Wednesday, June 06, 2018







சென்னை மாநாட்டில் ,

தனித்தனி அறிக்கை .

வைத்தோம் ...!!!




சென்னையில் த.மு.எ ச மாநாடு நடந்த போது கவிதை,நாவல், திரைப்படம் என்று தனித்தனியாக அறிக்கை வைக்க முடிவு செய்தொம்.பரீட்சார்த்தமாக இது ஆரம்பமானது.

தமிழ் திரைப்பட உலகம் பற்றிய அறிக்கையை காஸ்யபன் தயாரிக்க வேண்டும். திருச்சியை சார்ந்த ஸ்டேட் வங்கி தோழர்  அவருக்கு உதவுவார் என்று  முடிவாகியது.

திரைப்படம் என்பது மக்களுக்கு கற்று கொடுக்கும் சாதனம்> அதனால் அதனை கல்வி இலாக்காவோடு இணைத்து சோவியத்  அமைசரவையில் மாமேதை லெனின் வைத்தார்.தமிழ் திரையுலகம் ஆரம்பத்திலாரோக்கியமாகவே தொடங்கியது /

கலை  இலக்கியத்தில் பரிசய முள்ளவர்கள் வந்தனர். படப்பிடிப்பு  தளம்,மாதசம்பளத்தில் நடிகர் ,நடிகைகள், தொழில் நுணுக்க வல்லுநர்கள்< இசைஅமைப்பாளர்கள், பட விநியோகம், ஏன் திரை அரங்குகள் வரை அவர்கள் வைத்திருந்தனர் .தயாரிப்பிலிருந்து, மக்களை அடையும் வரை அவர்கையிலேயே இருந்தது> ஜெமினி ஸ்டுடியோ,லாபரேட்டரி, சர்க்கியூட் என்று இருந்தது> பக்ஷிராஜா,ஏவி.எம்.என்று இருந்தன. இந்தமுறையை ஸ்டூடியோ சிஸ்டம் என்று அழைத்தனர் 

இரண்டாம் உலக யுத்தம் வந்து எல்லாவற்றையும் புரட்டி போட்டது. பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாகியது> ரேஷன் முறை வந்தது> விலைவாசி ஏறியது> கள்ள மார்க்கெட் உருவாகியது>கள்ளப்பணமும் வந்தது> 50000 ஆயிரத்தில் இருந்து ஓர் லட்சத்திற்கும் படம் எடுத்த காலம் போய் தயாரிப்பாளர்கள் முதலீடு இல்லாமல் தவித்தார்கள்.கள்ளப்பணம் இந்த தவிப்பை நேர் செய்தது 

பணம் இருப்பவன் கலைஞனை வாடகைக்கு வாங்கி படம் தயாரிக்கும் நிலை தோன்றியது>லாபநோக்கும்,கேளிக்கையும் அடிநாதமாக மாறியது ஸ்டுடியோஸிஸ்டம் நொறுங்கி ஸ்டார் சிஸ்டம் தோன்றியது>1000 ரூ பணம் கொடுத்து 500 க்கு ரசிது வாங்கும் கள்ளக்கணக்கு முறை வந்தது>

சுதந்திர இந்தியாவின் வளர்சசி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன முக்கியமாக மின் சாரமயம் நடந்தது>  கள்ளப்பணம் உள்ளவன் தன்கருப்பை வெள்ளையாக்க இதன் பயன்படுத்திக்கொண்டான.ஊருக்கு ஊர், திரை அரங்குகளை கட்டி ஒரு மாற்றுப்பொருளாதாரத்தையே உருவாக்கினான்> உ.பிமானிலத்தில் ஐந்து லட்சம்பேருக்கு ஒரு தியேட்டர்> தமிழகத்தில் 60000 பேருக்கு ஒன்றாகியதும். மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர். ( அறிக்கையின் சில பகுதிகளே இவை )

திரைப்படத்தின்  பிரச்சினைகளுக்கு தீர்வு அதற்கு வெளியே சமூகத்தில் உள்ளது என்று அறிக்கை அறிவுறுத்தியது.

மாநாட்டு நிகழ்சசிகள் அதிகமாக இருந்ததால். இந்த அறிக்கைகள் வாசிக்கப்படாமல், வாசிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 

தமுஎ சவின் ஆவணங்களோடு இந்த அறிக்கையும் கோப்புக்குள் அடங்கி விட்டது




கோவையில் நடந்த

மாநாடு .


அப்போது தோழர் ரமணி அவர்கள்  இருந்தார்கள் . அருமையான ஏற்பாடுகள் . சோஷலிச வாலிபர் சங்க தோழர்கள் பாடிக்கொண்டே  "லெஜிம் " நிகழ்ச்ச்சியை நடத்தினர்.

 கலைநிகழ்ச்ச்சிக்காக பெங்களூரிலிருந்து சமுதாய குழு வந்திருந்தது . சமுதாயாவின் தலைவர் தோழர் பிரசன்னா வந்திருந்தார் .அந்த குழுவில் திருநாவுக்கரசர் என்ற தமிழ்நாட்டுக்காரரும் இருந்தார் .

பிஹாரில் சுரங்க விபத்து நடந்த நேரம். சாசனலா என்ற சுரங்கத்திற்குள் நீர் புகுந்து விட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கத்தொழிலாளிகள் "ஜலசமாதி " அடைந்தனர்.

அந்த சம்பவத்தை நாடகமாக போட்டனர்.  தொழிலாளர்கள் மூச்சுத்திண றி உயிருக்கு போராடி பிணமாக மிதக்கும் காச்சி நடந்த பொது பிரமிப்பாக இருந்தது .

இந்த நாடகத்தை பிரசன்ன அவர்கள் இயக்கி இருந்தார் .


Sunday, June 03, 2018





புதுச்சேரிக்கு 

பயணச் சீட்டு ,

வாங்கிவிட்டேன் !!!




முதுமையும் இயலாமையும் சமாளிக்க வேணும்.. நண்பர்களுக்கு தொந்திரவாக இருக்கும் பயணம் வேண்டாம் என்று உறவுகளும் நட்புகளும் கூறினர்.  சரி  என்றே பட்டது.

கவலை வேண்டாம். உங்களை பத்திரமாக வரவேற்று அனுப்பும் பொறுப்பு என்னுடையது என்று எல்.ஐ.சி  தோழர் புதுவை ராம்ஜி அபயமளித்தார்> அவ்ர   மீ து பாரத்தை போட்டுக்கொண்டு முத்து மீ னாட சியின்  துணையோடு வர உத்தேசித்து விட்டேன் .

முதல் மாநாட்டில் பங்கெடுத்தவன். 14வது மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்.

முத்த எழுத்தாளகள்   குசிபா,  சிகரம் செந்தில்நாதன், இளம்தாரிகள் சுப்பாராவ்,குமரேசன், மற்றும் நுற்றுக்கணக்கான புதிய பாரத புத்திரர்கள் ஆகியோரை சந்திப்பதே ஒரு முக்கிய காரணமாகும்.

முதல் மாநாடு நெஞ்சில் நிழலாடுகிறது. இரண்டுநாள் மாநாடு. இரண்டாம் நாள் கலை நிகழ்ச்சியாக நாடகம்> மதுர பீப்பிள்ஸ் தியேட்டர்குழு அரங்கேற்றினார்கள் .கே.எம்.எழுதிய நாடகம். "புதிய தலைமுறை ".இயக்கம் காஸ்யபன். இசை ராஜகுண சேகர் .

சாஸ்திரிகள் ஒருவர் .அவருடைய மகனை பரந்தாமனை வேதம் மற்றும் மந்திரங்களை சொல்லிக்கொடுத்து புரோகிதனாக்குகிறார். பரந்தாமன் பின்னாளில் பக்கத்து வீ ட்டு விதவை பெண்ணை காதலித்து சென்னை செல்கிறான்> அங்கு தொழிற்சாலையில் பணியாற்றி தொழிற்சங்க தலைவனாகிறான்.

சாஸ்திரிகள் பாத்திரத்தை காஞ்சி மகா பெரியவர் சந்திர சேகரேந்திரர் மாதிரி கே.எம் அமைத்திருப்பார்.மதுரை மில் தொழிலாளி துரைராஜ் அற்புதமாக நடித்தார் .பரந்தாமனாக நான் நடித்தேன். அது ஒரு காமெடி கலந்த சோக பாத்திரமாக கே.எம்.அமைத்திருந்தார் . அந்த காலத்தில் டி .ஆர் .ராமசந்திரன் என்றொரு நடிகர் இருந்தார் .அவர் பாணியில் காமெடியும் சோகமும் கலந்து நடித்தேன்.

தமிழகம் முழுவதும் போட்டோம்.கோவையில் முதல் நாள். நாமக்கல்லில் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் சேலத்தில். சேலத்தில் திராவிடர்கழக தோசர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு காட்சி ஓரே நாளில் போட்டோம்.

இந்தநாடகத்தைப்பார்த்த தோழர் குசிபா  அவர்களும் இயக்குனர் செல்வராஜ் அவர்களும் "புதிய அடிமைகள் "திரைப்படத்தில் நடிக்க அழை த்தது  தனி கதை   !!!

Friday, June 01, 2018







"தூத்து குடி "

பெயர் வந்த காரணம் ...!!!




பண்டைய காலத்தில் முத்துநகர் என்றே அழைக்கப்பட்டுள்ளது ஒருபக்கம்  காயல் பட்டினம் துறைமுகம்.     இந்தப்பக்கம் மணப்பாடு , 

அன்னை தாமிரவருணி நெல்லும்,கரும்பும், சோளமும், கேப்பையும், அள்ளிக்கொடுத்தாள் . மேலமலை மிளகும் கிராம்பும் ஏலமும்கொடுத்தது .ஆழ் கடலில் கப்பலை நிறுத்தி பாரசீக வணிகர்கள் அள்ளி ச் சென்றனர்  சென்றனர் .

தென்தமிழகத்தின் வணிகர்கள் தங்கள் தானியங்களை பாரவண்டியில் ஏற்றி மணப்பாடு,காயல் பட்டினம் இரண்டுக்கும் நடுவாக முத்து நகரில் இறங்குவார்கள்> அங்கிருந்து தலைசுமையாயாக படகில் ஏற்றி பெரிய கப்பல்களில் சரக்கேற்றுவார்கள் .

எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் சாக்குமூட்டையிலிருந்து தானியங்கள் சிதறத்தான் செய்யும்.இந்த சாலையில் சிந்திய தானியங்களை "தூத்து " பெருக்கி பொறுக்கி கூழ் காய்சசி "குடி"க்க வென்றே ஒரு கூட்டம் உண்டு .
தென் மாவட்டங்களில் ஒரு சொலவடை உண்டு.அண்ணன் தம்பி, தாய் மகன் ,தந்தை  மகன் குடும்பச்சண்டையில் ஆதரவற்றவர்களா னவர்கள் பேசுவார்கள்   "ஏல ! நீ இல்லைனா செத்தா போயிடுவேன் .தூத்து பெருக்கி கஞ்சி குடிச்சிக்கிடுவேன் " என்று சவால் விடுவார்கள் .

அப்படி  "தூத்து - குடி "ச்ச சனங்கள் வாழ்ந்த , முத்துநகர் தான் தூத்துக்குடி ஆயிற்று .!