Wednesday, June 29, 2016







"படித்தவன் பொய் சொன்னால் "

"ஐயோ ! ஐயோ ! என்று போவான் "

-------பாரதி 





மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என்று பத்திரிகைகள் அலறுகின்றன.நேற்றே தொலைக்காட்ச்சிகள் ஒப்பாரிவைக்க ஆரம்பித்து விட்டன.

7000/- ரூ யிலிருந்து கடைநிலைஊழியருக்கு  சம்பளம் 18000/_ ரூ யாக உயர்ந்துள்ளது என்று கூவுகின்றன .

சினிமா கொட்டகைல கடலை விக்கறவன் கூட சர்க்கார் ஆபிசுல பியூனாக போயிறலாமா னு நினைக்கான் .

இது   ஜமக்காளத்துல  கடைஞ்சு  எடுத்த போய் . படிசச  அதிகாரிகள் சொன்ன போய் .

உண்மைதான் என்ன ? மத்திய அரசு பணில உள்ள மிகக்குறைந்த ஊதியம் பெரும் கடைநிலை ஊழியருக்கு இன்று 19000/- ரூ சம்பளம் என்று வைத்துக் கொள்வோம். 

இதில் 7000/-ரூ அடிப்படை சம்பளம். பஞ்ச,படி,வாடகை படி ,அது இதுனு 12000 /-ரூ கொடுக்கான் . மொத்தம் 19000 /- இப்பமே வாங்குதான்.

பத்து வருசத்துக்கு ஒருதரம் பஞ்சசப்படியை  அடிப்படை சம்பளத்தோடு சேத்துரணம் னு நீதி மன்ற தீர்ப்பு இருக்கு.

கமிஷன் காரன் என்ன செஞ்சான் பஞ்சபடில 12000/- ரூபாய எடுத்து அடிப்படை சம்பளத்துல செத்துட்டான். இப்பம் அடிப்படை சம்பளம் 18000/-ஆகி மிசசமுள்ள  1000 /- ரூ பஞ்சசப்படியோட சேர்த்து அதே 19000?- தான் . இது சாம்பிள் தான.

7000 /-ரூ அப்படியே 18000/-ரூ ஆயிட்டதுன்னு  இதை தான் சொல்லுதானுக.   

படிசச  பயலுக பூறா போய் சொல்லுதானுக . 

இந்த பொய்யாய் எதிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் போராடுவோம் னு அறிவிசசி  இருக்காங்க  !

அரசு இறங்கும் .!

இறங்கத்தான் வேணும் !!!

 






Monday, June 27, 2016







குழந்தை  வளர்ப்பு ,

பெற்றோர் ,

நாறும் பூ  !!!




திருநெல்வேலி தசசநல்லூர் ல இருக்கற வேதிக் பள்ளில கருத்தரங்குநடந்திருக்கு.நாறும்  பூ  நாதன் ,பூதத்தான் ஆகியோர் பேசியுள்ளனர் . தலைப்பு குழந்தை   வளர்ப்பும்,பெற்றோர்களும் என்பதாகும்.

எனக்கு வயதாயிட்டு . ஆனா நானும் பெற்றோரா இருந்தவனாதானே ! என்னுடைய அனுபவம் ரொம்ப "unique "

எனக்கு ஒரே பையன்.பட்டப்படிப்பு முடிஞ்சதும் வடநாடு  போயிட்டான்.அங்கதான் pg ,law படிசசு  வேலையும் பாக்கான். நம்மளுக்கு ஒரு நப்பாசை. நம்ம தின்நேலி  பிள்ளையை கட்டிபோடனும் னு .எல்லாம் கூடி வந்தது.. நல்ல செவத்த பிள்ளை .பாளையன் கோட்டை . Bcom 1st class . விட்டு வேலைலமாகா கெட்டி .சாம்பார் பண்ணினா திருநெல்வேலி ஜில்லாவே மணக்கும். கலயாணம் முடிஞ்சுது .

ரெண்டு வருஷம் கழிஞ்சு பேரன் பொறந்தான்.அப்பம் என் அம்மை இருந்தா. எம் பேரத்தான் வைக்கணும்னு சொல்லிட்டாங்க.சாண்றித்ழ படி   சியாமளம் .கதை எழிதும் போது காஸ்யபன். அரசியல் கட்டுரைனா திலீபன் . எதை வைக்க.எங்க அம்மை ஒரே போடா போட்டது . குடும்ப பெரிதான வைக்கணும்னு . குடும்ப பெரு "பதஞ்சலீஸ்வரன் "    பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எவருமே கவலைப்படவில்லை.

பையன் வடநாட்டுக்குடும்பத்ததோட போயிட்டான். ஒருவருசத்துக்கு மேல  ஆயிட்டது. பேரன் பாக்கணும்னு சொல்லி சொல்லி ஆறுமாதம் ஆகி வந்தாங்க. பேரன் வளந்துட்டான். நிக்கவே மாட்டேங்க. ஓட்டம் தான். எங்க விட்டு அம்மாவுக்கு அவனை கொஞ்சத்தான் நேரம். இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு விட்டுவிடா போயி காட்டுவா . அவனை "நிகால்" னு கூப்பிட்டுத்தாங்க . "நிகால் காஷ்யப் " னு வடநாட்டு பேரை வச்சுட்டாங்க>

 வந்ததிலிருந்து மருமக தான் சமையல். எங்க விட்டு அம்மா தோட்டத்துல துணிகளை காயப்போட்டுக்கிட்டு இருந்தாங்க.மருமக சாம்பார் வைக்கா . வாசன தூள் கிளப்புது. பேரன் அவளை வேலை செய்யவிடாமா சேட்டைபண்ணிக்கிட்டுஇருக்கான். அவன் தூக்கிகிட்டு வந்து"மாமா! இவனபாத்துக்கிடுங்கசாம்பார் கொதிக்குது.  இறக்கிப்புட்டு வாங்கிடுதேன்னு " மருமக பேரனை எங்கிட்ட  கொடுத்தா.

அவனை தூக்கினேன் . 

"சக்கரை பயலே "னு கொஞ்சினேன் .

கண்ணாடியை புடுங்கி எரிஞ்சான். ஒரே சிரிப்புதான்.

"அயோக்கிய பயலே"னு கொஞ்சினேன் .

காத கடிசான் .முக்கைகிள்ளினான் .

சுகமா இருந்தது.

திடீரென்னு வராண்டாவில பிளாஸ்டிக் வாளி "டோம்" னு  கேட்டது. எங்க விட்டு அம்மாதான்.கோபமோ . பயமா இருந்தது. "சமாளிக்க என்னம்மா ? "என்று கேட்டேன்.முகம் எள்ளும் கொள்ளு வெடிக்கிற பதத்துல  இருந்தது. கண் சிவந்துஇருந்தது. விசும்பிடு வாளோ  என்று தோன்றியது.

"ஊரா விட்டு பிள்ளையை இம்புட்டு   கொஞ்சசுதேளே ! எம் பிள்ளையை இப்படி ஒருநாள் தூக்கிவசசு  கொஞ்சியிருக்கேளா?" 

முந்தானையால் முகத்தை முட்டிக்கொண்டு உள்ளே போய்விட்டாள் .


வே ! நாறும் பூ ! நேர பஸ் பிடியும் ! பாளை  போய் அங்கன மன  நல டாக்டர் ராமானுஜத்தை விளக்கம் கேட்டு எனக்கு சொல்லும் வே ! நல்லா  இருப்பெரு !!!  


 





 













Sunday, June 26, 2016











"ஆரம்பம் "







சட்டம் படித்து,வக்கீல் தொழில் பார்க்கும் இந்தியர்களையும் "மாஜிஸ்திரேட்" பதவியில் அமர்த்தவேண்டும் என்று தீர்மானம் போட்டுத்தான் காங்கிரஸ் கட்சி ஆரம்பமாகியது.

"சுதந்திரம் என் பிறப்புரிமை " என்று கோஷம் போட்டார் திலகர். அவரை ஆதரித்த வ.உ.சியும், பாரதியும்,சிவாவும் திலகரோடு காங்கிரசால் கைவிடப்பட்டனர் .

சுதந்திரத்திற்கு இப்போது அவசரமில்லை என்று வாதிட்டனர் கோபாலகிருஷ்ண கோகலேயும் அவருடைய ஆதரவாளர்களும்.

என்னுடைய அரசியல் "குரு "கோகிலே தான் என்று அறிவித்தார் அண்ணல் காந்தி   அடிகள். 

அஞ்சி நடுங்கி கொண்டிருந்த இந்தியமக்களுக்கு மின்சாரம் பாய்சசியது போல் நிமிர வைத்தனர் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் ஆகியோர்.

நாத்திகம் பேசிய சாவர்க்கர் இந்துமகா சபையை ஆரம்பித்தார்.

ஆஷ் துறையை சுட்டுக்கொன்ற வாஞ்சி சுதந்திரபோராட்ட தியாகியா ? என்று கேள்வியும் உண்டு.

வாஞ்சியின் சநதனதர்ம கோட்பாடும் , அதற்கான இயக்கமும் "சாவடி நெல்லையப்பரையும் " ,பலசரக்கடை  தென்காசி பிள்ளையும் கொண்டிருந்தது. 

வாஞ்சி யின் குறி தவறிவிட்டால் அவனுக்கு under study  ஆக மாடசாமி தேவர் அனுப்ப பட்டார்.

மாடசாமிக்கு பிரான்சு நாட்டு கைத்துப்பாக்கியை வாங்கி கொடுத்து துப்பாக்கி சுட பயிற்சி அளித்தவர் வ.வே.சு அய்யர்.

மாடசாமியை பிரிட்டிஷாரிடமிருந்து  காப்பாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பியவர் பாரதி தாசன்.

காங்கிரஸ் கடசி மாநாட்டில்  அப்பொதெல்லாம் சமபந்தி போஜனம் கிடையாது. அவரவர் அவரவர் அடையாளங்களோடு தான் இருந்தனர். அதன் நீட்சி  தான் சேரன்மாதேவி குருகுலம்.

ஈ வே ரா போன்றவர்கள் வந்தபிறகுதான் சமபந்தி  வந்தது.

சுதந்திர போராட்டம் முரண்பாடுகளின் கூட்டு . சமரசத்தின்   அவியல்.

இதனை வைத்துக் கொண்டுதான் அண்ணல் அம்பேத்கார் அரசியல் சட்டத்தை உருவாக்கினார்.அவருக்கு பூரண திருப்தி என்று சொல்லமுடியாது. 

ஆனால் அன்று காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை எந்த இந்தியனிடம் உன் எதிரி  யார்  யார் என்று கேட்டால் ,மாகாணம்,மொழி , மதம்,சாதி கடந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று கூவுவான் .

இன்று பிராமணனுக்கு இட ஒதுக்கீடு ! தலித்துக்கு பிறப்பட்டவன் .!பிற்பட்டவனுக்கு பிராமணன் என்றாகிவிட்டது.

நாம் நம் எதிரியை இனங்காண்பதில் தவறு செய்கிறோம் !

மாற வேண்டும் !!

மாற்றுவோம் !!!




 





Thursday, June 23, 2016






இட ஒதுக்கீடும் 

நாமும்........!!!



80 ம்   ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து வலது சாரிகள் கடுமையான போராட்டத்தினை நடத்தினார்கள். குறிப்பாககுஜராத் மாநிலத்தில்  அன்றைய இந்துத்வா தலைமையேற்று நடத்தியது.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,வாங்கி இன்சூரன்சு பொதுத்துறை ஊழியர்கள் என்று குஜராத் மாநிலம்  இட ஒதுக்கீட்டினை எதிர்த்து பொங்கியது.

இடதுசாரி சங்கங்கள் செய்வதறியாது திகைத்தன. சிலகூட்டத்தோடு கோவிந்தா போட ஆரம்பித்தன. அகமதாபாத் நகரம் ஸ்தம்பித்தது. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் சங்கம். ஆனால் ஊழியர்கள்மன நிலை முற்றிலும்மாறுபட்டு இருந்தது. இட்ஒதுக்கீட்டை எதிர்க்கும் வேலை நிறுத்தத்தில் பங்குபெறவேண்டு என்று விரும்பினார்கள். ஒரு கட்டத்தில்சங்கத்தின் தலைமையைமீறி வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வோம் என்றார்கள்.  

 அகமதாபாத் மண்டல சங்க நிர்வாகிகள் திகைத்தார்கள். அகிலஇந்திய  தலைமையை ஆலோசனை கேட்டார்கள்.

" இட ஒதுக்கீட்டினை  நாம் ஆதரிக்கிறோம். அதனை எதிர்க்கும்  எ ந்த கிளர்சசியிலும்நாம் பங்குகொள்ள மாட்டோம் "என்று மேலிடத்திலிருந்து ஆலோசனை வந்தது.

பெருவாரியான ஊழியர்கள் இதனை  எதிர்த்தார்கள்.  சங்க செயல்விரர்கள் வேலை நிறுத்தத்தை உடைத்துக்கொண்டு அலுவலகம் செல்ல முடிவு செய்தார்கள்.

இதற்கிடையே வலது சாரிகள் வன்முறையை தூண்டிவிட்டார்கள்.அரசு ஊரடங்கு உத்திரவு போட்டது. வெளியே வந்தால் சுட்டுவிடும் ஆபத்து.அகமதாபாத் சங்க நிர்வாகிகள் மீண்டும் அகில இந்திய தலைமையை கலந்து கொண்டார்கள்.

"இட ஒதுக்கிட்டைனை நாம் ஆதரிக்கிறோம். என்ன வந்தாலும் நாம் வேலை  நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம். ஊரடங்கு உத்திரவு இருப்பதால் கலெக்டரிடமனுமதி பெற்று அலுவலகம் செல்லுங்கள் "என்று தலைமை அறிவித்தது. 

செயல்விரர்கள் அனுமதி பெற்று அலுவலகம் சென்றார்கள். வலது சரிகளின்மயக்கும் பேசசில் மயங்கிய ஊழியர்கள் " துரோகிகள் " என்று கோஷம்  போட்டார்கள். அலுவல க்ம்செல்லும் செயல்விரர்கள்மீது செருப்புகளை வீசினார்கள் .

அந்த ஆண்டு நடந்த சங்க  தேர்தலில்  அகில இந்திய தலைமையை ஆதரித்தவர்கள்    தோற்கடிக்கப்பட்டார்கள் .

ஒரே ஆண்டுதான்.வலது சாரிகள் வேஷம் கலந்து ஊழியர்களவிழித்துக்    கொண்டனர்.

மீண்டும் இடது சாரிகள்பொறுப்பிற்கு வந்தார்கள் .

நமது தலைமை சரியான முடிவை சரியான நேரத்தில் எடுக்கும்.அதனை உறுதியாக நின்று நடைமுறைப்படுத்தும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

என்ன செய்ய !

யானை இளைத்தால்  எறும்பு கூட நாட்டாமை செய்யுமாம் !!!




 

 

Thursday, June 16, 2016




இலுப்ப எண்ணையும் ,

சோப்புக் கட்டியும் .....!!!





காமினி ப்ஃன்செகா என்று இலங்கையில் ஒரு நடிகர் இருந்தார். இலங்கை திரை உலகத்தில்  மிகவும் பிரபமான இயக்குனர் நடிகர் ஆவார். அரசியலிலும் முக்கியமான புள்ளியாக இருந்தவர். வடகிழக்கு மாகாண கவ்ர்ணராக்கவுமிருந்தார்.அவர் ஒருமுறை இந்தியாவந்த போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது

காமினி தங்கள்   நாடு  எப்படி இருந்தது என்பதைப்பற்றி விளக்கினார்.

"எங்கள் நாடு இயற்கை வளம் மிகுந்த நாடு எங்கள் மக்களும் இயற்கையோடு இணந்து வாழ்பவர்கள். உங்கள் ஊரில் இலுப்பமரம் உண்டு என்பது எனக்கு தெரியும். எங்கள் ஊரிலும் உண்டு.   எங்கள் நாட்டு இலுப்பம் விதையும் சரி மரங்களும் சரி ப்ரும்மாண்டமானவை.விதை கிட்டத்தட்ட ஒரு விரல்  நீளம்  இருக்கும்."

"எங்கள் மக்கள்   அதனைப் பொறுக்கி காயப்போட்டு வைத்திருப்பார்கள். வீட்டில்மனலை குவித்து காய்ந்த   இலுப்பம் விதைகளை அதன் கூர்மையான பகுதி மேலே தெரியுபடி மணல் குவிய லில் நட்டு        விடுவார்கள்.அதன் நுனியை கிள்ளி விட்டு நெருப்பு ப்பற்ற வைத்தால் நல்ல பிரகாசமாக் எரியும். அது தான் என்க  குடிசகளின் விளக்குகள் ."

"ஒரு விதை ஒரு மணி நேரம்கூட   எரியும் .ஒரு வீட்டிற்கு  நான்கு விதை இருந்தால் இரவை ஒட்டி விடலாம். காசு செலவு கிடையாது"

"எங்கள் நாட்டிற்கு  ஐரோப்பியர்கள் வந்தார்கள். விளக்கு எரிவதை பார்த்த அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்த விதைகளை ஆராய்ந்தார்கள் ." எல்லாம் சர்தான் ஆனால் விளக்கின் ஜ்வாலையால் குடிசை  பற்றி எரியும் வாய்ப்பு அதிகம் ஆகையால் உங்களுக்கு பாது காப்பான விளக்குகளை தருகிறேன்" என்ர்றார்கள்  , கண்ணாடி சிம்மீணி போட்ட மண்ணெண்னை விளக்கை தந்தார்கள் .பின்னர் அரிகேன்  விளக்கை கொடுத்தார்கள். "

"இலுப்பம் விதையை அவ்ர்கள் ஊ "ருக்கு எடுத்து சென்றார்கள். அதை சோப்பாகமாற்றி எங்களுக்கு குளிக்ககொடுத்தார்கள்."

"நாங்கள்பாதுகாப்பான மண்ணெண்ணெய் விளக்குகளோடும்    சோப்புக் குளியலோடும் வாழ்கிறோம்."

"மண்ணெண்ணைக்கும், சோப்புக்கும் சிம்னிக்கும் திரிக்கும் காசுகெட்கிறார்கள் .கொடுக்கிறோம் "


காமினி ப்ஃன்செகா முடித்துக் கொண்டார்.யாரும் எதுவும் பேசவில்லை> நிசப்தமாக இருந்தது.










Wednesday, June 15, 2016






"ஏட்டி  ! பல்லை தேய்க்கவா ?

ஊறுகாய் போடவாட்டி ?...."





எங்க கிராமத்துல எங்க வீடு எட்டு பத்தி கொண்டது கடைசில உள்ள எட்டாம் ப த்திய "கொட்டில் " என்போம். மாடுகளை கட்டிவைக்க பயன்படுத்துவதால "மாட்டுக் கொ ட்டில்  "என்போம். இர்ண்டு பசுமாடு. உழவை மாடு  ரெண்டு இருக்கும் லீவுக்கு வந்தா அதுங்களுக்கு வைக்கப்போர்லைருந்து வைக் கலை புடுங்கிபோடரதுல இருந்து.புல்லுமேய குளிப்பாட்ட நாங்கதான்பாத்துகணம்.

கொட்டில்ல   பட்டய கல்  பாவி இருப்பாங்க 1 மாட்டு கொழம்பால  தரையை சகதியாக்காம இருக்க !பகல் நேரத்துல காத்தாட பின்னால  இருக்கற மரத்தடில கட்டுவோம்.

கலபாவின தரைல சில்லு சிலுனு காத்தடிக்கும். பாட்டி அதுல நாலு மரக்கால் உமியைபோட்டு உமிக்கரி போடுவாள். அது கருகின பொறவு உரல்ல போட்டு கு த்திருவாள்.. அதோட கொஞ்சம் கல் உப்பையும் போடுவாங்க . அதை ஒரு சிறிய கல் தொட்டில வாரி வைப்பாங்க அது தான் ஆண்டுபூறாவும் எங்களுக்கு பல்விளக்க !

1937ம் ஆண்டு பமாய் பக்கத்துல ஒருலட்சம் ரூ போட்டு அமெரிக்க ஒரு கம்பெனி ஆரம்பிச்சுது. "கோல்கேட் " கம்பெனி பல்லு தேய்க்க பசையும், ப்ர்ஷ்ஷும் தயாரிக்கற கம்பெனி.

"கரிய வச்சு பல்தெக்காதீங்க " "இகர் " புண்ணகிடும்" "இந்தியாவுல வர வியாதில பாதி வாயுலதான் ஆரம்பிக்குது." "வாயை சுத்தம் பண்ணினா வியாதியே வராது." அப்படின்னு டாக்டர்களை சொல்ல வச்சான் .

இன்னைக்கு 120 கொடில 100 கோடி ப்பேறு காலைல எந்திச்சதும்  ப்ர்ஷ்ஷும் கோல் கே ட்டுமா  நிக்கம். கோடிக்கணக்குல வித்து வரவு.

டெல்லி பம்பாய் கல்கத்தனு இருக்க ர தமிழர்களுக்கு நினவு இருக்கும். அப்பமெல்லாம் தனியார் ரயில்வேதான்  டெல்லி போணும்னா .msm ரயில்வே ,bnr ரயில்வே நு தான் டிக்கட்டு வாங்கணும்.

டெல்லி  ருட்ல சாந்தா நு ரயில் நிலையம். .காட்டு பகுதி.அங்க  காலைல 6மணிக்கு போகும்.வனகுடிமக்கள் வேப்பம் குச்சி,ஆலம் குச்சி ஆகியவற்றை வெட்டிகட்டுப் போட்டு பல்விளக்க விப்பாங்க.இப்பம் குச்சியும் கிடையாது சாந்த  நிலையமும் கிடையாது.அத சந்தர்பூர் ஆக்கிட்டாங்க.

சமீபத்துல டிவில விளம்பரம்பாத்தேன். ஒத்தன் இகர்ல ரத்தம் வருது. சாயம் போன நடிகை ஒத்தி வானத்திலேருந்து குதிக்கா ! "ஓம் பேஸ்டுல உப்பு இருக்கா ? எலுமிச்சை இருக்கா ? நு கேக்கா !

"ஏட்டி ! நான் பல்லு தேய்க்கவா ? ஊறூகாய் போடவா வுட்டி  ?"நு கத்தினேன் . 

"அணைச்சுராத !  சினிமா பாத்துக்கிட்டு இருக்கேன் " எங்க அக்கா எச்சரிக்கா !

 


Tuesday, June 14, 2016






"கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து "

என்ற குறு நாவலை முன் நிறுத்தி ...!!!


முப்பது நாற்பது ஆண்டுகளாகி இருக்கும் . பிரபலமான தமிழ் வாரப்பத்திரிகையில்  சுஜாதா   தொடர் கதை எழுதிவந்தார். 

"சிலி நாட்டு அதிபர் இந்தியா வருகிறார் தமிழ்நாட்டிற்கு வந்து ரயில்பெட்டி தொழிற்சாலையை பார்வை இட விருக்கிறார்.அவர கொலை செய்ய வெளிநாட்டு ஆசாமிகள் சதி  செய்கிறார்கள். இதுதான் தொடரின்  பின்னணி. 

அப்போது தமிழக சட்டமனரத்தில் விவாதம் நடக்கிறது.the irresistable Umaanaath சட்டமன்றத்தில் பேசுகிறார் ."

மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அப்போது மண்டையன் ஆசாரி சந்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அங்கு தோழர்களோடு சுஜாதா பற்றி உறையாடிக்கொண்டிருந்தேன் . எவ்வளவு லாவகமாக உமாநாத்தை தன நாவலுக்குள் சுஜாதா கொண்டுவந்திருக்கிறார் என்று புகழ்ந்து பெசிக்கொண்டிருந்தேன் .கேட்டுக்  கொண்டிருந்த கட்சி தோழர்கள்  மௌனமாக இருந்து   கொண்டிருந்தார்கள். எதுவுமே பேசவில்லை ! நிழலாடியது .திரும்பினேன்.

பி. ஆர் அவர்கள் நின்று நான் பேசியதை கேட்டு நின்றுகொண்டிருக்கிறார்.

நடுங்கி விட்டேன். மாடியிலிருந்து இறங்கி வந்தவர் என் பேச்சை கேட்டு நின்றிருக்கிறார். மற்றவர்கள்  பெரியவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று நினைத்து மௌனமாக  உட்கார்ந்து இரூக்கின்றனர்.இது தெரியாத நான் சுஜாதா வை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.. 

"ஏம்பா எல்.ஐ.சி காரா !" உமா  நாத்தை பற்றி எழுத சுஜாதா வேண்டும். ஏன் ! உம பேனா எழுதினா நிப்பு ஓடஞ்சுடுமா ? நம்மாளுக ஒவ்வோத்தனுக்குள்ளயும் ஒரு இதிகாசமே மறைஞ்சி இருக்கு ! அதை இலக்கியமாக்க சுஜாதா வரணுமா ?"

பெரியவர் பின்பக்கம் சென்றுவிட்டார்.

அப்போது நான் சுந்தரய்யா எழுதிய the telungana strugle  என்ற புத்தகத்தை படித்திர்ந்தேன்.மேலும் ராஜேஸ்வர ராவ் எழுதிய புத்தகத்தையும் படித்தேன். இதனை ஒரு பிரும்மாண்டமான நாவலாக எழுத விரும்பினேன். 

இந்த சமயத்தில் பி.டி . ரணதிவே , பசவபுன்னையா ஆகியோர் மாஸ்கோ சென்று அகிலத்தோடு கலந்து கொண்டதாக கேள்விப்பட்டேன். அதற்கான ஆவணங்களை சேகரிப்பதில் முனைந்தேன். நாட்கள் ஓடிவிட்டான. 

நாவல் எழுதுவது இருக்கட்டும். ஒரு குறு   நாவலாவது உடனடியாக எழுத விரும்பினேன். ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆயுதம் தாங்கிய புரட்சி,நக்சலிசம், எதிரி வர்க்க அழிப்பு, தனி நபர் அழிப்பு என்று இயக்கம் மலினப்படுவதையும் கண்டேன்.

நாகார்ஜுனா அணை கட்டும்போது  அங்கு சென்று அந்த லம்பாடி மக்களோடு ஊடாடினேன்.கிருஷ்ணா நதியிலிருந்த நீர் வீழ்ச்சியில் குளித்து  மகிழ்ந்தேன்  எப்பேற்பட்ட வீரம் செறிந்த போர் ! சுந்தரய்யா  கேந்திர்ரா சென்று பார்த்தேன்.ஆயுதப் புரட்சியின் போது அவருக்கு தகவல் துணை ஒரு ரேடியோ பெட்டிதான். அதோடு தான் முன்று ஆன்டுகள் கம்யூனிஸ்டுகள் தெலுங்கானாவை விடுவித்து ஆட்சி செய்துள்ளார்கள் . ரத்தமும் சதையுமான அந்த இதிகாசத்தை ---

என்னால்" கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து " என்ற குறுநாவலை தான் எழுத முடிந்தது.



( சென்னை புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்கி படித்து அது பற்றி எழுதியுள்ள  எங்கள் தோழர் ராமன் (வெல்லூர் ) அவ்ர்களுக்கு நன்றீ )










  

Monday, June 13, 2016











நன்றி தோழர்களே !!!

மணமாகி ஐபத்தி ஐநதாவது வருடத்திற்குள் இன்று நுழைகிறோம். 80 -74 வயது தம்பதியருக்கு  இதைவிட - உங்கள் அன்பையும் அரவணைப்பையும் தவிர வேறு என்ன வேண்டும்.கென்யாவிலிருந்தும் கனடா விலிருந்தும் ,சான்ப்ஃரான்சிஸ்கோவிலிருந்தும் -இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும்  -வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன-இதைவிட என்ன வேண்டும் . 

முதுமையின் காரணமாக பற்றிக் கொள்ளும் இயலாமையை உங்கள் அன்பின் மூலம் வென்று விடுவோம் .

நன்றி தோழர்களே !!!

Tuesday, June 07, 2016






"மெட்ரோ ரயில் "

"பாரிஸ்" 

நகரத்திலும் ஓடுகிறது.....!!!




சென்னை நகரத்தில் மெட்ரோ ரயிலை விரிவு படுத்த  மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது . சுமார் சுமார் 3000 கோடி ரூபாய்     அதற்காக ஒதுக்கியுள்ளது.  அரசு இதனை சாதனையாக குறிப்பிட்டுள்ளது.

தி.மு. க தலைவர் துடித்து எழுந்து  2008ம் ஆண்டு  ஜப்பானில் மெட்ரோ வுக்கான ஒப்பந்தம்  கைஎழுத்தானதை சுட்டிக்காட்டி   தி.மு. சாதனை என்று ஆவணங்களை  எடுத்து வீசியுள்ளார். மெட்ரோ வை சீர்குலைக்க ஜெயலலிதா "மோனோ "  ரயில் கொண்டுவர  முயன்றதையும்   பிட்டூ வைத்துள்ளார்.  மீண்டும் தி.மு.க -அதி.மு.க லாவணி ஆரம்பமாகியுள்ளது.

(நிலைமையை  பார்த்தால்  வரன்ஹேஸ்டிங்கஸ் காலத்திலிருந்து இன்றுவரை ஜார்ஜ் கோட்டையிலுள்ள ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பி   .மு.க அவர்களிடம் இருக்கும்  என்று தோன்று கிறது)

சென்னை நகரத்தில் உள்ளவர்த்தக நிருவனங்கள், தொழிற்சாலைகள் ,அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் தங்கள் வேலைக்கு    வர இது பேருதவியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை .

 50 களில்   முதல் ஐந்தாண்டு  திட்டம் ஆரம்பமான போது சில புரிதல் கள்  உருவாகின.     முத்தரப்பு மாநாடுகள் முலம் ( அரசு,தொழிற்சங்கள் ,முதலாளிகள் அமைப்பு ) அரசு மாதிரி முதலாளியாக  செயல்படவேண்டும். தொழிலாலர்களீன் தங்குமிடம், அவர்கள் வேலைத்தளத்திற்கு செல்வது  முதாலளிகளீன் பொறுப்பு என்று உருவானது.ரயில் பெட்டி  தொழிற்சாலையின்  வாகனங்கள் வாகனங்கள் திருவல்லிக் கேணியிலும் ,தி.நகரிலும் உருண்டோடுவதை நாம் பார்த்திருக்கிறோம் . தனியார் தொழிற்சாலைகளின் வாகனங்கள் தொழிலாளர்களையும் , ஏற்றிச் செல்வதை கண்டிருக்கிறோம்.இன்று அப்படிப் பார்க்க முடியவில்லை.

அரசு    பேருந்துகள் மின்சாரயில்கள் ,மெட்ரோ  அவற்றை செய்கின்றன 

பாரிஸ் நகரத்தில் மெட்ரோ 1900 ஆன்டு ஆரம்பிக்கப்பட்டது.  விழா எதுவும் நடத்தப்படவில்லை ..  பாரீஸ் நகராட்சிதான் நிர்வாகம்.   நகரத்தின் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , அந்த  சிலவின ஏற்றுக்கொண்டு அதற்கான வரியை நகராட்சிக்கு தருகின்றன .

இந்தியாவில் அப்படிப்பட்ட ஏற்பாடுகள் இல்லை . ஏற்பட்டால் மக்களின் கட்டணம் குறையலாம்.

நான் -நீ  என்று லாவணி பாடுபவர்கள் இந்தபக்கம்  திரும்பினால் நல்லதுதானே !!! 

Saturday, June 04, 2016







"நீலிமா சுனில்மைத்ரா"வும் 

"முத்துமீனாட்சியும் "......!!!




மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மறைந்த சுனில்மைத்ராவின் மனவி பெயர் "நீலிமா" . ஜனநாயக மாதர்சங்கத்தின் செயல்பாட்டாளராக அப்பொது டெல்லியில் இருந்தார். அந்த வரலாற்று வீரங்கனை விமலா ரணதிவே ,அகல்யா ரங்கனேகர் ஆகியோரோடு இணந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

மாதர்சங்கத்தின் செயல் திறனை மேம்படுத்த தலைமை ஒவ்வொரு மாநிலமாக சுற்றி  வந்தது. தமிழகத்திற்கும் வந்தார்கள். 

மதுரையில் சுதந்திர போராட்ட வீரங்கனை ஜானகி அம்மா ,நாகம்மா ,மற்றும் உறுப்பினர்களை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. விமலா,அகல்யா ,நீலிமா ஆகியோர் ஆங்கிலம்,இந்தி ,வங்காளி,மராத்தி, ஆகிய மொழிகளில்  புலமைமிக்கவர்கள்   தமிழ் தெரியாது.( வாழ்க தமிழ் என்று சொல்லியே ஆண்டவர்கள் தமிழை வளர்த்தது தனிக் கதை) .மதுரைக்காரர்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும்.

மொழி பெயர்ப்பாளர் முத்து மீனாட்சியை கட்சி தேர்ந்தெடுத்தது.ஒரே ஒரு நிபந்தனை. அவர்கள் தங்கி இருக்கும் முன்று நாட்களும் அவர்களோடு தங்கி  இருக்கவேண்டும். இது பற்றி முத்து மிணாட்சிகூறூகிறார்:

"பி டி ஆர் பற்றி காஸ்யபன் முலம் கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்தேன். வரலாற்று நாயகன். அவருடைய மனைவியோடு மூன்றுநாள் தங்க - எப்பேர்பட்ட கொடுப்பினை. அவர் தங்கை அகல்யா ! சுனில்  அவர்களீன் மனை வி நீலிமா - யாருக்கு கிடைக்கும் ! என்ன ஆளுமை ! அவர்கள் ஒவ்வொரு செயலும் எனக்கு படிப்பினையாக இருந்தது."

" மதுரை பெண்கள் அரசியலில் எவ்வளவு துல்லியமாக கேள்விகளைக் கேட்கிறார்கள். அதற்கு தலைவர்கள்பொறுமையாக பதில் சொல்வது -எனக்கு இவை புதிய அனுபவங்களாக இருந்தன. ஒய்வு நேரத்தில் அவர்களை மதுரை  நகரத்தை சுற்றிப்பார்க்க அழைத்துச் என்றேன்". 

"மீனாட்சி அம்மன் கொவிலைப் பர்த்தும் சின்னக்குழநதைகள் போல மூவரும் குதூகலித்தார்கள்.சிலைகளை  தொட்டு தொட்டு பார்த்து மகிழ்ந்தார்கள். நீலிமா  என்னை கட்டிப்பிடித்தார். what a fine heritage  என்று கூவினார்."

 "மாலை நாயக்கர் மகாலுக்கு சென்றோம். உலோகமே பயன்படுத்தாத மண்ணால் கட்டப்பட்ட அரணம்னையின் உறுதியையும் பிரும்மாண்டத்தையும் பார்த்த விமலா அவர்கள் பிரமித்து நின்றார் "ஒலி யும் ஒளியும்" நிகழ்ச்சியை பார்த்தோம்.அதில் வந்த சிலப்பதிகாரம் பற்றி சொன்னேன் ' கணவனை இழந்த பெண் ஒருவள் சக்ரவர்த்தி பாண்டியனை எதிர்த்து நின்றதை அவர்கள் அதிசயத்தோடு கேட்டார்கள்". 

'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் நிற்கிறாள் .அவளின் போராட்டத்தை ஒரு கவிஞன் காவியமாக்கி இருக்கிறான். முட்டு மீனாட்டி  தயவு செய்து இந்தக்கதையை இந்தி மொழியில் எனக்கு எழுதி அனுப்பு. இது உலகம் பூராவும் கொண்டுசெல்லப்பட்வேண்டிய செய்தி என்று விமலா என்னை கேட்டுக் கொண்டார் ". .

முடிவில் "என்னால் மறக்க முடியாத அனுபவம். நான் பாக்கியசாலி " என்றார் முத்து மீனாட்சி .

அவர் குரல் உடைந்திருந்தது போல் எனக்கு பட்டது.















எங்கள் 

"சுனில் மைத்ரா "




மார்க்சிஸ்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்தவர் தோழர் சுனில் மைத்ரா ! நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். நாடளுமன்ற பொது கணக்குக் குழு தலைவராக இருந்தவர்.எல்.ஐ.சி யை கூறு போடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்ட பொது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இந்த செய்தியை "பத்திரிகையாளரிடம் நீங்களே சொல்லுங்களேன் " என்று மரியாதை அளித்த பெருமைக்கு உரியவர்.

அகில  இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க செயல்வீரரகளுக்கு அவர் சங்கத்தின் உறுப்பினர் . அகில  இந்திய துணை செய்லாளர். எல்.ஐ.சி நிர்வாகத்திற்கு சங்கத்தின் ராணுவ அமைச்சர் . மூத்த அதிகாரிகளுக்கு மரியாதை கலந்த சிங்கம்.

சுனில் இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபாட்டார். கைதாகி சிறைபட்டார்.அவரோடு சிரையீருந்தவர்கள் பின்னாளில் மத்திய அமைச்சரானார்கள். மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த ரகுநாத ரெட்டி அவரோடு ஒரே "செல்"லில் சிறையில் இருந்தவர்.

மிகவும் சாதாரண வசதி கொண்ட குடும்பம். அவருடைய சகோதரர் மாநில அரசில் ஒரு ஊழியராக இருந்தார். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து தம்பி போராடுவது அண்ணனுக்கு பிடிக்கவில்லைவீட்டிற்கு வரக்கூடாது என்று கூறிவிட்டார்.இரவு அவருக்கு தெரியாமல் புரவாசல் வழியாக வந்து  தாயார் கொடுக்கும் உணவை உண்பார் .

காலம் மாறியது.இந்தியா சுதந்திரம் பெற்றது. சுனில் வேலை தேடினார். கொவாபறேடிவ் இன்சுரன்ஸ்  கம்பெனியில் சொற்ப சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஊழியர்களை  திராட்டி ஊதிய உயர்வுக்காக போராட்டம். வெற்றி கிடைத்தாலும் நிர்வாகத்தின் அடக்குமுறை அதிகரித்தது.கல்கத்தாவிலிருந்து கோயம்புத்தூர்,நாகபுரி என்று மாற்றல்கள் . 

அவருடைய தொழிற்சங்க ஈடுபாடு அவரை கம்யுனிஸ்ட்  இயக்கத்தின் பால் கொண்டு சேர்த்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு,மத்திய குழு என்று அவருடைய அரசியல் வாழ்வு உயர்ந்தது. 

மாநில அரசு ஊழியராக இருந்த அண்ணன் அப்படியே இருந்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுக்காக தாயார் மூலம் தம்பியின் அரசியல் செல்வாக்கை பயன் படுத்த விரும்பினார்.

"இந்திய சுதந்திரத்திற்காக போரடிசிறைசென்றவனின் தேச சேவை அவன் குடும்பத்தாலேயே இந்த அளவுக்குதான் மதிக்கப்படுகிறது "   என்று சுனில் ஒரு ஊழியர் கூட்டத்தில் கூறும் போது  நாங்கள் நெகிழ்ந்துவிட்டோம். 









Wednesday, June 01, 2016






அந்த மூன்று குரங்குகளும் .....!!!







அண்ணல் காந்தி அடிகள் சொர்க்கத்தில் தன பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்ததும் காமராஜரை அழைத்தார் "

"காமராஜ் ! நான் வைத்திருந் மூன்று குரங்கு பொம்மைகளும் பூமியில்பத்திரமாக இருக்குமல்லவா ? என்று கேட்டார்.

"பாபுஜி ! இன்றைய நிலைமை எனக்கு தெரியவில்லை ! வேண்டுமானால் சி.என்.அண்ணாதுரையிடம் கேட்டு சொல்கிறேன் " 

"நான் அதைபார்த்திருக்கிறேன் ! ஆனால் இன்றைய நிலைமை தெரியவில்லை .தந்தை பெரியாரிடம்கேட்கட்டுமா ?என்றார் .அறிஞர் அண்ணா .

பெரியார் ராஜாஜியை கேட்க ராஜாஜி படேலைகேட்டார்.

படேல் "நன்றாகவெ இருக்கிறது..எதற்கும் தற்போது பிரதமராக இருக்கும் மோடி இடம் கேட்கிறேன் "என்றார்.


மோடி பதில் சொன்னார் . " கண்ணை மூடிகொண்டிருக்கும் குரங்கை நீதிபதி ஆக்கிவிட்டோம்."

"காதை  முடிக்கொண்டிருக்கும் குரங்கை அரசாங்கத்திற்கு பொறுப்பாக்கி விட்டோம்."  

"வாயை மூடிக்கொண்டிருக்கும் குரங்கை என்ன செய்தீர்கள் ? என்று இடைமறித்தபோது 

"அதனை மக்களாக்கிவிட்டோம்" என்று கூறியவர் விமானத்தில் ஏறி அமேரிக்கா சென்றுவிட்டார். 

( இன்சுரன் ஊழியர் சங்க தலைவர் தோழர் தண்டபாணி அவர்கள் கூ றி ய கருத்தினை  தழுவி )