Sunday, August 26, 2012

அவதார் கிஷன் ஹங்கல் - சாகும் வரை கம்யுனி ஸ்டாக  இருந்தவர்......!


"நான் இறக்கும்வரை கம்யுநிஸ்டாக இருந்து சாவேன் " என்று கூறி ஞாயிறு அன்று (26-8-12) அன்று   மரணமடந்தார் எ.கே ஹங்கல்  என்ற அந்த அற்புதமான நடிகர் அதனால் தானோ என்னவோ எந்த பிரபலங்களும் அவருடைய இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.இவ்வளவுக்கும் 225 படங்களுக்கு மேல் நடித்தவர் அவர்.


பாகிஸ்தானின்   தலைநகரான பெஷாவரை . சேர்ந்தவர் ஹங்கல் .சிறு வயதிலேயே பிரிட்டிஷாரை எதிர்த்து  போராடியவர்.சிறை சென்றவர். பெஷாவரில் இருக்கமுடியாமல் கராச்சிக்கு வந்தார். அங்கும் போராட்டம் தான் அவர் வழ்க்கையாயிர்று.பிரிட்டிஷ் அரசு பிடித்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தது. காஷ்மீரத்து பண்டிட் ஆனா அவர் பிழைப்பிற்கு தையல் தொழில்பார்த்தார்.பிரிவினைக்குப் பிறகு பால்ராஜ் சஹாநியோடு இந்தியா வந்தார்...

சக கலைஞர்களான சஹானி,கைபி  ஆஜ்மி ஆகியோரோடு இந்திய மக்கள் நாடக அமைப்பில் செயல்பட்டார்.சுமார் 25 வருடம் நாடக நடிகராக வாழ்ந்தார். பின்னர்
 தோழர்களின்  வற்புறுத்தலுக்கு இணங்க   திரைப்படத்தில் நடிக்க  ஆரம்பித்தார் .

கம்யுனிஸ்ட் என்பதால் அவரை சிவசேனை கருவருக்க  விரும்பியது  பாகிஸ்தான் துதரகம்  நடத்திய விருந்தில் கலந்து கொண்டார் என்பதற்காக அவரை எதிர்த்து கோஷம் போட்டது. ஹங்கல்  கலங்கவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு பிரிட்டிஷாரை எதிர்த்து பெஷாவரிலும் கராச்சியிலும் போராடியவன் நான்.இந்த வகுப்பு வாதிகளையுமேதிர்த்து போராடுவேன் என்றார்..

ஒரேமகன். அவருடைய 20வயதில் பிறந்தவர். மனைவி இறந்துவிட்டார். மகனுக்கு குழந்தைகள் இல்லை.மகன் புகைப்படக் கலைஞன். நிரந்தர வருமானம் கிடையாது.முதுமை காரணமாக நடிப்பதை தவிர்த்தார்.

"கானுன் " என்ற திறப்படத்தில்திருடனாக வருவார் தவறாக கொலை குற்றம் சாட்டப்பட்டு நிற்பார். லேசாக இருமுவார். போலீசார் அவரை உடனே மருத்துவமனையில்  சேர்த்து சிகிச்சை அளிப்பார்கள்."மருத்துவம் பார்க்கத்தானே திருடவே வந்தேன்! பாவிகளே!".  என்பார்.வறுமை அவரை கடுமையாக பாதித்தது.ஆனால் அதனைவேளியில்   அவரும் அவர்மகனும் காட்டிக் கொள்ளவேயில்லை..

ஹங்கல் இறக்கும் பொது அவருக்கு வயது 98.

வங்கி ஊழியர்களின் போராட்டம்......!


சென்ற புதன் கிழமை அன்று அவசரமாக எனக்கு பத்தாயிரம் ரூ தேவைப்பட்டது. உடனடியாக காசொலையோடு வங்கிக்கு புறப்பட்டேன். அப்போதுதான் என் மனைவி வங்கி உழியர்கள் இரண்டுன்நாள்  வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று நினைவுபடுத்தினார்.பணத்தை எதிர்பார்த்து
காத்திருக்கும் நண்பருக்கு   என்ன சொல்வது? தெரிந்த வரை அணுகினேன்!
அவரும் உதவ முன் வந்தார்.அவருடைய குடும்பதேவையை முன்னிட்டு
விட்டில் வைத்திருந்த பணத்தை எனக்கு கொடுப்பதாக கூறினார் .


"வங்கி ஊழி யர்கள் எதற்காக வேலை நிறுத்தம் செய்கிரார்கள் தெரியுமா?" என்று கேட்டார்.

"என்ன! சம்பளம்,போனசு,ம்பாங்க!"
"அது தான் இல்லை!"
"பின்ன?"
"இந்த முட்டாப்பய அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டுவரான்!"
"சரி!"
"பொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்த்ப்போறேன்னு சீரழிக்க  சட்டம் கொண்டுவாறான் !"
"ஏன்யா !  இவங்களுக்கு மூளையே கிடையாதா ?"
"கொள்ளையா இருக்கு! ஆனா நல்லதுக்கு இல்ல!"
"ஐந்து வருடம் கழிச்சு பொதுத்துறை வங்கிகள் ஒய்ந்து விடுமாம! அப்போ லட்சக்கணக்கான கோடி ரூபா நட்டமாயிடுமாம். அதனால இப்பவே தனியார் வங்கிக்கு சலுகை கொடுத்து அத நிமிர வைக்கப் போறாங்களாம்!"
"அட !  சண்டாளன்களா!"
"இந்த தனி முதலாளிகளுக்கு வருமான வரி,சுங்க வரி,கலால் வரி னு சலுகை  கொடுத்திருக்காங்க !"
"எம்புட்டு இருக்கும்?"
"இருபத்து ஐந்து லட்சம் கோடி ரூ !!!"

சொந்தகஷ்டனஷ்டம் இருக்கட்டும்.!
அவங்க போராடி ஜெயிக்கட்டும் "

மனதிற்குள்  சொல்லிக் கொண்டேன்!

Tuesday, August 21, 2012

"பாஞ்சாலி சபதம் " நாடகமும் ,பன்சி கவுலும்...!

 

"தேசிய நாடகப் பள்ளி " டெல்லியில் இருக்கிறது. அவர்கள் நாடகம் பற்றிய விழிப்புணர்வு உருவாக மாநிலங்களில் நாடகப் பட்டறை நடத்துவார்கள். காந்தி கிராம பலகலை கழகத்ல் பணியாற்றிய நாடக ஆசான் சே.ராமானுஜம் அந்தப்பள்ளியின் முன்னாள் மாணவர் காந்தி கிராமத்தில் நாடகப்பயிற்சியை டெல்லியில்  இருந்து  வந்து  நடத்துவார்கள்  .பயிற்சி முடிந்ததும் அந்த மாணவர்கள் தயாரித்த நாடகம் அரங்கேறும். அநேகமாக மதுரை காந்தி கண்காட்சியகத்தின் அரங்கில்
நடக்கும்

ஒருஆண்டு அந்தமாணவர்கள் பாரதியின் "பாஞ்சாலி சபதம்" நாடகத்திலிருந்து  சில காட்சிகளை சித்தரித்திருந்தார்கள்.பாஞசாலியைத் துகிலுரியும் காட்சியில்   கிருஷ்ணர்  வரும்காட்சி.  .கொத்து வேலைக்கு  வரும்  கூ லியாள் மாதிரி ஒரு நாலு முழம் வேட்டி, இடுப்பில் சொருகியிருந்த புல்லாங்குழல்,தகையில் ரிப்பன் போன்று ஒரு தலைப்பாகை துணி  பாகை அதில் ஒரு மயில் பிலி என்று கிஷ்ணர் வந்தார் இந்தநாடகத்தை காஷ்மிரத்தை  சேர்ந்த  பன்சி கவுல் என்பவர் இயக்கினார்..

பத்திரிகைக்காக அவரிடமொரு நேர்காணல் எடுத்தேன்.கிருஷ்ணருக்காக   "நாடகங்களில்  நல்ல சிவப்பாக, அழகான நடிகர்களை  தேர்ந்தெடுப்பார்கள். தலையில் கிரீடம் கைகளில்  கங்கணம் உத்தரியம் தலையில் மயில்பிலி என்று பார்த்திருக்கிறோம்" உங்கள் கிருஷ்ணர் வித்தியாசமாக இருக்கிறாரே!" என்று கேட்டேன்.

 எனஅருகில் கவுல்  வந்து தொளில் கைபோட்ட  படி "நண்பரே! மாடு மேய்ப்பவன்  எப்படி இருப்பான்?ஒரு துணியை இடுப்பில் சொருகியிருப்பான். கையில் கம்பு இருக்கும்.தலைப்பாகை இருக்கும்.மாலை ரோஜாமாலை எல்லாம் அப்போது  ஏது ?.இஸ்லாமியர் கொண்டுவந்ததுதான் ரோஜா! well shaved சிவன் ராமர் எல்லாம் ரவி வர்மா வரைந்ததுதான்."என்று விளக்கினார்.

இந்த நாடகத்தில் கிருஷ்ணராக k A .குணசேகரன் நடித்தார்.அவருடைய குரலின்
timbre அரங்கத்தை துடிக்க வைக்க பாடவும் செய்வார்  . 

Friday, August 17, 2012

எங்கே  அவர்கள் ..........?


குஜராத் மாநிலத்தின் கடலோர கிராமம். முஸ்லிம் மீனவர்கள் வசிக்கிறார்கள்.உப்பு சத்தியாக்கிரகத்தின் பொது காந்தியின் வருகை அவர்களிடையே மின்சாரத்தைப் பாய்ச்சியது.கிராமத்திலிருந்து ரிஸ்வான் அடிக்கடி பக்கத்து நகரத்துக்கு சென்று வருவான்.அவன் மூலம் சுதந்திரக்காரர்கள் பற்றிய செய்தியை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

நகரத்தில் பாபுலால் தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு. தலைவர்களிட மிருந்து வரும் தகவல்களை சுற்றறிக்கை முலம் மற்றவர்களுக்கு சொல் வது அவருடைய பொறுப்பு. சுற்றரிக்கைகளை நகலெடுக்க அவரிடம் சிறிய மெஷின் இருந்தது. போலிசாரின் கண்களில் மண்ணைததூவி பணியாற்றிவந்தார். ஆனாலும் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது.தப்பி லால  கிராமங்களில் சுற்றிவந்தார்.ரிஸ்வான் விட்டில் பதிங்கியிருந்தார். போலிஸ் மோப்பம் பிடித்து விட்டது.லால் தப்பி ஓடிவிட்டார்.
ரிஸ்வானின் எட்டு வயது  மகள் படுசுட்டி. ரிஸ்வானின்  மனைவி  தைரிய சாலி . போலிஸ் விசாரித்தால்  சமாளித்து விடுவாள். உயிரே  போனாலும் ரிஸ்வான்  சொல்ல மாட்டான் .  

சின்னஞ்சிறு மகள் போலிசின் விசாரணையை தாக்குப்பிடிபாளா? போலீசார் வீடு வீடாக விசாரித்துக்கொண்டு வருகிறார்கள். வீட்டில் இருந்த பெரியா மரப்பெட்டிக்குள் மகளை வைத்து முடி அதன் மீது சாமான்களை   வைத்து  மூடிவிட்டார்கள்  . போலிஸ்  விசாரணை சமாளித்தத விதம் பற்றி அந்த முஸ்லீம் தம்பதியினர் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டே  பெட்டியத்திறந்து "ஆயிஷா,ஆயிஷா " என்று   கூப்பிட்டனர்  . .  தூங்கும்  குழந்தையை   ரிஸ்வான் தூ க்கினான். உயிரற்ற சடலமாக "ஆய்ஷா " வந்தாள் .

முப்பது வருடத்திற்கு முன்னால்  த.மு எ. ச நடத்திய திருப்பரம்குன்ற நாடகப் பட்டறையில் இந்தக்கதையை சொன்னேன்  .நான் பொறுப்பேற்றுக்கொண்ட குழு இதனை ஏற்றுக்கொண்டது 
ராமமூர்த்தி என்ற தோழார் இதனைட  நாடகமாக எழுதி இயக்கினார். ரிச்வானாக மாணிக்கம்  என்ற  தோழரும்  ,லால்  பாத்திரத்தில்  கோவிந்தராஜன் என்ற தோழரும் நடித்தார்கள்.

ராமமுர்த்திதான் இன்றைய வேல ராமமுர்த்தி என்ற சிறந்த சிறுகதை ஆசிரியர்.
பேராசிரியர் பழனி சோ.மாணிக்கம் தான் அன்றைய மாணிக்கம். அருப்புக்கொடையில்  வாலிபர்  சங்க  பிருமுகராக  இருக்கும்  கோவிந்தராஜன்  லால் பாத்திரத்தில் நடித்தார்.

தனியார் தொலைக்காட்சி வராத தூர்தர்ஷன் காலத்தில் நடிகர் மனோஜ் குமார் "எங்கே அவர்கள் என்று?" சுதந்திரப்போராட்ட வீரர்கள் பற்றி ஒரு தொடர் ஒளிபரப்பினார். அதனை தொடர்ந்து பார்ப்பேன். அதில் வந்த ஒரு "எபிசோடு " தான் இந்தக் கதை . 

Monday, August 13, 2012

சிகாகொவோலிருந்து வந்த "அப்பாதுரை"............

நாகபுரியில் உள்ள  டாக்டர் அம்பெத்கர் சர்வதேச விமான நிலயத்தில்  வக்கீல் ராமலிங்கம்  (என்மைத்துனர்)அவர்களோடு பயணிகள் வருமிடத்தில
  
     ஜூலை மாதம் 25ம தேதி காத்திருந்தேன்.பயணிகள் வரத்துவங்கினார்கள்.அனேகமாக எல்லாருமே 
மாக எல்லாரும் வெளியேறிவிட்டார்கள்.லேசான ஏமாற்றம்  மனதிற்குள் . "சரி! ராசு!அந்தப்பக்கம் பார்ப்போம் "  ன்று கூறிக்கொண்டே நகர்ந்தேன்! முன் பார்த்திராத முகம் ! தொலைபேசியில் பேசியதுண்டு ! இடுகையில் ஸ்டாம்ப் சைசில் போட்டோ பார்த்தது.! தவற விட்டு விட்டோமா! மனதில் உளைச்சல் !

"சார்!" மெல்லிய குரல் என் காதருகில் கேட்டது! திரும்பினேன்! "அப்பா துரைதானே !" இறுகக் கட்டிக்கொண்டேன் !
 என்னை இவ்வளவு வயதானவனாக எதிர்பார்த்திராத அவர் நான் கையில் கம்போடு நடப்பதைப்பார்த்து மெல்ல மெள்ள என்றர்! என் மகனைவிட சிறிய வயது! உயரம் என்று கூறமுடியாது! தலை முடி குறைவு! மிகவும் நிதானமான உறுதியான பாவனைகள்!

"நசிகேத வெண்பா" என்ற அற்புதமான படைப்பை தமிழுக்கு தந்தவர்! கடோபநிஷதின் தத்துவ விசாரணையை மனதில் இறுத்தி அதனையும் மனிதவள,மற்றும் நிர்வாக துறையை அலசி ஆராய்ந்தவர்! அவருடைய கையை மெதுவாக அழுத்தி என் பாராட்டை மெலிதாக தெரிவித்தேன்! காரில்   ஏறும் பொது என்னை கவனமாக ஏற்றினார்!

வீட்டில் முத்து மீனாட்சி முகமன் கூறி வரவேற்றார்! புல்லாரெட்டி பழ ச்சாறு  கலந்த இனிப்பு, வீட்டில் தயாரித்த "தேன் குழல் " கொடுத்து குடிக்க காபியும் கொடுத்தோம்! என் மைத்துனரும் என் துணைவியாரும் அப்பாதுரை அவர்களை கேள்விகளால்
 துளைத்து எடுத்துவிட்டார்கள் .அப்பாதுரையவர்களின்   தந்தையார்  "வீரக்   கனல்"  "ஆலயமணி"   ஆகிய திரைப்படங்களை எடுத்தவர் என்பது  அப்போதுதான்  தெரியவந்தது.

அவருடைய தமிழ்ப் புலமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொன்னாடை
    போர்த்தி,வேஷ்டி,துண்டு,மற்றும் சில புத்தகங்களை வழங்கினேன்!மதிய உணவு முடிந்ததும், உலகப் பொருளாதாரம் , அந்நிய முதலீடு,அவர் குடும்பம் குழந்தைகள் என்று பேசிக்கொண்டிருந்தோம்.! மாலை நான்கு மணிக்கு விமானத்தில் ஹைதிராபாத் செல்லவிருப்பதால் காபி அருந்தி விட்டு புறப்பட்டோம் ! விமானநிலையத்தில் "stop and drop " ல் இறங்கும் பொது கை குலுக்கி விடை பெற்றார்!. கார் நகர ஆரம்பித்தது.! தொண்டை அடைத்தது.! அடிமனதில் "பதிவுலகம் வாழ்க" என்று குரலேழும்பியது !!!

Wednesday, August 08, 2012

கலாச்சார  காவலர்கள்..............!


கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரபடை  தனது பணியை  ஆரம்பித்து  விட்டது !  இவர்களது அமைச்சரும் எம.எல் .எ  நண்பர்களும் சட்டமன்றம் நடந்த   கொண்டிருக்கும்   போது "கெட்டவார்த்தை படம்" பார்த்தவர்கள்!  மங்களூர்
பக்கத்தில்    பிறந்தநாள் விருந்தின்   பொது  தனி நபர்  விட்டிற்குள்  புகுந்து   பெண்களை அடித்து விரட்டியிருக்கிறார்கள் !t

இப்போது புதிதாக கல்லுரி மாணவிகள்  நெற்றியில்  போட்டு  வைத்துக்   கொள்ள   வேண்டுமாம்!கிறிஸ்தவர்கள்  இஸ்லாமியர்கள் போட்டு  வைக்க மாட்டார்கள். iஇந்துயார் கிரிததுவர்  யார  ,முகம்மதிய    யார் என்று அடையாளம் தெரிந்துகொள்ள  சவுகரியமாக இருக்கும்!சண்டாளர்கள்
எப்படி  யோசிக்கிறார்கள் ஐயா!

ராஞ்சி நகரத்துல  பெண்கள் "ஜீன்ஸ் " போடக்குடாதாம் ! போட்டா? ஆசிட்ட உத்துவாங்கலாம்! அரசு என்ற அமைப்பு இருக்கா ? 

ஒரு சம்பவம்  நினைவு தட்டுகிறது! காஞ்சிபுரம் சாமிகள்  விதவைகளைப் ப்பார்க்க மாட்டார்கள் ! அவர்கள் தலையை முண்டனம் செய்தால் பார்ப்பார்கள்           
அதற்கு விதி விலக்கு   உண்டு.திர்தக்கரையில் பார்க்கலாம் .காஞ்சி மகாசுவாமிகள் 
இந்திரா அம்மையாரை  சந்திக்க ஏற்பாடாகியிருந்தது .பிரதமரை எந்தக்கரைக்கு  வரச்சொlல்லமுடியும்.மடத்திலுள்ள  கிணற்றின்  ஒரு பக்கம் பிரதமரும் மறுபக்கம் சுவாமிகளும் அமர்ந்து சந்தித்தனர்!

சட்டம்மட்டுமல்ல !    சாத்திரங்களும்  வளையும் !! 



Friday, August 03, 2012

அவர்களின் ஆட்டம் முடிந்தது ..............!


                  நடிகர் அனுபம் கேர் உட்பட பத்து பதினைந்து பேர் கடிதம எழுதினார்கள் ."ஆளும் கட்சி கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள்
ஒத்துழைக்கவில்லை.மக்கள்  ஆதரவு இல்லை " நாங்கள் சாகும்வரை
உண்ணாவிரதம் என்பதை முடித்துக்கொள்கிறோம்" என்று  அன்னஹசாரே  
அணி அறிவித்து விட்டது.அரசியல் ரீதியாக தேர்தல்  முலம்  போராட்ம
தொடரும் என்று அறிவித்து விட்டார்கள்  .

                           இது இப்படித்தான்  முடியும் என்று சென்ற ஆண்டு இடுகையிட்டபோது   
பதிவர்கள் பலர் கோபப்பட்டனர்

90 களின் ஆரம்பத்தில்புதிய சீர்திருத்தம் வந்தபோதே  மடைதிறந்து  விட்டார்கள்.லஞ்சம் கொடுப்பதை சட்டபுர்வமாக்கி விட்டார்கள்  .கம்பெனி  விசயங்களை , தேவைகளை  அரசோடு பேசி முடிவு
செய்யl லோபியிங் என்பார்கள் அதற்கான சிலவை  கம்பெநி கணக்கில்
சேர்க்க அனுமதித்து விட்டார்கள்   .லஞ்சம் சட்டபுர்வமாக  ஆக்கப்பட்டுவிட்டது .

ஒடிசாவிலும் ,ஜார்கண்டிலும் வன்குடி மக்களின் நிலத்தைப் பிடுங்கி    
பகாசுர நிறுவனகளுக்கு குறைந்த கிரயத்திற்கு கொடுத்துள்ளார்கள்  
இதில்  கை மாறிய தொகை   கோடிகளாகும்  .நான்கு  நாள்  உண்ணாவிரதம் சென்ற  ஆண்டு நடத்தினார்கள்.80 லட்சம்   சிலவு. பகாசுரக்கம்பெனிகள் 
 கொடுத்துள்ளன  . கொடுத்தவனும்  வாங்கினவனும் ஒப்புக்கொண்ட தாகும் இது  .

அலைக்கற்றை சிக்கலில்  மாட்டிக் கொண்ட அரசியல் தலைவர்கள் தவிர    பகாசுர   கம்பெனிகளின் பெரிய அதிகாரிகள் கம்பி எண்ணுகிறார்களே !எதற்காக!

புது டெல்லியில் தேசப்பிதா காந்தி  அடிகள் இறந்தபோது  இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 7லட்சம் பேர். குருசேவும்  ,புல்கானினும்   வந்த பொதுlகல்கத்தாவில் பத்து லட்சம்  .இடது
  முன்னணி முதன் முறையாக ஆட்சி அமைத்த பொது வந்த
மக்கள் 13 லட்சம் இது தான் ஆவணம் பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும்.ராம்லிலா மைதானத்தின் கொள்ளளவு இருபதினாயிரம்   .
தொலைக்காட்சிகள் பத்து லட்சம் என்று புளுகின .அச்சு இதழ்கள்
ஆமாம்  என்றன. 

இப்போது அதே பத்திரிகைகள் ஆராயிரம்பேர் தான்  என்கிறது  .அண்ணாவின் ஆதரவாளர்களுக்கும்  பத்திரிகையுஆளர்களுக்கும்
இதனால்மோதல் ஏற்பட்டது.ஹசாரே அதற்காக மன்னிப்பு கேட்டுக்
கொண்டார்

மராட்டிய மாநிலத்தில்  ரெலேகான்  பகுதியில் வசித்து வருகிறார்  ஹசாரே
கடந்த 24 ஆண்டுகளாக அங்கு தேர்தலே நடக்கவில்லை!

லஞ்சம் கொடுத்தவர்களுக்கவும் வாங்கினவர்களுக்காகவும் 
நடந்த நாடகம் முடிந்தது !