Saturday, June 05, 2010

three language

மின் கட்டணம் எவ்வளவு என்று பார்க்க முனைந்தேன்.எழுத்து புரியவில்லை.எண்கள் புரிந்தன. அதன் பிறகுதான் நான் தமிழ்நாட்டில் இல்லை என்பதும் நினைவு வந்தது.மராட்டியத்தில் முழுக்க முழுக்க மராட்டிய மொழியில் தான் இருக்கும்.பக்கத்து வீட்டு நண்பரிடம் கெட்டு தெரிந்து கஒண்டேன்.பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கூட அப்படித்தான்.கடைகள்,பேருந்துகள்,எல்லாமே அவர்கள் மொழியில்தான் உள்ளது.ஏன் என்று கேட்டால் மும்மொழிக்கொள்கை என்கிறார்கள். நம் மாநிலத்தில் இருமொழிக்கொள்கை.ஆங்கிலமும், தமிழும் இருந்தால் பொதும்.இதன்மூலம் இந்தி வருவதைத்தடை செய்யமுடியும் என்று கருதினொம்.இசக்கிமுத்துவும்,முனியாண்டியும்சகதியை மிதிக்க இருக்கவே இருக்கும்போது திராவிட தலைவர்களின் குஞ்சுகள் ஆங்கிலவழியில் பயின்றார்கள்.இரண்டாவது மொழியாக இந்தியை பயின்றார்கள்.


நாடாளுமன்றத்தில் பேசும்போது,மறைந்த ரங்கரஜன் குமாரமங்கலம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது ஆங்கிலம்,இந்தி,தமிழ் மூன்றயும் பயன்படுத்தினார்.1965ம் ஆண்டு போரட்டத்தின் போது அவர் தந்தை மோகனின் பங்கு முக்கியமானதகும்.தி.மு.க,அதிமுக,மதிமுக தலைவர்களின் வரிசுகள் இந்தி படிக்க வாய்ப்பு உள்ளது. இசக்கிமுத்துவுக்கும்,முனியாண்டிக்கும் முடியாது."ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்" என்று நூல் எழுதியவர் மறைந்த முரசுஒலி மாறன் அவர்கள். தயாநிதி மாறன் அவரிடத்திர்க்கு முன் மொழியப்பட்டபோது கட்சிக்குள் முணுமுணுப்பு வந்தது.தயாநிதிக்கு சரளமாக இந்தி பேசத்தெரியும் என்று கூறி சமாளித்தார்கள். முற்போக்கு என்ன 6/16.பைபாஸ் சாலையில் தான் இருக்கிறதா என்று ஏகடியம் பேசியவர்கள்,செம்மொழிமாநாடு நடத்துவது மகிழ்ச்சிதான்.அந்த முற்பொக்குகள்தான்" தமிழை செம்மொழியாக்கு" என்று டில்லி பட்டண வீதியில் ஊர்வலம் வந்தவர்கள் என்பதை நினைந்து மகிழ்ச்சியடைகிறேன்.

4 comments:

nerkuppai thumbi said...

சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லவில்லையோ எனத் தோன்றுகிறது.
அடுத்த பதிவில் தொடர்வீர்கள் என எண்ணுகிறேன்

AkashSankar said...

என்ன கிளிச்சாலும் இவனுங்க திருந்த மட்டாங்க...

veligalukkuappaal said...

கனிமொழிக்கும் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இன்னும் பல நிதிகளுக்கும் கிரிகளுக்கும் செய்யவே தானைத்தளபதிக்கு நேரம் பத்தலியே, இதுல செம்மொழி என்ன செம்மொழி! தமிழைப் பிழைப்புக்கான வழியாக கருவியாக பயன்படுத்தி வாழ்ந்தவர் வாழுகின்றவரே கருணாநிதி. வைரமுத்துவுக்கும் கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கும் புதிய கவிஞர் பா.விஜய்க்கும் வேண்டுமானால் கருணாநிதி முத்தமிழ், நாத்தமிழ் அறிஞராய் தெரியலாம், சாமானிய தெருக்கோடி தமிழனுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் (புதிதாய் அமையப் போகும் மேலவையையும் சேர்த்துக்கொள்ளலாம்) கூறுபோட்டு குடும்ப சொத்தாக மாற்றும் கருணாநிதியை புரிந்துகொள்ளாமல் இப்போதும் முரசொலி படித்து உணர்ச்சிவசப்பட்டு ஜெயலலிதாவை நரம்புபுடைக்க திட்டிக்கொண்டு திரியும் அப்பாவி அன்றாடம்காய்ச்சி உடன்பிறப்புக்களைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கு. எங்கள் திராவிடப் பொன்னாடு....
இக்பால்

vimalavidya said...

For Mr.M.karunanithi the LANGUAGE issue is only for Political gains and benefits..No doubt at all