Friday, June 18, 2010

Dogs will always lick.

நாய் நக்கியத்தான் குடிக்கும்.அதற்குத்தின்னத்தெரியாது.நாலு காசு கிடைக்கு மென்றால் இவர்கள் -இந்த முதலாளிமர்கள்-என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்தச்சண்டார்ளர்கள் செய்யும் அயோக்கியத்தனம்-சுற்றுலா என்றபெயரில் இவர்கள் செய்வது மனிதகுலம் இதுவரை கேட்டறியாதது.


ஆப்பிரிக்காவுக்கு சிங்கம்,புலி,என்றுபார்ப்பதற்காக அழைத்துச்செல்வார்கள்.சுற்றுலாத் துறையில் உள்ள தனியார் கம்பெனிகள் இத்தகைய சுற்றுலாவினை ஏற்பாடு செய்கிறார்கள். அந்தமான் தீவின் சுற்றுலா அபிவிருத்திக்காக விளம்பரங்கள் வந்துள்ளன. பரதங்க் தீவு என்பது அந்தமானின் மத்தியில் உள்ளது. இங்குள்ள ஆதிவாசி மக்கள் 55000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறார்கள்.உலகத்தொடர்பே இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்துவந்தார்கள்.1998ம் ஆண்டுதான் முதன்முதலாக வெளிஉலகத்திற்கே தெரியவந்துள்ளது.இவர்கள் தங்களை "ஜராவஸ்" என்று அழைத்துக் கொள்கிறர்கள்.இப்பொழுது 350 பேர்தான் உயிரோடு இருக்கின்றனர்.

இவர்களுக்கென்று தனிகுடியிருப்பு உள்ளது.இவர்களை 'ஆங்க்' என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். "ஆங்க்" என்றால் "மனித இனம்"என்று அர்த்தமாம்.இவர்கள் இத்தனை காலம் மிருகங்களப்போல வழ்ந்துவந்தாலும் தாங்கள் வித்தியாசமான உயிரினம் என்பதை உணர்ந்தே இருந்து வருகிறர்கள். இப்படி ஏராளமான பழங்குடிகள் நாகரீகம் என்ற பெயரில் அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன.

ஆஸ்திரேலிய பழங்குடிகளை ப்ரிட்டிஷ்காரர்கள் எப்படி அழித்து தங்கள் நாடாக்கிக்கோண்டார்கள் என்பது வரலாறு.அந்த மக்களின் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.பெண்களை வண்புணர்ச்சி மூலம் புதிய கலப்பினத்தை உருவாக்கினார்கள்.ஆஸ்திரேலியாவில் "ஒலிம்பிக்" விளையாட்டு நடந்தபோது இது அம்பலமாகியது.

இந்தியாவில் பழங்குடி மக்களைப் பாதுகாக்க தனியான சட்டம் உள்ளது.அது நடைமுறையில் இல்லை.வளர்ச்சி,முன்னேற்றம் என்ற பெயரில் இவர்களின் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது"ஜராவஸ்" இன மக்கள் வாழும் பகுதி வழியாக மிகப்பெரிய சாலை போட்டிருக்கிறார்கள். சுற்றுலா வசதிக்காக.விளம்பரத்தில்,"முதுமலை காடுகளில் நீர் குடிக்க வரும் யானை களை பார்ப்பது போல் இந்தசாலையில் உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் "ஜராவஸ்" இன மனிதர்களைப்பார்க்கலாம்." என்று போட்டிருந்தார்கள். மானுடவியலார் சில வருடங்களில் இந்த மக்களை அழித்துவிடும் முயற்சியே இது என்கிறார்கள்.

அருந்ததி ராய் இவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்."மேம் சாகிப்" என்ற திரைப்படத்தில் ஆதிவாசிப்பெண்ணாக நடித்ததுதான் அவருக்கும் ஆதிவாசிகளுக்கும் உள்ள ஒரே தொடர்பு.

11 comments:

சு.பரணி கண்ணன் said...

அருந்ததி ஏன் எல்லோரை பற்றியும் கவலைப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

AkashSankar said...

S.Barani Kannan - சமூக பொறுப்பு இருப்பதாக தன்னை காட்டிக்கொள்ளுபவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன தவறு...

AkashSankar said...

நல்ல பதிவு...இவர்கள் விட்டால் கூண்டில் வைத்து கூட வியாபாரம் செய்வார்கள்...

ராம்ஜி_யாஹூ said...

nice post, thanks for sharing

S.Raman, Vellore said...

நேற்று காலையில் பத்திரிகையில் படிக்கும்போது வந்த கோபம் உங்கள் எழுத்தில் அப்படியே பிரதிபலித்துள்ளது. ஆனாலும் சண்டாளர்கள் என்ற வார்த்தையை
எடுத்து விடுங்களேன் தோழரே, அது ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சக்திகள் பயன்படுத்தும் வார்த்தை அல்லவா?

veligalukkuappaal said...

உலகம் முழுவதையும் சுனாமி சுருட்டி வாரி கந்தலாக வீசிஎறிந்த போது ஆயிரக்கணக்கில் மனிதர்கள் செத்து மடிந்தபோது ஒரு ஒத்தை உயிரும் செத்துப்போகாமல் தமது பல பத்தாயிரம் வருடம் நீண்ட அனுபவத்தின் பாரம்பரிய அறிவால் தன்னை காப்பாற்றிக் கொண்ட ஒரே இனம் ஜாரவா மக்கள்தான். பெருசாக கம்ப்யூட்டர்களையும் செயற்கைக் கோள்களையும் வைத்திருப்பதாக பீத்திக் கொண்டு திரியும் நாம் அந்த மக்களை 'பழங்குடிகள்' என்றல்லவா சொல்லிக்கொண்டு திரிகின்றோம்! நம்மைப் போன்ற கேவலப்பட்ட 'நவீன மனித' ஜென்மம் ஒன்று பேருந்தின் ஜன்னல் வழியே என்ன கருமத்தையோ நீட்ட பல்லாயிரம் கால பாரம்பரிய அறிவு கொண்ட அந்தக் கருப்பு மனிதன் அதை கைநீட்டி வாங்கும் அந்தப் புகைப்படம் இதயத்தைப் பிசைகின்றது தோழரே! அந்த நவீன மனிதன் அப்படி என்னதான் கொடுக்கின்றான்? நாம் சில நூற்றாண்டுகளில் கற்றுக்கொண்ட வஞ்சம், சூதுவாது, பொய், போட்டி, பொறாமை, (அந்த மக்கள் இதுவரையிலும் கண்டிராத) நவீன நோய்கள்...இந்த கருமங்களையா? வேண்டாம், ஜாரவா சகோதரா, அது நெடுஞ்சாலை அல்ல, கொடுஞ்சாலை, அங்கே உனக்கு வேலையில்லை, நீ உன் ராஜ்யத்துக்குள் சென்றுவிடு! முடிந்தால் என் போன்ற நவீன மனிதன் அங்கே வந்து உன் அமைதியையும் உன் தன்மானத்தையும் கலைப்பதை தடு. ஜாரவா மக்களின் விஞ்ஞான அறிவுக்கு நான் தலைதாழ்த்தி வணக்கம் சொல்கின்றேன்!
இக்பால்

kashyapan said...

Iqbal! why dont u write more about "Jarava" people and enlighten us...please do it!....kashyapan

veligalukkuappaal said...

comrade kashyapan,
there are a lot of information and articles available on internet written by environmentalists and anthropologists. atleast we can reach http://www.survivalinternational.org/ for some basic information. I copied a material from that site and reproduced below, which may inspire our friends:
Tsunami Folklore 'Saved Islanders':
Their folklore talks of "huge shaking of ground followed by high wall
of water", according to Manish Chandi, an environmental protection
worker who has studied the tribes and spoke to some Onges after the
disaster. "When the earthquakes struck, the Onges moved to higher ground deep
inside their forest and escaped the fury of the waves that entered the
settlements," he told the BBC News website after talking to some of the
inhabitants who knew some Hindi as well as their own ancient languages.

He said another aboriginal people – the Jarawa on South and Middle Andaman – also fled to higher ground before the waves.

"There's clear evidence that the aboriginals know about tsunamis and they know how to deal with them," he said.

Samir Acharya, convenor of the Society for Andaman and Nicobar Ecology
(Sane), said the aboriginals have a collective memory of earthquakes
and tsunamis so they knew to move to higher ground.

Madhusree Mukherjee, author of The Land of the Naked People, supported
the theory, saying: "The aboriginals have an island survival strategy
that they have developed through the knowledge of the generations."

Anthropologists and government officials compared notes on the tribes'
behaviour after the huge undersea earthquake that triggered the Indian
Ocean tsunami that is now known to have killed more than 200,000 people
in the region.
(that photo i mentioned in my earlier feedback is available on
www.flickr.com/photos/yxo/145972880/
iqbal

Anonymous said...

Are you the kashyapan who writes aanmeega essays in vikatan or kumudham kind of magazenes?

kashyapan said...

Sorry comrade,Iam not that kasshyapan.Iam Kashyapan of Thamarai,Chemmalar mould....kashyapan

Anonymous said...

subject: create an archive page in your blog as like writer marudhan. see his archive page here


http://marudhang.blogspot.com/p/archives.html

To create an archive page as like writer marudhan follow steps mentioned here


http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html


(NOTE: if you create an archive page by following the instructions in the above site the archive page will not show all post titles immediately. you should wait upto 1 week...)