Saturday, November 22, 2014

முகவரிதான் உங்களுக்கு தெரியுமே !

ஒரு அஞசல் அட்டை போடுங்களேன் ...!!!


அந்தககுழந்தை பிறந்த உடனேயே அவர்கள் குலவழக்கப்படி அவளுக்கு மாப்பிளளையை தீர்மானித்து விட்டர்கள் ! குழந்தைத் திருமணம் ! பதினைந்து வயதில் சடங்கு ! நாள் குறித்து கணவன் வீட்டிற்கு போனாள் !

மூன்று  மாதம்கணவரோடு வாழ்ந்தாள் ! 

பின்னர் தாய்வீடு வந்தாள் ! 

கணவர் அழைத்து செல்வார் என்று காத்திருந்தார் ! வரவில்லை !

வேலைக்கு செல்ல விரும்பினார் ! கணவரால் கைவிடப்பட்டவருக்கு கலக்டர் வேலையா கிடைக்கும் ! பள்ளிப் படிப்பு  தொடர்ந்தது! ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியரானார் !

என்றாவது ஒரு நாள் கணவர் வருவார் ! என்ற நினைப்பிலேயே வாழ்ந்தார் !

கணவரப்பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் மனம் முகிழ்ந்து போவர் ! அவர் நன்றாக வாழ கடவுளை வேண்டுவார் ! காலம் ஓடிக்கொண்டிருந்தது !

ஊரில், அண்டை அசலில் என்ன பேசுவார்கள் என்று அவர் சிந்திக்க வில்லை ! மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதவில்லை ! பெண் என்பதால் பாதுகாப்பிற்கு சகோதரன் குடும்பத்தோடு வாழ்ந்தார் ! 

ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வும் பெற்று விட்டார் ! 

Zee Media Bereu என்ற நிறுவனத்திடம் " வோ லேனே ஆயோந்தோ மை தயார்ஹூம் " ( அவர் என்னை அழைத்தால் நான் தயாராகஇருக்கிறேன் ) என்று அந்த அம்மையார் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன!

திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆகிவிட்டன ! 

கடைசிகாலத்தில் கணவனோடு வாழ விரும்பும் அந்த மூதாட்டியின் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் ! 

நீங்களும் விரும்புவீர்கள் என்று எனக்கு தெரியும் !

அவர் கணவருக்கு ஒரு அஞசல் போடுங்களேன் !

அவருடைய முகவரி  ........

உங்களுக்குத்தான் தெரியுமே !!!     
  

Wednesday, November 19, 2014

"பறை" இசையும்,

மசாலா.எப்ஃஎம் அலை வரிசையும்..!!!இருபத்து நான்கு மணிநேரமும் நிகழ்ச்சிகளை நடத்தும் அலைவரிசை மசாலா.எப்ஃ எம் ! வெளிநாட்டிலிருந்து ஒலி பரப்பப்படும் இந்த அலை இரவும் பகலும் கணினியில் பணிபுரிபவர்களுக்காக திரைப்பட மற்றும் இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது ! மூளை அயர்ந்து விடாமல் இருக்க இசையை பயன்படுத்தும் நோக்கம் கொண்டது ! 

இந்த நிகழ்ச்சியில் இசைக்கருவிகளைப் பற்றி ஒலிபரப்பினார்கள் !

பறை, நாதஸ்வரம்,தவில்,வீணை ஆகியவை பற்றியும், அவற்றின் தோற்றம்,வளர்ச்சி இன்றைய நிலை  ஆகியவை பற்றி விளக்கம்  அளித்தார்கள்! 

"குழுக்களாக இருந்த மனித சமூகம் தங்களுக்குள் ஒன்றுகூடி தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது ! ஒலிபெருக்கி, போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் மிகவும் அதிகமானவர்களை சென்றடைய ,அவர்களை  அழைக்க ,ஒன்றுபடுத்த, ஒரு கருவியை உருவாக்கினார்கள் !" 

"மரத்தாலான ஒரு வட்டில் உருவாக்கி அதனை மாட்டுத்தோலால் மூடி அதன்மீது குச்சியால்தட்டி ஒலி  எழுப்பினர் "!காத்திரமானதும்,விசேஷமானதுமான இந்த  ஒலி யின் தனித்தன்மை அவர்களுக்கு செய்தியின் அவசரத்தையும் உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது பற்றியும் அறிவுறுத்தியது!

"கால வர்த்தமானத்தில் அது தாளக்கருவியாகவும்,இசைக்கு ஏற்ப ஆட துணைகருவியாகவும் பயன்படலாயிற்று "

இதே போன்று தவில்,நாதஸ்வரம்,வீணை என்று பல்வேறு இசைக்கருவிகள் பற்றி விளக்கம் அளித்தார்கள் !

இந்த நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவர் இசைத்துறையில் பட்ட மேற்படிப்பு (M . A ) படித்தவர் !

இசை கலைஞர்களின் அறிவுசார் உரிமைகள் பற்றி ஆராய்ந்து M .Phil பட்டமும் பெற்றவர!

இதற்காக சட்டக்கல்லூரியில் சேர்ந்து பட்டமேற்படிப்பு (M .L ) பட்டம் பெற்றவர் !

ஹன்ஸா காஷ்யப் என்ற இவர் தற்போது திருச்சியில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார் ! 

(கொசுறு : எழுத்தாளர் காஸ்யபனின் செல்ல மகளுமாவார் !)  

  

 

Saturday, November 15, 2014

Friday, November 14, 2014

இந்து மத சீர்திருத்த சட்டமும் 

வலது சாரிகளின் சதியும் .......!!!

"சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக இன்றி அமையாதது சமூகபண்பாட்டுத்துறையிலும் மாற்றங்கள் வரவேண்டும் ! அப்போதுதான் ஒரு சமத்துவமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் " என்று அன்றய தலைவர்கள் கணித்தார்கள் !

முக்கியமாக இந்து மதத்தில்முக்கியமான சீர்திருத்தங்களை  கொண்டுவர நேரு விரும்பினார் ! அவருக்கு ஆதரவாக அம்பேத்கர் இருந்தார் ! சட்டத்திருத்த மசோதாவை உரூவாக்க அம்பேத்கர் முற்பட்டர் ! 

இதில் மிக முக்கியமான அம்சங்களாக 

1) கணவனை இழந்த பெண் ,மற்றும்பெண்வாரிசுகளுக்கு சொத்துரிமை !

2) மனைவியைத் துன்புறுத்தும் கணவனிடமிருந்து விவாக ரத்து பெரும் உரிமை !

3) மனைவி உயிரோடு இருக்கும் பொது கணவன் மறுமணம் செய்து கொள்வதை தடுப்பது !

4) சாதிவிட்டு சாதி திருமணம் செய்வதை சட்டபூர்வ மாக்குவது !

5) சாதிவிட்டு சாதி தத்து எடுத்துக் கொள்வதை  சட்டபூர்வமாக்குவது !

இந்த ஐந்தும் முக்கியமானவைகளாகும் ! இதனை வலது சாரிகள் எதிர்த்தனர் ! அவ்ர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பாபு ராஜேந்திர பிரசாத், ,வல்லபாய் படேல்,ஷ்யாமா பிரசாத்முகர்ஜி ஆகியொர் ! 

இந்தமசோதாவை நாடாளுமனறத்தில் நிறைவேற்றி சட்டமாக்க நேருவும்,அம்பேத்கரும் முனைப்பாக இருந்தனர் !

இதில் மிகவும்  முக்கியமாக இருந்தது சவர்க்கர் இந்த சீர்திர்த்த மசோதாவை ஆதரித்து தான் !" இது காங்கிரஸ் காரர்களின் தேர்தல் பிரச்சாரமாக இருந்தால் என் ஆதரவு இல்லை ! ஆனால் நாட்டின் வளர்சிக்கு இது தேவை என்பதால் ஆதரிக்கிறேன் "என்று சவர்க்கர் அறிவித்தார் !

நாடாளுமன்றத்தில் நிறைவேறும் நிலை  உண்டானது !

அப்போது ராஜேந்திர பிரசாத் பிரதமர் நேருவுக்கு மிகமிக ரகசியமாக ஒரு கடிதம் எழுதினார் ! அதில் "நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும் ஜனாதிபதி என்ற முறையில் நான் ஏற்க மறுக்கும் வாய்ப்பு உள்ளது "என்று குறிப்பிட்டிருந்தார் ! இந்த கடிதம் நேருவின் கைகளுக்கு போகும் முன்பே வலது சரிகள் பத்திரிகைகளுக்கு தெரிவித்து விட்டனர் !

ஒரு பக்கம் நடாளுமன்றம் ! மறுபக்கம் ஜனாதிபதி ! இரண்டும்முட்டி மோதுவது அன்றைய இளம் குடியரசுக்கு நல்லதா ! நேரு இதனை எதிர்பார்க்கவில்லை ! மேலும் காங்கிரஸ் கட்சி  தேர்தலை சந்திக்க வேண்டும் ! இந்த சந்தர்பத்தில் இந்த பலப்பரிட்சை தேவையா என்று நேரு சிந்திக்க ஆரம்பித்தார் !

அம்பேத்கர் நொறுங்கிப் போனார் ! நேரு தன் உறுதி மொழியக் காப்பாற்றாமல் தன்னை  கை கழுவி விட்டதாக மனதார நம்பினார் !

பின்னர் நடந்தெதெல்லாம் வரலாறாயிற்று !!!