Tuesday, May 30, 2017




"பா.ஜ .வின் நிகழ்ச்சி  நிரல் "


"choice is yours "



நரேந்திர மோடியும் சரி, அவருடைய எஜமானனான ஆர்.எஸ்.எஸ் சும்  சரி தங்கள் திட்டத்தினை மிகவும் தந்திரமாகவும் செய்நேர்த்தியோடும் செயல் படுத்துகிறார்கள்.


முதல் ஐந்து ஆண்டுகளில் கிடைத்தவெற்றியை பங்கமில்லாமல் காப்பது ஹரியானா விலிருந்து பாட்னாவரை ,யமுனையின் தென்கரையிலிருந்து கோதாவரியின் வட கரை  வரை உள்ள தங்கள் பசு பாதுகாப்பு பகுதியை மேலும் உறுதிப்படுத்துவது என்று வைத்திருக்கிறார்கள். 


தங்களுடைய இந்துத்வா  நிகழசசி  நிரலை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்வது என்று திட்டம் தீட்டியுள்ளார்கள்  இதற்கிடையே கார்ப்பரேட் நிறுவனங்களோடு தேவையான சமரசங்களில் ஈடுபடுவது என்பதும் திட்டம்.முதலில் அரசியல் தளத்தையும்,நிர்வாக தளத்தையும் முழுமையாக கைப்பற்றுவது. பல்கலை,கல்வி, ஆகியவற்றில் தலையிட்டு திசை திருப்புவது.

அவர்களுடைய கண் தென் இந்திய பகுதியை ஆகிக்கிரமிப்பது என்பதில்   நிற்கிறது . அதற்கு குறுக்கே நிற்பது தமிழகமும் கேரளமும்தான். தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.


ஆனானப்பட்ட எம்.ஜி  ஆரோ ,  ஜெயலலிதாவோ  ஆளுவதாக மக்கள்நினைக்கவில்லை. மாறாக மோடிதான் ஆள்வதாக மக்கள் மனதிலொரு பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. பழனிசசாமியும் ,பன்னிரும்  மோடிக்கு காவடி எடுப்பவர்கள் என்ற படிமம் கிட்டத்தட்ட உருவாகிவிட்டது .    ப.சிதம்பரம் படும் பாட்டில் காங்கிரஸ் நிலை தடுமாறி நிற்கிறது. 2 ஜி கத்தி யாக தொங்கும் நிலையில் ஸ்டாலின் தடுமாறத்தான் செய்வார்.


எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் நாடியை அவர்கள் ஆளந்தே  வைத்துள்ளார்கள். இந்தி, பார்ப்பனியம், மாட்டுக்கறி என்று பண்பாட்டுத்துறையில் சடுகுடு ஆடவிட்டு அரசியல் மற்றும் நிவாகத்துறையை ஏப்பம் விடுவது அவர்கள் திட்டம்.


கேரளத்தை நேரடியாக சந்திக்க தயாரிப்பு நடக்கிறது . மேற்கு வங்கத்தில் இடதுசாரி  தலைவர்களை நடு ரோட்டில் போட்டு மிதித்து எடுத்தபோது   மற்றவர்கள் மவுனமாயிருக்கிறார்களே ஏன் ?


இது கேரளத்திலும் நடக்கலாம் . 

தமிழகத்தில்  அறிஞர் சமஸ் அவர்களோடும் , பேரறிஞர்   சமுத்திரக்கனியோடும்  தத்துவார்த்த விவாதங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

நாம் என்ன செய்ய போகிறோம் ?


choice is yours  comrades !!!








Monday, May 29, 2017





ராணுவமும் ,


காஷ்மீர் மக்களும் ... !!!




இந்திய ராணுவ தளபதி ராவத் அவர்கள் பேசி இருக்கிறார் ." என்னுடைய வீரர்கள் மீது மக்கள் கல்லை எறிகிறார்கள்.பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார்கள் ! நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று வீரர்கள்  என்னை கேட்கும் பொது சாவுங்கள் !உங்களுக்காக மூவர்ணக்கொடிபோர்த்திய சவப்பெட்டியை கொண்டுவருகிறேன்" என்று என்னால்கூறமுடியாது . 

தளபதி பேசியது விவாதத்தை கிளப்பி  உள்ளது. தொலைக்காட்ச்சியில் நடந்த ஒரு விவாதத்தில், மார்க்சிஸ்ட் கடசியை  சேர்ந்த கனகராஜ் அவர்களும், பத்ரி சேஷாத்ரி அவர்களும் இதனை விவாதித்தனர்.

ப.சிதம்பரம்  ஒருமுறை ராணுவத்தை அனுப்புவோம் என்று கூறிய பொது ,ராணுவ தளபதி " நாங்கள் எல்லை யை பாத்து காக்க இருக்கிறோம். எதிரி நாட்டிலிருந்த பாதுகாக்க இருக்கிறோம். அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே உள்ள தாவாவை தீர்க்க இல்லை " என்று  கூ றியதைக்கானகராஜ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.


"ராணுவ தளபதி காஷ்மீரில் நம் நாட்டு மக்களை தான் சந்திக்கிறார்எதிரிகளை அல்ல  ,காவல்துறை,துணை ராணுவம் என்று இருக்கும் பொது அரசு ராணுவத்தை அனுப்புவது சரியல்ல " என்று பத்ரி சேஷாத்திரி கூறினார்.


"தளபதி ராவத்  அவரை விட மூத்தவர்களை மீறி   இந்த பதவியை அடைந்துள்ளார்.இதற்கு முன்பும் மூ த்த அதிகாரிகளை தவிர்த்து இளையவர்களை நியமித்தது உண்டு . என்ன காரணத்தினால் ராவத் நியமிக்கப்பட்டார் ? அவர் தன்னை நியமித்ததை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுகிறாரோ " என்று கனகராஜ் குறிப்பிட்டார்.

மூன்று ஆண்டுகள்  ஆண்ட பா.ஜெ.க வின் சாதனை என்று சொல்ல ஏதும் இல்லாத போது  மாட்டுக்கறி , காஷ்மீர் என்று மக்கள் கவனத்தை திசை திருப்புகிறார்கள் .


Wednesday, May 24, 2017



வள்ளலாரும் ,


ராஜா ராம்மோகன் ராயும் ...!!!





கற்பனா சோஷலிச வாதியான ராபர்ட் ஓவனுடன் விவாதித்தவர் ,ராம் மோகன்ராய். சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட ராம்மோகன் அதனை இந்தியாவிற்கு சென்று  பிரசசாரம்  செய்வேன் என்றார். அவ்ருக்குஒரு சந்தேகமிருந்தது . சோஷலிச சமூகத்தில் கடவுளுக்கு பங்கு உண்டா ?என்பது அவர் சந்தேகம். ராபர்ட் ஓவன் நாத்திகர் சோசலிச சமூகத்தில் கடவுளுக்கு வேலை யோ பங்கோ இல்லை என்று கூறிவிட்டார்.

ராம் மோகன் இங்கிலாந்திலேயே இருந்து விட்டார். இந்தியா வந்து மெலிதான சோஷலிச காற்று வீசும் பாதை  அப்போதைக்கு தடைபட்டுவிட்டது.

ஆனால் அவருடை பிரம் மோசமாஜ் தலைவர்கள் விடவில்லை .குறிப்பாக சிவராஜ் என்ற சீடர்  தொழிலாளர்கள் பாடுகளைப்பற்றி கவலைப்பட்டார்.அவர்களுக்காக "சிரமசஞ்சீவினி "  என்ற பத்திரிகையை நடத்தினார். 

சோஷலிசகருத்துக்களை (கற்பனா )  பரப்ப இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

சென்னையில் பிரம்ம சமாஜ தலைவர் ரங்கநாத முதலியார் மூலம் ராமலிங்க வள்ளலாரை சந்தித்தார். வள்ளலார் அப்போது சமுதாய சீர்திருத்தத்தில் தீவிரமாக இருந்தார். பிடிட்டிஷாரின் அடக்குமுறையை எதிர்த்துவந்தார் . இருவரும் ஓரளவுக்கு உடன்பட்டனர். சிவராஜ் கல்கத்தா திரும்பினார்.

இதற்கிடையே வள்ளலார் தீவிரமான ஆன்மிக தேடலில் ஈடுபட்டார்.

ஓராண்டு கழித்து சிவராஜ் வள்ளலாரை தொடர்புகொண்டு சோஷலிச பாதையை பிரசாரம் செய்ய அழைத்தார். 

"மன்னிக்க வேண்டும்.! நான் தீவிரமான ஆன்மிக வழியை தேர்ந்தெடுத்து விட்டேன் ! நீங்கள் சொஸலிஷத்தின் மூலம்  மக்கள் நலவாழ்வை  உருவாக்குங்கள் !"

என்று கூறி ஒதுங்கி கொண்டார் .!!!

(ஆதாரம்;சுதந்திர போராட்ட வரலாறு ' தமிழக அரசு பதிப்பு  )







Saturday, May 13, 2017






"இந்தி " திணிப்பும் ,

எதிர்ப்பும் ......!!!






30 ஆண்டுகளில் இந்தி எதிர்ப்பு நடந்தது. அதன்பிறகு 50ம் ஆண்டுகளிலும் நடந்தது. 1965ம் ஆண்டுகளில் நடந்த போராட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை அடைந்தது.

தி .லி  ஜங்ஷனில் மதுரை திரவியம் தாயுமானவர்  இந்து கல்லூரி செயல்பட்டு வந்தது. அதில்தான் நான் 1st UC ,11nd Uc  1952-54 ம் ஆண்டுகளில் படித்தேன். 


கடைய நல்லூரிலிருந்து வந்த சத்திய மூர்த்தி, மற்றும் ஷாகுல் ஹமீது போன்றவர்கள்  ஹாஸ்டல் மாணவர்கள். அப்போது 4th UC   A .L . சுப்பிரமணியம் படித்துக்கொண்டிருந்தார்என்று நினைவு. பின்னாளில் ஷாகுல்,ALS  ம் எம்.எல்.ஏ ஆனார்கள். எல்லாருமே இயக்கத்தை சேர்ந்தவர்கள். 

இயக்கம் என்றால்  திராவிட விடுதலை இயக்கம் . Dravidian Liberation front . இவர்களோடு சேர்ந்து இயக்கவேலைகளை செய்யவேன். 

திராவிட நாடு ஏன் பிரியவேண்டும், அதன் பொருளாதார ,அரசியல் கோட்டபாடுகள் ஆகியவற்றை மாணவர்களிடையே பிரசசாரஞ்  செய்வது பணி அப்போது தான் இந்தி எதிர்ப்பு இரண்டாவது இயக்கம் வந்தது.

ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொது  புகுந்து மாணவர்களிடையே பிரசசாரஞ்  செய்வது வழக்கம்.


"படியும் பண்ணிசைக்கும் பசையப்பன் கல்லூரியில் வேலை நிறுத்தம்.!இடிந்த சுவரும் இன்கவி பாடும் இந்து கல்லூரியில் வேண்டாமா ? வாருங்கள் தோழர்களே" என்று கோஷமிடுவோம்.


இப்படி எங்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பல நண்பர்கள் பெயர் மறந்து விட்டது


கெமிஸ்ட்ரி பேராசிரியர் N .பாலசுப்பிர மானியம் .அவர் வகுப்பிற்குள் சென்று மாணவர்களை அழைக்கும்பொறுப்பு எனக்கு வந்தது . உள்ளே சென்று கோஷம் போட்டேன். 


அப்போதெல்லாம் 11nd  UC  தான் பலகலைக்கழக தேர்வு  நடக்கும். எல்லாமானவர்களும் தேர்வு எழுத முடியாது.செலக்ஷன் சிஸ்டம் என்று உண்டு. பல்கலை  தேர்வு எழுத பேராசிரியர் செலக்ட பண்ண வேண்டும். என்னை பல்கலைக்கழக தேர்வு எழுத முடியாமல் தடை செய்து விட்டார்கள்.

அந்த ஆண்டு நான் செலக்ட் ஆகவில்லை. பேராசிரியர்   .  N பாலசுப்பிரமணியம் பழி வாங்கிவிட்டார்.



என்  கல்லூரி வாழ்க்கை  அதோடு முடிந்தது !!! 


Wednesday, May 10, 2017




"நீட் " தேர்வு , 


பற்றி  ......!!!






 National  Eligibility  and  Enterence  Test என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர் வைதான்   அப்படி அழைக்கிறார்கள். இந்தியா பூறாவும் இந்த தேர்வு நடந்தது. மருத்துவ துறையின் தரத்தை உயர்த்தப்போவதாக  பா.ஜ .க அரசு கண்ணீர் விடுகிறது.

இவர்களின் கல்வித்தரம்,குறிப்பாக மத்திய பிரதேசத்தில் "வியாபம் " ஊழல் மூலம் நாறிக்கொண்டிருக்கிறது.


இந்தியாவில் சுற்றுலா துறை மருத்துவ சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மிகசிறந்த மருத்துவம் உலகத்தரத்தில் கிடைப்பதால் அதனை மையப்படுத்தி விரிவாக்கப்போகிறார்கள்.

மத்திய பிரதேசம், மராட்டியம், உ.பி ஆகியபகுதிகளில் பல கண்மருத்துவ மனைகள் உள்ளன. நேரடியான அனுபவம் எனக்கு உண்டு. அவர்களோடு பழகியதில் நான்  தமிழ் நாடு  என்று கூறியதும் அவர்கள் முக மலர்சசி யோடு என்னிடம்பேச ஆரம்பிப்பார்கள். 


நான் மதுரை அரவிந்த்  ல் தான் "ஆப்தல் " பயிற்சி பெற்றேன்     என்று பெருமையாக கூறுவார்கள்.ஒரு சிலர் சென்னை என்பார்கள். இன்று கண் மருத்துவத்தில் தமிழகம் தான் முன்ணணியிலிருக்கிறது என்றால்  மிகையாகாது.

கழுத்திலிருந்து வயிற்றின் அடிப்பகுதி வரை thorasic என்பார்கள்.இதிலும் சென்னை புகழ்  பெற்றது.நரம்பியல், சிறுநீர்பை, என்று பல துறைகளில் விற்பன்னர்கள் உள்ளார்கள். இதய  நோய்க்கான அறுவை சிகிசையில் தமிழக மருத்துவர்கள்   உலகப் புகழ்  பெற்றவர்கள்.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் 19 உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு முறையில் தான் சேர்க்கப்படுகிறார்கள். தரம் தரம் என்று கூப்பாடு போடுபவர்களித்தனையும்கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். 


"நீட்"    தேர்வால் இது கண்டிப்பாக பாதிக்கப்படும்.

இந்த தேர்வு இந்தியா முழுவதும் நடை பெறுகிறது. மாணவர்கள் யாரும் தமிழகத்திலோ  கேரளத்திலோ சோதனை செய்யப்பட்ட மாதிரி வடமாநிலங்களில் செய்யப்பட்டதாக செய்திகள் இல்லை.


ஏன் ? அப்படி.!


வலைத்தளங்களிலிந்த சோதனை முறையை கண்டித்து கடுமையான விமரிசனங்கள்  வந்துள்ளன . கடுமையான சொற்களால் வசைமாரி பொழிந்துள்ளனர்.

ஒருவேளை இந்த சோதனை முறை தவிர்க்கப்பட்டிருந்தால் "நீட் " தேர்வை ஏற்கும் மனநிலைக்கு நம்மை தள்ளும் முயற்சியாக இருக்குமோ !

"நீட் " நமது உரிமையை தாக்கும் சூது !


மத்திய ஆளும் கூட்டம் வழக்கம் போல நம்மை "நிழற்சண்டை "  போட விட்டு வேடிக்கை பார்க்கிறதோ !!!


Friday, May 05, 2017







சபாஷ் ! ஹன்ஸா அவர்களே ...!!!




நிர்பயா வழக்கில் தீர்ப்பு வந்து உள்ளது.. இது பற்றிய விவாதங்களும் நடந்து வருகின்றன. 5-5-17 அன்று தந்தி தொலைக்காட்ச்சியில், "ஆயுத   எழுத்து " நிகழ்ச் சியில்  பாலியல் வன்முறை பற்றி விவாதம் நடந்தது.

நெறியாளர் அசோகா வர்ஷினி யோடு திலகவதி (ஒய்வு )IG , நடிகர் (?) பாண்டு ,சாமானியர் ஜெயந்தி, மற்றும் அட்வகேட்  ஹன்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலியல் வன்முறைக்கு திரைப்படங்கள் தான் காரணமா ?என்ற கேள்வியை முன் வைத்து விவாதம்நடந்ததும். பாவம் ! பாண்டு ! சமூகம் பற்றியும்,திரைத்துறை பற்றியும் அவருடைய அறியாமை மட்டுமே பளிச் சென்று வெளிவந்தது.

திலகவதி அவர்களிடம் அதிகமாக எதிர்பார்த்தேன்.  என்ன செய்ய ? அந்த மாபெரும் தலைவர் ops அணியோடு ஐக்கியமாகிவிட்ட பிறகு எதிர்பார்த்தது தவறு என்பதை நிரூபித்தார்.

சாமானியர் ஜெயந்தி அவர்களின் பேச்சு  சாமானியமானது அல்ல. பாண்டு திணறிய கேள்விக்கு "அப்பா " போன்ற படங்களை சுட்டிக்காட்டியதிலிருந்து விஷய ஞானமுள்ளவர் என்பதை நிரூபித்தார் 

அட்வாக்ட் ஹன்ஸா  விவாதத்தின போது மிகமுக்கியமான விஷயத்தை குறிப்பிட்டார்.

" பாலியல் வன்முறை இரண்டு வகையானது. தனக்கு விரோதமான குழு,மதம்,இனம் ஆகியவற்றின் மீது ஒரு பயத்தை ஏற்படுத்துவதற்காக பாலியல்வன்முறையில் ஈடுபடுவது, மற்றோன்று பாலியல் வக்கிரத்தின் காரணமாக ஈடுபடுவது. இவற்றை வேறுபடுத்தவேண்டும் "  என்கிறார்.

கோத்ரா சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் நடந்த சம்பவம்.பில்கிஸ் பானு என்ற ஆறுமாதகர்ப்பிணி பெண் கூட்டு வன்புணர்வுக்கு ஈடுபட்ட வழக்கின் தீர்ப்பும் வந்துள்ள நேரத்தில் இதுவிவாதத்தின் மிக முக்கியமான பொருளாகும்.

நெறியாளர் அசோகா வர்ஷினி இதனை மறந்தாரா ?மறைத்தாரா?


சபாஷ் ! ஹன்ஸா  அவர்களே ...!!!

Monday, May 01, 2017








நீதி அரசர் கர்ணனும் ,


ஆஷிஷ் நந்தியும் .....!!!




 2013 ஆண்டு என்று நினைவு . ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடந்தது.அதில் இந்தியாவின் பிரபலமான எழுத்தாளர் ஆஷிஷ் நந்தி கலந்து கொண்டார்  . பிரித்திஷ் நந்தி ,மனிஷ் நந்தி  ஆகியோரின் முத்த சகோதரர் அவர் மே .வங்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர். 


"அறிவு ஜீவிகளும் ஊழலும்" என்ற தலைப்பில் அவர் பேசினார்." ஊழல் செய்யாத அரசியல் தலைவர்கள் கிடையாது. மேல்சாதி காரர்கள் தங்களின் அனுபவத்தால் ஊழலில் மாட்டிக்கொள்ளாமல் செய்து விடுகிறார்கள். பாவம்-பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்கள் அனுபவமின்மையால் செய்யத்தெரியாமல்செய்து மாட்டிக்கொண்டு விடுகிறார்கள் " என்று பேசினார்.


அப்போது தான் லாலு,முலாயம் சிங் ,மாயாவதி ,என்று ஊழல் தண்டோரா போடப்பட்டு வந்தது.


அஷிஸ் நந்தி மீது எல்லாரும் பாய்ந்தார்கள்.. "இதிலுமா இட ஒதுக்கீடு "என்று ஏகாடி யம் பேசினார்கள்.


அது பெரியவிஷயமில்லை.மாயாவதி ஆஷிஷ் மீது "தீண்டாமை சட்டத்தை "பாயவிட்டார் ராஜஸ்தான் மாநில முதல்வர் கெலாட்  பாய்ந்தார். இருவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.


நீதிஅரசர் கர்ணன் அவர்களை நான் ஆதரிக்க வில்லை. நடந்த விஷயங்கள் பற்றி முழுவதும் தெரியாது. ஆனால் அவரை ridicule பண்ணும் அளவுக்கு அறிவார்ந்த நீதி அரசர்கள் போக வேண்டுமா ?


"அடுத்த மாதம் அவர் ஒய்வு பெறுகிறார். விட்டு விடுங்கள் .ஒன்றும் குடிமுழுகி விடாது  " என்று முத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆலோசனை கூறியுள்ளார்.


பள்ளிக்கு போய் படிக்கக்கூடமுடியாத சமூகம். படித்து,பாஸ் பண்ணி, வக்கீலாக பிராக்டிஸ் பண்ணி நீதிபதி ஆன  ஒருவர். என்னனென்ன கஷ்டங்கள்,அவமானங்கள் பட்டாரோ . 


ஆனாலும் இவ்வளவு வன்மம் நீதித்துறைக்கு கூடாது.!!!


It is persecution !!!