Monday, June 25, 2012

குடியரசுத் தலைவர் .............

 குடியரசுத் தலைவர் .............

குடியரசுத்தலைவர் தேர்தல் நடக்கப் போகிறது. சங்மா    நினைத்து  பார்க்கமுடியாது.கலாம்    நினைக்கவே இல்லை என்று அறிவித்து விட்டார். இருந்தாலும் பத்திரிகைகள்  ஏதோ போட்டி இருப்பது போல்
எழதுகின்றன.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது போல் தோற்றம் . உண்மையில்முடிவு செய்தது நம்ம ஊர் முதலாளி மார்கள் !!  அவர் வந்தால் அவர்களுக்கு நல்லது செய்வார் என்பதால் அல்ல!

நிதி அமைச்சகத்தில் அவர் கிழித்தது போதும் என்பதுதான் காரணம்..வரி போடும் பொது எந்தத் தேதியிலிருந்து வரி போடவேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்கிறார் முகர்ஜி .இவர்களோ பின் தேதியிட்டுத்தான் போடவேண்டும் என்கிறார்கள்.சட்டத்தில் வரி  எய்புக்கான ஓட்டைகளை அடை க்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் கருப்புப் பணத்தை கொண்டுவரவது இருக்கட்டும். உள்நாட்டில் அது உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.  நிதி அமைச்சகத்திலிருந்து இந்த மனுஷனை தூக்க நோகாமல் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டார்கள்.

அந்நிய முதலாளிமார்கள் முட்டைச்சொரிந்து கொண்டிருப்பார்களா! வோடாபோன் கம்பெனி விவகாரத்தில் பிரிட்டனும் ,நெதர்லாந்தும் பண்ணிய அழிச்சாட்டியம் உலகமறிந்தது

இரானோடு வர்த்தகம் கூடாது. சிலரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டு ஆகியவற்றை அமல்படுத்த திருமதி கிளிண்டன் வந்தார்.

ஏர்செல்-மாக்சிஸ் இணைப்பு ,ஐரோ யுத்தவிமானம் வாங்குவது என்று பிரிட்டனும் மற்ற நாடுகளும் ஆலாய் பறக்கின்றன .

போபர்ஸ் பிரங்கி உழ்லில்  சிக்கிய குத்ரோசி யப்பிடிகமுடியவில்லை .
அவர் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.பி.ஐ 
சொல்லிவிட்டது  பத்திரிகையில் மட்டும் அவரூடைய பெட்டி தினம் வருகிறது.

புதிய செய்தி ஒன்று வந்திருக்கிறது.பிரணாப் முகர்ஜிக்கு ரொம்பபிடித்த தகலைவர் டெங் சியோ பிங் என்ற செய்தி தான் அது..

சாமிகளா! எங்கள கொல்லாதீங்கடா!!








Wednesday, June 20, 2012

குன்றின் மேல் ஏறியவர்கள் .............



                                     டெல்லியின்  மட்டத்திலிருந்து எழுணூறு மீட்டர் உயரத்தில் இருப்பதாக கருதப்படும்  ஜனாதிபதி  மாளிகையில்    யார் ஐந்து ஆண்டுகளுக்கு வசிக்கப் போகிறார்கள் என்பது பற்றி பத்திரிகைகள்   எழுதி வியாபாரத்தைப் பார்க்கின்றன.அந்த மாளிகை இருக்கும் இடம்தான் ரெய்சினா குன்று என்று கூறப்படும் பகுதி.

                                                          இந்த மாளிகை கட்டப்பட்டு   முதன்முதலாக 1931ம் ஆண்டு ஜனவரி மாதம்
 23ம தேதி அப்போது வைசிராயாக இருந்த இர்வின் பிரபு  குடி  புகுந்தார்
.பிரிட்டிஷ்
 மன்னர் 1911ம ஆண்டு இந்தியாவிற்கு வந்தார் .அதுவரை கல்கத்தாவில் இருந்த தலைமை இடத்தை டெல்லி கொண்டு வர  பிரிட்டிஷ்  அரசு  முடிவெடுத்தது.

                                            லண்டனில் அதற்கான வரைபடங்கள் உருவாக்கப்பட்டன.
பிரும்மாடமான மாளிகை, அதன் அருகே  செயலகங்கள்  என்று முடிவாகியது. டெல்லியின் புறப்பகுதியிலிருந்த " ரெய்சினா "    குன்று  இதற்காக  தேர்ந்தெடுக்கப்பட்டது  .1912ம  ஆண்டு  கட்டுமான  வேலை  துவங்கியது.    ஆனால் முதல் உலக யுத்தம் வந்ததால் கட்டிடப் பணி சுனங்க ஆரம்பித்தது. இந்த மாளிகையைக்  கட்டிமுடிக்க  பத்தொன்பது        ஆண்டுகள் ஆகியது..

                                             மாளிகை 4000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவானது. அதிலிருந்து வரும் சாலை கிழ்க்கு -மேற்காக செல்ல இரண்டு பக்கமும்  வடக்கு- தெற்காக  செயலக கட்டிடங்கள் வந்தன.

                                                நான்கு மாடிகள்.மொத்தம் 360 அறைகள் புகழ்   பெற்ற
"மொகல் கார்டன்ஸ் .". டெல்லி சென்றால் கண்டிப்பாக பார்க்கவேண்டிய கட்டிடம்..

                                               எனக்கு எப்போதுமே கொஞ்சம் கிறுக்கு புத்தி உண்டு .

1984ம ஆண்டு பிரிட்டிஷ் அரசு நிலா ஆர்ஜித சட்டத்தைக் கொண்டு வந்தது.அதன் அடிபடையில் தான் குன்றை தன வசப்படுத்திக் கொண்டது..
அந்தக் குன்றில் இரண்டு கிராமங்கள் இருந்தன. பழ்ங்குடி
மக்கள் வாழ்ந்தனர்.சுமார் 300 குடும்பங்கள் இருந்தன. ரெய்சினா,பால்சா என்று அந்த கிராமங்களின் பெயர்..

                                               அந்த கிராமங்களைக் காணவில்லை. அந்த மக்கள்  என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை.

                                                   அந்த குன்றின் அடிவாரத்தில் "ரியல் எஸ்டேட் "காரர்கள்
2bhk ,3bhk பிளாட்டுகள் போட்டு விளம்பரங்கள் வருகின்றன.
 .   



Friday, June 15, 2012

கார்டுனிஸ்ட்கள் பாடு........ .......

கார்டுனிஸ்ட்கள்  பாடு  .........

                         

                      உலகத்தின் மிகச்சிறந்த பத்து கார்ட்டுநிஸ்டுகளைத் வரிசைப் படுத்தினால் அதில் இந்தியர்கள்    இரண்டு பேர் இருப்பார்கள்  .ஒருவர் "சங்கர்". மற்றோருவர் "ஆர்.கே.லஷுமணன் . இவர்கள்  ஐம்பது  அறுவது  வருடங்களுக்கு முன்னால் போட்ட கார்டுன் இன்று மிகப்பெரிய சிக்கலை
உருவாக்கியுள்ளது. .

                        இந்தியா சுதந்திரமடந்ததும்  அதற்கான அடி ப்படை  அரசியல்  சட்டத்தை உருவாக்க 
அரசியல்     நிர்ணய  சபை முடிவு  செய்தது  .அரசியல்சட்டத்தை  வடிவமைக்க  ஒரு குழுவையும்  தேர்ந்தெடுத்தது   அந்தக் குழுவில் உறுப்பினர்களாக கே.எம்.முன்ஷி ,அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ,என்.கோபாலசாமி
அய்யங்கார்,மிட்டார் ,சாதுல்லா ,கைதான் ஆகியோர் இருந்தனர்.
,

        முன்ஷி 

                  லட்சுமி காந்தன் கொலை வ ழ்க்கில்  என்.எஸ்.கிருஷ்ணனுக்காக
 வாதாடி வெற்றி பெற்றவர். அவருடைய வாததிறமையாய் கேட்க மற்ற நீதிபதிகளே மன்றத்திற்கு வருவார்களாம.

                              ஆந்திராவின் நெல்லூரில் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமி மெட்ராஸ் மாகாணத்தின் அரசு வக்கீல்.

                      
  அய்யங்கார் ஜம்மு-காஷ்மீரின்  பிரதமராக  இருந்தார்  .சர்வதேச  நீதி 
றத்தில் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா சார்பாக வாதாடியவர்.நேரு
 அமைசரவையில் இருந்தார். SIR ,MSM ,BNR  என்று தனியார் வசம் இருந்த
 ரயில்வேயை அரசுடைமையாக்கி
உலகத்தின்  பிரும்மாண்ட அமைப்பாக  இந்திய ரயிவோயை உரூவாக்கி உலகை வியக்க வைத்தவர்.


                     மத்திய அரசின் அரசு வக்கீலாக இருந்தவர் மிட்டார் அவர் விலக நேர்ந்தபோது அவருக்குப் பதிலாக மாதவராவ் வந்தார்.

                     இந்தியாவின் தொழிலதிபர்கள் குடும்பத்திளிருந்துவன்தவர் கைதான். அவர இறந்ததால் அவருக்குப் பதிலாக வந்த டிடி கிருஷ்ணமாச்சார்  கல்லுரி பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.

                       இந்தக்குழுவுக்கு ஆலோசகராக இருந்தவர் பெநகல்  நரசிங்க ராவ். இவர் சர்வ தேச நீதி மன்ற நீதிபதியாக இருந்தவர்.

                           இந்த குழுவின் தலைவராக ஒப்பாரும் மிக்காருமில்லாத அண்ணல் அம்பேத்கர் இருந்தார்.

                             ( இந்தக் குழு உறுப்பினர்கள் ஒன்றும் செய்யாமல் அத்துனையையும் அம்பேத்கர் செய்ததாக  பிரச்சாரம் செய்தவர்களும் உண்டு)

                             உலகத்திலேயே மிகச்சிறந்த அரசியல் சட்டம் என்றால்
அவை நான்கு.  
கானடா,சுவிஸ் சோவியத் நாடு. ஆஸ்திரேலியா ஆகியவைதான் அவையாகும். இந்த நாடுகளில் மைய அரசும் உண்டு.தனியான பிரதேச அரசுகளும் உண்டு ,மைய அரசு பிரதேச அரசுகளுன் உரிமையைப் பறிக்கமுடியாது பிரதேச அரசுகள் மைய அரசைப் பலவீ னப்படுதத முடியாது.

                             கானடா நாட்டின் சட்டம் உருவாக இரண்டு ஆண்டுகளும் ஐந்து மாத
ங்களும் ஆயிற்று .ஆஸ்திரேலிய உருவாக ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று.

.                          ஆசிய ஆப்பிரிக்க மக்களின் ஈரலை வெந்து , வறுத்து,  போரித்து சாப்பிட்டவர்கள்  ஐரோப்பியக்  காலனி   ஆதிக்கவாதிகள்   ..தாங்கள் சுரண்டிய நாட்டை  சுதந்திரமாக வாழ விட்டதில்லை.வியட்நாமை
 வடக்கு,தெற்கு என்றார்கள் கம்போடியா,லாவோஸ் ,இந்தோனிஷியா,கொரியா
எதையும் விட்டு வைக்கவில்லை அபிசினியா,காங்கோ,என்று அவர்கள் நடத்திய அராஜகம் கொஞ்சமல்ல.
     .    .
                                 ஆனால் இந்தியா, பாக் , இலங்கை, பர்மாஆகிய நாடுகள் சுதந்திர மடைந்த பொது இப்படியாகவில்லை  .இதற்குக்  காரணம்  அவர்களின்   நல்       எண்ண மல்ல."மடத்தனமாக அட்லி  பிரபு  சுதந்திரம் கொடுத்துவிட்டான் இல்லையென்றால் இந்தியாவே இருக்காது.ஐம்பத்தாறு தேசங்களாக  பிரிந்து ஐரோப்பிய நாடுகளின் மாவட்டங்களாகியிருக்கும்" என்று  பேராசிரய நண்பர் கூறுவார் . .

                                    பிரிட்டன்,பெல்ஜியம்,பிரான்சு,ஜெர்மனி,இத்தாலி ஆகிய நாடுகள்
 இரண்டாமுலகப்போரில்  குறுக்கு ஒடிந்து குப்புற விழுந்து கிடந்தன.அவர்கள்  எழுவதற்குள்.காரியங்களை முடிக்க வேண்டும் என்று தலைவர்கள் நினைத்தனர்.    
                         
                                      1947ம ஆண்டு சுதந்திரம் பெற்றாலும் நமது ராஜா பிடிட்டி ஷ்  ராஜாதான்.விரைவில் குடியரசாக வேண்டும்.அதற்கான சட்டங்களை விரைவு படுத்த வேண்டும்  .அதனை  தாமதப் படுத்த  சிலர் இருந்தனர்.சட்டம் நிறைவேறியவுடன் அம்பேத்கர் கூ றி யது இங்கு நினைவு கூற தக்கது. நமது சட்டத்தை நாம் இரண்டு ஆண்டுகள் பதினொரு மாதத்தில் நிறை வேற்றியுள் ளோம் நம்முதுகில் தட்டி பாராட்டிக் கொள்ளலாம்."என்றார்

                                         அம்பேத்கரும் சட்டத்தை விரைவாக கொண்டுவர விரும்பினர்.
அதனால் தான் சங்கர் தன கார்டுனில்    "அவர்  கையிலும்  ஒரு  சவுக்கை"  கொடுத்தார்.

Tuesday, June 12, 2012

inthi ethippu pOraattaththin pOthu ............

                                                        இந்தி  எதிர்ப்பு போராட்டத்தின் போது ......... 

                                     1954ம் ஆண்டு -தி.லி.ஜங்கஷனில்  "இந்து" கல்லூரியில்  இன்டர் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தி  எதிர்ப்புப்  போராட்டம்நடந்தது . கடயநல்லூர் சத்யமுர்த்தி,ஷாகுல் ஹமிது,.எ.எல் சுப்பிரமணியம் என்று சேர்ந்தார்கள். ".  படியும் பண்ணிசைக்கும் பச்சையப்பன் கல்லூரியில் வேலை நிறுத்தம்! இடிந்த சுவரும் இன்  கவிபாடும்   இந்து கல்லூரியில் வேண்டாமா! வாருங்கள் தோழ்ர்களே! என்று ஒவ்வொரு வகுப்பறயாக. சென்று அழைப்போம் . போராட்டம் வெற்றி .

                                      எனக்கு பலகலைக்கழக  தேரவு எழுத தேந்தெடுக்க மறுத்துவிட்டார்கள் '


                                       வசதியான குடும்பம் என்று சொல்லமுடியாது. மணிமுத்தாறு அனைத்திட்டத்தில் தினக்கூலியாக சேர்ந்தேன் .வயதாகவில்லை என்பதால் boy சர்வீஸ்.ஒரு     நாளைக்கு 14 அணா கூலி.அங்கிருந்து  நாகபுரி   ,பின்  சேலம்   மேட்டூர்   ,ஹைதிராபாத் என்று சுற்றினேன். .நாகபுரியிலும், ஹைதிராபாத்திலும்  " பானி லா " என்று கூற மாட்டேன் .bring water  என்று என் கற்பை காப்பாற்றிக் கொள்வேன்..அப்போதெல்லாம் தபால் கார்டு காலணா. அதில் முகவரி எழுதும் இடத்திற்கு  எதிராக உள்ள காலி இடத்தில் கிழே இடது ஓரத்தில் "do notimpose Hindi ;down with Hindi Imperialism "என்று அச்சடித்து   அதனைத்தான்  பயன்படுத்துவோம்.  

                                       ஹைதிராபாத்தில்  ஹுசைன் சாகர் ஏரிக்கரையில் ஒருசின்ன -குன்று கூட அல்ல வெறும்  பாறை கள்  கொண்ட  மேடு இருக்கிறது அதன் உச்சியில் சில நன்பர்களோடு  சேர்ந்து கொண்டு "திராவிட நாடு     திராவிடருக்கே "என்று எழுதுவோம்  .இப்போது அந்தப் பாறை களைப்பெயர்த்து "பிர்லா" கோவில் கட்டிவிட்டார். அலுவலக நண்பர்கள் "க்யா ரே கஜகம் " என்று வித்தாரம் பேசுவார்கள்..குஜராத்தி,பெங்காலி  நண்பர்கள் "then why should u work in lic of india ? என்று கேட்பார்கள். மிகவும் நிதானமாக  "to earn foriegn exchange to my mother land "  என்பேன்.நாங்கள் எங்களை " dlf" என்று கூறிக்கொள்வோம்  "dravidian liberation force "

                                        என்ன செய்ய? யாரக் கேட்க? அண்ணா பிரிவினையை கைவிட்டார். நாங்கள் சிலர் பித்துப்பிடித்து அலை ந்தோம் நான் ஆன்மிகத்தை நாடினேன் ஹைதிராபாத்  keys பள்ளியில் நடக்கும் சின்மயா பிரசங்கத்தைக் கேட்பேன்.ஒருகட்டத்தில் பம்பாய் பாவை யில் நடக்கும் சாந்திபணி கல்லூரியில் சேர்ந்து "பரிவ்ராஜகனாக" மாறி  மக்களை  மறந்து மகேசன் சேவைக்குபுறப்பட ஆயத்தம் செய்தேன்.  என் குடும்பமும்,அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கமும் என்னை திசை திருப்பி ஆட்கொண்டதுமதுரைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டேன். மனதளவில், தத்துவார்த்த அளவில் மாற்றம்    கொண்டேன்.

                                        1965ம் ஆண்டு.   இந்தி மத்திய ஆட்சி  மொழியாவதை  எதிர்த்து  மாணவர்கள்  ஊர்வலம்  நடத்தினார்கள் .மதுரையில்   மேலமாசி வீ தி  கடந்து  வடக்குமாசி  வீ தி க்கு  ஊர்வலம்  வருகிறது  .ராமாயனச்சாவடிஅரு   கில்    காங்கிராஸ் காரர்கள் வேடிக்கை     பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒருவன் பெயர் வீரய்யன்.   அவன் மாணவர்களை கிண்டல் 
செய்து கொண்டிருந்தான்..பதிலுக்கு மாணவர்கள் பேச தள்ளு முள்ளு ஆகி தாக்குதல் பதில் தாக்குதல் அருவாள் என்றாகிவிட்டது.வெவ்  வேறு  ஊர்களுக்கு வெவ்வேறு தகவல் போக தமிழ்நாடு முழுவதும்கலவரம் பரவியது..மணப்பறை ரயில் நிலையம் தீயிட்டு
கொளுத்தப்பட்டது.அரசு அடக்குமுறையை ஏவிவிட்டது.மதுரையை கேந்திரமாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட்டனர்.

                         அரசின் கேடுபிடி அதிகமாகியது   .கைது  படலம்  துவங்கியது  .ஆங்காங்கே  வன்முறைச்சம்பவங்கள்  நடந்தான்  ..போராட்டத்தை தி.மு.க துண்டிவிடுவதாக அரசு  அறிவித்தது. தி.மு.க துண்டிவிடவில்லை என்று அண்ணா அவர்கள் அறிக்கை விட்டார்கள். தலைமையில்லாமல் மாணவர்கள் தவித்தனர். மதுரையில் மருத்துவக் கல்லுரி மாணவர்கள் முன்கை எடுத்திருந்த.னர் .டாக்டர் செதுராமன்,டாக்டர் சீனிவாசன் ஆகியோர் செயல்.   பட்டனர் அவர்களுக்கு  தொழிற்சங்கங்கள் உதவ முன்வந்தன.வக்கீல் புதுத்தெருவில் இருந்த lic உழியர் சங்கம.சுற்றறிக்கை ஆகியவைகளை தயாரிக்க உதவியது.மோப்பம்பிடித்த போலிஸ் சங்கத்த்ளைவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றது.

                             கம்யுனிஸ்ட் கட்சியை  சேர்ந்த மோகன்  குமாரமங்கலம்  தலையிட்டு  அரசொடு பெச்சுவார்த்தை  நடத்தினார் . .இந்திரா  அம்மையார் இந்தி பேசாத மக்கள்விரும்ம்பும் வரை ஆங்கிலமும் தொடரும் என்று அறிவித்தார்..

                              இந்தி பேசும் மக்கள் ஆங்கிலம்,அல்லது இந்தி என்றால்  அவ்ர்கள்  தாய் மொழி இந்தி சவுகரியம். இந்திபெசாதமக்களுக்கு அவர்கள் தாய் மொழி என்னாவது.?இதனை சரி செய்ய மும்மொழிக்கொள்கை என்றார்கள்.இந்தி பேசுபவர்கள் ஆங்கிலம்,இந்தி தவிர இந்திபேசாத மக்களின் மொழி ஒன்ரைக்கற்க வேண்டும் என்றார்கள.
ஆங்கிலம்,இந்தி,தமிழ் ஆகியவற்றை நாம்படிக்கலாமேன்றார்கள்..ஆனால்திமு.க இதனை ஏற்கவில்லை. மற்ற இடங்களிம்மும்மொழி க்கொள்கை யும்,,தமிகத்தில்  இருமொழிக்கொள்கையும் அமலாயிர்று. இங்கு தமிழ், ஆங்கிலமேன்றாயிர்று. காலப்போக்கில் ஆங்கிலம் முன்னணிக்கு வந்துவிட்டது கேரளா,கர்நாடகா,ஆந்திரம் ஆகிய இடங்களில் மும்மொழிக்கொள்கைகளின் பலனை அனுபவிக்கிறார்கள்.. 
.
                       


..

                                                              

Saturday, June 09, 2012

vakai sooda vaa

                                                         
                                                           "  வாகை சூட வா "             

                   நாடக விற்பன்னரும் கவிஞருமான தோழர் பிரளயனின் கவிதை "களவாணி"    என்றபடத்தில் வருவதாக அறிந்தேன். அந்தப் பாடலை கலை இரவுகளில் கேட்டிருந்தாலும் திரைப்படத்தில்  எப்படி படமாக்கியிருக்கிறார்கள்(takings ) என்று பார்க்க ஆர்வமாக இருந்தது.படத்தைப் பார்த்தேன். மொத்த படமும் மனதை நெருடியது."ஒரு வசமான கை " திரைத்துறைக்கு கிடைத்திருக்கிறது "சற்குணம்" என்ற பெயரில் என்று மகிழ்ந்தேன். 

                                அவருடைய "வாகை சூட வா " என்ற படம் பற்றி பல பத்திரிகைகள் மிகவும் பாராட்டி எழுதியிருந்தன."அழகான,முழுமையான  சமுக பிரக்ஞைஉள்ள , படம்" என்று sify  எழுதியிருந்தது.மனித பலவினத்தை சித்தரித்தாலும் , மிகச்சிறியதாக இருந்தாலும் பரந்த இதயத்தை ,வாழ்க்கையின் வெற்றி பணத்தினால் பெறுவது அல்ல என்று times of india  குறிப்பிட்டிருந்தது சுவாரச்யம்  அற்ற  போழுது போக்கு படங்களின் மத்தியில் மனதை உருக்கும் கருவோடு , கிராமத்து நுண்ணறிவோடு கூடிய சிறுவர்களின் நகைச்சுவை கலந்த காட்சிகளைக் கொண்ட படம் என்று hindu பத்திரிகை குறிப்பிட்டிருந்தது .

                               சமிபத்தில்தமிழ்கம்சென்றிருந்த   பொது பார்க்கமுடியவில்லை. சென்றவாரம் தனியார் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

                                 அரசு பணியில் சேர குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினால்  தன்னார்வத்தொண்டு நிறுவனம்  கொடுக்கும் சான்றிதழ்  உதவும் என்று கருதி  அங்கு  செல்லும்  வேலு  என்ற  இளைஞனின்  பாடுகள் தான் படம். செங்கற் சூளையில் பணியாற்றும் அந்த அப்பாவி மக்களும் கொத்தடிமையாக பாடுபடுகிறார். கள் .அவர்கள் மத்தியில் சிறுவர்களும் உழைக்கிரார்கள்.  அவர்களுக்கு கல்வி புகட்ட வேலு படும்பாடு , சிறுவர்களின்  குறும்பு,             டிக்கடைநடத்தும்    மதி என்ற பெண் ,வேலு-மதி  இடையே  உருவாகும்  பற்று  ஆகியவை  அற்புதமாக  சித்தரிகப்பட்டுள்ளது. 

                                  வேலுவுக்கு அரசுப்பணி கிடைத்தாலும் மனம் மாறி கற்பவர்களை விட்டுக் கொடுக்க மனமிலாமல்   அரசுப்  பணியை உதறிவிட்டு அந்த மக்கள் பணியத் தொடருகிறான்.

                                    விமல்,இனியா,பாக்கியராஜ்,தம்பிராமையா என்று சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்..கலைஇயக்குனர்  சீனு ஒரு குக்கிராமத்தையே நிர்மாணித்துள்ளார் . சிலோன் ரேடியோ வில் அறிவிப்பாளரின் குரலை  அப்படியே கொண்டுவந்த சிரத்தை  பாராட்டுக்குரியது.

                                      மிகவும் நுட்பமான முறையில் வேலு - மதி பற்றை வெளிப்படுத்திய பாங்கு சிறப்பு.விமலின் பார்வை,மதியின் துடிக்கும் உதடுகள்,கசியும் கண்கள்,ஆகியவை உணர்வுகளை அற்புதமாக அர்த்தப்படுத்துகின்றன.

                           
                                          சிறந்த தமிழ்ப்படமாக தேசிய விருது பெற்றுள்ளது .நார்வே நாட்டு விருதினையும் பெற்றுள்ளது

                                           தேடித்தேடி அலைந்து நல்லபடங்களை தேர்ந்தேடுக்கும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் இந்த ஆண்டின் சிறந்தபடமாக விருது"வாகை சூட வா " படத்திற்கு   வழங்க உள்ளது.






.





                                                                     

Wednesday, June 06, 2012

தி.லி டவுண், சுடலை மாடன் கோவில் தெருவுக்குப்  போனேன்.........


                              கைபேசி சிணுங்கியது. "வள்ளி நாயகம்  பேசுதேன். பெரியவர் பெசனுங்காறு "

                               "சரி!கொடுங்க " கைமாறும் ஓசை .


                                 "யாரு! காஸ்யபனா!  ஐயா  தெக்க  வராப்ல கேள்விபட்டேன். சந்திக்கணும் . "


                                   " கண்டிப்பா" "

                                  " விருதுநகர்ல  பாத்தது. பேசமுடியல. ரெண்டு மணி
 நேரமாவது பேசணும்"


                                    "மே 15   சாயங்காலம் 5 மணிக்கு உங்கவீட்ல இருக்கேன்!.சரியா "


                                    "அம்மையாரோட  வரணும் "

                                    "வந்துருவம் "



                                                         மே 15ம தேதி மாலை 5 மணிக்கு சென்றேன் . அது எனக்கு ஆஸ்ரமம். என் கையில் பேனாவைக் கொடுத்து "எழுதும்யா " என்று கூறி என்னையும் ஒரு எழுத்தாலனாக்கிய திகசியின் வீடு எனக்கு மட்டுமல்ல  முற்போக்கு எழுத்தாளர்கள் பலருக்கு அது ஆச்ரமம்தான்.


                                                            படிப்பு முடிந்த்தும் வங்கியில்செர்ந்தார். தொழிற்  சங்கத்தை ஆரம்பித்தார். கருமுத்து தியாக ராஜ செட்டியார் விடுவாரா? ராமநாதபுரத்திற்கு மாற்றினர் .அங்கும்  சங்கத்தை துவக்கினார் செட்டியார் கொயம்புத்துருக்கு தூக்கினார்..அங்கும் சங்கம் வந்த்து .எர்ணாகுளம் மாற்றினார்.. ஏ .எஸ் ..மூர்த்தி "என்னாய்யா! பெரியவேலை .விடும்யா ! இங்கவாரும் !"என்றார் .சோவியத் நாட்டில் சேர்நதார் .திகசி.."ராம்நாட்ல  இருக்கும் போதே எபலசுப்ரமணித்தை பாப்பேன்.பி.ஆர்..ஜீவா ன்னு பழக்கமாச்சு"என்றார்..பின்னர் "தாமரை "யின் ஆசிரியரானார்.'எழு ஆண்.டுகள் தாமரையின் ஆசிரியராக இருந்தார் .அது தாமரையின்  பொற்காலமாகும் ."பாவம் பாலம்மா"என்ற என் முதல் கதை 1962ம ஆண்டு தமரையில் பிரசுரமானது.ந்ன் சென்றபோது அவரும் எழுத்தாளர் முத்துகுமாரும் தான் அவர் வீட்டில் இருந்தனர்
                                                            " ஐயா!வாங்கய்யா! வாங்கம்மா!" என்று என்னை யும் முததுமினட்சியையும் வரவேற்றார்.வள்ளி யகமும் வந்து விட்டார்.. அவசரமாக உள்ளேசென்று இரண்டு போன்னாடைகளை கொண்டு வந்தார். எனக்கும் முத்துமினாட்சிக்கும் அணிவித்து "போட்டோஎடும்யா " என்று வல்லினாயகத்திடம் கூறினார்.என் கண்கள் கசிந்தன.
                                                               1962ம ஆண்டு.மதுரையில்வாசகர் வட்டம் என்ற அமைப்பின் நிகழ்ச்சி.சி.சு.செல்லப்பா,க.நா.சு , அடிகளார்,எஸ்.ஆர்.கே,டாக்டர் .கனகசபாபதி,தி.க.சி என்று பெரிய ஜமா. தி.க.சி  நாவல்  பற்றி  கட்டுரை  வாசித்தார்.அதுதான் ந்ன் அவரை முத்ன் முதலாக பார்த்தது..பின்னர் எழுத்தாளர் ந்வபாரதி முலம் நேரடி அறிமுகம் .   "எண்பத்தியேழு வயசாயிட்டு.காது 60சத்ம் கேக்கல..என்றார்.
                                                                    "நாம் முன்னணிப்படை வீரர்கள். மைநேர்ஸ் அண்டு சாப்பெர்ஸ் "என்றார்.வள்ளினாயகத்திடம  விளக்கினேன் "பிரும்மாண்டமான யுத்தம்- இருப்பவனுக்கும்,இல்லாதவனுக்கும் வரும். அந்தப் போரில்படை செல்லுமுன்பு  எதிர்களின் திட்டம்,அவர்கள் ஒளிந்திருந்து தாக்கும் இடம், அவர்கள்    கண்ணி வெடிஎங்கு வைத்திருக்கிறார்கள்  என்பவற்றை கண்டறிய ஒரு சிறு குழுவை  அனுப்புவார்கள்.அதன முன்னணிப்படை என்பார்கள்.இந்
தச்சிறு படை எதிரி யின்  வியுகத்திற்குள்  செல்லும்   .அங்குள்ள  கண்ணிவெடியை  அகற்றி  ,அவர்கள்  ஒளிந்திருக்கும்  இடங்களைக் கண்டறியும். எதிரிகளின் தாக்குதல் இவர்கள் மிது தான் முதலில் இருக்கும். பின்னல்  வரும்  பெரும்படை  இந்தத்தாக்குதலை நடத்தும் எதிரியின் இடத்தை எளிதாக கண்டுகொண்டு அவர்களை நிர்முலமாக்கும்." எதிரிகளை இனம் காட்டும் முன்னநிப்படைதான் எழுத்தாளர்களும் ,   கலைஞர்களும் என்பது தான் த.க.சி சொன்னதின்  அர்த்தம் என்றேன் .
                                                         வள்ளிநாயகமும்,முத்துகுமாரும்  திகசியப்  பார்த்தார்கள். தெய்வ  சன்னிதானத்தின் முன்பு
 பக்தன்  பார்ப்பது போல இருந்தது.
                                                           மணி 8 ஆகப்போகிறது பெரியவர் இரவு உணவு மருந்து என்று நேரமாவதை புரிந்து கொண்டு விடை பெற்றோம்...
                                                            "காஸ்யபன்!எழுதுங்க! அம்மாநிங்களும்  எழதுங்க!"விடை கொடுத்தார் தி.க.சி.          

  



Saturday, June 02, 2012

Mayopathi தசைநலிவு

mayopathi (தசை நலிவு நோய்) மனித உடலின் அசைவுக்குக் காரணம் எலும்பும் அதைஒட்டி இருக்கும் தசைகளும் தான்.தசைகள் விரிந்தும் சுருங்கியும் செயல்படும் போது கை,கால் ஆகியவற்றை நாம் நீட்டவும் மடக்கவும் முடிகிறது இந்த தசைகள்நலிவுற ஆரம்பித்தால்நம்முடைய அசைவுகளும் குறைய ஆரம்பிக்கின்றன.இதனை ஆங்கிலத்தில் . Mayopathi என்றும் தமிழில் தசை நலிவு என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த நோய் சிறுவயதிலேயே வருகிறது .குழந்தைபிறந்து இரண்டு மூன்று வயது வரை அறிகுறி எதுவும் தெரிவதில்லை குழந்தை வளர வளர அதன் எலும்புகளும் தசை களும் வளருகின்றன.எலும்பு வளரும் விகிதத்திற்கு எற்ப தசைகள் வளர்ந்தால்பிரச்சினை இல்லை.தசை யின் வளர்ச்சி குறையும் போது குழந்தையின் அசவுகளும் குறையும. ஓடிவிளையாடிக் கொண்டிருந்த குழந்தை சோவுற்று தவிக்கும். பெற்றொர்கள் போஷாக்குக் குறைவு என்று கருதுவார்கள். நல்ல போஷாக்கன உணவினை கொடுப்பார்கள்.குழந்தையின் எடை கூடும்.அதன் அசைவு மேலும் குறையும். ஒரு மட்டத்தில் சக்கர நாற்காலி பயன் படும். இது மெலும் எலும்பினியக்கத்தைத் தடுக்கும். ஒருகட்டத்தில் கை,கால் என்று தாசைகள் நலிவடைந்து இதயம்,வரை சென்று உயிர் பிழைப்பது அரிதாகிவிடும் எனது மைத்துனர்நாகபுரி Meditirina என்ற பிரும்மாண்டமான மருத்துவமனையில் பணியாற்றுகிறார் . டாக்டர்.சுரெந்திர வன்சாரே.அவருடைய நண்பர்.சுரெந்திர வான்சாரே யின் மகன் அகான். 11வயது அவனுக்கு தசை நலிவு நோய் பதிப்பு உள்ளாதகவும் அதற்கான சிகிச்சை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் அமபை தாலூகா வீரவநல்லுரில் சிறப்பு மருத்துவமனை இருப்பதாகவும் அது பற்றிய முழு விவரம்வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்கள். நான் த.மு.எ.க.ச மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் கிரிஷி அவர்களை தொடர்பு கொண்டேன்.நெல்லையிலிருந்து "சார்வாள்! கொக்கிரகுளத்டுக்காரனுக்கு டவுண் தெரியாது. இது தான் திருநெள்வேலிக்காரன் பொழப்பு. நான் வீரவநல்லுர் பொய் பாக்கேன். பொறவு விவரம் சொல்லுதேன் "என்றார். மறுநாள்:" சார்வாள் அருமையான ஆஸ்பத்திரி. கொறஞ்சது 60 குழந்தைகளாவது பமபாய் சிம்லான்னு வந்து சிகிச்சை நடந்து கிட்டுஇருக்கு டாகடரவாள வந்து பாக்கச்ச்சொலுங்க. சிகிச்சை ஆறு மாதமோ ஒருவர்சம் எடுக்கணும்காங்க. எதுக்கும் அவாள வந்து பாத்துட்ட அப்புறம் பிள்ளைய கூட்டிகிட்டு வரட்டும்" என்றார். . பாஷை தெரியாத டாக்டரை நெல்லையில்சந்தித்து வீரவநல்லூர் அழைத்துச்சென்ற கிரிஷியை டாகடர் வாய் கொள்ளாமல் புகழ்ந்தார். டாக்டர்,அவர்மனைவி,அவர்மகள், சிகைச்சைக்கு போகவிருக்கும் அவர்மகன் ஆகியோர் என்வீட்டிற்கு வந்திருந்தனர். அவர் மகன் அகன் ராஜாமாதிரி இருந்தான்..பால்வடியும் முகம் நல்ல உயரம். நல்ல சரீரம்.சக்கர நாற்காலியில் வந்திருந்தான்.கொசுக் கடித்தால் கூட அவனால் கையை அசைத்து ஒட்டமுடியாது.அவனை அழைத்துக்கொண்டு அவனுடைய தாயர் வீரவநல்லூர் செ ன்றார்.அவர்களை நெல்லயில் சந்தித்து வீரவநல்லுர் கூட்டிச்சென்றதும் கிரிஷிசார்வாள்தான். சென்ற மாதம் தென் தமிழகம் சென்றிருந்த நானும் முத்துமீனாட்சி அவர்களும் தெங்காசியிலிருந்து நெல்லைசெல்லும் வழியில் இவ்வளவு தூரம் வந்துவிட்டு அகனையும் அவன் தாயாரையும் பார்க்காமல் போகவேண்டாம் என்று வீரவநல்லுர் சென்றோம்.அவன் தாயர் பிரதீபா அவரப் பெற்றவர்களே வந்தது போல் எங்களை வரவேற்றார். மிகப் பெரிய வளாகம். குஜராத்,ஹரியானா,மகராஷ்ட்றா,கெரளம், என்று ஒருகுட்டி இந்தியாவே அங்கே இருந்தது. மருந்து கொடுப்பதில்லை. முதலில் உடல் பயிற்சி--அதன்பிறகு சக்கிர நாற்காலியில்லாமல் அசைவு பயிற்சி கொடுக்கிறார்கள். நடை பயிற்சி,நீச்சல் பயிற்சி.என்று செய்யவைக்கிறார்கள். அகன் நீந்து கிறானாம்.அவன் தாயார் மகிழ்ச்சியோடு சொன்னார்கள். அவன் மிகவும் இளைத்திருக்கிறான்..குறைந்தது 18 மாதம் சிகிச்சை பெற வேண்டுமாம். அந்த வளாகம் முழுமையும் காட்டினார்கள்.பயிற்சி எடுக்கும் இட்ம்,நீச்சல் குளம் என்று பார்த்தோம். ஒரு சிறுவனின் சிலை இருந்தது. அந்த பையன் சிகிச்சை பெற்று இப்போது அலொபதி மருந்து சாப்பிட்டு வருகிறான். அவன் மத்திய அமைச்சர் நெப்போலியனின் மகன். மிகவும் சிறிய அளவில் இருந்த இந்த மருத்துவ மனையின் முக்கியத்துவம் கருதி அமைச்சர் நிதிஉதவி செய்து பிரும்மானடமான வளாகத்தைக் கட்டியுள்ளார். வரும் நோயாளிகளில் வடநாட்டினர் அதிகமாக உள்ளனர். நோயாளிகள் வரும் பொது இருந்த தசைநலிவை மெலும் அதிகமாகாமல் தடுக்கிறார்கள் .மெள்ளமெள்ள புதிய பயிற்சிகள் மூலம் குணப்படுத்துவது அவர்கள் நோக்கம். 13 வயதுக்கு மேல் குணப்படுத்துவது கடினம் என்கிறார்கள். சிகிச்சை, பயிற்சி, எதற்கும் கட்டணம் வசூலிப்ப்தில்லை. நோயாளி,உறவினர் ஆகியோர் தங்குமிடம், மற்றும் உணவிற்காக மாதம் 12000 ரூ கட்டணம்செலுத்தவேண்டும். அமைச்சர் நெப்போலியன் நெல்லை மாவட்டத்தை ஒருசர்வதேச மருத்துவ மையமாக ஆக்குவார் என்பது என்போன்றவர்களின் நம்பிக்கை!