Wednesday, January 30, 2013

ஜெய்பூர் இலக்கிய விழாவில்

" ஆஷிஸ் நந்தி "பேசியது என்ன .....?



மே.வங்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தைச் சேந்தவர் ஆஷிஸ் நந்தி! இவருடைய சகோதரர் தான் பிரிதீஷ் நந்தியும், மனிஷ் நந்தியும் ! 76 வயதான ஆஷிஸ் மிகச் சிறந்த எழுத்தாளர் !  மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்தவர் அந்த துறை பிடிக்காமல் வெளியேறினார் . நாகபுரியில் உள்ள "இஸ்லாப்கல்லூரியில் "சேர்ந்து பயின்றார் ! பின்னர் அரசியல்" தலைவர்களின் உளவியல் " என்ற தலைப்பில் ஆராய்சி செய்து முனைவர் பட்டம் வாங்கினார்!

"காலனி ஆதிக்கமும் அறிவு ஜீவிகளின் உளவியலும் " என்ற அவருடைய நூல் உலகப்புகழ் பெற்ற ஒன்றாகும்! மேலை நாட்டு பலகலைக் கழகங்கள் அவரைவேண்டி விரும்பி விரிவுரை ஆற்ற அழைக்கின்றன !

ஜெய்பூர் விழாவில்     தனித்தனி தலைப்புகளில்  தனித்தனி  குழுக்கள்   விவாதிக்கும்! பின்னர் அவை மாநாட்டில் வைக்கப்படும்.! "ஊழல்" கள் பற்றி ஒரு குழு விவாதித்தது! அந்த குழுவில் ஆஷிஸ் பங்கு பெற்றார் ! குழு விவாதத்தில் அவர் " சாமர்த்தியமாக ஊழல் செய்பவர்கள் தப்பி விடுகிறார்கள்! குறிப்பாகபதவியில் அனுபவமுள்ள  மேல்  சாதியினர்   தப்பிவிடுகின்றனர் !  பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட சாதியினர் அனுபவமின்மையால் 
மாட்டிக் கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டார் !

பிற்படுத்தப்பட்ட லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும்  மாட்டிக்  கொண்டார்கள் ! தாழ்த்தப்பட்ட மாயாவதியும், ராஜாவும் மாட்டிக்  கொண்டார்கள்  ! மற்ற அரசியல் தலவர்கள் யோக்கிய சிகாமணிகளா ?  என்று கேட்காமல் கேட்டுவிட்டார் ஆஷிஸ்! 

அவர் பேசியது பிடிக்காதவர்கள் குழு விவாதத்தின் போது பேசியதை
வெளியில் கொண்டு வந்து பழிவாங்குகிறார்கள் !

வேடிக்கை என்ன தெரியுமா ?

மாயாவதி அவர கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் !

ராஜஸ்தான் அரசு sc and st சட்டத்தை பாயவிட்டுள்ளது ! 

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாத் தாழ்த்தப்பட்டு  வகுப்பைச் சேந்தவர் ! 












      





Thursday, January 24, 2013

"விஸ்வரூபமும் "

"பாதை தெரியுது பார் "

திரைப்படமும் .................!!!



"கமலஹாசனையும் ,விஸ்வரூபம் திரைப்படத்தையும் எவ்வளவு சவட்டி எடுக்க வேண்டுமோ அவ்வளவு சவட்டி விட்டார்கள் !  நல்ல நேரம் ! கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் (informed public ) அவருக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள்! படம் வெளிவரும் என்ற நம்பிக்கை இன்னும் அற்றுப் போகவில்லை  !

"சமத்தன் சந்தைக்கு போனான் பைத்தாரன் பல்லக்குல போனான்" என்று கிராமங்களில் கூறுவார்கள்! 53 வருடங்களுக்குமுன்னால்கம்யுனிஸ்டுகள் , ஆதரவாளர்கள்,அனுதாபிகள்  என்று  சிலர் கூடி திரைப்படம் எடுத்தார்கள் ! "பாதை தெரியுது பார் " என்ற அந்த படத்தை இயக்கியவர் நிமாய் கோஷ் என்ற வங்காளி ! கம்யூனிஸ்ட் ! பிரிவினையால்  எற்பட்ட  அகதிகள்  பிர்ச்சினயும்    அதனால்மே.வங்கம் பட்ட துன்பத்தையும் சித்தரித்த "சின்னமுல் "
என்ற படத்தை எடுத்து புகழ் பெற்றவர் ! 

"விடுதலை,புதிய அரசு, திட்டமிட்ட பொருளாதாரம்,முதலாளிகள், பங்கு
சந்தை , புரோக்கர்கள், கள்ளப்பணம், பதுக்கல் என்று சகலத்தையும் சித்தரிக்கும் கதை என்பதால் நாங்கள் சம்மதித்தோம் என்றார் ஜெயகாந்தன்

கேவிஜயன் ,எல்.விஜயலட்சுமி,சஹஸ்ரனாமம், எஸ்.வி.சுப்பையா  ,வி.கோபாலகிருஷ்ணன் ஆகியொர் நடித்தார்கள்! (பின்னர் விஜயன் சிவாஜி,எம்.ஜி.ஆர் ஆகியவர்களை வைத்து வெற்றிப்படங்களை இயக்கினார் ) இந்தப்படத்தில் தான் ஜானகி குமாரிஜானகியாக முதன்முதலாக பின்னணி பாடகியாக வந்தார் !" தென்னங்கீற்று ஊக்ன்சலிலே " சின்னச்சின்ன மூக்குத்தியாம் " போன்ற பாடலகளைத் தந்து இசை  அமைத்தவர் எம்.பி சீனிவாசன்.!

படப்பிடிப்புக்கு தேதி குறிப்பிட்டார்கள் ! கம்யுனிஸ்ட் கட்சியின் செய்லாளாக இருந்தஎம்.ஆர்.வெங்கடராமன் காமிராவை முடுக்கிவைத்தார் ! சிவப்பு துண்டு அணிந்த தொழர்களின் நடமாட்டம்  கோடம்பாக்கத்தில் கூடுதலாக அன்று இருந்தது !

பக்கத்து தளத்தில் இருந்த படப்பிடிப்புக்கு வந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரன் சிவப்பு துண்டுகளைப் பார்த்து விசாரித்துள்ளார்கள் ! கம்யுனிஸ்டுகள் படம் எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள் ! அந்த மேதை " "கொக்கிகள் வந்துட்டாங்களா ? விடப்படாதுப்பா ! எப்படியாவது தடுக்கணும் "என்று கூறியுள்ளார் !

படத்தை வினியோகிக்க மறுத்துவிட்டார்கள்  எவரும் வாங்கவில்லை ! இறுதியில்  ஈன கிரயத்திற்கு மெய்யப்ப செட்டியார் வாங்கினார் ! தோழர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை ! ஏ.வி.எம். பெரிய நிறுவனம் ! சுண்டக்காய் வினியோகஸ்தர்கள் வாங்காவிட்டால் என்ன! என்று  துள்ளிக்  குதித்தார்கள்!.
.
செங்கல்பட்டுக்கும் தாம்பரத்திற்கும்  நடுவில்  உள்ள  ஒரு  பாடாவதி  தியேட்டரில் இரண்டு நாள் படத்தை ஓட்டிவிட்டு டப்பாவை
மூடிவைத்தார் செட்டியார் 

கோர்ட், கேசு, தடை உத்திரவு, ஒருமண்ணும் இல்லை !

இது எப்படி !!!







Tuesday, January 22, 2013

"தர்ம யுத்தம் " தொடர்

முடிந்து விட்டதா.............?



ஒளியும் ஒலியும் இணந்த தொழில் நுணுக்கப் புரட்சியின் செல்லப்பிள்ளைதான் திரைப்படமாகும் ! அதன் சவலைபிள்ளைதான் தொலைக் காட்சி ஆகும்! இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? உண்டு !வித்தியாசம் இல்லையா ? இல்லை ! 

அந்தக் காலத்தில் lawrence of Arebia என்று ஒரு படம் வந்தது.! அதில் பாலைவனத்தின் அடிவானத்தில் ஒரு கரும் புள்ளி தெரியும் ! நெருங்க நெருங்க அது குதிரையில் வரும் போர்வீரனாகதெரிய ஆரம்பிக்கும் ! longshot  என்பதை விட longestshot   என்று பாராட்டப்பட்ட காட்சியாகும்.!   தமிழில் ஆபாவாணன் தன படத்தில் அதே போன்று ஒரு காட்சியை  சித்தரித்து இருப்பார் .!தொலைக்காட்சியில்  இப்படி எல்லாம்  காட்சிப்படுத்தக்  கூடாது என்பது விதியாகும்1

20 x 30 திரையில் தெரியும் காட்சி 14" பெட்டியில் ரசிக்க முடியாது ! Midshot க்கு மேல் தொலைகாட்சியில் எடுக்கக் கூடாது   என்பது  விதி ! இந்திய அலைவரிசையில் வரும் தொடர்எதுவும் இந்த விதிகளை பின்பற்றுவது
கிடையாது !  இசை நிகழ்ச்சிகள்,நேரடி ஒளிபரப்பு என்று தொங்கும் காமிராக்களைவைத்து 
கண்களை குருடாக்குகிறார்கள் !

இதன் மத்தியில் தான் ஸ்டார் தொலைக்காட்சியில்"தர்ம யுத்தம் " தொடர் ஒளிபரப்பானது ! அழுகுணி தொடர்களுக்கு மத்தியில், அற்புதமான படப்பிடிப்பு, அருமையான இசையமைப்பு, கதையமைப்பு, .அலட்டலில்லாத, அழுத்தமான நடிப்பு என்று மனதை திருப்திப்படுத்திய நிகழ்ச்சி யாகும் அது!

அந்த தொடர் முடிந்து விட்டாலும் அந்த குழுவினர் தமிழ் தொலைக்காட்சியில் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர் என்பது உண்மையாகும் 1






Thursday, January 17, 2013

 

Thursday, 17 January 2013

 

 "அஜிமுல்லா கான் "






1857மாண்டு நடந்த புரட்சி பற்றி பல்வேறு வகையான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன ! பிரிட்டிஷ் வரலாற்றாளர்கள் இதனை சிப்பாய் கலகமென்று வர்ணித்து சிறுமைப்படுத்தினர் !ஒன்றாய் இருந்த இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைவர் பி.சி. ஜோஷி "இது தான்  இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் " என்று வர்ணித்தார் !  அரசியல்கட்சிகள்  அத்துணையும் இதனை ஏற்றுக் கொண்டன! இந்துத்வா  வாதிகள்  எற்றுக்கொள்ள தயாராக இல்லை !


இந்த எழுச்சிக்கு திட்டம் தீட்டி,ராஜாக்கள்,நவாபுகள்,ஜமீந்தார்கள்,
படைவீரர்கள்,மற்றும் சாதாரண மக்கள் ஆகியோரத்திரட்டி இந்தப் போராட்டத்தை நடத்தியவர் அஜிமுல்லா கான் என்ற முகம்மதியர் ஆவார் ! இதுவே இந்துத்வா வாதிகளின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கிறது! அதே சமயம் இந்த எழுச்சியை  நிராகரிக்கவும் அவர்களால்முடியவில்லை!    அவர்களுக்கே உரிய இரட்டை நாக்குடன் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்  மங்கள் பாண்டே என்றும், அதற்கான காரணம்மத சம்மந்தப்பட்டது என்றும் திரித்துக் கூறினர் ! சவர்க்கார் எழுதிய எரிமலை என்ற நூலிலிருந்து  அண்மையில்  அமீர்கான் நடித்து வெளியான "மங்கள் பாண்டே - ஒரு எழுச்சி " என்ற
   திரைப்படம்வரை இதே கருத்து வலியுறுத்தப்பட்டது. !

"யுக தரண் "என்ற பத்திரிகையின் ஆசிரியராக   இருநதவர் சத்யா பால் படாயித்  என்பவர் !இவர் அன்றைய ஜனசங்க உறுப்பினர் ! ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் வீரர் ! அஜிமுல்லா  கானின்  பெயரை  தான் சார்ந்தஇயக்கம் மறுப்பதையும் மறைப்பதயும்கண்டு வெகுண்டு  எழுந்தார் ! ஆர்.ஆர். யாதவ் என்பவர் மத்திய   பிரதேசத்தில் உள்ள குவாலியர் மற்றும் உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூர்  ஆகிய  இடங்களுக்குச் சென்று வருவாய்த்துறை ஆவணங்களை அலசி ஆராய்ந்து
 அஜிமுல்லா கான்    பற்றிய செய்திகளையும்,உண்மைகளையும் நூலாக
எழுதினார்! அதனை சத்யபால் படாயித்திடம் கொடுத்து சரி பார்க்கச்
சொன்னார் ! அவர் வேரு  சில விபரங்களையும்  சொல்லி நூலில்   இணைக்கும்படி கேட்டுகொண்டார் !


நஜிமுல்லகானின் மகன் தான் அஜிமுல்லா கான்.! ஒரு ஆங்கிலேய அதிகாரி, நஜிமுலாகானின் மீது கோபம்கொண்டு அவரை வீட்டு மொட்டை
மாடியிலிருந்துகீழே தள்ளிவிடுகிறான்! சிறுவன் அஜிமுல்லாகானின் இதயத்தில் இது நீங்காத வடுவாக விழுந்த்தது .! 
கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம்,பிரெஞ்சு மொ ழிபயீன்று  முன்னேறுகிறான்,ஆங்கிலேயகுழந்தகள்  பயிலும் பள்ளி ஆசிரியராகிறான்  

ஆங்கில அதிகாரிகளிடையே அவன் செல்வாக்கு உயருகிறது ! நவாபுகள் ஜமீந்தார்கள் ஆகியோரின் பிரச்சினையைத் தீர்க்க உதவுகிறான்! நானா சாகிபுக்கு ஆங்கிலேயர் பென்ஷன் தர மறுத்ததை வாதாட லண்டன் செல்கிறான் ! அதேசமயம் ஆங்கிலேயர் மீதிருந்த கோபம் கொந்தளிக்கிறது ! இதற்கெல்லாம் தீர்வு ஆங்கிலேயரை இந்த நாட்டை விட்டு வெளியேற்றுவது தான் என்று திட்ட மிடுகிறான் ! மிகவும் ரகசியமாக திட்டம் உருவாகிறது ! புரட்சியின் சின்னமாக  சிவப்புத் தாமரையும்    ரோட்டியும் என்றாகிறது ! 

1857  மே மாதம் 31ம் தேதி ஒரே சமயத்தில்தாக்குதல் நடத்த திட்டமிடப்படுகிறது !

துரதிர்ஷ்ட வசமாக மீ மாதம் 10 தேதி மங்கள்பாண்டே பிட்டிஷ் அதிகாரிய சுட்டுவிடுகிறான் !  ஆனாலும் புரட்சியாளர்களை அஜிமுல்லாகான் தலைமை தாங்கி நடத்துகிறான்
!  ரகசியம்காக்கப்ப்டாத்தால் தோல்வியைசந்திக்கிறார்கள்  !


 அஜிமுள்ள கான் என்ற இந்த    சிறு நூல் 2007ம  ஆன்டு தமிழில் வெளி வந்தது !
மொழிபெயர்த்தவர் முத்து மீனாட்சி !
தி டீப் அறக்கட்டளை ,
14எ ,சோலையப்பன் தெரு ,
சென்னை - 600014.  
விலை -10ரூ

(பிரதிகள் பாரதி புத்தகாலயத்தில் இருக்கலாம்) 

Wednesday, January 16, 2013

புத்தகக் கண்காட்சி ---2013 !


சிகாகோவில் வசிக்கும் நண்பர் அப்பாதுரை அவர்கள் ஒரு மாதம் சென்னை வருவதாகக்கூறினார்.! அவரிடம்சென்னை புத்தகக்கண்காட்சிபற்றி கூறி  பயணத்தை திட்டமிடுங்களென்று சொல்லியிருந்தேன் ! அவரும்  பயங்கரமான  புத்தகப் பிரியர் ! வாங்க வேண்டிய புத்தகங்கள் பற்றி ஒரு பாட்டியலும் கேட்டிருந்தார் !

இன்று அவர் புத்தக கண்காட்சியில் கிடைத்த அனுபவத்தை பகர்ந்து கொண்டார் 1
காடுக்கடங்காத கூட்டம் !  எந்த ஒரு கடைக்குள்ளும் போய்வர  முடியவில்லை ! சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் புத்தகங்கள்தான் disply ஆகியுள்ளன! மற்றவை அடுக்கி வைக்கப் பட்டிருப்பதால் தேடி வாங்க முடியவில்லை ! வாசகனுக்கோ வருகையாளருக்கோ மரியாதை இல்லை!  என்றார் !

பதிப்பகத்தார் மற்ற நாடுகளில் நடக்கும் புத்தக கண்காட்சியை பார்வையிட வேண்டும்! கடைகள் புத்தகங்களை அடுக்கிவைக்கவே போதாது ! சிறுகதைகள்,நாவல்கள்,அறிவியல் ,புராணம் என்று தலைப்பு வாரியாக இருந்தாலும் பரவாயில்லை !

வருபவர்கள் ஆற அமர உட்கார ,யோசிக்க,வழியில்லை ! கிட்டத்தட்ட
10 லட்சம் பேர் வருவார்களாம்.! ஒரு ஆளுக்கு 5ரூ வாங்குகிறார்கள் ! கடைகளுக்கு 10000 ரூ வாங்குகிறார்களாம் ! 500 கடைகள் உள்ளன ! இதுவே 1கோடி வசூலாகிறது !  என்றும் குறிப்பிட்டார்

புதிய பதிப்பு என்றால்,பாரதிபதிப்பகம், கிழக்கு பதிப்பகம் தவிர வேறெதிலுமில்லை நண்பர்கள் சொன்னார்கள் !

பதிப்பகங்கள் வெளிநாடுகளில் புத்தககண்காட்சிகள் எப்படி நடை பெருகின்றன என்பதை தெரிந்து கொள்வது மிகவும்முக்கியமான ஒன்று !

கண்காட்சியை நடத்துபவர்களைவிட பதிப்பகத்தாரின் கைகள் ஒங்கி
இ ருப்பதாகவே படுகிறது

பாவம்  வாசகன்  ! !

Sunday, January 13, 2013

நீயா ?  நானா ?   வின்

"முகம்" .........!!!


"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் " என்ற சொல்லாடலை அக்கு வேறு  ஆணி வேறாக முகம் என்ற தலைப்பில் ஆராய்ந்தார்கள் ஸ்டார் விஜயின் நீயா ? நானா ? நிகழ்ச்சியில்.!

முகத்தின்வசீகரம், பெண்களுக்குபிடித்த முகம்,ஆண்களுக்கு பிடித்த முகம்,
மனித வள மேம்பாட்டு   நிபுணருக்கு பிடித்தமுகம், மனித வியல் நிபுணருக்கு பிடித்த முகம், நடிகருக்கு  பிடித்த  முகம்  என்று  பேசினார்கள்! 

முகத்தைப் பார்த்து ஒருவரின் மனதை அறியமுடியுமென்பதும் விவாதிக்கப் பட்டது!  நிச்சயமாக மனதை அறிய முடியாது என்று ஒரு அம்மையார் சொன்னதுமுத்தாய்ப்பாக  இருநதது !

மகிழ்ச்சியாகவும், நகைச்சுவையோடும் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் சாந்தி என்ற அம்மையார் வந்தார் !

சாந்தி சிறுவயதிலேயே அழகாக இருப்பார் ! அவருடைய தாயாருக்கு தன மகளின் அழகில்பெருமை ! சீவி,சிங்காரித்து,பூவும் பொட்டும் வைத்து அழகு பார்ப்பார்  மகளை ! உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது
ஒரு விடலைப் பையன் சாந்தியின் கழுத்தில்  மஞ்சள் கயிறை கட்டிவிடுகிறான் ! பெரியவர்கள்,சாந்தியின் தாயார் ஆகியோர் அவனுக்கே சாந்தியை  மணமுடிக்க சம்மதிக்கிறார்கள் ! சாந்தியின் அழகிற்காகவே அவரை திருமணம் செய்ய விரும்பியதாகவே அந்தப் பையனும் சொல்கிறான் ! சாந்தியும் எற்றுக் கொள்கிறாள் ! திருமணம் நடந்த பின் தான் அந்தப் பையனுக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரிய வருகிறது ! சாந்திக்கு பெண் குழந்தை பிறக்கிறது ! கணவனின் குடி தொல்லையும் அதிக மாகிறது ! இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிறாள் சாந்தி! கணவனின் இம்சைபொறுக்க முடியாமல் தாய்வீட்டிற்குவருகிறாள் சாந்தி ! திரும்பவில்லை !

கணவனுக்கு கோபம் ! அழகான சாந்தியை வேறு எவனாவது ....!  வக்கிர புத்தி ! ஆணல்லவா ! சாந்தி வீட்டிற்கு வருகிறான் ! அங்கு தங்குகிறான் ! இரவு குழந்தைகளோடு தூங்குகிறான் ! அருகில் இருக்கும் மனைவியின் முகத்தில் திராவகத்தை ஊற்றி விட்டு ஓடிவிடுகிறான் ! இது  நடந்து  இருபது  வருட மாகியிருக்கும் !

அந்த சாந்திதான் பாதி எரிந்த முகத்தை மூடிகொண்டு வந்திருக்கிறார்  !

ஒருங்கிணப்பாளர் சாந்தியிடம் " உங்கள் கணவர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா ? என்று கேட்டார் !
" யார் மீதும் கோபம் வரவில்லை ! வருத்தம் --இப்படியாகிவிட்டதே -என்ற வருத்தம் இருந்தது !" அரங்கமே அதிர்ந்து மோனித்தது !


"அப்போது எனக்கு இருபத்தினான்கு வயது ! என் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் ! வசதியில்லை ! பதிவுத்திருமணம் செய்யலாம் ! அதற்கு கணவரின் ஒப்புதல் வேண்டும் ! இல்லையென்றால் 10000 ரூ லஞ்சம் கேட்கிறார்கள் ! என்னிடம் பணம் இல்லை ! "
  
மீண்டும் அரங்கத்தில் அமைதி !

பங்கு பெற வந்திருந்த "திரு நங்கை " ஒருவர் ,பெண்மைக்காக பல  அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம் நாங்கள் ! கொடுரமாக சாந்தியை தாக்கியதை நினைக்கும் போது ....! "  


அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை !
















Wednesday, January 09, 2013

சாதியை மட்டுமல்ல !

சாமியையும் மறுத்த காதல் !!


சரியாக 40 வருடங்களுக்கு முன்னால்   நடநதது !  அந்த இளைஞர் பெரியகுளம் எல்.ஐ .சி அலுவலகத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தார்.! அவர் கிறிஸ்துவர் !  அலுவலகத்துக்கு அருகில் வசித்துவந்த பிராமணர் குடும்பத்து பெண்ணை காதலித்தார். ! . இருவரும் திருமணம் செய்து
கொள்ள முடிவெடுத்தனர். ! சங்க நிர்வாகிகளிடம் உதவும்படி
கேட்டுக்கொண்டார்.!

தலைமை நிர்வாகிகள் மதுரையிலிருந்ததால் அவர்களை அணுகினார் ! தலைமை திருமணத்தை நடத்த உதவ சம்மதித்தது.!சங்கத்தை பாதிக்காமல், உள்ளுரில் சிக்கல்வராமல் காதும் காதும் வைத்தபடி காரியமாற்ற முடிவாகியது !

மூத்த தோழர்கள் நாராயணசிங்,கிருஷ்ணன் தண்டபாணி,தனபால்பாண்டியன்
 ஆகியோர்  முன்னின்று பணிகளை செய்தனர். ! ரகசியமாக மணமகளையும், மணமகனையும் கொண்டுவருவதிலிருந்து சகலமும் திட்ட மிடப்பட்டது ! பொருக்கி எடுக்கப்பட்ட தோழர்களுக்கு என்னன்னா செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது!. அவர்களுக்கு எதற்காக இதனச் செய்கிறோம் என்பது சொல்லப்படவில்லை.! ராணுவத்தில் logistic என்பார்களே  அதுமாதிரி காரியங்களை செய்வதி வல்லவரான நாரயண்சிங்  முழுப் பொறுப்பையும் செய்தார் ! திருமணம்  செய்விக்கும்  பூசாரியை கொண்டுவரும் பொறுப்பு  எனக்கு அளிக்கப் பட்டது.

1972ம் ஆண்டு .ஜனவர் மாதம் 10ம் தேதி !  பெரியகுளம் அக்கிரகாரத்தில் வக்கீல் வீட்டு முன் இருந்த டாக்சி புறப்பட்டது ! அதில் மணப்பெண்  அமர்ந்திருந்தார். ! நகரத்திற்கு வெளியில் இருந்த பெட்றோல் பங்கில்காத்திருந்த மணமகனோடு  எல்.ஐ.சி தோழர் காசி அவர்களும்

 காரில்  ஏறி கொண்டார் !  மதுரை  நோக்கி கார் புறப்பட்டது ! காருக்கு முன்னாள் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி ஒருவர் பைலட் ஆக பாதுகாப்பிற்கு வந்தார்!  .

மதுரை ரயிவே காலனியில் உள்ள தோழர் தியாகராஜன் அவர்கள் வீட்டில் மணமகளை இறக்கிவிட்டு ,மணமகனை மதுரை அரசமரம் சந்திலுள்ள பொதுத்தொழிலாளர் சங்கத்தில் அந்த மணமகனை தங்கவைத்தார்கள் ! மறுநாள் காலை 10 மணிக்கு திருமணம் !(11-1-72)

எனக்கு இதெல்லாம் தெரியாது !  எனக்கு சொன்னதெல்லாம்,காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் தொழார் எ .பாலசுப்பிரமணியம் அவர்களை (அவர்தான் திருமணத்தை நடத்தும் பூசாரி)பொதுத் தொழிலாளர் சங்கத்துக்கு  அழைத்துவரவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது!

நான் எ.பி அவர்களொடு சங்கத்திற்குள் நுழைந்தேன் !மணக் கோலத்தில் . அங்கு இருந்தார்கள். ! திருமணம்முடிந்து மீண்டும்     எ.பி யை கட்சி அலுவலகத்திறகுஅழைத்துச்  சென்றேன் ! திருமண சடங்கு  நடக்கும்  போது  மணப்பெண்ணிடம்   விசாரித்திருக்கிறார் ! அவருக்கு வயது 19 என்று தெரிந்துள்ளது !

"ஏண்டா ! மாநில செயலாளரை ஜெயிலுக்கு அனுப்ப தீர்மானிச்சுட்டீகளாடா ? மைனர் பொண்ணை கட்டத்தின பழி ஒண்ணுதான் பாக்கி? என்றார் .
 "இல்லை! எ.பி " என்று இழுத்தேன் !
"வாயை மூடு ! "
"எவ்வளவு சீக்கிரம் ரிஜிஸ்டர் பண்ணனுமோ அவ்வளவு சிக்கிரம் பண்ணிடுங்க "
என்றார் !

அந்த இளைஞர்  தான் இன்று ஓய்வு பெற்ற பிறகும  தீக்கதிர்  அலுவலகத்தில் துணை  ஆசிரியராகப்  பணியாற்றும்  தோழர்  எம்.எஸ்.அருள் தாஸ் ! 

தோழரே ! நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சாதியை மட்டுமல்லாமல் தன்  
சாமியையும் மறுத்து    தங்கள்கைப்பிடித்து நடந்த நாகலட்சுமி அம்மையாருக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் !


























Monday, January 07, 2013

ஆசாராம் பாபு என்ற சாமியார் ......!

(Slur on Asaaram  Bapu - a video report )


டெல்லியில் நடந்த சம்பவம்பற்றி சாமியார்கள், மடத்தலைவர்கள், இகலோக சுகங்களை விட்டு ஒழித்தவர்கள் கருத்துக் கூற  ஆரம்பித்து  விட்டார்கள் !

சில சாமியார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு  உள்ளது.! என்ன எழவு என்று தெரியவில்லை ! இந்தப்பாவிகள் தான் முதலில் கருத்துச் சொல்ல துடிக்கிறார்கள்.!


டெல்லியில் பாலியல்பலத்காரத்திற்கு ஆட்ப்பட்டு, 13நாள் உயிருக்கு போரடி,மரணமடைந்த அந்தப் பெண்ணும் குற்றவாளிதான்
என்றுஆசாரம் என்ற சாமியார் கூறியுள்ளார்!.ஓசை எழ வேண்டுமென்றால்    இரண்டு கைகளும் தட்டத் வேண்டுமாம் ! தன்னை பலாத்காரம் செய்ய்வந்தவர்கள்காலில் விழுந்து காப்பற்ற முறையிடவில்லயே ஏன்? இந்த சாமி கேக்குது.! "நீ என் சகோதரன் ! தெய்வீக சகோதரன் ! என்னைகாப்பற்று என்றி அவனிடம் வேண்டாமல் இருந்தது என்?என்று இந்த தாடி கேட்கிறது ?

யார் இந்த அசாராம் சாமியார் என்று தேட ஆரம்பித்தேன் !  குஜராத்திலாச்ரமம் நடத்துகிறார் ! குஜராத் என்றவுடன் தவறாக நினைக்க வேண்டாம் ! குஜராத்தில் தான் காந்தி பிறந்தார் !"வைஷ்ணவ ஜனதோ " என்ற பாடலைக் கொடுத்த நரசி மேத்தா என்ற சித்தரும் பிறந்தார் !

இந்த சாமியாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்  உண்டு,! ஒரு மகன் ! நாராயண சாய் !  தந்தையின் தொழிலையே செய்து வருகிறான் ! (ஆன்மீகம் ) ஒரு மகள் !  பாரதி தேவி என்று பெயர் !

இவருடைய ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. !

இவருடைய மூத்த சிஷ்யர் பெயர் ராஜு சாந்தக்.!
இப்போது மடத்திலிருந்து வெளியேறிவிட்டார் !

சந்தோக் தொலை காட்சியில் கூறியுள்ளார்.! ஆயிரக்கணக்கில் சாமியாருக்கு சிஷ்யைகள் உண்டாம்! அவர்களுக்கு உபதேசிப்பார் ! "குரு   தேவோ பவ ! குரு  பதி பவ ! குரு  சம்மந்த் பவ !
 என்று உபதேசிப்பராம்.! குருவுடன் (தொடர்பு ) கொள்வது மோட்சத்தை அடையச் செய்யும் " என்பாராம். நான் என் கண்ணாலேயே சாமியாரின்லீலைகளை பார்த்துள்ளேன் ! (slur on Asram Bapu -viseo ) என்று கூறியுள்ளார். ! அதனால் மடத்திலிருந்து விலகி விட்டேன் ! என்றூம்குறிப்பிட்டுள்ளர் ! ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் ஒரூவர் இந்தக் அவதூறுக்கு ஆதாராமில்லை என்று கூறியதும் அந்த  காணொளியில் இருக்கிறது !

சந்தோக்கை கொல்ல  துப்பாக்கியோடு சாமியாரால்  ஆட்கள்  அனுப்பட்டதா கவும் அவருடைய காயங்களோடு காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது !












Sunday, January 06, 2013

நெகிழச்செய்த ஒளி பரப்பு .......!!!


மானவிகள் இரண்டு புறமாக அமர்ந்திருக்கிறார்கள் ! துடிப்பும், செய லூக்கமும் ,  சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட மேல்தட்டு மாணவியர் அவர்கள். ! அவர்களின் வசதியான ,மேல்தட்டு வாழ்வு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும்,சொல்லிலும்பட்டுத்தெரிக்கின்றது.!சென்ன நகரத்தின்  மிகச்சிறந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும்  மிடுக்கு  அவர்கள் முகத்தில்பளிச்சிடுகிற து !

மற்றொரு பக்கம் அரசுகல்லுரிகளில்படிக்கும் நடுத்தர கீழ்தட்டு மாணவிகள்
 அமர்ந்திருக்கின்றனர்! வசதி இல்லாமை அவர்முகங்களில் படர்ந்துள்ளது.!
போஷாக்கான உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை
அவர்களுடைய கண்கள் வெளிப்படுத்து கின்றன !

ஒரு புறம் விலைஉயர்ந்த கைப்பைகள் -அதில்  செல்போன்  ,விலை   உயர்ந்த  குளிரூட்டும் கருப்பு கண்ணாடி, லிப்ஸ்டிக் , நகபாலிஷ்,-! கல்லூரியில் சேர்ந்ததும் ஆறு ஜோடி காலணிகள் வாங்கியுள்ளதாக ஒருவர கூறினர் !

எதிர் புறம் சாதாரண கைப்பைகள் ! அதனுள் கொஞ்சம் பவுடர்,, ,பேனா,சில்லரைகாசுகள்! ஒருவர் கல்லூரியில்சேர்ந்த பிறகு ஐந்தாறு சூடிதார் வாங்கிகியதகக் கூறினார் ஒருவர் மெல்லிய தங்கத்தாலான சங்கிலி ஒன்றை அம்மா வாங்கித் தந்ததாகக் கூறினார்.காதுக்கு ஜிமிக்கி, விரலுக்கு மோதிரம் வாங்கியதாக ஒருவர் கூறினார்..

தங்கள் தேவைகளை தாங்களே முடிவு செய்பவர்களொருபக்கம் !  மற்றொரு பக்கம் தங்கள் ஆசைகளை முழுங்கிவிட்டு பெற்றொரின்  வசதிக்குவளைந்து வாழும் மாணவிகளொரு பக்கம் !

அவர்களிடையே விவாதம் தொடர்ந்தது.! அந்த சின்னஞ்சிறு பெண்கள் கள்ளம்கபடமற்று தங்கள்  கல்லூரி  வாழ்க்கையில் செய்த குறும்புகள், தோழிகள்,ஆசிரியர்கள்   ஆகியொருக்குபட்டப் பெயர்  வைத்தது என்று பகிர்ந்து மகிழ்ந்தனர்.

அவர்கள் கல்லூரிகளில் நடக்கும் கலைவிழாக்கள் பற்றி பேச்சு திரும்பியது.!
பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகின.!  அரசு கல்லுரி மாணவிகள்  தாங்கல் ஒதுக்கப்ப்டுகிறோம்  ! எங்களை அவமதிக்கிறார்கள் ! எங்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் சிரமம் உள்ளது  என்பதால் ஏளனம் செய்   கிறார்கள்  என்று குற்றம் சாட்டினர் .

எதிர்தரப்பு மாணவிகள் இதனை  மறுத்தனர்! தாழ்வு மனப்பான்மையின்  காரணமாக  அவர்கள்   ஒதுங்கி போகிறார்கள். என்று சமாதானம் கூறினர்!
இருதரப்பும் கூர்மையாக தங்கள் நிலையினை நியாயப்படுத்தினர்.

அடுத்து கல்லூரியில்வசதிகள் பற்றி விவாதம் நடந்தது.

தனியார் கல்லூரிகளில்குளிறூட்டப்பட்ட அரங்கமுள்ளது. படிப்பதற்கான சுழல் நன்றக உள்ளது என்று பொதுவான அபிப்பிராயத்தை மானவிகள்முன் வைத்தனர்.!

அரசு கல்லூரி மாணவி ஒருவர் எழுந்தார் ! எங்கள் கல்லூரியில்  restroom   (கழிப்பறை)கிடையாது  என்றார்! ஒருங்கிணைப்பாளர் அதிர்ச்சி அடைந்தார்! உங்கள் கல்லுரியி எத்தனை  மாணவிகள் என்று கேட்டபோது 3500 மானவிகள் என்றார்.!  தண்ணிர் கிடையாது ! சகிக்க முடியாது ! என்ன செய்கிறீர்கள் ? சமாளிப்போம் ! வேறூ வழியே இல்லை என்றால் பயன்படுத்ததானே வேண்டும்  என்றார் ஒரு மாணவி  !

அரங்கம் ஸ்தம்பித்தது !

எதிரில் அமர்ந்துள்ள மாணவிகளின் முகங்களில் அதிர்ச்சி ! சிலர்  உள்ளம்  நடுங்க ,உதடுகள் பிதுங்க கசிந்தனர்!

ஒருமாணவி எழுந்தார் !  இவ்வளவு கஷ்டத்தையும் சகித்துக் கொண்டு கல்வியத்த்தொடரும் அந்த மானவியர்க்கு மரியாதை செலுத்தும்  வகையில் எழுந்து கையொலி எழுப்புங்கள் என்றார் !
அரங்கம் எழுந்து அந்த எளிய மாணவிகளுக்கு மரியாதை செலுத்திய போது " இந்தியா ! இந்தியா ! " என்று நெகிழ்ந்து என் மனம் கதறியது !!!



( 6-1-!3 அன்று ஸ்டார்விஜய்  தொலைக்கட்சியில் நடந்த "நீயா நானா "
நிழ்ச்சி பற்றிய பதிவு )





ர் க

Wednesday, January 02, 2013

ஹரிஹரன் அவர்களே!

நீதிபதி கட்ஜு சொன்னது சரிதான் ...!


பதிவுலக நண்பர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கத்தாரிலிருந்து தோழர் ஹரிஹரன் மின் அஞ்சல்  அனுப்பியிருந்தார். நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு "சம்ஸ்கிருத மொழி 5சதம்,"மதம்" 95 சதம் "அறிவியல்" என்று அவருடைய  வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

எண்பது வயதை (77) நெருங்கிக் கொண்டிருக்கும் நான் இன்றும் மார்க்சிய மாணவன் தான்.எந்த ஒருமொழியும் அதன் தோற்றம்,வளர்ச்சி ஆகியவற்றை கணக்கிட்டால் அறிவியல் ரீதியானது தான்.பயன்பாட்டில் அதன் அழுத்தம் முன்பின்னாக மாறலாம்.

சம்ஸ்கிருதம் தேவ பாஷை  என்றும் அது அந்தணைரகளின் மொழி என்றும் கிருத்துவத்தை வளர்க்கவந்த பாதிரிமார்கள் சொன்னார்கள். அன்றைய இனவாத அரசியலுக்கும்,பிரிட்டிஷ் அடிவருடிகளுக்கும் அது சௌகரியமாகப்போனது..

உண்மையில் அறிவியல் கருத்துக்கள்,தத்துவ விசாரணைகள் சம்ஸ்கிருத மொழியில் நிரம்பிக்கிடக்கின்றன. ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் :

பொருட்களில் உயிருள்ளவை உயிரற்றவை என்று உள்ளன ! உயிருள்ளவகளுக்கும் உயிரற்றவைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதாவது உயிர் என்றால் என்ன? இதை இன்றய அறிவியல் விளக்கியுள்ளது!

"எந்த ஒரு பொருள் தனக்கு தேவையானதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக் கொள்கிறதோ , எந்த ஒரு பொரூள் தனக்குத் தேவையற்றதை தன்னிலிருந்து வெளியேற்றி கொள்கிறதோ அது உயிருள்ள பொருளாகும் "

இதனை ஆங்கிலத்தில் catabolism ,metabolism என்கிறார்கள்.

எல்லா மதத்தினரும் "நீத்தார் நினைவினை" சடங்காக அனுசரிப்பார்கள்.இந்துக்கள் புரோகிதரை வைத்து இதனை செய்வார்கள். அவர்        "பிராணோவா அன்னம்!
                     தத் வ்ரதம் !
                      அன்னம் ந நிந்தயேத் !
                     அன்னமேவ பிராணன் !
என்று ஓதுவார். அதன் அர்த்தம் அவருக்கும், திருப்பிச் சொல்பவருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதன் பொருள்
                  உயிர்  என்பது உண்வு மட்டுமே !
                  அதிகமாகவோ குறைவாகவோ உண்ணாதே !
                  உணவை வெறுக்காதே !
                 உணவுதான் உயிர் !
கடவுளை நம்பாதவர்கள்,வேதத்தை மட்டும் நம்பி கடவுளை நம்பாதவர்கள், என்று தத்துவ வாதிகள் உள்ளனர். கபிலர்,ய்க்யவல்கியர்,பதஞ்சலி என்று அறிவியல் ரீதியாக சிந்திப்பவர்கள் உண்டு .

ஹரிகரன் அவர்களே ! நீங்களோ,நானோ அவனோ அவர்களோ எற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீதிபதி கட்ஜு சொன்ன உண்மை  பளிச்சிடவே செய்கிறது..!