Tuesday, September 29, 2015

(நாட்டிய நாடகம் )


" குருட்டுக் கிணறு "

(அந்த் கூப் )

 

 

 

அந்த கிரமத்தின்  வரட்சி குடிக்க தண்ணீர் இல்லாத  நிலையை அடைந்தது. . ஏழை ,பணக்காரன், மேல்சாதி கீழ்சாதி என்று பேத மில்லாமல் குடிநீருக்காக தவித்தனர் .

ஐந்து மைல் காட்டுக்குள் சென்று தண்ணிர் கொண்டு வரவேண்டும். யார் என்ன சொல்லியும் சர்க்கார் கிணறு வெட்ட மறுத்துவிட்டது .பாதுகாப்புக்காக பெண்கள் நீரெடுக்க ஒன்றாகவே செல்வார்கள்.

 அந்த கிழவிக்கு அவ்ள் குடிசையின் அருகில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் ஒரு கிணறு வெட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டாள் .ஒரு சிலரிடம் சொல்லிப் பார்த்தாள் கிறுக்கு பிடிச்சவளே என்று அவமானப் பட்டாள்.

ஒருநாள்  கடப்பாரை, மண் வெட்டி, அள்ளிவர கூடை சகிதம் கிணறு வெட்ட தன்னந்தனியாக புறப்பட்டாள் .

தினம் அரை அடி ஆழம் வெட்டுவாள். இரண்டு மூன்ரு நாளுக்கு பிறகு தான் அவர்கள் கவனித்தார்கள் .சின்ன பிள்ளைகள் குட "கிறுக்கச்சி " என்று கூப்பிட ஆரம்பித்தன.

ஒருமாதம்  ஆகியது.கிட்டத்தட்ட 15 அடி பள்ளம் ஆகியது.

கிழவி தோடர்ந்து தொண்டினாள் . மேலும் ஒருமாதம் ஆகியது .இப்போது 30 அடி . சுக்காம் பாறை வந்தது.. பாறையை நெம்பினால் நீரூத்து கிடைக்கலாம். கிழவி மறுநாள் காலை  பாறையை உடைக்க ஆரம்பித்தாள் . மிகவும் சிரமமாக இருந்தது. 

வெய்யில் இறங்க ஆரம்பித்து விட்டது. .கடப்பாரையால் சுக்கான் பாறையில் ஒரு குத்து விட்டாள் . பாறை பிளந்தது. லேசாக ஈரம் கசிவது போல் உணர்ந்தாள் .

துள்ளி குதித்து மேலே ஏறிய கிழவி "தண்ணிவந்திட்டு -தண்ணீவந்திட்டு " என்று அலறினாள். 

ஊர் ஜனங்கள் கூடிவிட்டனர் இதற்குள் ஊத்திலிருந்து தண்ணிர் பெருக ஆரம்பித்து விட்டது. ஜனங்கள் மகிழ்ச்சியில் கூத்தாடினர் .  கிழவி  கிணற்றில் இறங்க ஆரம்பித்தாள்." இறங்காதே ! அது "கங்கா ஜல் "! தீட்டாகிவிடும் !நாங்கள் பூஜை செய்து உனக்கு எடுத்து தருகிறோம்.! " என்று பூசாரியின் குரல் ஓங்கி கேட்டது.

கிழவி  செய்வதறியாது நின்றாள் .

நெட்டை மரமாய் மற்றவர்களும் நின்றனர் !

 

( மீரா நிருத்திய நிகேதன் என்ற அமைப்பு 40 ஆண்டுகளாக நாகபுரியில் செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டிய நாடகத்தை அவ்ர்கள் அரங்கேற்றினர்.  மீரா சந்திர சேகரன் . இந்த பள்ளியின் இயக்குனராவார்>காஸ்யபனின் சகோதரியின் மகள் தான் மீரா அவர்கள் )

 

 

 

 

 

 



 

 

 

Sunday, September 27, 2015

மோடியும் ,ரஜனியும் .

முகனுல் ஜோக்குகள்.




1. டிஜிடல் உலகத்தின் நாயகர் மோடி. மார்க் முகநுலில்  நுழைந்த போதே ஆச்சர் யமடைனநதார் . அங்கு ஏற்கனவே ப்ரண்ட்ஸ் கோரிக்கை 
மோடியிடமிருந்து வந்திருந்தது .

 2. காலையில் எழுந்து கடியாரத்தின் அலாரத்தை மோடிதான் அடிப்பார்.

 3. சிறுவனாக இருக்கும் பொது மோடி ஒரு குதிரையின் முதுகில் பலாமாக தட்டினார் இந்த மனித குலத்திற்கு ஒட்டகம் கிடைத்தது.

 4 மோடிக்கு சைக்கிள் ஒட்ட தெரியாது. ஆனால் மோட்டார் சைக்கிளை மிகவும் வேகமாக ஓட்டுவார்(கிராண்ட் ஸ்லாம் ) ஒரு முறை  பிரெஞ்சு போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
5. கிரஹாம் பெல் முதன் முறையாக டெலிபோனில் பேசும் பொது அதனை எடுத்தவர் மோடி .
6.மோடிக்கு வீர சாவர்க்கரை மிகவும் பிடிக்கும்..சவர்கர்கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பினார். மோடி தோணியிலிருந்து கங்கையில் குதித்தார். தண்ணி அசுத்தமாக  இருந்ததால் திரும்பவும் தோ ணியில்
 ஏறிவிட்டார்.
7. மோடிக்கு கயலாங்கடை நா ரொம்ப பிடிக்கும். வல்லபாய் படேலையும் ரொம்ப பிடிக்கும். இரப்டையும் கம்பைன் பண்ணி சிலை வைக்கப் போறார்.




(இன்னும் நிறைய இருக்கு. அப்பப்பபம் போடுதேன் )









Friday, September 25, 2015

"குறும்பட விமரிசனம் "



ஒரே ஒரு வார்த்தை 




 அந்த வீட்டின் வாசலில் நாற்காலியில் பெரியவர் அமர்ந்து இருக்கிறார். அவருக்கு மிக அருகில் மற்றொரு நாற்காலி இருக்கிறது .பெரியவர் அன்றைய செய்தித்தாளை  பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வீட்டிற்குள்ளீருந்து அவர் மகன் சந்துரு வருகிறான். பெரியவர் வாய் பிளந்து அவனைப் பார்க்கிறார். பேசுவான் என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது.

அவனிடம் பேப்பரை கொடுக்கிறார். அவன் பேப்பரை வாங்கிக்கொண்டு நாற்காலியை பத்தடி தள்ளி போட்டுக்கொண்டு உட்காரு கிறான். மவுனமாக இருந்த பெரியவர் " திக்கா டிகாக்ஷன் இருக்கு .ஒரு காப்பி போட்டுகொண்டு வரட்டுமா?' என்று பேச்சை துவக்குகிறார் .  

அவனிடமிருந்து பதில்  இல்லை .மீண்டும் மவுனம் .

"நேத்திக்கு பண்ணின இட்லி இருக்கு.அதை கிள்ளி  போட்டு உப்புமா பண்ணிதரட்டுமா ?"

"சும்மா தொணதொணன்னு சும்மா இருங்கப்பா "என்கிறான் மகன். 

விட்டிற்குள் தொலை பேசி அடிக்கிறது. அதிலாவது யாருடனாவது பேசலாமே . என்று அவசரமாக  பெரியவர் எழுகிறார். "நீங்க இருங்க" என்று கூறி ய மகன் வீடிற்குள் சென்று போனில் பேசுகிறான்.....சரி... ம்ம் ... நான் பாத்துக்கறேன் ...என்ற மகனின் வார்த்தைகள் பெரியவர் காதில் விழுகிறது.

அவன் வருகிறான் அவன் வார்த்தைக்காக வாய் பிளந்து நிற்கிறார் . அவன் உட்காருகிறான்.

"யாரு? ஜெயாவா? புறப்படும் போதே தலைவலின்னா ? இப்போ எப்படி இருக்காம்? ரயில்  டயத்துக்கு போயிடுச்சா ? யார் ஸ்டேஷனுக்கு வந்தாளாம் ? " பெரியவர் .

"அவ என்ன சின்ன கொழந்தையா ? அவா அவாளுக்கு அவாஅவாள  பாத்துக்க தெரியும் " என்று எரிந்து விழுகிறான்.


குடும்பத்தில் வயதானவர்கள் தன்னோடு மற்றவர்கள்  ஒரு வார்த்தையாவது பேசமாட்டார்களா என்ற ஏக்கத்தை பிரதிபலிக்கும் இந்த காட்சியோடு ஆரம்பமாகும் இநத குறும்படம் ராஜிவ் மேனன் நடத்தும் திரைப்பட பள்ளி மாணவர்  ஒருவரின் பட்ட தேர்வுக்குகான படமாகும்.

ஆரம்பத்திலிருந்து கடைசி காட்சிவரை என்ன அற்புதமான screen presence ! "வே பாட்டையா  ! சொன்னா   சண்டைக்கு வரு வாணுக. சிவாஜி ! சிவாஜி ம் பானுக!  இப்படி ஒரு ஆளுமையை உம்மட்டதான் வே பாக்கேன் "

மகன் ரொம்ப நேரமா காத்திருக்கான்னு  பதறும் போது அத melodramaa வாக்காம body language ல காட்ட உம்மாலதா வே முடியும்.

உலகப்புகழ் பெற்ற ஸ்டானிஸ்லாவ்ஸ்கி " acting theory " உருவாக்க  அத நடிப்ப பள்ளிகளில் பாட நூலா வச்சிருக்காங்க. நீர்  practice நு புத்தகம் போடும் 1

படம் முழுக்க செயற்கையான ஒளி அமைப்பு இல்லாம இயற்கை வெளிச்சத்துல எடுத்திருப்பது இந்த குறும்படத்தின் சிறப்புகளி ல் ஒன்று .

பாரதி மணிக்கு support கொடுத்து சந்துருவா நடிச்சவர் செய்திருக்கார்.பெரியவர் கதவை சாத்தும் பொது கதவு கிரிச்சிடுவது கொஞ்சம் அதிகம். புது  ரெட்டை கதவு. இம்பிட்டு சத்தம்  வராதே.வயதானவர்கள் உதாசினபடுவதும் . அதனால் ஏற்படும் வலியும் அதனை தன்  நடிப்பால்   பாரதி மணி அவர்கள் வெளிப்படுத்தி இருப்பதும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. 


பாரதி மணிக்கு வாழ்த்துக்கள்.

( பாட்டையாவின் சிஷ்ய கோடிகள் தவறாமல் பார்க்க வேண்டிய குறும்படம் )    






Thursday, September 24, 2015

கண் புரை நோய் அறுவை சிகிச்சையும் ,

தமிழகமும்..............!!!



எழுத்தாளரும் மொழிபெயர்பாளருமான முத்துமீனாட்சி அவர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைநடந்தது. உதவியாளனாக நானும் சென்றிருந்தேன்..

தனியார் மருத்துவ மனை. நகரத்தில் பிரபலமானதும் கூட.

அவர்கள் உடனடியாக ஒரு அச்சடித்த தாளை கொடுத்து பூர்த்தி செய்து தரச்சொன்னார்கள்.அது இந்தி மொழியில இருந்தது.நான் முத்து மீனாட்சி அவர்களிம் கொடுத்து  எழதச்சொன்னேன். அவர் வாங்கி பார்த்து விட்டு ' "இது இந்தி அல்ல. மராட்டிய மொழியில் உள்ளது " என்று கூறி  திருப்பி தந்துவிட்டார்..

பெரிய டாக்டர் வந்ததும் அவரிடம் விஷயத்தை சொல்லி ஆங்கில மொழி தாளை கொடுக்கும் படி கேட்டென்.. அவர் செவிலியரை அழைத்து எனக்கு உதவச் சொன்னார்.

அந்த அம்மையார் மராட்டிய மொழி கேள்விகளை மொழி பெயர்க்க நான் பதில்களை எழுதினேன்.
அவர்களிடம் ஆங்கில படிவங்கள் இல்லை . பெரிய மருத்துவ மனைகளில் கூட ஆங்கில  படிவங்கள் இல்லை.

மாதா மாதம் வரும் மின்கட்டண  படிவமும் மராட்டிய மொழியில் தான் வருகிறது.சந்தேகம் வந்தால் அடுத்தவீட்டு மராட்டிய நண்பரின் உதவியை நாட வேண்டியதுள்ளது..

நண்பரிடம் கேட்டேன் ."ஏ ன் ஆங்கிலத்திலும் அச்சடித்தால் என்ன? என்று கேட்டேன்.

"ஆங்கிலேயனை விரட்டி விட்டோம். அவன் மொழியை ..." என்று இழுத்தார்.
இருந்தாலும் மராத்தி எங்கள் தாய்  மொழி அல்லவா. அதற்கு முதலிடம்"
தமிழர்கள் ஆங்கிலத்தில் கெட்டிக்காரர்களாக இருக்கிறிர்கள் " என்றார்.

பெருமையாக இருந்தது.

அடுத்து அவர்கேட்டார்" தமிழ் நாட்டில் பள்ளிகளில் ஆங்கிலம் . கட்டாய மாமே ?"
"ஆமாம்"
"பள்ளிகளில்  தமிழ் பேசினால் அடிப்பார்களா மே "

எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு பதில்  சொல்ல !

என்னண்ணே நான் சொல்லுது !!!

Tuesday, September 22, 2015

மொகலாய பேரரசர்களும் 

சமஸ்கிருதமும் .........!!!





பலவீனமடைந்த் சமடஸ்கிருத மொழி மொகலாய பேரரசர்கள் காலத்தில் தான்  மீண்டும் உயர்நிலைய அடைந்தது .

இதனை நான் சொல்லவில்லை. அமெரிக்காவைச் சார்ந்த பேராசிரியை ஆட்ரே ட்ராஸ்கெ கூருகிறார்.

அவர் எழுதி வரவிருக்கும் புத்தகம் "மொகலாயர்  தர்பாரில் சமஸ்கிருதம்" பற்றி பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார் .

பாவம் எழுத்தாளர் குருஸ் சமகிருதம் பற்றி எதொ சொல்லப்போக அவர் வாங்கி கட்டிக்கொண்டது நினைவு தட்டுகிறது .சாதி ,சமய,முற்போக்கு, பிற்போக்கு என்று எந்த விதமான வேறுபாடுமின்றி அவரைத் திட்டி தீர்த்தனர். 

ஆட்ரே அம்மையார் அக்பர் காலத்தில் தான் இது ஆரம்பமாகியது என்கிறார்.அக்பர் தன தர்பாரில் அறிஞர்களை வைத்துக் கொண்டார் . அவர்களில் சமன பௌத்த ,இந்து,மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் இருந்தனர். அவர்களுக்குஅவர் பொட்ட ஒரே நிபந்தனை "கடவுள் ஒருவன்" என் பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சமணர்களும்.பௌத்தர்களும் கூட இதனை ஏற்று கொண்டனர்.

புத்தர்  தன்னுடைய உபதே.சங்களை சம்ஸ்கிருத மொழியில் எழுதக்கூடதுஎன்று கூறி இருந்தார்.ஆனால் மக்களைடையே செல்வாக்காக இருத்த மொழியில் அவருடைய சீடர்கள் சம்ஸ்கிருதத்தை பயன்படுத்தினர்.

சமணர்களும் தங்கள் நுல்களை சமஸ்கிருத மொழியிலேயே கொண்டுவந்தனர்.

தத்துவார்த்த அறிவியல் கோட்பாடுகளை - மற்ற மொழியிலிருந்து பாரசிக மொழிக்கு மொழிமாற்றம் செய்ய அக்பர் சமண , பௌத்த அறிஞர்களை நாடினார்

அகபர்,ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகியோரும் இந்த மரபை தொடர்ந்தனர் ..

வியாபார தலங்களில் சஸ்கிருதம், பாரசீகம், அவதி ,பிரஜ் பாஷா , ஆகியவை மணிப்பிரவாளமாக பயன் படுத்தப்பட்டன.
இதனை உருது மொழி ( உருது என்றால் பஜார் ) என்று அழைத்தார்கள்.


மொகலாயர்களின்  அரசியல் பிடி தளர தளர இது சம்ஸகிருத மயமாககப்பட்டு    அந்த புது வடிவம் இந்தி என்று அழைகலாயிற்று

கிட்டத்தட்ட அவுரங்கசீப்  காலத்தில் சம்ஸ்கிருத ஆதரவு அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டது .

ஷாஜஹானுக்கு பிறகு  அரசனான "மூரா " சமஸ்கிருத ஆதரவாளனாகவே இருந்தான். அவனை வீழ்த்தி அரசனான அவுரங்க சீப்  மௌல்விகளின் ஆதரவு தேவை என்ற அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக சம்கிருத ஆதரவை விலக்கிக்கொண்டார்.

( மேலே  கூற ப்பட்டவை  ஆட்ரே அம்மையாரின் பேட்டியில் இருந்து எழுத்தாளப்பட்டவை..மொழியியல் வல்லுனர்கள்   மேலும் ஆராய்ந்து  
மெய்பிக்க வேண்டும் )

Monday, September 21, 2015

இந்த இந்தி காரன் படுத்தற பாடு ...?




இந்தி மேல எனக்கு என்ன வெறுப்பு . 1947 -48ல் "  பச்சொங்கி கிதாப் " படிச்சவன் தான் நான் ."  மங்க்னே ஹம்கு ஜன்ம தியாஹை . உசிகா தூத் பீ கர் ஹம படே ஹுவே  ஹைம் " நு பாடம் படிச்சவன் தான் .  

1957 ல் ஹைதிராபாத் வரும் பொது நான் எழுதர தபால்கார்டுல பின் பக்கம் " do not impose Hindi " நு பிரிண்ட் பண்ணி தான்  தபால் எழுதுவேன்.. 

விஷயம் இப்போ ரொம்ப மாறி போச்சு.இந்தி திணிப்பை எதுக்கேன் .இன்னிக்கும். அது சரிதான். இந்த இந்திக்காரங்க அநியாயத்துக்கு புளுகும் போது தங்கல .

உள்துறை அமைசருக்கு மண்டைல ஒண்ணும் இல்லை .பாத்தால  தெரியும்.
பிரதமருக்கு என்ன வந்தது.?

இந்திய கொண்டுவரலை நா " துளசி தாசரோட ராம சரிதா மனஸ் என்ற இந்தி நுலை  படிக்க முடியாம போகும் "காரு .

"வே ! ராம சரித மனஸ்  இந்தில எழுதல வே ! அது "அவதி " ங்கர மொழில எழுதப்பட்டது. 

 .2011 ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புல 60 லட்சம் பேரு தாய் மொழி  "
அவதி "நு அறிவிச்சிருக்காங்க !

இவங்க   கொண்டாடர இன்னொருத்தர் சூர் தாஸ் . அவரு கிருஷ்ண பக்தர்  அவருடைய பாடல்கள் இலக்கிய தரம் வாய்தவை . அவரு  இந்தில எழுதல ..
பிருஜ் பாஷா ங்கர மொழில எழுதினாறு .

அப்பம் இந்தி மிழி எப்பம் தான்  வந்திச்சு ?

முகலாயர் ஆட்சி கொஞசம்  கொஞசமா வலுவிழக்கும் போது . கிட்டதட்ட அவுரங்க சிப்  காலத்த ஒட்டி .

1600 -1700 ஆண்டு வாக்குல..


மொகலாயர் காலத்துல தான் சமஸ்கிருதம் உச்சில மீண்டும் வந்தது

அது பெரிய கதை அண்ணாச்சிகளா !!! 

   

Thursday, September 03, 2015

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும் 


கலை இலக்கிய விருதுகளும்........!!!




நாற்பதாம் ஆண்டில் காலடி வைக்கும் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் வழக்கம் போல் சென்ற ஆண்டிற்க்கான விருதுகளை அறிவித்திருக்கிறது . 


வெளி மானிலங்களில் உள்ள எழுத்தாளர் அமைப்புகள் தொடர்ந்து ஆண்டுதோரும் எப்படி நீங்கள் இப்படி லடசக்கணக்கான பெருமானமுள்ள விருதுகளை அளிக்கீறீர்கள் என்று கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள் .


அகில இந்திய உருது,இந்தி எழுத்தாளர் சங்கம் சில ஆண்டுகளூக்கு முன்பு கலகத்தாவில் மாநாட்டினை நடத்தியது. மதிப்பிற்குரிய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியும் நானும் கலந்து கொண்டோம். கேரளா,கர்நாடகா,ஆந்திரா,மராட்டிய,மபி.உ.பி,பஞ்சாப்  மாநில எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் .  அவர்கள் நாம் நடத்தும் கலை இரவு பற்றி கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். மாலை 6 மணியிலிருந்து விடிய விடிய பார்வையாளர்களை கட்டிப்போட்டு எப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டார்கள். 


எங்கள் பிரகதீஸ்வரனையும்.கரிசல் குயிலையும் ,உரை வீச்சாளர்களயும்,சிறு.குறு நாடக கலைஞர்களையும் பற்றி விவரித்தேன்..


மனிதாபிமானத்திலிருந்து, புரட்சிவரை கொண்ட சங்கத்தின் பத்து அம்சத்தைச் சொன்னேன்.


எல்லாவற்றுக்கும் மேலாக "கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே " என்ற சங்கத்தின் கோட்பாட்டயும் குறிப்பிட்டேன்.

நான் தங்கி இருந்த அறைக்கு வந்த பல எழுத்தாளர்களொடு  பேச வாய்ப்பு கிடைத்தது.

"தமிழ் வாசகர்களுக்கு 50ம் ஆண்டுகளிலேயே விச காண்டெகர் அறிமுகம் "என்று சொன்ன பொது மரட்டிய எழுத்தாளர் என் கையைக்குலுக்கினார். "தாகூரும் சரத் சந்திரரும் எங்கள் கிராமங்களில் தொடர்கதையாக வாரப்பத்திரிகைகளில் படிக்கப்பட்டவர்கள். பிரெம் சந்தும், வியொகி ஹரியும் எங்களுக்குத் தெரிந்தவர்கள். தகழியும்,பாஸ்கரும்,வேமண்ணாவும் , மாஸ்தியும் நாங்கள் அறிவோம் .

நணப்ர்களே உங்களுக்கு பாரதிய கொஞ்சம் தேரியும்.புதுமைப் பித்தனை தெரியுமா? அழகிரி சாமியை தெரியுமா? சின்னப்ப பாரதியை தெரியுமா ? "

என்று கேட்டு அவர்களை அசத்தினேன் !


தமிழின் சிறந்த படைப்புகளெல்லாம் மற்ற இந்தியமொழிகளில் வந்துள்ளதா ?என்று

 ஆர்வமாககெட்டார்கள் !


"ஆம் ! "என்று பொய் சொல்ல  எனக்கு தயக்கமாக  இருந்தது. !!!


Tuesday, September 01, 2015

வைரம் பாய்ந்த எல்.ஐ.சி.யும்


நானும் ................!!!





1954ம் ஆண்டில் மதறாஸ் மாகாண மின்சார இலாகாவில் பணியில் செர்ந்தேன் ! அரசாங்கம் மிகுந்த பொருட் செலவில் அணைகளைக் கட்டி மின் உற்பத்திசெய்யும் .நெல்லை,தூத்துக்குடி,புதுக்கோட்டை  என்று பல்வேரு நகரங்களுக்கு டாடா கம்பெனி வினியோகம் செய்து லாபம் சம்பாதிக்கும். 1957ம் ஆண்டு மின் உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றை பொதுத்துறைக்கு கொண்டு வந்து "மின் வாரிய"மென்ற அமைப்பை உருவாக்கினார்கள். மேட்டுர் மின் உற்பத்தி நிலயத்திலிருந்து நான் மாற்றலாகி மதுரை வந்தேன்.ஐந்தே நாளில் அங்கிருந்து நெல்லை வண்ணாரப்பெட்டையில் உள்ள மின் வாரிய வசூல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன்.


நெல்லை டவுண் வடக்கு ரத வீதியில்   அப்போது "ஆயத்த அணீகல அங்காடி" என்ற (ready maden) கடை இருந்தது அதன் மாடியில் இருந்த ஆபீசை "பண்டா  பீஸ்" என்று அழைப்பார்கள் ! சிலர் அதன மரண பண்டாபீஸ் என்பார்கள் !


எனது நண்பர் ஒருவர் "எப்பா ! எல்.ஐ.சி ஆபீஸ்ல ஆள் எடுக்காங்களாம் . சம்பள ம் 130/- ரூ ! மனுபோடேண் டேய் "என்றார் " 

 "அது என்ன வே எல்.ஐ.சி ? " 

 "மரண பண்டாபீஸ் "

"5.-ரூ பாரம் வாங்கி போடுல "

5/-ரூ போட்டு கிளிக்கணுமா ?'


இரண்டு நாள்கழித்து மீண்டும் அவர் வந்தார் "எலே ! யாரும்வரலயாம் ! பாரம் விலையை 3/- ரூ ஆக்கிட்டானுக" என்றார்


போட்டென்.மதுர ஸ்டெஷன் பக்கத்துல் உள்ள மதுரைகல்லூரிஉயர்நி லைபள்ளீயில்.தேர்வு

 இது நடந்தது 1957 முன்பகுதியில இருக்கும்.


எனக்கு பயிற்சிக்காக சென்னை வரச்  சொல்லி தகவலும் பணி நியமன உத்திரவும் வந்தது. என் நன்பர்கள் ' சிறுக்கி பீள்ளை சாமள த்துக்கு ஒத்த நோட்டுக்குமேல சம்பளம் டேய் " நுகூவி கூவி மகிழ்ந்தார்கள்.ஆனால் சிக்கல்வேறு வகைல வந்தது/எங்க தெரு போஸ்ட்மான்  எங்க அண்ணன் கூட படிச்சவரு.ஆர்டர்ல kumaari.syamalam என்று முகவரி இருக்கு ."எய்! நீ ஆம்பள பொம்பள  முகவரி கடிதத்தை உங்கிட்ட தரமாட்டேன்னு பிடிவாதமா சொல்லிபுட்டாரு .


நோந்து நூலாகி பொன என்னை எங்க உறவினர் ஒத்தர் சமாதானபடுத்தினார். கீழரதவீது "சாமி"    தேர்  முக்குல் டாக்டர் சந்திர செகரன் நு இருந்தார் அவ்ர்ட கூட்டிபோய் சாண்றிதழ் வாங்கினார் . என் எடை,உயரம்,மச்சம் எல்லாத்தையும் எழுதி இந்தபையன் எனக்கு அறிமுகமானவண் .he is amale by sex from  birth  என்று எழுதி மெட்றாஸ்ல  உள்ள ஜோனல் ஆபிசர் பலராம் ராவ் என்பவருக்கு கடிதம் எழுதினார் .பத்து நாளுக்குபிறகு என்க்கு ஆர்டர் வந்தது பயிற்சி முடிந்து விட்டதால் நான் நேரடியாக ஹைதிராபாத் போய் பணியில் செருமாறு  இருந்தது .பின்னர் எனக்கு தனியாக பயிற்சி கொடுத்தார்கள்.


ஹைதிராபாத்தில் எல்.ஐ.சி யில்சேர்ந்தேன் .


பத்து நாளிருக்கும்.அங்குள்ள தோழிசங்க கூட்டம் நடப்பதாகவும்   நானும்  கலந்துகொள்ள வேண்டுமென்று சொன்னார்கள். அவ்ர்கள் தெலுங்கு.உருது,இந்தியில் பேசுவார்கள்.நமக்குபுரியாது .இருந்தாலும்பொய்தான்பார்ப்போமே என்று போனேன் !


கூட்டம் நடக்குமிடத்தில்  நிறைய ஊழியர்கள் நின்றுகொண்டும்  பேசிக்கொண்டும்       இருந்தார்கள்.கூட்டம் ஆரம்பிப்பதர்கான ஏற்பாடு தெரியவில்லை .


எங்கள் கிராமத்தில்  ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெய்ந்தி,பொங்கல் விழா கொண்டாடுவோம்.  ஜமக்காளம் விரிப்பது, மேஜை விரிப்பை போடுவது குடிதண்ணீரை மேசையில்வப்பது என்று நான் தான்  செய்வேன். சங்க கூட்டம் நட்க்கும் இடத்தில் ஓரமாக இருந்த ஜமக்காளத்தை விரித்தேன். மேசையை போட்டு விரிப்புவிரித்து கிளாசில் தண்ணிர் உற்றிமேசையி ல்வத்தேன்.


மளமள வென் று எல்லோரும் அமர்ந்தார்கள் .கூட்டம் ஆரம்பமாகியது.


கூட்டம் முடிந்ததும் ஜமக்காள த்தை மடிக்க முற்பட்டேன். பெரியவர் ஒருவர் அவ்ர்தான் தலமை தாங்கினார் ." comrade 1 I am Kelkar ! fromwhich branch you are ?" என்றார்.

"I Madras .from come "என்று உளறினேன்.

let us meet tomorow at N.B dept. "என்று கை குலுக்கினார்.

சங்கம் என்னை அணைத்துக் கொண்டது அகில இந்தியஇ ன்ஸூரன்ஸ் ஊ ழியர் சங்கம் எனக்கு மனித நேயத்தைகற்றுத்தந்த்து.


மனித நேயத்தின் உட்சபட்ச வளர்ச்சியான "மார்க்சிசம் " என்னை ஆட்கொண்டது