Wednesday, November 29, 2017






காதல் திருமணமும் ,


மத மாற்றமும்......!!!


அகிலா என்ற இந்து மதத்தை சார்ந்த பெண் முஸ்லிமாக மாறியது உச்சநீதி  மன்றம் வரை சென்றது . 


ஒரு இந்துவும் முஸ்லிமும், நணபர்களாக இருக்கலாம் என்றால் திருமணம் ஆனபிறகும் அப்படியே ஏன் இருக்க முடியாது என்ற கேள்வி முகநூலில் எழுப்பப்பட்டு விவாத பொருளாகிவிட்டது. இதற்கு காரணம்  இந்துக்கள்  அல்ல. கிறிஸ்துவ,இஸ்லாமிய மதத்தினரே என்று ஒருவர் பதிலும் எழுதி இருக்கிறார் . 


நாட்டில் நடப்பில் நடக்கும் நிலைமை பற்றி சரியான கவனம்  இல்லாததே இதற்கு காரணம். 


பல மாநிலங்களில் வெவவேறு  மதத்தை சார்ந்தவர்கள் ஓரே   குடும்பத்தில் மிகவும் சகஜமாக வாழ்ந்து  வருகிறார்கள் என்ற உண்மை யை அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற மக்களிடையே இருக்கிற புரிதல்  இந்த intelectuals களிடையே இருப்பதில்லை .


நெல்லை மாவட்டத்தில் அண்ணன்  இந்து வாகவும் தங்கை கிறிஸ்துவராகவும் இருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம் . எனது நண்பர் கிரிஸ்துவர் . வெகுகாலம் குழந்தை இல்லை . ஒருமுறை சங்கரன் கோவில் சென்றிருக்கிறார் .அங்கு ஒருவர் ஆலோசனையை  கேட்டு குழ்ந்தை பிறந்தால் சங்கர நாராயணன் என்று பெயர் வைப்பதாக நேர்ந்திருக்கிறார் .அவருக்கு முதல் குழந்தையாக பெண் பிறந்ததும். அந்த குழந்தைக்கு கோமதி என்று பெயர் வைத்தார் .அதன்பிறகு அவருக்கு ஒரு ஆணும் பெண்ணும் குழந்தையாக பிறந்தது.


கோமதி தன அத்தைமகன் சலமனை  திருமணம் செய்து கொண்டார். கோமதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்> அவரது  முதல்  மகன் சங்கர நாராயணன் , இளையவன் பிரிட்டோ ! மூத்தவன் இந்துவாகவும் இளையவன் கிறிஸ்துவாகவும் வாழ்கிறார்கள். 


பஞ்சாபில் இத்தகைய நல்லிணக்கத்தை அதிகம்  பார்க்கலாம் . அண்ணண் காளி  பக்தனாக இருப்பான். தம்பி  தாடியோடு  சீக்கியராக வலம் வருவார்.


   பஞ்சாபி இலக்கியத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் நானக் சிங். லாகூரில் பிறந்தவர் .அவர் ஒரு இந்து .பின்னாளில் சிக்கியராக மாறினார்.    ஹன்ஸ் ராஜ் என்ற தன பெயரை மாற்றிக்கொண்டு நானக் சிங்  என்று ஆனார்.


அக்பரின் மனைவி ஜோதிபா ! அவர் மதம் மாறவில்லை .அரண்மனைக்குள் கிருஷ்ணன் கோவில் கட்டிக்கொடுத்தார் அக் பர்கிருஷ்ணன் பிறந்தநாள்விழாவில் அக்பரும் கலந்து கொள்வார் என்பது வரலாறு.


நீதிமான்கள்,மத தலைவர்கள் கூட  இதனை மறந்து நிற்கிறார்களே   !!!


Monday, November 20, 2017





"அறம் " என்ற 

திரைப்படத்தை ,


முன்வைத்து .... 2





1988  ஆண்டு . தூர்தர்ஷன் தவிர தனியார் தொலைக்காட்ச்சி அலைவரிசை அதிகம் இல்லை. மிகவும் ஆரோக்கியமான தொடர்கள் வந்து கொண்டிருந்தன .அப்படி வந்த தொடர் தான் "தமஸ் " (இருட்டு ) இந்தியில் வந்தது.

பால்ராஜ்  சஹா னியின் சகோதரர் பீஷ்ம சஹானி .பஞ்சாப் பல்கலையில் ஆங்கிலப்பேராசிரியராக இருந்தார்> அவர் எழுதிய நாவல்தான் "தமஸ் ". இந்த நாவலுக்காக சாகித்ய  அகாடமி  விருது பெற்றார் .

இந்திய வரலாற்றின் இருண்ட  பகுதியான பிரிவினையை சித்தரிக்கும் நாவல் .மனிதத்தை இழந்து இந்து,முஸ்லீம்,சீக்கியன் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலத்தை விவரிக்கும் நாவல்.

இந்த வேளையில் கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ் காரர்கள் முஸ்லீம் லீக் ,இந்து மகாசபை ஆகிய அரசியல் இயக்கங்கள் ஆற்றிய பணியை சொல்லும்நாவல்.

" நாத்து செருப்பு தைக்கும் தொழிலாளி.  லாகூர் அருகில் ஒருகிராமத்தில் வசிக்கிறான் . கிராமத்து பெரியவர் அவனிடம் கால்நடை மருத்துவர் ஒருவருக்காக ஒரு பன்றியை வெட்டி  தரும்படி கேட்கிறார் .பன்றியை வெட்டி பழக்கமில்லாத அவன் .தயக்கத்தோடு  வெட்டித்தருகிறான் ."

காங்கிரஸ் காரர்கள் உள்ளூர் பிரமுகர்களோடு பேச வந்திருக்கிறார்கள். திடீரென்று முஸ்லிம்கள் கூட்டமாக ஆவேசத்தோடு வருகிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மசூதியின் முன் பன்றி யின் சடலம் கிடப்பதாக சொல்லி கலகம். 

நாதுவுக்கு பயம்.ஒடிசென்று அந்த பன்றியை பார்க்கிறான் .கால்நடை மருத்துவருக்காக அவன் வெட்டிய பன்றிதான் அது .வீட்டிற்கு வந்து கர்ப்பமாக இருக்கும் தன மனைவியிடம் சொல்லி நாம் இந்தக்கிராமத்தை விட்டு இந்துக்களத்திகமாக இருக்கும் கிராமத்திற்கு செல்ல லாம் என்று புறப்படுகிறான்"


தூதர்ஷனில் ஒவ்வொரு சனிக்கிழமை 10 மணிக்கு வெளியான இந்த தொடர் மொத்தம்    ஆறு வாரங்கள் ஒளிபரப்பாயிற்று .இந்து,முஸ்லீம்,சீக்கியர்கள் பட்ட பாட்டினை நெஞ்ச்ம கரைய சொன்ன தொடர் இது. இதனை ஒளிபரப்பும் பொது பல  தடை களை  சந்திக்க நேர்ந்தது.

இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்தார்கள். ஓம் பூரி,அம்ரிஷ் பூரி , ஸாக்ஸேனா, சிக்ரி அம்மையார், பாதக் , என்று நடித்தார்கள்.

வனராஜ் பாட்டியா இசை அமைக்க, கோவிந்த் நிஹிலாணி இயக்கினார் .


2013 ஆண்டு மிகுந்த பிரயாசைக்கு பின் திரைப்படமாகவும் வந்தது .கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் ஓடும்  படமாகும் .

அரசியல் படத்தை விரும்புபவர்கள் கூகுளில் tamas என்று கிளிக் செய்தால் கிடைக்கும்.

கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று !!!




Saturday, November 18, 2017




"அறம் " என்ற 


திரைப்படத்தை 

முன்வைத்து ....!!!




"அறம் " திரைப்படத்தை முன்வைத்து சில படங்களை பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். திருநெல்வேலி டவுனில் பாப்புலர் டாக்கீஸ் இருந்தது .அதில் தான் "பராசக்தி படம் வந்தது .அப்போது நான் v து form படித்துக்கொண்டு இருந்தேன். 

"கோட்டையிலே இருவண்ணக்கொடி பறக்க வேண்டாமா ? வி.சி கணேசனை பாருங்கள். காட்ச்சியை காணுமுன் கழகத்திற்கு காணிக்கை தாருங்கள் "என்று தோளிலே இருவண்ணக்கொடியோடு உண்டியல் குலுக்கியவன் நான் . தமிழ் ஆசிரியர் தாஸ் என்ன மட்டும் லேட்டாக வந்தால் கண்டு கொள்ளமாட்டார். அப்போது நான் இயக்கத்தில் இரு ந்தவன் .அதாவது dravidan progressive front என்ற இயக்கம் அது .


இந்த படத்திற்கு எதிராக தினமணி வார எட்டில் அட்டைப்பட விமரிசனம் வந்தது ."பரப்பிரம்மம் " என்ற படம் போட்டு விமரிசனம் எழுதி இருந்தார்கள். "கல்யாணியின் கற்பை கடவுள் தான் அந்த மணியடிக்கும்பையன் மூலம் பூசாரியிடம் இருந்து காப்பாற்றினார் " என்றெல்லாம் எழுதி இருந்தார்கள் .

இதற்கு அடுத்து வந்த மற்றோரு அரசியல் படம் " ரத்தக்கண்ணீர் " !  பராசக்தி அளவுக்கு எடுபடவில்லை .காரணம் அந்த படத்தின் கதை உண்மையில் திருவாரூர் தங்கராசு அவர்களால் எழுதப்பட்டது என்பதும் திக காரர்கள் கருணாநிதியை அதற்காக விமரிசித்தம் ஆகும்.

1975 ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழா பெங்களுருவில் நடந்தது . அப்போது அந்தவிழாவில் மிகசிறந்த அரசியல் படம் என்று கூறி தெலுங்கு  படமான  "மா பூமி " என்ற படத்திற்கு விருது கொடுத்தார்கள்.

"மா பூமி "


நிஜாமின் கொடுங்கோல் ஆடசியில் கிராமப்புறத்து விவசாயிகள் சித்திரவதை அனுபவித்து வந்தார்கள். ராமுவும் அவன் தந்தையும் அந்த கிராமத்தில் வாழாமல் வாழ்ந்து  வந்தார்கள். ஜமீன்களின் அராஜகம் தாங்கமுடியாது பெண்கள் ஜமீனுக்கு தான் முதல் சொந்தம் .இந்த வாழ்க்கை  பிடிக்காமல் ராமு ஹைதிராபாத் செல்கிறான் அங்கு மண்பானை செய்யு  ஆலையில்பணியாற்றுகிறான். அந்த ஆ லையிலிருக்கும் தொழிற்சங்கத்தோடு அறிமுகமாகிறான், எழுத்தபடிக்க  தெரியாதவனுக்கு தொழிங்க  தோழர்கள் கற்பிக்கிறார்கள் . முதன் முதலாக மார்க்ஸ்  படத்தை பார்க்கிறான்.கொஞ்சம் கொஞ்ச்மாக   கம்யூனிஸ்ட் ஆகிறான். கம்யூனிச கடசியின் தலைமையில் கிராமப்புற விவசாயிகள் ஜமீன்களை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ராமு ஒரு கட்டத்தில் நகரத்து தலைவர்களுக்கும்,கிராமத்து போராளிகளுக்கும் இடையே கூரியர் ஆக பணியாற்று கிறான். போராளியாக மாறுகிறான் .அந்த விவசாயிகளின் புரட்ச்சியில் ஆயுதபாணியாக கலக்கிறான்.

தெலுங்கானா விவசாயிகள் தங்கள் நிலத்தை மீட் க்க நடந்த இந்த ஆயுதம் தாங்கிய புர ட்சசியைத்தான்  "மா பூமி " (என் நிலம் ) என்ற படம் சித்தரித்தது.

எத்தனை முறை பார்த்திருப்பேன் . கணக்கு என்னிடம் இல்லை !!!



கவுதம் கோஷ் என்ற வாங்க இயக்குனர் இயக்கிய தெலுங்கு படமிது.



Friday, November 10, 2017






"லட்சுமி  " என்ற 


குறும்படத்தை , 


முன்வைத்து...!!!





வெண்புறாவின் விமரிசனத்தை படித்ததும் "லட்சுமி " குறும்படத்தை பார்க்க மிகவும் விரும்பினேன். 


படத்தை பார்த்தேன். பார்த்ததும் உடனடியாக  மறைந்த  தோழர் மேலாண்மை தான் நினைவுக்கு  வந்தார். நிறைய இளம் எழுத்தாளர்களை ஊக்கிவித்தவர் .காரணம் அப்போது அவர் செம்மலர் ஆசிரியர் குழவிலயும் பணியாறிவந்தார்> வரும் கதைகள் படித்து பரிசீலித்து பிரசுரம் செய்யும் பணியில் இருந்தார் .ஒய்வு நேரங்களில் பேசிக்கொண்டிருப்போம் .


"வே  செம்மலருக்கு எழுதற இளம் எழுத்தாளரை கூப்பிட்டு கூட்டம் போடவேண்டும் வே ! அருமையான கற்பனை ! எப்படியெல்லாம் சிந்திக்கானுவ !  அதை கதை யாக்கும் பொது சிரமப்படறானுவ ! அதுமட்டும் சொல்லிப்புட்டம்னா நம்ம பயலுகள மிஞ்ச ஆளுகிடையாது" என்பார்.


"லட்சுமி "  படம்  கூறுவதை discriminate பண்ணி  பார்க்கும் விமரிசகனால் ரசிக்கமுடிகிறது.சம்பவங்களின் அழுத்தம் ,சில takings ,ஆகியவை ஒரு நல்ல கருத்தை சொல்லவந்ததை சிதற  விடுகிறது .


தினசரி வாழ்க்கை , அதன் சலிப்பு ,ஆகியவற்றை சித்தரிக்க அந்த இரவு காட்சி அந்தவடிவத்தில் தேவையா ?  கணவனுக்கு வந்த தொலைபேசி அவனுடைய "சோர" த்தை  சித்தரிப்பதாக ஏன் பார்வையாளன் எடுத்துக்கொள்ள வேண்டும்? 


சிநேகிதி வீட்டில தங்கி விடுகிறேன் எனும் பொது காலை உணவு பற்றிக்கவலைப்படும் கணவன் - மீண்டும் பஸ்  நிறுத்தம் வந்து "எனக்கு பசிக்கிறது " என்று கூறும் மனைவி - திறமையிருந்தும் சரியாக covey செய் யாத இயக்குனர் என்றே படுகிறது.



கருணா !   குறும்பட இளம் இயக்குனர்களை வைத்து ஒரு பயிற்சி முகாம்  ஏற்பாடு பண்ணும்  வே !


Wednesday, November 08, 2017







"நிஹால் காஸ்யப்"


தேசிய இசைப்போட்டிக்கு 


தேர்வு ...!!!


இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையே இசைப்போட்டி நடைபெற்று வருகிறது .இந்த போட்டி கல்லூரிகளுக்கு இடையே நடக்கும். பின்னர் இதிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தேர்வு செய்வார்கள் . தேர்வானவர்கள், அந்தந்த பல்கலைக்கழகங்களை சார்ந்த பிரதிநிதிகளாக மண்டல அளவில் நடக்கும் போட்டிக்கு செல்வார்கள். 


 பேரன் நிஹால் காஸ்யப் இசை யில் நாட்டமுள்ளவன். சிறுவயதில் கர்நாடக இசை சில ஆண்டுகள் பயின்றான் .  கிடார், கீ போர்டு இரண்டும் பழகி இருக்கிறான். அவன் கல்லூரியில் இசை குழுவின்  பொறுப்பாளனாகவும் இருக்கிறான் .


நாகபுரி பல்கலைக்கழகம் மண்டல  அளவிலான மேற்கத்தியஇசைபோ ட்டிக்கு பலகலையின் சார்பில் இவர்கள் குழுவை  தேர்வு செய்து அனுப்பியது. இந்த மாந்தம் 4,5,6 ம் தேதி  போபாலில் நடந்த போட்டியில் கலந்து கொண்டான்.


இன்று பல்கலையிலிருந்து தேசிய அளவில் ராஞ்சி யில் நடக்க விருக்கும் போட்டியில் நாகபுரி பல்கலையின் சார்பில் மேற்கத்திய இசை பிரிவுக்கு இவர்களுடைய குழு  தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தியினை  பல்கலைக்கழகம் அனுப்பி யுள்ளது .


1918ம் ஆண்டு பிப்ரவரியில் நடக்க விருக்கும் தேசிய போட்டியிலும் வெற்றி பெற நிஹால் மற்றும் அவனுடைய குழுவை வாழ்த்தும்படி  தோழர்களையும் பதிவர்களைக்கேட்டுக் கொள்கிறேன் .



Sunday, November 05, 2017





"Taping the rich and 

Patting the poor "


 5-11-17 அன்று  விஜய் தொலைக்காட்ச்சியின் "நீயா ? நானா ? " நிகழ்ச்ச்சியில் மறந்த முதலவர் அண்ணாதுரை பற்றி பேசினார்கள். இளம் மாணவர்கள்,கருத்தாளர்கள் ஒருபக்கமும் ,நீயாநானாவில் அடிக்கடி வரும் பழைய முகங்கள் ஒரு பக்கமுமாக பேசினார்கள்.

ஜவஹர்லாலபலகலிக்கழகத்தில்வரலாறு பற்றி ஆராயும் மாணவரிலிருந்து உள்ளூரில் வரலாறு படிப்பவர்கள் வரை ஒருபக்கம் இருந்தது மன நிறைவைத்தந்தது . அண்ணாவின் ஆட்ச்சியை, மாட்ச்சியை விமர்சிக்காமல் முழுக்க முழுக்க   புகழ் பாடும் தொகுப்பாகவே இருந்தது.

1967ம் ஆண்டு தி.மு.க பதிவு ஏற்ற பொது அதன் ரத்த சாடசியாக வாழ்ந்தவர்கள் யாரும் பங்கேற்காதது ஒரு குறைதான் .

நெறியாளர் அண்ணாவின் மிகசிறந்த சொல் எது என்று கேட்டார் . பலரும் பலசந்தர்ப்பத்தில் அவர் பேசியதை சுட்டி காட்டினார்கள் .

1967ம் ஆண்டு தி.மு.க  உள்ளிட்ட ஏழு கடசி கூட்டணிக்காக தேர்தல் பணியாற்றிய லட்சோபலட்சம் பேரில் ஒருவனாக இரவு  கண்விழித்து தேர்தல்முடிவுகளை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தவன் நான் .

பதவி ஏற்பு விழா நடந்த பொது, காங்கிரசை வீழ்த்தி  அண்ணா அவர்கள் முதலமைசறானதை  தானே பதவி ஏற்றதாக நினைத்து கோடானு கோடி தமிழர்கள் மகிழ்ந்த பொது அதில் நானும் ஒருவனாக இருந்தேன்.

பதவி ஏற்ற பிறகு அண்ணா அவர்கள் தலைமைசெயலகத்தில் உள்ள அதிகாரிகள்,மற்றும் ஊழியர்களை அழைத்து    பேசினார் . 

எனக்கு தெரிந்து அண்ணா பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . தி.மு.க வின் வரி கொள்கை பற்றி  அண்ணா 

"பணக்காரர்களின் தொந்தியிலிருந்து வரியை உறிஞ்ச்சுவோம் .ஏழைகளிடம் தட்டிக்கொடுத்து வாங்குவோம் "

"taping the Rich and Pating the poor " என்றார் .

வார்த்தை ஜாலத்தில் அண்ணாவை மிஞ்ச யாருமில்லை. 

TAP என்ற ஆங்கில வார்த்தையின் மாற்று PAT  !"

அவர் பெயரை வைத்துக்கொண்டு ஆடுபவர்கள் இன்று 

"taping the  poor and  pating the rich " என்று மாறிவிட்டார்கள்.

என்ன செய்ய ? 









மழையும்,



ஊடகங்களும் ...!!!







வடநாட்டில் இருக்கும் என்போன்றவர்களுக்கு தமிழ்நாட்டு செய்திகளை தொலைக்காட்ச்சி  மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது .குறிப்பாக இயற்கை இடர்பாடுகளான ,மழை,வெள்ளம் போன்றவைகளால் தமிழக்த்திலுறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உடனறிய இந்த ஊடகங்களுதவுகின்றன.


2015ம்ஆண்டு என்பேரனின்  ன்திருமணத்திற்குபோக முடியாமல்போயிற்று.உறவினர்கள்என் வயதையும்,உடல்நிலையையும்  கணக்கில் கொண்டு தயவு செய்து வராதீர்கள்  என்று  ஆலோசனை கூறினார்கள். நான் பயணத்தை ரத்து செய்தேன்   மீறி சென்ற உறவினர்கள் விஜயவாடா, நெல்லூர் வரை சென்று பின்னர் சென்னையை சரியா நேரத்தில் அடைய முடியாமல் போனது பற்றி  கதை கதையாக சொன்னார்கள்.


நேற்று சனிக்கிழமை அன்று தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்ச்சி செய்தியில், வேளசேரி, மேடவாக்கம், பகுதியில் தேங்கி நிற்கும் நீர் பற்றிய காட்ச்சிகளை பார்த்து பதறி விட்டேன் .


உடனடியாக அங்கு தங்கி இருக்கும் என் மைத்துனரை பற்றிய  கவலையில் அவரை தொடர்பு கொண்டேன் . 


"dont beleive  E media ! biased and  exagerated  என்று தகவல் அனுப்பி நாங்கள் சவுகரியமாக இருக்கிறோம் என்று மின் செய்தி அனுப்பி இருந்தார்.



திருசியில்  வழக்குறை ஞராக  இருக்கும் என் மகள்  நீதிமன்ற விஷயமாக அடிக்கடி சென்னை வருவார் .அங்கே தங்குவதற்காக வீ டும் வாங்கியுள்ளார் .   அவரை தொடர்பு கொன்டேன். எந்த பிரசினையும்  இல்லை என்று குறிப்பிட்டார் . காலையில்  சென்று வாடிக்கையாளர்களை பார்த்ததாக கூறினார்.


வலசர  வாக்கத்தில் இருக்கும் மகனும் ஒரு பிரசசினையும இல்லை என்றார். 



மழை யினால் சென்னையில் மக்கள் தவிப்பது ஒருபக்கம். ஆனால் 2015 ம் ஆண்டு போல் இல்லை என்பது தெரிகிறது .


தொலைக்காட்ச்சி ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு நடந்து கொள்வது அவசியம் !!!

Friday, November 03, 2017






மனித குலம் கண்டெடுத்த 

அற்புத பூமி 

தமிழகம் ...!!!




மனிதகுலம் தோன்றியது ஆப்பிரிக்காவில் என்பது உறுதி செய்யப்பட ஒன்று . ஆப்பிரிக்க கிழக்கு  கடற்கரை வழியாக ஆதி மனிதன் வசிப்பிடம் தேடி அலைந்தான் .60000 ஆண்டுகளுக்கு முன்பாக புறப்பட்ட அவன் மத்திய தரைக்கடல் வழியாக வடக்கே சென்றான். 


ஒரு குழு கிழக்கே சென்றது.மத்திய ஆசியா,சீனம் என்று புலம் தேடி புறப்பட்டது ஒரு சிறு  குழு  கிழக்கே சென்று இந்தியா -தென்னிந்தியா என்று சென்றது .

தென்னிந்தியா வந்த குழு இங்கு ள்ள பூமி அதன் வெட்ப தட்ப நிலை ஆகியவற்றை உணர்ந்து இங்கேயே தங்கி விட்டது.

உலகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு இரண்டு முறை சூரியன் தலைக்கு மேலே வருகிறான். அதனால் இரண்டு கோடை  வருகிறது> இரண்டு கோடை  என்பதால் அதன் வெப்ப சலனத்தால் இரண்டு பருவமழை  கிடைக்கிறது . மிதமான கோடை ,பருவ மழை,மிதமான குளிர், என்பதால் எளிமையான உடுப்புகள் போதும். ஜீவ ஆறுகள், காடுகள் கனி மரங்கள், மலைப்பகுதி, கடற்கரை , வெப்பக்காடுகளின்மரங்கள், கனிமரங்கள் என்று செழிப்பான பூமி ! பசிக்கு இதமான மா,பலா,வாழை மரங்கள், மூன்றும்  கிடைக்கும் பூமி .


விவசாய பூமி . வேறெங்கும் எதற்கும் செல்லவேண்டிய தில்லை  என்று வளம் கொழிக்கும் இந்த பூமியை தேர்ந்தெடுத்த நமது பாட்டன்கள் தங்கள் அனுபவத்தை அறிவாக்கி நிரந்தரமாக இங்கேயே தங்கினான் .

இந்த பூமியை நாம் சென்னையாக,கடலூராக, நெல்லையாக மழை கால த்தில்  வெள்ளமாகவும் ,கோடைகாலத்தில்குடி  நீர் இல்லாமலும் மாற்றி இருக்கிறோம்.

நமக்கு மன்னிப்பே கிடையாது !!!