Saturday, May 29, 2010

apimanyu

சென்னை வந்த பிறகுதான் செம்மோழி கருத்தரங்கு நடப்பது தெரிந்தது."சிகரம்" செந்தில்நாதனைத்


தொடர்பு கொண்டேன். "வாருங்கள், புறப்படுவோம்" என்றார்.அண்ணாமலை மன்றத்தை அடைந்த போது எழுத்தாளர் "அபிமன்யு" எங்களை வரவேற்றார்.செம்மலரின் ஆரம்பகால எழுத்தாளர்களில்

அபிமன்யுவும் ஒருவர்.காலையிலிருந்து மாலைவரை என்னுடன் அமர்ந்து கவனித்துக்கொண்டார்.பழ

ங்கதைகளை பேசி மகிழ்ந்தோம்.

செம்மலர் எழுத்தாளர்கள் ஆண்டுக்கு மூன்று முறையாவது கூடிப்பேசுவோம்.த.ச.

ராசாமணி,வையைச்செழியன்,தணிகை,காவிரிநாடன்,ச.மாதவன்,நெல்லை கந்தசாமி,தி.வ என்று

பலர் கலந்துகொள்வார்கள்.எங்கள் படைப்பு,செம்மலரைச் செழுமைப்படுத்துவது என்று விவாதிப்போம்.கு.சி.பா,கே.எம் ஆகியோர் நெறிப்படுத்துவார்கள்.தோழர் சங்கரய்யா கலை இலக்கிய,அரசியல் போக்குகள் பற்றி உரையாற்றுவார்.என் போன்றவர்களுக்கு அது கூட்டமல்ல;

ஞானச்சாலை.

இப்படிப்பட்ட கூட்டம் ஒன்றில்தான் எழுத்தாளர்களுக்கு ஒரு அமைப்பு பற்றிய

பேச்சு எழுந்தது.அப்போது இருந்த கலை இலக்கிய பெருமன்றம் செயல் பாடு திருப்தியாக இல்லாம

லிருந்தது.புதிய அமைப்பை உருவாக்குவது,அதன் கோட்பாடு இவை பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது





"நானும் கே.எம் அவர்களும் கலந்து கோண்டு சோல்கிறோம்"என்று சங்கரய்யா கூறினார்.வேளி

யேவந்த அபிமன்யு என் கையைக் குலுக்கினார்.நிச்சயம் சங்கம் உருவாகும் என்றார்.த.மு.எ.ச.வின்

விதை ஊன்றப்பட்டுவிட்டது.

தெற்கு ரயில்வே ஊழியர் சங்க(D.R.E.U)த்தலைவர் இளங்கோ தான் அபிமன்யு என்ற எழுத்தாளர்.
சென்னை,திருச்சி,மதுரை,முடியுமானால் சத்தூர்,நெல்லை,தெங்காசி,என்று பயணித்து பங்களூரு வழியாக திரும்பி நாகபுரி செல்ல உத்தேசம். பத்து நாட்களாக மடிக் கணிணியை தொடவுமில்லை.இடவுமில்லை.நாளையிலிருந்து சந்திக்கிறேன்.

Friday, May 07, 2010

A.I.I.E.A Long Live.

திவாலாகிப்போன,திவாலாகிக்கொண்டிருக்கும் அமெரிக்க இன்சூரன்சு கம்பெனிகள் இந்தியாவை


இராயாக்கிக்கொள்ள விரும்பின. அப்போதய அதிபர் கிளிண்டனை அணுகின.

"வாஜ்பாயும், மன்மோகனும் சரிங்கராங்கய்யா!.அங்கவுள்ள தொழிற்சங்கம் எதுக்கிது.அவங்களாலையும்சரி,நம்மளாலையும் சரி ஒண்ணும் செய்ய முடியவில்லை"என்றார் கிளிண்டன்.அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கம் தான் அது.இந்திய மத்தியதர மக்களின் துருவ

நட்சத்திரம் தானந்த சங்கம்.அந்த சங்கத்தின் அணுக்கத்தோண்டனாக செயல்படும் வாய்ப்பு எனக்குக்

கிடைத்த வரமாகக்கருதுகிறேன்.

சுனில் மைத்திரா,சரோஜ் சவுத்திரி,என்,எம்.சுந்தரம்,போஸ்,முகுல் முஸ்தவி,பிரத்யோக் நாக், எப்பேரற்பட்ட தலைவர்கள்!....அவர்களோடு பழக,பேச,உண்ண, வாய்ப்பு கிடைப்பது என்பது.லேசான தல்ல. சரோஜ் பல முறை மதுரை வந்திருக்கிறார்.ஒருமுறை அவர் வந்துள்ளபோது அவரைக் கவனித்துக்கொள்ளும்பொறுப்பு சங்கத்தால் எனக்கு அளிக்கப்பட்டது.மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தான்விடுதி.மதிய உண்விற்காக வெளியில் வந்தோம்.பிச்சைக்காரர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களிடமிருந்து மீண்டு டவுண் ஹால் ரோடு திரும்பினொம்.ஒரு கிழவி எங்களை விரட்ட்க்கொண்டே வந்தார்.நாங்கள் தாஜ் உணவு விடுதிக்குள் நுழைந்தோம்.உணவு அருந்தி வேளியே வந்தபொதும் அவர் நின்று கொண்டிருந்தார்.சரோ நஜை நெருங்கினார்.எனக்கு கோபம் வந்து விட்டது."ஏ!கிழவி!சனியனே"என்று கையை ஓஙகினேன்.தெருவில் எல்லாரும் திரும்பினார்கள்,சரோஜும் திரும்பினார்.

அமைதியாக ஜிப்பாவிர்க்குள் கையைவிட்டுத்துழாவினார்.ஒரு ரூபாய் நாணயத்தை

எடுத்து கிழவியிடம் கொடுத்தார்.மெதுவாக என் தோள்மீது கைபோட்டு"it is not her mistake,comrade" என்றார்







ஆம்! அவரைப் பிச்சை எடுக்கவைத்த நானும்,நீங்களும்,அவனும், அவர்களும்தான் தவறிழைத்த

ஆக்வர்கள் என்பதை இதைவிட மென்மையாக மேன்மையாக எவரால் சொல்லமுடியும்.............

Wednesday, May 05, 2010

semmalar.....

அப்பொது நான் மதுரை பாரத் கட்டிடத்தில் இருந்த இன்சூரன்சு அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.எழுத்தாளர்கள் வையைச் செழியனும்(ப.ரத்தினம்) கு.சின்னப்பபாரதியும் வந்தார்கள்.அது மார்ச்சு மாதம்."செம்மலர்" என்ற மாதப்பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் மாலை தீக்கதிர் அலுவலகத்திற்கு வரும்படியும் கூறினார்கள்.கு.சி.பா முழுக்க முழுக்க அவருடைய பொறுப்பில் .சொந்த நிதி ஆதாரத்தில் பத்திரிகை யை நடத்துவது என்று முடிவாகியிருந்தது .ஞானபாரதி,வையைச்செழியன்,தி.வரதராசன்,த.சா.ராசாமணி,காஸ்யபன் ஆகியோர் ஆசிரியர் குசிபா வுக்கு உதவ வேண்டும்.மதுரை 1ம்சந்தில் அப்போது இயங்கிவந்த தீக்கதிர் அலுவலகத்திலேயே செம்மலரும் இயங்கும் என்று உறுதியா யிற்று. வந்த கதைகள், கட்டுரைகள், எல்லாவற்றையும் வாங்கி பத்திரப்படுத்தி திவ வைப்பார்.தீக்கதிர் அலுவலகத்திலேயே ஒரு ஜாதிக்காய் பெட்டியில் போட்டு வைப்பார்.அது தான் செம்மலர் அலுவலகம்.வையைச் செழியன்,த.ச.ரா,ஞானபாரதி,காஸ்யபன் ஆகியோர் படித்து பரிசீலித்து கு.சி.பாவின் பர்வைக்கு வைப்பார்கள்.மாதம் பதினைந்து நாள் மதுரை வந்து பிரசுரத்திற்கு உகந்த தை அவர் முடிவு செய்வார்.செம்மலர் முத ல்இதழ் அப்போதிருந்த டிரடில் மிஷினில் மெகானிக் பாலன் அவர்களால் அச்சடிகப்பட்டு வெளியில் விழ நாங்கள் பூரித்துப்போனோம். செம்மலர் நாற்பது ஆண்டுகள் முடிந்து நாற்பத்தியோன்றாம் ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது.தற்போது தி.வரதராசன் மட்டுமே செம்மலரோடு பழய நண்பர்களில் தொடர்ந்து பணியாற்றிகொண்டிருக்கிறார் கு.சிபா,வையைச் செழியன்,ஞானபாரதி ஆகியோர் சார்பிலும்,என் சார்பிலும்செம்மலர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

Monday, May 03, 2010

my teacher......

இந்தியா சுதந்திரமடையும்போது எனக்கு பதினொரு வயது முடிவடையவில்லை.ப ள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளீ,நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி என்றுதானிருக்கும்.காலையில் இறைவணக்கம் உண்டு. "God save our king"என்று பாடிவிட்டுத்தான் "பொன்னார் மேனியனே" பாடவேண்டும் வாரத்தில் மூன்றுவகுப்புகள் ஓவியம்,கைவினை,நல்லொழுக்கம் என்று உண்டு. அழகேசன் சார் தான் மூன்று வகுப்புகளையும் நடத்துவார்.நீராவி,மேகம்,மழை பற்றி விளக்குவார் ஏழாம் வகுப்பில் பல நாவல்களை படித்துக்காட்டுவார்.".le miserable" என்ற பிரஞ்சு நவலின் மொழிபெயர்ப்பை ப்படித்துக்காட்டுவா.ர்.சிலசமையம் அவர் குரல் தழுதழுக்கும்.கண்ணீர்முட்டும்."uncle Toms cabin" ஐ கதையாகச்சொல்லும்போது எங்களுக்கு அழுகை வரும்.எட்டாவது படிக்கும் போது சிறு புத்தகங்களை கொடுத்து மவுனமாக படிக் கச்சொல்வார்..ஐரோப்பிய தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் அவை.அப்படித்தான் ரூ சோ,சமுதாய ஒப்பந்தம்,வால்டயர்,கரிபால்டி,மாஜினி,கிராம்வெல்.என்று படித்துதெரிந்தோம்." வீட்டிற்கு கொண்டுபொகாதே.வகுப்பிலேயே படி என்று கூறி ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.கருநீல அட்டையில் தாடி வைத்த ஒரு படம் இருந்தது."காரல்மார்க்ஸ்" என்றும் எழுதியிருந்தது.அது 48-49ம் ஆண்டாக இருக்கலாம். .இன்றய என் புரிதலோடு பார்க்கும்போது அழகேசன் சார் பிரும்மாண்டமாகத்தெரிகிறார்.கதரில் ,,குட்டையாய்,கருப்பாய்,தங்கநிற மூக்குக்கண்ணாடியோடு,அந்த அழகேசன் சாரை இனி பார்க்க முடியாது. ஆனாலும் மார்க்ஸையும், அழகேசன் சாரையும் என்னால் மறக்க முடியாது.