Tuesday, January 18, 2011

ஐவரானோமா?......

சிறுகதை


ஐவரானோமா? (காஸ்யபன்)

வங்கி மானேஜர் அந்த ஃபாக்ஸ் செய்தியைப்பார்த்தார்.

பிராந்தீய அலுவலகத்திலிருந்து இன்ஸ்பெக்ஷன் குழு வருகிறது.தயார் நிலையில் இருக்கவும்.

புண்ணியமூர்த்தி பெருமூச்சு விட்டார் பிராந்தீய அலுவலகத்தின் ஆடிட் அண்ட் இன்ஸ்பெக்ஷ்னுக்கு செக்ரட்டரி லெவலில் எம்.எஸ். முத்துதான் பொறுப்பு.

எட்டு ஆண்டுகள் இருக்குமா.இல்லை பத்து ஆண்டுகள் இருக்கும்.ஆம். சாத்தூரில் செக்ஷன் இன் சார்ஜ் ஆக இருந்த பொது நடந்தது.

முனியாண்டி தான் வந்தான்.

"சாமி...சாமி"

வாசலில் குரல் கேட்டு புண்ணியமூர்த்தியின் மனைவி புஷ்பா தான் எட்டிப்பார்த்தாள்.

" இந்தாங்க உங்களை பாக்க உங்க ஆபீஸ் முனியாண்டி வந்திருக்கான்"

ஷேவ் செய்து கொண்டிருந்த புண்ணியமூர்த்தி எட்டிப்பார்த்தான்.

"என்ன முனியாண்டி?"

" சாமி! என் மவன் வந்திருக்கான் சாமி"

கச்சலான நெடிய உடம்பு.குழிவிழுந்த கண்கள்.கண்களில் மிரட்சியும்,நம்பிக்கையின்மையும் கொண்ட இளைஞன்.புண்ணிய மூர்த்தியை நோக்கி இரண்டு கைகளையும் காட்டி வணங்கினான்.

"மதுரையில படிக்கான் சாமி"

"என்னப்பா படிக்க"

'பி.ஏ"" வில் யு கம்ப்ளிட் யுவர் ஸ்டடீஸ்?"

"நோ கொஸ்டின் ஆஃப் டிஸ்கண்டினியுவன்ஸ்"

" லிட்டெரெசரா""

"எஸ் ஸார்ர்"

புண்ணியமூர்த்தியின் முகம் பிரகாசமடைந்தது."முனியா.! ஏகிளாஸ் பையன்.நல்லாபடிக்கவை"

"சரி.. சாமி.நம்ம ஆபீஸ்ல"

" அவசரப்படாத முனியா! அவன் முடிக்கட்டும்.மே மாதம் ஆபீசர் பரீட்சை வருது.ஏன்பா! உம்பெரென்ன?"

"சோள்ளமுத்து"

" முனியா நான் கிளார்க்கா வந்தேன்.இப்பத்தான் செக்ஷன் இன் சார்ஜ்.இந்தாபாரு சோள்ளமுத்து! நிறைய புத்தகம் வந்திருக்கு பரீட்சைக்குள்ள அதெல்லாம் பாத்துக்க..முனியா உம்பையன் பரீட்சை நல்லா எழுதிட்டான்னா ஆபீசர்தான்.மளமளன்னு வந்திரலாம்.ஏன்? எனக்கே ஆபீசரா வரலாம்"

முனியாண்டி நெளிந்தான்.சொள்ளமுத்துவின் கண்களில் நாம்பிக்கை குறைந்த புன்சிரிப்பு.

"சாமி!" முனியாண்டி கால்களைபிடிக்கப் போனான்.

-----------------------------------------------------------------

ஃபாக்ஸ் செய்தியையே பார்த்துக்கொண்டிருந்த புண்ணியமூர்த்தி காலிங் பெல்லைத்தட்டினார்.அக்கவுண்டு அண்டு பெர்சனல் டிபார்ட்மெண்ட் இன் சார்ஜ் வந்த்தர்.

"மார்ச் 15ம் தேதி இன்ஸ்பெல்ஷன் டீம் வருது"

"எஸ் ஸார்"

"எல்லாம் ரெடியா இருக்கா?"

"பக்காவா இருக்கு"

"கீப்-இட்-அப்"

சொள்ளமுத்து புரபேஷனரி ஆபீசராக செர்ந்தான்.பம்பாயில்பொஸ்டிங்....மூன்று ஆண்டுகளில்வடமாநிலங்களில் சுற்றினான்.சி.ஐஓபி..பரீட்சையில் நல்ல ரங்கில் தேரியபோது ஹவுஸ் மாகசைனில் அவன் போட்டோ வந்திருந்தது.முனியாண்டியின் பின்னால் மிரட்சியும் நம்பிக்கையின்மைதெறிக்கும் குழிவிழுந்த கண்களைக் கொண்ட முகமல்ல அது.மகிழ்ச்சி கொப்பளிகஇன்னும் இன்னும் சாதிக்கத்துடிக்கும் புன்முறுவலோடு இருந்தான்.கீழே பெயரும் எம்.எஸ்.முத்து என்று இருந்தது.அவ்வப்பொது தீபாவளி,புத்தாண்டு வழ்த்துக்கள் வரும்.புண்ணியமூர்த்தி தமிழ்நாடு பூராவும் சுற்றினார்.இப்போதுதான் பிராஞ்சு இன் சார்ஜ்.

முத்து மறுநாள் காலை பாண்டியனில் வருகிறான்.காரை எடுத்துக்கோண்டு போய் அழைத்து வரவேண்டும்.நாமே பொவதா இல்லை அக்கவுண்டண்டை அனுப்புவதா? வருவது முத்து அல்ல. ரீஜினல் ஆபீஸ் அதிகரி. செக்ரட்டரி...சே..நம்ம ..கண்முன்னால..நாம கைகட்டி... போகலைன்னா..தப்பில்லை பாரு போகணும்....வேரு வழியில்லை.

ரயிலடியில் ஆஜனுபாகுவாக கம்பீரமாக வந்திறங்கியமுத்து , புண்ணீயமூர்த்தியை "அண்ணாச்சி! அண்ணாச்சி!" என்றுகட்டிப்பிடித்துக்கோண்டான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. புண்ணிய மூர்த்திக்கும் சந்தோஷம் தான்.பதவியில் தனக்கு மேல் இருந்தாலும் பழயதை மறக்காமல் முத்து இருக்கிறான்.அவருக்கு நிம்மதிதான். இருந்தாலும்.... இருவரும் காரில் ஏறி கெஸ்ட் ஹவுஸ் சென்றார்கள்.

முத்து அவன் குடும்பத்தைப் பற்றி கூறினான்.முனியாண்டி இறந்துவிட்டதைச் சொன்னான்புண்ணியமூர்த்தியின் குடும்பத்தைப்ப்ற்றி விசாரித்தான்.எல்லமே சந்தோஷ்மகத்தான் இருந்தது. இருந்தலும்....

மூன்று நாள் இன்ஸ்பெக்ஷன் முடிந்து முத்து மறுநாள் மதுரை-பம்பாய் பிளைட்டில் மதியம் செல்வதாக ஏற்பாடு.காலை சிற்றுண்டி முடிந்ததும் சொல்லலாமென்று நினத்தார்.அவர் மனதை அது நெருடிக் கொண்டே இருந்தது.எப்படியும் முத்துவிடம் சொல்ல வேண்டும்.சொல்லித்தான் ஆக வேண்டும்....ஆனால் தயக்கமிருந்தது. இருவரும் விமானநிலையம் செல்லும் வரை அவரால் சொல்லமுடியவில்ல.விமானத்திற்காக காத்திருக்கும் போது புண்ணிய மூர்த்தியும் முத்துவும் மட்டுமே இருந்தனர்.மெதுவாக ஆரம்பித்தார்.

" செக்ரட்டரி சார்"

"என்ன அண்ணாச்சி செக்ரட்டரிசர்ங்கரிங்க"

. "அதுதான் சரி"

"அண்ணாச்சி நான் எப்பவுமே உங்களுக்கு முத்துதான்"

" எனக்கு தெரிஞ்சு சொள்ளமுத்துதான்.ஏம்.ஏஸ் முத்து செக்ரட்டரிதான்"

"என்ன அண்ணாச்சி இப்பாடி பேசரிங்க"

"நான் உங்களை செக்கரட்டரின்னே கூப்பிடறென்

" "............"

"நீங்களும் என்னை ப்ரஞ்சு மானெஜர்னே கூப்பிடுங்க"

".........."

"அண்ணாச்சின்னு கூப்பிடாதீங்க"

முத்து புண்ணியமூர்த்தியின் கண்களைப் பார்க்க முன்றான். அதுகருப்புக்கண்ணாடியால் மூடப்பட்டிருந்த்து..

"ஏன் அப்படி சொல்றீங்க" முத்து கேட்டான்.

"எனக்கு பிடிக்கல" என்றார் புண்ணிய மூர்த்தி

"ராமன் குகனை" சகொரன்னு கூப்பிடலையா

' தசரத்னுக்கு நான்கு .உன்னையும் செர்த்து ஐவராவோம்னு ராமன் சொல்லுகிறானே"

"ஆமா"

"வால்மீகியும் கம்பரும் சொன்னதுதானே அது"

"ஆமா"

" நான் உங்களைக்குப்பிடக் கூடாதா?"

'"செக்ரட்டரிசார்! வால்மீகியும் கம்பனும் விபரமானவங்க"

"அதனலதான்...."

"அவசரப்படாதீங்க்" என்று பூண்ணிய மூர்த்தி குறுக்கிட்டார் " குகனை சகோதரனா ஒத்துக்கிட்டேன்னு சொன்னது யாரு?"

"ஏன் ராமன் தான்"

"ராமனால அப்படிச் சொல்லமுடியும். குகனால முடியாது.குகன் ராமனைச் சகோதரன் என்று அறிவிச்ச மாதிரி வால்மீகியோ கம்பனோ எழுதல"

"ஏன்?"

"ஏன்னா அயொத்தியில அன்னக்கே சாதிக்கலவரம் வந்திருக்கும்"

முத்துவின் இதயத்தின் ஓரத்தில் "மளுக்" என்று சத்தம்கெட்டது.

அயொத்தியிலிருந்து நெல்லை மாவட்டம் வரை எத்தனை தூரம், எத்தனை காலம். ஏன் மாற மறுக்கிறோம் .முத்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே பம்பாய் விமானம் தரை இற்ங்கியது. ' (1985 ம் ஆண்டு வாக்கில் நெல்ல கலவரத்தின் பின்னணியில் தினபூமியில் வந்தது)

30 comments:

venu's pathivukal said...

அருமை...அருமை....அருமை...

எஸ் வி வேணுகோபாலன்

பாரதசாரி said...

அருமை!! புண்ணியமூர்த்தி நல்லவரா கெட்டவரா?

காமராஜ் said...

அருமை என்று ஒரே ஒரு வார்த்தையில் சொல்லமுடியாத கதை. அப்படிச்சொல்லிப்போனால் நான் நழுவுகிறேன் என்பதாகிவிடும்.பேர் என்னவேண்டுமனாலும் வைத்துக்கொள்ளலாம்.எங்காவது ஒரு இடத்தில் அவனா இவன் என்று நினைக்காமல் தொடர்கிற எல்லோரும் நல்லவரே.குகனை ஐந்தாவதாக்கிகொண்டபின் எத்ற்கு தம்பட்டம்.ஏற்கனவே இருக்கிற நான்குபேரை அப்படிச்சொல்லலையில்ல தோழா.
புண்ணியமூர்த்தி மனுஷன்.

kashyapan said...

புண்ணியமூர்த்தி நல்லவரும் தான்.கெட்டவரும் தான். உங்களையும் என்னையும் போல.முழுமையான நல்லவனோ.முழுமையான கெட்டவனோ நம்மில் யார்?சகமனிதனை ஏற்றுக் கொள்வதும், மனித்தன்மைதான். தன்முனைப்பால் அவனை ஒதுக்குவது கூடாது என்றாலும் நடக்கிறதே! என்ன செய்ய பாரத சாரி---காஸ்யபன்

அப்பாதுரை said...

குகனுக்குச் சொல்லத் தெரியவில்லை; செய்யத் தெரிந்திருந்ததோ?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! உங்கள் பின்னுட்டத்தைகொஞ்சம் விளக்குங்களென்---காஸ்யபன்

ராம்ஜி_யாஹூ said...

ராமனால அப்படிச் சொல்லமுடியும். குகனால முடியாது.குகன் ராமனைச் சகோதரன் என்று அறிவிச்ச மாதிரி வால்மீகியோ கம்பனோ எழுதல"

"ஏன்?"

"ஏன்னா அயொத்தியில அன்னக்கே சாதிக்கலவரம் வந்திருக்கும்"


முழுமையான தவறான கண்ணோட்டம் இது.

ராமன் சபரி என்ற பட்டியல் சாதி பெண்ணுடன் நட்பு கொண்டு இருக்கிறார்.

அயோத்தியில் அன்று ஜாதிய வெறி/எண்ணம் இருந்தது என்பதும் கற்பனையே.

Throughout Ramayana, Sri Rama moves shoulder to shoulder with Sabari (a low caste woman), Guha (a low caste boatman), Hanuman and Sugriva (monkey race), Jatayu and Sambathi (birds), and Jambavan (a bea

பாரதசாரி said...

மிகவும் சரி காஸ்யபன் ஐயா, ஒரு படி முன்னேறி எனக்குள் அதே கேள்வியை என்னைப்பற்றி கேட்கவேண்டும் என்று உணர்கிறேன்...

kashyapan said...

வாருங்கள் யாஹுஜீ1 ஒரு அறிஞரிடம் கடவுள் எங்கே இருக்கிறார் என்று கெட்டபொது கதைகளில் இருக்கிறார் என்றார்.புராணக் கதைகள் என்பவை மனித நாகரீகத்தின் குழந்தைப் பருவம்..மழலை கொஞ்சும். நாம் ரசிக்க வேண்டியவை.ராமாயணத்தில் "சம்பூக வதம்" என்று ஒருஅத்தியாயம்வரும்.நாராயண பணிக்கர் அதனை அற்புதமான நாடகமாக்கியுள்ளார். என் கதையில் வரும் புண்ணியமூர்த்தி போல் நஆல்லதும் கெட்டதும் கொண்டவர்கள் தான் நாம்--ராமன் உட்பட---காஸ்யபன்.

திலிப் நாராயணன் said...

காஸ்யபன்!
உங்கள் கதையில் நன்றாகத்தெரிவது ஒன்று புண்ணிய மூர்த்தி என்ற இருசத வீதமுள்ள ஒரு பிராமணர் அப்புறம் நான்கில் (25%)ஒரு பகுதியான அட்டவணை சாதியினரின் மகனான சொள்ள முத்து (M.S.முத்து)
குகனோடு ஐவரானோம் என்று ஷத்திரியனான ராமன் மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர குகன் சொல்ல வாய்ப்பே இல்லை; ஆனால் நீங்கள் மாற்றி சொல்லியிருக்கிறீர்கள்
ஏதோ பஞ்சமர்கள் சூத்திரர்கள் அனைவரும் அவர்களுக்கு மேலே உள்ளவர்களை " நீயும் நானும் ஒண்ணு" என்று குறிப்பிடுவது போல் இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை எப்படிக்கற்பனை செய்ய முடியும்.. சொல்லுங்களேன்..

சிவகுமாரன் said...

மனதுக்குள் புழுங்கிக் கொண்டாலும், புண்ணியமூர்த்தி போல் இன்று யாராலும் வெளிப்படையாய் சொல்லிக் கொள்ள முடிவதில்லை.பொருளாதார முன்னேற்றம் சமூக அந்தஸ்தைப் பெற்றுத் தந்து விடுகிறது. இன்று அரசியலிலும் அரசாங்கத்திலும் பெரிய பதவிகளில் இருக்கும் பட்டியல் வகுப்பினருக்கு எல்லா மரியாதைகளும் தங்கு தடையின்றி கிடைத்து விடுகின்றன. புகார்களில் சிக்கிக் கொள்ளும் பொழுது மட்டும் அவர்களுக்கு தான் சார்ந்திருக்கும் சமூகம் நினைவுக்கு வருகிறது- அதைக் கேடயமாக பயன்படுத்திக் கொள்ள .

அப்பாதுரை said...

ராமாயணக் கதாபாத்திரங்கள் எப்படி நடந்திருப்பார்கள் எனப்தை கதாசிரியர் கண்ணோட்டத்தில் பார்த்துச் சொல்வது கடினம். நெருக்கத்தை ராமன் சொல்லோடு நிறுத்திக் கொண்டான், குகன் செயலில் காட்டினான் என்று சொல்லவந்தேன். ராம லட்சுமணரைப் பார்த்ததும் குகன் சொன்ன முதல் வார்த்தை: "ஐயா, நான் உங்கள் அடிமை! இந்த நிலம் உங்களது. நானும் என் வேலைக்காரர்களும் உங்கள் வேலைக்காரர்கள்!". இத்தனைக்கும் குகன் ஒரு நாட்டின் அரசன்! ராம லட்சுமணர்கள் மரவுரி தரித்து காட்டுக்குத் துரத்தப்பட்ட சாதாரண பிரஜைகள்! இருந்தும் குகனின் முதல் செய்கை "பணி செய்து கிடக்கும்" பாமரச் செய்கையே! குகன் ரத்தத்தில் ஊறியது! குகனை அப்படித்தான் சித்தரித்திருக்கிறார் வால்மீகி. (ராஜாஜி எழுதிய புத்தகம் கைவசம் இல்லை - அதிலும் அப்படி மாறுபட்டு படித்ததாக நினைவில்லை). குகன் உபசரித்ததும் ராமன் சொல்வதென்ன? "இந்தக் குதிரைகள் களைத்திருக்கின்றன; இவைகளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்தாலே எங்களுக்கு எல்லாவித பூஜைகளும் செய்த திருப்தி ஏற்படும்". ராமன் குகனை எதுவும் கேட்டு வற்புறுத்தவில்லையென்றாலும், குதிரைகளைக் கவனித்தால் தன்னை வணங்கியது போலாகும் என்றது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. என்ன பொருளில் ராமன் சொல்லியிருக்கலாம்? வால்மீகி மனதில் ஓடியது என்ன? இன்னொன்று. இந்த ஐவரானோம், சகோதரன், மித்ரன் எல்லாம் ராம பட்டாபிஷேகத்தில் காணோம் கவனித்திருக்கிறீர்களா? குகன் ராம பட்டாபிஷேகத்தில் எந்த விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறான் என்று பார்த்தால் புரியும். நானறிந்தவரை குகனின் பெயரையே காணோம் - பட்டாபிஷேக விருந்தினர் பட்டியலில்!

திலீப் சொல்வது போல் குகனால் ராமனை சகோதரனாக ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ அந்நாளில் முடிந்திருக்காது. இந்நாளில் தேவையில்லை.

எனக்கென்னவோ இங்கே புண்ணியமூர்த்திக்கு முத்துவை விட தாழ்வு மனப்பான்மை அதிகம் என்று தோன்றுகிறது. அதை ஈடுகட்ட ஜாதி பேதத்தைக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

அப்பாதுரை said...

குகனை ஒரு அரசன் என்று பெரும்பாலும் யாருமே நினைவில் வைப்பதில்லை; ஓடக்காரன் என்றே நினைக்கிறோம். ஏனென்று தெரியவில்லை. ஒரு அரசன் இன்னொரு அரசனுக்குக் கொடுக்கும் அந்தஸ்தையும் மரியாதையையும் குகன் ராமனுக்கு துன்ப நேரத்தில் கொடுத்தான்; அதே அந்தஸ்தையும் மரியாதையையும் ராமன் துன்பம் தீர்ந்த நேரத்தில் குகனுக்குத் திருப்பியதாக வால்மீகி எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அப்பாதுரை said...

சிவகுமாரன் சொல்லில் ஆழம் இருக்கிறது. "சமத்துவம்" என்ற சாக்கில் நம் சமூகச் சீர்திருத்தங்களில் சில, தவறான திசையில் தவறான நோக்குடன் தவறான வழிகளில் செயல்படுத்தப் பட்டிருக்கின்றன.

திலிப் நாராயணன் said...

//இன்று அரசியலிலும் அரசாங்கத்திலும் பெரிய பதவிகளில் இருக்கும் பட்டியல் வகுப்பினருக்கு எல்லா மரியாதைகளும் தங்கு தடையின்றி கிடைத்து விடுகின்றன. புகார்களில் சிக்கிக் கொள்ளும் பொழுது மட்டும் அவர்களுக்கு தான் சார்ந்திருக்கும் சமூகம் நினைவுக்கு வருகிறது- அதைக் கேடயமாக பயன்படுத்திக் கொள்ள//என்றால் கல்வி மறுக்கப்பட்ட சமூக மக்கள் கல்வி பெற்று உயர் நிலையை அடையக்கூடாது என்ற சனாதன சிந்தனைதான் இதில் தெரிகிறது. புகார்களில் சிக்குபவர்கள் எல்லாச்சாதியிலும்தான் இருக்கிறார்கள். முந்திரா ஊழல்,நகர்வாலா ஊழல் உர ஊழல் உட்பட இன்றைய கேதன்பாய் தேசாய் வரை உயர்சாதி பிராமணர்சம்பத்தப்பட்டவைதான். அவர்களைக்காக்க ஒரு அமைப்பு இருக்கிறது. நான்கில் ஒரு பகுதியினரான தலித்துகளுக்கும் தூரதிருஷ்டவசமாக 'அவர்களே' இருக்கிறார்கள் என்பதுதான் அவலம்.

சிவகுமாரன் said...

மன்னிக்க வேண்டும் நாராயணன் . சனாதன தர்மமெல்லாம் எனக்குத் தெரியாது. கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில்ருந்து, சலுகை பெற்று முன்னேறியதும் தான் சார்ந்த சமூகத்தைப் பற்றிப் பலரும் கவலைப் படுவதில்லை. ராசா மாதிரி ஊழலுக்கு கேடயமாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் என் ஆதங்கமே. ஒருவர் முன்னேறினால் அதன் மூலம் இன்னும் பலர் முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போகிறதே என்கிற என் கவலையை நீங்கள் தவறாகப் பார்க்கிறீர்கள்.

Samudra said...

அருமை

திலிப் நாராயணன் said...

திரு சவகுமாரன்!
ஒரு சூத்திரனின் உடைவாளாக அல்லது நீங்கள் குறிப்பிடுவது போல் கேடயமாகத்தான் தலித் சமூகத்தினலிருந்து வந்த ராசா செயல் பட்டார்; எவ்வளவு பெரிய நிலையில் இருப்பினும் சுதந்தர செயல்பாட்டாளர்களாகத் தங்களை வெளிப்படுத்த இன்னும் இயலவில்லை.தவிரவும் தலித்துக்களுக்கான உட் கூறு நிதி மட்டும் சரியாகப்பயன் படுத்தப்பெறும் காலம் வாய்த்தால் தனிநபர் முன்னேறுவது அவசியமற்றது.

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய ராசாவைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைத்து எழுதினேன் - வேறு யாராவதாக இருந்தால் மன்னிக்கவும்.

அப்பாதுரை said...

திலிப் சொல்வதில் பாதி உண்மை சிவகுமாரன் சொல்லில் மீதி உண்மை இருப்பது போல் தோன்றுகிறது. ராசா ஒரு கருவி என்று தான் நானும் நினைக்கிறேன். அதே நேரம், சிவகுமாரன் சொல் போல், ராசா தன் அந்தஸ்தை நல்ல முறையில் சமூக நோக்கோடு பயன்படுத்தியிருக்கலாம். ராசாவுக்கு அறிவு எங்கே போயிற்று என்றும் கேட்கத் தோன்றுகிறது. கேட்டால் எனக்குத்தான் அறிவில்லையென்றாகும்.

இந்த எதிர்பார்ப்பெல்லாம் கறிக்குதவாது என்பதை சிவகுமாரன் புரிந்து கொள்வார் :). முன்னேறி முதலில் வந்தவனின் முதல் குறிக்கோள் பாதையை அழிப்பது தான் சிவகுமாரன்; இது ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் கடைபிடித்த நெறி. ராசாவைத் தொடர்ந்து பத்து ராசாக்கள் வர வருடக்கணக்கிலாகும்.

சிவகுமாரன் said...

\\\திரு சவகுமாரன்!///

எழுத்துப் பிழை தானே நாராயணன் ?
நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து சவம் போலத் தான் இருக்க வேண்டிஉள்ளது.

அப்பாதுரை said...

காமெடி பண்ணும் முடிவோடு இருக்கீங்களா சிவகுமாரன்?

திலிப் நாராயணன் said...

திரு சிவகுமாரன்!
ஏற்பட்ட எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன்.மன்னித்து விடுங்கள்.
இது போல நான் எழுதுவதில்லை. ஏற்பட்ட தவறுக்கு முழுமையாகப்பொறுப்பேற்கிறேன்.

சிவகுமாரன் said...

அய்யய்யோ மன்னிப்பெல்லாம் பெரிய விசயங்க. சும்மா காமெடிக்காக கேட்டேன் நாராயணன் .தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க தான் என்னை மன்னிக்கணும். கூகுளில் டைப் செய்யும் பொது எழுத்துப் பிழை ஏற்படுவது வெகு சகஜம் தான்.
நான் தான் வம்பிழுத்து விட்டேன். மன்னிக்கவும்.

VELU.G said...

நல்ல கதை

VELU.G said...

குகன் சகோதரா என்று அழைத்தாலும் பிரச்சனையில்லை சொத்திலா பங்குக்கு வந்துவிடுவார்

சிவகுமாரன் said...

அய்யா நலமா ?
இடுகையும் இல்லை
வலைப்பக்கமும் வரக் காணோம் ?

kashyapan said...

திலீப் நாராயணன் அவர்களே! புண்ணிய மூர்த்தி பிராமணர் என்.று நான் குறிப்பிடவில்லை.அவரை அண்ணாச்சி என்று எம்.எஸ். முத்து காப்பிடவைத்ததின் மூலம் அவர் பிராமணர் இல்லை என்பதை வாசகர்கள் யூகிக்கமுடியும் என்று கருதினேன். ---காஸ்யபன்

ezhil said...

நீங்கள் கூறியது போல் இராமன் சொன்னதால் காவியம் இதையே குகனால் சொல்லியிருந்தால் நிதர்சனம். அருமையான கதை அல்ல அல்ல இன்னமும் தொடரும் அவலம்