Thursday, February 10, 2011

தெய்வமாக்கிவிட்டார்கள்......

தெய்வ மாக்கிவிட்டார்கள்!........


தெய்வம் உண்டு.என்போரும் இல்லை என்பொறும் தர்க்கவாதங்களை அடுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.தொய்வில்லாத விவாதம் நடந்து கொண்டே இருக்கும்.

உண்டு என்று கருதுபவர்களிடயே.எழும் விவாதம் இன்னும் நுட்பமானது.இறைவன் என்னுள் இருக்கிறான்.உன்னுள்ளும் இருக்கிறான் நாம் அதனை உணரும் நிலைதான் தெய்வீக நீலை என்பார்கள் ஆதிசங்கரர் சொன்ன அத்வைத நிலை அது.

இல்லை.நாம் ஜீவாத்மாக்கள்.நாம் பரமாத்மாவொடு இணைவதுதான் முக்தி நிலை . என்று கூருவொறும் உண்டு.Monism, Dualism என்று சைவ, வைணவமாகி விட்டது.இரண்டு பக்கமும் தீவிரமான தர்க்கங்க்கள் எழுவதும் சமரசம் உருவாவதும் உண்டு தில்லைநடராஜருக்கும், கொவிந்தராஜப் பெருமாளுக்கும் ஒரேசந்நிதி தான் உள்ளது..

பாரதி அத்வைதத்தை எதிர்ப்பவர்.கடுமையாக எதிர்த்து,கட்டுரைகளும் பாடல்களுமெழுதியுள்ளார்".இறைவன் உன்னுள்ளும் இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான் என்கிறாயே? உன்னுள் இருக்கும் இறைவன் தானே தேள் என்ற உயிருக்குள்ளும் இருக்கிறான்.தேள் கொட்டினால் குய்யோ முறையோ என்று ஏன்அடித்துக்கொள்கிறாய் என்றுகேட்பார்..

இவை எல்லாம் முக்கியமானதல்ல.வைணவத்தில் 12 ஆழ்வார்கள் உண்டு. திவிர வைணவர்கள் பாரதியின் தலைபாகையைக் கழட்டிவிட்டு நமத்தைப் போட்டு 13 வது ஆழ்வாராக்கிவிட்டார்கள். சைவர்களும் அவர்கள் கணக்கை கூடுதலாகியுள்ளார்கள்..

சென்னை மைலாப்பூரில் அறுபத்துமூவர் திருநாள் மிகவும் சிறப்பானது.அந்த அற்பத்து மூன்று என்பதை அதிகப்படுத்தியுளார்கள். புதிதாக "நவ நாத சித்தர்" என்று ஒரு நாயனாரை சேர்த்துள்ளார்கள். இந்த உலகம் உய்ய புதிய(நவ) சொல்லை(நாதம்) கொடுத்தவர் என்கீறார்கள் தென்னாடுடைய சிவன் ஜெர்மனியில்பிறந்து, லண்டனில் பயிற்சி பெற்று "உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்"என்று கூறிய. கார்ல் மார்க்ஸ் தான் நவ நாத சித்தர்.

. 1971 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலில் தனித்து நின்றது.அப்போது தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியராயிருந காலம் சென்றல் கே.முத்தையா அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது."ஐயா! நான் நவநாத சித்தாச்ரமத்தின் தலைவர்.நானும் மார்க்ஸை ஏற்றுரக்கொள்கிறேன்.உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசமில்லை. நான் ஆன்மிக வழியிலும், நீங்கள் லௌகீக வழியிலும் செய ல்படுவோம்.இது ற்றி உங்களோடு பெச வேண்டும்" என்று அதிலெழுதியிருந்தது." இது என்னய்ய அநியாய மாயிருக்கு. இந்த கடிதத்தை பாரும்யா? என்று கே. எம்.என்னிடம் கொடுத்தார்.

இப்போது கூடல் நகர் ரயில் நிலையம் இருக்கும் தென் பகுதியில் குலமங்களம், தத்தநேரி செல்லபாதியிருந்ததுஅதன் திருப்பத்தில் சித்தாசிரமம் என்ரு ஒருபலகையும் இருந்தது.கொடீயிருந்தது. அதில அருவாள் சுத்திய்ல் ,ஒரு சிவலிங்கம் பொறிக்கப்பட்டு இருந்தது.விசாரித்ததில் தலைவர் கொட்டாம்பட்டி ஆசிரமத்தில் இருப்பதாகவும் சொன்னார்கள்

நாயன்மார்கள் எண்ணிக்கை. 65 ஆகிவிட்டது. 65வது நாயனார் பெயர் சொல்லடி நாயனார். சிவனை சொல்லால் அடித்து பூசை செய்தவர். அவர்வெறுயாரும் அல்ல தந்தை பெரியார் தான். நம் முன்னோர்கள் தீர்க்க தரிசிகள்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று குறிப்பிட்டது எவ்வளவு சரியான ஒன்று!.

9 comments:

hariharan said...

//திவிர வைணவர்கள் பாரதியின் தலைபாகையைக் கழட்டிவிட்டு நமத்தைப் போட்டு 13 வது ஆழ்வாராக்கிவிட்டார்கள். சைவர்களும் அவர்கள் கணக்கை கூடுதலாகியுள்ளார்கள்..//

புத்தர்பிரானை திருமாலின் ஒரு அவதாரம் என்று கூட வைஷ்ணவர்கள் சொல்லுகிறார்களே.

ஆழ்வாரோ நாயன்மார்களோ தீடிரென வாந்த்திலிருந்து குதிப்பதில்லை அவர்கள் மக்களிடத்தில் பிறக்கிறார்கள் மக்களுக்காக உழைப்பவர்கள் என்று ஆன்மீகவாதிகள் கருதுவதில் உண்மை இருக்கிறது. அந்த வரிசையில் மார்க்ஸை சேர்த்திருகிறார்கள்.

அழகிய நாட்கள் said...

சைவமும் வைணவமும் போட்டி போட்டுகொண்டு இருந்திருக்கின்றன. பிறகு வெள்ளைக்காரன் தயவால் இந்து என்ற பொதுப்பாதையில் வந்திருக்கிறார்கள். பௌத்தமும் ஜைனமும் பிராமண எதிர்ப்பு மதங்கள். அவற்றிலிருந்து காத்துக்கொள்ளவே திருமாலின் ஒரு அவதாரமாக புத்தரை ஆரத்தழுவி ஏற்றுக்கொள்வது,13ஆழ்வார்களை 14, 15 என்று கூட்டுவது, 63 நாயன்மாரை 64, 65 என்று கூட்டுவது என்ற தகிடுதித்தங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கிறது இதுவரை.

சிவகுமாரன் said...

நாயன்மார்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போகலாம் . ஏனெனில் அவர்களை மனிதர்களாய்த் தான் பெரிய புராணம் கூறுகிறது. மக்களுக்கு செய்யும் சேவை மகேசனுக்கு செய்வதாகும் என்பதால் மார்க்சை நாயன்மார்ளோடு சேர்த்ததில் தவறில்லை. ஏனெனில் நாயன்மார்கள் சிவனடியார்கள் தான்.. சிவனில்லை. நான் கூட ஓர்நாள் நாயன்மார் வரிசையில் சேர்க்கப்படலாம் அவனருள் இருந்தால்.

அப்பாதுரை said...

பெரியார் நாயனாரான கதை சுவை. திகவுக்குத் தெரியுமா?

புத்தனைத் திருமாலாக வைணவம் ஏற்றுக்கொண்டதாக நானும் படித்திருக்கிறேன் - ஆனால் தமிழ்வேதம் என்று சொல்லப்படும் திவ்வியபிரபந்தத்தில் எனக்குத் தெரிந்த வரை புத்த விவரம் எதுவும் இல்லை. புத்தனை ஏற்றது பின்னாள் நிகழ்வோ?

பௌத்தமும் ஜைனமும் பிராமண எதிர்ப்பு மதங்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை திலிப் நாராயணன். சில ஆழ்வார்கள்/நாயன்மார்கள் ஜைனரை எதிர்த்துப் பாடியதால் அவை பிராமண எதிர்ப்பு மதமாகி விடுமா, சொல்லுங்கள்.

நான் படித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து பழங்கால இந்தியாவில் மத வழிபாடு விசித்திரமானதாக இருந்தது என்று நினைக்கிறேன். பத்து தெருவுக்கு ஒரு சிற்றரசன் பேரரசன் என்று இருந்திருக்கச் சாத்தியமான நிலையில், மன்னன் மதம் மாறினால் மக்களும் மாறினார்கள் - அல்லது ஊரை விட்டு ஓடினார்கள், துரத்தப்பட்டார்கள். சில சமயம் கொல்லப்பட்டார்கள். மன்னன் விபூதியென்றால் மக்களும் வி. மன்னன் நாமமென்றால் மக்களும் நா. மன்னன் புத்த ஜைன இன்னும் பலவித மதத்தவனாக இருந்தால் மக்களும் அவ்வாறே. சைவ வைணவ காலங்களுக்கு முன்னால் தமிழ் மதங்கள் இருந்தனவே? தமிழ் மதங்களின் நிலையும் அப்படியே. மன்னன் மாறினான், மக்களும் மாறினார்கள், மதமும் மா.

மார்க்ஸ் நாயனனான கதை உண்மையா? கடவுளை நம்பாதே என்றவரை கடவுளின் தலைச்சீடராக்கியது மார்க்சுக்கு மரியாதையா புரியவில்லையே? ‘the worst enemy of the awakened spirit’ என்று கடவுள் பற்றியும் 'religion is the opium of people' என்று மதம் பற்றியும் சொன்னவராச்சே?

என்னவோ போங்க காஸ்யபன் ஐயா... நீங்க தீக்கதிர் ஆசிரியர் தான் என்பதற்கு ஏற்ற மாதிரி சுடசுடப் பிரச்சினைகளைப் பற்றி எழுதி தீப்பொறி பறக்க வைக்கிறீர்கள் - சிந்தனைத் தீப்பொறி.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! நான் இப்போது தீக்கதிர் ஆசிரியர் அல்ல. 8வருடமாக நகபுரியில் இருக்கிறேன்.அவர்களொடு நெருக்கமானா தொடர்பு உண்டு.அந்த தொடர்பு என் அறிவை விசாலமாக்கியது.மாபெரும் தியாக சீலர்கள் பி.ஆர, எம்.ஆர்.வி,ஏ.பி,கே.ஏம் ஆகியொரின் அணுக்கத்தொண்டனாக இருக்கும் பாக்கியம் கிடைத்தது அகில இந்தியத் தலைவர்கள் பி.டி.ஆர்,இ,எம்,எஸ்,நாயினார், நிருபன் ஜோதிபாசு ஆகியொருடன் தொண்டனாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடத்தது.அவ்ர்களை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு தான் எனக்கு பாடமாக அமைந்தது.காஸ்யபன்

kashyapan said...

ஐயாமார்களே!"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்றான் கவிஞன். பட்டர் சப்பரத்தில் ஏறி தீபாராதனை காட்டும்போது "அரஹரா" என்று கன்னத்தில்போட்டுக்கோள்கிறொமே அந்த தெய்வமாஎன்பது தெரியாது. அக்டொபர் 2 ம் தேதி காந்தி சிலையின் முகத்தில் சூரியஒளி படும்படி கோவில் கட்டிகன்னியாகுமர்யில்வழிபடுகிறார்கள்.எதையும் தாங்கும் இதயம் கோண்ட எங்கள் அண்ணன் துயி லும் சமாதியில் சூடன் சாம்பிராணி கொளுத்தி தோண்டன் வழிபடுகிறான். எங்கள் அம்பிகை "குஷ்பு"வுக்கு ஈரொட்டில் கொவில் கட்டி ரசிகன் கும்பிடுகிறான். விடுங்கய்யா!என்னை? என்னத்தாயாவது சொல்லிப்பிடுவேன். அப்பாதுரை அவர்கள் தலைமல சுத்திவந்து கும்மியடிப்பீங்க!நான் ஆட்டைக்கு வல்லை சாமிகளா!---காஸ்யபன்.

அப்பாதுரை said...

அன்றைக்கு ஆசிரியர் இன்றைக்கும் ஆசிரியர் தான் என்ற பொருளில் சொன்னேன் காஸ்யபன் சார். தீக்கதிர் ஆசிரியனிலிருந்து உங்களை எடுத்து விடலாம் - உங்களிலிருந்து தீக்கதிர் ஆசிரியனை எடுக்க முடியுமா?

அப்பாதுரை said...

குஷ்பூவுக்குக் கோவிலா? சரிதான்.

மனிதனென்பவன் தெய்வமாகலாம் என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் சார். கும்பாபிஷேகத்துக்கு பணம் தேடவும் போஸ்டர் ஒட்டவுமே நேரமில்லாதப்ப, இதையெல்லாம் யோசிக்க சொன்னா எப்படி?

பத்மநாபன் said...

அத்வைத நிலையில் எல்லாம் ஒன்றுதான் ... அது பிடிபடும் வரை குடுமிப்பிடி சண்டை இருக்கும் ...அந்த சண்டையை அத்வைதத்துக்கு போகும் வழியாக மாற்றிக்கொண்டால் சத்தமும் ரத்தமும் குறையும்...

( நீங்கள் உபயோகிக்கும் தமிழ் மென்பொருள் நிறைய கொம்புகளையும் கால்களையும் மாற்றிவிடுகிறது ...
நீங்களாவது பரவாயில்லை கால் கொம்பு மட்டும் ... எனக்கு ள ல ர ற நிறைய தகராறு .... )