Saturday, March 29, 2014

பெல்லாரி சுரங்க கொள்ளையும் ,

பா.ஜ.க வின் பங்கும் ..........!!!


மேலை நாடுகள் கனிமங்களை இறக்குமதி செய்து அவற்றை உலோகங்களாக மாற்று கின்றன !

இந்தியா போன்ற  கீழை நாடுகளில் உள்ள வளங்களை வாங்கி அதனையே இரும்பு செம்பு ,என்று மாற்றி விற்கின்றான ! 

உலகம் பூராவிலும் எங்கு எந்த தாதுப் பொருள்கள்  கிடைக்கும் என்பதை தாங்கள் அனுப்பும் உபகிரகங்கள் மூலம் துல்லியமாக கண்டுபிடித்து வைத்துள்ளனர் !

உலகத்திலேயே மிகவும் உயர்ந்த இரும்பு தாது பெல்லாரியில் கிடைக்கிறது ! இதற்குபோட்டி அதிகம் !  

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் தான் பெல்லாரி சுரங்கங்களை ஆட்டி வைப்பவர்கள் ! 

ஜனார்த்தன ரெட்டி,கருணாகர ரெட்டி ,அவ்ர்தம்பி இன்னுமொரு ரெட்டி தான் முக்கியமானவர்கள் ! 

பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்கள் !

பா.ஜ.க. தலைவர்கள் டெல்லிலேருந்து வராங்கன்னா இவங்க ஏற்பாட்ல தான் வரவங்க !

நம்ம வீடுகள்ல சைக்கிள் இருக்கும் ! சிலவீடுகள்ல ச்கூட்டர் இருக்கும் ! கொஞ்சம் வசதின்ன  கார் இருக்கும் ! ரெட்டி அண்ணன் தம்பிகள் வீட்ல ஒவ்வொருத்தன் வீட்லயும் விமானம் இருக்கு !

கொஞ்சம் கூடுதலா சொல்றமாதிரி தோணுதா !!

அண்ணே! அப்புராணியா இருக்காதீங்க ! அம்பானி வீட்டு மாடில ஹெலிகாப்டர் இறங்க வசதி இருக்கு ! தெரியுமா ! 

சவத்துப்பய ! காச  எறிஞசொம்ன "கிளி " கூட நாய் மாதிரி குரைக்கும்ணே!

கஞ்சிக்கு சிங்கி அடிச்ச ரெட்டி பயலுகளுக்கு எப்படி இம்புட்டு காசு வந்துச்சு ! 

நான் சொல்லல!  

 நீதிபதி சந்தோஷ் ஹெக்டே சொல்றாரு !

பெல்லாரில சுரங்கமிருக்குல்ல  ! அந்த சுரங்கத்துல  வெட்ட ஒரு மெற்றிக் டன்னுக்கு சர்காருக்கு 27 ரூ கொடுத்து வாங்கறாங்க  ரெட்டிகாரு! 
 
அத வெளிநாட்டுக்கு அனுப்புறாங்க !

என்ன வெல ?

ஒரு மெற்றிக் டன் 6000  ரூ க்கும் மேல !!

அதனாலதான் பா.ஜ.க முதலமைச்சர் எடியூரப்ப ரெட்டி வீட்டு வாசல்ல - வாசல்ல என்ன -புறவாசால்லயும் கைகட்டி நிக்காரு !

இதைவிட விசேஷம் என்ன தெரியுமா !

இந்த 27 ரூ கொடுக்காம சட்ட விரோதமா வெட்டி எடுக்காங்க !

அததான் ஹெக்டே விசாரிச்சாரு !

சுரங்கத்திலேருந்து எடுத்து காட்டுக்குள்ள ஒளிச்சு வைப்பாங்க ! அங்கேருந்து சட்ட விரோதமா வெளிநாட்டு அனுப்புவாங்க !

இதை "கோகுல் " ங்கற காட்டிலாக ஆபிசர் கண்டுபிடிச்சு அதுக்கு "சீல் " போட்டுட்டாரு !

இதையும் தன்னோட அறிக்கைல ஹெக்டே குறிப்பிட்டிருக்காரு !\\

ஒளிச்சு வைச்சது 35 லட்சம் மெற்றிக் டன் ! 

எடியூரப்பவுக்கு கோபம் வந்துட்டு ! காட்டிலாகா அதிகாரி எங்கிட்ட சொல்லாம ஹெக்டேகிட்ட ஏன் சொன்னான் ! அவன் அதிகார வரம்பை மீறிட்டன்! நு சொல்லி கோகுல் சஸ்பெண் டாக உத்தரவு போட்டார் !

ஹெக்டேக்கு கோபம் வந்தது ! அவரு "லோக் ஆயுக்தா " பதவியை ராஜினாமா செய்தாரு !

டேல்லிலேருந்து பாஜ .க தலவர்கள் வந்து ஹெக்டேய சமாதானம்பண்ணினாங்க ! அவரும் ராஜினாமாவை வாபஸ் வாங்கிப்புட்டரு !

சந்தோஷ் ஹெக்டேயும் ஒரு பா.ஜ .க அனுதாபின்னு எதிர்கட்ட்சிகாரங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க ! 

அப்படியான்னு கேக்கேளா  ?

 எனக்கு தெரியாது சாமிகளா !!!








Thursday, March 27, 2014

கருப்பன் துறையில் தூங்கபோய்விட்ட 

என் ஆசான் .........!!!


60ம் ஆண்டுகளின் முற்பகுதி ! 62க்கு  பின்னால் ! மெலமாசிவீதியில் ஆனந்த் அகாடமி என்று ஒரு பள்ளி ! சுதந்திர போராட்ட விராங்கனை ஜானகி அம்மாவின் வளர்ப்புமகன் சங்கர்  ராஜ் நடத்தி வந்தார் !

கம்யூனிஸ்ட் களின் நாடி நரம்பை துடிக்க வைக்கும் "விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே " என்ற படலை சங்கர் ராஜ் எழுத ,எம்.பி .சீனிவாசன் இசை அமைத்தார் !

அங்கு மக்கள் எழுத்தாளர் அமைப்பு கூட்டம் என்றார்கள் ! நானும் சென்றிருந்தேன் !

தா.ச.ராசாமணி ஐயாதான் நடத்தினார் ! மக்களுக்கான் எழுத்து என்பது பற்றி பலர் கருத்து சொன்னார்கள் !

தா.பாண்டியன் அவர்களின் தம்பிபொண்ணிவளவன் அவர்கள் எழுதிய வியட்நாம் பற்றிய நூலை அப்போதுதான் படித்திர்ந்தேன் ! "வியட்காங்குகள் பற்றி விவரமாக எழுதியிருப்பார் ! வான் ட்ராய் என்ற வீரனை பற்றி வரும் !

கலை இலக்கியத்தை மக்கள் போராட்டத்திற்காக வியட்காங்குகள் பயன் படுத்தியதைப்பாற்றி அந்த கூட்டத்தில் குறிப்பிட்டேன் !

மேற்கு வங்கத்தில் எழுத்தாளர்கள் செயல்பாடுகள் பற்றி எனக்குத்தெரிந்ததை கூறினேன் ! கை ரிக்ஷா தொழிலாளிபற்றி கவிதை என்றால் வண்டிபேட்டையில் ரிக்ஷா தோழிலாளிமுன் வாசிப்பார்கள் ! கைத்தறி தோழிலாளி முன் அவனைப்பற்றி பாடுவார்கள் ! இது  அவர்கள கலை இலக்கியத்திற்கு அருகில் வரச்செய்யும் என்றும் கூறினேன் !

அன்று மாலை மேல்வெளி வீதியில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தேன் ! என் அலுவலக நண்பர் வந்திருந்தார் !பேசிக் கொண்டிருந்தோம் ! அவர் கூட வந்திருந்தவரும் எங்கள் பேச்சில் கலந்து கொண்டார் ! " நீங்கள் வியட்நாம் பற்றி  குறிப்பிட்டது நன்றாக  இருந்தது ! மே.வாங்க கலை இலக்கியவாதிகள் பற்றி சர்யாககுரிப்பிட்டீர்கள் ! " என்றார் புதிதாக வந்தவர்!

"இவர்தான் திக.சிவசங்கரன் என்று அறிமுகப்படுத்தினார் ! "தாமரை பத்திரிகையின் ஆசிரியர் என்றும் குறிப்பிட்டார் !

நாகள் பேச ஆரம்பித்தோம் !   பிரெஞ்சு புரட்சி பற்றி பேசினார் ! நான் கார்லைல்  எழுதிய பிரஞ்சுப் புரட்சி படித்ததை கூறினேன் ! அப்போதுநான்புரிந்து  கொண்டதை சொன்னேன் ! அவர் கம்யூனிஸ்ட் அறிக்கை,ரஷ்ய புரட்ச்சி என்று குறிப்பிட்டார் !

விடை பெறும் போது " ஐயா ! நீங்கள் ஏன் எழுதக்கூடாது? எழுதுங்கள் ! "என்றார் !

"நான் எழுதுவதா ! என் எழுத்து என்னாலேயே படிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும் ஐயா ! "

"அழகான எழுத்து வேறு ! அழகான கருத்து வேறு ! எழுதுங்கள் ! எனக்கு அனுப்புங்கள் "

எழுதினேன் ! படித்து வசதியான குடும்பத்து பெண் குடிகார கணவனை விவாக ரத்து செய்கிறாள் ! அவ்ள் வீட்டில் பணி  செய்யும் பாலம்மா என்ற பெண் தன குடிகாரக்கண்வனிடம் அடி உதய் வாங்குகிறாள் ! "பாவம் பாலம்மா " என்று தலைப்பிட்டு அனுப்பினேன் ! தாமரையில் வந்தது ! 

என்னை எழுத்தாளராக்கினர் !

சனிக்கிழமை (22.3.14) ஜனநேசன் பெரியவரை மருத்துவ மனையில் பார்க்க சென்றிருக்கிறார் !" காஸ்யபன் எப்படியிருக்கிறார் " என்று விசாரித்திருக்கிறார் ! என்ன வாஞ்சை ! 

என் ஆசானே ! பழுத்த பழம் நீ!

கருப்பன் துறையில் ஓய்வெடு!

ஆனாலும் நீ நுணுக்கி  எழுதும் அந்த "கார்டு" க்காக எங்கள் மனம் ஏங்கத்தான் செய்யும் !!!!  































Sunday, March 23, 2014

 ஒரு கூடை வெங்காயம்+ செருப்படி =தேர்தல் 


 ஒரு ஊரில் ஒரு    ராஜா இருந்தார் ! ஒரு குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தார் !

அவன் ஒரு கூடை நிறைய உள்ள வெங்காயத்தை திங்க வேண்டும் ! நிறுத்தாமல் திங்க வேண்டும் !

அல்லது செருப்படி பட வேண்டும் ! நிறுத்தாமல் அடிப்பார்கள் !

அவன் யோசித்தான் ! செருப்படி என்றால் வலிக்கும் ! நாம் தான் தினம் வெங்காயம் சாப்பிட்டுகிறோமே ! அதனால் ராஜாவிடம் வேங்காயம் திங்க ஒப்புக்கொண்டான் !

வெங்காயம் வந்தது ! அவனும் திங்க ஆரம்பித்தான் ! பத்து வெங்காயத்தைதின்றான் ! கண்களில் நீர் வர ஆரம்பித்து ! வயிறும் கலங்க ஆரம்பித்தது ! இனி வேங்கையம் தின்றால் செத்து விடுவோம் என்று பயந்தான் ! "ராஜா! நான் செருப்படி பட்டுக் கொள்கிறேன் !" என்று கூறி தண்டனையை மாற்றிக் கொண்டான் !

செருப்படி ஆரம்பமாயிற்று ! அடி விழ விழ அவனுக்கு வலி அதிகமாயிற்று ! இனிமேலும் அடிவிழுந்தால் செத்துவிடுவோம் என்று புரிந்தது ! "ராஜா ! நான் வெங்காயமே தின்கிறேன் !" என்று தண்டனையை மாற்றிக்கொண்டான் !

வெங்காயத்தை திங்க ஆரம்பித்தான் ! மறுபடியும் கண்களில் நீர் ! வயுற்றுப் பொருமல் ! "ராஜா ! நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறேன் ! " என்று கூறினான் !

இதே போல் தான் நாம் ஒவொரு ஐந்து வருடமும் மாறி மாறி செரூப்ப்டியோ 
வெங்காயமோ வாங்கிக் கொண்டிருக்கிறோம் !, 


(  "சத்யமேவ ஜெயதே " (23-3.14)  நிகழ்ச்சியில்  கேட்டது )





Thursday, March 20, 2014

ஹெண்டர்சன் அறிக்கையும் -

"இந்தியாவின் சீன யுத்தமும் "


இந்திய சீன எல்லைத்தாவா 1962ம் ஆண்டு ராணுவ மோதலில் முடிந்தது ! இலங்கை அரசு கூறிய யோசனையை ஏற்றுக்கொண்டு சீன ராணுவம்  பின் வாங்கி பேச்சுவார்த்தை துவங்கியது !

அப்போது ராணுவ நடவடிக்கை பற்றி ஆராய இந்திய அரசு லெப்.ஜெனரல் ஹெண்டர்சன் புருக்ஸ் -பிரிகேடியர் பர்வீந்தர் சிங் பகத் என்ற இரு ராணுவ அதிகாரிகளை கமிஷணாக நியமித்து விசாரணை நடத்தியது ! 

இந்த கமிஷன் அறிக்கை நாடாளுமனரத்தில்வைக்கப்படவில்லை ! ராணுவ அதிகாரிகள் ராணுவ நடவடிக்கையை ஆராய்வதோடு நிற்காமல் ,ராணுவத்தலைமையை ஆராய்கிறேன் என்ற பெயரில் இந்திய அரசியல் தலைமையை தன அதிகார வரம்பை மீரிவிமரிசனம்செய்திருந்தது !

அப்போது பாதுகாப்பு ஆமிச்சராக இருந்த ஒய்.பி சவான் அறிக்கையை நாடாளுமனறத்தில் வைக்கமுடியாது என்று அறிவித்து விட்டார் !

காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியிலும் இருந்த வலது சாரிகள் அவ்வப்போது ஹெண்டர்சன் அறிக்கை, நேரு, சீன ஆக்கிரமிப்பு என்று கோஷமிடுவது வழக்கம் ! 

அதுவும் தேர்தல் வந்தால் நரி ஊளையிடுவது போல ஊளையிடுவார்கள் !

நேய்வலி மாக்ஸ்வல் என்ற பத்திரிகையாளர் 1971ம் ஆண்டு ஒருபுத்தகம் எழுதி வெளியிட்டார் ! "இந்தியாவின்  சீன யுத்தம் " என்பது பெயர் ! அதில் ஹெண்டர்சன் அறிக்கையின் சாராம்சம்  உள்ளது !

(80ம் ஆண்டுகளில் எல்.ஐ.சி.தோழர் தேவ பிரகாஷ்  இந்த புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தார் ) 
 ,
இந்திய சீன எல்லைதகராறு பற்றிய வரலாற்று ரீதியிலான ஆவணங்களோடு எழுதப்பட்ட நூல்  !
 
மாக்ஸ்வல் ஒரு மாவோயிஸ்ட் ! அவர் சீனாவுக்கு ஆதரவாக எழுதியுள்ளார் என்று இந்திய வலது சாரிகள் அந்த புத்தகத்தில் உள்ளவற்றைனிராகரித்து விட்டனர் !

அந்த புத்தகம் பற்றியோஅறிக்கைபற்றியொநான் எதுவும்கூறப்போவதில்லை 
 
வரலாற்று ரீதியாக உள்ள நிலைமைபற்றி மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் !
 
ஆங்கிலேயரின் செல்வாக்குக்கு உட்பட்டு இந்தியா ,சீனா பர்மா ,இலங்கை ஆகிய நடுகள்  இருந்த காலம் உண்டு 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு எல்லையை ஆங்கிலேயர்கள்போட்டனர் ! இதனை ஒரு "ஓவர்சியர் "  போட்டார் ! அவர் பெயர்"மக் மோகன் " ! நவீன ராணுவ உடையிலேயே சென்று வரமுடியாது நிலையில் மக்மோகன் அங்கு சென்று சர்வே செய்து எல்லையை வரைந்தாரா ? இந்த கேள்விக்கு பதில்  கிடையாது !

இந்த எல்லைக் கோடு சீனாவின் திபெத் பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ளது !

பிரிட்டிஷ்- அமெரிக்க ஆதரவு சியான்-கே -ஷேக் இந்த எல்லையை ஏற்கவில்லை !

சீனாவிலிருந்து ஓடிவந்து ஐம்பது ஆண்டுகளாக நம் வரிப்பணத்தில் கஞசி குடித்து வரும் தலாய் லாமா ஏற்கவில்லை !

" மக்மோகன் எல்லையை அடிப்படையாக வைத்து அதிலிருந்து 12 மைல் வடக்கேயும் ,தெற்கேயும் துருப்புகளை நிறுத்துவோம் !  பின்னர் பேச்சு வார்த்தை நடத்துவோம் ' என்ற இலங்கையின் யோசனையை சீனா எற்றுக் கொண்டு உள்ளது !

1962ம் ஆண்டு இந்திய சீன தாவாவின் பொது தான் க்யூபாவில் அமெரிக்க மூற்றுகை  இட்டது ! பனிப்போரின் உச்சமாக   அணுயுத்த  அபாயம் வெடித்தது 

உலகசமாதான் இயக்கத்தின் தலைவராக இருந்த பெற்றண்ட் ரஸ்ஸல் இந்தியா -சீனா ,அமெரிக்க-ரஷ்யா ஆகியோரோடு பேசி சமாதானத்தை நிலை நாட்டினார் !

 அப்போது அவர் எழுதிய புத்தகம்தான் UN  ARMED  VICTORY என்பதாகும் ! அதில் இந்திய சீன சிக்கலும் விவாதிக்கப்பட்டிருக்கும் !












Sunday, March 16, 2014

"நா காக்க "

முக நூலில் ஒரு நண்பர் மானிலங்கள் அவை  உறுப்பினர் தோழர் டி .கே ரங்கராஜன்  ராஜினாமா செய்வாரா  என்பது போல் கேட்டிருந்தார் !

இந்த முட்டாள் தன மான கேள்விக்கு பதில் சொல்லப் போவதில்லை  ! ஆனால் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த வரலாற்று நிகழ்வுகளை இளைஞர்களுக்கு சொல்லவிரும்புகிறேன் !

1978ம் ஆண்டு தமிழக சட்டமன்றதிற்கான தேர்தல்  நடக்!க  விருந்த நேரம் !

அண்ணா திமுக முதன் முதலாக முழுமையாக தேர்தலைச் சந்திக்க முடிவு 
செய்தது ! எம்.ஜி.ஆர் அவ்ர்கள்கூட்டணி பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தார் ! மார்க்சிஸ்ட் கட்சி  தி .மு.க.வின் அரசியல் முடிவுகளால் தனித்து இருந்தது !

அப்போது மதுரையைச் சேர்ந்த இளம் அரசியல்  தலைவர் பத்திரிக்கை நிருபர் ஒர்வரைச்  சந்தித்தார் ! நான் மார்க்ஸிட் கட்சி தலைவர் எ.பாலசுப்பிரமணியம் அவர்களை பார்க்கவேண்டும் !  நீங்கள்  அதற்கு ஏற்பாடு செய்யமுடியுமா என்று கேட்டார் ! இதனை ரகசியமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்  கொண்டார் !
இருவரும் சந்தித்தனர்!
 எம்.ஜி.ஆர் உங்களைப்ப்பார்க்கச் சொன்னார் ! இருகட்சிகளும் இணைந்து
தேர் தலை சந்திக்க முடியுமா என்று பரிசிலிக்க விரும்புகிறார்என்றார் ! பரிசீலித்தனர் ! எம்.ஜி ஆர் அவசரநிலையின் போது  எடுத்த நிலையை ஏற்க முடியாது ! அத அவர் மாற்றிக் கொண்டால் பார்க்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது !

"எந்த நிலையிலும் சர்வாதிகாரத்தை அண்ணா .தி.மு.க ஏற்காது " எம்.ஜி,ஆர் அறிவித்தார் !

78மாண்டு இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தன ! அண்ணா தி.மு.க  ஆரம்பித்து  ஆறே ஆண்டுகளில் ஆட்சியைப்  பிடித்தது !

நெடுஞ்செழியன்,நாஞ்சில்மனோகரன்எஸ்.டிசோமசுந்தரம்,கே.எ..கிருஷ்ணசாமி ஆகியொர் அமைசராகினர் !

எம்ஜிஆர் ,எ.பாலசுப்பிரமணியம் உட்பட இவர்கள் மறைந்து விட்டனர் !

ஆனால் மதுரையை   சேர்ந்த அந்த அரசியல் தலைவரும் அந்த நிருபரும் மதுரை வீதிகளில் இன்றும் உலாவந்து கொண்டுதான் இருக்கின்றனர் !

ஒருவர் மூத்த  அரசியல் தலைவர் பழ நெடுமாறன் !

மற்றொருவர் நிருபர் "தீக்கதிர் நாராயணன் "  !!!

(  தொகுதி உடன்பாடு என்பது ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வது )






Saturday, March 15, 2014

மோடியை எதிர்த்து குல்தீப் சர்மா ..!

பா.ஜ.க வட்டாரம் திகைப்பு ................!!!

 குல்தீப் சர்மா ஒரு போலிஸ் அதிகாரி ! i p sபடித்தவர் !   எந்த கொம்பனையும் பார்த்து பல்லிளிக்க மாட்டார் ! நேர்மை ஆனவர் !

பல  சந்தர்ப்பங்களில் முதலமைச்சர் மோடியோடு மோதியவர் ! சட்ட விரோதமாக எதையும் செய்ய மாட்டார் !

மோடியோடு ஒத்துப் போகாததால் பல சங்கடங்களுக்கு உள்ளானார் !
 தற்போது  ஆம்  ஆத்மி  கட்சியில் சேரவிருக்கிறார் ! அண்ணன் மோடியை எதிர்த்து தேர்தலில் நிற்கப்போகிறார் !

இவருடைய தம்பி தான் பிரதீப் சர்மா !i.a.s படித்தவர் ! குஜராத்ல கலக்டரா இருந்தவர் ! மோடி என்ன?  தாத்தாவே வந்தாலும் "போடாங்கோ ...." என்பவர் ! 


அவரை பந்தாடினார் மோடி ! பலிக்கலை ! டிஸ்மிஸ் பண்ணினார் ! நீதி மன்றம் போனார் சர்மா ! மீண்டும் வேலைல  சேர்ந்தார 

மோடி யோட சாதனை என்னன்னா ? ஒரு அதிகாரிய கூட நேர்மையா வேல செய்ய விடலை ! சாட்சி சர்மா சகோதரர்கள் !

இப்பம் எல்லாருமா சேர்ந்து ட்டாங்க !

நம்மூர் "நமோ டீ கடை " "நமோ மீன்கடை " பையன்களெல்லாம் ....இருங்க/ டே 
உங்களுக்கு தனியா இருக்கு !!!

(ராஜ்நாத் சிங் பேயறைஞ்ச மாதிரி இருக்காரு ! ஆர்.எஸ்.எஸ். மோகன் பகத்  "நாங்க கொள்கையை பாப்போம்  ! தனி நபரை பாக்க மாட்டோம் "நு பங்களுர்ல சொல்லிபுட்டறு ! சுஷ்மாவுக்கு உள்ளுர சந்தோஷம்  தான் ! பாவம் " வை கோ " ! நல்ல மனுஷன் ! ஆனா அவர் போன இடம் உருப்படாது ! ) 












































































Friday, March 14, 2014

பா.ஜ.க வுக்கு  முன்றே  

மாநிலங்கள் தான் உச்சம் ....!!!

மோடி மழை பெய்யுது  ! அலை அடிக்கி  !சுனாமி வருதுன்னு சாமியாடினாலும் அவங்க தலைவர்கள் அடிவயறு  கலங்கி  போய்  தான் அவங்க   இருக்காங்க !செல்வாக்கு உள்ள இடம்னு பாத்தா  மத்திய  பிரதேசம், ராஜஸ்தான்,குஜராத் ஆகியமூணூதான் !

என் அப்படின்னு கேக்கீங்களா ? புருஷன் செத்தான்னா அவன் பொஞசாதியையும்  சேத்து வச்சு கொளுத்து ! அவளுக்கு "சதிமாதா" கோவிலைக் கட்டு நு சொல்ற முற்போக்கு தலைவர்கள் மந்திரியா இருக்காங்க !

இன்னைக்கும் பிள்ளையார் சில பால்குடிக்கு நு நம்பி பால் சொம்ப கோவிலுக்கு தூக்கிக்கிட்டு போறாங்க !
 
அண்ணே ! மனித மலத்த மனுஷன் தூக்கக்கூடாது சட்டம் போட்டாச்சு !
," அவிங்க மலத்தி சுமந்து துப்பரவு தோழில் செயுது ஒருவேளை சோத்துக்காக இல்ல !  அது ஆன்மீக வழிபாடாக செய்கிறார்கள் ! "அப்படிங்காங்க !

இத சொன்ன மகா பாவி யாருன்னு கேக்காதீங்க !
கேட்ட  கோபம் வரும் ! அவருதாண்ணெ ! மோடி தான்னே !

நேத்து பேப்பர்ல போட்டிருக்கான் !
ம.பி  ல ..............24
குஜராத் ............23
 ராஜஸ்தான் ..19

இம்புட்டு தாண்ணே ! இதுவும் கூட்டுவச்சு !

மத்த ஊர்ல  கூட்டணி சாந்தி சிரிக்குது அண்ணே !

எங்கனாலும்  குறுக்கு சால் ஓட்டுவாங்க !

நம்மூர்ல பாத்தேளா ?

கேப்டனையும் ,டாகடரையும் மோதவிற்றுக்காங்க !
அவரு "நாய்கங்க " சொல்லாம தெலுங்கு ஆளுங்க நு எசிபுட்டாரூ ! ஊடு தட்ல இவங்க ஒம்போது சீட்டை  வாங்கி புட்டாங்க !

மகாராஷ்ற்றாவுல  உதவ்தாக்கரே ,ராஜ்தாக்கரே ரெண்டு பேரையும் சிண்டு முடிஞ்சு விட்டாங்க !

பீஹார்ல லாலு குடும்பத்துக்குள்ள குத்து வெட்டு நடக்குது !

அண்ணன் மார்களே ! பாத்து பொழைச்சிக்கிடுங்க !!!




Tuesday, March 11, 2014

"தட்டியில் " த.மு.எ.ச  எழுதிவைத்தது .....!!!


  


tha.mu.e.sa...

"தட்டி" வைத்திருந்தார்கள்

அது நடந்து இருபதுவருடமிருக்கலாம்.மதுரையிலிருக்கும் எங்கள் தலைமை அலுவலகத்தில் கிளையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிக்கடி பயிற்சி வகுப்புகள் நடத்துவார்கள். கிளையிலிருந்து வரும் தோழர்களும் எங்களைப் பார்த்து அளவலாவலாம் என்ற மகிழ்ச்சியில் வருவார்கள்.காலையில் சீக்கிரமாக வந்து பேசிக்கொண்டிருப்போம்.

ஒரு முறை ஒரு தோழர் மிகுந்த மன உளைச்சலோடு வந்திருந்தார்.புதிதாக பதவி உயர்வு பெற்றவர் அவர்.அதிகாரிகள் என்ன சொல்வார்களோ என்ற பயமும் இருந்தது.நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் கூறினார்.அவர்கள் ஊரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது "நான்கு மணியானால் அவரவர்கள் வீட்டிற்குள் அடைந்துவிடுகிறார்கள் ஐந்து மணிக்கு இங்கிருந்து நான் கிளம்பி ஏழு மணைக்கு ஊர் போய் என் கிராமம் போவது ஆபத்தானது.பள்ளியில் படிக்கும் குழந்தைகளையும் கூட்டிச்செல் ல வேண்டும் "என்று வருத்தத்தோடு சொன்னார். மதியத்திற்குமேல் இரண்டு மணிக்கு கிளம்ப முடியுமா? என்றும் கேட்டார்.

அதிகாரியிடம் கேட்டபோது சம்மதிக்கவில்லை."யோவ்! நாளைக்கு ரசாபாசமாச்சு நீர்தான் பொறுப்பு" என்றதும் தயக்கத்தோடு சரி என்றார்.மதிய உணவு முடிந்ததும் தோழர் என்னிடம் விடை பெற வந்தார்.

வடநாட்டில் "ஜாட்"என்று ஒரு வகுப்பு உண்டு.ஆக்ரோஷமானவர்கள். அதே போல் தமிழ்நாட்டிலும் உண்டு.கரிசக்காட்டு புதரில் நம்ம ஊர் "ஜாட்" ஒருவர் கள்ளச் சாராயம் விற்று வந்தார்.நல்ல வியாபாரம். இதைப்பார்த்த பங்காளி ஒருவர் எதிக்கடை போட்டார்.வாய்ச்சண்டை, அடிதடி ஆயிற்று.மூத்தவர் இளையவரை "தூக்க" ஆளனுப்பினார்.இளையவர் புதருக்கு.முனியாண்டி வந்திருந்தான்.இளையவர் "முனியா! கொஞ்சம் கடையை பத்துக்க,இந்தா ஒதுங்கிட்டு வாரேன்"என்றார்

"தூக்க" வந்தவன் என்னத்த கண்டான்.கந்தக பூமில கொவில் பட்டர் கூட கருப்பு தான்

முனியன் சாஞ்சுட்டான்.சாராயக் கலவரம் சாதிக்கலவரமாய் விட்டது. விடைபெற வந்த தோழர் கிட்ட நான் " ஏன்யா! ஒரு கட்சி கூட வாயைத்திறக்கலையா?" என்று கெட்டேன்.உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சென்றார். கதவு வரை சென்றவர் திரும்பிவந்தார்."தோழர்! பஸ் ஸ்டாண்டில் ஒரு "தட்டி" வைத்திருந்தது" என்றார்."உயிரப் பறிக்கத்தெரிந்த மனிதர்களே உயிரை உங்களால் கொடுக்க முடியுமா. வாருங்கள் சாத்தூரை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம்" என்று எழுதியிருந்தது.என்றார் தட்டியின் கீழே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், சாத்தூர் கிளை என்றும் இருந்த்ததாக

சொன்னார்.நெஞ்சம் விம்ம நானும் அந்த சங்க உறுப்பினர்தான் என்றேன்.

    


Posted by kashyapan at 1:05 AM  

8 comments:


 காமராஜ் said...

இப்போது நினைத்தாலும் பூரிக்கிற விஷயங்களில் அதுவும் ஒன்று.அந்தத் தட்டியில் இருந்த வாசகங்கள் சாத்தூர் தமுஎச வுக்கு சொந்தமானவை.அப்போது ஒரு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தோம்.காவல்துறையின் உள்ளூர் அதிகாரிகள் மறுத்தார்கள்.சிறப்பு டி எஸ் பி ஒருத்தர் வந்து அவர்களை வாங்கு வாங்கென்று வாங்கினார். 'இந்தக்கையாலாகாத கட்சிக்காரங்க மத்தியில இவிங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கார்ங்களுந்தான் ஏதோ பண்றாங்க அதையும் வேண்டாமுன்னு சொல்லிட்டு வருஷம் பூரா மாயானக் காடாக்கச் சொல்ற்றிங்களா' என்று சொல்லிவிட்டு எங்களை அழைத்து அமரச்செய்து ஊக்கம் அளித்தார். ஊர்வலம் சகல பகுதி மக்களோடும் உணர்வுப்பூர்வமாய் நடந்தது. குழந்தைகளை முன்னாள் நடக்கவிட்டு 'ரத்தம் சிந்திய வீதிகளில் குழந்தைகள் எப்படி விளையாடும்' என்று கோஷம் எழுப்பினோம். நானும் மாதுவும் சேர்ந்தெழுதியது.அப்போது எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி எங்களோடு இருந்தார். தமுஎச தோழர்களின் குழந்தைகள் முன்னனியில் கோஷம் போட்டு வந்தநாட்கள் சாத்தூரில் எங்களுக்கு மிகுந்த மரியாதையையும் பெயரையும் வாங்கித்தந்தது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் ஊழியர் தோழர் ராமகிருஷ்ணனும் எங்களோடு இருந்தார்.

August 08, 2010 5:49 AM  

 kashyapan said...

மிகுந்த மகிழ்ச்சி காமராஜ்! சாத்தூர் வந்து தமுஎகச நண்பர்களிடம் நேரில் கூற ஆசை.முடியாமல் போய்விட்டது.குறைந்த பட்சம் இடுகை மூலமாவது தெரிவிக்கலாமே என்று எழுதினேன்.நினைக்க நினைக்க பிரமிப்பாக,வியப்பாக,இனிமையாக இருக்கிறது தமுஎச வின் செயல் பாடுகள்...காஸ்யபன்.

August 08, 2010 10:40 PM  

 மாதவராஜ் said...

தோழர்!


அந்த வெப்பமான நாட்கள் இன்னும் நினைவிலிருக்கிறது. இரவின் எந்த நேரம் வந்து இறங்கினாலும், சாத்தூர் மனித சஞ்சாரம் மிக்க இடமாய், சாவகாசமாய் இருக்கும். அந்தக் கலவரங்களுக்குப் பிறகு எல்லாம் பறிபோனது.எதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்னும் வேகம் இருந்தது. அதுதான் அந்த தட்டி போர்டும், நாங்கள் நடத்திய ஊர்வலமும். 


பகிர்வுக்கு மிக்க நன்றி.

August 09, 2010 2:56 AM  

 kashyapan said...

மாதவ்ஜி! அந்தத் தட்டியை வைத்தது என் மதிப்பிற்குரிய" களவாணிகள்" நீங்களிருவரும் தான் என்பது இது நாள் வரை எனக்குத்தெரியாது.காமராஜ்,மாதவ்ஜி எவ்வளவு பிரியமான,பெருமைக்குரிய நட்பு...வாழ்த்துக்கள்.....காஸ்யபன்.

August 09, 2010 5:44 AM  

 charliecharlie2007 said...

Friday, March 07, 2014

அந்த பல்கலைக்  கழகத்தில் படித்தவன் நான் ..... !

தோழர் எட்வின் அவர்கள் ஓசைப் படாமல் சில கரியங்களைச் செய்வார் ! வரலாற்றில் புகழ் மிக்க புதல்வர்களின் முதல் சந்திப்பை பற்றிஎழுதி வருகிறார் ! மார்க்ஸ் அவர்களும், ஏங்கல்ஸ் அவர்களும் முதன் முதல்   சந்தித்ததுபற்றிஎழுதசிலதகவல்கள்தேவைஎன்றுமுகநூலில் கேட்டிருந்தார்! 

சம்மந்தமில்லாமல் ஆஜராவதில் எனக்கு மகிழ்ச்சி அதிகம் ! அவருக்குதொலை பேசி மூலம் சில தகவல்களைச் சொன்னேன் !!

பாரதி பற்றிய மலர் கொண்டுவர 1982ம்ஆண்டு"தீக்கதிர்" முடிவு செய்தது!
பாரதியின் காலம்,பாரதிக்கு முன்பு , பாரதிக்கு பின்பு என்று மூண்று பேர்களுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டு எழுத ஆரம்பித்தோம் !

பாரதிக்கு முன்பு இருந்த அரசியல் நிலைமை பற்றி நான் எழுத வேண்டும் ! திணறி விட்டேன் !

பேய் முழி முழித்துக் கொண்டிருந்த என்னைப்பார்த்து " என்ன ? சாமா! பாரதி தனி நபர்களை பற்றி அதிகம் பாடியதில்ல! ததா பாய்ரச  \ நௌரோஜி, ராஜாராம் மோகன் ராய்,திலகர்,கோகலே,காந்தி ஆகியவர்களை பாடியிருக்கிறான் ! அவ்ர்கள் அரசியல் தான் பாரதிக்குமுன்பிருந்த அரசியல் "என்றார் ஐ.மாயாண்டி பாரதி!  !ஒரு  புத்தகத்தையும் கொடுத்தார் !

முதலமைச்சர் காமராஜர் சுதந்திர போராட்டம் பற்றி  எழுதச் சொன்ன நூல் !
சத்திய மூர்த்தியின்மகள் லட்சுமி மேற்பார்வையில்வந்தது !

ஒவ்வோரு மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய குறிப்பு அதில் உள்ளது ! அதோடு இந்திய அளவில் உள்ள போராட்ட வரலாறும்  உண்டு !

நௌரோஜி லண்டன் சென்று தேர்தலில் நின்றது அவர் சோசலிஸ்ட் கட்சியில் நிற்பதை   காங்கிரஸ் எதிர்த்தது என்று பலதகவல்கள் உள்ளன !
லண்டனில் இருக்கும் பொது "indias poverty and British tyrany "என்ற நூலை எழுதியது அதற்காக நூலகம் சென்றதும் குறிப்பிடப்பட்டுள்ளது !

இதே சமயத்தில் தான் மார்க்ஸ் அவர்களும் தனது மூலதனம் நூலுக்காக 
வருவாராம் !

பல நாட்கள் வருகைப்  பதிவேட்டில் அடுத்து அடுத்து அவர்கள் கையெழுத்து 
காணப்படுகிறது ! அவ்ர்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கியாவது இருக்கலாம் ! என்ன செய்ய ! லண்டன் சென்று மேலும் ஆராய எனக்கு வசதியில்லயே ! என்ற குறிப்பும் அதில் உள்ளது !

இந்த தகவலைத்தான் எட்வின் அவர்களிடம் சொன்னேன் !

எட்வின் ஓசைப்படாமல் இதனை முடிப்பார் !

தோழர் முடிப்பார் !!!

(எப்பட்ப்பட்ட அனுபவம் ! முத்தையா, சண்முக சுந்தரம்.ஐ.மாயாண்டி பாரதி ,எல்லாவற்றுக்கும்மேலாக எம் ஆர்.வேங்கடராமன் இந்த பேராசிரியர்களிடம் 
படித்த  நான்   பாக்கியவான்தான்.அந்தபல்கலைக்கழகத்தில் படித்தவன் நான் ) 









Thursday, March 06, 2014

மக்கள் ஒற்றுமைப் பணியில் 

த.மு.எ.ச ........!!!


அசோக் , மற்றும்  அன்சாரி பற்றிய பதிவினை எழுதும் , போது தமிழ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி  நினைவிலாடியது !

கோவையில் நடந்த கலவரமும் ,அதன ஒட்டிய அடக்கு முறையும் மனதில்தோன்றி  மறை ந்தது !

சிறபான்மை முஸ்லிம் மக்கள் வாழுமுக்கடம்,கோட்டைமெடுபகுதியில் வசிக்கும் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல்தவித்தனர் ! 

நகரத்தில் நடந்த கலவரத்தில் வியாபார தலங்கள் தாக்கப்பட்டன ! பிரும்மாண்டமான ஜவுளிக்கடைகளான "ஷோபா,மற்றும் ராஜேந்திரா என்ற நிறுவனங்கள் தாக்கப்பட்டன ! இது பற்றி கேட்க யாருமின்றி நகரமே ஸ்தம்பித்து இருந்தது !

இந்த சந்தர்ப்பத்தில் தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு கோவையில் நடை பெற்றது !

பிரும்மாண்ட மான முறையிலிந்த மாநாட்டில் சீத்தாராம் எச்சூரிகலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் ! பின்  நவீனத்துவம்  பற்றி அவ்ர் பேசிய உரை தனியாக பிரசுரமாக சங்கத்தால் போடப்பட்டது !

இறுதியினாளன்று வழக்கம்போல கலை இர்வும் நடத்தப்பட்டது ! கலவரம் நடந்த பின்னணியில் எந்த பொது நிகழ்ச்சியும்னடத்தப்படாத நிலையில் நிர்வாகிகள் மக்கள்மத்தியில் கலைஇரவு நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது !

"நாம் மக்களுக்காக இருக்கிறோம் ! நம்மை அந்த மக்கள் பாதுகாப்பார்கள் " உறுதி பட முடிவு செய்த தலைமையின் கூற்றை  மெய்பிப்பது போல பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர் !

மேடையில் ஷோபா  ஜவுளிக்கடை முதலாளி அழை க்கப்பட்டிருந்தார் ! அவருக்கு அருகில் ராஜேந்திரா ஜவுளிக்கடை முதலாளி அமர்ந்திருந்தார் ! இதனைப்பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் பார்த்திராத ஓன்று ! 

ஷோபா கடை பாய் ராஜேந்திரா முதலாளிக்கு  பொன்னாடை போர்த்தினார் ! ராஜேந்திரா முதலாளி ஷோபா கடைமுதலாளிக்கு பொன்ஆடைபோர்த்தினார் ! 
இருவரும் மேடையை விட்டு இறங்க " நிகழ்ச்சியை நடத்துக்கொண்டிருந்த கவிஞர் நந்தலாலா " ஒருநிமிடம் ! நில்லுங்கள் " என்றார் ! 

கூடியிருந்த மக்கள் ஸ்தம்பித்து நின்றனர்1
 "ஐயா ! நீங்கள் இருவரும் உங்களுக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடைகளை   மாற்றி கொள்ளுங்கள் " என்றார் !
மாற்றிக் கொண்டனர் !!
ஆயிரம் ஆயிரமாக கூடியிருந்த அந்த மக்கள் கண்கள் பனிக்க கைதட்டி ஆரவரித்த் அந்த காட்சி !!!

தோழர்களே  ! உங்களால்தான் முடியும் !
உங்களால் மட்டுமே முடியும் !!!!!  









  

 

Wednesday, March 05, 2014



































தோழர்களே உங்களால் மட்டுமே இது சாத்தியம் !!!


அசோக் மோசி ஒரு தலித் ! செருப்பதைக்கும் தோழிலாளி ! குத்புதீன் அன்சாரி தையல் தோழிலாளி !இருவருமே கஞ்சிக்கு செத்தவங்க ! அசோக்கின் ஆவெசத்தை பத்திரிகைகள்  வெளியிட்ட படங்களில் பாத்திருப்பீர்கள் !  பஞ்சரங்க் தளம் அவனுள் ஏற்றிய வெறியின் வெளிப்பாடு அது  !


அந்த வெறிக்கு முன்னால் அன்சாரியின் கதறலையும் உலகம் பூராவும் பார்த்தது ! அன்சாரி தப்பி விட்டான் ! அவன் எங்கு இருக்கிறான் ! மே.வங்கத்தில் இருக்கிறான் என்றார்கள் ! பீஹாரில் இருக்கிறான் என்றார்கள் ! 


அவர்கள் இருவரையும் நேற்று இந்திய பத்திரிகைகள் முதல் பக்கத்தில்போட்டு செய்திகளை வெளியிட்டிருந்தன ! 


அவர்கள் இருவரும் தலைசேரியில் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர் ! அவ்ர்களை தனித்தனியாக ரயிலில்பயணம் செய்வித்து குஜராத்திலிருந்து சில முற்பொக்கு கலைஞர்களும் எழுத்தாளர்களுஅழைத்து வந்திருக்கிறார்கள் என்று செய்திகள் சொல்கின்றன !  


அசோக் மலர்கொத்தை அன்சாரியிடம் கொடுக்கிறான்! அன்சாரி அதன பெற்றுக்கோள்கிறான் !

இருவரும் இணந்து மக்கள் ஓற்றுமைக்கான பாடலைப் பாடுகிறார்கள் !


பாரதமே பரவசத்தில் ஆனந்த கண்ணிர் விடுகிறது !


என் அருமைத்  தோழர்களே உங்களால் தான் இது து சாத்தியம் !

உங்களால் மட்டுமே இது சாத்தியம் !!!உங்களால் மட்டுமே இது சாத்தியம் !!!