Monday, June 14, 2010

emergency.....3

அவசரநிலையிலும், அதன் கெடுபிடியையும் மீறி செயல்பட வேண்டியதிருந்தது.மத்தியதர வகுப்பை செர்ந்தவர்களின் துடிப்பு மிக்க செயல்பாடு இந்தக்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.அதன் காரணமாகவே அவர்களை ஒன்றுதிரட்டி போதமளிக்கவேண்டிய அவசியமும் இருந்தது.எல்.ஐ.சி, வங்கி,தபால் தந்தி,மத்திய,மாநில அரசு ஊழியர்கள் என்று அவர்களுக்கு தத்துவார்த்த,அரசியல் வகுப்பு நடத்தினோம்.மதுரயைப் பொருத்தமட்டில், இந்தவிஷயத்தில் எல்.ஐ.சி ஊழியர்களின் பொறுப்பு சிறப்பாக இருந்தது.ரகசியமாக நடத்தவேண்டியிருந்ததால் எல்.ஐ.சி யைச்செர்ந்ததோழர் B.நாரயணசிங்கிடம் பொறுப்பு கட்டப்பட்டது.துணிச்சலும்திட்டமிடலுமவருடையசொத்து..


யார் யார், எப்பொழுது,எங்கு வரவேண்டும்,என்பதிலிருந்து,உணவு ஏற்படு வரை அவரே கவனித்துக் கொண்டார்.மறைந்த எல்.ஐ.சி தோழர் மாணிக்கம் வீட்டு மாடியில் வகுப்பு நடத்தப்படும். ஆசிரியரை வரவழைத்து முகாமுக்கு கொண்டுவருவது என் பொறுப்பாகும்.வெளிநாட்டில் பொருளாதாரம் படித்து மார்க்சீய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் அப்போதுதான் இந்தியா வந்திருந்தார்.அவரை கொண்டுவரும் பொறுப்பு எனக்கு என்றாயிற்று.அவர் எடுத்த வகுப்பை இன்றும் நண்பர்கள் நினைவு.றுத்தி பேசிக்கொண்டிருக்கிறர்கள்.பண்டமாற்று பொருளாதாரம்,எப்படி பணப்பட்டுவாடா பொருளாதாரமாக மாறியது என்பதை அற்புதமாக விளக்குவார்.மார்க்சின் "மூலதனம்" அவருக்கு பிடித்தமான நூலாகும்.

அப்போது இருந்தநிலையில் அவருடன் நான் மட்டுமே தொடர்பு கொள்வது என்று முடிவு செய்தோம்.அவருக்கு அனுப்பும் செய்திகள்கூட சங்கேத மொழியில் இருக்கும்."அன்புள்ள பாலு மாப்பிள்ளைக்கு, வரும் ஞாயிறு ஜூன் 20ம் தேதி,பும்சவன சீமந்த முகூர்த்தம் நடக்கிறது.நீங்கள் சௌபக்கியவதி சந்திராவை யும் அழைத்துக்கொண்டு முந்தின இரவே வந்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.காலை பத்துமணிக்கு முகூர்த்தம்,உறவினர்களும்,நண்பர்களும் உங்களைப் பார்க்க பேச ஆவலோடு இருக்கிறார்கள்." என்று அஞ்சல் அட்டை போடுவேன்.

பாலுவைத்தொடர்பு கொண்டு வெகுனாட்களாகிவிட்டது .இரண்டு நாட்களுக்கு முன்பு தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார். பழய கதைகளை பேசி மகிழ்ந்தோம்.Dr.வெங்கடேஷ் ஆத்ரேயா தான் அந்த "பாலு."

4 comments:

AkashSankar said...

காங்கிரஸ்.. காந்தி புகைப்படத்தை வைத்துகொண்டு நல்லவர்களை போல் வேடம் போடுகிறார்கள்...

ராம்ஜி_யாஹூ said...

இத்தனை ஜனநாயக கொடுமைகள் நடந்தும், கம்முநிச்டுக்கள் காங்கிரசுடன் கூட்டணி வைத்தனவே, அதில் தான் கம்முநிச்டுக்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்தது.

அதிலும் தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி, நாகர்கோயிலில் கூட்டணி திருவனந்தபுரத்தில் எதிர் கட்சி. கோவையில் கூட்டணி பாலக்காட்டில் எதிர் கட்சி..

hariharan said...

அரசியல் கூட்டணி விவகாரத்தில் இடதுசாரிகளின் நிலையை தேர்தல் சமயத்தில் வெளியிடும் நாளிதழ்களை திரு.ராம்ஜி பிரதிபலிக்கிறார்.

மற்ற கட்சிகள் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் கவலைப்படுவதில்லை. ஆனால் இடதுசாரிகளின் கூட்டணி நிலைப்பாடு கட்சியினர் தவிர மற்றவர்களுக்கு புரியவில்லை. இடது சாரிகள் சென்ற நாடாளுமன்றத்தில் (2004-2009) 63 எம்பிக்கள் வைத்திருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் திமுகவை விட 3 மடங்கு மந்திரிகளை கேட்டு வாங்கி சொத்து குவித்திருக்கமுடியும்,ஆனால் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் பாஜக வுக்கு மாற்றாக ஐமு-1 க்கு ஆதரவு அளித்தனர். அதனால் சாதாரண மக்க்ளை பாதிக்கிற மசோதக்கள் நிறுத்திவைக்கப்பட்டன, தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், பழங்குடியினர் நலச்சட்டம் மற்றும் RTI அமலில் வர முக்கிய காரணம் இடது சாரிகளின் அழுத்தம், இன்று வேகமாக செல்லுகிற தனியார் மயமாக்கம், பொதுத்துறையை விற்கும் நடவடிக்கைகளுக்கு அன்று தடை போட்டது இடதுசாரிகள். சொந்த நலனுக்காக கூட்டணி வைப்பவர்களையும் மக்கள் நலனுக்காக கூட்டணி வைப்பவர்களையும் வித்தியாசம் பார்க்கவேண்டும்.

ராம்ஜி அவர்களே, கடந்த 1996ம் ஆண்டிலிருந்து இன்றுவரை திமுக மத்தியில் எந்த ஆட்சி அமைத்தாலும் அதில் மந்திரி பதவி சுகத்தை அனுபவித்துவருகிறது.

வெறுமனே கூட்டணி மாறுகிறார்கள் என்று பார்க்கக்கூடாது. முதலில் இடதுசாரிகளுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை மட்டுமல்ல அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்தவர்கள் இடதுசாரிகள். இன்று போபால் தீர்ப்பு வந்தவுடன் நமது சட்டங்கள் சரியில்லை என்று சட்ட அமைச்சர் புலம்பி என்ன செய்வது.

vimalavidya said...

Interesting history...will it come again ?