Thursday, June 10, 2010

emergency---------2

நாமக்கல் இலக்கிய முகமுக்கு போகும்போது கூட்டமாக பயணம் செய்யவேண்டாம்.காவல்துறை சந்தேகப்படும்.தனித்தனியாகவே செல்லுங்கள் என்றார்கள். அப்போது திருவள்ளுவர்,பல்லவன் மட்டும்தன் உண்டு.இரவு பத்துமணிக்குமேல் மதுரை பாத்திமா கல்லூரி அருகில் பஸ் பிடித்தேன். முன்பதிவு என்றெல்லாம் கிடையாது.எக்கச்சக்கமான கூட்டம்.இஞ்சின் மீது அமர்ந்து பயணிக்க முடிந்தது.நவம்பர் மாதமாதலால் இஞ்சின் சூடு இதமாக இருந்தது.வாடிப்ப ட்டியில இரண்டுபேர் ஏறினார்கள்.ஊதாநிறகால்சட்டையும் வெள்ளைநிறமேல் சட்டையும் ஒருவர் அணிந்திருந்தார்.


மஞ்சள்பையும் தலைமுடி வெட்டும் அவரை போலீசாக எனக்குக்காட்டியது. . என்னைப்பர்த்து மெலிதாகசிரித்தார்.என் அடிவயிறு கலங்கியது.நிற்பவர்களுக்கு ஊடாக ஊர்ந்து பின்னால் சென்று நின்றேன்.கோடைரோடு போகும் போது மீண்டும் என் அருகில் வந்தார். என்னைக்கண்காணிக்கும் இந்தபோலீசிடமிருந்து தப்பவேண்டும். அதுதான் முக்கியம்.திண்டுக்கல் நகரில் மிகப்பெரிய மூத்திரக்கிடங்குதான் அப்போது பஸ்ஸ்டாண்டு.இறங்கி வேறு வண்டியில் போகலாம் என்று நினைத்தேன்.இருட்டான பகுதியில் பதுங்கினேன்.திரும்பினால் போலீசம் இறங்கு வது தெரிந்தது.மீண்டும் ஓடும் வண்டியில் ஏறும் போது போலீஸ்காரர் ஏறுவதை உணர்ந்தேன்.எதுவும் செய்யமுடியாது.பிடிபட்டாலும் நான் ஒருவன் தான்.நாமக்கல் வரை வந்தால்,அத்துணைபேரையும் கோழியை அமுக்குவதுபோல் அமுக்கிவிடுவார்கள்.கரூர் தாண்டியாகி விட்டது.நாமக்கல் வந்ததும் வண்டி நிற்பதற்கு முன்பாகவே இறங்கி இருட்டில் பதுங்கினேன்.

இருட்டுக்குள்ளேயே ஒருகடையைத்தேடி ஆயிர வைஸ்ய மண்டபம் பற்றி விசாரித்து வண்டியை விட்டேன்.இருந்தாலும் பொறுப்பாளர்களிடம் போலிஸ் தொடர்ந்ததை சொல்லிவிட முடிவுசெய்தேன்.மண்டப முன்வாயிலில் கு.சி.பா வும் வக்கீல் சுப்பிரமணியும் இருந்தார்கள்."போங்கள் போங்கள்,உள்ளே போய் பேசலாம்" என்றார் வக்கீல்.கு.சி.பாவுடன் உள்ளே. நகர்ந்தேன்.அரவம் கேட்டது.திரும்பினால் அதே போலீஸ் வக்கீலோடு பெசிக்கோண்டுருந்தார்.."இவர்தான் ,இவர்தான் என்று வக்கீலிடம் கூவினேன்.போலீஸ்காரர் "இவர்தான் மதுரையிலிருந்து என்னை தொடர்கிறார்" என்றார்."யோவ்! இது நம்ம காஸ்யபன்யா....காஸ்யபன் இது கவிஞர் வெண்மணி"என்று வக்கீல் அறிமுகம்செய்தார்.இதயம் விம்ம வெண்மணியின்கைகளைப் ப்ற்றிக் கொண்டேன்.அவர் கண்களைப் பார்த்தேன்.கவிஞர் அல்லவா.பனித்திருந்தது.........

3 comments:

சே.வேங்கடசுப்ரமணியன் said...

செம சுவாரஸ்யம்.

AkashSankar said...

இந்தியாவில் இப்படி பட்ட நிலை எல்லாம் இருந்ததா... ஆச்சர்யம்...

hariharan said...

அவசரநிலையைப் பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள், என் போன்ற இளையதலைமுறைகளுக்கு அதன் ரணம் தெரிய வாய்ப்பில்லை.