Monday, February 29, 2016

நகைச்சுவைக்காக  மட்டுமே 





"மறதி "





மறதி என்பது மனித குலத்திற்கு இயற்கை அளித்த வரம் என்று மனநல மருத்துவர்கள் கூறுவார்கள். (நன் அப்படி சொல்லவே இல்லையே என்று டாக்டர் ராமானுஜம் சண்டைக்கு வரலாம்)

தேவையற்ற பழய நினைவுகளோடு தி ண்டாடுவதை விட மறந்துவிடுவது நல்லது தான். 

ஆனால் அன்றாட வாழ்க்கையில் இந்த மறதி படுத்தும் பாடு சொல்லி மாளாது.எங்கள் அலுவலகத்தில் "மறதிமன்னர்கள் " உண்டு .

அவரை நாங்கள் vn  என்று அழைப்போம். காலையில் அலுவலகம் புறப்படும் பொது அவர் மனைவி மாலை வரும்போது பச்சை மிளகாய் 100 கிராம் வாங்கி வரச்சொன்னார். தன்னுடைய மறதி யை ஞாபகப்படுத்திக்கொண்டு பச்சை என்ற வார்த்தையையும், 100 என்ற அளவையும் மனதில் இருத்திக் கொண்டார்.

மாலை  ஆட்டோவில் வந்து இறங்கிய கணவர் ஆட்டோகாரர் உதவியுடன் பச்சை அரிசி 100 கிலோ  மூட்டையை நடையில் இற க்குவதைப்பர்த்த அந்த அம்மாள் பச்சை மிளகாய் என்னாச்சு என்று கேட்டார். நண்பர் vn "பச்சை ஆமாம் ,மிளாகாய் -ஆமாம்  " என்று மிரள மிரள விழித்தார்.

vn அவ்ர்களுக்கு நாங்கள் மிகவும் உதவியாகவே இருப்போம். ஒருநாள் கால வந்ததும் என்னிடம் சொன்னார்.எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சின் CHALENGE . நான்கு மணிக்கு நான் விட்டிற்கு சென்று குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு சினிமா செல்ல போகிறோம். நான் மறக்காமல்  இதன செய்ய வேண்டும் , நீங்கள் உதவ வேண்டும் என்றார்

சரியாக 3.50 க்கு அவருக்கு நினைவு படுத்த அவருடைய மேசைக்கு சென்றேன் . அங்கு ஒரே கூட்டம்.எங்கள் செக்ஷனில் 40 பேர் உண்டு. அவரைத்தவிர 39 பேரிடமும் சொல்லி இருக்கிறார்.அவ்வளவு ஜாக்கிரதை உணர்வு. 

ஐந்து மணிக்கு தயாராகிவிட்டார்.மனைவி வீட்டை பூட்ட அண்ணன் vn ஸ்கூட்டரை எடுக்க நினைத்தவர், "நீ பூட்டி வாசலில் நில்.நான் போய் பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன் என்றார் .

திரூவல்லிக்கெணியில் பெரியதெரு பார்த்திருக்கிறிர்களா ? ஐஸ் ஹவுசிலிருந்து  கலைவாணர் அரங்கம் வரை நீண்டிருக்கும் . vn அவர்களுடைதெருவும் கிட்டத்தட்ட மூன்று கிமி நீளம் இருக்கும்தெரு கோடியில்பெற்றொல் பங்க் .   

அவசர அவசரமாக பெற்றோல் பங்க் போனார். அங்கிருந்த கணக்கு பிள்ளையிடம் "ரண்டு நூறு "என்று கூறி  பணத்தை   கொடுத்தார்.அவர் ஒரு துண்டு பேப்ப்பரில் எழுதி கொடுத்தார். பெற்றோல் போடும் பையனிடம் கொடுத்தார். அவன் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "சா வண்டி யை எங்க " என்றான். பாவம் vn வண்டியைமறந்துமூன்று  கிமி நடந்து வந்து  

"சார் ! மறதி இறைவன் கொடுத்தவரமா சார் ?"







Friday, February 26, 2016

shyly He said 

" We are less inefficient than you Sir "





1974ம் ஆண்டு ஜனவரி மாதம். .இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுக் கண்டிருந்தனர்.இந்த முறை aiiea  சங்கத்தை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எல் .ஐ.சி நிர்வகம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல் பட்டது>

சில சிறு பான்மை இனர் சங்கத்தை பிளவுபடுத்தி தனிப்பந்தி போட்டிருந்தனர்.உச்சகட்ட போராட்டத்தில் இவர்கள் ஊழியர்களி டையெ குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்று நிர்வாகம் நினத்தது. .

தொழிற் தகராறு சட்டங்கள் , என்று எதையும் மதிக்காமல் நிர்வாகம் செயல் பட்டது. அகில இந்திய அளவில்முதன் முறையாக ஒரு அகில இந்திய ஸ்தாபனம் lock out என்று அறிவித்தது.  அதுவும்  partial lockout .

சென்னை, பங்களுரு,தார்வார்<டெல்லி ,மீரட் ஆகிய ஐந்த  டிவிஷன்களில்  lockout என்று அறிவித்தது>

சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள பிரும்மாண்டமான எல் ஐ சி கட்டிடத்தில் 
ஜோனல் அலுவலகம்,சென்னை டிவிஷனல் அலுவலகம், மற்றும் கிளை அலுவலகம் என்று செயல்பட்டு வந்த காலம் அது.

ஜோனல் அலுவலக ஊழியர்களுக்கு lockout கிடையாது> கிளை அலுவலகத்திற்கு lockout கிடையாது> 

டிவிஷனல் அலுவலகத்தில் பணியாற்றும் உழியர்கள் உள்ளெ செல்ல முடியாது.ஊழியர்களை பிரித்து, போராட்ட களத்தில் அவர்களை  தனிமைப்படுத்தி விடுவது தான் அவர்கள்நோக்கம். 

அது மட்டுமல்ல .சென்னை,பங்களூரு,தார்வார்,டெல்லி.மீரட் ஆகிய டிவிஷ்ணகள் தவிர ம்ற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட டிவிஷ்னகளுக்கு 
பாதிப்பு கிடையாது

சங்கம்நிலை குலைந்து,செய்வதறியாது ,திகைத்து தவறான முடிவுகளை எடுக்க வைக்கும்  தந்திரம்  அது

இந்த ஆத்திர மூட்டலுக்கு எதிராக சங்கம் அகில இந்திய அள வில் வேலை  நிறுத்தத்தை அறிவிக்கும். அதன சிறுபான்மை சங்கத்தின் உதவியோடு முறியடிக்க நிர்வாகம் நினைத்தது

சங்கத்திக் தலைமை தோழர்கள் சரோஜ் சவுத்திரி,சுனில் மைத்ரா,சந்திரசேகர் போஸ்,என்.எம்.சுந்தரம் மற்றும் பலர்   கூடி ஆலோசித்தார்கள்.
  
எந்த வித முன் தயாரிப்பும் இல்லாமல் நாடுதழுவிய  வேலை நிறுத்தம் சாத்தியமற்றது.  lockout டிவிஷன்களில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள்.மற்ற டிவிஷன்களில் "விதிப்படி வேலை " செய்வார்கள் என்று அறிவித்தது.

நாடுமுழுவதும் நிர்வாகம் ஸ்தம்பித்தது. . சிம்லாவில் இருந்த பிரதமர் உடனடியாக தலையிட்டு நிலமைய சமாளிக்க நிதி அமைசகத்தை கேட்டுக் கொண்டார்> 

எல்.ஐ.சி. சேர்மன்,நிவாக இயக்குனர்கள் சங்கத்தலவர்களோடு பேசினார்கள்.உடன்பாடு ஏற்பட்டது.
மறு நாள் டில்லி டிவிஷன் வாயிலில் காலை  பத்து மணிக்கு பஞ்சாப் மாநில தோழர்கள் பங்க்ரா நடனம் ஆட  தோழர் சரோஜ் அவ்ர்களை தோளில்  சமந்து வர அவர் lockout  ஆனா கதவுகளை சாவி போட்டு திறக்க ஊழியர்கள் உள்ளெ நுழைநதனர்

அன்று மாலை அசோகா  ஓட்டலில் ஊதிய உயர்வு சம்மந்தமான ஒப்பந்தம் கையெழுத்தாகியது>

அந்த விழாவில் எல்.ஐ.சி சேர்மன் பொதுச் செயலாளர்   சரோஜ் அவர்களிடம் கேட்டார்.

"சரோஜ் ! எந்த போராட்டமானாலும் வெற்றியையே அடைகிறீர்களே .அதன் ரகசியம் தான்  என்ன? "

பட்டறிவும், படிப்பறிவும்,தத்துவ அறிவும் கொண்ட சரோஜ் 

shyly said 

" We  are less  inefficient than you Sir "         











Thursday, February 25, 2016

(மீள் பதிவு )






Tuesday, May 26, 2015

அந்த போர் வீரன்

INSURENCE WORKER

பத்திரிகையை

முத்தமிட்டான்.....!!!

எங்கள் ஆயுள் காப்பிட்டுக் கழக மதுரைகோட்ட சங்கத்தின் செயலாளராக பலமுறை இருந்திருக்கிறார்! தலைவராகவும் இருந்திருக்கிறார் ! ஆங்கிலத்தில் நிரம்ப புலமை உள்ளவர் ! பள்ளிப்படிப்பை அன்றய "சிலோனில்" முடித்தவர் ! பின்னர் M.A பட்டம்  பெற்றார் !

மிகச்சிறந்த மனிதாபிமானி !

சங்க கூட்டம் ஒன்றீர்க்காக நானும் அவரும்  நகர பேருந்தில் வந்தோம் ! மதுரை வெளிவீதியில் உள்ள கற்பகம் ஓட்டலிம் காபி குடித்தோம் ! "நீங்கள் போய்க்கொண்டு இருங்கள்1 ரயிலடியில் ஒரு நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்" என்றார் !

ரயிலடியில் ஒரு சிறு பேப்பர் கவர் கிடைத்திருக்கிறது ! அதற்குள் புதன் கிழமை அதிகாலை ரயிலுக்கான டிக்கெட் உள்ளது ! ரிசர்வெஷன் செய்யப்பட்ட அட்டை டிக்கட் ! அதன் பின்னால் 5 பெருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கண்டிருந்தது ! மதுரையிலிருந்து பாட்டியாலா செல்லும் பயண சீட்டூ

நண்பர் யோசித்தார் ! நேரடியாக ரயிலடியில் உள்ள ரிசர்வேஷன் அலுவலக அறைக்கு சென்றார் ! அங்குள்ள அதிகாரிகள்  மூலம் பயணியின் முகவரியைபெற்றார் !

முகவரியில் மேலூர் அருகே உள்ள ஒரு சிறு கிறாமம் ! தகவல் அனுப்பி அவர் வந்து டிக்கட்டை பெற்றுக்கொண்டு பயணிப்பது முடியாத காரியம் ! நேரடியாக அருகில் உள்ள ஆர்.எம்.ஏஸ் அலுவலகம் சென்று ஒரு கார்டுவாங்கினார் !

"ஐயா 1 நீங்கள் புதன் காலை பயணம் செய்யவேண்டிய டிக்கட் என்னிடம் உள்ளது ! நீங்கள் எந்த கவலையும் படாமல் மதுரை ரயிலடிக்கு வாருங்கள் ! நான் டிக்கட்டோடு நீங்கள் ஏறவேண்டியகோச்சின் அருகே நின்று கொண்டிருப்பேன்! பயனத்தை தொடருங்கள் ! வாழ்த்துக்கள் ! என்று

 எழுதி தபாலில் செர்த்து விட்டார் !

அதே போல  புதங்கிழமை அதிகாலை எழுந்து ரயிலடிக்கு சென்று காத்திருந்தார் ! அந்தப்பயணி அவருடைய மனைவி ,தாயார்,இரண்டு குழந்தைகளுடன் வந்து செர்ந்தார் ! பாடியாலாவில் ராணுவத்தில் பணியாற்றுகிறார் !

அவரும் அடையாளம் கண்டு டிக்கட்டை பெற்று நெக்குருக அணைத்துக் கொண்டார் ! "நன்றி,நன்றி" என்ற அவருடைய வார்த்தைக்கு எங்கள் தலைவர் " இந்த தேசமே உங்களுக்கு கடமை பட்டிருக்கும் போது எனக்கு எதற்கையா நன்றி "என்றார்!

அடையாளமாக  என்தலைவர் கையில் வத்திருந்த   "insurance worker  " அந்த போர்வீரன் வாங்கிகண்ணீல் ஒத்திக் கொண்டு முத்தமிட்டான் !

ஓய்வு பெற்றபின், சென்னையில் பத்தாண்டுகளூக்கும் மெலாக insurance worker அலுவலகத்தி அந்த பத்திரிகையை  வளர்த்து வந்த  K. David தன் அந்த தலைவர் !

Monday, February 22, 2016

எப்பேற் பட்ட தோழமை ...!!


"சிங்"அண்ணனை திருச்சியில் சந்தித்தேனே !




1960 -62   ம் ஆண்டு வாக்கில் நாராயண சிங் அவர்களை முதன் முதலில் சந்தித்தேன். மதுரை மண்டல ஆயுள் காப்பீட்டுக்கழக விருது நகர் கிளையில்பணியாற்றியதக நினவு. மாற்றல் வாங்கி மதுரை வந்தார்அப்போது மண்டல அலுவலகம் கீழ வெளிவீதி AVH கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
இது தவிர கிளை எண்  ஒன்று ,கிளை எண் இரண்டு  மற்றும் integrated branch office (ibo )  என்று மதுரை நகரத்தில் இருந்தது.

மதுற்றை நகர் ஊழியர்கள் சார்பாளர்களை தேர்ந்தெடுப்பர்கள்.சார்பாளர்கள் மண்டலபொறூப்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

நாராயண சிங் கொஞ்சம் rough and tough personality .பெரும்பாலும் விருது நகரிலிருந்துமாற்றல் வந்தவர்கள் தான் நண்பர்கள். பலர் தி.மு.க விசுவாசிகள்.

சங்க தேர்தல் க டுமையாக  நடக்கும். காங்கிரஸ்,கம்யுனிஸ்ட்,தமிழரசுக்கழகம் ஆகியவை ஒரு அணியாக நிற்கும். மற்றொரு அணியாக தி.க. திமுக ஆகிய கட்சிகள் நிற்கும்> 

தி.முக அணி தோற்கடிக்கப்பட்டது. நாராயனசிங் தி.மு.க கரானண்பர்களோடு இருந்ததால் அவரும் தோற்றார்.

அண்ணன் வீடு தைக்கால் தெரு ! அன்றைய நிலையில்    தைக்கால் தெரு கம்யுனிஸ்டுகளின் கோட்டை  தைக்கால் தெரு,எல்.பி என் அக்ரகாரம்,அய்யொ அப்பா தெரு என்று அண்ணன்  சிங்  சலம்பிட்டாரூ.

நான் ஒரு கம்யூனிஸ்ட்.என்ன எப்படி தோற்கடிக்கலாம்,கரது   அண்ணன் கேள்வி.

பிரச்சினை மேலிடம் வரை போச்சு தோழர்கள் நாராயணன் (திண்டுக்கல் ) வி.தி பாஸ்கரன் மூலம் சமாதானமாகியது..

மதுரை மண்டல சங்கத்தை பலம் பொருந்திய இடது சாரி இயக்க ஆளூமைக்கு கொண்டுவர சிங் அவர்கள் ஆற்றிய பணிமகத்தானது.அவருடைய குடும்பமே இதற்காக படுபாட்டது அனிவரும் அறிந்த ஒன்று

வயது முதிர்ந்த நிலையில் மகன் மகள் பேரன் பேயர்க்தி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்

தமிழகம் வருவதாக நான் முகநூலில்  குறிப்பிட்டிருந்தேன்.மலேசியாவில் இருக்கும் அவர் மகன் சுகதேவ்,திருச்சியில் என்மகள் வீட்டில் இருப்பதாய் அறிந்து தகவல் சொல்ல  அண்ணன் சிங் தன மனைவியுடன் வந்து சந்தித்தார்

எப்பேர்பட்ட சந்திப்பு.எப்பேற்பட்ட  தோழமை ! உணவருந்தி  விடைபெற்று செல்லும் போது "என் கண்கள் கசிந்ததைப்பார்த்து "அழாதடா சாமா " என்று என் தோளை  உலுக்கி ஆட்டோவில் ஏறினார்> அந்த கிழட்டுச்சிங்கத்தின் இதயம் அழுவதை என்னால் கேட்கமுடிந்தது