Wednesday, January 23, 2019




"சென்னை புத்தக கண்காட்ச்சி "












"வால்காவிலிருந்து ...."

800 பிரதி விற்று 

"பாரதி ..." சாதனை.!!



சென்னை புத்தக கண்காட்ச்சி முடிந்து விட்டது. சுமார் 800 பதிப்பகங்கள் கலந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு 80 கோடிக்கு புத்தக விற்பனை நடந்துள்ளது .

மிக அதிகமாக விற்ப்பனை செய்துள்ள பதிப்பகங்களை முதல் பத்து  இடத்தை இந்த ஆண்டும் பாரதி புத்தகாலயம் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

S .ராமகிருஷணனின் "சஞ்சாரம் " விற்பனையில் முதல் இடத்தை பிடித்துள்ளது அடுத்தபடியாக கம்யூனிசம் அன்றும் இன்றும் என்ற நூலும் தொ.பாரமசிவத்தின் படைப்பும் வந்துள்ளன.

ராகுல் சாங்கிருத்யாயனின் "வோல்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூல் மூலநூலான இந்தியிலிருந்து தமிழுக்கு மூத்து  மீனாட்ச்சி அவர்கள் மொழிபெயர்க்க  பாரதி புத்தகாலயம் சென்ற ஆண்டு வெளியிட்டுள்ளது.

இது பற்றி அந்த நிறுவனத்தின் மேலாளர் P . K .ராஜன் அவர்களிடம் உரையாடிய பொது " வால்காவிலிருந்து ... " நல்ல விற்பனை என்கிறார் பாரதி புத்தகாலயம் எழுத்தாளர்கள்,மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியவர்களுக்கு ஓரளவு சன்மானம் கொடுத்து வருவதாக மகிழ்ச்சியோடு கூறினார்.

நிறுவனத்தின் மற்றுமொரு மேலாளர் முகம்மது சிராஜ்-உத்தின் அவர்களிடம் தொடர்பு கொண்ட பொது "மிக அதிகமாக "தாய் " நாவலும் "வால்காவிலிருந்து கங்கை வரை " நூலும் விற்பனை ஆனதாக குறிப்பிட்டார்.ராகுல் ஜி யின் நூல் கிட்டத்தட்ட 800 பிரதி விற்றிருப்பதாக கூறினார்.

80கோடி  ரூபாய் விற்பனை என்பது சரிதான்.சென்ற ஆண்டை விட  இது அதிகம் தான் இந்த அதிக விற்பனை என்பது விலைவாசி எற்றத்தின் காரணமாக இருந்தால் என்ற கேள்வி அடிநாதமாக இயங்கி கொண்டுதான் இருக்கிறது. 

புத்தக கண்காட்சிகள் பதிப்பகங்களுக்கு  உதவிகரமாக இருக்கின்றன. ஆனால் பதிப்பகங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியது தவிர அந்த அளவுக்கு எழுத்தாளர்களுக்கு உதவிகரமாக இருப்பதில்லை என்பது உண்மையே.  

எழுத்தை மட்டும் நம்பி வாழ்ந்த "க ந சு""சி.சு செல்லப்பா 'புதுமைப்பித்தன் ஆகியோர் நினைவுக்கு வருகிறார்கள். சம காலத்தில் "ஜெயகாந்தன்" மட்டுமே அப்படி ஒரு வாழ்வை வாழ்ந்தார் .

பதிப்பகங்கள் printing industryஆக  மாறிக்கொண்டு இருக்கின்றன என்பது உண்மை. இது இலக்கிய வளர்சிக்கு நலம் தருமா என்ற கேள்விக்கு பதில் இல்லை .  

"பாரதிபுத்தகாலயம்","கிழக்கு பதிப்பகம் ," ஆகியவை போன்ற பதிப்பகங்கள் நிறைய உருவாக்க வேண்டும்.



பி.கு.: "வால்காவிலிருந்து கங்கை வரை" நூலை  இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த முத்து மீனாட்ச்சி  அவர்களின் கணவர் தான் காஸ்யபன் என்ற எழுத்தாளர் . இது தகவலுக்காக மட்டுமே ! 


Saturday, January 12, 2019




"சினிமா விமரிசனம் அல்ல "
















"பேட்ட"வும்,

"விசுவாச"மும் ....!!!



கர்நாடகாவில் தனக்கு வேண்டிய நடிகருக்கு வாழ்த்து சொல்ல முடியாததால் ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தி.

" படம் பார்க்க காசு தரவில்லை என்பதால் தந்தையின்மிது பெட்ரோல் வீசி தீவைக்க ஒரு ரசிகர் முயன்றிருக்கிறார் .

முதல் நாள் முதல்காட்ச்சி பக்க முடியாததால் தற்கொலைமுயற்சி.

இவங்க எல்லாம் இந்தக்கதாநாயகர்களின் ரசிகர்கள். இந்தநாயகர்களை அடித்து,வெளுக்கும் போதாவது இது குறையுமா என்று எண்ணத்தோன்றுகிறது .இந்தப்பிரசினை பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது .

புனே பிலிம் இன்ஸ்டிடியூட் இது பற்றி விவாதித்துள்ளது> 80 களில் இவர்கள் நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டவன் நான்>இறுதி நாளில்,நிமாய் கோஷ்,பி.கே.நாயர், சதிஷ் பகதூர் ஆகியோர் கையெழுத்திட்ட சான்றிதழ் கொடுத்தார்கள் .நான் ஒரு இடது சாரி பத்திரிகையின் சார்பாக வந்தவன் என்பதால் சதிஷ்   என்மீது மிகுந்தபாசம் காட்டுவார்.அவர் ஒரு தீவிர இடது சாரி.

"தோழர் ! நீங்கள் இனி டீ  கடையில நண்பர்களுடனோ பேசும்போது உங்கள் பேச் \சு வித்தியாசமாக இருக்கும், காமிரா,மிட்ஷாட் ,லாங்ஷாட், காம்போசிஷன் என்று வார்த்தைகளை பிரயோ கிப்பீர்கள் ..பார்வையாளர்கள் உங்களை திரைப்படத்தின் முக்கியஸ்தராக கருதி மரியாதை கொடுப்பார்கள் ,நாங்கள் அதற்காக உங்களுக்கு ரசனை வகுப்புகளை நடத்தவில்லை. இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் கெ ட்டு குட்டிசுவராகி  வருகிறார்கள்> அவர்களை அந்த போதையிலிருந்து அப்புறப்படுத்தவே இந்த வகுப்புகளை நடத்துகிறோம்" என்றார்.

"பள்ளிகளுக்கு செல்லுங்கள்.கல்லூரிகளுக்கு செல்லுங்கள் .அந்தமானவர்களுக்கு இது ஒரு விஞ்சான வளர்சியின்  பரிணாமம்> தகவல் தொடர்பு சாதனத்தின் அடுத்த அ டி என்பதை சொல்லி அவர்கள் போதையை தெளியவையுங்கள்.ஒவ்வொருமாதமும் எந்தனைமானவர் களை சந்தித்தீர்கள் என்று எனக்கு தகவல் தாருங்கள்" என்றார் .

ஆசிரியர் கூட்டணி மூலமும் . muta மூலமும் மாணவர்களை சந்தித்து வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்.

திரைப்பட ரசனை வகுப்பு என்று அழைக்காமல் திரைப்படம் பற்றி காஸ்யபன் பேசுவார் என்று அழைத்தோம்.

அவர்களிடம் கேள்விகளை கேட்டு கற்றுக்கொடுத்தோம்.

6ம் வகுப்பிலிருந்து 12ம்வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வருவார்கள்.

"திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் முதலில் என்ன வேண்டும் ? என்று கேட்பேன்.

ஒருமானவன் காசு என்பான்.நடிகர் என்பான் பாடல் என்பான்> இப்படி  அவர்கள் சொல்லிக்கொண்டேபோவார்கள்> அவர்கள் சொல்லி முடித்ததும். நான் கூறுவது சரியா என்று சொல்லுங்கள் என்பேன்.

நிசப்தமாக மிகவுமக்கரையோட நான் என்ன சொல்லப்போகிறேன் என்று இருக்கும் பொது "மின்சாரம்" என்பேன்.

ஓ என்ற இறைசலும்,கைதட்டலும் காதை ப்பிளக்கும் .தமிழகத்தில் காமராஜர் வந்து  மின்சாரமயமாகிய பிறகுதான் திரை  அரங்குகள் அதிகம் வந்தன. திரைப்படம் என்பது ஒருவிஞ்ஞான தொழில் நுணுக்க புர ட்ச்சி என்று விளக்குவேன். 

திரைப்படம் என்பது sound and lisht ன் கலவை அது இல்லாமல் திரைப்படமில்லை என்று ஆரம்பித்து,தகவல் தொடர்பின் வளர்ச்சி பற்றி  விளக்குவேன். எம் .ஜி ஆர்,சிவாஜி,ஜெமினி என்று கேட்கவந்த மாணவர்கள் இந்த புதிய பாடத்தைப்பற்றி அறியும் ஆவலில் வருவார்கள். 

கல்லூரிகளிலும் மாணவர்களை அழை த்து வகுப்பு எடுத்துள்ளேன்.கிட்டத்தட்ட 70  வகுப்புகள் நான்கு  ஆண்டுகளில் எடுத்தேன்.அதுமட்டுமல்லாமல் தமு..எ சங்கத்தின் மூலம் மதுரை,நெல்லை ஆகிய இடங்களில் சதிஷ் பகதூரை வரவழைத்து ரசனை வகுப்புகள் நடத்தினோம்.

வேலைப்பளுவும் இயலாமையும் மேற்கொண்டு செயல்படாமல் தடுத்து விட்டன. தீக்கதிர் ஆசிரியர்.அ .குமரேசன், டாகடர் .ரவிக்குமார் ஆகியோர் செயலூக்கத்தோடு இருக்கிறார்கள் .இந்த ரசிகர்கள் கூட்டத்தை அவ்ர்களைப்போன்றவர்கள் மாற்ற முயற்சிக்கலாம் . அல்லது அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து இந்தப்போதையை தெளிவிக்க ஆசிரியர்களை உருவாக்கலாம் .

த.மு.எ க சங்கத்தின் தலைமைக்கு இதை என் ஆலோசனையாக வைக்கிறேன். 



Wednesday, January 09, 2019






"இட ஒதுக்கீடு "



பொருளாதாரத்தில் 



பின் தங்கியவர்களுக்காம் !!!




"பொழுது போகாத சாமியார் எதையோ தூக்கி  பார்த்தாராம் " என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு !

இட ஒதுக்கீடு பற்றி  அரசியல்சாசன சட்டம் உருவானபோதே இது பற்றிய விவாதம் நடந்தது.

அண்ணல் அம்பேத்காரிடம் பொருளாதாரத்தில் பின் தங்கையவர்களுக்கும் வேண்டும் என்று கோரிக்கையையே எழுப்பினார்கள் .இப்படி எழுப்புவதில் மூலம் இடஒதுக்கீடு பிரச்சினையை சர்சைக்குள்ளாக்கி நீர்த்து போகசெய்வது தான் அவர்களை நோக்கம்.

"இந்தியாவில் 80 % மக்கள் பொருளாதார ரீதியாக கீழ் மட்டத்திலதான் இருக்கிறார்கள்>இதிலமேல்சாதி,கீழ்சாதி என்ற பேதமில்லை. என்று பதிலளித்தார் அம்பேத்கார்.

சவுண்டி பாப்பான் அம்பட்டனை ஏல முனியா நாளை காலைல வந்துடு " என்று கூற முடியும் "

"அவன்  சரிங்க சாமி " என்றுதான் பதில்கூறவேண்டும்.1

ராமன் குகனை சகோதரா என்று  கூப்பிட்டார் .குகன் கூப்பிட்டதாக வால்மீகி எழுதவில்லை..குகன் ராமனை சகோதரா என்று கூப்பிட்டிருந்தால் அன்றே அயோத்தியில் சாதி கலவரம் தோன்றி இருக்கும்.

தசரத புத்திரர்கள்நால்வர் தான்.என்றுமே அவர்கள்  ஐவரானதில்லை .

அதனால் தான் பொருளாதாரத்தை அடிப்படையாக கொள்ளவில்லை.

இந்த நடவடிக்கையே அபத்தமானது .இந்த கொள்ளையில் 10% தருகிறார்களாம் ."ஏல சட்டில ஒன்னும் இல்லை. இருப்பது 0% .இதுல 10% ஆனா என்ன 80 % ஆனா என்ன ?எல்லா கழுதையும் ஒண்ணுதான்."

இதை நடைமுறைப்படுத்த முடியாது. அரசியல் சாசனத்தை திருத்தணும். அது இப்பபோதைக்கு முடியாது> 50 % மாநிலங்கள் அதை ஏத்துக்கணம்  .நடக்கிற காரியம் இல்லை.

2003 ல வாஜ்பாயாய் செஞ்சு  தோத்தாரு. இப்பம் மோ டி செஞ்சு பாக்காரு..

நமக்கு சந்தோஷம்  தான் .மோடி அலைல இல்லை பயத்துல இருக்காரு.எத்தைத்தின்னா பித்தம் தேளியும் னு பாக்காணுவ ! 

"நாங்க ஜெயித்து வந்தோம்னா ரபெ ல்  ஊழலை விசாரிப்போம். ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவோம் " நு   காங்கிரஸ் கடசி அறிவிச்சிருக்கு.

அம்புட்டு பயகளும் பேய் முழி முழிச்சிக்கிட்டு இருகணுவ.! 

கூத்து இன்னும்முடியலை !

சீரழிய போறானுவ !!!





Tuesday, January 08, 2019




"காலா " படமும் ,



த.மு,எ ..கலைஞர்கள் சங்கத்தின்  ,



விருதும் "!!!




70ம் ஆண்டுகளில் மதுரையில் திரைப்பட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது தோழர் ஸ்ரீதர்ராஜன்,வெங்கடேசன்,வக்கீல் சுரேஷ் போன்ற இடது சாரி சிந்தனை உள்ளவர்கள் "யதார்த்த பிலிம் சொசைட்டி " என்று ஆரம்பித்தனர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான,ஹங்கேரி,போலந்து, செகேஸ்லேவியா ,சோவியத் நாடு, ஜப்பான் பிரான்சு , குயூபா ஆகிய நாட்டு படங்களை திரையிடுவது அதன் நோக்கம் .

இந்த சொசைட்டியின் அகில இந்துதலைமையில் , மேற்குவங்கத்தை சேர்ந்த சத்யஜித் ரே ,மிருணாள்சென் ,நிமாய் கோஷ் என்ற முற்போக்கு சிந்தனையாளகர்கள்  இருந்தனர்.. அற்புதமான படங்களை திரையிட்டும்பார்த்தும் மகீழ்ந்தோம்.இந்த சொசைட்டியில் நானும் உறுப்பினராக இருந்தேன். இதற்கு மிகவும்  உதவியாக புனே திரைப்பட  கல்லூரி இருந்துவந்தது.


அப்போது இருந்த சோஷலிச வாலிபர் முன்னணி யினருக்கு இந்த படங்களை திரையிட்டு காட்ட விரும்பினேன். இன்று சென்னையில் மூ த்த பத்திரிகையாளராக இருக்கும் சிகாமணி  உதவியில் மேல மாசி வீ தியில்  ஒரு ரைஸ் மில்லில் திரையைக்கட்டி Battle ship Potomkin என்ற படத்தை போட்டோம். ஆங்கிலத்தில் உள்ள subtitle  ஐ  கையில் ஒரு மைக்கை வைத்துக் கொண்டு தமிழில் நான் சொல்ல அணியினர் ஆரவாரத்துடன் அதனை ரசிக்க ஆரம்பித்தனர்.


இடது சாரி தலைவர்களிடம் இதனை சொல்லி நாமும் ஒரு திரைப்பட சொசைட்டி ஆரம்பிக்கும் யோசனையை சொன்னேன்.மிகவும் இறுக்கமாகஇருந்த காலம்.அவர்களும் அப்படியே இருந்து விட்டனர்.


1975ல் த.மு.எ சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் நானுமொரு செயல்பாட்டாளனாக இருந்தேன். திரைப்பட இயக்கத்திற்கு இதனைப்பயன்படுத்த முனைந்தேன். 

திரைப்பட கல்லூரி அந்த ஆண்டு திரைப்பட ரசனை வகுப்பு நடத்தியது. மதுரையிலிருந்து சிலரை அனுப்புமாறு கேட்டிருந்தது .தமுஎசவின் தலைவரான கே.எம் அவர்களிடம் குறிப்பிட்டேன்.

"போங்க ! காஸ்யபன்! எதிரியின் கலை ஆயுதங்கள் அத்தனையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் போய்வாருங்ககள்." என்றார்"!

நிமாய் கோஷ,பிகே .நாயர்,சதீஷபகதூர்  ,ஆகியவர்களோடு தொடர்பு ஏற்பட்டது.

அன்றய நிலையில் திரைப்படம் என்றாலே பெரியவர்கள் கம்பை எடுத்து அடிக்க வருவார்கள்> இருந்தாலும் நான் என்முயற்சியை விடவில்லை.

எழுத்தாளர் சங்கம் இலக்கிய விருது வழங்கும் திட்டத்தை கைக்கொண்டது>இது எழுத்தாளர் சங்கத்திற்கு அப்பாலிருந்து எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஆகியவர்கள்நம்மை  நிமிர்ந்து பார்க்கசெய்தது>

கோமல் சுவாமிநாதன், அன்னம் மீரா ,பாலு மகேந்திரா ஆகியோர் நம்மோடு இணைந்து செயல்பட துவங்கினர் . அப்போதைய ஆட் சி யில் திரை ப்படங்களுக்கான  super தணிக்கை முறை அறிவிக்கப்பட்டபோது தமு எ  சங்கம் களத்தில்  இறங்கி போராடியது .இந்த போராட்டத்தில் நம்மோடு திரை  உலக கலைஞர்கள்  நெருக்கமாக செயல்பட்டனர்.

திரைப்பட விருது கொடுக்கும் முடிவும் எடுக்கப்பட்டது . நம்மோடு கமல்ஹாசன்,பாலு மகேந்திரா கோமல் ,நாசர் என்று பலர் நெருக்கமானார்கள். 

பாலு மகேந்திர மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளராக பணியாற்றினார்கோமல் சங்க மாநில துணைத்தலைவராக இருந்தார் இன்று இந்த விஷயத்தில் சுணக்கம் உள்ளது .

ஆனாலும் திரைப்பட விருது ஆண்டு தோறும் வழங்குவது நிறைவாகவே உள்ளது .

தேர்ந்து எடுக்கும் படங்களை மீது விமரிசங்கள் வரத்தான் செய்யும்."பம்பாய் " திரைப்படம் விருதுக்காக சொன்ன போது முத்த எழுத்தாளர் ஒருவர் கடுமையாக எதிர்த்த கதையும் உண்டு. கலை இலக்கிய துறையில் ரசனை என்பது ஒருகட்டத்தில் ,அடிப்படையில் தனிநபர் ரசனையை பொறுத்தது.

"காது உள்ளவர்களை எல்லாம் இசையை ரசிப்பதில்லை.  You must have not only an ear but it must be a musical ear " என்பார் மார்க்ஸ்.

எது எப்படி இருந்தால் என்ன ? இறுக்கமான நிலை தளர்ந்து இன்று திரைப்படம் பற்றி காரசாரமாகவும் .ஆக்க பூர்வமாகவும் விவாதிக்கிறோமே !

இந்த கிழவனுக்கு இது போதும் சரவணா !!!


Sunday, January 06, 2019





பன்றியொடு 

பசுங்கன்று !!!




அப்போது அந்த பெண் கவுசல்யாவிற்கு 19 அல்லது  20 வயது இருக்கலாம் உடல் வளர்ச்சி இருந்தாலும் மனதளவில் ஒரு சிறுமிக்கு உள்ள மன முதிர்ச்சி தான் இருக்கமுடியும். இந்தவயதில் அவருக்கு கிடைத்த எதிர்மறை அனுபவம் கொடூரமானது/

காதலித்து,பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்து ,பட்டப்பகலில் நடுவீதியில் கணவன் வெட்டி கொலை செய்யப்படுவதை கண் எதிரில் பார்த்து தடுக்க முயன்றதில் படுகாயப்பட்டு - அப்பப்பா ....

உலகமே இந்த காட்ச்சியை பார்த்து நடுங்கி யது .அபலையான அவரை சில இயக்கங்கள் ஆற்றுப்படுத்தி மீண்டும் மனுஷியாக்கியது சாதாரணமான விஷயமல்ல .தன வாழ்வை  சிதற \டித்த தன தந்தை தாயாருக்கு சிறைத்தண்டனை வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு அவரை போராளியாகஉருவாக்கிய வர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக மனதை தேற்றிக்கொண்டு ஆணவக்  கொலையையும்,பெண்கள் முன்னேற்றத்தையும்  முன்னிறுத்தி செயல்பட ஆரம்பித்த கவுசல்யாவை தமிழகம் போற்றிப்புகழ்ந்ததும் உண்மைதான்.    

சமீபத்தில் கவுசல்யா திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்த பொது அதை மனதார விரும்பி பார்த்த லட்சக்கணக்கானவர்களில்  நானும் ஒருவன் .23 வயதில் அந்தப்பெண்ணுடைய வாழ்க்கை முடிந்து விடவில்லை .பொது வாழ்க்கையில்  அவர் ஈடுபட்டு பல உயரங்களை தொட வேண்டும்  அதே சமயம் அவருக்கு முன்னால் அவருக்கு என்று தனியான வாழக்கை உள்ளது என்பதை உணர்த்தியவர்கள்  நன்றிக்கு உரியவர்கள் .

கவுசல்யாவுக்கும் -சக்தி என்பவருக்கும் நடந்த மறுமண நிகழ்ச்ச்சி எந்த சலனத்தையும் ஏற்படுத்தி இருக்கப்போவதில்லை. ஆனால் அவரை ஆதரித்த  இயக்கங்கள் இதனை விளம்பரப்படுத்தியது தான் சிக்கலை உருவாக்கியது .சக்தி பற்றிய அவரது தனிப்பட்ட வாழ்க்கை பகிரங்கமாக விவாதிக்கப்பட்டது . சக்திக்கு இதற்கு முன்  இருந் தொடர்புகள் பகிரங்கமாகின .திருநங்கை உட்பட பல பெண்களோடு அவருக்கு தொடர்பு இருந்ததுஅலசப்பட்டது .ஒரு பெண்ணை காதலித்து கற்பமாக்கியதும் ,அந்த கற்பத்தை கலைக்கச் செய்ததும் வெட்ட வெளிசத்திற்கு வந்தன.

இந்த விஷயங்கள் மறு மணத்திற்கு முன்பே கவுசல்யாவிற்கு தெரியும் என்பது அதிர்ச்சி  அளிப்பதாக இருந்தது.

மறுமணத்தை நடத்தியவர்களான குளத்தூர் மணி கதிர் போன்றவர்களுக்கும் இது தெரியும் என்றபோது கோபம் தான் ஏற்பட்டது>

ஒரு அபலையின் வாழ்க்கையை சீரமைக்க இன்னொரு அபலையை உருவாக்கிவிட்டார்களே !

பெரியார்சிலையையும்,அம்பேத்கார் சிலையையும் உடைக்க வேண்டாம் !

இந்தக்கொள்ளையில் சக்தி-கவுசல்யா மறுமணம் பற்றி பஞ்சாயத்து வேறு செய்திருக்கிறார்கள்.

தோழர் லெனின் மகளை மணந்து ,அவர் உயிரோடு இருக்கும் போதே வேறு பெண்களோடு தொடர்பில் இருந்த அந்த வீரம் செறிந்த போராளி பஞ்சாயத்து செய்தாராம்.

பெரியாரியத்தையும், அம்பேதகரியத்தையும் இதைவிட கேவலப்படுத்தமுடியாது !

நல்ல காலம் !

மார்க்ஸ் தப்பினார் !!!




Thursday, January 03, 2019

"ஏல !

நான் 

"சாணான்"தாம்ல"  !!! 




 மறைந்த  எழுத்தாளர்   சு.சமுத்திரம் சில நேரங்களில் "உணர்ச்சி" வசப்பட்டு பேசுவார் . 

 " ஆமாம்ல ! நான் சாணான் தான் ல ! confer பண்ணிட்டான் டே ! சு.சமுத்திரம் IRS ! நு ...ஒக்காண்ட !!!"


"ஏல ! அது மட்டுமா ? எங்க ஆத்தாளுக்கு அம்மை போட்டிருந்தது> என்னை பால் குடிக்க விடலை ! எங்க பனை  விடலைல வேலை செஞ்ச "இசக்கி "தான் தாய்ப்பால் ஊட்டினது .! நான் என்ன செத்தா  போயிட்டேன்."


இதைமேடைல பே சி இருக்காரு. !


இப்பம் கேரளத்துல நடக்கிறதுக்கு சமுத்திரம் இல்லையேன்னு நான் லாம் நினைக்கேன் .


"நான் "தீயர் " சாதிதான் எங்க அப்பா பனை ஏறி "கள்ளு " றஇறக்கினவருதான் .என் சகோதரர்கள் பனை ஏறிகள் தான்! நான் அதை எப்போதுமே மறைச்சதில்ல ! இன்னைக்கும் நான் பனை ஏறி கள்ளு  இறகணும்னு அவங்க நினைக்கங்க ! இதை எல்லாம் அவங்க மறந்துவிடுவது அவங்களுக்கு நல்லது" என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார் .


மார்க்சிஸ்ட் கடசியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல் படுகிறவர்களில் ஒருவர் தான்  பினாரயி விஜயன்..