Sunday, February 13, 2011

உயிர் என்றால் என்ன?.....

உயிர் என்றால் என்ன?


இந்திய தத்துவ தரிசனங்களில் "உயிர் என்றால் என்ன?" என்ற கெள்வி எழுப்பப்பட்டு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த விடைகளைபற்றி புரிந்து கொள்வதற்கு முன்பு வேறு சில விஷயங்களை பரிச்சயம் செய்து கொள்வது நலம்

இந்திய தத்துவ தரிசனம் எனும்போது அது இந்து மதம் பற்றியது மட்டுமல்லாமல் மனிதகுலம் முழுமைக்குமான விசாரணைகளில் நமது முன்னோர்கள் ஆற்றிய பங்கினைச் சொல்வதாகும் நமது மரபில் இறைவனை ஏற்றுக் கொண்டவர்கள் உண்டு.இறவனை ஏற்காமல் வேதங்களை ஏற்றுக்கொண்டவர்கள் உண்டு.வேதங்களையும் இறைவனையும் ஏற்காதவர்கள் உண்டு

. அறிவினால் விசாரணையில் ஈடுபட்டவர்கள் உண்டு.எந்தப் போருளும் நிரந்தரமானதல்ல என்று கருதியவர்களும் உண்டு.

சேலை என்பது ஒரு பொருள்.அது நூலால் ஆனது.சேலையிலிருந்து நூல் பிரிந்தால் சேலை என்ற பொருள் அழி ந்துவிடும்.

நூல் பஞ்சால் ஆனது.நூலிலிருந்து பஞ்சு பிரிக்கப்பட்டால்,நூலழிந்துவிடும். பஞ்சு மெல்லிய இழைநார்களை.கொண்டது.நார்கள் பிரிக்கப்பட்டால் பஞ்சு இல்லை.

பொருள்கள் அங்கங்கள் அவையவங்களால் ஆனது.எவை அங்கங்களால் ஆனதோ அவை அழிந்துவிடும். அழியாத பொருள் உண்டா?

உண்டு. அதனை அணு என்றும் பரமாணு என்றும் அழைத்தார்கள். அணு பிரிக்க முடியாதது என்று கண்டார்கள்(!). அன்றய அறிவியல் அவர்களை அந்த நிலையில் நிறுத்தியது.

இப்படி அறிவியல் ரீதியாக சிந்தித்தவர்களில் ஒருவர்தான் யக்ஞவல்கியர் என்பவராவார்.இவர் இறைவன் இல்லை என்று வாதிட்டவர்.உயிரூள்ள பொருளுக்கும் உயிரற்ற பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?உயிர் என்றால் என்ன? என்ற கேள்விகளை எழுப்பி விடை சொன்னார்.

பொருள்கள் ஒரு குறிப்பிட்ட ரசாயனச்சேர்க்கையின் மூலம் தனக்கு வெளியே இருந்து வேறு பொருளை ஈர்த்துக்கொள்வதும் தன்னைப்புதுப்பித்துக்கொண்டு தேவையற்றவற்றை .வேளியேற்றுவதும் தனே உயிருள்ள பொறுளின் குணம்.

"அல்புமினல்" உடம்பானது,சுற்றுப்புறத்திலிருந்து சில பொருட்களை உட்கிரகித்தும்,இதற்குமுன் உட்கிரகித்த சில பொருட்களை வெளித்த்ள்ளியும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது அதாவது,உட்கொள்வதின் மூலமாகவும்.வெளித்த்ள்ளுவதின் மூலமாகவும் புதுப்பித்துக் கோள்கிறது.உயிர்போருளுக்கும், அதன் சுற்றுச்சூழ்நிலைக்கும் இடையில் தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்களே உயிர்.இது நின்று விட்டால் உயிர் நின்று விடுகிறது.பொருளின் இந்த குணம்தான் உயிர் என்றாகிறது.

இதனை யக்ஞ்யவல்கியர் தன்னுடைய ஸ்மிருதியில் குறிபிடுகிறார்.

அன்னம் நிந்தயேத்: ( உணவை வெறுக்காதே)

தத் வ்ரதம்: ( அது அளவுக்கு உட்பட்டது)

பிறாணோவா அன்னம்: ( உணவு என்பதே உயிர்)

சரீரம் அன்னதாம்: (உணவில்லாமல் உடல் இல்லை)

விஞ்ஞானப் பார்வை என்பது நமது அரசியல் சட்டத்தில் மட்டும்பொறிக்கப்படவில்லை. நம் தத்துவ தரிசனத்திலும் உள்ளது

8 comments:

காமராஜ் said...

அருமையாக இருக்கிறதுதோழர் தொடர்ந்து எழுதுங்கள்.
இது எளிமையாக இருக்கிறது. இன்னும் நிகழ் உதாரணங்களோடு சொன்னால் க்கூடுதல் புரிதலை உண்டாக்கும்.

kashyapan said...

thank u kaamaraj! this ia the tonic people like me naad! thank u---kash

சமுத்ரா said...

Good one!

manimuthu .s said...

உயிர் பற்றி உயிரோட்டமாய் புரியும்மடி எழுதியிருகுகிறீர்கள்.

தெடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்.வாழ்த்தக்கள்.

RVS said...

காஷ்யபன் சார்! புரிந்துகொண்டேன்... நன்றி.. ;-)

அப்பாதுரை said...

interesting!

சிவகுமாரன் said...

கடினமான ஒரு விஷயம் ஆனால் மிக எளிமையாக

hariharan said...

எளிமையாக புரியும்படி உள்ளது..

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களான மஹாபாரத்த்தையும் இராமாயாணத்தையும் பற்றி கட்டுரைகள் எழுதுங்கள். பாரதத்தை பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்ந்து எழுதப்பட்ட நூல்கள் தமிழில் உள்ளனவா? என்பதை கூறுங்கள்.

ராகுல்ஜியின் வால்காமுதல் கங்கை வரை வாசித்தபோது அதில் வருகின்ற இனக்குழுக்கள் தேசங்கள் மஹாபாரதத்தில் வருகிறது அப்படியானால் எப்படி புரிந்துகொள்வது.