ! முழுக்க முழுக்க கடன் அளிக்கும் அதிகாரியின் விருப்பு வெறுப்பிற்கு உட்பட்டே அளிக்கப்படுகிறது ! அவருடைய பொறுப்பில் கடன் வசுலும் வந்து விடு கிறது ! அதனால் அதிகாரிகள் அதில் அதிகம் சிரத்தை காட்டுவதில்லை " என்று அதிகாரிகள்  தரப்பில் விளக்கம் கூறப்பட்டது !!

கோவையிலிருந்து வந்த ஒரு அதிகாரி பேசினார் ! 

"பொதுவாக சில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடன் அளிக்கப் 
படுவதில்லை என்பது உண்மையா ? என்று கோபிநாத் கேட்டார் !

"ஆம்"

"கோவையில் அப்படிப்பட்ட பகுதிகள் உண்டா ?"

"உண்டு"

"எந்தப்பகுதி?"

"உக்கடம்"  


"ஏன் ?"

(மௌனம் )

"சொல்லுங்கள் ஏன் ?"

"எல்லாருக்கும் தெரியும் ?"

கோபி கன்னம் புடைக்க,கண்கள் சிவக்க உரத்த குரலில்
"அவர்கள்  முஸ்லிம்கள் ! தினக்கூலியில் வாழ்பவர்கள்"
அரங்கம் திகைத்து நின்றது !

"இது தவறில்லையா ?"

"தவறுதான் "

"உங்கள் மேல் அதிகாரிகளிடம் இதை சொல்லியிருக்கிறிர்களா ?'

தன்னந்தனியாக நிகழ்ச்சியைப்ப் பார்த்துக் கொண்டிருந்த நான் கைதட்டி
கோபியை  பாராட்டினேன்!

விஜய் டிவியைப்பார்க்கும் தமிழ் தெரிந்த நூத்துச் சொச்சம் நாட்டிலும் பார்த்திருப்பார்கள் ! ஏன் ? அலைக்கற்றை விச்சிர்குள்  வரும் சந்திரன்,செவ்வாய் கிரகத்தில் வாழும் மனிதர்கள்  இருந்தால் அவர்களும்
  பார்த்திருப்பார்கள் !

என்ன கேவலம் !

நமது நிதி அமைச்சர் அந்த "சிவகங்கை சின்னப்பையன் " அடுத்த ஆண்டில் ஆயிரத்துக்கும் அதிக மான  வங்கி கிளைகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் !!

" புடுங்கவால ?"














3 comments:

veligalukkuappaal said...

1) தோழர்! உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது; இதில் அமெரிக்காவின் எரிபொருள் எண்ணெய் அரசியல்தான் மையம் என்பதை உலகம் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது; இஸ்லாமியர்கள் மீதான இந்தப் பொய்ப்பிரச்சாரத்தின் இந்திய ஏஜெண்டுகள்தான் ஆர் எஸ் எஸ் பிஜேபி கூட்டணி; காங்கிரஸ் ஒரு மிதவாத இந்துத்துவா சக்தி, அவ்வளவுதான். இந்த ’இஸ்லாமிய தீவிரவாதிகள்’ என்ற கருத்தாக்கத்தை இந்திய சமூகத்தின் சாமானியர்கள் தொடங்கி ஆகப்பெரும் ஆக்ஸ்ஃபோர்ட் அறிவாளி நான்தான் என்று சொல்லிக்கொண்டு திரியும் படித்த மனிதர்களின் மூளை வரையிலும் பதிய வைப்பதில் ஆர் எஸ் எஸ் பிஜேபி கூட்டணி வெற்றிபெற்றுள்ளது; இந்திய சமூகமே இப்படியான கருத்தாக்கத்துக்கு பலியானபின் அரசு உயரதிகாரிகள், அதாவது கொள்கை முடிவுகள் எடுக்கும் முக்கியமான இடத்தில் இருப்பவர்கள்வரையும் இந்தக் கண்ணோட்ட்த்தோடுதான் சக இஸ்லாமிய ஊழியர்களையும் சாமானிய இஸ்லாமிய மக்களையும் அணுகுகின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை; அப்படியிருக்க இந்த வங்கி அதிகாரி மட்டும் விதிவிலக்காக இருப்பாரா என்ன? இந்த பிம்பத்தை கலைப்பதில் இட்துசாரிக்கட்சிகளும் தமுஎகச போன்ற முற்போக்கு கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புக்கள் மட்டுமே கவலையுடன் செயலாற்றி வருகின்றார்கள்.
2) கோவையில் 1997 கலவரத்துக்குப்பின் அங்கே நுழைந்து ஒரு சமாதான முயற்சியில் இறங்கக்கூட அரசியல் கட்சிகளும் கூட தயங்கி நின்றபோது முதல்முதலாக மக்கள்மத்தியில் ஒரு பொதுமேடையை அமைத்து இஸ்லாமிய இந்து மக்களை ஒருங்கிணைத்து ஒரு பெருமைக்குரிய கலை இலக்கிய இரவை நடத்தியவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரே என்பதை மீண்டும் மீண்டும் நாம் பதிவு செய்ய வேண்டும்; அந்த மேடையில் தமுஎச நெஞ்சம் நெகிழத்தக்க பல விசயங்களை செய்த்து; அவற்றி நீங்களே சொன்னால்தான் நன்றாக இருக்கும்.

3) 1997 கலவரம் நடந்த பலப்பல வருடங்களுக்குப்பிறகு நான் கோவை சென்றிருந்தேன்; உக்கடம் கோட்டைமேடு பகுதிகளில் அப்போதும் திரும்பிய திசையெங்கும் போலீஸ் செக்போஸ்டுக்கள்; அதாவது உள்ளூரில் இருக்கின்ற இஸ்லாமிய மக்கள் ஒரு நாளைக்கு பத்து முறை வீட்டை விட்டு வெளியே வந்தாலும் கடைவீதிக்கு போனாலும் பத்துமுறையும் போலீஸ் சோதனைக்கு உள்ளாகவேண்டும் என்பதை நேரடியாக பார்த்து காறித்துப்பினேன்; சொந்த நாட்டின் மக்களை அரசுநிர்வாகமும் போலீசும் சேர்ந்து இப்படித்தான் வெறுப்பேற்றி தீவிரவாதியாக மாற்றுகின்றார்கள் என்பதில் கருத்து வேறுபாடு உண்டா? உதாரணம் டிசம்பர் 6. மசூதியை இடித்த அயோக்கியர்கள் இசட் பிரிவு பாதுகாப்புடன் இந்தியாவெங்கும் திமிரோடு திரிய சாமானிய அன்றாடக்கூலி இஸ்லாமியர்களை ரயில் நிலையம் பேருந்து நிலையங்களில் போலீஸ் படுத்தும்பாடு உச்சக்கட்ட போலித்தனமானதும் அருவருப்பானதும் அசிங்கத்தின் உச்சமும் ஆகும்.

கரந்தை ஜெயக்குமார் said...

நினைக்கவே வருத்தமாக இருக்கிறது ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்