Wednesday, July 31, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



"கே.எம்." அவர்கள் எழுதிய ,

"புதிய தலைமுறை "

நாடகம் .....!!!



1975 மாண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி  மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயமாகியது .அதன் ஆயத்த மாநாட்டில் தீக்கதிர் ஆசிரியர் கே>முத்தையா அவர்கள் எழுதிய "புதிய தலைமுறை "என்ற நாடகத்தை பீப்பிள்ஸ் தியேட்டர் காரர்கள் அரங்கேற்றினார்கள். 

சனாதன தர்மத்தில் ஊரிய புரோகிதர் அவர். அந்தணர்களை வீடுகளில் புரோகிதம் செய்து கடினமாக வாழ்க்கையை நடத்தி  வருகிறார் . அவர் மகன் பரந்தாமன்> அப்பாவி.பயந்த சுபாவம் உள்ளவன். அவனையும் புரோகித தொழிலுக்கு பழக்கி வருகிறார்.

தந்தைக்கு அடங்கி நடப்பவன் பரந்தாமன். "துஷ்டனை கண்டால் தூரவிலகு "என்று போதிக்கப்பட்டவன் .

அவன் பக்கத்தி வீட்டில் வக்கீல் ஒருவர் வசிக்கிறார்.அவருடைய மகள் இளம் விதவை .நல்ல படிப்பும் துனிச்சலும் உள்ள பெண்.வீட்டின் முலையில் உக்கார வைக்கப்ப்டுகிறாள். பரந்தாமன் வக்கீல் வீட்டிற்கு சென்று அவருக்கு உதவிகளை செய்வான். அவனுக்கு உள்ள ஒரே ஆறுதல் வக்கீலின் மகளோடு பேசி உலக விஷயங்கள் தெரிந்து கொள்வது தான் .அவர்களுக்கு இடையே ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

அந்த பெண் பரந்தாமனை அழைத்துக்கொண்டு பட்டணம் சென்று புதிய வாழக்கையை நடத்துகிறாள் .பரந்தாமன் பட்டணத்தில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறான் . தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டு மாறி வாழ்க்கையை சந்திக்கிறான்.

இந்தநாடகத்தில் புரோகிதர் பாத்திரமும்,பரந்தாமன்  பாத்திரமும் மிகவும் வித்தியாயசமாக படைக்கப்பட்டிருந்தது. புரோகிதருக்கு கண் அறுவை சிகிச்சை நடக்கிறது.ஆசாரமான அவர் மறுநாள் காலை குளிக்கிறர் .இது அவர் உடலை பாதிக்கிறது .கே.எம்.அவர்கள் இந்த பாத்திரத்தை காஞ்சி பெரியவர் சாயலில் படைத்திருப்பார்.

இந்த நாடகத்தை காஸ்யபன் இயக்கி இருந்தார். ராஜகுணசேகர் இசை அமைத்திருந்தார். "நான் வாழ்ந்து காட்டுவேன் "என்று வக்கீலின் பெண் பாடும் பாடல் புகழ் பெற்ற ஒன்றாக மாறியது.

 மதுரை மில் தோழலாளியான  துரைராஜ் இதில் சிறப்பாக செய்திருப்பார்.

 அப்பாவியான பயந்த பரந்தாமனாக காஸ்யபன் நடித்திருந்தார். அப்பாவி யாகவும்,பயந்தவனாவும் அன்று நடித்து வந்த டி .ஆர். ராமசந்திரன் பாணியில் காஸ்யபன் நடித்து அந்த பாத்திரத்துக்கு மெருகேற்றினார்.

அவர்நாடிப்பை பார்த்த இயக்குனர் ஆர்.செல்வராஜ் தான்  இயக்கிய "புதியஅடிமைகள் " படத்தில் காஸ்யப்பனை நடிக்க வைத்தார் . 

தமிழகம் முழுவதும் சுற்றி வந்த வெற்றிகரமான நாடகங்களில் இதுவும் ஒன்று.

 


  








Tuesday, July 30, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



மின் வாரிய சுந்தரம் எழுதிய 


"பிதாவே என்னை மன்னியும் "


நாடகம்...!!!



மின்சார வாரியத்தில் தொழிலாளியாக சேர்ந்தவர் தோழர் சுந்தரம் அவர்கள். அவர் எழுதிய நாடகம்  தான் "பிதாவே என்னை மன்னியும் "என்ற நாடகமாகும். மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸார் அரங்கேற்றிய நாடகங்களில் பாராட்டப்பட்ட நாடகங்களில் ஒன்றாகும்.

கர்த்தரின் மீது ஆழ்ந்த நமபிக்கையும்,திருசபையின் மீது அர்ப்பணிப்பும் கொண்டவர் அந்த பாதிரியார். தன பங்கு மாக்களை தினம் சந்தித்து அவர்களை ஜெபக்கூட்டங்களுக்கு வரும்படி செய்வார் . அந்த கிராமத்து மக்களும் பாதிரியாரிடம் மிகவும் பணிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்வார்கள்.

பாதிரியாரை உறவுப்பையன் அவரிடம் ஏதாவது விமரிசனமாக சொல்லுவான்.'பாவ மன்னிப்பு என்பது சரியல்ல. குற்றம் செய்தவன் தண்டனையைஅனுபவித்தே ஆகவேண்டும். அவனை மன்னிப்பது தவறு" என்று வாதிடுவான்.

"தவறு செய்யாதவர் மனிதர் எவர் உள்ளார். எல்லாருமே தவறு செய்தவர்கள் தான். பாவம் செய்தவர்கள்  தான். ஒரு பாவம் செய்தவன் மற்றோரு பாவியை எப்படி தண்டிக்க முடியும். அவனை மன்னிப்பதே சரி" என்று பாதிரியார் விளக்கமளிப்பார்.

அந்த கிராமத்தது பண்ணையார் ஜெபக்கூட்டத்திற்கு தவாறா மல் வருபவர். பாதிரியார் அவர் வருவதை பாராட்டி சொல்வார். பண்ணையார் சகலவிதமான குற்றங்களையும் செய்ப்பவர் .ஒவ்வொரு ஞயிரும் கூட்டம் முடிந்ததும் கூண்டிலேறி தன் பாவங்களை "ஒப்புவித்து " மன்னிப்பு கோறுவார்.கள்ளமின்றி மன்னி ப்பு கோரும் பண்ணையாரை பாதிரியாருக்கு நிரம்ப பிடிக்கும்.

அந்தவாலிபனோ    இதனை எதிர்ப்பான்.

பாதிரியாரின் தங்கை சீரழிக்கப்பட்டு இறந்து விட்டாள் . திருசபை கூட்டம் முடிந்ததும், பண்ணையார்,  கூண்டிலேறி அந்த பெண்ணை கற்பழித்ததையும்,கொலைசெய்ததையும் "ஒப்புவித்து " மன்னிப்பு கோருகிறான்.

திருசபையின் இருக்கும் சிலுவையின் முன்னால்  சென்ற பாதிரியாரை தன அங்கியை கழற்றி பீடத்தில் வைத்துவிட்டு "பிதாவே என்னை மன்னியும் "என்று கூறி கோவிலை விட்டு வெளியேறுகிறார். நாடகம் முடிவடைகிறது.

வெகுவாக விமரிசிக்கப்பட்ட பாராட்டப்பட்ட நாடகம் இது.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட நாடகம்.

ராஜ குண  சேகர் பாதிரியாராக நடிப்பார். பாதிரியாருக்கே உள்ள கம்பிரமும்,நெகிழ்ச்ச்சியும் பார்வையாளனை கட்டி போட்டுவிடும்.

இந்த நாடகத்தை அவரேதான் இயக்கவும் செய்தார் .

தமிழகம் முழுவதும் இந்த நாடகம்போடப்பட்டது. திண்டுக்கல்லில் பேகம்பூரில் போட்டபோது அந்த மக்களாராவரம் செய்து வரவேற்றனர்.

கோவையில் அந்த மக்கள் தலைவன் தோழர் ரமணி வெகுவாக புகழ்ந்தார் .

"சாமா ! உலகத்தின் முதல் புரட்ச்சியாளன் ஏசு பிரான் தான் " என்று    கூறி விளக்கினார்.

இந்தநாடகத்தை எழுதிய சுந்தரம் ஒய்வு பெற்று மதுரை அனுப்பானடியில் வசித்து  வருகிறார்.

சுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். 





 .




Monday, July 29, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )




E .M . ஜோசப் ,

மாணிக்கம் ,

ஆகியோரும் 

நடித்தார்கள்...!!!




கொஞ்ச்ம கொஞ்சமாக பீப்பிள்ஸ் தியேட்டர் அறிமுகம் தொடர்ந்தது. மதுரை நகரத்தில் தைக்கால் தெரு,செல்லூர்,திருப்பறம் குன்றம், என்று வீதிகளில் கொட்டகை போட்டு நாடகங்களை நடத்தினார்கள்.  

முதல் நாடகமான "நெஞ்சில் ஒரு கனல்  "நாடகத்தில் ஒரு கம்பெனி அதிகாரி வேடத்தில் அன்று மருத்துவராக இருந்த தோழர் தா.ச.ரசாமானி அவர்கள் நடித்தார்கள். சாதாரணமாக பேசும் பொது கூ ட கொச்சை  தமிழில் அவர் பேச மாட்டாரா.பண்டித தமிழ்த்தான் அவர் பேசுவார். அடுத்த முறை அவருக்கு பதிலாக எல்.ஐ.சி ஊழியர் தி.வி நாராயணன் நடித்தார்.

இந்தநாடகத்தில் இரண்டு மாணவர்கள் பாத்திரம்வரும்.அதில் உபேந்திரனும் ,கலையான சுந்தரமும் நடித்தார்கள்.நல்லஉயரமும் கம்பிரமான தோற்றமும் நடுத்தறவயதும் கொ ண்டு   அவர்கள் வருவதை பார்வையாளர்கள் ரசிக்கவில்லை. ஆகவே செல்லூரில்  நாடகம் போடும் பொது இ.எம்.ஜோசப்,அவர்களை நடிக்க வைத்தோம்.  பள்ளிமாணவனைப்போல் இருந்த அவர் கடசித்தமாக பொருந்தினார்.. மற்றோரு மாணவனாக மாணிக்கம் அவர்கள் நடித்தார்கள்.

பொது வாழ்க்கையும்,தொழிற்சங்க பாணியும் ஜோசப்  நாடகங்களில் நடிக்க முடியாமல் செய்து விட்டது.

மாணிக்கம் தன இறுதிக்காலம் வரை பீப்பிள்ஸ் தியேட்டரின் முக்கிய நடிகராக விளங்கினார்.

பிற்காலத்து,அசாக் என்ற குமரேசன் கதாநாயகனாக நடிக்க வந்தார்.

கிட்டத்தட்ட 25 வருடங்கள்  இயங்கி வந்த இதன் முக்கியமான நாடகங்கள் பற்றி எழுதவிருக்கிறேன்.  

Sunday, July 28, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



கட்சி காங்கிரசும்,

பீப்பிள்ஸ் தியேட்டரும் ....!!!




1971ம் ஆண்டு கடசி காங்கிரசைமதுரையில் நடத்த முடிவு செய்தது. "இநதியா புராவிலும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்>.தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக காலை நிகழ்ச்ச்சிகள் அமைய வேண்டும். ஒரு அருமையான நாடகத்த்தை போட வேண்டும் "என்று செயற்குழு உறுப்பினர் கே.முத்தையா அ வர்கள் கூறினார்கள்.

மாவட்டக் குழு எல்.ஐ.சி தோழர் நாராயண் சிங் அவர்களிடம் இந்த பணியை செய்யும்படி கேட்டுக்கொண்டது.

தனபால் பாண்டியன் ,மூ த்த எழுத்தாளர் ப.ரத்தினம், உபேந்திரநாத் ஜோஷி, காஸ்யபன்.மதுரை மில் , தொழிலாளிகள் துரைராஜ்,சேதுராமன்,  என்று ஒரு ஜாமாவை அழைத்து கே.எம் தலைமையில்  கூட்டம் போட்டார்.சிங்  அண்ணன் . 

இறுதியில் ரத்தினம் அவர்கள் எழுதிய திய நாடகத்தை போடுவதும்.அடா காஸ்யபன் இயக்குவது என்று முடிவு செய்தார்கள். 

நாடகத்தை ஒருகுழுவாக அமைத்து கடசி பின்புலமாக இருந்தால் நீடித்து நிலைக்கும் என்று காஸ்யபன் குறிப்பிட்டார்..

தனபால்பாண்டியன் தலை வராகவும், உபேந்திரன் செயலாளராகவும் குழு அமைக்கப்பட்டது.

வங்க நாடக நடிகர் உட்பல்  தத் அவர்களை பாலா ஈர்ப்பு கொண்ட காஸ்யபன் இந்த குழுவுக்கு "P eople's Theatre " என்றுபெயர்  வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.   

எல்லாரும் ஏற்றுக்கொண்டு அந்த பெயரில் குழு ஆரம்பமாகியது.

ரத்தினம் அவர்களை எழுதிய நாடகம் தான் "நெஞ்சில் ஒரு கனல்" என்ற முதல் நாடகமாகும்.

தனபால் பாண்டியன் கதாநாயகனாக வும்,துரைராஜபண்ணையாராகவும் நடித்தார்கள் . காஸ்யபன், சேதுராமன்,மின்வாரிய சுந்தரம்,கே.பி ஆறுமுகம் , ரங்கராஜ், என்று பலர் சேர்ந்தார்கள். ஒத்திகை மூன்று மாதம் நடந்தது.

அப்போது தன வங்கதேச விடுதலை போராட்டம் கடுமையான நிலையை அடைந்ததால் கடசி காங்கிரஸ் ஒத்திவைக்கப்பட்டது. நாடகக்குழு செய்வதறியாது திகைத்தது. குழுவின் மனதறிந்த நாராயண் சிங் இந்த நாடகத்தை வசூல்  நாடகமாக எட்வார்டு அரங்கத்தில் பட முடிவு செய்தார் .

அரங்கேறிய நாடகத்தை பத்த்ரிக்கைகள்புகழ்ந்தன. குறிப்பாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வி.டி. தாமஸ்  அவர்கள் மிகவும்சிறப்பான விமரிசனத்தை ழுடி இருந்தார்.பாரவையாளர்களின் பாராட்டும் சேர்ந்து கொண்டது .

இந்த நாடகத்தில் பிணமேடையை கவனிக்க எல்.ஐ சி தோழர்கள், ராஜகுணசேகர்,எஸ்.பி.கலயாணசுந்தரம், ராஜகோபால் ஆகியோர் வந்தனர்.பின்நாளில் ராஜ் குணசேகர்,நடிகராக ,சீஸை அமைப்பாளராக,இயக்குனராக பரிணமித்தாரா. கலையானி நடிகராக ,ஒப்பனைகலைஞராக மாறினார். 

பல்வேறு மாவட்டக்குழுக்கள் நாடகத்தை போட விரும்பின. கரூர் ,கோவை,திருப்பூர்,சேலம், தஞ்சை , நெல்லிக்குப்பம், நாகர் கோவில் என்று குழு தமிழகம் முழுவதும் அறிமுகமாயிற்று.   

பின் மேடை,திரைசீலை இசை ஒப்பனை என்று எல்லாவற்றையும் குழுவே செய்து கொண்டதால், மிகவும் குறைத்து சிலவில் நாடகங்களை போட முடிந்தது. இசைத்துறையில் சிறப்பாக பணியாற்றும் சந்திர சேகரன் (lic ) வந்து சேர்ந்தார்.

Lic  ஊழியர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர் சந்திர சேகரன்.

   




Saturday, July 27, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )






SAP  அவர்கள் ,

எழுதிய நாடகம் ,

"ரத்த புமி "...!!!



1946 லிருந்து 1951ம் ஆண்டுவரை நிஜாமின் தெலுங்கானாவில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினர். அந்த தள நாயகன் பி.சுந்தரய்யா இந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு "தளபதியாக " இருந்து செயலாற்றினான் ."The Thelugana Strugle என்ற நூலையும் எழுதினான்.

அதனைப்படித்த தோழர்  SAP அதிலிருந்து ஒரு சிறு பொறியை எடுத்து வீரமிக்க நாடகமாக்கினார்.அதுதான் "ரத்தபூமி " .

நிஜாமின் ஆடசியில் விவசாயிகள் ரயத்துவாரி,மற்றும்ஜமிந்தாரி முறையில் இருந்தனர். ஜமீன்தார்,ஜாகிர்தார்,நவாபுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்கள்.அந்த நிலத்தில்ப்பாயும்,நதி,நீர்நிலைகள் ,மலைகள்,மரங்கள்,காடுகள் ,விலங் குகள்,பறக்கும் பறவைகள், ஏன் வாழும் மனிதர்கள் உட்பட அவர்களுக்குச சொந்தம்.

அந்த மனிதர்கள் கொடூரமாக சுரண்டப்பட்டனர். பெண்டு பிள்ளைகள் சீரழிக்கப்பட்டனர். அப்படி வாழ்ந்த ஒருகிரமாத்து சிறுவன் இந் தகொடுமை பிடிக்காமல் எழுகிறான்> "குமரய்யா "  என்ற  அவன் வா லிபனாகும் பொது இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி போராட முடிவு செய்கிறான்.

ஆரம்பத்தில் நிஜாமின் கூலிப்படையை எதிர்த்து போராடும் அந்த மக்கள்  சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய ராணுவத்தை எதிர்த்து போரிடுகிறார்கள்.

குமரய்யாவின் போராட்டத்தை சித்தரிக்கும் நாடாகம்தான் "ரத்த பூமி "

தீர மிக்க இந்த நாடகத்தை எம்பிஆர்  இயக்கி இருந்தார்.உணர்சசி கரமான வசனமும் கதை அமைப்பும் கொண்டிருந்தாலும் , தமுக்கம் கலையரங்கின்  "போதாமை"யால் நாடகம் சோபிக்காமல் போயிற்று.

ஆனாலும் எம்பிஆர்  முழு நீள நாடக வடிவத்தையும் கைக்கொண்டார் என்பதற்கு "ரத்த பூமி" சாடசியாக திகழ்கிறது.  

இந்த சமயத்தில் தான் 1971ம் ஆண்டு மார்க்சிஸ்ட்  கட்ச்சி தன அகில இந்திய மாநாட்டை மதுரையில்  நடத்த முடிவு செய்தது.

அதனையொட்டி"People's  Theatre "மக்கள் நாடக மன்றம் என்ற குழு ஒன்றும் உதயமாகியது.


Friday, July 26, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )




"Real Theatre என்ற 

நிஜ நாடகமும் ,


ஸ்தானிஸ்லாவ்ஸ்கியும்...."

உலகப்புகழ் பெற்ற நாடக வியலாளர் தான் கான்டன்டைன் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி . 1863ம் ஆண்டில் பிறந்த அவர் புரட்ச்சிக்கு முன்னும்,பின்னும் ரஷ்யாவில் வாழ்ந்தவர்.

செகோவ்,புஷ்கின் ,டால்டாய் ஆகியவர்களை விரும்புபவர். செகாவின் நாடகங்களை இயக்கி நடித்தவர்புகழ் பெற்ற மாஸ்கோ ஆர்ட் தியேட்டரை உருவாக்கியவர்.

அவர் எழுதிய Theaory of Acting என்ற நூல் இன்று உலகம்பூராவிலும் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது. நாடக யுக்திகள் பலவற்றை பரிசோதனை செய்தவர்.

ஒரு நாடகத்தில் பிரும்மாண்டமான கோட்டை ஒன்றை சித்தரிக்க வேண்டியதிருந்தது .பழைய கோட்டை ஒன்றை விலைக்கு வாங்கி,அதன் மதில் சுவரை அப்படியே பெயர்த்தெடுத்து மேடையில் நிறுவினார்> நிஜமான கோட்டையை பயன்படுத்தியதால் அந்த வகை  நாடகங்களுக்கு  RealTheatre என்று பெயர் சூட்டினார்.

பார்வையாளர்களும்,விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் நாடககத்தைப் பார்த்து பிரமித்தனர்.பிரும்மாண்டமான கோட்டையை புகழ்ந்து எழுதினர். பாராட்டினார்.

பாவம் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியோ நொந்து நூலாகிப்போனார் . அற்புதமான கதை,அருமையான கருத்து,சிறந்த நடிப்புஇவற்றைமறந்து பார்வையாளர்கள் கோட்டைசுவரை  ப்புகந்தது அவருக்கு பிடிக்கவில்லை.அத்துனையும் வீணாகிவிட்டதே என்று நினைத்தார்.

தன அடுத்த நாடகத்தில் இதனை மாற்றினார்.மேடையில் மிகவம் அழகான ,நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு ஜன்னலை வைத்தார்.

"பார்வையாளர்களே ! இந்த ஜன்னல் ஒருகுறியீடு ,இந்த ஜன்னல் இவ்வளவு என்றால் இந்த  அரண்மனை எவ்வளவு அழகாகாயிருக்கும், அது இருக்கும் கோட்டை எப்படியிருக்கும் என்பதை உங்கள்கற்பனைக்கு விட்டு விடுகிறேன் என்று ஆறிவித்ததுவிட்டு நாட கத்தை நடத்தினார் இதற்கு symbolic theatre என்று பெயர்வைத்தார்."

இதனை எனக்கு விள க்கிக் கூறிய ராமானுஜம் அவர்கள் " நான் வகுப்பு எடுக்கும் பொது real thaeatre என்பதை   நிஜ நாடகம் என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன் அதனால் வந்த குழப்பம் தான் இது.மேடையின் நிஜம் அல்ல முக்கியம்.நாடகம் சொல்லும் பிரச்சினைகளின் நிஜம் தான் முக்கியம்" என்று விளக்கினார்.

எம்.பி ராமசந்திரன் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி தோழர்களை இணைத்து மதுரை நகரத்தையே கலக்கிக் கொண்டிருந்தார். ரகமத்,ஜீவா,குமரேசன் என்று ஒரு ஜமா அவரிடம் இருந்தது.மதுரை  தெருக்களில் ஏதாவது ஒன்றில் இவர்நாடகம்நடக்காத நாள்  இல்லை என்று  ஆகியது.

 எம்.பி,ஆர் முழு நீள  நாடகங்களையும் போட்டார்.

அவற்றில் மிகவும் முக்கியமானது SAP அவர்கள் எழுதிய 

"ரத்த பூமி "

என்ற நாடகமாகும் .

  

    

Thursday, July 25, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



"தேசிய நாடக பள்ளியின் ,


பட்டறை ........"



"தேசிய நாடக பள்ளி காந்தி கிராம் பல் கலைக்கழகத்தில் ஒரு பட்டறையை நடத்துகிறது.உ ங்களை ஒரு மாணவராகசேர்த்துள்ளேன் " என்று ராமானுகம் அவர்கள் எனக்கு தகவல் அனுப்பி ஒருந்தார். 76-77 ஆண்டாக இருக்கலாம்..நான் முத்த தோழர்  கே.முத்தையா அவர்களிடம் சொன்னேன்.

பொங்கய்யா! போங்க ! என்ன னு தெரிஞ்ச்சுக்கிடலாம் " என்று அவர் கூறினார்.மதுரையின் மூத்த எழுத்தாளரான ப.ரத்தினம் அவர்களும் நானும் அதில் கலந்து கொண்டோம்.   

எங்களோடு ஜெயந்தன், ஷாஜகான் கனி, மாணவர் மு.ராமசாமி ஆகியோரும் சேர்ந்தனர். பின்னாளில் தமிழ் திரையுலகில் சிறந்த கலை இயக்குனரான கிருஷ்ன மூர்த்தி ,தெலுங்கு  நடிகரான சாயநாத் (அப்போது 20 வயது ) என்று வந்தனர்.

ஆத்யம் ரங்காச்சாரி, பி.வி காரந்த் ,பிரேமா கராந்த், குரூப், பிரசன்னா ஆகியோர் வகுப்பு ஆசிரியர்களாக இருந்தனர்> ராமானுஜம்,மற்றும் எஸ்.பி சீனிவாசன் முழூ  வகுப்புகளையும் நிர்வாகித்தனர் .அந்த ஆண்டுதான் பட்டம் பெற்ற ராஜு ( ஒப்பனை ) உதவியாக இருந்தார்.

நாடக பிரதி எடுத்தல்,இயக்கம்,நடிப்பு, ஒப்பனை, பின் மேடைநிர்வாகம்,,நிறம் என்று பலதலைப்புகளில் வகுப்புகள் நடந்தன.

துன்பவியல்,இன்பவியல், நகைசுசுவை, அபத்த நாடக வகைகளும் அறி முகம் செய்யவிக்கப்பட்டது.

பத்து நாள் பயிற்சி முடிந்ததும், மதுர காந்தி கண்காட்ச்சி அரங்கில், குருப் எழுதிய "காங்கேயன் " நடக்க ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் பயிற்சி மாணவர்கள் தயாரித்த ந.முத்துசாமியின் நாற்காலி காரர்கள் என்ற நாடகம் அரங்கேறியது.காஸ்யபன் நாற்காலிக்காரராக நடித்தார்.

ஒருவாரம் கழித்து ராமானும்   அவர்கள் தலைமையில் மதுரை மாணவர்கள் கூடினோம். மதுரையில் நாடகங்களைப்போட ஒரு அமைப்பை உருவாக்கினோம். அதனை நிர்வாகியாக மாணவர் மு.ராமசாமியை இணைத்தோம்.

ராமசாமியின் மேற்பார்வையில் மதுரையில் தெருநாடகங்கள் போடப்பட்டன.ராஜாஜி பூங்கா,சாந்திநகர், பல்கலை,மற்றும் பாத்திமாக்கல்லூரி  வளாகம் ஆகியவற்றில் நாடகங்கள்  போடப்பட்டன.

மதுரையி பென்னர் -காக்கில் என்ற பிரிட்டிஷ் கம்பெனி இருந்தது.அந்த கம்பெனி தொழிலாளர்களின் தலைவராக எம்.பி ,ராமசந்திரன் இருந்தார்.மார்க்சிச கட்சி உறுப்பினறான அவர் தெருநாடகங்களை போடுவார்> தன்  நடக்குழுவுக்கு நிஜ நடக்க இயக்கம் என்று பெயர்வைத்திருந்தார்.மக்களின்பிரசினையை நாடகம் மூலமாக கொண்டுசெல்வது அவருடைய நோக்கம்.

தெரு நாடகங்களை போட்டுக்கொண்டிருந்த மு.ராமசாமி அவர்கள், இந்தப்பெயரை எம்.பி ஆர் வைப்பது சரியா என்று கேள்வி எழுப்பினார்.

இதனைப்பற்றி ராமானுஜம் அவர்களை கலந்து கொள்வது என்னு முடிவு செய்தென். 








Wednesday, July 24, 2019


(நாடக விழாவை முன் நிறுத்தி )



"பேராசிரியர் ராமானுஜம் அவர்களின் ,

"புறஞ்சேரி " 


நாடகம் ......!!"



நெல்லைமாவட்டம் நான்குனேரியை சேர்ந்தவர் ராமானுஜம் அவர்கள்.தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட குடும்பம்.இடதுசாரியான  "ஆராய்ச்சி " வானமாமலையின் உறவினர். சென்னையில் பிரபலவக்கீ லான என்.டி . வானமாமலையின் நெருங்கிய உறவினர். காந்திய கொள்கையில் ஈடுபாடு கொண்டு கதர் இயக்கத்தின் முன் நின்றவர்.காரல் மார்க்ஸை நேசிப்பவர்.

கேரளத்தின் வாலிபர் சங்கம்,மாணவர் இயக்கம் ஆகியவற்றிற்கு நாடக பயிற்சி அளித்தவர். தமிழ் நடக ஆர்வலர்களை நவீன நாடகவியல் பால் ஈர்த்தவர்.எஸ்.பி.சீனிவாசன் அவர்களோடு இணைந்து காந்தி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் செயல்பட்டவர்.

"புறஞ்சேரி"  சிலப்பதிகாரத்தின் ஒரு சிறு துண்டை கதைக்களமாகக் கொண்டது.மாதவியிடமிருந்த வந்த கோவலனை அழைத்துக்கொண்டு கண்ணகி புதிய வாழவை தேடி மதுரை வருகிறாள்.கவுந்தி அடிகளின் உதவியோடு மதுரையின் வடபகுதியில் உள்ள இடையர் சேரியில் தங்குகிறாள்.

சேரிப்பெண்களுக்கு கண்ணகியும், கோவலனும் ரதியும் மன்மதனுமாக தென்படுகிறார்கள்.அங்கு வசிக்கும் நிமித்தக கிழவனுக்கோ அவர்களின் வருகை நல்லசகுனமாக படவில்லை. பாண்டிய நாட்டிற்கு இவர்களால் தீங்கு வரும் என்று கணிக்கிறான் . 

புதிய வாழ்வை தேடிவந்த கண்ணகியை ஊழ் புரட்டிப்போடுகிறது. இந்தப்பகுதியை மட்டும் ராமானுஜம் நாடகமாக்கி இருந்தார். 

நாடகம் ஆரம்பமாகும் பொது கட்டியங்காரன் வந்து அறிமுகப் படுத்துவான். நாடகம் முடியும் பொது கட்டியங்காரன் மங்கள வாழ்த்து பாடாமல்  திரையினை   மூடாமல் நாடகம் முடிந்தது என்று அறிவிப்பான்.

அவசர நிலைக்காலத்தில் நடத்தப்பட்ட நாடகம். வாழும் உரிமை கூட  மறுக்கப்பட்ட நிலையில் நான் மங்கள ஆரத்தி பாடலை பாடமாட்டேன் . என்று இந்தநிலை மாறுமோ அன்றுதான் நான் வாழ்த்து    பாடுவேன் என்று கட்டியங்காரன் கூறுவதோடு நாடகம் முடியும்.

கட்டியங்காரனாக ஜெயந்தன்  நடித்தார். சேரி மனிதராக மு.ராமசாமி மிக சிறப்பக நடித்தார்.காஸ்யபன் கோவலனாகவும் ,காந்தி பல்கலை ஆசிரியர் கண்ணகியாகவும் நடித்தனர்

பேராசிரியை டாக்டர் குருவம்மாள் கவுந்தி அடிகளாக நடித்தார்.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுங்களுக்கு முன் எர்ணாகுளத்தில் நடந்த தேசிய நாடக விழாவில் நடிக்கப்பட்டது "புறஞ்சேரி" .

       


Tuesday, July 23, 2019



(நாடக விழாவை முன் நிறுத்தி )



"நாடகமல்லாதவற்றை ,

நாடகம் என்று ,

நம்பி ......."




70ம் ஆண்டுகளின் முற்பகுதியில் "உதயம் " என்று ஒரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது .அதில் வெங்கட் சுவாமிநாதன் ஒருகட்டுரையில் "நாம நாடகமல்லாதவற்றை நாடகம் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் " என்று குறிப்பிட்டிருந்தார்.

நாடகத்தில்  எதோ சாதித்திக்கொண்டிருக்கிறோம் என்று கர்வப்பட்ட என் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இநதிய நாடகம் என்பதுஅந்த பிரிட்டிஷாரை பார்த்து அவர்களின் நாடகபாணியில் "கொச்சையா"க நகலெடுத்த "பார்சி" நாடகபாணிதான் என்ற கருத்தை அவர் சொல்லியிருந்தார். 

குவைத்  நாட்டிலிருந்து வந்திருந்த "அல்காஸி " என்ற நாடக வியலார் இந்திய நாடகங்களின்  பற்றி சொல்லியுள்ளார்.

" இந்திய நாடகத்தின் தந்தை  இரு கருதப்படும் அஸ்வகோஷ்  கிரேக்க இந்திய கலப்பினத்தின் வாரிசு ஆவார் . பிரிட்டிஷ் நாடகங்கள் வருவதற்கு முன்பே இங்கு "காளிதாசனின் அபிஞன சாகுந்தலம் " இருந்தது .சம்ஸ்கிருத  நாடகத்தில் நாடக மேடையில் எதை காட்டக்கூடாது என்று  இலக்கணம் எழுதி இருந்தார்கள்.நாடகத்தில் கதாநாயகன் எட்டு வகைதான்,கதாநாயகி எட்டு வகைதான் என்று நிர்ணயம் செய்து இருந்தார்கள்.

இந்திய நாடகத்தின் மரபு என்பது கேரளத்து கதகளியில், தமிழகத்தின் கூத்துமுறையில்,தெலுங்கு புற்ற  கதா வில்,மராட்டியத்தில் லாவணி ,தமாஷாவில் உள்ளது என்பதை சொன்னவர் அல்காஸி.   

இந்திய நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்ய நினைத்த பண்டித ஜவகர்லால் நேரு தேசிய நாடக பள்ளியை ஆரம்பித்தார் .அதன் தலைவராக அல்காஸியை  நியமித்தார்.

அப்படி தேசிய நாடக பல்கலையில் படி த்தவர்களில்  பேராசிரியர் ராமானுஜம், பிரசன்ன போன்றவர்கள் புதிய நாடகவியலை Dramatics கற்றுக்கொடுக்க ஆரம்பித்தரக்ள்.

தேசிய நடக்க பயிற்சிப்பள்ளி யின் வகுப்பில் தமிழக நாடக செயல்பாட்டாளர்கள் சிலரை படிக்க வைத்தவர் ராமானுஜம் அவர்கள். 

அந்த  முதல்பட்டறையில்,ஜெயந்தன், மு.ராமசாமி, ப .ரத்தினம் ஆகியோரோடு காஸ்யபனும் பயிற்சி பெற்றார். 

ஆண்டுதோறும் நடைபெறுமதேசிய நாடக விழாவில் ராமனுஜம் அவர்கள் இந்த மாணவர்களை வைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

"புறஞ்சேரி" என்ற அந்த சிலப்பதிகார நாடகத்தில் ஜெயந்தன்,மு,ராமசாமி ஆகியோர் நடித்தனர் .எர்ணாகுளத்தில்நடந்தஇந்தநாடகத்தில் காஸ்யபன் கோவலனாக நடித்தார்.

அடுத்து   "புறஞ்சேரி " பற்றி எழுதுகிறேன். 

  

Monday, July 22, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )





ஓவியர் புத்தன் ,

இயக்கிய ,

" செவ்வானம் "நாடகம்....!!! 



மதுரை மேலமாசி வீதியில் நாங்கள் இளந்தாரிகள் கூடி வம்பளப்போம். அப்போது மதுரையயில் கர்ணன்  என்ற எழுத்தாளரிருந்தார் அவரும் கலந்து கொள்வார் . வம்பளப்பு என்றால் எம்.ஜி.ஆர்   ,சிவாஜி,ஜெமினி ,ரஜினி,கமல் என்று அல்ல !

ஓ ஹென்றியையும், மாப்பாசானயும் விவாதிப்போம். சாமர்செட்மாம் அவர்களையும் அலெக்ஸ்சாண்டர் டுமாசையும் விமரிசிப்போம். செகோவையும் தி.ஜ.ரா வையும் ஒப்பு நோக்குவோ.ம். அண்ணாவின் நாடகங்களையும், தோப்பில் பாசியின் "நிங்கள் என்னை கம்யூனிஸ்ட்டாக்கி " நாடகத்தையும் அலசுவோம்.புத்தனும் மற்றவர்களும் கலந்து கொள்வார்கள் .

மதுரை குதிரை வண்டிக்காரர்கள் சங்கம் என்று இருந்தது அதன் தலைவர் "பூச்சி" என்ற தோழர்> அவர கட்சியின் மாவட்டக்குழுவிலிருக்கிறார். பி ராமமூர்த்தியின் மணிவிழா வருகிறது.அதனை சிறப்பாக கொண்டாட கடசி முடிவு செய்திருக்கிறது என்று கூறினார்>

எங்களுக்கு உற்சாகம் பீறிட்டது> அந்தவிழாவில் நாடகம் போடுவது என்று முடிவுசெய்தொம். புத்தன் இயக்கம். கே.முத்தையாவின் "செவ்வானம் "நாடகம்.

நடிகர்களிருக்கட்டும் . அதற்கான நிதி ஆதாரம். ?

மதுரையில் அப்போது "கருடா சிட பண்டு " கம்பெனி இருந்தது. அதன் தலைவர் ராதாகிருஷ்னான் . இளைஞர்.கலைஇலக்கியம், முற்பாயோக்கு என்று ஆசைப்படுபவர். புத்தனுக்கும் தெரிந்தவர் .அவர்  கதாநாயகனாக நடிக்க சம்மதித்தார்> ஒத்திகை ஆரம்பமானது>

இந்த நாடகத்தில் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டர் பாத்திரம் உண்டுகளையான முகத்தோடு வாட்ட சட்டமான நபரை தேடினோம். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர்  தனபால் பாண்டியன் நல்ல களையான முகமும் உயரமும் கொண்டவர். முடியாது என்று அவர் "கதற  கதற" அவரை நடிக்க வைத்தோம்..

கீழ் வானில் செம்பருதிக் கோளம்  - இது 
          கிழக்கெல்லாம் சிவப்பாகும் காலம் !
தாழ்வான மனிதகுலம் வெல்லும் _ மக்கள் 
           தர்மத்தின் கை  ஓங்கி நில்லும் 

என்ற புகழ் பெற்ற பாட்டோடு அந்த நாடகம் அரங்கேறியது .

இதே நாடகத்தை மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸார் தமிழக மெங்கும் நடத்தினர்.தனபால் பாண்டியனின் தமபி எல்.ஐ.சி ராஜ குண சேகர் கதாநாயகனாக நடித்தார்> பின்னாளில் மதுரை  அமெரிக்கன் கல்லூரி மாணவர் குமரேசன் நடித்தார்> பட்டப்படிப்பு முடிந்தபின், குமரேசன் சென்னையில் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்> சக்கரவர்த்தி என்று பெயரை மாற்றிக்கொண்டு நடித்தார். இயக்குனர் செல்வராஜ் அவர்களின் "பொண்ணு ஊருக்கு புதுசு "என்ற படத்தில கதாநாயனாக நடித்தார்.


 

Sunday, July 21, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )


பி.ஆர் அவர்கள் 

நடித்த  

நாடகம்...!!!




1947 ஆகஸ்டு 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. அந்த விடுதலைக்காக போராடி,அடிபட்டு மிதிபட்டு பிரிட்டிஷ்  போலாரிஸாரின் அடக்குமுறையால் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் காரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதேசமயம் சிறையில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஆயிரக்கணக்கில் அந்த ஆகஸ்டு 15 ம் தேதி சிறையில்தான் இருந்தனர்.

பல்வேறு வழக்குகளில் அவர்கள் சிறைத்தண்டனை  வழங்கப்பட்டு சிறையில் இருந்தனர்.அந்த இளம் தோழர்களின் மன உறுதியை தளரசசெய்வதுதான் ஆட்ச்சியாளர்களின் நோக்கம் .

இதனை மாற்றி அமைக்க சிறைக்குள்ளே கடசி தலைவர்கள் பலநடவடிக்கைகளை  எடுத்தார்கள்.

தன வாழ்க்கையில் 9வருடம் சிறையிலும் மூன்று வருடம் தலைமறைவாகவும் இருந்து வாழ்ந்தவர ஐ.மாயாண்டி பாரதி . அவரருகில் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்களில் நானும் ஒருவன்.

"சாமா ! ரயில்ல ஏறினா "பெயில் ". "வான் " ல ஏறினா " ஜெயில் "அதுதான் அன்றைய வாழ்க்கை .என்பார் ஐமாபா. 

"எழுத படிக்க வகுப்புகள் நடக்கும். தமிழ் தெரியும்னா இங்கிலீஷ வகுப்பு நடக்கும். பாட  சொல்வாங்க . பாடல் எழுத சொல்வாங்க. கவிதை  போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு பொட்டி  நடத்துவாங்க." 

"சு.பாலவிநாயகம் னு ஓத்தார் இருந்தாரு.நெல்லை மாவட்டத்துக்கறாரு .தர்க்க வியல் பொருள்முதல் வாதத்தை குழந்தைக்கு பாலாடைல போட்டு தரமாதிரி வகுப்பை எடுப்பரூ. நம்ம என்.எஸ், பி ஆர் னு எல்லாரும் வகுப்பு எடுப்பாங்க ."

"நான் சும்மா இருப்பேனா. நாடகம் போடணும்னு ஆரம்பிச்சென் . பகத்சிங்  பற்றி எழுதி இருந்தேன். அத போடணும்னு ஆசை. எஸ்.பி.வி கிட்ட சொன்னேன்> அது பி ஆர் காதுக்கு போயிட்டு."

"நாடகம் புதுசா எழுத சொன்னாரு. நம்ம பெரிசு தான் எழுதித்து"

"யாரு பி;ஆரா?"

"இங்க பெரிசு யாரு. முத்தையா தானே "

"அவரும் அப்பா ஜெயிலதான் இருந்தாரு."

"9 சீன் வரமாதிரி ஒருமணிநேர நாடகத்தை எழுதினார். நடிகர்கள் வேணுமே. அப்பம் பி.ஆருக்கு 35 அல்லது 40 வயசுக்குள்ள இருக்கும். ஜம்முனு இருப்பாரு. ரெண்டு உதடும் சேர்ந்துக்கிட்டு மூக்குமுழியுமா இருப்பாரு,முகத்துல ஒரு சுழி இருக்கும்.என்ன ? கால்கள்தான் கொஞ்சம்  விந்தி நடப்பது. மற்றப்படி நடிக்க முடியும். நான் சும்மா யிருக்காம கதாநாயகன் பி ஆர் னு சொன்னேன். கூட இருந்தவங்க புறாவும் கைதட்டல் ஆதரிசங்க."

"பின்னால 60கள்ல  முத்தையா90 சீன்  கொண்ட   நாடகமாக்கி அபுத்தகமா போட்டாரு." என்று ஐமாபா முடித்தார்.

1968-69 ம் ஆண்டு பி.ஆர் அவர்களின் அறுபதாம் ஆண்டுவிழா  நடந்தது .அந்தவிழாவில் மதுரை ஓவியர் புத்தன்  அதேநாடகத்தை மூன்றுமணிநேரம் நடத்தினார். 

"செவ்வானம் " என்ற அந்த நாடகம் பற்றி அடுத்து எழுதுகிறேன்.

   

 

 

Wednesday, July 17, 2019


(நாடக விழாவை முன் நிறுத்தி )



"பொன் மலை "

என்ற அந்த 

புண்ணிய பூமியில்....." 



தென்  இந்திய ரயில்வே ,எம்எஸ் எம் ,பி என் ஆர் ரயில்வே என்று இந்தியாமுழுவதும் பிரிட்டிஷ் காம்ப்பெனிகள் வசம் இருந் ரயில்வே துறையை நாட்டுடைமையாக்க  வேண்டும் என்று ரயில்வே தொழைலாளர்கள் போராடினர்.அமைச்சர் கோபாலசாமி அய்யங்கார் உலகமே வியக்க இந்திய ரயில்வே துறையை உருவாக்கி நாட்டுடைமை ஆக்கினார்.


இதற்கான வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் தென் இந்திய ரயில்வே தொழைலாளர்கள் சங்கமாகும். அதன்  கேந்திரமான தலைமை இருந்த இடம் தான் அந்த புண்ணிய  பூ மியான பொன்மலை .


பி.ராமமூர்த்தி, அனந்தன் நமபியார்,பரமசிவம், உமாநாத் ஆகியோரின் பாதங்கள் பட்ட புழுதிமண்ணைக்கொண்டது அந்த நகரம். தொண்ணுற்று ஆறு வயதில் கம்பத்தில் ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கும்  அப்துல் வஹாப் (அத்தா ) அலுவலக செயலாளராக பணியாற்றிய சங்கம் அங்குதான் இருக்கிறது.   


அந்த தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுவிழாவில் கலை நிகழ்சசிகளை நடக்கும் அதில் போட்ட நாடகம் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது.


அது "முன்மேடை" நாடகம் . நாடகம் ஆரம்பிக்கும் பொது முன் மேடையில் ஒரு பெண் அமர்ந்து பூக்களை தொடுத்துக் கொண்டே பாடுவார். பின் மேடையில் நாடகம் ஆரம்பமாகும். நாடகம் முடியும்போது பாட்டும் முடியும்.

"பாட்டு முடியும்முன்னே " என்ற இந்த நாடகத்தை எழுதியவர்  அன்றைய மாணவர் இயக்கத்தை சேர்ந்த டி .செல்வராஜ்.


நெல்லை மதிதா கல்லூறியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம்பயின்றவர் .

பின்னாளில் தா.மு,எ .சாவை ஆரம்பித்த முன்னோடி.    சாகித்திய விருது பெற்ற முத்த எழுத்தாளர் .


இந்த நாடகத்திலகதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர் என்.என்.கன்னப்பா.

"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி " என்ற பிரபலமான பாட்டை பாடியபடி ஆடும் அஞ்சலி தேவி  யோடு கதாநாயகனாக நடித்த"டவுண்  பஸ் "படத்தில் கதாநாயகனாக் நடித்தவர் .அன்றைய வசூல் சக்ரவர்த்தி.அவரை ஒரு கம்யூனிச களோடு நாடகம் போடுகிறார் என்ற காரணத்தினாலே ஓரம் கட்டப்பட்டவர்..


பின்னாளில் தோழி ல் முறை நாடகத்தில் பணியாற்றினார்.கோவையில்  மார்க்சிஸ்ட்  கடசி  நடத்திய அரசியல் மாநாட்டில் அவர் அரிச்சந்திர மயான காண்டத்தை ஒருமணிநேரம் நடத்திக்காட்டினார் .ஒரே நடிகர் அந்த ஒருமணிநேரம் பார்வை யாளர் களை கட்டிப்போட்டது நினைவை விட்டு அகலாது.

இந்த நாடகத்தில் நடித்த இன்னொரு திரைப்பட நடிக்கர் டி .கே .பாலசந்தர் . 

இ வரும் ஓரம் கட்டப்பட்டார்.


இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர் தர்மாம்பாள்  என்பவர்.


ஆம் !மறைந்த முதல்வர் முகருணாநிதி அவர்கள் "எனது மகள் கனிமொழியின் தாயார் தர்மாம்பாள் " என்று சட்டமனறத்தில் அறிவித்தாரே அதே தர்மாம்பாள்  தான்.


தூத்துக்குடியிலிருந்து தேர்வாகி திமு.க வின் நாடாளுமனற உறுப்பினராக உள்ள  கனிமொழி அவர்களின் தாயார் ராசாத்தி அம்மாள் தான அந்த நடிகர் .


ராசாத்தி அம்மையாரின் பூர்வாசிரம பெயர் தர்மாம்பாள்.





Monday, July 15, 2019




(நாடக விழாவை முன் நிறுத்தி )




"செம்மலர்" நாடக குழுவும்,

கவிஞர்  வேலுசாமியும் ...." 



(த.மு.எ .ச உருவாவதற்கு முன்பே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பண்பாட்டுத்துறையில் பலர் செயல்பட்டு வந்தனர் .அவர்கள் பற்றிய தரவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதனை முத்த தோழர்களா ன உங்களைப்போன்றவர்கள் பதிவு செய்யக்கூடாதா என்று என்னை பலர் கேட்டுவந்தனர் .இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் செய்திருக்கலாம் .. இப்போது புலம் பெயர்ந்து வந்து தமிழில் பேசக்கூட ஆளில்லாதநிலையில் எழுத ஆரம்பிக்கிறேன். சம்பவங்கள் உண்மைதான் என்றாலும், பெயர்,காலம் ஆகியவற்றை நினைவுகளின் உதவியால் தான் எழுத்து கிறேன். தவறிழைக்க வாய்ப்பு உண்டு. )

கோவை மாவட்டத்தில்  அந்த மாபெரும் தலைவன் கே.ரமணி தலைமையிலொரு சிறு குழு  பண்பாட்டு தளத்தில் செயல்பட்டு வந்தது.கம்பராயன்,டாக்டர் பாலகிருஷ்ணன், கவிஞர் வேலுசாமி என்று அவர்களில் பலர் உண்டு.

மறைந்த கவிஞர்  வேலுசாமி "செம்மலர் " என்ற நாடக குழுவை நடத்திவந்தார்.

"தானம் " என்ற நாடகம் அதன் முக்கியமான நாடகங்களில் ஒன்று.

தெலுங்கானாவில் விவசசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியை நட த்தினார்கள் . 1946ம் ஆன்டிவிலிருந்து 1949 ஆண்டுவரை ஜமீன்தார்கள்,நிலச்சுவான்தார்கள், மிட்ட மிராசுகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி நிலமற்ற விவசாயிகளிடம் பிரித்து கொடுத்தார்கள். மூன்று ஆண்டுஅந்த புரட்ச்சிகர ஆடசிநடந்தது. பின்னர் நேருவின் காங்கிரஸ் ஆடசி புரட்ச்சியாளர்களை ராணுவத்தின் உதவியோடு அழித்து ஒழித்தது.

தெலுங்கானா புரட்ச்சியின் வெற்றி இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு பரவி டக்கூடாது என்பதில்மத்திய அரசு எசசரிக்கையாக இருந்தது.இந்திய மக்கள்  திரளில்  விவசாய கூலிகள் அதிகம் அவர்களுக்கு நிலம்  அளிக்க்கப்படவேண்டும். வன்முறை மூலமாக அல்ல . அஹிம்சை முறையில் நிலவுடமையாளர்களிடமிருந்து நிலத்தை தானமாக பெற்று அதனை கூலி  விவசாயிகளுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். அதற்காக "பூமிதான் "இயக்கத்தை உருவாக்கினார்கள். அந்த பவுனார் ஆசிரமத்து சாமியார் வினோபா அவர்கள் தான் இதனை தலைமை தாங்கி நடத்தினார். இந்தியா புறாவும் சுற்றி நிலத்தை தனமாக பெற்று விநியோகம் செத்தார் .

அந்த கிராமத்திற்கு வந்த வினோபா பண்ணைகளிடம் தானம் கேட்டார்  பண்ணையார்கள் தானம் கொடுத்தனர் அதனை விவசாயி ஒருவனுக்கு வினீபா அளிக்கிறார்.விவசாயி தன்குடுமபத்தோடு சென்று நிலத்தை பார்க்கிறான் சரளை  கற்களும்,குண்டும் குழியுமான கட்டாந்தரை.  அவற்றிக்கு அடியில் பாறைகள் .தானம் கொடுத்த பண்ணையாரிடம்  சொல்ல அவர் அவனுக்கு கடன் உதவி அளிக்க முன் வருகிறார். நிலம் பண்படுத்தப்பகிடுகிறது அடுத்து நீர்வசதிக்காக கிணறு வெட்டுகிறான் . இதற்கே மூன்று நானகு வருடங்கள் ஆகிவிடுகிறது. கடுமையாக உழைத்து பயிரிடுகிறான் . அவனை பார்க்க வந்த பண்ணையார் நிலம் சாகுபடிக்கு தயாராக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். விவசாயியை பாராட்டுகிறார்.

மறுநாள்  பண்ணையாரின் கணக்கு பிள்ளை வந்து விவசாயியிடம் அவன் வாங்கிய கடனை திரும்ப கேட்கிறான். அவனிடமிருந்து நிலைமை கையகப்படுத்தப்படுகிறது.விவசாயி கட்டிய குணத்தோடு தெருவுக்கு வருகிறான்

தென்பகுதியில் சுற்றுப்பயணம் செய்த வினோபா திரும்பும் வழியில் அதே கிராமத்திற்கு வருகிறார். சாவடியில் அமர்ந்து மேலும் தானம் கொடுங்கள் என்று கேட்கிறார் கை களை நீட்டி!  கூட்டத்தில் நின்று கொண்டிருந்த விவசாயி தான்  கட்டி இருந்த கோவணத்தை அவிழ்த்து "இந்தா  தானம் " என்று வீசி எறிகிறான் .

நாடகம் முடிகிறது.

கிஷன் சந்தர் எழுதிய இந்த நாடகத்தை கவிஞர் வேலுசாமி நடத்தினார்..

பின் நாளில் தாமு எ ச வுடன் இணைந்து அதன் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். .!
















Saturday, July 06, 2019




ஃபாசிசம் 

என்றால்

 என்ன ?




19 ம்  நூற்றாண்டின்  முற்பகுதியில் மத்திய ஐரோப்பாவில் வடிகட்டிய வலது சாரிகளின்    சிந்தனை தொகுப்புதான் அரசியல்  வடிவம் பெற்றது .1919 ம்  ஆண்டிலிருந்து 1945 ம் ஆண்டுவரை தொடர்ந்தது . முதல் உலகப்போரின் இறுதியில் ஆரம்பித்து இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இற்று  விழுந்தது.


முதல் உலகப்போரின் வெற்றியில் தான் இரண்டாம் உலகப்போர்  ஒளிந்து கொண்டிருந்தது என்றும் வரலாற்றாளர்கள் வர்ணிப்பார்கள். முதலுலகப்போர் முடிந்ததும் வெற்றி பெற்ற முதலாளித்துவ நாடுகள் தோல்விகண்ட ஜெர்மனியை அதன் இறையாண்மையை மரியாததையை  படு கேவலமாக மதித்தன..

ஜேர்மனிய மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். காயப்பட்ட ஜேர்மனிய ஆவேசம் பழிவாங்க காத்திருந்தது. அடால்ப் ஹிட்லர் தொன்றினான்.

அருகில் இத்தாலி நாட்டில் முசோலினி வளர்ந்தான் பாசிசம் என்ற சிந்தனைக்கு அரசியல் வடிவம் தந்தவன் முசோலினி. Faces என்ற லத்தின் வார்த்தைக்கு சுள்ளிகளின் கட்டு என்று அர்த்தம் .சுள்ளிகளை காட்டிலிருந்து கொண்டுவர கோடாலி வேண்டும். அந்த கோடாலியை  குறியீடாக ஆக்கினான் முசோலினி . அவன்  வகுத்த சித்தாந்திற்கு  பாசிசம் என்று பெயரிட்டான் .


ஹிட்டலர் அதனை நாஜியிசம் என்று சொன்னான் .

இத்தாலி,ஜெர்மனி, தவிர ஸ்பெயினின் பிராங்கோ,போர்ச்சுக்கலின் சலாசர், ஆஸ்திரியா, வடக்கே நார்வே  ,தெற்கே கிரேக்கம்  என்று பாசிசம் வளர்ந்தது ..கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது.கிழக்கே ஜப்பானிலும் இதனை காணமுடிந்தது.


கடைந்தெடுத்த அதீதமான தேசபக்தி !

அதன் காரணமாக யதேச்சாதிகாரம் !

மாற்று கருத்தை கடுமையாக தடை செய்வது!

ஜனநாயகத்தை அடியோடு வெறுப்பது !

அத்தகைய நிறுவனங்களை சீர்குலைப்பது  !

தேசத்தை ராணுவமயமாக்குவது !

மக்களை தேசத்தின் அடிமைகளாக கருதுவது !

கடுமையான கம்யூனிச எதிர்ப்பு !

இவைதான் பாசிசத்தின் முக்கியமான கோட்பாடுகள் .


1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் தலைமையில் தன்னந்தனியாக செஞ்செனை பெர்லீனின்  நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றிய அந்த அற்புதமான தருணத்தில் பாசிசம் வீழ்ந்தது .


ஆனாலும் அதன்  மிச்சங்கள் அவ்வப்போது அரை பாசிசமாகவும்,  வலது   சாரிகளின் அரசியல் தத்துவமாகவும்  தலைதூக்கத்தான் செய்கின்றன !!!




 ..








Monday, July 01, 2019




E . M .Joseph 

நினைவாக ...!!!



E .M .Joseph  என் குடும்ப நண்பன். கூட்டாளி. சக தோழன் .அவனின்றி நான் அலுவலகம் சென்றதில்லை..

கால 9.50க்கு என்வீட்டிற்கு வந்து விடுவான். இல்லை என்றால் நான் அவன் வீ ட்டிற்கு சென்று விடுவேன். 

என்வீட்டில் பாயாசம் என்றால் அவன் ஒரு "மடக்கா"வது குடிப்பான். அவன் வீ ட்டில் இருந்து கேக் பிஸ்கட் என்று வரும். அவன்  பெற்றோர் தென் மாவட்டத்து காரர்கள் .சங்கிலி முறுக்கும் ,அதிரசமும் அவன் தாயார் எனக்கு கொடுத்து அனுப்புவார்கள். ருசித்து சாப்பிடுவேன்.

எங்கள் LIC காலனியில் 60  விடுகள்  இருக்கும். தீபாவளி போன்ற பண்டிகையின் பொது ஜோசப் வீட்டிற்கு நாங்கள் இனிப்பு பணியாரங்களை அனுப்புவோம். 

கிறிஸ்துமஸ் போது அவன்  அனுப்புவான். அவனுக்கு மூன்று மகள்கள். அவர்களிடம் கொடுத்து அனுப்புவான் .இப்போதெல்லாம் அவனே கொண்டுவந்து கொடுக்கிறான். கேட்டால் " புள்ளங்க பெரிசாயிடுத்துப்பா .ஒவ்வொரு வீட்டுக்கும் போகவெக்கப்படுத்துங்க "என்பான். 

அந்த ஆண்டு என்மகளிடம் தீபாவளி பட்சணம் கொடுத்து அனுப்பினேன். அவன் வீ டு பூட்டி இருப்பதாக சொல்லி  திருப்பி  கொண்டுவந்து விட்டாள் என்மகள். எனக்கு பொறிதட்டியது "avoid பண்ணுகிறானோ" .. எனக்கு கோபம் தான்.

அவன் சீட்டிற்கு சென்றேன். காண்டினில் இருப்பதாக சொன்னார்கள் . 

"ஜோசப் !  "என்று இறைந்து கூப்பிட்டுக்கொண்டே காண்டின் பொனேன். 

எல்லாரும் திரும்பி பார்த்தார்கள் .

"ஏம்பா ! தீபாவளி பணியாரம் வேண்டாமானா சொல்லிடு. அதுக்காக நுறு ரூபா செலவழித்து குடுமபத்தோட சின்னமானுர்  ஓடிப்போகணுமா"?

அதிர்ந்து போன ஜோசப் "வாப்பா ! மெல்ல பேசு. எல்லாரும் கவனிக்கிறாங்க "     

"கவனிக்கட்டுமே ! ஒன்  லட்சணம் தெரியட்டுமே !"

"இல்லப்பா ! பிள்ளைங்க பெரிசாயிட்டுது. நாந்தான் ஒவ்வொரு வீ டா கொண்டு கொடுக்க வேண்டியதா இருக்கு."

"ஒன்  கிறிஸ்துமஸ் கேக்குதுக்காகத்தான் நான் பட்சணம் கொடுக்கேனா?" 

"இல்லை சாமா !கேளேன் ?"

"என்னத்த கேக்க ! இது சரியில்ல டே "

"சாமளம் ! நீ தபாவளிக்கு ஒரு இனிப்பு தன திம்பே ! நான் 60 வீட்டிலிருந்து வகைவகையா   திங்கறேன்."

"அதனால தான் ஒடி போனாயா"

"நீங்க அறுபது பேர் ! நான் ஒத்தன் ! "

"மளுக்" கென்று என்  இதயத்தில் சத்தம் கேட்டது.

மெதுவாக சொன்னான் "நாங்க  கொஞ்ச  பெரு  !அறுபது வீட்டுக்கும் ஏறி இறங்க முடியல.ஒங்க அபரிமிதமான அன்பைக்கூட எங்களால் தங்க முடியப்பப்பா ."

அவனைப்பார்த்தேன். அழுதுவிடுவானோ என்று தோன்றியது.

மெதுவாக படியிறங்கி  என் இடம் வந்தேன் !!!

இதையே ஒருகதையாக்கி செம்மலருக்கு அனுப்பினேன்.1988ம் ஆண்டு அதனை பிரசுரித்தார்கள். ஜோசப் என்பதற்கு பதிலாக மரியதாஸ் என்று மாற்றினேன்.

ஜோசப் ! தோழனே ! நீ என் இலக்கிய படைப்பிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய் !!! 

 





 \\