Wednesday, July 19, 2017


"மங்கள் பாண்டே -எழுச்சி"

திரைப்படம் எழுப்பிய 

விவாதம் .....!!!1857 ம் ஆண்டு நடந்த புரட்ச்சி பற்றி பல்வேறு வகையான வரலாற்று குறிப்புகள் உள்ளன.பிரிட்டிஷ் வரலாற்றாளர்கள் இதனை 'சிப்பாய் கலகம் "என்று வர்ணித்து சிறுமைப்படுத்தினர்.

ஒன்றாய் இருந்த கம்யூனிஸ்ட் கடிசியின் தலைவர் பி.சி ஜோஷி அவர்கள் "இது தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் "என்று வர்ணித்தார்.அரசியல் கடசிகள் அத்தனையும் இதனை ஏற்றுக்கொண்டாலும்  "இந்துத்வா " வாதிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

இந்த  எழுசசிக்கு திட்டம் தீட்டி ராஜாக்கள்,நவாபுகள்,ஜமீன்தார்கள் படைவீரர்கள் ,மற்றும் சாதாரண மக்கள்,ஆகியோரை ஓன்று திரட்டி  இந்த போராட்டத்தை நடத்தியவர்      அஜீமுல்லா கான் என்ற முகம்மதியர் ஆவார் .இதுவே இந்துத்த வாதிகளின் தயக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது.அதே சமயம் இந்த எழுசியை நிராகரிக்கவும் அவர்களால் முடியவில்லை.அவர்களுக்கே உரிய இரட்டை நாக்குடன் இந்த போராட்டத்தை ஆரம்பித்து அளித்தவர் மங்கள் பாண்டே என்றும்,அதற்கான காரணம் மத சம்மந்தப்பட்டதாகவும் திரித்துக்கூறினர்.சாவர்க்கர் எழுதிய :எரிமலை" என்ற நூலிலிருந்து அண்மையில் அமீர்கான் நடித்து வெளியான "மங்கள் பாண்டே -எழுச்சி " என்ற திரைப்படம் வரை இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.

"யுக தரண்  "  என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் சத்யபால் பாடாயித் என்பவர் இவர் அன்றைய ஜான்சங்க அமைப்பின் உறுப்பினராகவும்,ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்விரராகவுமிருந்தார்.அஜீமுல்லாகானின் பெயரை தான் சார்ந்த இயக்கம் மறைப்பதையும்மறுப்பதையும் கண்டு வெகுண்டு எழுந்தார். ஆர்.ஆர். யாதவ் என்பவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர்,,உ.பி யில் உள்ள கான்பூர் என்று பலஇடங்களுக்கு சென்று வருவாய்த்துறை ஆவணங்களை அலசி ஆராய்ந்து அஜீமுல்லாகான் பற்றிய செய்திகளையும்,உண்மைகளையும் நூலாக எழுதினார்.எழுத்து வடிவத்தில்  இருந்த நூலை  சதயபால் பாடாயித்திடம் கொடுத்து,பரிசீலிக்கும் படி கேட்டுக் கொண்டார்.ரெங்கோபாபுஜி,அஜிமண் பாயி ஆகியோரின் வீரம் சேர்ந்த செயல்பாடுகளையும் சேர்க்கும்படி பாடாயித் கூறினார். இருவர் பெயரிலும் இது ஒரு பிரசுரமாக 2003 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.முற்போக்கு பிரசுரங்களையும்,இலக்கியங்களையும்   மத்திய இந்தியாவில் பிரசுரம் செய்து வரும் ஆர்.பி.சிங் இதனை வெளியிட்டார் .

"அஜீமுல்லாகானின் திட்டப்படி 1857ம் ஆண்டு மீ மாதம் 31ம் தேதி போராட்டம் என்று முடிவ்வானது.ஆங்கில அதிகாரிகளை கொல்வது கருவூலத்தை எடுத்துக் கொள்வது.அதற்கான அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வது. ரயில் பாதைகள்,தந்திகம்பங்களை தகர்ப்பது<ஆயு தங்கள்  ,குண்டுகள் வைக்கப்பட்டு இருக்கும் இடங்களை கைப்பற்றுவது . குவாலியர்,கான்பூர், ஜான்சி, எல்லி என்று எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல்நடத்துவது என்று திட்டம் இந்ததேதி  அஜீமுல்லாகான்,தந்தியை தோபே, நானா சாகிப், பகதுர்ஷா,ஜான்சி ராணி ஆகியிருக்கு மட்டுமே சொல்லப்பட்டது"

துரதிஷ்ட வசமாக மங்கள் பாண்டே என்ற சிப்பாய் ஹ்யுங்கன் என்ற ஆங்கிலேய அதிகாரியை மே மாதம் 10 தேதி சுட்டுவிட்டான் .

எழுச்சி  மூண்டது. தலைவர்கள் புரட்ச்சியை முன் தேதியிட்டனர் .

இது பற்றிய பிரசுரம் உருது,இந்தியில் வெளியிடப்பட்டது.

மொழிபெயர்ப்பாளர் முத்து மினாடசி இதனை தமிழில் கொண்டுவந்தார் .தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு நூலாக வெளியிட்டார்.

2014ம் ஆண்டு அகிலஇந்திய இன்சூரன் ஊழியர் மாநாடு நாகபுரியில் நடந்தது. தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு இந்த பிரசுரம் இலவசமாக வழங்கப்பட்டது..    

தலித்துகள் ,


நிர்மலா சீதாராமன் ,


தலித்  இலக்கியம் ...
"தலித் ஆக இருந்தாலும் கோவிந்த் அறிவாளிதான் " என்று மொழிந்திருக்கிறார் திருமதி நிர்மலா சீதாராமன். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டேன் அவர் பெண் என்பதால். இப்படி பேச அனுமதித்ததே நாம் தான். ஆரம்பத்திலேயே தட்டி இருக்க வேண்டும் . 


மராட்டி மொழியில்,"கிரௌஞ்ச வதம்" என்ற அற்புதமான நாவலை படித்திருக்கிறேன். எழுதியவர் வி.ச.காண்டேகர் . அவர் எழுதிய "யயாதி " என்றார் நாவலும் முக்கியமானது .   அவரை மராட்டிய இலக்கியத்தின் "பிதாமகர் " என்பார்கள். அதேசமயம் லக்ஷ்மன் மானே, லக்ஷ்மன் கெய்க்வாட் ஆகியரின் படைப்புகளை "தலித் இலக்கியம் " என்று வகைப்படுத்துவார்கள்.


"ஸம்ஸகரா"வும், "ஹம்சகிதே"வும் கன்னட இலக்கியம் . U R அனந்தமூர்த்தி கன்னட இலக்கிய படைப்பாளி. சித்தலிங்கய்யா "தலித் இலக்கியம் " படைப்பவர் .

தி.ஜானகிராமனின் "அம்மாவந்தாள் ",சுந்தரராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை  " தமிழ் இலக்கியம் .செல்வராஜின் "மலரும் சருகும் "   தலித் இலக்கியம் ". இந்தவகைப்படுத்தலை ஆதியிலே கிள்ளி இருந்திருக்க வேண்டும்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் எழுத்தாளர்களே தங்களை "தலித்  எழுத்தாளர்கள் " என்று அழைப்பதை ஒரு அங்கீகாரமாக கொள்வதுதான் .

12 ஆழ்வார்கள் எழுதிய பாசுரத்தில் அய்யங்கார் எழுதியது,பிள்ளை எழுதியது தலித் எழுதியது என்று வகைப்படுத்தப்படவில்லை.

"தேவார"த்தை பிள்ளை,முதலி, அய்யர் என்று வகைப்படுத்தவில்லை .


நவீன தமிழ் இலக்கியத்தை மட்டும் ஏன் அப்படி பார்க்க வேண்டும் ?


Monday, July 17, 2017


பா.ஜ .க வின் "பளபளப்பு "

மங்கத்தான் செய்கிறது ...

ஆனாலும் ....!!!ஆங்கிலத்தில் sheen என்பார்கள். இல்லாத பளபளப்பை  பாஜக வுக்கு ஊடகங்களும் கார்ப்பரேட்களும் பூசி  வைத்தார்கள். அது மங்கி போய்க்கொண்டிருக்கிறது . 

சென்ற ஆண்டு அவர்க ள்  "செல்லாநோட்டு " என்று அறிவிப்பதற்கு முன்பே அது ஆரம்பமாகிவிட்டது. தீவிர வாதிகளுக்கு நிதி செல்வதை தடுப்போம் என்றார்கள் . ஐ எஸ் தீவிரவாதிக்கு நிதி சேகரித்ததாக சென்னையில்    கைது என்று செய்தி கூறுகிறது. கள்ளப்பணத்தை ஒழிக்க  என்கிறார்கள்  500/- 1000/- ரூ  நோட்டுகளை மாற்ற காலஅவகாசம் கொடுங்கள் என்று நேற்று நிதிமன்றம் கூறியுள்ளது . 50/- 100/- என்ற "சிறுவாட்டு" காசைக்கூட வாங்கி மூலம் தான் எடுக்கவேண்டும் என்று ஆக்கிவிட்டார்கள் . 5/-ரூ யை எடுக்க 3/-ரூ சேவை என்று .வசூலிக்கிறார்கள் . சொல்லவும்  முடியாமல் மக்கள்  தவிக்கிறார்கள் .

மாடு வளர்க்காதவர்கள் , மாட்டுக்கறி விற்பனை பற்றி கொள்கை முடிவு எடுக்கிறார்கள் என்று டாக்டர் ஜாண் செல்லத்துரை குறிப்பிடுகிறார். சரிதான்.பா.ஜ.கவின் குடுமி மோடி இடமிருக்கிறது .மோடியின்குடுமி ஆர்.எஸ்.எஸ்  இடம் இருக்கிறது .ஆர்.எஸ்.எஸ் குடுமி மோகன் பகவத் அவர்களிடம் இருக்கிறது . மோகன் பகவத் கால்நடை பல்கலையில் படித்து Msc  பட்டம் பெற்றவர். மாடுகளை வெட்டக்கூடாது என்றால் என்ன ஆகும் தற்போது 20 கோடி கால்  நடைகளிருக்கின்றன. இன்னும் ஐந்து வருடங்களில் இது 30 கொடியாகிவிடும் .பசுவுக்கு புல்  கொடுக்க புல்வெளி இல்லை . இந்தகொள்ளை யில் கறவை நின்ற மாடுகளையும் காளை மாடுகளையும் வைத்துக்கொண்டு விவசாயி என்ன செயப்போகிறானா. வெகு விரைவில் வெளி  நாட்டார் காரி துப்பும் நிலை வரத்தான் போகிறது.  

சுங்கவரி, காலால் வரி ,விற்பனை வரி,என்று வரிக்கு மேல் வாரிபோட்டார்கள். இதனைகுறைத்து வர்த்தகர்களுக்கு நிவாரண மளி த்து  ஒரேவரியாக நாடுமுழுவதும் கொண்டுவரப்போகிறேன் என்று காங்கிரஸ் அறிவித்தது.சரக்கு சேவை வரி என்று gst பெயரும் வைத்தது .

இதனை ஏற்கமாட்டேன் என்று குதித்தவர் குஜராத் முதலமைசராக இருந்த மோடி அவர்கள். பிரதமரானார். அதே சரக்கு சேவை வரியை நடைமுறைப்படுத்தி உள்ளார் .வரியா குறைக்க இல்லை.இதற்கு முன் வரியே போடாத 500 பொருட்கள் மீது வாரிபோட்டுள்ளார் .பல பொருட்கள் மீது 18 சதத்திலிருந்தது   28 சுத்தமாக்கி உள்ளார் . தக்காளி இன்று 100 /-ரூ கிலோ. சின்ன வெங்காயமும் அப்படியே . மக்கள் திகைத்து நிற்கிறார்கள்.

பா.ஜ க வின் பளபளப்பு மங்கிவிட்டது .இது தான் தருணம் !

ஆனாலும்...

சுதந்திரத்திற்கு முன்பு உன் எதிரி யார் ? என்று இந்தியனிடம் கேட்டால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று காஷ்மீரிலிருந்து குமரிவரை உள்ள இந்தியன் கூறுவான் !

இன்று நிதிஷ் குமார் லாலுபிரசாத் யாதவை காட்டுகிறார் .அவருடைய துணை முதல்வர் நிதிஷ் ஏறும் மேடையி எற மறுக்கிறார் !

மமதா அம்மையார் கூர்கா மாநிலம் கேட்பவர்கள் என்கிறார் .முலாயம்சிங் தன மகன் அகிலேஷ் என்கிறார் . 

தமிழகத்து அறிஞர்கள்  பண்பாடு ,கலாசாரம் , பார்ப்பனீயம் ,மனுநீதி என்கிறார்கள் .

கேரளத்து சென்னிதாலா பினராயி விஜயன் என்கிறார் .

2019ல் தேர்தல் வரட்டும். நாங்கள் ஜெயித்தால் ஆடசி செய்கிறோம். நீங்கள் ஜெயித்தால் நீங்கள் ஆடசி செய்யுங்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் திமிரோடு கூறுகிறார்கள்.

மோடி ஒருரூபாய் நோட்டை அதானியிடம் கொடுத்து அழகாக  சட்டம் போட்டு 5/-ரூபாய்க்கு  விற்கசொல்கிறார். வாங்கி நாம் தேசபக்த்தர்கள் என்று நிரூபிக்க  வரும் நாடாளுமனற கூட்டத்தில் சட்டம் கொண்டுவர யோசிக்கலாம் .

நாம் என்ன செய்யப்போகிறோம் !!!  


    


Thursday, July 13, 2017


"பிக் பாஸ் " தொடரை ,

முன் நிறுத்தி .......!!!


ஜூன் மாதம் 22ம் தேதி தொலைக்காட்ச்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன்! "பிக் பாஸ் " என்று ஒரு தொடர் நிகழ்ச்சி  ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தது பிரிட்டிஷ் அலைவரிசையில் "yes minister "  என்று ஒரு தொடர் வந்தது> அது போல அரசியல் நையாண்டியாக இருக்கலாம் என்று ஒரு நினைப்பு. அதோடு அந்த நிகழ்ச்ச்சியை கமலஹாசன் நெறி ஆழ்வதாக அறிவித்திருந்தார்கள் . ஜூன் மாதம் 25 ம் தேதியிலிருந்து ஆரம்பம் என்று அறிவித்திருந்தார். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.


நிகழ்ச்சி எத்தனை மணி என்பதற்காக மீண்டும்மறு நாள் பார்த்தேன். ஞ்யிரு இரவு 8.30 என்று தெரிந்து கொண்டேன்.அதோடு பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்வார்களென்று அதன் promo அறிவித்தது.


ஞயிறு   அன்று 8.30 மணியிலிருந்து இரவு 11 மணிவரை அறுத்து விட்டார்கள்.    கஞ்சா கருப்பு,வையாபுரி,காயத்திரி ரகுராம் போன்ற அறிவார்ந்த பிரபலங்கள் வந்தார்கள்.பாவம்  அந்த கணேஷ், பரணி,ஸ்ரீ , போன்றவர்களும் பேந்த பேந்த முழித்துக்கொண்டு இருந்தார்கள். 


கமல் என்ன காரணமோ ? சுமார் 20 கோடி ரூ சம்பளத்தில் இறுதிக்காலத்தில் இப்படி வரவேண்டியதில்லை. அடுத்த சனிக்கிழமை பார்க்கலாம் என்று முடித்தார் கமல். அதன் பிறகு நான் அந்த நிகழ்ச்ச்சியை பார்க்கவில்லை. ஞயிறு தோறும் இதனை பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை .


செவ்வாய் அன்று முகநூலில் இதுபற்றி கார சரமாய் எழுதி இருந்தார்கள்.அப்போதுதான் தேர்ந்து கொண்டேன் இது தினம் ஒளிபரப்பாகம் நிகழ்ச்சி என்று.


நிகழ்சசி பற்றி எதிர்மறையாக கடுமையாக எழுதியிருந்தார்கள். பல விதமான  சர்சசைகள் வந்துள்ளன . இதனை பார்க்கக்கூடாது என்பது பரவலான அபிப்பிராயமாக இருந்துது.

அப்படி எழுதியவர்கள் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சியை கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு கண் இமைக்காமல் பார்த்துவிட்டுத்தான் எழுதுகிறார்கள்  என்பதை புரிந்து கொள்ளமுடிந்தது.

விஜய் தொலைக்காட்ச்சியின் promo வை வீட  இவர்களின் விமர்சனம் சிறப்பாகவே இருக்கிறது .

விஜய் தொலைக்காட்ச்சிக்கு குறிப்பாக "பிக் பாஸு " க்கு இவர்களின் விளம்பரமே போதும் என்றே தோன்றுகிறது. 

தொடரின் பி.ஆர். ஓ  மிகவும் மகிழசசியாக  இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.!!!


Monday, July 10, 2017
மாலைத் தீவும் ,

பாரிஸ் ஒப்பந்தமும் ...!!!

புவி வெப்பமாவதால் ஏற்பட்ட பாதிப்பை தடுக்க பல ஆண்டுகளாக  முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் நாடுகள்  அத்தனையும் இணைந்து 2015ம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்திலகையெழுத்திட்டன . அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் சண்டித்தனம் செய்தன . இறுதியில் வேறு வழியின்றி ஒபாமா இறங்கி வந்தார் .

வளர்ந்த நாடுகள் தங்கள் தொழிற்சாலைகள் மூலமும் தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலியப்பொருட்கள் மூலமும் பூமியின் வெப்பத்தை அதிகரித்துள்ளன!

இந்த வெப்பம் அதிகரிப்பதால் துருவப்பகுதியில் உள்ள பனிமலைகள் உருகி கடல்  நீரின்    உயரம் அதிகரித்து வருகிறது.


இந்தியாவிற்கு தெற்கே இந்து மாகடலில் மாலத்தீவு   என்று ஒருநாடு உள்ளது .  கடல்மட்டத்திலிருந்து ஆறு அல்லது எழு அடி  உயரத்தில் உள்ளது .இந்த நாட்டின் பூர்வகுடிகள்  தமிழர்கள் என்கிறார்கள். பின்னாளில்.கேரளம்,தமிழகம்,இலங்கை போன்ற பகுதி மக்கள் இங்கு புலம் பெயர்ந்துள்ளார்கள்.  இங்கு தற்போது வசிக்கும் மக்கள் இஸ்லாமியர்கள் . மொத்தம் 1,33,000 பேர் வசிக்கின்றனர்.

இந்த நாடு இன்னும்முப்பது  அல்லது ஐமபத்து ஆண்டுகளில் காணாமல்போய்விடும். புவி வெப்பமாதலே இதற்கு காரணம் இந்த மக்கள் ஐ.நா  வின் கதவை தட்டி தங்களையும் தங்கள் நாட்டையும் காப்பாற்றுபடி கதறிக்கொண்டிருக்கிறார்கள் ! 

பாரிஸ் ஒப்பந்தம் புவியின் வெப்பத்தை 2* குறைக்க வகை செய்கிறது. இதன் மூலம் மாலத்வுதீ காப்பாற்றப்படலாம்.


இந்தஒப்பந்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா மீண்டும் சண்டித்தனம் செய்கிறது . அமெரிக்க அதிபர் டிரம் இதிலிருந்து விலக தீர்மானித்து விட்டார்.


சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த g 20 மாநாட்டில் 19 நாடுகள் கேட்டுக்கொண்டும் ட்ரம்ப் மசியவில்லை. 


மாறாக அமெரிக்கர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் பணி  கொடுக்கவேண்டும்.   அமெரிக்காவின் தொழில்சாலைகளை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்ற ட்ரம்பின்  இரண்டு கோரி க்கைகளையும்  g 20 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன!


g 20 நாடுகளின் வெற்றியாக இது சித்தரிக்கப்படுகிறது .இந்தவெற்றிக்கு மூலகாரணமாக இருந்தவர் நரேந்திர மோடி என்று இந்திய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. 


மாலத் தீவு மக்கள் பாவம் ...!!! 


Thursday, July 06, 2017
மாட்டிறைச்சியும் 


மாடுகளின் எண்ணிக்கையும் ...!!!

"மாட்டிறைச்சி பற்றி மத்திய அரசு சில முடிவுகளை அறிவித்து உள்ளது. மாடு வளர்ப்பு பற்றி அனுபவம் இல்லாதவர்கள் கொள்கை முடிவுகள் எடுப்பதால் வந்து வினை இது " என்கிறார் டாக்டர் ஜான்செல்லதுரை !

மகாராஷ்டிரா -குஜராத் மாநில எல்லையில் உள்ள "ஜலகான் " என்ற ஊரில் காந்தி அறக்கட்டளை என்ற நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் ஜாண் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியைச்  சேந்தவர். குஜராத் வித்யாபீடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 51 வயதாகிய ஜாண்  என்னுடைய குடும்பத்தில் ஒருவர் . என்னை பார்க்க குடும்பத்தோடு வந்திருந்தார் .

"இந்தியாவில் தற்போது எருமை,மாடுகளையும் சேர்த்து 20 கோடி மாடுகள் இருக்கலாம் .  அவ்ற்றில் பாதி காளை  மாடுகள். பால் கறக்கும்  மாடுகள் சுமார் பதினைந்து ஆண்டுகள்,அல்லது பதினெட்டு ஆண்டுகள் பால் சுரக்கும். இதற்குள் எட்டு முறை அவை கன்றினை "ஈன " வேண்டும் ,இவற்றில் காளை கன்றுகள்   60 சதமாகும்."

 "க  ன்றுகளை மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வளர்ப்பான்> முந்தி மாதிரி அவனுக்குஉழ  மாடுங்க தேவை இல்லை . அதனால் அவற்றை விற்று விடுவான்> அவனுடைய பணத்தேவையை அது நிறைவேற்று.ம் கன்று 3000 /- ரூ யிலிருந்து  5000 /-ரூ வரை போகும் நல்ல சாதி  என்றால் 8000/- ரூ லிருந்து 10000/- ருவரை போகும். அவன் சந்தையில் யார் வாங்குகிறார்கள் ,என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கவனிக்க மாட்டான்."

"பசுவிற்கே தீவனம் கொடுக்க முடியாமல் இருக்கிறான்  பசும்புல் கொடுத்தால்  பால் அதிகம் சுரக்கும் . இருக்கும் பசுவிற்கு அவனால் பசும் புல் கொடுக்க முடியவில்லை புல்வெளிகள் இல்ல> அதற்கு பதிலாக புண்ணாக்கு,ஊசி என்று போகிறான்.

 ் பசு"ஈன "  வேண்டும் காளை  மாட்டை கசாப்புக்கு அனுப்பக்கூடாது.இன்னும் ஐந்து ஆண்டுகளில்மாடுகளின் எண்ணிக்கை 30 கொடியை தாண்டலாம். "

" கிராமப்பொருளாதாரம் என்னவாகும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. வெளிநாட்டினர் நம்மை கேவலமாக பேசும் காலம் விரைந்து கொண்டிருக்கிறது "

டாகடர் ஜாண் அவர்களோடு பேசும் பொது கிடைத்த தகவல் இவை !

இன்னும் நிறைய நிறைய இது பற்றி எழுத இருக்கிறேன் !!!
.

Tuesday, July 04, 2017
சரக்கு மற்றும் சேவை வரியும் (g s t )அதன் வசூலும் .....!!!

1962ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது .முடிந்த நான்கு நாளில் நான் ஹைதிராபாத் வந்து விட்டேன். வந்த மறுநாள் எனக்கு மதுரைக்கு மாற்றலாகி உத்திரவு வந்ததும். நண்பர்கை சிலர் விருந்து வைத்தார்கள். மூன்று கல்  வைத்த அரை பவுன் மோதிரம் போட்டார்கள். விலை 31 /- ரூ.அப்போது  பவுன்  60/- ரூ . ஒரு வெள்ளை தாளில் எடை,கிரயம் எல்லாம் எழு தி,கடைக்காரர்,எப்போது கொண்டுவந்தாலும் அன்றைய விலைக்கு எடுத்துக் கொள்வதாக கொடுத்தார் . தங்கம் வாங்கும் போதும் விற்கும் போதும் எவன் வரி கட்டு கிறான் .

எந்த நகை வியாபாரி வரி போட்டு சரியான ரசீ து  தருகிறான் . இந்த கொள்ளையில்  தங்கத்திற்கு 3% தானா என்று முகநூலில் ஒப்பாரி வைக்கிறார்கள். இன்று தங்கம் ஒரு சவரன் விலை 22000 /- ரூ ல் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது . ஒருபவுன் வாங்கினால் 660 /-ரூ வரி . வாங்குபவனும் சரி விற்பவனும் சரி வரிகட்டப்போவதில்லை. இது நூற்றாண்டு  பழக்கம்.பல பொருட்கள் இப்படி வாங்க விற்க நடைமுறையில் உள்ளது .இதற்கான தனி கணக்குகள் உள்ளன .இதனை தணிக்கை செய்ய நிபுணர்கள் உள்ளனர். 

"மோடி " தணிக்கையாளர் சங்கத்தில் பேசி இருக்கிறார். இந்த வரி மோசடியை தவிர்க்க இவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை .செய்யவும் மாட்டார்கள். "சித்தாள் " வேலை செய்யும் பெண் ஓலைப்பெட்டியில் அரிசி,மிளகாய், புளி ,எண்ணை என்று வாங்குபவளிடம் கண்டிப்பாய் வரியை வசூலிப்பார்கள். அந்தவரியையும் அரசிடம் கட்டாமல் கணக்குக்காட்டுவார்கள்."விலையை குறை " என்றோம் ! குறைக்கவில்லை !! "

"விலையை ஏற்றாதே "என்றோம்  ! ஏற்றினார்கள்.!!"விலைவாசியை கட்டுப்படுத்து "என்றோம் ! முடியாது என்றார்கள் !!

முதலாளிகளுக்கு  மூலதனம் சேர விலை ஏற்றம் ஒரு mechanism !!"வரி " அதில் ஒன்று !!!