Sunday, December 30, 2012

திலகருக்காக வாதாடிய

ஜனாப் முகமது அலி ஜின்னா .....!!



மகாகவி பாரதி சுதந்திரத்திற்காக படு பட்ட தலைவர்களில் வட இந்திய தலைவர்கள் பற்றி உணர்ச்சி மிக்க பாடல்களை எழுதியுள்ளார் ! நௌரோஜி ,திலகர்,கோகலே ,காந்தி என்று எழுதியுள்ளார்.! ஆனாலும்   திலகர் அவருக்கு மிகவும் நெருக்கமான விருப்பமானவர் !

மாஜிஸ்டிரேட் ,ஜுட்ஜு பதவிக்கு மனு செய்து கொண்டிருந்த
காங்கிரஸ்கரர்கள் மத்தியில் "சுதந்திரம் என்பிறப்புரிமை "என்ற  கோஷத்தை திலகர் வைத்தார்.! பிரிட்டிஷ் காரர்களுக்கு விசுவாசத்தை காட்ட விரும்பியவர்கள் அவரை
தீவிர வாதி என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தனர் ! அவரை ஆதரித்த பாரதி.,வ.உ.சி, சிவா  ஆகியவர்களை  மயிலாப்பூர்  வக்கீல்களால் நடத்தப்பட்ட காங்கிரஸ் ஒதுக்கி, அவர்களை  துன்புறுத்தியது !  

சமயத்திற்காக காத்திருந்த பிரிட்டிஷ் அரசு திலகர் மீது ராஜதுரோக  வழக்கை போட்டது.!
காங்கிரஸ் வக்கில்கள் ஏனோ வரவில்லை.!திலகர் தன்னுடைய சிஷ்யனு ம் ,இளம் வக்கீலுமான முகம்மது அலி ஜின்னாவை தனக்காக வாதடும்படிக்  கேட்டுக் கொண்டார்.! திறமையாக வாதாடிய ஜின்னாவின் வாக்கு சாதுரியத்தை அன்று எல்லாரும்போற்றினர் !

பிரிட்டிஷ் நீதி மன்றமோ அவருக்கு பத்து ஆண்டு தண்டனை விதித்தது.!அதில் ஐந்து ஆண்டுகள், பர்மாவில் உள்ள மண்டலே சிறையில் நாடு கடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டது.  !

சிறைவாசம் முடிந்து வந்த திலகர் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டார். 1916ல் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். சோவியத் புரட்சி அவருக்கு உத்வேகமளித்தது. தன்பத்திரிகையில் விளாடிமிர் லெனினை புகழ்ந்து கட்டுரைகள் எழுதினார் !

ஹோம் ரூல் இயக்கத்தில்தீவிரமாகப் பங்காற்றினார்.1920ம் ஆண்டு மறைந்தார்
       







ரஸ்       

 2012ம் ஆண்டு பிரசுரமாகாத 

செய்திகள் சில ........!!


கொல்கத்தாவில்  பார்க் தெருவில் ஒரு கற்பழிப்பு நடந்தது . பத்திரிகையில் செய்தியாக வந்தது .
மேற்கு வாங்க முதலமைச்சர் இதற்கு பதில் சொன்னார் ." விலை மாது ஒருவருக்கும்,அவருடைய வாடிக்கையாளர் ஒருவருக்கும் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகறாரினை மார்க்சிஸ்டுகள் கற்பழிப்பு என்று கதைக்கிறார்கள் "என்றார்.

குத்து சண்டை வீரர் மேரி கோம் ஒலிம்பிக் போட்டியில் வென்றார். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் (லண்டனில் ) கேட்டார்" மணிபூர் வீரர்களுக்காக மத்திய அரசு அனுப்பும் விளையாட்டு பொருட்களை
அதிகாரிகள் டெல்லியில் அமுக்கிவிட்டு, மணிப்பூரில் கள்ள  மார்க்கெட்டில் விற்கிறார்களா  ? என்று கேட்டார் . பின்னல் அமர்ந்திருந்த ஒருவர் "ஆமாம்! இனி ஒலிம்பிக்  போட்டிக்கு செல்லும் ,  நிர்வாகிகள் அதிகாரிகள் ஆகியோரின் எச்சில் தட்டுகளை வீரர்கள்   கழுவும் கேவலத்தையும் நிறுத்துவோம்" என்றார். அவர் விளையாட்டு அமைசகத்தின் சார்பில் வந்தவர்.

2ஜி  அலைக்கற்றை ஊழலில் சிறையிலிருந்தவர் பானட் என்ற அதிகாரி. இவர் இந்திய ஒலிம்பிக் கமிட்டிபோட்டியில்    வெற்றி பெற்றார். "அடுத்து நான்  சர்வ   தேச   ஒலிம்பிக் கமிட்டிக்கு  போட்டி இடுவேன். இந்தியாவை ஒதுக்கி வைத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியையே ஒதுக்கி வைப்பேன் " என்றார் . 

என்.டி . திவாரி என்பவர் மத்திய அமைச்சராக இருந்தார். உ.பி ,மற்றும் உத்தராஞசல் மாநிலத்தில் முதல் அமைசராக இருந்தார். ஆந்திராவின்
கவர்னராகவுமிருந்தார்.வயது.80 . மனுஷன் ஒரு மாதிரி. விடியோ எடுத்துட்டாணுக . கவர்னர் பதவியை ராஜினாமா  செய்தார்.அவர்மேல  டெல்லி வக்கீல் கேசு போட்டார். திவாரி தானென் தந்தை என்று. திவாரி மறுத்தார். நீதி மன்றம் டி என்.  எ பரிசோதனைக்கு உத்திரவிட்டது .பத்திரிகைல இதெல்லாம் வந்தது..ஒரு நிருபர் ஏன் பரிசோதனைக்கு மாட்டென்கரீங்க ? நுகேட்டார்.  "ஒரு ஆளுக்கு சரின்னேன அப்புறம் வர்றவனுக்கு என்ன பதில்சொல்ல ? என்று அவர் திருப்பிகேட்டது பத்திரிகைல வரவில்லை.


பரிசோதனை நடந்தது. திவாரி தான் டெல்லி வக்கீலோட உண்மையான தந்தை என்று தீர்ப்பு வந்தது. அந்த அம்மா காங்கிரஸ் கட்சியின் குட்டிதலவரின் மனைவி .

குடியரசுதலவர் பிரணாப் முகர்ஜியின் மகன் "தெள்ளுமணி" !பேரு  அபிஜித் முகர்ஜி . டெல்லியில் ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு  வீசி  எறியப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு  பெண்கள் போராடினார்கள். :'இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அழகாக இருந்தார்கள், நான் வாலிபனா இருந்த போது இப்படி அழகான பெண்கள் போராட
 வரூவதில்லை . எங்கப்பாவுக்கு என்னதான் அவசரமோ " என்றான் !
 பத்திரிகைகள் மூச்சுவிடவில்லை .


ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா ( 30 -12 -12 )









ஞ்சல் ஆகிய

Monday, December 24, 2012

ஒரு  ஊறுகாய் தாத்தா .....!!!



"தீக்கதிர் " பத்திரிகைக்கு மதுரையில் கட்டிடம் கட்ட முடிவாகியது  . "ஜனசக்தி"  பத்திரிகைக்காக வாங்கிய இடம் கைவந்துவிட்டது. மதுரை பை-பாஸ் சாலைக்கும்,கொன்னவாயன் சாலைக்கும் இடையே அரைகுறையாக கட்டப்பட்டிருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு வேலை  ஆரம்பமாகியது. இந்த கட்டிட வேலையை கண்காணிக்க "ஆர்.ஆர் " என்று அன்போடு அழைக்கப்பட்டமுது பெரும் தோழர் ராமராஜ்  பொறுபளிக்கப்பட்டார்

விவசாயிகளின் தலைவர் ராமராஜ் .கட்சி பிரிநதபோது பலதலைவர்கள்  ,மற்றும் தொண்டர்கள் சிறையிலிருந்தனர்.. மேலும் பலர் தலைமறைவாக செயல்பட்டனர். தன்னந்தனியாக கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை ஒன்று திரட்டி மார்க்சிஸ்டு கட்சிக்கு கொண்டுவந்த மகத்தான பணியைச் செய்தவர் ராமராஜ்.. அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வந்தார்.

மதுரை  1ம் நம்பர் சந்தில் அப்போது தீக்கதிர் பத்திரிக்கை செயல்பட்டு வந்தது. ஆர்.ஆர் அங்க் அடிக்கடி வருவார் என் வீடும் கொன்னவாயன் சாலைக்கு அருகிலிருந்தது வெறும் சோறும் தயிரும் சாப்பிடும் அவருக்கு வெஞசனமாக பள்ளியில் படிக்கும் என்  மகன் அல்லது மகள்மூலமாக  ஊறு காய் கொடுத்து அனுப்புவேன்.அவர்களைப் பொருத்தவரை அந்த மாபெரும் தலைவர் "ஊறுகாய் தத்தா".

இந்த  சமயத்தில் தான் அவசர் நிலை வந்தது. தலைமறைவு தலைவர்களுக்கும், வெளியில் செயல் படும் தலைவர்களுக்கும் தொடர்பாக ஆர்.ஆர் செயல் பட்டு வந்தார்.

நான் வசித்த பகுதியில் "சூரிய போஸ் " என்று ஒரு தோழர் இருந்தார் . அவருடைய தந்தை நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றியவர். இது தவிர என்னோடு பணியாற்றிய தோழர் இப்ராகிம் அவர்களுக்கு "போஸ் " நெருக்கமானவர் .அவர் அடிக்கடி விளாங்குடி பெரிய கருப்பன் கொடுத்தார் 
என்று கூறி   ஒரு கவரை கொடுப்பார். போஸ் கொடுப்பதை .ஆர் ஆர்  இடம் கொடுக்கவேண்டியது என் பொறுப்பு..ஒரு சிறிய எவர்சில்வர் டப்பாவில் அந்த பிளாஸ்டிக் கவரை வைத்து அதன் மீது வாழையிலையினை வைத்து அதில் ஊறுகாயை போட்டு என் குழ்ந்தைகள் மூலம் கொடுத்தனுப்பி விடுவேன்.

என் மகன் MA  மற்றும் IRPM  முடித்து BL படித்து மத்திய உள் துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறான்.

என் மகள் MA , Mphil , ML முடித்து வக்கில் தொழில் செய்கிறாள்.  



வேடிக்கை என்ன வென்றால்  அவர்கள் இருவருக்குமே நான் அவர்களை இப்படி use ( misuse ) பண்ணினேன் என்பது தெரியாது.



இந்த இடுகையை பார்த்து
தெரிந்து கொண்டால் தான் உண்டு.











.  





Thursday, December 20, 2012

செல்வராஜ் தோழா சாகித்ய அகதமி

தன்னை புதுப்பித்துக் கொண்டது !!!

"தேநீர்" செல்வராஜ் ,அதற்கு முன்பு "மலரும் சருகும்" செல்வராஜ், இன்று
"தோல் " செல்வராஜ் என்ன அற்புதமான பரிணாமம்!  தோழா தமிழகத்து முற்போக்கு இயக்கம் காத்திருந்த தருணம் இது!

சாகித்ய அகாதமி தன்னை புதுப்பித்துக் கொண்டது என்று தான் பதிவு
செய்ய வேண்டும்!

உன் கையைப் பிடித்துக் கொண்டு தோழர்  ஜீவா  அவர்கள்  உன்னை  "ஜனசக்தி"  பத்திரிக்கை அலுவலகத்தில் கொண்டு சேர்த்தாரே ! நினைவிருக்கிறதா !

கலை இலக்கிய பெருமன்றத்தை ஆரம்பிக்க காரைக்குடியில் நடந்த கூட்டம்
நினைவு தட்டுமே!

"மலரும் சருகும்" எழுதி தலித் இலக்கியத்தின் முன்னோடிதமிழனாச்சே நீ !

பாம்பனார் எஸ்டேட் சென்று அங்கு உன் "தேநீர்" பற்றி கருத்துரையாற்ற  சென்ற பொது அந்த பாடசாலை வாத்திமார் என்னைச் சுற்றி நின்று உன்னை
புகழ்ந்ததை கேட்டு சொக்கிப் போனவன் நான் !

சுதந்திர போராட்ட வீரர் வாழவிட்டான்- லட்சுமி  அம்மாள்  தம்பதியர்  இருவருமே சிறையில் இருந்தவர்கள்.    லட்சுமி அம்மாளுக்கு சிறையில் பெண் குழ்ந்தை பிறந்தது .அந்தக் குழந்தைக்கு "பாரத புத்திரி " என்று பெயர் வைத்தார்கள்!
தோழா!அந்த பாரதபுத்திரியை சாதி மறுப்புத்திருமனம் செய்து கொண்டவன் நீ ! 

 ஆரம்ப காலத்திலிருந்து தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழி நடத்தினாய் !

" செம்மலரில்" நீ  எழுதிய மூலதனம் நாவல் பெரும் வரவேற்பை பெற்றது!

பார்க்கும் போதெல்லாம் பேகம்பூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றி   பேசுவாய் !
 அவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த எ\.பாலசுப்பிரமணியம் , மதனகோபால்,, தங்கராஜ் ஆகிய கம்யுனிஸ்டுகளை காவிய நாயகர்களாக படைத்தாய்!

இந்திய இலக்கியத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்களை  ,அவர்களுக்காக ,அவர்களொடு இணைந்து போராட்டம் நடத்திய வரலாற்றை
காவியமாக்கிய  தோழனே !

உனக்கு இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வாழ்த்துக்கள் !!!
 \







     

Thursday, December 13, 2012

பட்டொளி வீசிப்

பறக்கும் செங்கொடி ......!!!


அறுபதாம் ஆண்டுகளின் முன்பகுதி ! கம்யுனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி" மதுரையிலிருந்து கொண்டு வர முயற்சி நடநதது. அதற்கான இடம் கட்டிடம்  மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்காக கம்பெனி பங்குகளை விற்க முடிவாகியது.  கட்டிட வேலயும் ஆரம்பிக்கப்பட்டது இந்த சமயத்தில்தான் கட்சிக்குள் வலது,இடது என்று ஆரம்பித்து கட்சி பிரிந்தது.

கட்டிட வேல நின்றுவிட்டது. பத்திரிகைக்காக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ரிசீவர் மூலம் நிர்வகிக்க வேண்டியதாயிற்று. பாதி வேலை முடிந்த கட்டிடம் புதர் மண்டி  போயிற்று. ஒருகட்டத்தில் கமபெனியின் இயக்குனர்களாக இருந்தவர்களில்  பெரும்பாலோர்  வலது கோஷ்டியை  சேர்ந்தவர்கள்  .அவர்கள்  அரைகுறை கட்டிடத்தை விற்றுவிட முடிவு செய்தார்கள். மதுரையில் தியாக ராசா செட்டியாரின் தமிழ் நாடு பத்திரிகைக்கு விற்க முயன்றார்கள். அதன் பிறகு தமிழ் முரசு என்ற பத்திரிகைக்கு விற்க பேரம் நடந்தது. 

நீதி மன்றம் நியமித்த "ரிசிவர் " ASR  . chary என்ற பிரபல வக்கீலாவார். இவர் முது பெரும் கம்யூனிஸ்டு தலைவர் ASK ஐயங்காரின் சகோதரர் ஆவார்.
ஏழை தொழிலாளர்களிடம் வசூல் செய்து வர்க்க அரசியலை பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டபத்திரிகை அதன் இடத்தை வர்க்க எதிரிகளுக்கு விற்பது அவர் மனதிற்கு உவப்ப இல்லை.விற்க,வாங்க சகல அதிகாரமும் அவருக்குமட்டுமே இருந்தது.

பி.ராமமூர்த்தி அவர்களைச் சந்தித்தார்."  உங்கள் கட்சி சமரசம் இல்லாமல் தொழிலாளர்களுக்காக பணி புரிகிறது.விற்பதற்கான முழு அதிகாரமும் .
எனக்கு இருக்கிறது .என்ன சொல்கிறீர்கள் " என்று கேட்டார்.சகல ஏற்பாடுகளையும் செய்து பத்திரம் பதிவாகும் வரை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று  கூறி  பரிமாற்றம் நடந்தது..

மறு நாள் காலை கொண்ணவாயன் சாலை தோழர்கள், பரவைமில்
தோழர்கள், ஆரப்பாளையம்,மங்ச மேடு தோழர்கள் மர்க்சிஸ்டு   கட்சி கோடியை ஏற்ற சென்றார்கள்.

அங்கு வலது கட்சி தொண்டர்கள், பறவை மில் மண்டை ராமன்.ஆட் டு ராமன்,கோனையன்,மதுர மில் கடப்பறை ஆகியொர் கம்பு கட்டைகளோடு  நின்றார்கள்.

போலீசார் வந்து கட்டிடம் கைமாறிவிட்டது என்று எடுத்த்ச் சொல்லி அவர்களை கலைந்து  போகச் சொன்னார்கள் '

விண்ணதிர கோஷமிட்டு தோழர்கள் செங்கொடியை ஏற்றினார்கள்.

மதுரை-தேனி சாலையில் அரசரடி சதுக்கத்திலிருந்து வடக்கே வைகை ஆற்றுப்பாலத்தைப்  பார்த்தால் மறுகரையில் கம்பிரமாக பட்டொளி வீசி செங்கொடி பறப்பதைப் பர்க்கலாம் .

அந்தச் செங்கொடியின் கீழே தான் "தீக்க்திர் "  அச்சடிக்கப்பட்டு, வெளி வருகிறது

அதன் ஐம்பதாம் ஆண்டு விழா!! தோழர்களே  வாழ்த்துவோம் 111 





Sunday, December 09, 2012

பாபர் மசூதி இடிப்பும்

அரவிந்தன் நீலகண்டனும் .......!


சமீபத்தில் பதிவர் நண்பர் ஒருவர் "மசூதி இடிப்பு" என்று தன்னுடைய முகநூ லில் குறிப்பிட்டிருந்தார். இந்துத்வா நண்பர்களின் தத்துவ ஆசானான அரவிந்த நீலகண்டன் கொதித்து எழுந்து "மசூதியா ? இடிப்பா? " என்று கேட்டார். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு சர்சைக்குரிய கட்டடம் (disputed structure ). மசூதி என்றால் வாய் வெந்து போகும் அவர்களுக்கு !!

அது என்னசர்ச்சை ? உருவாக்கினவர்களே அவர்கள் தான் ! இந்த மாதம் 22ம தேதி "Ayodhi : the dark  night " என்ற புத்தகம் வெளி வருகிறது அந்த புத்தகம் 1949ம ஆண்டு டிசம்பர் மாதம் 22-23ம தேதி நள்ளிரவில் நடந்தது பற்றி சொல்கிறது.மசூதி இருப்பது இந்துத்வா வாதிகளுக்கு கண்ணை வலித்தது. சுதந்திரம் பெற்ற உடன் இந்துத்வாவின் இந்துமகா சபாவின் செல்வாக்கை அதிகரிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்பது
அவர்களின் உடனைத்தேவை. சதி திட்டம் தீட்டப்பட்டது.

அபிராம் தாஸ் என்ற 6அடி உயரம் கொண்ட தடியன்  இவனை "நிர்வாணி
அக்கரா  " என்ற மடத்தை சேர்ந்தவன் என்று கூறிக்கொள்கிறார்கள்.இவனுடைய சகோதரன் இந்து சேகர் ஜா , ஜுகல்  கிஷோர் ஜா ஆகியவர்களோடு சேர்ந்து காரியங்களை முடிக்கத்திட்டமிட்டனர்.

22ம தேதி இரவு 12 மணிக்குமேல் இவர்கள் கள்ளத்தனமாக " ராம்  லாலா "
சிலைய மசூதியின் நடுவில்கொண்டு வைத்துவிட வேண்டும். வெளியிலுள்ளவர்கல்  இவர்களின் சமிக்ஞைக்காக  காத்திருப்பார்கள். 
சமிக்ஞை வந்ததும் சுயம்புவாக ராமச்சந்திர முர்த்தி சீதையோடு எழு ந்தருளி விட்டார் என்று இரவோடு இரவாக தண்டோரா
போடுவார்கள். அகில இந்திய இந்து மகாசபாவின் தலைவன் அதேசமயத்தில்  ப்சாபாத்தில்  "ராமர் தோன்றினார்"   என்று சுவரொட்டிகளை அடித்து அயோத்தி முழுவதும்
ஒட்டுவான்.  

காடு மாதிரி இருந்த பாபர் மசூதி கட்டிடத்திற்கு காவலாக முகம்மது இஸமாயில்  என்பவன் இருந்தான் அவன இந்த முவரும  அடித்து விரட்டி விட்டு  சிலையை வைத்து விட்டார்கள்.காலையில் அப்பாவி ஜனங்களை உசுப்பிவிட சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகிவிட்டது.

கலக்டர் வந்தார். கலக்டர் கே.கே நாயர். இவன் ஒரு செட்டப்பு கேசு. கேரளத்திலிருந்து வந்த  இந்து மகாசபை ஆதரவாளன். சுயம்புவாக வந்த ராமர்-சீதா இருவருக்கும் பூஜை புனஸ்காரம் செய்ய மசூதிக்குள் அனுமதி கொடுத்தான்.
சர்ச்சை ஆரம்பமானது இப்படித்தான் .

Ayodha : The dark night ,(harper collins )Autors : Krishna Jha and Dhirendra K jha
ஆதாரம் :டைம்ஸ் ஆப் இந்தியா (6-12-12)




Thursday, December 06, 2012

 திரைப்பட விமரிசனம் :

"டாக்டர் B .R. அம்பேத்கர் "

( ஊமைகளின் நாயகன்)


டிசம்பர் 6ம்  தேதி  காவல் துறை,ராணுவம் ,துணை ராணுவம்  பாதுகாப்புப் பணியில் இருக்க, டிசம்பர்மாதத்து மென்குளிரில் கம்பளிஆடைகளப் போர்த்திகொண்டு "பொதிகை " ஒளிபரப்பிய டாக்டர் அம்பேத்கர் (தமிழ் ) திரை படத்தை பார்த்தேன்.

1998ம ஆண்டே தணிக்கை முடிந்தாலும் 2000 ஆண்டுதான் படம் திரைக்கு .
வந்தது .காரணம்,அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.தமிழில் வந்தபோது அதனை வெளியிட தமிழ் நாட்டு தேசபக்தர்கள்  மறுத்து விட்டார்கள். தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள் கலஞர் சங்கம் முன்கைஎடுத்து இயக்குனர் லெனின் அவர்களின் உதவியோடு தமிழகத்தில்  சில  நகரங்களில்  திரையிட்டார்கள். இன்று  தமிழ்  கூறும்  நல்லுலகம  இந்த அற்புதமான  படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்கள்.

தன்னந்தனியாக ஒரு மனிதன் தன சகமனிதர்களின் இழிவைப் போக்க
என்ன செய்யவேண்டுமோ அதனைச்செய்த மாமனிதரின் காவிய படைப்பு .

அண்ணல் சிகாகோவில் படிப்பதில் ஆரம்பிக்கிறது படம்.சாலையின்
 மறுபக்கம் நிக்ரோக்கள். மற்றோரு பக்கம் வெள்ளையர்கள் .  வெள்ளை பேராசிரியர்கள் கறுப்பர்களின் இழிநிலை போக்க குரலெழுப்புவது 
    இளம் அம்பேத்கரை   உசுப்புகிறது..லண்டன் செல்கிறார் படிப்பு முடிந்து
இந்தியா வந்து சமஸ்தானத்தில்வேலைக்கு சேருகிறார். தங்க இடம் கிடக்கவில்லை. அரசராலும் உதவ முடியவில்லை  .பார்சி சத்திரத்தில்  தங்குகிறார். அவர் பார்சி அல்ல என்று தெரிந்த விடுதி காப்பாளன் அவருக்கு தொழுவம் போன்ற இடத்தில் தங்க வைக்கிறான் வெளிநாடு சென்று படித்த இளைஞன் பிறப்பினால் இழிவு படுத்தப்படும் காட்சி பார்வையாளனை கலங்க வைக்கிறது.

கல்லுரியில்பெராசிரியராக இருக்கிறார்.தொண் டைகிழிய வகுப்பு எடுத்துவிட்டு ஆசிரியர் அறையில் நீர்  அருந்த போகும் பொது சக பேராசிரியர் தடுக்கிறார்."நி விட்டிலிருந்து தண் ணிர்   கொண்டுவந்து குடி என்கிறார். இது தீட்டகிவிடும் என்கிறார்.தீட்டு போக மந்திரம் உண்டே ! நான் சொல்லட்டுமா என்று அம்பேத்கர் கூறி மந்திரத்தை சொல்கிறார் .
(நான்  கைதட்டிவிட்டேன்.அருகிலிருந்த மனைவி புன்சிரிப்போடு ஆமோதித்தார்)

ஆடும்மாடும் குடிக்கும் குளத்தில் அந்த மக்கள் குடிக்கக்கூடாது என்கிறார்கள். போராட்டம்நடத்த முடிவாகிறது அவரோடு அணியிலுள்ள சித்தாலே ,சகஸ்ர புத்தே கெய்க்வாட்  போன்றவர்களின்  உதவியையும் பெற்றுக் கொள்கிறார். போராட்டத்தின் ஒரு பகுதியாக "மனுஸ்மிருதியை ",
 எரிக்கிறார்கள். சித்தாலே "ஆகுதி"  மந்திரத்தை சொல்லி நெருப்பில் ஏடுகளை போடுகிறார்.(கை தட்டினேன். புன்னகையும் கிடைத்தது)

முதல் வட்டமேசை மாநாட்டில்  காங்கிரஸ் கலந்து கொல்லவில்லை . அம்பேத்கரும் ராவ் பகதூர் சீனிவாசனும் கலந்து கொள்கிறார்கள். இரண்டாவது  மாநாட்டில் காந்தியும் கலந்து கொள்கிறார்.

இடைக்கால அரசு ,அரசியல் நினைய சபை,அரசியல் சட்ட முன்வரைவு ,இந்து 
சீர்திருத்த சட்டம்,என்று அரசியல் நிகழ்வுகள் அவருடைய கடுமையான
உழைப்பை  கோருகின்றன. பிறந்தது  இந்துவாக  .நான்    போகும்போது  இந்துவாகபோகமாட்டேன்  என்கிறார். மௌல்விகள்,பாதிரியார்கள், சாமியார்கள்,இந்து மகா சபா தலைவர்கள், சீக்கிய குருமார்கள் அவரை தங்கள் மதத்தில் சேர மொய்க்கிறார்கள். யாருமே தாழ்த்தப்பட்டவனின் உரிமை பற்றி பேச மறுக்கிறார்கள். இறுதியில் புத்தமதத்தில் சேருகிறார்.


அம்பேத்கராக மமுட்டி வாழ்ந்திருக்கிறார். அவரூ க்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. வட்டமேசைமாநாட்டில்,சட்டசபையில், காந்தியோடு என்று அவர் பேச்சும் குரலும் அதன் கம்பிரமும் மனத்தில் ரிங்கரித்துக்  கொண்டே
இருக்கிறது.

முதல் மனைவி ரமாபாயாக சொனால் குல்கர்னி,சவிதா பாயாக மிருனாள் குல்கர்னி அருமையாக செய்துள்ளனர். மறைந்த மோகன் கோகலே காந்தியாக வாழ்ந்திருக்கிறார்.

"நான் கபிர் சொல்கிறேன்! இது குருடர்களின் உலகம்"என்ற பாடல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஐந்து பாடல்களும் அருமை. இசை அமைத்த அமர் ஹல்திகர் சிறப்பாக செய்துள்ளார்.

..கலை இயக்குனர் புகழ் பெற்ற நிதின் தேசாய் . தேசிய விருது இந்தப்படத்திக்காகவும் பெற்றுள்ளார். அசோக் மேத்தாவின் நேர்த்தியான படப்பிடிப்பு சிறப்பாக உள்ளது. சிறந்தபட விருதினையும் பெற்றுள்ளது.

அம்பேத்கர் ஒருபத்திரிகைய நடத்துகிறார் "அதன் பெயர் "மூக் நாயக் " .
ஊமைகளின் தலைவன் என்று அர்த்தம்.. 

அந்த ஊமைகளை பேச வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்!.  

அவர்களை உரக்கப் பேசவைப்பது நமது கடமை !!

Wednesday, December 05, 2012








சமஸ்கிருத

மொழியும் கவிதாயினிகளும்.....!!

சமீபத்தில்

சென்னையில் பெண்கள் சம்மந்தமாக த.மு.எ.க.சங்கத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கு நடந்தது.அதுபற்றிய விபரங்களை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அங்கு

சில கருத்துரயாளர்கள் சமஸ்கிருத மொழியில் கவிதாயினிகளே கிடையாது என்ற கருத்தை வலியுருத்தியதாக கூறப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 60 வருடங்களாக சம்ஸ்கிருத மொழி தமிழகத்தில் கற்பிகப்படுவதில்லை. சம்ஸ்கிருதம் பற்றிய நமது புரிதல் என்பது மிகக்குறைவானதாகீ விட்டது. கிறித்துவத்தைப் பிரச்சாரம் பண்ண வந்த கால்டுவெல்,பிரிட்டோ போன்றவர்கள் கூறிய தவறான தகவல்கள் வரலாறாக்கப் பட்டு அதுவே இன்று நம்பபபடுகிறது.

சம்ஸ்கிருதம்

தேவ பாஷை என்றும்,அந்து அந்தணர்களின் மொழி என்றும் நம்பப்படுகிறது .உண்மையோ முற்றிலும் வேறானது.ராமாயனத்தை எழுதிய ரட்சன் (வால்மீகியோ) னோ கீதையை எழுதிய வியாசனோ,காளிதாசனோ பிராமணர்கள் இல்லை. சமனமும்

,பௌத்தமும் ஓங்கியிருந்து வேத மதம் பலகீனமாக இருந்த போது அதனை மீட்டுருவாக்க முயற்சிகள் நடந்தன.சங்கரன் நம்பூதிரி என்ற தத்துவ விசாரகர் அத்வைத( .Monism) பிரச்சாரம் செய்துவந்தார்.இந்தியா பூராவும் பயணம் செய்தார்.மத்தியப்பிரதேசத்தில் இருந்த மண்டன் மிஸ்ரர் என்ற தத்துவ வாதியோடு விவாதித்தார். அதில் வேற்றி பெற்றர். ஆனால் மண்டன மிஸ்ரரின் மனைவி உபவ பாரதி என்ற பெண் என்னோடு விவாதம் செய்து வேற்றி பெற்றல்தான் நீங்கள் வெற்றி பெற்றதாக எடுத்துக் கோள்ளமுடியும் என்று அறிவித்தார். சங்கரரும் விவாதத்தில் பங்கு பெற்றார். அவர் தோல்வியுற்றர். இங்கு முக்கியமானது சங்கரரின் தோல்வியல்ல.தத்துவ விசாரணையில் பெண்ணும் பங்கெடுத்துக் கொள்ளும்வாய்ப்பு இருந்தது என்பதை சுட்டிக்காட்டுவதுதான் நோக்கம்.

சம்ஸ்கிருத

மோழியில் கவிதாயினி இல்லை என்ற கூற்றுக்கு வருவோம். "செம்மலரில்" வரும் முற்போக்கு கதைகளை சம்ஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்து பிரசுரம் செய்யும் எழுத்தாளார் முத்து மீனாட்சி அவர்களிடம் கேட்டபோது அவர் சிலகுறிப்புகளை கோடுத்தார். தொன்மைக்

காலத்திலேயே பல கவிதாயினிகள் இருந்ததாகக் குறிப்பிட்டார் ."விஜ்ஜிக்கா","ஷீலாபத்தாரிகா", " விகட நிகம்பா"என்று கவிதாயினிகளின் பெயர்களை அடுக்க ஆரம்பித்தார். கொஞ்சம் பிற்காலத்தில் "க்ஷமராவ்","கமல் அப்யங்கர்" என்று பிரபலமானவர்களின் பெயரைக் குறிப்பிட்டார்."அக்னிக்ஷிகா:" என்ற தொகுப்பை எழுதிய புஷ்பா தீக்ஷித் என்ற கவிதாயினி பற்றியும் கூறினார் நவின கவிஞர்கள் பற்றி நான் கேட்கவில்லை. .

சம்ஸ்கிருத

மொழியில் கவிதாயினிகள் இல்லை என்று கூறமுடியாது என்பதை சுட்டுவது மட்டுமே இந்தக்கட்டுரையின் நோக்கம்.

Saturday, December 01, 2012






Red Salute to Com.

P.G. ....!

 

 

கேரள

முற்போக்கு இலக்கிய செயல்பாட்டாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஓருவரும், தேசாபிமானை பத்திரிகயின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான பி. கோவிந்தபீள்ளை மரணமடைந்தார்.முற்போக்கு இலக்கியத்திற்கு அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பாகும்.குறிப்பாக தமிழ்நாடு,முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு அவருக்கு இருந்த தோடர்பும், ஆதரவும் முக்கியமானதகும். சங்கம் ஆரம்பிக்கும் காலத்திலேயே அவருடைய ஆளோசனையைப் பெற்றோம்.

1975

ம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் த.மு.எ.ச துவங்கப்பட்டது.புதிதாக வந்த இளம் எழுத்தாLaர்கLai ஒருமுகப்படுத்தி அவர்களின் இலக்கிய ஞானத்தை விகசிக்க வைக்க ஒரு பட்டறை நடத்த சங்கம் விரும்பியது. அந்த பட்டறையை நடத்த பி. கோவிந்தபிள்ளைய அழைக்க முடிவாகியது. பட்டறையை எங்கு நடத்துவது? அவசரநிலை காலத்தில் எப்படி,யார் நடத்துவது என்ற கேள்விவந்த போது கு.சின்னப்பபாரதி.நாமக்கல் வக்கீல் சுப்பிரமணியம்,பெரியவர் பழனிச்சாமி ஆகியொர் நாமக்கல்லில் நடத்த முன்வந்தனர்.ரகசியமாக நடத்தபட்ட எழுத்தாளர்கள் பட்டறை.தங்கள் வீடுகளில் கூட எங்கு செல்கிறொம் என்பதை சொல்லவேண்டாம் என்று வரும் எழுத்தாளர்களிடம் சங்கம் கேட்டுக் கொண்டது.(பாதுகாபு கருதி.)

தமிழ்

எழுத்தாளர்கள் கிடடதட்ட 118 பேர்ர்வந்திருந்தனர். அங்கு தான் முதன் முதலாக பொதியவேற்பன், அறிவுறுவோன்,(தஞ்சை)பச்சையப்பன் (சென்னை) பெராசிரியர் செழியன்,ம.ந.ராமசாமி(திச்சி) கவிஞர் செம்மலர் செல்வன்( துறையூர்) ஆகியோர் வந்திருந்தனர்.கேரளத்திலிருந்து ஸ்ரீதரன்,குரூப், ஆந்திராவிலிருந்து சாந்தா ராவ் வந்திருந்தனர். பங்களூரிலிருந்து D.R. நாகராஜ்,சேக்கிழார், மாணவராயிருந்த சித்தலிங்கய்யா, சுப்பிரமணியம் ஆகியொர் வந்திருந்தனர். கோவிந்தபிள்ளக்கு

பெருமைதாங்கவில்லை. அவருக்கு மொழிப்யர்ப்பு வசதிக்காக அவர் பின்னல் என்னை அமரவைத்திருந்தனர்

இந்த

பட்டறையில் தான் சித்தலிங்கையா. தன்னுடைய புகழ் பெற்ற "நன்ன ஜனங்களு" என்ற பாடலை பாடி முதன்முதலாக அரங்கேறினார்.

கண்கள்

கசிந்த P.G. கண்ணடியைக் கழற்றி முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

"Com ! are you alright?"

நான் கேட்டேன்.

"Yes ! Yes !"

"a bit emotional ?"

"com ! progressive writers from kannada,thelugu,thamizh,malayaalam writers have assembed.! This is the moment faor progressive litterary movement to rejoice ! A literary activist like Me --Iam not shedding tears- it is ANANDHA PASHPAM."

 

RED SALUTE COM.P.G.

Thursday, November 29, 2012

நேரு - நாசர் - நுக்ருமா-----!!!


இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஆப்பிரிக்க  ஆசிய நாடுகளில்  தேச பக்திமிக்கதலைவர்கள்  தங்கள் நாட்டின் விடுதலைக்காக போராடினார்கள். இந்தியா   குறிப்பாக நேரு இந்தத்தலைவர்களோடு மிகவும் நெருக்கமான உறவும் தொடர்பும் கொண்டிருந்தார்.புதிதாக விடுதலை  அடைந்த நாடுகளையும் இணைத்துக்கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட துடிக்கும் ஆப்பிரிக்க நாடுகளு க்கு ஆதரவளித்து வந்தார். இதில் அவரோடு கரம் கொத்து நின்றவர்கள் தான் எகிப்து நாட்டின்
நாசரும் ,கானா நாட்டின் நுக்ருமாவும். அன்று பத்திரிகைகளின் "three ns " என்று உலகம் பூராவும் பாராட்டப்பட்ட தலைவர்கள் இவர்கள்.

எகிப்து நாட்டின் ராணுவத்தில் கர்னலாக இருந்தவர் காமல் அப்துல் நாசர்.
எகிப்து நாட்டு அரசர்கள் ஆட்சியை மாற்றி ஒருஜனநாயக ஆட்சியைக் கொண்டுவர விரும்பிய ராணுவ அதிகாரிகளுக்கு தலைமை தங்கினார்.ரகசியமாக.விவசாய நாடான எகிப்தில் நிலச்சிர்த்திருத்ததை
 கொண்டுவர விரும்பினார். பிரிட்டிஷ்கரர்கள்வசம்பணம் கொழி க்கும் சுயஸ் கால்வாய் இருந்தது.
விவசாயப் புரட்சியை நடத்த பாசன் வசதியை பெருக்க வேண்டிய திருந்தது அதனை மேம்படுத்த  நைல் நதியின் குறுக்கே  ஆணை கட்ட  விரும்பினார் . எந்த மேற்கத்திய நாடும் உதவ மறுத்து விட்டன. அரசரும் இதனை விரும்பவில்லை. ஆகவே ஜெனரல்  நகிப் தலைமையில்   புரட்சியில் ஈடுபட்டு பருக்  அரசரை  நாடுகடத்தினார்.
  
   . அப்படியும் அவரால் விவசாய சீர்திருத்தத்தை கொண்டு வர முடியவில்லை. ஜெனரல் நகிப் அதனை எதிர்த்தார்.நகிப்பை  நிக்கி விட்டு அவரே  பொறுப்பேற்றுக் கொண்டார். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் ஆணை கட்ட  சுயஸ் கால்வாயை எடுத்துக்  கொண்டார்.பிரான்சு,பிடிட்டிஷ் படைகள் எகிப்தை தாக்கின.அமெரிக்க தன னுடைய போர்க்கப்பலை அனுப்ப முடிவுசெய்தது.சோவியத் பிரதமர் கொசிஜின் எச்சரிக்கை செய்ததால் அமெரிக்க,படைகள் வரவில்லை எகிப்திய மக்களும் பிரிட்டிஷ்,பிரான்சு படைகளை துவம்சம்பண்ணி கால்வாயைகைப்பறினர் .

ஏகாதிபத்தியம்  நாசரைக் கொல்ல  ஆளனுப்பியது. அவர் அந்த முயற்சியில் தப்பிவிட்டார்...  அப்போது அவர் "என் தேச மக்களே! நான் உயிவிட்டால் உங்களுக்காக உயிவிடுவேன்.நான் உயிவாழ்ந்தலும் உங்களுக்காக வாழ்வேன்.உங்களின் கௌரவம் எகிப்தின் கௌரவம் இரண்டையும் காக்க
என்னை அர்ப்பணிக்கிறேன்" என்றார்.


எகிப்தில் மன்னராட்சியை மிண்டும் கொண்டுவர முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.முஸ்லிம்சகொதரர்கள்,புரட்சிகர கவுன்சில் என்ற பல அமைப்புகள் முயற்சிக்கின்றன சென்ற ஆண்டு நடந்த  "புரட்சியில் " முஸ்லிம்  சகோதரர்கள்  வந்துள்ளனர்
 .அவர்களின்  தலைவர் சட்டத்திருத்தம் கொண்டுவந்து விரட்டியடிக்கப்பட்ட பருக் மன்னருக்கு இருந்த அதிகாரங்களை  திரும்பவம் பெற்று ஆட்சி நடத்துகிறார்.

சென்ற ஆண்டு நடந்த புரட்சி "பதிவுலகம்" நடத்தியது  என்று  பிரச்சாரம் நடந்ததது  

பதிவுலக நண்பர்களே ! மன்னியுங்கள்.!

பதிவுலகம் எதிர்புரட்சியைத்தான் செய்யும்!

உண்மையான புரட்சியை செய்ய அனுமதிக்கப்படாது!

எச்சரிக்கை !!!


Monday, November 26, 2012

கரும்பு விவசாயியும்,சரத்பவார்,கட்காரி,காங்கிரசும்.......!!!





சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவிற்கு முக்கியமான பங்கு உண்டு.உத்திர பிரதேசமும்,மகாராஷ்ட்றா மாநிலமும் இதில் முன்ணணியில் உள்ளான. குறிப்பாக மகாராஷ்ட்றாவின் மேற்கு மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் அதிகம்.இவை கரும்பு விவசாயிகளை உறுப்பினராகக்கொண்டகூட்டுற்வு ஆலைகள். அதேசமயம் இன்று அந்த ஆலைகள் சரத்பவர்கட்சி,பா.ஜ.க,மற்றும் காங்கிரஸ் தலைவர்களீன் சட்டை பையில் உள்ளன.



சரத் பவரின் தோகுதி பாராமதி.இந்த தொகுதியில்மொத்தம் 7 சர்க்கரைஆலகள் ,உள்ளன அவை அத்துணையும் அவருடையமற்றும் நெருங்கிய உற்வினர்களின் ஆதிக்கத்திலுள்ளன ..அவர்கட்சியைச்சார்ந்த ஜெயந்த் படெல்.மாநில அமைச்சர்.அவருக்குச்சொந்தமாக 3ஆலைகலுள்ளன.ஆர்.ஆர்.படீல் அமைச்சராக உள்ளார் (பவார் காங்க) அவருக்கும் ஆலகள் உள்ளண..பா.ஜ.க வின் புகழப்பரப்பிவரும் கட்காரிக்கு " பூர்த்தி. " குழுமம் உள்ளது. இவர்கள் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபடுவதில்லை மாறாக வடிசாராய உற்பத்தியில்சக்கைபோடு போடு கிறார்கள்.



கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின்மேல் இவர்களுக்குபாசம் அதிகம்.அரசு நிற்ணயித்த விலை டன்னுக்கு 2300 ரூ.ஆனால் இவர்கள் 3000ரூ கொடுக்கிறர்கள்.வெட்டு கூலி,,பாரவண்டி கூலிகொடுக்கமாட்டார்கள். கரும்பின் ஈரத்தன்மைக்கு ஏற்ப விலை நிர்ணாயம்செய்கிறார்கள்.



ஆலை உற்பத்திசெய்யும் சர்கரையை அரசு நிற்ணயித்த விலையை விட குறைத்து விற்கிறார்கள். வாங்குவது இவர்களின் ஏஜண்டுகள் தான்.இதன் மூலம் கூட்டுறவு ஆலைகள் நட்டத்தில் ஓடும்படி செய்கிறார்கள். அதனல் கரும்பு விவசாயிகளுக்கு பணம் கோடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். அரசு அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறது.



சர்க்கரை ஆலைகள் நட்டப்படுவதாக கணக்குகாட்டப்படுகிறது.அதெசமயம்,அரவையிலிருந்து கிடக்கும், உப பொருட்களான வடிசாராயம்,,உரம் ,மற்றவைகளுக்கும் விவசாயிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல்பார்த்துக்கொள்கிறர்கள். இவர்கள் "ஷா வாலாஸ்" .போன்ற கம்பெனி களொடு சேர்ந்து மது உற்பத்தியில் ஈடுபட்டு அடிக்கும் கொள்ளை கணக்கில்வராது.



மராட்டிய மாநிலவிவசாயிகள் இந்த உபபொருட்கள் உற்பத்தியில் தங்களுக்கு பங்கு வேண்டும் எப்ர் கேட்கிறார்கள். இதற்காக பொடப்பட்ட சி.ரங்கராஜன் கமிட்டி இந்த உப பொருள் உற்பத்தியில் விசாயிகளுக்குன் 70 சதம் பங்கு கொடுக்க வேண்டும் என்று அறிகைக கொடுத்துள்ளது. அது தற்போது நம் "தலப்பாகட்டு ".பிரதமர் மேசையில்தூங்குகிறது.



மராட்டிய மாநிலகரும்பு விவசாயிகள் போராடினார்கள். மாநில அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. ஒரு விவசாயி இறந்தார். அன்று தான் சிவ சேனை தலைவர் தியாகி பாலாசாகிப் மறைந்தார்.



அந்த சொகம் தாங்காமல் பத்திரிகைகள் அதனை பிரசுரிக்க மறந்து விட்டன.

Tuesday, November 20, 2012

அந்த மருமகனின் நூறாவது  ஆண்டு இது .....! (2)



அந்த மறுமகனின் நூறாவது ஆண்டு இது......! (2)










தெற்கு குஜராத்திலிருக்கும் பரூச் மாவட்டத்திலிருந்து பமபாய் வந்த ஜஹாங்கீர் ஃபர்தூன் காந்தியின் ஐந்தாவது மகன் தான் ஃபரோஸ். கப்பல் கட்டும் தளத்தில் இஞ்சினியராக இருந்த தந்தை இறந்ததும் தன் தாயுடன் அலகாபாத்தில் இருக்கும் சித்திவீட்டில் தங்கி படித்தார்.காந்தி என்பது அவர்கள் குடும்பப் பெயர்.



தம்பதியர் அலகாபாத்தில் வசித்தனர் மத்திய மாகாணத்தில் (தற்பொது உ.பி).விவசாயிகள் குத்தகை,வாரம் ஆகியவ்ற்றால் படும் துன்பத்திலிருந்துமீட்க அவர்களுக்காக பெராட்டத்தில் இறங்கினார் ஃபெரோஸ். 1944ல்மகன் ராஜீவ் பிறந்தான்.1946ல் இரண்டாவது மகன் சஞ்சய் பிறந்தான்.மத்திய மாகாண சட்டமன்ற உறுப்பினராக ராஜ்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமனாரோடு (நேரு) சமரசம் ஆனது. அவர் ஆரம்பித்த Natinal herald பத்திரிகையை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.



சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் ரே பரேலி தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றார்.புதிய இந்தியாவின் தொழில் வளர்சிக்கு பொதுத்துறை தான் சரி என்ற நம்பிக்கை கொண்டிருந்த அவருக்கு இந்திய முதலாளிகளின் தகிடுதத்தங்களை ஏற்கமுடியவில்லை.முதலாளிகள் ஒவ்வொருவரும் ஒரு வங்கி,ஒரு இன்சூரன் கம்பெனி வைத்துக்கொண்டு சூரையாடுவதை தடுக்க விரும்பினார்.



"Banking is dealing with some bodies money.Insurance is dealing with no bodies money" என்றார்.



டாடவுக்கு சென்ரல்வங்கியும்,நியூ இந்தியாவும்,பிர்லாவுக்கு யூகோ வங்கியும்,இன்சூரன் கம்பெனியும்,செட்டியாருக்குஇந்தியன்வங்கியும்.யுணைடெட் இந்தியாவும் என்று கர்ஜிப்பார்.ராமகிருஷ்ண டால்மியா வங்கிப்பணத்தையும்,இன்சூரன்ஸ் பணத்தையும் மோசடியாக களவடி Beennat column co (இன்றய டைம்ஸ் ஆஃப் இந்தியா) வாங்க முயன்றதை தடுத்தார்.இந்திய வரலற்றில் முதலும் கடைசியுமாக ஒரு முதலாளியை ராமகிருஷ்ண டால்மியாவை சிறைக்கு அனுப்பி "களி" திங்க வைத்தவர் ஃபேரோஸ்.



1956ம் ஆண்டு இன்சூரன் துறைதேசியமயமாகாப்பட்டு ஏல்.ஐ.சி. உருவாக முக்கியமானவர் அவர்

அதன் பிறகும் முதலாளிகள் மறைமுகமாக இன்சூரன்சில் சூதாடுவதைக் கண்டு .வெகுண்டார் நாடாளுமன்றத்தில்குரல் எழுப்பினார். அப்பொது நிதி அமைசராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி "பிரதமரின் மடியில் இருந்து கொண்டு நாய் குட்டி குலைக்கிறது. நான் காங்கிரசின் தூண்" என்றார்.



"ஒரு தூணைப் பார்த்தால் நாய் என்ன செய்யுமே அதனை செய்கிறென்" என்றார் ஃபெரோஸ். " முந்திரா" ஊழலை அம்பலப்ப்டுத்தி டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ராஜினாமாசெய்யவைத்தார்.



இந்திய எண்ணை வளத்தை முதலாளிகள் சூரையாடாமல் தடுக்க இந்திய ஆயில் கார்ப்பரேஷனை உருவாக்குவதில் அவருடைய பங்கு மகத்தானது..



1960ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடந்தார்.



1912ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தெதி பிறந்த ஃபேரோஸ் ஜஹங்கீர் காந்தி இந்திய மக்களின் செல்ல மறுமகனும் ஆவார்   

Monday, November 19, 2012

அந்த மருமகனின் நூறாவது ஆண்டு இது .....!



அந்த மறுமகனின் நூறாவது ஆண்டு இது..........!






பதிவுலகநண்பர் ஒருவர் இது மறுமகன்களின் காலமென்றுபின்னூட்டமிட்டிருந்தார். அவர் ராபர்ட் வாதெராவையும், (சோனியாவின் மாப்பிள்ளை) ரஞ்சன் பட்டசார்யா (வாஜ்பாயின் மாப்பிள்ளை யையும் குறிப்புடுகிறார். ஆனால் நான் குறிப்பிடுவது அவர்களையல்ல





அலகாபாத் நகரத்திலொரு பள்ளிக்கூடம். அதன் முன்னல் காங்கிரஸ் தொண்டர்கள் .ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு அம்மையார் தலமையில்நடக்கிறது. அவருடைய பத்துவயது மகளும் வந்திருக்கிறார்.கடுமையன வேய்யில். வெப்பம்தாங்க முடியாமல் அந்த அம்மையார் மயங்கி விழுந்து விடுகிறார்.இதனை பர்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒடிவந்து அவருக்கு அருந்த நீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தி அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கிறான்.



அந்த அம்மையார் பெயர் கமலா நேரு.

அந்த சிறுமியின் பெயர் இந்திரா பிரியதர்சணி.

அந்த ப்தினாங்கு வயது சிறுவனின் பெயர் ஃபரோஸ் ஜஹங்கீர் காந்தி.



அதன் பிறகு அந்த ஃபரோஸ் காந்தி கமலாம்மையாரின் உற்ற தோழனாகிறான். படிப்பை நிறுத்திவிட்டு முழுமூச்சாக காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபடுகிறான். காசநோயால் அவதியுறும் கமலா அம்மையாருக்கு, உதவியாக இருக்கிறான்.மருத்துவனைக்கு அழைத்துசெவ்வதிலிருந்து,மருந்து கொடுப்பதுவரை பொறுப்பாக செய்கிறான்" .ஆனந்தபவனின்"அங்கமாகிறான்.



ஃபரோஸ் ஜஹங்கீர் காந்தி ஜரதுஷ்ற்றமதம்(பார்சி).தன் அத்தை வீட்டிலிருந்து படித்துவருகிறான். காங்கிரசில் சேர்ந்து பொராட்டத்தில் கலந்துகொள்கிறான்.காங்கிரசின் வானர செனையில் ஒரு அங்கம் அவன்.(Monkey Brigade) அவனோடு சிறையில் இருந்தவர் பின்னாளில் பிரதமராய் வந்த

லால் பகதூர் சாஸ்திரியாவார்.



கமலா அம்மையாரின் காச நோய் சிகிச்சைக்காக ஸ்விஸ் நாட்டிற்கு செல்லும் பொது அவருக்கு உதவி செய்ய ஃபாரோஸும் பொகிறான். நோயின் கடுமை தாங்கமல் கமலா இறக்கிறார். அவ்ர் இறக்கும் போது அருகிலிருந்தவர்கள் கணவர் பண்டித ஜவஹர்லால்நேரு.மகள் இந்திரா பிரிய தர்சனி,ஃபாரோஸ்காந்தி ஆகிய மூவர் மட்டுமே.



ஃபரோஸ் மெல் படிப்புக்காக லண்டன் செல்கிறார். இடதுசாரி பேராசிரியர் லாஸ்கி அவ்ர்களின் பொருளாதர பள்ளியில் சேர்கிறார். இந்திரா பிரிய தர்சனியும் லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே பரிசயமுள்ளதால் நெருங்கி பழகி.நட்பு காதலாக மலர்கிறது இந்த்யா வந்ததும் திருமணம்செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.



தந்தை ஜவஹருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. மகத்மா கந்தியிடம் மகளின் மனதை மாற்ற

கெட்டுக்க்ள்கிறார். "நாங்கள் திருமனம் செய்து கொள்ள முடிவு எடுத்துவிட்டொம்..நீங்களும் எந்தந்தையும்வந்து நடத்தினால் மகிழ்ச்சியடைவோம் நீங்கள் வரவில்லை என்றாலும் திருமணம் நடக்கும் என்று இருவரும் அறிவித்து விட்டனர்.



திருமணம் நடந்தது. அப்பொது தான் "வெள்ளையனே வெளீயேறு" போராட்டம் நடந்தது.கணவனும்மனைவியும்போராட்டத்தில்கலந்து கொண்டு சிறை சென்றனர்.

(தொடரும் )

















(தொடரும்)

Wednesday, November 14, 2012

"முஹர்ரம்" பண்டிகையும் "ஹோலி" கொண்டாட்டமும்..........!!!

 

முஹர்ரம் பண்டிகை இஸ்லாமியர்களின் துக்க நாட களிலோன்று. தியாகத்தின் முலம் மக்களின் நன்மையை விழையும் பெரியவர்களின் இழப்பை  நினைந்து போற்றும் தினமாகும்  .

ஹோலி பண்ண்டிகயோ கொண்டாட்டமும் குதூகலமும் கொண்டு ஆடிப்பாடிகளிக்கும் நாளாகும்.

முகம்மதியர் ஆட்சிக்காலத்தில் "அவத் " என்ற பகுதியை நவாப்  வஜாஹித் அலி  அவர்கள் ஆண்டுவந்தார்கள். இன்றைய லக்னோ ,கான்பூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும் அது. கலை,இலக்கியம், இசை,நாட்டியம் ஆகியவை செழித்து வளர்ந்த இடம். இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து இந்தியாவிற்கான புதிய கலாச்சார அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்த பூமி அது.,அற்புதமான உருது கவிஞர்கள் தங்கள் படைப்புகளை  கொட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
( ஆரம்ப காலத்தில்முன்ஷி பிரேம் சந்த் தன்னுடைய கதைகளை உருது மொழியில் தான் எழுதினார்.)


இஸ்லாமியர்கள் வானத்து சந்திரனின் பயணத்தை ஒட்டி தங்களுடைய நாட்களை கணித்துக் கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட வருடம் முஹர்ரம் பண்டிகையும் ,ஹோலி பண்டிகையும் ஒரே நாளில் வந்தது.

நவாப் வஜாஹித் அலி அவர்கள் முஹர்ரம் பண்டிகையை வழக்கமான
தொழுகையோடு
நடத்தினார்கள்    அரண்மனையை விட்டு வெளியில் வந்த நவாப ஹோலிகொண்டட்டம் எதுவும் இல்லாதது கண்டு விசாரித்தார்கள்..
"முகர்ரம் என்பது இஸ்லாமிய அன்பர்களின் துக்க தினம்.அன்று நாம் கொண்டாட்டமும்,குதூகலமும்,விருந்தும் கேளிக்கையுமாக இருப்பது சரி யில்லை .அதனால் இந்த ஒருவருடம் நாம் ஹோலி கொண்டாட வேண்டாம் "என்று பெரியவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அதிகாரிகள் கூறினர் .நவாப அவர்கள் கண்கள் கசிந்தன. " எனது அரூமை இந்து நண்பர்களின் பெருந்தன்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இஸ்லாமிய நண்பர்களே வாருங்கள் நாம் ஓவ்வொரு இந்துவின் விட்டிற்கும் போய் அவர்களோடு இணைந்து" ஹோலி ".பண்டிகையைகொண்டாடுவோம்" என்று கூறினார்.

அன்றிலிருந்து "அவத் நாட்டில் " இஸ்லாமியர்களும் ஹோலிபண்டிகையை
கொண்டாட ஆரம்பித்தார்கள்.

பி.கு ( இந்த செய்திக்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். " ஹிம்ச
விரோத சங்கம் என்ற அமைப்பிற்கும் இஸ்லாமிய அமைப்பிற்கும் இடையே நடந்த ஒரு வழக்கில் உச்ச நிதிமன்ற நிதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் அளித்த தீர்ப்பில் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.(2008) )

ட்டிருக்கிறார்.

Saturday, November 10, 2012

"ஒரு மாநில அமைச்சர் 

                      ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

                                       ஒரு நகரத்தந்தை "

 

1967ம்  ஆண்டு தமிகத்தில் காங்கிரஸ் ஆட்சி விழந்தது.  69ம் முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் மறைகிறார். கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். அரசியல் நிலமையில்மாற்றமேற்படுகிறது . 1972ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் ஒரு ஆண்டு முன்னதாக 1971ம் ஆண்டு நடக்கிறது.

 தி.மு.க-காங்கிரஸ் கூ ட்டணி சார்பில் ஒரு அணியாக நின்றார்கள். மார்க்சிஸ்ட் கட்சி தன்னந்தனியாக  போட்டி இட்டது.60 க்கும் மேற்பட்ட சட்டமன்றதொகுதியிலும் , நாடளுமனரதொகுதியிலும்
 போட்டியிட்டாலும் மிக்கவும்பரிதாபகரமாக தோல்வியடைந்தது. ஏன் மதுரை நாடாளுமனரதொகுதியில் போட்டியிட்ட அந்த சிவப்பு சூரியன் பி.ராமமுர்த்தி "டெபாசிட் "இழந்தார்". திண்டுக்கல்லில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட எ.பாலசுப்பிரமணியம் ஒருவருக்கு மட்டும் "டெபாசிட்"கிடைத்தது...

  மார்க்சிஸ்ட் கட்சி இதோடு ஒழிந்தது என்று பத்திரிகைகள்  எழுதின. கட்சி அணிகளுக்கு  சோர்வு தட்டியது.

அப்போதெல்லாம் "தீக்கதிர்" அலுவலகம் சென்று வருவதுண்டு.  அனேக
மாக இரவு பத்து மணிவரை அங்கிருப்பேன். ஒருநாள்  நான்  விடு  திரும்பிய பிறகு காலையில் நண்பர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அரசரடி ,முக்கில் தீக்கதிர் பத்திரிகையை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக் கொடியை வெட்டி எறிகிறார்கள்.கலவர  சூழல்.குறிப்பாக சோமசுந்தரம் காலனி அருகில் திமுகவினர் இதனை செய்கிறார்கள் "
என்று பேசிக்கொண்டிருந்தனர்.

தீக்கதிர் பத்திரிகையில்  வந்த  செய்திதான் இதற்கு  காரணம் என்றும்  தெரிந்து கொண்டேன் முதல் பக்கத்திலொரு  பாக்ஸ் செய்தி.
                          "ஒரு மாநில அமைச்சர் ,
          .                  ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 
                               ஒரு நகரத்தந்தை "   ஆகியோர் விடுகளில் சோதனை 

என்ற செய்திதானது  

"இந்து"  பத்திரிக்கை "according to vernacular daily " என்று செய்தியை பட்டும் படாமலும் வெளியிட்டிருந்தது.தினமலர் ,தந்தி,எதுவும் வெளியிடவில்லை.

அன்று "எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்" என்று ஊ ன்றி நின்ற பத்திரிக்கை இப்போது 50 ம்   ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது.

மெஷின் மென், அச்சுக்கோப்பவர்  பக்கம் பார்ப்பவர், சைக்கிளில் பேருந்து ,மற்றும் ரயில் நிலையத்திற்கு கொண்டு சேர்ப்பவர் ,பிழை திருத்துபவர்,  துணை  ஆசிரியர், ஆசிரியர்
,
  தோழர்களே! இதயம் விம்ம ,கண்கள் பனிக்க 

    உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.




















     

Wednesday, November 07, 2012

சின்மயி---மீன்பிடி தொழில்--ராஜன்..........!!!






தமிழக மீனவர்கள் பாடுபற்றி, மிகச்சிறந்த தத்துவ ஞானியும், அரசியல் வித்தகரும், பரந்த அனுபவம் கொண்டவருமான சின்மயி அவர்களிடம் கெட்டுள்ளனர்.அவர் மிகவும் சிறப்பன பதிலை கொடுத்துள்ளார். அது ராஜன் போன்ற சில பதிவர்களுக்கு பிடிக்கவில்லை." யாரோ ஒருவீட்டில், எவரோ தீவைக்க , தங்க மகனன்றோ தண்ணிர் சுமக்கின்றார்" என்று புலவர் செஙகீரன் பாடியது போல் இன்று பதிவுலகம் அதனை சுமக்கிறது.



"ஆமாம்! நீ இருந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்கலாம். நான் செய்ததைச் சொல்கிறேன்.



தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி செய்திகள் வந்த போதே நான் அந்தப் பகுதி நண்பர்களோடு தோடர்பு கோண்டென். பரமகுடி அருகில் வங்கி அதிகாரியாக பணியாற்றும் அவர் கொஞ்சம் சமூகப் பிரஞ்ஞையும் உள்ளாவர்." ஐயா! ரொம்ப சிக்கலானதாச்சே! வெளில தெரிஞ்சது , உள்ள நடக்கிறதுனு பாத்தா கஷ்டம் தான்!" என்று பீடிகையோடு ஆரம்பித்தார்.அவர் சொன்னது------



தமிழக கிழக்கு கட்ற்கரையில் கடல்குதிரை,நண்டு, கடல் அட்டை என்றுதான் உண்டுஇவை தடை செய்யப் பட்டுள்ள வகையில் உள்ளன.. படகை எடுத்துக் கோண்டு நடுக் கடலுக்கு சென்றால் தான் நல்ல மீன் கிடக்கும். ஒருதரம் போய் வரணுமின்னா 50000 ரூ சிலவாகும்.ராட்டு,ஷீலா நு வேணும்னா சிலொன் பகுதிக் போகணும் .போட்ல ஏறுமுன்னயே மீனவருக்கு 500 ரூ வக்கணும். காலைல கிளம்பினா மறுநாள் தான் மதியம் வாக்கில வந்தாகணும். இற்ங்கினாச்சுன்னா 1500 ரூ கொடுக்கணும்.ஒருதரம் போய்ட்டு வந்தா 200000 லட்சம் ரூ மீன் கிடைச்சாதான் வியாபாரிக்குகட்டுபடியாகும்.அப்ப அவன் எங்கன பொய் பிடிப்பான். அங்க போனா நாலஞ்சு லட்சம் கிடைக்கும். சில சமயம் பத்து லட்சம்கிடைக்கும். அப்போ மீனவருக்குபொனஸ் கிடக்கும்.



மீனவர்களுக்கு சர்காரு மாதம் 15 லிட்டர் டீசல் இலவசமா கொடுக்கு.மீன்பிடி தட செய்ய்ப்பட்ட மாதங்களில் நிவாரணத்தொகை கொடுக்கு.ஒருநாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்தைந்நூரு கிடைக்கும்.மாதம் இருபது நாள்தான் வேலை.



அங்க பொனாதான் கட்டும்.நட்டத்தில பொழப்பு நடத்தவாங்கான் வியாபாரி. எதிர் கரைல அடிக்கான் .அதோட தான் இவங்களும் போய் வராங்க. இது சிலோன் அரசாங்கத்துக்கு தெரியும். அது ஒரு சுண்டைக்காய். இந்தியா நினைச்சா தூக்கிப்போட்டு மிதிக்கலாம். ஆனா முடியது. கடல் ஆதிக்கம்,சர்வதேச சட்டம் லொட்டு லொசுக்குனு வரும். முடிஞ்சவரை நீ பாதுகாத்துக உன் கரைய. ரொம்ப போயிராத. அப்புறம் நான் சும்மயிருக்க முடியாது.இது நம்ம அரசு சொல்லுது.



மீன் வியாபாரி, சிலோன்,இந்தியா எல்லாமே ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்துல வேல பாக்கங்கனு தோணுது.எனக்கு என்ன தோணுதுனா நம்ம ஊரு தலைவர்களுக்கும் அரசல் புரசலா இது தெரியும்.சும்மானாச்சும் கூப்பாடு பொடுதாங்களோ! இருக்கலம்! இல்லமலும் இருக்கலாம்



இது சின்மயிக்கு வள்ளிசா தெரியாது. ரஜனுக்கு தெரியுமா?எனக்கு தெரியாது இவங்க ரெண்டு பெரும் பதிவுலகத்துல சண்டை போட்டாங்க. இதுல பஞ்சாயத்து பண்ண ஏகப்பட்ட ஆளுங்க வாராங்க.ஞாநி உட்பட.!.

Friday, November 02, 2012

யார் இந்த ரஞ்சன் பட்டாசார்யா .......?


ரஞ்சன் பட்டாசார்யா என்பவர் யார்.........?






கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகையில் அடிபட்டு வரும்பெயர் ரஞ்சன் பட்டாசார்யா.இவரைப் பற்றி தகவல்களை அறிய முற்பட்டேன் அப்போது வினோத் மேத்தா என்பவர் அவசர நிலை, வாஜ்பாய் என்று" இந்துஸ்தான் டைம்ஸ்" . பத்திரிகையில் (4-11-111) எழுதிய கட்டுரை ஒன்று கிடைத்தது.



வினோத் ஒரு பத்திரிகையாளர்.வாஜ்பயை நன்றாகத் தெரிந்தவர்."லக்னோ பையன்" (luknow boy) என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகம் பற்றிதான் "இந்துஸ்தான் டைம்ஸ்" கட்டுரை எழுதியிருந்தது.



"வாஜ்பாய் அவர்களை சமூகதளத்திலும் ,அரசியல்தலத்திலும் எனக்கு தெரியும்.நான் 1991ல் டெல்லி வந்தேன். அவருடைய நண்பர் பிரிஜேஷ் மிஸ்ரா. பிரிஜேஷ் ஐ.நாவில் இந்தியாவின் பிரதினிதியாக செயல்பாட்டவர்.வாஜ்பாய் அரசியல் ரீதியாகவோ,மற்றவகையிலோ சோர்வடைந்தால் நியூயார்க்பொய்விடுவார். அங்கு பிரிஜேஷ் உடன் தங்குவார்.ஒருபத்து நாள் தங்குவார். "ஜாலி"யாக இருப்பார்கள். கொஞ்சம் 'கச முச"இருக்கும். வஜ்பாய் ஒன்றும் " சந்நியாசி "இல்லை. புலால் உண்ணுவார்."முடாக்" குடியரில்லை. பெண் நண்பர்கள் உண்டு." என்று தன் நூலில் விணொத் குறிப்பிட்டுள்ளார்.



" அவர் பிரதமர் ஆனதும் 7 ரேஸ் கோர்ஸ் சாலை வீட்டில் தங்கினார். அவரோடு திருமதி கௌல் என்ற அம்மையாரும் தங்கினார். கணவர்கௌல் டில்லியில் பெராசிரியராக இருந்தார். இறந்து விட்டார், கௌல் அம்மையாருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் பெயர் "நிமிதா".அவருடைய கணவர் தான் ரஞ்சசன் பட்டசார்யா.நிமிதாவை தன்னுடைய தத்து மகளாகவும்,ரஞ்சனை தத்து மறுமகனாகவும் வாஜ்பாய் அறிவித்தார்.எந்த சந்தர்ப்பத்திலும் வாஜ்பாய் இந்த நால்வர் குடும்பத்தை மறைக்கவோ ,மறுக்கவோ இல்லை" என்றும் வினோத் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறர்.



பா.ஜ.க.வில் வாஜ்பாயை எதிர்ப்பவர்கள் உண்டு.அந்த எதிர் கோஷ்டியில் இருப்பவர்' "சக்தி சின்கா என்பவர்.இவர் கௌல் அம்மையாரின் இரண்டாவது மகளை (நிமிதாவின் தங்கையை)திருமணம் செய்து கொண்டவர்.



வாஜ்பய் ஆட்சியில் அதிகாரமையமாக செயல்பட்டவர் ரஞ்சன் என்பது தான் அரவிந்த் கெசரிவால் அவர்களின் குற்றச்சாட்டு. முக்கிய நகரங்களை இணக்கும் "நாற்கர சாலை" அமைக்க 50000கோடி ஒப்பந்தம் போடுவதில் ஊழல் என்றும் அதில் ரஞ்சனுக்கும் தொடர்பு உண்டென்றும் புகார் எழுந்துள்ளது.

Wednesday, October 31, 2012

"ஊழல் சாக்கடையில் உழலும் பன்றிகள்"........!!!





ஊழலை செய்வதற்கு அச்சாரம்வாங்குவது பா.ஜ.க..அதற்கான உத்திரவுகளில் கையெழுத்து போடுவது பா.ஜ.க. பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது காங்கிரஸ். இதற்கான ஆதாரங்கள் ஏராளம். ஒரு சாம்பிள் இதோ:



கோதாவரி படுகையில் நிலத்தடி வாயு ஏராளமாகக் கிடைக்கிறது. இதனைமக்கள்பயன் பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரம் செய்தவர்கள் நம்மூர் முதலாளிகள். யாருக்குக் கொடுப்பது?

அப்போது வாஜ்பாய் தலைமையில் தேசீய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது .அவருக்கு மிகவும் வேண்டியவர் ஆலோசகர் பிரிஜீஷ் மிஸ்ரா.இவருடைய தந்தை டி.பி. மிஸ்ரா. மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர்.(இவரை தகர ஊழல் மிஸ்ரா என்பார்கள்) கார்கில் தகரறின் போது அதனை தடுக்க விரும்பினர்

ரிலையன்ஸ் கம்பெனி முதலளி. அவர்களின் பெட்றோல் சுத்திகரிப்பு .ஆலை பாகிஸ்தான் எள்லையோரத்தில் பிகானீர் மாவட்டத்தில் உள்ளது. பெரிய யுத்தம் வந்தல் 15000 கோடி ஆலை சிதறிவிடும் அதனால் அவர் வாஜ்பாயை சந்தித்து சமாதானமாக பொகும்படி சொன்னார் முகேஷ் அம்பானியின் தனி விமானத்தில்மிஸ்ரா பாகிஸ்தான் போய் சமாதானம் பேசினார்.



இந்திய யார் கூட சண்டை போடவேண்டும்,எப்போது சமாதனம் செய்ய வேண்டும் என்பதை

அரசு எடுப்பதில்லை. முக்கிய முதலாளிகள் எடுக்கிறார்கள்.



கோதவரி படுகை வாயுவை தெசபக்தர் முகேஷ் அம்பானியின் ரிலையன் வாயு கம்பெனிக்கு கொடுக்க வஜ்பாய் விரும்பினார்.

அம்பானியொடு 2000 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. வாயு ஒருயூனிட்டுக்கு 2.5 டலர் என்று நிர்ணயம் ஆகியது பா.ஜ.க.போய் மனமோகன் சின் வந்தார். ரிலயன்ஸ் சண்டித்தனம்செய்தது. யூனிட் 4-25 டாலர் என்று கொடுத்தார்கள்.இது2007 ம் ஆண்டு நடந்தது. இதன் மூலம்ரிலையன்ஸ் 43000 கோடி லாபம் அடைந்தது.இப்போது மீண்டும்கூடுதல் விலை கேட்கிறது ரிலையன்ஸ். ஜெயபால்ரெட்டி மறுத்தார். அவர் மாற்றப்பட்டார்.



வெள்ளைப் பன்றி, கட்டைக்கால் என்று பார்க்கவேண்டியதில்லை. பன்றி பன்றி தான்.

Sunday, October 28, 2012

இந்தி திரைப்படம் ---அறிமுகம்


"shudra - the  rising "


தலித் மக்கள் இந்த நாட்டில் படும் பாடுகளை சொல்லுகிறது  இந்த படம்  .சாதிய அமைப்பை நம்பி நாசமாகிக் கொண்டிருக்கும் மக்களை நோக்கி  பல
கேள்விகளைமுன்வக்கவும் செய்கிறது.

கிராமத்தில் தாலித்களை எழுந்து நில்லுங்கள் என்று அழைக்கிறது  .உங்கள் மனைவியையும்,மகளையும் பெண்டாளத் துணியும் நிலப்பிரபுக்களுக்கு 
எதிராக அணிவகுங்கள் என்று கூறுகிறது.சாதியின் பெயரால் தங்களுக்கு எதிராக
 நடக்கும் கொடுமைகளை கண்டுஇனியும் பொறுத்திருக்கமாட்டோம் என்று 
நிர்க்கதியான அந்தமக்கள் எதிர்க்குரல்கொடுக்க தூண்டுகிறது.

ஒரு முதுமை வயது தலித் கிழவன் தாகத்திற்கு தண்ணீர்     கிடைக்காமல்  செத்தே போகிறான்.  

ஐந்து  வயது தலித் சிறுமி "ஓம்  நம சிவாய " என்று பாடியதற்காக தண்டிக்கப்படுகிறாள்..  
     ..
ஒரு கர்ப்பிணி பெண் மேல்சாதி நிலப்பிரபுவால் படுக்கைக்கு அழை க்கப்படுகிறாள்.

இந்தப்படம் தலித்துகள் மீது நடந்த கொடுமைகளை சொல்வதோடு அது இன்றும் தொடர்வதை குறிப்பிடுகிறது .

சாதி மனிதத்தை  விட மேலானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

சாதீய முறைமை எப்படி உருவானது? சாதியை இன்னும் கட்டியழும் குருடர்களை அதிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறது. 

இதயத்தை நொறுக்கிவிடும் படமாகுமிது

வலியும்,வேதனையும் மனதை ஆழமாக பாதிக்கும் படமாகும். "தீண்டத்தகாதவர்கள்" என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக  இழைக்கப்படும் 
குற்றங்கள் பற்றிய ஆவணமாகும் இந்தப் படம்.
துயரத்தில் முடிந்தாலும், கதை சொல்லும் பாங்கும், பின்புலத்தை  சித்தரித்திருப்பதும்  நம்பகத்தன்மையை கொடுக்கிறது.

நடிகர்கள் அற்புதமாக நடித்துள்ளனர்..சூழ்நிலையை சித்தரித்துள்ளது , கலை ,ஒப்பனை. படம் பிடித்துள்ள விதம் எல்லாமே முதல் தரம்.அர்த்தமுள்ள ,இதயத்தை நெருடும் இசை ...
  
முழுக்க முழுக்க வேதனையசித்தரிக்கிறது  .மக்கள் எழுச்சி யடையும் காட்சிகள் இன்னும் கூடுதலாக காட்சிப் படுத்தி 
இருக்கலாம்.இயக்குனர்  அவர்களின் அவலத்தை சித்தரிபதற்கு முக்கியத்துவம் 
கொடுத்துள்ளார்..பல குட்டி சம்பவங்களின் கோர்வையாக உள்ள கதையாகிவிட்டது.

"சூத்திரன் -எழுச்சி " காலம் காலமாக இந்தியாவில் இருந்து வரும்  சாதீய முறைமையை அழித்தொழிக்க  எடுத்த  முயற்சி 

 ..இது பற்றி உங்களுக்கு மேலும் தெளிவு பெற 
இந்தப் படத்தை பாருங்கள்..

(நன்றி:டைம்ஸ் ஆப் இந்தியா )


பி.கு : (தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஒருவரிடம்  இந்தபடம் பற்றி  குறிப்பிட்டேன் .அவர்கள் முலம் sub title
போட்டு தமிழகத்தில்  திரையிடலாம் .வாழ்த்துக்களுடன்.) 



    



Thursday, October 25, 2012

பா.ஜ.க.தலைவர் "கட்காரி" நல்லவர்..........!!!





பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் கட்காரி. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினால் வளர்க்கப்பட்டவர். அவர்களால் பா.ஜ.கவின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர்.அத்வானி சேக்காளி என்று கூறமுடியாது.சமீப காலமாக நரெந்திர மோடியை ஆதரித்து வருகிறார்.



வசதியானவர். பா.ஜ.க-சிவசேனை கூட்டாட்சியில் பொதுப்பணித்துறை அமைசராக இருந்தார். அது தேன்கூடு. ஆனாலும் கடகாரி புறங்கையை நக்காமல் இருந்தார்



அவர் வீட்டில் மூன்று கார்கள் உண்டு.ஒன்று அவருக்கு. குடும்பத்தினர் பயன்பாட்டுக்காக ஒன்று.விருந்தினர்கள் வசதிக்காக ஒன்று.



ஒரு நாள் அவர் பயன்படுத்தும் காரின் பின்சீட்டில் பத்து வயது சிறுமியின் சடலம் கண்டெடு க்கப்பட்டது.அந்தச் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஒரு வருடமாக!



பாவம்! அப்பாவிமனுஷன் ! அவர்மிது ஊழல் கூற்றச்சாட்டுகள் அவருடைய கமபெனியான "பூர்த்தி".

கரும்பு ஆலைகள். மின் உற்பத்தி என்று மக்கள் தோண்டாற்றி வருகிறது. அதற்கு பல கம்பெனிகள் அவருக்கு பண உதவி செய்துள்ளன. ஏகப்பட்ட கம்பெனிகள்- எல்லாமே அவருக்கு வேண்டியவர்கள் தான். சில கம்பெனிகளின் இயக்குனர் களின் பெயர்களையும் விலாசத்தையும் விசாரித்தபோது அப்படி யாருமே இல்லையென்று கூறுகிறார்கள். அந்தேரியில் உள்ள சேரிப்பகுதியில் ஒரு கம்பெனி இயக்குனர் முகவரி உள்ளது .அந்த குடிசை பூட்டப்பட்டுள்ள படத்தை "டைம்ஸ் ஆஃப் இந்தியா "போட்டுள்ளது.



இன்னும் மூன்று கமபெனியின் இயக்குனராக இருப்பவர் அவருடைய காரை ஒட்டும் டிரைவர். அவருடைய வீடு -கோடிகணக்கில் மதிப்புப்பெறும் வீடு - நாகபுரியில் உள்ளது.. தன் டிரைவரின் மீது கட்காரிக்கு பாசம் அதிகம்.



டிரைவர் நல்லவர்! வல்லவர்! எல்லம் தெரிந்தவர்! எல்லாம்--எல்ல்ல்ல்லாம் தெரிந்தவர்!





நம்ம காரைக்குடி ஆடிட்டர் ராஜா,தஞ்சாவூர் கணெசன், நாகர்கோவில் ராமகோபாலன் ஆகியோருக்கும் தெரியும் கட்காரி நல்லவர் என்பது. . .வர் ......!!!

Sunday, October 21, 2012

தமிழா! தமிழா ! என்ன சொல்லப்போகிறாய்?........


இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து மொரிஷியஸ் தீவில் வாழ்பவர் அந்தப் தலித் பெண். மேல் படிப்பிற்காக டெல்லி பல்கலை  கழகத்தில் சேர்ந்தார் சக தமிழ் மாணவர்களோடு இணைந்து படித்தார். சில தமிழ்மாணவர்கள் ஜவகர்லால் பல்கலையில்படிக்கிறார்கள்

ஒரு நாள் தன சகமானவர்களோடு jnu . விடுதிக்கு சென்றுள்ளார். விடுதியில் தங்கியுள்ள அந்த அறை  மாணவர்கள் அவரை கற்பழித்துள்ளனர் .

கற்பழித்த மாணவர்கள் தமிழ்  நாட்டை சேர்ந்தவர்கள். . பெரும் புள்ளிகளின் வாரிசுகள்.பாதிக்கப் பட்ட பெண் நிர்கதியாக நிற்கிறார்.

அந்தப் பெண்ணிற்கு நியாயம் கேட்டு போராடுகிறார்கள்." தமிழன் கற்பழித்தால் அது குற்றமாகாதா? இலங்கை தமிழருக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் என் வாய் மூடி இருக்கிறார்கள்?" டெல்லியில் மாணவர்கள் கேட்கிறார்கள்.



தலித்துகளுக்ககப் போராடும் ரவிசந்திர பத்ரன் மின்  அஞ்சல் மூலம் 
தமிழகத் தலைவர்களிடம் நியாயம் கேட்டு வருகிறார்.  

தமிழா நீ என்ன சொல்லப் போகிறாய் ....?



Wednesday, October 17, 2012

 தோழர்  அச்சுதானந்தனை ஆதரிக்கிறேன்....!!


தோழர் அச்சுதானந்தனை ஆதரிக்கிறேன்.........!!!








1923ம் ஆண்டு பிறந்த அச்சுதானந்தனுக்கு 89 வயதாகிறது. தந்தை தையல் தொழிலாளி. சிறுவயதிலேயே தாயை இழ்ந்துவிட்டார்.11 வயதில் தந்தையும் காலமாகிவிட்டார்.



கயிறு திரிக்கும் ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சங்கப் பணிகளில் கலந்து கொண்டு தொழிற்சங்க தலைவராக மாறினார்.



சிறுவயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் பல்வேறு பெராட்டங்களில் கலந்து கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்.1940ல் கம்யூனிஸ்டு கட்சியில் செர்ந்தார்.நான்கு ஆண்டுகளுக்கு மேல் தலமறைவு வாழ்க்கயில் ஏராளமான அனுபவங்களைப் பெற்றவர். .



கேரள அரசியலில் மிகவும் சர்ச்சைகுரிய தலவர்களில் ஒருவர். கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் உருப்பினராக இருந்தவர்.



அணு உலையை எதிர்ப்பவர். சமீபத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்த போரட்டத்திற்கு தன் ஆதரவை தெரிவிக்க கூடங்குளம் நோக்கி பயணமானார்.



மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை அதனை ஏற்கவில்லை.சமீபத்தில் கட்சியின் மத்தியகுழு கூடி விவாதித்தது.அச்சுதாஅனந்தன் செய்தது தவறு. அவர் கேரள மார்க்சிஸ்ட் கட்சியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அவரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.



இரண்டு நாளாக நடந்த கேரள மாநில குழுக் கூட்டத்தில் அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்டார்.



முன்னாள்முதலமைச்சர். மூத்த தோழர். ஆனாலும் தவறு தவறுதான் என்று கண்டிக்கும் வல்லமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது.



அதன ஏற்று அச்சுதானந்தன் கட்சிக்கு அடிபணிந்தார் !



அவரை அவருடைய மனவளத்தை ஆதரிக்கிறேன். !!!















































Sunday, October 14, 2012

முற்போக்கு எழுத்தாளர் , கலஞர்களும

கூடங்குளமும்..............!

 போராடும் கூடங்குளம்  மக்கள் மீது மத்திய  மாநில  அரசுகள்  தொடுக்கும்  தாக்குதலை   கண்டித்து  அவர்களுக்கான தங்கள் ஆதரவினை கூறிட த.மு.எ.க. சங்க தலைவர்கள் சென்றனர். 425 நாட்களாக உண்ணாவிரதமிருக்கும் அந்தப் பந்தலில் உதயகுமார்,முகிலன், புஷ்பராயன் ஆகியோரை சந்தித்து வந்தனர்.

1978மாண்டு ஜோதிபாசு தலைமையில் இடதுமுன்னணி அரசு வந்த பொது அங்கு மின்சாரம் கடுமையான பற்றக்குறையிலிருந்தது.இடதுமுன்னணி அரசை "மின் பட்டினி " போட்டு வாட்ட மத்திய அரசு சகல  சாகச முயற்சியையும் செய்தது.பக்றேஷ்வர் மின்திட்டத்தை அனுமதிக்க மறுத்தது. ஒருபுறம் "மின் பசி"யில் மக்கள்.மற்றொரு பக்கம் அணுமின் நிலையம் அமையுங்கள் என்று மத்திய அரசின் பிரச்சாரம்.
அணுமின் நிலையம்வேண்டாம் .என்பதை மக்களுக்குடுத்துச்சொல்ல  இடது   முன்னணி எழுத்தாளர்கள் கலைஞர்களை அணுகியது.குட்டி நாடகங்கள்,கருத்தரங்கங்கள் , கவியரங்கங்கள், பொம்மலாட்டம் என்று கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தனர்  ."ஹிராஷிமா "  என்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி  இதில புகழ்பெற்றதாகும்.அணுகுண்டு 
போட்டதால் ஏற்பட்ட,பாதிப்பு, தோல்  உரிந்து மக்கள்  தண்ணீருக்காக  
ஊர்ந்து  செல்லும் கட்சியினை பொம்மலாட்ட த்தில்  பார்க்கும் பொது இதயம்    விம்மும். உள் மனம் அலறும் (இந்த நிகழ்ச்சியை மே .வங்கத் திலோருமுரையும்,சண்டிகரில் ஒரு முறையும் பார்த்தேன்.)

மத்திய அரசின் உதவியிலாமலேயே பக்றேஷ்வர் திட்டத்தை 
மக்களிடமிருந்து பணம் வசூலித்து உருவாக்க முடிவாகியது.பணம் 
கொடுக்கமுடியாத ஏழை எளியவர்    ரத்ததானம் செய்தனர் அதனை விற்று திட்டத்திற்கு பணம்திரட்டப்பட்டது.1990 ஆண்டிலிருந்து  பக்றேஷ்வரில் உற்பத்தி  நடக்கிறது.இன்று மின் உபரி மாநிலங்களில் மீ.வங்கமும் ஒன்று.

முற்போக்காளர்களால் கேரளாவிலும், திரிபுராவிலும் அணு உலை வராமல் தடுக்க முடிந்தது.

1936ம ஆண்டு நேருவும்,நம்புதிரி பாடும்,பிறேம சந்தும்,குருதேவரும், ஆரம்பித்த இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வாரிசுதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்.


தலைக்கும் தாடிக்கும் ஒரே சீயக்காயைத்தான்    அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  
"ஷாம்பு" பயன் படுத்தாதவர்கள்..

கூடன்குளம் கடற்கரை மணலில் அமர த.மு.எ.க.சவுக்கும் உரிமையும்  பாத்தியதையும் உண்டு. 
  




Thursday, October 11, 2012

அரியாணாவில் நடக்கும் அக்கிரமம்..............!










பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரியாணாவில் அதிகரித்து வருகிறது. சென்ற மாதம் மட்டும் பாலியல்பலத்காரம் 12 நடந்துள்ளது. அதில் பத்துக்கும்மேற்பட்டவை சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது நடத்தப்பட்டவை.அந்தப் பெண்கள் "பச்சாவோ! பச்சாவோ!" என்று கதறியிருக்கிறார்கள். அவர்கள்" காப்பற்று!காப்பாற்று!" என்று தமிழில் கதறவில்லை என்பதால் நம்மூர் தலித்தலைவர்களான தொல்,கிரு ஷ், ஆகியொர் வாயத்திறக்கவில்லை.இந்தக் கோள்ளையில் தொல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்



வழக்கம் போல காங்கிரஸ் தலைவர்கள் இது எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறிவிட்டார்கள். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி மார்க்சிஸ்டுகளின் சதிஎன்றார்.இவர்கள் எதிர்கட்சி என்றார்கள்.





அரியாணாவில் ஆண்- பெண் விகிதம் 1000க்கு 877 என்று உள்ளது. பெண்சிசுக் கொலை என்பது அதிகம் என்பதை இது சுட்டுகிறது.இதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான பாலீயல் வன்முறை

கூடுதலாக நடக்கிறது.





இரண்டு நாட்களுக்கு முனபு சோனியா அம்மையார் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைசந்தித் து ஆறுதல் கூறி.யுள்ளார்.அவருடன் முதல்வர் ஹூடாவும் சென்றுள்ளார்.(அடுத்த மாதம் அங்கு தேர்தல் நடக்கிறது)



அரியாணாவில் மெல்சாதி இந்துக்களின் ஆதிக்கம் அனியாயத்துக்கு அதிகம். அவர்களுடைய பஞ்சாயத்து தீர்ப்புகள் உலகப்புகழ் பெற்றவை. பஞ்சாயத்து ஏற்காத திருமணங்கள் செல்லாது. குடும்பத்தின் "மானம்"என்று சொல்லி மரண தண்டனை விதித்து கோலைசெய்ய உத்திர விடுவார்கள்.அதனை நிறைவேற்றவும் செய்வார்கள்.





இப்பொது புதிதாக ஒரு கோரிக்கை வத்திருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரன பாலியல் வன்முறையை தடுக்க திருமணச்சட்டத்தை திருத்த வேண்டும்.பெண்களின்,ஆண்களின் திருமண வயதை குறைக்கவேண்டும்.கிட்டத்தட்ட குழந்தைத் திருமணத்தை சட்ட பூர்வ மாக்க வேண்டும் என்கிறார்கள்.



சோனியாவோடு முதலமைச்சர் சென்றார். அவரோடு மத்திய அமைச்சர் ராதா ஸலூஜாவும் சென்றார். மானில அமைச்சர் சிங் சென்றார். அவர்தான் குடும்ப நலத்துறை அமைச்சர். திருமன வயதை குறைக்கவேண்டும் என்று அவரும் கூறியிருக்கிறர்.



தாழ்த்தப்பட்ட பெண்களை பலாத்காரம் செய்தது?



ஒரு சம்பவத்தில் நாங்குபேர் பலாத்காரத்திலீடுபட அதனை ஐந்தாமவர் வீடியோ காட்சியாக எடுத்துள்ளார்.



மற்றொரு சம்பவத்தில் அந்தப் பெண் தப்பி ஓடிவிடாதபடி ஒரு போலீஸ் காரர் உதவியிருக்கிறார்.



தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிற்குள் புகுந்து பெண்கள அள்ளிச் சென்று நடு ரோட்டில்-----



கேக்க ஆளில்லைல!

சாவுங்க....!

Monday, October 08, 2012

பொன் மலையும் அந்த பாரத புத்திரர்களூம்......!!!






"சாம்பல் தேசம்" வலைப்பூவில் "பாகிஸ்தான் செல்லும் ரயில்" என்ற நாவல் பற்றி எழுதி வருகிறார்கள். குஷ்வந்த் சிங் எழுதிய இந்த நாவல் எழுதப்பட்ட காலம் இந்திய விடுதலை.மதக்கலவரம் ஆகியவை நடந்த மிகவும்குழப்பமான காலமாகும்.இதுபற்றிய சில வரலாற்றுத்தகவலை பரிமாறிக் கொள்ள விரும்பினேன். நண்பர்கள் அதன பிண்ணுட்டமாக பொடாமல்,ஒரு தனி இடுகையாக எழுதுங்கள் என்று ஆலோசனை கூறினர்.



1946ம் ஆண்டு இறுதியில் ஆங்காங்கே மதவெறியர்களின் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது .வடமெற்கு எல்லை மாகாணம்,ராவல்பிண்டி,கிழக்குபஞ்சாப் ஆகிய இடங்களில் இஸ்லாமியர் அல்லதாவர்கள் இருக்கமுடியாது என்ற நிலை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் நிலமை மிகவும் மோசமாகி இந்தியப்பகுதியிலும் அதன்பாதிப்பு வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கில் இரண்டு பகுதியிலும் மக்கள் வீடு வாசல்களை இழந்து அகதிகளாக மாறினர். பாகிஸ்தானை விட்டு இந்தியாவிற்கும் இந்தியாவிலிருந்.து பாகிஸ்தானுக்கும் ரயில் போக்கு வரத்து நின்றுவிட்டது.ரயில்தொழிலாளர்களுக்கு அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை. இது இரண்டு பக்கமும் நடந்தது. கால்நடையாக கலவரம் நடக்கும் பகுதிகள் வழியாக வரவேண்டியதாயிற்று. வழியில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் .,கற்பழிக்கப்பட்டவர்கள் ,அனாதையான குழந்தைகள் நிலை சொல்லும் தரமன்று .



இடக்கால அரசு இது பற்றி யோசித்தது. இரண்டு பக்கமும் உள்ளமக்கள் புலம்பெயர ரயில் பொக்குவரத்தை சீர்செய்ய முடிவாகியது.அதேசமயம் இஞ்சின் ஒட் ட கரி அள்ளிப்போட ,கார்டுகள், பாயிண்ட்ஸ் மென் என்று வேண்டுமே? ம.பி,உ.பி,பஞ்சாப்,ராஜஸ்தான் பகுதி ஊழியர்கள் தாக்கப்படுகிறார்கள். அதனால் கருத்த ,ஒடிசலான, நீண்ட நேற்றியைக் கொண்ட தென் இந்தியர்களை கொண்டு ஓட்ட முடிவெடுக்கப் பட்டது. நேரு இதுபற்றி செயலாற்றும் பொறுப்பை வி.வி.கிரி அவர்களிடம் கொடுத்தார். A.I.T.U.C யோடு நெருக்கமான தொடர்பு கொண்ட கிரி அவருடைய நண்பரான தோழர் அனந்தன் நம்பியரை உதவிக்கு அழைத்தார்.



திருச்சி பொன்மலை யில் ரயில் வேதோழிலலர்களின் அமைப்பின் தலவராக அப்பொது நம்பியார் இருந்தார்..பொன்மலை ஒர்க்ஷாப்பில் தொழிலாளர் களை அழைத்து கூட்டம் நடத்தினார்.நிலமையை அவர்களிடம் விளக்கினார். " தோழர்களே! இந்த தெசமே உங்களை பார்க்கிறது. ஆயிரக்கனக்கான நம்சகோதரர்கள் நிர்க்கதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும்! . அதெசமயம் உதவச்செல்லும் உங்களுக்கும் ஆபத்த இருக்கிறது. வெறிபிடித்த கூட்டம் இரண்டு பக்கமுமுள்ளது. அவர்களிட மிருந்து உங்களை காப்பாற்ற அரசு எந்த உத்திர வாதமும் தர தயங்குகிறது.தோழர்களே முடிவு உங்களுடையது" என்றார் நம்பியார்.



அந்தக் கூட்டத்தின் கனத்தை மோனத்தை நாராயண சாமி நாயுடு என்ற தொழிலாளி கலைத்தார்

தோ ழரே! நான் தயர்ர்" என்றார். மொத்தம்முப்பது பேர் வந்தார்கள்



கருத்த அந்த தமிழக தொழிலாளர்கள் அன்று செய்த தொண்டு வரலாற்றின் இடுக்குகளில் தேடிப்பார்த்தால் தான் தேரியும். .



பி.கு. இந்த இடுகையை எழுத ஆரம்பிக்கு முன்னால் திருச்சி தோழர் எட்வின் அவர்களை தொடர்பு கொண்டேன். நினவில் எழுதுவதால் நாராயண சாமி நாயுடு என்ற பெயரை அவரும் உறுதிப் படுத்தினார்.மற்றவர்கள் பெயர் தெரியவில்லை..திருச்சி அன்பர்கள் பொன்மலையில் உள்ளD.R.E.Uசங்கத்தை அணுகிணால் அந்த பாரத புத்திரர்களின் வரலாற்றுப்பணி தெரியவரும்.



இன்றும் திருச்சியை கடக்கும் போது "பொன்மலை" ரயில் பலகையைப் பார்க்கும்போது என்னையறியாமல் இருகரம் கூப்புவேன்.

Thursday, October 04, 2012

(சிறுகதையல்ல)

எது போலி .....?



சம்முக சுந்தரம் மடிக்கணினியில் அளைந்து கொண்டிருந்தான். ஒருவருடத்திற்கு மேல் இருக்கும். சிகாகோவிலிருந்து ராசு, நியுசிலாந்தி லிருந்து கோபால்,கத்தாரிலிருந்து ஹரி ,அத்தனை தொடர்பு . டெல்லி வெங்கட், திருச்சி காளை. சென்னை .எஸ்.வி ,ஆர் , உலகம் பூராவிமிருந்து  பதிவர்கள்.-புதிய தொடர்புகள் -புதிய அறிமுகங்கள், புதிய உறவுகள், நட்புகள் முகம் தெரியாதவர்களின் விசாரிப்புகள்.-இது தொழில் நுணுக்கம் தந்த இந்த வட்டத்தின் முலம் எதையும்சாதிக்கலாம்.பெருமைக்குரிய வட்டம். கிடைக்கும் நேரத்தில் கணினியின் முன்னே அமர்வதுதான் இப்போது அவனுடைய ஒய்வுநேரப் பணியாகிவிட்டது.

முன்று நாட்களாக பிரகாஷ் ஜி இடமிருந்து தகவல் எதுவும் இல்லை. புதிய இடுகை எதையும்காணவில்லை  பின்னுட்டங்களும்  இல்லை  .  லேசாக சந்தேகம். வெளியூர்  போயிருப்பாரோ  .அப்படிஎன்றால்  
மின் அஞ்சல்  இருக்குமே.

சென்று பார்த்தான் .இல்லை  பால்ராஜிடமிருந்து  மட்டும் இருந்தது  .ஆர்வமில்லாமல் துளாவினான். "சென்னையில்  இரண்டு நாளா   கடும்மழை   . பிரகாஷ் மழையில் நனைந்ததில் கடுமையான தடுமன்..   ஜாட்யம் .  எங்கும்  போகவில்லை". என்ற தகவலை கொடுத்திருந்தான்..
  
 சம்முகத்துக்கு தாங்கவில்லை." பிரகாஷ் அருமையான எழுத்தாளன். தத்துவ விசாரணையில் தேர்ந்தவன். வட மொழி தெரிந்தவன். தமிழில் கவிதை எழுதுவான்.தொலைக்காட்சியில் அவன் கவிதை வாசிப்பதைபார்த்திருக்கிறான்." உடனடியாக தன ஆதங்கத்தை தெரிவித்து மின் அஞ்சல் அனுப்பினான்.

"அன்பு பிரகாஷ் ! இரண்டு நாளாக இடுகையில்லை .பின்னுட்டமில்லை .கொஞ்சம் பதட்டமாக
இருக்கிறேன். தொலை  பேசி முலம் தகவல் அனுப்பி இருக்கலாம்.மாம்பலம்  தான.எனக்கு எந்த சிரமமும் இல்லை.
நுங்கம்பாக்கத்திளிருந்து  காரில் வந்து உங்களை மருத்துவ மனைக்கு  அழைத்து செல்வதில் எனக்கு சிரமம் எதுவுமில்லை "  

"ஏல ! சம்முவம் !"

". என்னம்மா! முக்கியமான வேலை பாத்துக்கிட்டு இருக்கேன் "

"அதுக்கில்லைல! எனக்கென்ன தெரியும்"

"...................."

"இந்தா பாரு! ஐயா ராத்திரி மிச்சுடும் துங்கலைடா! பல் வலிகுங்காறு! ஆபிஸ்  போம்போது டாகடர் கிட்ட இறக்கி விட்டுரு! அவர பாத்துட்டு வரும்போது ஆட்டோ"வில  வந்துருவாரு "

"இந்தாபாருதா! ஆபிஸ் விஷயமா நான் அவசரமா மாம்பலம்வரையும் போகணும் . சாயங்காலமா அப்பாவை  கூட்டிகிட்டு போறேன்..சும்மா "புளுபுளு" ஞாத!

!!!!!!!!!!!!!!!!!!

Monday, October 01, 2012

அந்த ராமபக்தரின் .........!!

 
அன்னல்காந்தி அடிகள் நெஞ்சில் குண்டு பாய்ந்த போதும் "ஹே !  ராம்" என்று அழைத்தாக கூறுவார்கள்.

1946ம ஆண்டு இந்திய சுதந்திர சூரியன் அடிவானத்தில் தன சிவப்பு கிரணங்களை காட்டியபோதே கலவரங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன  .மே. பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமியர் அல்லாதவர்கள் விரட்டப்பட்டனர். லட்சக்கணக்கானோர் குடும்பம்குடும்பமாக தங்கள் உடமைகளைத்துறந்து
நிர்கதியாக  அகதிகளாக தில்லிப் பட்டணத்து சாலைகளில் தங்கினர். அவர்களுக்கு உதவியாக நிவாரணப் பணிகளை செய்ய தொண்டர்களை வேண்டினார் காந்தியடிகள்.அந்த பாவப்பட்ட மக்களுக்கு குடி    தண்ணிரி  லிருந்து குடியிருப்பு வரை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய விரும்பினார்.


ஏராளமான தொண்டரகள் வந்தனர். அவர்களின் பணியைப் பார்த்து மகிழ் ந்தார் காந்தியடிகள். அவர்களை நேரடியாக சந்தித்து   நன்றி சொல்ல விரும்பினார். முகாம் முகாமாக சென்றார்.  ஒரு  முகாமில் சில தொண்டர்கள் .அரை அவர்களுடைய அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுகொண்டனர்.


மறுநாள் அவர்களுடைய  அலுவலகம் சென்றார்  ..அவர்களுடைய  தலைவர்கள் அவரை வரவேற்றனர்.காந்தியடிகளுக்கு அலுவலகத்தை
 சுற்றி காண்பித்தனர்.  சிவாஜி மகராஜ், ரானா பிரதாப் ,பொன்ற  வீரர்களின் படங்கள் பிரும்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தன.


அடிகள் விடபெற்று திரும்பும்நேரம் வந்தது  தலைவர் காந்தியிடம் "எங்கள் அலுவலகம் எப்படி இருக்கிறது?என்று கேட்டார்.


"சிறப்பாக இருக்கிறது.நான் ஒரு ராம பக்தன். இவ்வளவு  படங்கள்  இருக்கும்போது சிறியதாகவாவது ஒரு ராமர் படத்தை வைத்திருக்கலாம்" என்றார்.
"சிவா ஜி  யும் ரானாவும் முஸ்லிம்களை எதிர்த்தார்கள்.அதனால் அவர்கள் படங்களை வைத்திருக்கிறோம்! ராமர் முஸ்லிம்களை எதிர்க்கவில்லையே "
என்றார் தலைவர்.

அந்த அலுவலகம் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்க அலுவலகம்.




Friday, September 28, 2012

பிர்லா டாடா வை கிண்டல் செய்து கவிதை!

"சக்ரவ்யூகம்" திரைப் படத்தில்..........!





பிரகாஷ் ஜா என்ற இயக்குனர் "சக்ர வியூகம்" என்ற படத்தை எடுத்துள்ளார். இது முழுக்க முழுக்க மவோயிஸ்டுகள்,அவர்களுடைய போராட்டங்கள் ஆகியவற்றை சித்தரிக்கும் படமாகும்.இதில் ஒரு பாடல் காட்சி வருகிறது." விலைஉயர்வு"என்ற தலைப்பில் ஒரு படல் காட்சிப்படுத்தப் படுகிறது.



"முதலாளி மார்கள் லாப வெறியில் ஏழை மக்களை சுரண்டுகிறார்கள்" என்பதாக வரும் அந்தப் பாட்டில் "பிர்லா டாடா, அம்பானி பாடா" என்ற வரிகள் வருகின்றன.இதுபற்றி இந்தியாவின் மிகப்பெரும் முதலாளிகளின் பெயரையே குறிப்பிட்டு எழுதுவானேன் என்று இயக்குனர் பிரகாஷ் ஜாவிடம்கேட்டபொது." இது ஒரு சாதாரண அன்றாட பேச்சு. கிராமத்தில் எவனாவது பணக்காரத்தனத்தை காட்டி பெருமையாக அளந்தான் என்றால் " ஆமாம்! இவரு பெரிய பிர்லா,டாடா என்கிறொம். யாரவது ஒரு பெண் "டான்சுஆடினால் "ஆமாம்! இவ பெரிய மாதுரி தீட்சித்" என்கிறோம். இந்தப் படத்தில் போராளிகள் இந்த முத முலாளிகளின் மீது அவர்களுக்கு உள்ள கோபத்தைகாட்டுவதாக வருகிறது.ஊயிரற்ற, குறியீடான பெயர்களைசொல்லி சாரமற்று காட்சிகளை பதிவு செய்ய நான் விரும்பவிலிலை.வளர்ச்சி என்பது எல்லாரையும் அணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். தோழிலதிபர்கள் எப்படியெல்லாம்காரியங்களைசாதித்துக் கொள்கிறார்கள்,என்பதையும். தங்கள் லாபத்தில் எப்படி குறியக இருக்கிறார்கள்.என்பதையும் சொல்ல விரும்பினேன். நவீன் ஜிண்டால் என்பவர் ஆண்டுக்கு 73 கோடி ரூ சம்பளம் வாங்குவதாக செய்தி.உள்ளது.ஏழை இந்தியன் தினம் 30 ரூ.கூலி வாங்குகிறான். இந்த மக்கள் இந்தியாவில் 75 சதமுள்ளார்கள். இது எப்படி எல்லாறையும் அணைத்துச் செல்லும் வளர்ச்சியாக இருக்க முடியும்.நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 25 சதம் 100 பெர் கையில் இருக்கிறது" என்றார்.



"தணிக்கையில் யாரையும் குறைகூறவில்லை".என்று எழுத்தில் போட்டு விட்டு காட்சியைக் காட்டும் படி கூறியுள்ளார்கள்.



தொழிலதிபர்கள் தடை வாங்காமல் இருக்க வேண்டும்!!

Monday, September 24, 2012

அவர்களின் வருட சம்பளம் 

114,00,00,000 ரூபாய்.........!!!


சன் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் அவர்களும் அவருடைய மனைவி திருமதி காவேரி மாறன் அவர்களும்  ஆவர். இவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ஒவ்வொருவருக்கும்சுமார் 57கோடி ரூ வழங்கப்படுகிறது.அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 114 கோடி ரூ யாகும்.

 

காங்கிரஸ் கட்சியின் எம்.பி யும் ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான நவீன் ஜிண்டாலுக்கு ஆண்டுக்கு சுமார் 74 கோடி ஆண்டு வருமானம் வருகிறது.

சன்குழுமம் தவிர ஸ்பைஸ் ஜெட் என்ற விமானக்கம்பெனியும் மாறனுக்கு  சொந்தம். அந்தக் கம்பெனி தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. இதற்காகமதுரை விமான நிலையம்  விரிவாக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அமைச்சர் அழகிரி  முழு முயற்சியுமேடுத்துக் கொண்டார்.  

அறுபது  ஆண்டுகளுக்கு முன்னால் சோமசுந்தரம் என்ற இளைஞன் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து வந்தான்.மிகுந்த கஷ்டப்படும்
குடும்பம். கல்லூரியில் படிக்க வைக்கமுடியாத அளவுக்கு வறுமை. சோம சுந்தரத்தின் தாய்மாமன் தந்தை பெரியாருக்கு தெரிந்தவர். அந்த இளைஞனின் கல்விக்கான சிலவை தந்தை பெரியார் ஏற்றுக் கொன்டார்  படிப்புமுடிந்தததும்  தன்   தாய்மாமனோடு  சமுக சீர்திருத்த  அஈசியல்  வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.மாமனின் பத்திரிகையான முரசொலியில்  பணியாற்றினார்.சோமசுந்தரம் முரசொலி மாறன் என்றானார்.


முரசொலி மாறனுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் கலாநிதி மாறன்.
மற்றொருவர் தயாநிதி மாறன்.இரண்டு மகன் களும்  தொலைக்காட்சித்துரையிலும் பத்திரிகைத் துறையிலும் செயல் பட்டனர். தயாநிதி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சரானார். கலாநிதி ஊடகத் துறையில் இன்று இந்தியாவின் முக்கியமான புள்ளியாக செயல் படுகிறார் .


 அமெரிகஜனாதிபதி பில்கிளிண்டன் வந்திருந்த பொது கலாநிதியை  சந்தித்து பேசினார்.

சென்ற ஆண்டு   பாரக் ஒபாமா வந்திருந்த போதும்  கலா
நிதியை  சந்தித்தார்



மாறன் சகோதரர்களுக்கு சுமார் 15000 கோடிக்கு சொத்து இருப்பதாக நம்பப் படுகிறது.














Saturday, September 15, 2012

மே. வங்கத்தில்  ரத்தத்தை விற்றோம்....!

அனல் மின் நிலையம்கட்டினோம்.......!!

1970ம ஆண்டுகளிலிருந்தே மின் பாற்றாக்குறை இருந்த மாநிலம் மே .வங்கம். 1978ல் இடது முன்னணி வந்ததும் பத்திரிகைகள் மின் வெட்டு பற்றியே எழுதின.. அதுவும் அவர்களுக்குப் பிடிக்காத ஜோதிபாசு அரசு என்றாகும் பொது பத்திரிக்கைகள் இரண்டுகைகளிலும் பேனாவை வைத்துக் கொண்டு எழுதின. இடது முன்னணி அரசு பக்ரேஷ்வரில் அனல் மின் நிலையம் கட்ட விரும்பியது. மத்திய அரசோ அணுமின் கட்டிக்கொள் என்று கூறியது. இடது  முன்னணி  அணு உலை என்ற பெயரே எங்கள் மாநிலத்திற்குள் உச்சரிக்கக் கூடாது  என்று
மறுத்து விட்டது.  
"
ஜோதி பாசுவின் பிடிவாதம்" மே .வங்க மக்கள்துன்பம் என்று எழுதின. அணு மின் திட்டங்களால் ஏற்படும் நன்மைகள் யாவை என்று கட்டுரைகள்\
 எழுதின.இடது முன்னணி அசைந்து கொடுக்கவில்லை. தங்கள் மாநிலத்திலேயே  ஏராளமாகக்  கிடைக்கும் நிலக்கரியை  பயன்படுத்திக் கொள்கிறோம் என்று மாநில அரசு சொன்னது.

 ஒரு புதிய விதியப் போட்டார்கள். அசந்சாலில் இருந்து நிலக்கரி கொண்டுவர செலவாகாது.ஆனால் குஜராத்,மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொண்டு போக போக்குவரத்து அதிகமாகும். உங்கள் ஊரில் தொழில் வளம்பெருகும்.நிலக்கரி இல்லாத மாநிலங்களில் முதலாளிகள் முதலீடு செய்யமாட்டார்கள்.இந்தியாவில் சமமான பிராந்திய வளர்ச்சி பாதிக்கப் படும். அதனால்  frieght equaliser என்ற திட்டத்தை கொண்டுவருகிறோம் என்றது மத்திய அரசு .இதன்படி குஜராத்,மராட்டிய  மாநிலங்களுக்கு  ஆகும் போக்குவரத்து செலவின் ஒரு பகுதிய மீ.வங்கம் ஏற்க வேண்டும்  .மின் உற்பத்தியின் முக்கியத்துவம் கருதி மாநிலஅரசு ஏற்றுக் கொண்டது. இறுதியாக திட்டத்திற்கான செலவு? இதோ, இதோ என்று 7அண்டுகளை மத்திய அரசு கடத்தியது. ஒருகட்டத்தில்மாநில அரசு தன சிலவிலேயே கட்ட முடிவு செய்தது.அப்போது தான் திட்டச்செலவிற்கு மக்களை அணுக முடிவு செய்தது.

மக்கள் ரத்த தானம் செய்வார்கள் அதன அரசு பெற்றுக் கொண்டு அந்தப் பணத்தில் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தார்கள்.
உலகமே வியக்க மக்கள் ரத்தம் தந்தார்கள் ஒரு கட்டத்திலரத்ததை
சேகரித்து வைக்க இடமில்லாமல் திணற வேண்டியதாயிற்று..

90ம ஆண்டுகளிலிருந்து பக்ரேஷ்வரில் மின் உற்பத்தி நடக்கிறது.

இன்று மீ வங்கம் மின்சாரத்தில் முன்னணியில் இருக்கிறது.
 அணு உலை கூடாது! கூடவே கூடாது !
இறக்குமதி செய்யப்பட அணுஉலைகள் கூடாது !

Saturday, September 08, 2012

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு...........!


தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் ஒதுக்கிடு செய்யவேண்டும் என்று உச்சநிதிமன்றம் உத்திரபிரதேச  அரசின் உத்திரவை ரத்துசெய் துவிட்டதாக கூக்குரலிடுகிறார்கள்  .தீர்ப்பை   . வாசித்துப்பார்த்தால்  உயர்நிதி மன்றம் சில தகவல்களை தரும்படி  கேட்டுள்ளது  தெரியவரூகிறது.அது சரியானமுறையில் கொடுக்கப்படாததால்  தீர்ப்பு பாதகமாகவந்துள்ளது. 
_______
அப்படி என்ன கேட்டுவிட்டார்கள்.
1.இந்த உத்திரவால் பயன்படுவோர் பின்தங்கியவர்களா?
2.பதவி உயர்வு பெற்றவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு சதம்?
3இதனால்நிரவாகத்தின் செயல் திறன் பாதிக்கப் படுமா?

உத்திரப் பிரதேச அரசு என்ன சொல்கிறது என்பது இருக்கட்டும் . அரசியல் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பின் தங்கியவர்கள் தான் என்று வரையருக்கப்பட்டிவிட்டது.எனவே அதனை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் கிட்டத்தட்ட 67 செயலாளர்களில் ஒரவர் கூட தாழ்த்தப்பட்ட  சமுகத்தை செர்ந்தவரில்லை    .முன்றாவதாக திறமை பாதிக்கப் படுமா?

திறமை merrit பதிக்கப்படும் என்று மேல்சாதி கூ குரலின் வெளிப்பாடு இது. இதனை வெகு சாதுரியமாக பயன் படுத்தி ஒதுக்கிட்டுக்கு எதிராக பயன்
படுத்துகிறார்கள். பிரபாத் பட்நாயக் என்ற பொருளாதார நிபுணர் இது பற்றி குறிப்பிடும் பொது ரயிலில் பயனச்ச்சிட்டு பரிசோதிப்பதில் என்னடா திறமை பாக்கணும்? கிளார்க்கு, கலக்டர்,என்னடாவேனும்? ஒரு விஞஞானி
 மெரிட்ட பாக்கணும்  !   என்கிறார் . விளையாட்டு துறைல பாரு! அதுலயும் பல கிழிசல் இருக்கு. அசாருதின் மெரிட் தான! பாவம் ஜெயிலுக்குபோகல! தங்கப்பதக்கத்தை போதைமருந்துக்காகபரிக்கலையா! ஒரு கோடி கொடுத்தா கடைசி முணு ஓவர்ல மூனு no paal போட தயாரா இருக்கான்! அப்புறம் என்னடா merit  !
  
அவரு பேரென்ன! உமாசங்கர்! மெரிட் தான்டா! அவரு இப்ப எங்க? ஆளை அமுக்கிபுட்டிங்களேடா! அப்புறம் என்ன மேரிட்டு? ம..று ?

------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது. இந்தியா சுதந்திரமடந்து 65 வர்சம் ஆச்சு.முதல் இருபது வர்சம் காங்கிரஸ் செத்தபயலுக ஆண்டாங்க! சரி ! பாக்கி 45 வேசம் இந்த திராவிட குஞ்சுகள் தான ஆண்டாங்க! தமிழக அரசுல தாழ்த்தப்பட்டவனுக்கு பதவி உயர்வுல ஒதுக்கிட்டு இல்லையே! தாழ்த்தப்பட்டவன் என்சம்மந்தி   னு சோல்லியே ஏச்சுப்புட்டானுவளே!

தோல் திருமா கேக்கலியே! கிருஷ்ணசாமி கேக்கலியே!வைகோ.சிமான் கேக்கலியே! அவர்கள் கேக்கமாட்டார்கள்!

தொழிலாளர்கள் கேட்கிறார்கள்!
தொழிற்சங்கங்கள் கேட்கின்றன!
இடது சாரி சங்கங்கல்கேட்கிறன!
அகில இந்திய இன்சுரன்ஸ் உழியர் சங்கம் கேட்டு போராடி அதனைப் பெற்றுத்தந்தது!!

Thursday, September 06, 2012

கல்லை எறிந்து  ஈ ழம் வாங்க..........!


திருச்சி  காட்டூரில் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் பஸ் மிது சிலர்  கல்லேரிந்துள்ளனர். பஸ் இலங்கையிலிருந்து  வந்த  பயணிகளோடு  விமானநிலயம்சென்று கொண்டிருந்தது . அவர்கள் வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு தரிசனத்துக்காக வந்த இலங்கை வாழ தமிழர்கள். போலீசார் கொடுத்த தகவலின்படி கல்லேரிந்ததாக சில ம.தி.மு.க தொண்டர்களை பிடித்திருக்கிறார்கள்.

சென்னையில் சில பள்ளி மாணவர்களேடு கால்பந்தாட்டம்  விளையாட வந்த இலங்கை மாணவர்களை உடனடியாக திருப்பி
அனுப்பும்படி மாநிலமுதல்வர் உத்திர விட அவர்கள் திரும்பிச்சென்றுள்ள னர்.  

இந்தக் கால்பந்தாட்டப் போட்டி நேரு விளையாட்டரங்கத்தில் நடப்பதாக இருந்தது. அதற்கு அனுமதியளித்த அதிகாரியை தாற்காலிகப் பணி நிக்கம் செய்து அரசு உத்திரவிட்டுள்ளது. இலங்கையில் அல்லல் படும் தமிழ ர்களின் நலனுக்காக இது செய்யப்படுவதாக அப்பாவிகள் நம்பவைக்க   படுகிறார்கள்.

சமிபத்தில்  "ஜுவி "  பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. கரூர் அருகே "மணல் கொள்ளையில்" இடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர்  ம.தி.மு.க வினாராம்.இலங்கையில் ஒரு புதிய பல்கலைக் கழகம் வந்துள்ளது. தனியார் பலகலைகழகம். . தமிழகத்தின்  பிரபலமான சாதி  சங்கத்தின் தலைவர் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை தனியாகப் பிரிந்து தமிழர் நலன் காக்க போராட  பல தலைவர்கள் தலைஎடுத்துள்ளனர். ஒருவர் அதற்காக ஆண்டுக்கு தினசரி நாட்காட்டி பத்துலட்சம் விற்பனை
செய்து வருகிறார். அந்த விற்பனைக்கு   உத்திரவாதம்  கொடுத்துவிட்டால்  தனிநாடு கோரிக்கையை அவர் விட்டு விடுவாரா என்று இலங்கை அரசு
 பரிசிலித்து வருவதாக  செய்திகள் வருகின்றன.

  ஒரு முறை மும்பையிலிருந்து வரும் பொது விமானத்தில்  செப்பு ஆலை  முதலாளியின் உதவியாளரும் பயணம் செய்தார்.செப்பு ஆலை கழிவு எப்படி
மாசு படுத்தும் என்று அவர் முலம் தெரிந்து கொண்டேன். தமிழ் நாட்டில் அதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் பற்றி பேச்சு வந்தது. "என்ன செய்ய சார்? அம்புட்டு பேருக்கும் கொடுத்தாச்சு! புதிசு புதுசா கோரிக்கை வக்கிறாங்க! என்றார்.
"பலான பேரை சொல்லி அவருக்குமா? "என்றேன்."ஆமாம்" என்பதாகதலை அசைத்தார். "டெல்லில டுரிஸ்டு கம்பெனியே ஒடுதுசார் பினாமில ! விடுங்க வாய பிடுங்காதிங்க சார்.! என்று முடித்தார்.

இலங்கை தனியாக பிரிய ஆதரிக்கும் தலைவர் வீட்டு குழந்தை பள்ளிக்கே செல்லாமல் பத்தாப்பு பாசான கதை வேறு உள்ளது.

இலங்கையில் உள்ள தமிழன் அலறுகிறான். "எங்களை விட்டுடுங்கப்பா! நாங்க எங்க கதையை பாத்துக்கிடுதம் கான்! உங்க போசப்புக்கு எங்களை கொல்லாதிகடா ங்கான்! இவனுக கல்லெறிந்தே தனி நாடு வாங்கித் தந்தே தீருவேன் கான்."
மக்கா என்ன செய்யப் போறே!!! .    

Saturday, September 01, 2012

பத்து ஆண்டுகளுக்குப்  பிறகு------!

 

"கூட்டாகக்  கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்தப் பெண்களின் மானத்தை மறைக்க எங்கள் துப்பட்டாவை வீசிஎறிந்தோம்! ஆண்கள் முகத்தைத்திருப்பிக் கொண்டு தங்கள் சட்டையை எறிந்தார்கள். சில சடலங்களின் நிவாணத்தை மறைக்க செய்தித்தாள்களால் முடினோம்" நரோடா-பாட்டிய கொடுரத்தை பார்த்த சாட்சி கூறினார். மொத்தம் 97 பேர்
 அவர்கள் முஸ்லீம் என்பதற்காக கொல்லப்பட்டார்கள்.பெண்கள் சிறுவர்கள் வயது முதிர்ந்தோர் ஏன் பநிறேண்டு நாள் சிசு உட்பட கொன்று தீயில் விசி எறியப்பட்டனர். கொல்வதற்கு  வாளும்  எரிப்பதற்கு  மண்ணெண்ணையும் கொடுத்து உதவியவள் தான் அந்தப் பாதகத்தி
'மாயா  கொண்டானி " .

"நான் சம்பவ இடத்திலேயே இல்லை என்றாள்  மாயா ! இந்தப் பொய்க்காக அவளை மந்திரி ஆக்கினான் நரேந்திர மோடி . ஆனால் மனசாட்சியுள்ள போலிஸ் அதிகாரி ராகுல் சர்மா  கைபேசியில்
பேசியதை சேகரித்து
அதன்  முலம்  அவள் எவ்வாறு  கலவரக்காரர்களுக்கு  உதவினாள்   என்ற சாட்சியத்தை  நரேந்திர மோடியிடம் கொடுக் ...காமல் விசாரணை கமிஷனிடம் கொடுத்தார்!
அதற்குபபரிசாக ராகுல் சர்மா மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 

மாயா கொண்டானி லால் கிஷன் அத்வானி யப்போலவே  சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குடும்பத்தைச்சேர்ந்தவர்.அதவானியின் சீடராக இருந்து அரசியலுக்கு
 வகுப்புவாத அரசியலுக்கு 
வந்தவர்  .பரோடாவில் மருத்துவப்படிபை  முடித்து  பேறுகால  மருத்துவராக பணியாற்றுகிறார். அவருக்கு மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நிதிபதி திருமதி ஜோத்சனா யாங்க்னிக் திர்ப்புக்குரியுள்ளார்.

நரோடாவில்வசிக்கும் திலவாரா ஷேக் என்ற 74 வயது கிழ்வர் " "பத்து ஆண்டுகளாக நாங்கள் தவித்து வந்தோம்.எங்கள் நம்பிக்கயை
இழந்து விட்டோம்.
ஆனால் என் இந்தியாவில் அடியோடு எல்லாம் கேட்டுபோய்விடவில்லை என்பதை இந்த தீர்ப்பு கூறிவிட்டது" என்றார். 

இன்னும் நுறு நாளில் குஜராத்தில் மாநிலதேர்தல் வரவிருக்கிறது. ஊழலை எதிர்க்கும் பாபா ராமதேவ், பெடி  அம்மையார் ,அரவிந்த் கேசரிவால் ஆகியோர் வாக்கு  செகரிக்கவருவார்கள்!










































  

Sunday, August 26, 2012

அவதார் கிஷன் ஹங்கல் - சாகும் வரை கம்யுனி ஸ்டாக  இருந்தவர்......!


"நான் இறக்கும்வரை கம்யுநிஸ்டாக இருந்து சாவேன் " என்று கூறி ஞாயிறு அன்று (26-8-12) அன்று   மரணமடந்தார் எ.கே ஹங்கல்  என்ற அந்த அற்புதமான நடிகர் அதனால் தானோ என்னவோ எந்த பிரபலங்களும் அவருடைய இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.இவ்வளவுக்கும் 225 படங்களுக்கு மேல் நடித்தவர் அவர்.


பாகிஸ்தானின்   தலைநகரான பெஷாவரை . சேர்ந்தவர் ஹங்கல் .சிறு வயதிலேயே பிரிட்டிஷாரை எதிர்த்து  போராடியவர்.சிறை சென்றவர். பெஷாவரில் இருக்கமுடியாமல் கராச்சிக்கு வந்தார். அங்கும் போராட்டம் தான் அவர் வழ்க்கையாயிர்று.பிரிட்டிஷ் அரசு பிடித்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தது. காஷ்மீரத்து பண்டிட் ஆனா அவர் பிழைப்பிற்கு தையல் தொழில்பார்த்தார்.பிரிவினைக்குப் பிறகு பால்ராஜ் சஹாநியோடு இந்தியா வந்தார்...

சக கலைஞர்களான சஹானி,கைபி  ஆஜ்மி ஆகியோரோடு இந்திய மக்கள் நாடக அமைப்பில் செயல்பட்டார்.சுமார் 25 வருடம் நாடக நடிகராக வாழ்ந்தார். பின்னர்
 தோழர்களின்  வற்புறுத்தலுக்கு இணங்க   திரைப்படத்தில் நடிக்க  ஆரம்பித்தார் .

கம்யுனிஸ்ட் என்பதால் அவரை சிவசேனை கருவருக்க  விரும்பியது  பாகிஸ்தான் துதரகம்  நடத்திய விருந்தில் கலந்து கொண்டார் என்பதற்காக அவரை எதிர்த்து கோஷம் போட்டது. ஹங்கல்  கலங்கவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு பிரிட்டிஷாரை எதிர்த்து பெஷாவரிலும் கராச்சியிலும் போராடியவன் நான்.இந்த வகுப்பு வாதிகளையுமேதிர்த்து போராடுவேன் என்றார்..

ஒரேமகன். அவருடைய 20வயதில் பிறந்தவர். மனைவி இறந்துவிட்டார். மகனுக்கு குழந்தைகள் இல்லை.மகன் புகைப்படக் கலைஞன். நிரந்தர வருமானம் கிடையாது.முதுமை காரணமாக நடிப்பதை தவிர்த்தார்.

"கானுன் " என்ற திறப்படத்தில்திருடனாக வருவார் தவறாக கொலை குற்றம் சாட்டப்பட்டு நிற்பார். லேசாக இருமுவார். போலீசார் அவரை உடனே மருத்துவமனையில்  சேர்த்து சிகிச்சை அளிப்பார்கள்."மருத்துவம் பார்க்கத்தானே திருடவே வந்தேன்! பாவிகளே!".  என்பார்.வறுமை அவரை கடுமையாக பாதித்தது.ஆனால் அதனைவேளியில்   அவரும் அவர்மகனும் காட்டிக் கொள்ளவேயில்லை..

ஹங்கல் இறக்கும் பொது அவருக்கு வயது 98.

வங்கி ஊழியர்களின் போராட்டம்......!


சென்ற புதன் கிழமை அன்று அவசரமாக எனக்கு பத்தாயிரம் ரூ தேவைப்பட்டது. உடனடியாக காசொலையோடு வங்கிக்கு புறப்பட்டேன். அப்போதுதான் என் மனைவி வங்கி உழியர்கள் இரண்டுன்நாள்  வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று நினைவுபடுத்தினார்.பணத்தை எதிர்பார்த்து
காத்திருக்கும் நண்பருக்கு   என்ன சொல்வது? தெரிந்த வரை அணுகினேன்!
அவரும் உதவ முன் வந்தார்.அவருடைய குடும்பதேவையை முன்னிட்டு
விட்டில் வைத்திருந்த பணத்தை எனக்கு கொடுப்பதாக கூறினார் .


"வங்கி ஊழி யர்கள் எதற்காக வேலை நிறுத்தம் செய்கிரார்கள் தெரியுமா?" என்று கேட்டார்.

"என்ன! சம்பளம்,போனசு,ம்பாங்க!"
"அது தான் இல்லை!"
"பின்ன?"
"இந்த முட்டாப்பய அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டுவரான்!"
"சரி!"
"பொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்த்ப்போறேன்னு சீரழிக்க  சட்டம் கொண்டுவாறான் !"
"ஏன்யா !  இவங்களுக்கு மூளையே கிடையாதா ?"
"கொள்ளையா இருக்கு! ஆனா நல்லதுக்கு இல்ல!"
"ஐந்து வருடம் கழிச்சு பொதுத்துறை வங்கிகள் ஒய்ந்து விடுமாம! அப்போ லட்சக்கணக்கான கோடி ரூபா நட்டமாயிடுமாம். அதனால இப்பவே தனியார் வங்கிக்கு சலுகை கொடுத்து அத நிமிர வைக்கப் போறாங்களாம்!"
"அட !  சண்டாளன்களா!"
"இந்த தனி முதலாளிகளுக்கு வருமான வரி,சுங்க வரி,கலால் வரி னு சலுகை  கொடுத்திருக்காங்க !"
"எம்புட்டு இருக்கும்?"
"இருபத்து ஐந்து லட்சம் கோடி ரூ !!!"

சொந்தகஷ்டனஷ்டம் இருக்கட்டும்.!
அவங்க போராடி ஜெயிக்கட்டும் "

மனதிற்குள்  சொல்லிக் கொண்டேன்!