Wednesday, June 09, 2010

emergency

அவசரநிலைக்காலத்தில் த.மு.எ.ச உதயமானது.அதைவிட முக்கியமானது கெடுபிடிகளைத்தாங்கிக்கொண்டும் அது செயல்பட்டதுதான்.புதிய எழுத்தாளர்களை உருவாக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.குறிப்பாக பண்டய தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்யவேண்டும் என்பது பொதுச்செயலாளர் கே.முத்தய்யா அவர்களின் விருப்பம்.ஒரு இலக்கியமுகாம் நடத்தமுடிவேடுக்கப்பட்டது.எங்கு நடத்துவது?ஜனநாயக இயக்கங்கள் முடக்கப்பட்டு இருந்தன.பொதுமான ஆள்பலம் வேண்டும்.அந்தச்சமயத்தில்தான் நாமக்கல் மாவட்ட

த்தில் நடத்துவதாக கு.சி.பா கூறினார்கள்.(ஏற்கனவே சிறையிலிருந்து வெளிவந்தவர் தான் அவர்)

சுமார் நூற்றைம்பது பேர் வர திட்டமிடப்பட்டது.திருச்சியைச்சேர்ந்த பேரா.மணிமாறன்.பி.கோவிந்தபிள்ளை,கே.முத்தய்யா ஆகியோர் ஆசிரியர்கள்.L.I.C யில் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றN.V.நாயுடு அவர்கள் தமிழிலக்கியத்தில் சமஸ்கிருதத்தின்

தாக்கம் என்பது பற்றி வகுப்பு எடுப்பார்.தமிழ்நாடு பூராவிலுமிருந்து எழ்த்தாளர்கள் வந்திருந்தனர்.திரவிடர் கழகத்தின் செயல்பாடு பிடிக்காமல் வந்தவர்கள் உண்டு.பொதியவெற்பன், அறிவுறுவோனென்று வந்தார்கள்.கர்நாடகத்திலிருந்து கிழார்,DRநாகராஜ்,சுப்பிரமணியம்,அப்போது எம்.ஏ படித்துக்கொண்டிருந்த சித்தலிங்கய்யா என்று ஒரு ஜமாவந்தது.அவருடைய புகழ் பெற்றபாடல்

"நம்ம ஜனங்களு" முகாமில்தான் முதலில் பாடப்பட்டது. கம்பத்தைச்செர்ந்த ஆசிரியர் நாராயணசாமி தான் அதனை கன்னடத்திலும்,தமிழிலும் இசை அமைத்து மேடையில் படினார்.

எந்த சமயத்திலும் எதுவும் நடக்கலாம்.கே.முத்தய்யா அவார்கள் எங்கு செல்கிறேன் என்பதை வீட்டில் சொல்லாமல் வருங்கள் என்று கூறியிருந்தார்கள்.அதனால் வந்திருந்தவர்கள் இறுக்கம் கூடுதலாகவே இருத்தது.சுமார் முப்பத்துஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த

முகாம் என் போன்றவர்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.

3 comments:

காமராஜ் said...

தோழர் இப்போதுதான் வாசித்தேன். இந்த கெடுபிடி காலத்தில் முளைத்த தமுஎச வின் துவக்க நாட்கள் ஈர்ப்பை உண்டுபண்ணுகிறது.எழுத்து ஆர்வத்துக்கும் என்னவேனுமானாலும் நடக்கலாம் என்கிற விதியே வியப்பானது. இன்னும் கூடுதலாகச்சொல்லியிருக்கலாம்லார்வம் கூட்டுகிறது.

illakkia.blogspot.com said...

அதேபோன்று தோழர் என், சங்கரய்யா, செம்மலரில் வந்த ஒரு சிறுகதையை விமர்சனம் செய்து பேசியதும் என் நினைவலையில் அவ்வப்போது வந்து போகும், அக்கதையில் சிறுகடை முதலாளி ஒருவர் கொள்ளை லாபம் அடிப்பது போலவும் அவரே நம் வர்க்க எதிரி என்பதுபோன்றும் கதையின் தொனி இருந்திடும், இதைச் சுட்டிக்காட்டி என்,சங்கரய்யா அவர்கள் உரையாற்றினார்கள்,
நாமக்கல்லில் இறங்கியதுமே பேருந்து நிலையத்தில் நீலச் சட்டை அணிந்த மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் அமைப்பினரைப் பார்த்ததும். அவர்கள் எப்படி ஸ்தாபனப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் நம் தோழர்கள் விளக்கியதும் இன்னமும் நினைவிருக்கிறது,
அதேபோல் பயிற்சி முகாமை நடத்தியவர்கள் அளித்த விருந்தும் மறக்க முடியாதது, தயிர்சாதத்தையே எவ்வளவு சிறப்பாக அவர்கள் செய்திருந்தார்கள், இன்னமும் அந்தச் சுவை என் நாவினில் இனிக்கிறது, அதற்கு அவர்கள் வேறு ஏதோ பெயரிட்டு அழைத்தார்கள், என்று நினைக்கிறேன்,

illakkia.blogspot.com said...

அன்பார்ந்த தோழரே
வணக்கம். நாமக்கல் பயிற்சி முகாமிற்குத் தஞ்சையிலிருந்து வந்திருந்த ஏழு பேரில் நானும் ஒருவன், பொதியவெற்பன். அறிவுறுவோன் பெயரைக் குறிப்பிட்டுள்ளீர்கள், மணியரசன். வெங்கட்ராமன். வைகறை முதலியவர்களோடு நானும் வந்திருந்தேன்.
இளவேனில் கார்க்கி ஒரு சீனக் கதையை விவரித்துச் சொல்லியது இன்னமும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டது,
அக்கதையில் ஒரு மருத்துவர். இறக்கும் நிலையில் இருப்பார், அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல. ஆயினும் கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார், அவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது கட்சியின் சார்பில் தலைவர்கள் வந்து அவரைச் சந்தித்து அவருடைய கடைசி விருப்பம் என்னவென்று கேட்பார்கள். அவர் ‘‘நான் கட்சியின் உறுப்பினனராகச் சாக விரும்புகிறேன்’’ என்பார், இந்தக் கதையை இளவேனில் அன்றைய தினம் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது,