Saturday, December 31, 2016

"விமரிசனம் அல்ல "




"கண்டதை 

சொல்லுகிறேன"

படத்தை முன் நிறுத்தி 




2014ம் ஆண்டு டிசம்பர்மாதம் தணிக்கை ஆகி திரையிட தயாராக இருந்த படம் "கண்டதை சொல்லுகிறேன் " என்பதாகும் .இதில் தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த கருணா,  ராமு ஆகியோர்  நடித்துள்ளனர் .

"இந்த படத்திற்குதுவக்கத்தில் "பறை " என்றுதான்  பெயர்   வைத்திருந்தோம்.    அதனை  "கண்டதை சொல்கிறேன் " என்று மாற்றினோம் .பறை என்பது சுத்தமான தமிழ் வார்த்தை.  இந்த வார்த்தையை மலையாள த்தில் பயன்  படுத்துகிறார்கள்   ."எந்தா பறைஞ்சு சேட்டன் ?"என்பார்கள்." என்கிறார் இந்தக  படத்தின் இயக்குனர்  லெனின் .

 "பறை "  பாரம்பரியமான இசைக்கருவி. அதனை துக்க காரமான         சாவுக்கு பயன்படுத்துகிறார்கள். பறை கலைஞன் ஒருவன் மனம்  வெதும்பி   குடிக்க ஆரம்பிக்கிறான்.அவனுக்கு அடுத்த தலைமுறை வருகிறார்கள். இது தான் கதை.  இந்த கலைஞ்ர்களை சித்தரிக்க விரும்பினோம்.ஏழு லட்சம்  ரூ யில் ஆரம்பித்தோம்.பணம் தீர்ந்துவிட்டது. பிராஜெக்டை கைவிடும் நிலை.பஸ்  ஏறி வந்து விட்டேன் விஷயம் தெரிந்த தமிழ் ஸ்டுடியோக்காரர் சன்ஜசயனை பார்த்திருக்கிறார். அவரும் பற்றோரு நண்பரும் பைனான்ஸ் செய்ய படம் முடித்து. விட்டோம்."

"ஏழு  நாள் ஓடினால் போதும் .நிசசயம் இளைஞர்கள் பார்க்கவேண்டிய படம் . கல்லூரி  வாசல்களில் நின்று கொண்டு நானே டிக்கட் விற்க தயாராகி வருகிறேன். இது த.மு.எ .க.சங்கத்தினர்  இந்த படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். " என்று முடித்தார் லெனின்.

படம் வந்ததை பற்றியோ, வெளியானதை பற்றியோ செய்தி இல்லை .

ஆனாலும் த மு எ .க சங்கம் பின் வாங்காது !!!



Wednesday, December 28, 2016




"ராகுல்சாங்கிருத்யாயனின் " 


இந்தி படைப்பு 


தமிழில் .....!!! 







சுமார் மூன்று  ஆண்டுகள் ஆகியிருக்கும்.பாரதிபுத்தகாலயத்தின் நிர்வாகிகளில் ஒருவரான முகம்மது சிராஜ் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தினை அனுப்பி இருந்தார் . 1940ம் ஆண்டுகளில்  வெளியான இந்தி மொழி நூல் அது . மூல பிரதி கிடைக்காததால் அதன் ஜெராக்ஸ் பிரதியை அனுப்பி இருந்தார்


ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் எழுதிய " வால்காவிலிருந்து கங்கைவரை " என்ற நூல்தான் அது.


முத்து மினாடசி அவர்களின் உதவியோடு வாசித்தேன். கம்யூனிஸ்ட் கடசியில் புதிதாக வரும் இளம் தோழர் களுக்கு இரண்டு நூல்களை படிக்க கொடுப்பது வழக்கம் . ஒன்று கார்க்கி எழுதிய "தாய்" நாவல். இரண்டாவது ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை ".  ஏற்கனவே நான் ராகுல்ஜி யின் நூலை  படித்திருந்தேன். 


இந்தி பதிப்பு கொஞ்ச்ம வித்தியா சமாக தெரிந்தது. தமிழில் இல்லாத சில   கூடு தலாக சில பகுதியிலிரூ.ந்த மாதிரியும் எனக்கு தோன்றியது. தொழார் சிராஜ் அவர்களிடம் இதனை சொன்னேன். " அப்படியானால் இந்தியிலிருந்து தமிழு க்கு  ஒரு பதிப்பு கொண்டுவரலாம்" என்று யோசனை கூறினார் .


பாரதி புத்தகாலயம் சிராஜின் யோசனை யை ஏற்றுக் கொண்டு மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க சொன்னது.


இந்தி  இலக்கியமென்றதும் நம் மனதில் முன்ஷி பிரேம்சந்த் தான்  நினைவுக்கு வருவார் மிகவும் அற்புதமான சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர். 1936ம் ஆண்டு  இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நேருவும் ,இ.எம்.எஸ்ஸும்  . ஆரம்பித்த பொது சங்கத்தின் தலைவராக பிரேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகவும் அற்புதமான படைப்புகளை  பிரேம்சந்த் அவர்கள் உருதுமொழியில் தான் ஆரம்பகாலத்தில் எழுத்தினார். பின்னர் தான் இந்தி மொழியில் எழுத ஆரம்பித்தார்.


இந்தி மொழி பல்வேறு வட்டாரங்களில் பல்வேறு வகையில் கையாளப்பட்டு வந்தது.  அவற்றில் "பிரிஜேபாஷா " என்ற வட்டார மொழியும், "அவதி " என்ற வட்டார மொழியும் மட்டுமே இலக்கிய வாதிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

ராகுல்ஜியின் நூலை முத்து மினாடசி அவர்கள் மொழிபெயர்க்க துவங்கினார்.கிட்டத்தட்ட ஆறுமாதம் ஆகியது. 

பாரதி புத்தகாலயத்தினர் மிகுந்த அக்கறை எடுத்து பிழை திருத்தியதோடு மட்டுமல்லாமல், மொழிநடையை சரளமாக்க வும் செய்தனர்.

சென்ற வாரம் பாரதிபுத்தகாலயத்தின்  நிர்வாகிகளில் ஒருவரான தொழார் பி.கே ராஜன் அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

"வாக்காவிலிருந்து  கங்கை வரை " நூலின் இரண்டு பிரதிகளை அனுப்பி இருக்கிறேன் "என்ற மகிழ்சசி  தரும் செய்திதான் அது.

காலம் காலத்திற்கும் நிற்கபோகும்  ஒரு அற்புதமான படைப்பை தமிழுக்குதந்த  முத்துமினாடசி அவர்களுக்கும்  பாரதி  புத்தகாலயத்திற்கும் நம் பாராட்டுக்கள். 


Monday, December 26, 2016







"இந்தியாவில்  சாதிகள்."





சமீபத்தில்   அம்பெத்காரின்  "  இந்தியாவில் சாதிகள் "என்ற நூல் பற்றி  திருப்பாராம்  குன்றத்தில் கருத்தரங்கம் நடந்தது.


 அதில் த . மு.ஏ. க.சங்கத்தின் பொது செயலாளர்  க.வேலாயுதம்    அவர்  கள் பேசும் பொது 'சங்  பரிவாரங்கள் இஸ்லாமியர்களின் வருகைக்கு பின் தான் இந்தியாவில் சாதிகள் தோன்றின ' என்று ஜோஷி   என்பவன் ஒரு முன்னுரையில்அபத்தமாக  எழுதியுள்ளதை சுட்டிக்காட்டினார் .

1945ம் ஆண்டு ஜப்பான் மீது அணுகுண்டை  அமேரிக்கா வீசியது என்று கூட    இஸ்லாமியதீவிர  வாதத்தை முடக்கத்தான் என்று   இந்த பாவிகள் சொல்வார்கள்.
எதுவானாலும் பழியை இஸ்லாமியர்களின் மீது போடுவது அவர்களின் வழக்கம் .

உண்மையில் இறுக்கமான சாதிய   கட்டுமானம் ஆதிசங்கரர்  காலத்தில் தான் தோற்று வைக்கப்பட்டது.

இது பற்றி சங்கரர் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு நிகழசசியாய்  குறிப்பிடுவார்கள் புலை யன் ஒருவன் . எதிரில் வருகிறான் . சங்கரர் நீராடிவிட்டு வருகிறார்.தீட்டு படாமலிருக்க அவனை தள்ளி நிற்க சொல்கிறார். "யாரை யாரை சொல்கிறாய் சங்கரா?" என்கிறான் புலையன்  .

"நானும் நீயும் ஒன்று என்றால் யாரால் யாருக்கு திட்டு ? உன்னால் எனக்கா அல்லது என்னால் உனக்கா ? என்கிறான்.

சங்கரர் "அத்வைதி".

உண்மையில் சாதீய  கட்டுமானம் பிராம்மண மதம் ஸ்தாபனப்படுத்தப்பட்ட பிறகே  இறுக்கமானது.

அதனைசெய்தவர் சங்கரர் கி.பி எட்டாம்நூற்றாண்டு    என்று வரலா ற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வரலாற்றிற்கும் புராணத்திற்கும் வித்தியாசம் தெரியாத மூடர்கள் "சங்கிகள் ".

இஸ்லாமிய காற்று மிகவும்மெலிதாக இந்தியாவிற்குள்  வீச ஆரம்பித்த்து கி.பி 1000 ஆண்டு  வாக்கில் தான் என்கிறார் நோபல்பரிசு பெற்ற பொருளா தார நிபுணர் டாகடர் அமர்த்திய சென்.அவர் வரலாற்றாளரும் கூட .


Wednesday, December 21, 2016

பாண்டே -தீபா  பேட்டி 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேர்முக பேட்டி ஒளிபரப்பாகியது. ஆம் ! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள்  தீபா அவர்களின் ஒளிபரப்பு அது.சுமார் ஒருமணிநேரத்திற்கு சில மணித்துளிகள் கூடுதலாக இருந்திருக்கலாம். மிகவும் அமைதியாகவும் ,மிகவும் நிதானமாகவும்  நடந்தது .

பாண்டே  நிலையை விட்டுகொடுக்காமல் கேள்விகளை கேட்டார். ஆத்திரப்படாமல்,பாரபரப்படையாமல்அமைதியாகவும் ,நிதானமாகவும்    தீபா பதில் சொன்னார்.

இரண்டு கைதேர்ந்த வக்கீல்கள் வாதம்போலிருந்து. உறுதியாக இருவரும் தங்கள் நிலையை பற்றி நின்றனர்.

மறை ந்த முதலமைசர் படித்தவர். ஒரு intelectual . தனியாகமுடிவுகளைஎடுக்கக் கூடியவர் . >யாருக்காகவும்தனமுடிவுகளைமாற்றிக்கொள்ளாத இயல்புகொண்டவர் . தன உறவினர்களை பார்க்கக்கூடாது என்று அவரிடம் எவரும் சொல்லமுடியாது.என்று பாண்டே பட்டியலிட்டார்.

நான் பத்து வயது  வரை அவருடன் தான் வாழந்தேன் . வேதா நிலையத்தில் தான் பிறந்தேன். எனக்கு தீபா என்று பெயர்வைத் ததும்  அத்தை தான்.

கார்ட்டனிலிருந்து வெளியே போனபிறகும் எங்களோடு தொடர்பில் தான் இருந்தார். என் பாட்டிக்கு   பிறகு முழு  பொறுப்பையும் ஏற்றுக் கொ ண்டார். நான்தான் மூத்தவள். நான் சொன்னபடிதான் கேட்கவேண்டும் என்கிறார்> நாங்களும் அப்படியே இருந்தோம். எந்தந்தை  இறந்தபிறகும்  அவர்தான் கவனித்தார்.என் திருமணம் எப்படி எங்கே நடக்கவேண்டும் என்பதையும் முடிவு செய்தார் ." என்கிறார் தீபா

"அவரை சுற்றி இருந்தவர்கள் பிரித்து விட்டனர். "

"உங்கள்தம்பிய அனுமதித்தவர்கள் என் உங்களை அனுமதிக்க வில்லை.?"

"நான் கேள்விகள் கேட்பேன்."

"சுற்றி இருந்தவர்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருந்ததா?"

"அத்தை இறந்தபிறகு முடிவுகளை யார் எடுத்தார்கள். அது செல்வாக்கில்லையா ?நான் இருக்கக்கூடாது என்று யார் சொன்னார்கள். ஆயிரக்கணக்கில் ஜனங்கள் இருக்கும் பொதுநானொருத்தி என்ன செய்துவிடமுடியும். செக்கியூரிஈட்டிகளை வைத்து என்னை அனுப்பியது யார். ?"

"அரசியலு க்கு வருவீர்களா ?" என்று கேட்ட பொது மழுப்பிவிட்டார்.

தீபா என்ற இந்த பெண் அவர் அத்தை மாதிரியே புத்திக்கூர்மையும்,தைரியமுமுள்ள பெண் என்றுதான் பேட்டியின் மூலம் உணர்த்தினார்.!


Tuesday, December 06, 2016

தங்க மகளன்றோ ,

தண்ணீர் சுமந்திருந்தார் ...!!!

அப்போது நா ன் ஹைதிராபாத்தில் பணியாற்றி   வந்தேன்.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் -ஜனவரியில்சென்னை வந்து விடுவேன் . சபாநாடகங்களொன்றுவிடாமல்  பார்த்து விடுவேன் . என் சகோதரர் திருவல்லி கேணியில் வசித்து  வந்தார் . NKT மண்டபத்தில்  நாடகங்கள் நடக்கும். 

1957-62 ம் ஆண்டுகள். பேபி டாக்சி என்று உண்டு."மொறிஸ் மைனர்" கார் டாக்சியாக வரும். குறைந்த பட்ச கட்டணம் 8அணா . அம்மா அண்ணன் குடும்பத்தோடு போவோம். 

சோவின் விவேக் பைன் ஆர்ட்ஸ் அப்போது நாடகம் போட்டுவந்தது. அதில் சநதியா அம்மையார்    நடித்து வந்தார் அவரோடு அவரது மகள் ஜெயலலிதா வருவார்.

ஒன்பஅல்லது பத்து வயது இருக்கலாம். சந்தியா அம்மையார் மகளை  கண் போல வளர்த்து வந்தார். அவருடைய தங்கை வித்யாவதி  விமான பணிபெண்ணாக இருந்தார். தன அக்காவின் மகள்  மீது  பிரியத்தோடு இருப்பார்.பின்னாளில் வித்யாவதியும் திரைப்படங்களில் நடித்ததுண்டு.

சிறு வயதில் ஜெயலலிதா  இளவரசி போல்வாழ்ந்தார் .பின்னாளில் திரை வாழ்க்கையிலும்  கை  நிறைய சம்பாதித்தார் .       

அவர் சமபாதித்த பணமே குடும்பம் என்று இல்லாத  அவருக்கு போதுமானது. அவருடைய தாயார் சந்தியா மறைந்ததும்  கொஞ்ச்ம தனிமை அவரை சிரமப்படுத்தியது. அனால் அவரூடைய  குருவான எம்.ஜி.ஆர்   பாதுகாப்பு மிகுந்த ஆறுதலளித்தது.

அரசியலில் புகுந்தார். எந்த  சமயத்திலும் பணத்திற்காக அவர் எவர் தயவையும் நாட வேண்டியதில்லை என்ற நிலைதான் இருந்தது. 

அவருடைய அரசியலெதிரிகள் அவர் சொத்து  சேர்த்தார் என்று வழ்க்காடிய போதும் அதனை தைரியமாக சந்திக்கவே செய்தார்.

இன்றும் கேடிக்கணக்கான் ஏழை  எளிய மக்கள் அவரை    நம்புகிறார்கள். குடும்பம்,குழந்தை  என்று இல்லாதவர் அவர் யாருக்காக சொத்து சேர்க்கவேண்டும்   என்று அந்த மக்கள்  கேட்கத்தான் செய்கின்றனர் . அவரை சுற்றி இருப்பவர்கள் கொள்ளை ய டித்த பாவத்தை பாவம் எங்கள்   தலைவி சுமக்கிறார் என்றே மக்கள்கருதுகின்றனர் .

அவர் பின்னால் ஆதரித்து நிற்கின்றனர்.

இமாலய வெற்றியை அவருக்கு அளித்துமகிழ்ந்தனர் .

அந்த தீரமிக்க பெண் மணிக்கு இவ்வளவு சீக்கிரம் முடிவு வரும் என்று அவருடைய எதிரிகள்கூட நினைக்கவில்லை .

செங்கீரன் எழுதிய கவிதை வரிகள் தான் நினைவு தட்டுகிறது 


யாரோ ஒரு வீட்டில் ,
               எவரோ தீ  வைக்க ,
தங்க மக(ன) ளன்றோ , 
                தண்ணீர் சுமக்கின்றார்!!


 போதும் தாயே ! நீ சுமந்து போதும் !!

என்று இயற்கையே அவருக்கு  விடுதலை அளித்துவிட்டது !!!



Sunday, December 04, 2016


சிறுகதை

"நெருப்புக்கு தெரியுமா ?"



அரச இலையின் காம்பிலிருந்து நுனி வரை இரண்டாக பிளந்து பாயும் நரம்பு போல நாகபுரி நகரை பாதியாக பிரித்து செல்கிறது "வார்தா" செல்லும் சாலை !


நாகபுரியின் வடக்குப்பகுதியிலிருக்கிறது "வனதேவி" நகர் ! 


சுமார் ஐம்பது அறுவது குடும்பங்கள் வாழ்கின்றன !


  முதல் வீட்டில் ரிஜ்வான் கான் வசிக்கிறான் 1 அவன் வங்கத்திலிருந்து வந்தவன் ! காலையில் நல்ல நீர் மீன் இல்லாமல் அவன் வீட்டில்பொழுது விடியாது! அவன் தாயார் வீட்டு வாசலில் உள்ள பட்டிய கல்லில் மீன உரசி செதில் நீக்கி துண்டு போட்டு வீட்டிற்குள் எடுத்து செல்வாள் !


அவன் அடுத்த வீட்டு தேவ்சந்த் மனவி சாக்கடை சண்டையை ஆரம்பிப்பாள் ! 

அடுத்தவீட்டு பரசுராம் சிங்கும் ,அப்துல் பஷீருக்கும் நிலச்சண்டை எப்போதும் ! பிளக்ஸ் போர்டு,பிளாஸ்டிக் ஷீட்டுகள்  தன் இருவர் வீட்டுக்கும் கூரை ,மற்றும் சுவர்கள் ! பஷீர் வீட்டில் படுத்து கால் நீட்டிக் கொண்டால் பரசுராம் வீட்டில் தெரியும் ! 


இங்கு வசிக்கும் ராம்சந்த் மத்திய பிரதேசத்துக்காரன் ! காலையில் எழுந்து ஐந்து மணிக்குள் குளித்து :ருத்ரம் " சொல்லி வேலைக்குப்வாபோவான் ! காலையில் ஐந்து வீடு ,மதியம்  இரண்டு,இரவு ஐந்து வீடு -வேலை ! ரொட்டி,சப்ஜி (வெஞ்சனம்) செய்வான ! சுத்தமான மத்திய .பிரதேச  பிராமணன் ! சமையல் வேலை !


அந்த வனதேவி நகரில் தான் தீவிபத்து !


2010ம் ஆண்டு நடந்தது ! மறு நாள் மத்திய இந்தியாவின் ஆங்கில இதழான "ஹிதவாதா" வில் தலைப்பு செய்தியாக வந்தது !


றிஜ்வான் வீடு சாம்பலாகி விட்டது ! அவனுக்கு இரண்டு கைகளிலும் தீக்காயம் ! தெவ் சந்த் வீட்டில் கூரை வேய்வதற்காக இரண்டு துருபிடித்த தகர ஷீட்டுகளை வைத்திருந்தான் ! தீபரவாமலிருக்க றிஜ்வான் அதை இழுத்தான் ! தகர மாதலால் சூடு தாங்காமல் அவன் இரண்டு கைகளும் கொப்பளித்து விட்டது !  


தெவ்சந்த் மனைவி தகரப்பொட்டி ஒன்றை எடுத்தாள் ! அதற்குள் தான் சிறுவாடு வைத்திருப்பாள் திறந்து பார்த்தபொது ஏழு எட்டு பத்து ரூ நோட்டுகள்  கருகிக் கிடந்தன ! அவள் கையிலும் சூடு !


பஷீர் ரிங்ரோடில் ஒரு கடயில் சமையல்வேலை செய்கிறான் !

 தன்னர்வ குழுக்கள் வசூல் செய்தனர் !


தேவ் சந்த் தனக்குத்தெரிந்த பலசரக்குகடைகாரரை 12 மணிக்குமெல்எழுப்பி அரிசி, உப்பு, எண்ணை வாங்கிவந்தான் ! 

பஷீர் 'புலவு" செய்தான் ! ரமாகாந்த் பந்திபோட்டன் ! முதலில் குழந்கதைள் ! பின்னர் பெண்கள்  ! எல்லரும் சாப்பிட்டபின்  ஆண்கள் அமர்ந்து பேசிக்கொண்டனர் ! 


"தொஸ்த் ! ஒருவாரம் வேலைக்கு பொகாதே !" என்றான் ரிஜ்வானை நோக்கி தேவ் !


அவனைப்பார்த்து பரிதாபமாக இளித்தான் றிஜ்வான் !


"உன் குடும்ப  சாப்பாடு என்பொறுப்பு ! மீன் மட்டும் கேக்காத" என்றான் ராம்சந்த்1

 எல்லரும் சிரித்தனர் !

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஹிதவாதா" பெப்பரில் இதனை படித்த எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது !


என் வீட்டு வாசலில் பெரிய புளியமரம் உண்டு ! அதன் பரந்த நிழலில் மதிய வேளையில் ஆடோகாரரகள் இளைபாருவார்கள் ! நானும் அங்கு சென்று அவர்களோடு வம்பு பெசுவேன் ! 


கமர் உத்தீன் என்ற ஆட்டோ காரார் என்னிடம் நிறைய பெசுவார் ! 


"சாப் ! கபர் க்யா (செய்தி) ஹை ?" என்று கேட்பார் ! அவ்வப்போது நானும் அவரிடம் அன்றய செய்திய கூறுவேன் !


அன்று வனதேவி நகர் செய்தி நெகிழ்ச்சியாக இருந்ததால் அவரிடம் சொன்னென் !


முடிப்பதற்குள் சவாரி வந்து விட்டது ! கமர் உத்தீன் வண்டியைக் கிளப்பிக் கொண்டே சொன்னார் !

"கியா சாப் ! ஆக் ஜானே கியா ? நெருப்புக்கு தெரியுமா ! இவன் முஸல்மான்.இவன் இந்து ,இவன் தலித் நு!" 



ஆட்டோ பின்னால் வெளியேறிய  புகையை பார்த்துக்கொண்டே நின்றேன் ..



( நவம்பர் 16  "செம்மலர் " இதழில் பிரசுரமான "காஸ்யபன் " எழுதிய கதை.)



Thursday, December 01, 2016






கள்ளப்பணத்தை ,


சிருஷ்டிப்பவர்கள் ,


ஆடிட்டர்கள் ....!!!






1945-50 ஆண்டுகளாக இருக்கும். எனக்கு துரத்து உறவினர் அண்ணன் முறை. அவர்பெயருக்கு முன்னால்  F C A  என்று போட்டிருந்தார். அவர் ஆடிட்டராக பணியாற்றினார். பின்னாளில் அதுவே C A  என்றுஆனதாக சொல்வார்கள்.


ஆடிட்டர் படி ப்புமிகவும் கடினமானது என்பார்கள். மூன்று ஆண்டுகள் ஒரு ஆடிட்டரிடம் அப்ரென்டிசாக இருக்கவேண்டுமாம்.ஆடிட்டர்கள் அவர்கள்வசதிக்கு ஏற்ப  மாணவர்களுக்கு 50-100 என்று சம்பளம் கொடுப்பார்களாம். 


இன்று கதை மாறிவிட்டது.மாணவர்கள் ஆடிட்டருக்கு 50,000-60,000 கொடுக்கிறார்களாம்.


ஒரு மாணவனிடம் தெரிந்துகொள்வதற்காக. இது என்னப்பா படிப்பு என்று கேட்டேன் . மகிழ்சசியோடு சொல்ல ஆரமபித்தான்.


"சார் !  ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆடசி   மாறுகிறது . அமைசர்க  ள் மாறுகிறார்கள்.. அரசின் பணக்ள்கொள்கையும்  வரிக்கொள்கையும் மாறுகிறது. முதல் போட்டு தொழில் செய்யும் முதலாளியால் இதனை புரிந்து கொண்டு செயல்பட முடியாது.இந்த இடைவெளியைப்போக்கி சட்டவரவு நுணுக்கங்களை அறிந்து முதலாளிகளின் கணக்கு வழக்குகளை சரி செய்து கொடுப்பது எங்கள் வேலை" என்றான்.

நாட்டின் வளர்சசிபணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றை செய்கிறார்கள் .


ஆனால் நடப்பது வேறு.

ஒரு சிமெண்டு ஆலையில் ஒரு நாளைக்கு 5000 டன்  உற்பத்தி என்றால் இவர்கள் கணக்கில் காட்டுவது 3000 டன்  மிதி 2000 டன் இயக்குனர்களின் சொந்த கணக்கிற்கு போய்விடும்..  உற்பத்தியின் சிலவு,கூலி ,போக்குவரத்து ,விற்று வரவு எல்லாம் தனி கணக்குக்கு போய்விடும் .இதன் மூலம் கிடைக்கும் லாபம் அரசுக்கு தெரிய வராது>இந்த ஆடிட்டர்கள் கையெழுத்து போட்ட  இறுதி கணக்கை அரசு ஏற்கும் . பணம்  ரகசியம். ஆரம்பகாலத்தில்   பணம் திரைப்படம், போன்ற துறைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. இன்று சகல துறையிலும் நடக்கிறது. அரசுக்கு தெரிந்து ஒரு பொருளாதாரம். தெரியாமல் ஒரு பொருளாதாரம் . இதனையே PARALEL பொருளாதாரம் என்கிறார்கள். இதனை கையாள்பவர்கள் தான நாட்டையே  ஆளும் நிலைமை  உருவாக்கி விட்டார்கள் 


இந்த கணக்கில் வராத பணம் டாலர்களாக வெளி நாட்டிலும் ,தங்கம் கட்டிடங்களாக உள்நாட்டிலும் இருக்கிறது. இது அவசர அவசியமாக கண்டிபிடிக்கப்படவேண்டும். கண்டு பிடிக்க அரசுக்கு எத்தனையோ வழிகள் உண்டு.

ரெண்டு ஆடிட்டர்களை பிடித்து நாலு மிதிமிதித்து கேட்டால் கணக்கில் வராத பணம் யாரிடம், எவ்வளவு ,எங்கு இருக்கிறது என்பதை கக்கி விடுவார்கள்.

பிரதமரும் நிதி அமைசசரும் இதனை செய்வார்களா ???