Monday, February 28, 2011

"நான் பாடும் பாடல்".....

சிறு கதை


" நான் பாடும் பாடல்" (காஸ்யபன்)

அலுவலகத்தைவிட்டு நலரை மணிக்கே புறப்பட்டு பஸ் பிடித்து வீட்டிற்கு வரும்போது ஐந்தரை மணி ஆகி விட்டது.தெரு முனை திரும்பும்போதே என் மகள் வீட்டு வாசலில் அவளுக்குப்பிடித்தமான பட்டுப்பாவாடையில் நிற்பது தெரிந்தது.

எனக்குப் பொறிதட்டியது.இன்று சீக்கிரமாக வந்து சினிமாவுக்குப்போகலாம் என்று கூறியிருந்தேன்.இப்போழுதுதான் ஞாபகம் வருகிறது

. "ஒரு இளம் விதவைப்பெண்ணுக்கும் ஒரு எழுத்தாளனுக்கும் ஏற்படும் நேசத்தைப் பற்றிய கதையாம். மிக நல்ல படம் என்று எல்லாரும் சொன்னார்கள்.போகலாம் என்று என் மகளின் நச்சரிப்பு தாங்காமல் கூறியிருந்தது ஞாபகம் வந்த்தது.ஆபீஸ் சந்தடியில் அத்துணையும் மறந்து விட்டது.

வீட்டில் நுழைந்ததும்தான் புரிந்தது என் குடும்பம் மட்டுமல்ல என் நண்பரின் குடும்பமும கிளம்பத் தயாராக இருந்தது.உள்ளே சென்று உடைகளக் களைந்து கைலியை உடுத்திக் கோண்டேன்.

மெதுவாக என் மகள் வந்தாள்.அவள் பின்னால் நிழலாடுவது தெரிந்தது.

"என்னப்பா! உட்ம்பு சரி இல்லயா? என்மகள் கேட்டாள்."முகம் ஒரு மாதிரி இருக்கு?"

" போண்டாடியையும் பொண்ணையும் வெளில கூட்டிண்டு போறதுன்னாலே முகம் கரிபிடிச்ச வெங்கலப் பானையாயிடும்டீ! உங்கப்பாவுக்கு!" என்றாள் வசந்தா என் மனைவி.ஆசையோடு படிக்கக் கொண்டுவந்த "கந்தர்வனின்" சிறுகதைத் தொகுப்பு கட்டிலில் இருந்தது.அதப் பார்த்தேன்.வஸந்தாவின் முக த்தையும் பார்த்தேன். பத்தாவது நிமிடம் குளித்து உடைமாற்றி "சினிமா" செல்ல நான் ரெடி..

கொல்லைப்புற கதவை பூட்டியாகிவிட்டதா என்று பார்க்கச் சென்றேன்.என் மனைவி அவசரமாக் தயரித்த காப்பியை நீட்ட்னாள்.அவள் முகத்தில் தெரிவது என்ன? பாசமா,பரிவா,வெற்றிக்களீப்பா இல்லை ஒரு சாதரணபெண்ணின் யதர்த்தமா?

டிக்கட் கிடைத்து பதிமூன்று டிக்கட் கிடைத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.திருமணமான உடனேயே கணவனை இழந்தபெண். அவளுக்கு மற்றவர் காட்டும் பரிவு,ஆதரவு எல்லாமே நன்றாக இருந்தது. அவளுக்குப் பரிச்சயமாகும் எழுத்தாளன்,அவனோடு அவள் பழகும் பாங்கு,அவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் இவை அத்துணயுமே அவர்கள் இருவரின் கள்ளமற்ற அன்பை முன்நிறுத்தியது. என் இதயத்தின் ஒரு மூலையில் இவர்கள் இணந்து வாழ்க்கை நடத்துவார்கள்-அப்படித்தான் நடக்கும்- நடக்கவேண்டும் என்று ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த எழுத்தாளன் அவளிடம் அதனைச் சொல்லியே விடுகிறான்.ஆனால் அவள் மறுத்து விடுகிறாள்.

படம் விட்டு வீடு திரும்பும்போது மனம் கனத்து இருந்தது.நான் என்நண்பரின் குடும்பம் என்மகள் மனவி எல்லோரும் நடந்து வந்துகொண்டிருந்தோம்.படத்தை பற்றீ,சிவகுமரின் நடிப்பு என்று பெசிக்கொண்டே வந்த்தார்கள்.

"என்ன ஹன்ஸா! அப்பா பெசாமலேயே வரார்?" என்று நண்பரின் மனைவி என்னைப் பெச்சுக்கு இழுத்தார்.

"உங்களுக்கு இந்தப்படத்தின் முடிவைப் பற்றி என்ன தோன்றுகிறது? என்று கேட்டேன்.

"அதுல என்ன! என்னதான் இருந்தாலும் தொட்டுதாலிகட்டி அறுத்தாச்சு!அப்புறம் என்ன வேண்டியிருக்கு!அதுக்காக அவங்கூட கலயாணம்பண்ணிக்க முடியுமா?"என்றார் என் நண்பனைன் மணவி.

என் கையில் "சுரீர்" என்று வலித்தது.என் மனைவிதான் கையில் கிள்ளியிருக்கிறாள்.

வீட்டிற்குள் சென்றதும் அவளிடம் கேட்டென் " ஏன் கயைக் கிள்ளினாய்?

"கிள்ளாம என்ன பண்றது! சினிமா கொட்டகைக்குள்ள இருக்கும் போது என்ன சொன்னா தெரியுமா?

"என்ன சொன்னா?

. " இம்பிட்டுதூரம் பழகியாச்சு!ஊர் பூரா தெரியும்.எல்லருக்கும் சம்மதம்.அப்புறம் என்ன வேண்டியிருக்கு? அவங்கூட வாழவேண்டியதுதான? இந்தியப்பெண்ணாம்.-கண்ணகியாம்...நு பொரிந்து தள்ளீனா--இப்ப மாத்தியடிகிறா..."

எனக்கு பிரமிப்பா இருந்தது.ஏன் இப்படி மாறணும்.கொட்டகைக் குள்ள இருட்டாயிருக்கு--அவமட்டும்தான்--அவ்ளுக்கு அவ ஒரு பெண் என்ற முறையில் தனக்கு உள்ளே உள்ள மன உணர்வை உளைச்சளை வெளியிட முடிந்தது.படம் முடிந்து "லைட்" போட்டதும் உலகம் தெரிகிறது.அருகிலிருக்கும் கண்வர்,மாமியார்,நாத்தனார் எல்லாரும் தெரிகிறார்கள்.பெச்சு மாறுகிறது.

" நீ என்ன நினைக்கிறே?"என் மனைவியிடம்கேட்டேன்.

"நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. பெசாம் அவா ரெண்டுபெரையும் செத்துவச்சுட வேண்டியது தானே!விதவைனா அவளுக்கும் பந்தம்,பாசம்,ஆசை, நேசம் எல்லாம் கிடையாதா?"

. என் இதயத்தின் ஒரு ஓரத்தில் "மளுக்" என்று ஒரு சத்தம்கேட்டது.மன்ம் கல்லக இருகியிருந்தது.

"சாப்பிட வாங்கோ! காலாகாலத்தில சாப்பாட்டுக்கடையை முடிச்சுட்டு படுக்கப் பொகணும்"

"எனக்கு ஒரு மண்ணூம் வேண்டாம்"

"இண்டர்வல்ல என்னத்தையாவது திண்ணுருப்பார்டி உங்கப்பா"

வீட்டு வெளையை முடித்துவிட்டு கட்டிலில் படுத்தாள்."லைட்" டை அணைத்துவிட்டு படுத்தேன்..தூக்கம் வரவில்லை.வெகு நேரம் மனம் சமநிலைபட மறுத்தது.

பிரிட்ஜை திறந்து குளிர்ந்த தண்ணீரைக் குடித்தேன்

கட்டிலை நெருங்கினேன்.இரவு விளக்கு வெளிச்சத்தில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள் வாய் லேசாகத் திறந் திருந்தது..ஆழ்ந்த தூக்கம். மெலிதாக குறட்டை வந்து கொண்டிருந்தது.

முகத்தைப் பார்த்தேன்.

"நான் இறந்தால் இவள் வேறு மாப்பிள்ளை தேடிக்கொள்வாளோ"

பிறகு தூக்கமே வரவில்லை.



(1987ம் ஆண்டு "செம்மலர்"இதழில் பிரசுரமான கதை)

10 comments:

RVS said...

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தால் பேச்சு மாறுமோ?
கதை அருமை சார்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனக்குறளி போடுற ஆட்டம் இருக்கே அது அலாதி.

”நான் பாடும் பாடலை“ நான் பார்க்கும்போது மிகச் சிறியவன்.அதன் இசை என்னை ஈர்த்தது.அவ்வளவுதான்.

எந்த ஒரு முடிவும் தனித்தனியானது. எந்த ஒரு வாழ்வும் அப்படித்தான்.

ஒரே கதையில் எத்தனை குணாதிசயங்கள்?

'பரிவை' சே.குமார் said...

கதை அருமை சார்!

S.Raman, Vellore said...

Superb Comrade - Raman

அப்பாதுரை said...

பிரமாதம்! தனக்கு என்று வரும்பொழுது வெளிச்சத்தில் ஒரு சிந்தனை, இருளில் ஒரு சிந்தனை.

vasan said...

'சொன்னாலும் வெட்க‌ம‌டா,
சொல்லாவிட்டால் துக்க‌ம‌டா,
துக்க‌மில்லாம‌ல், வெட்க‌மில்லாம‌ல்
வாழ்கிறேன் ஒரு ப‌க்க‌ம‌டா..'

இந்த‌ப் பாட‌ல் ஏன் இப்போது நின‌வில்
கிளை இறங்கித் தாவும் குர‌ங்காய் வ‌ந்த‌து?
இதற்கும் ப‌தில் என்னிடமில்லை க‌ஸிப‌ன் சார்.

மோகன்ஜி said...

மனிதமனங்களின் ஊசலாட்டத்தினை அற்புதமாய்ப் படம் பிடித்திருக்கிறீர்கள்..

kashyapan said...

ஆர்.வீ.எஸ்,சுந்தர்ஜி,குமார்,தொழர் ராமன்,வாசன்சார்,அப்பாத்துரை அவர்கள்,மோகன் ஜிஅத்துணைபெருக்கும் என் நன்றி.30 அடிக்கு 20 அடி திரையில் முகம்மட்டும் தோன்றும் போது அதன் துல்லியமான அசைவுகளும் நமக்குப் புலப்படுகிறது.இருட்டுக்குள் இருக்கும் நமக்கும் அந்த பிம்பத்திற்கு மட்டுமே தொடர்பு.அதன் பெச்சு, சிரிப்பு, அழுகை, மகிழ்ச்சி எல்லாவற்றையும் நாம் அதனோடு பகிர்ந்து கொள் கிறொம். அருகில் அமர்ந் திருப்பவர் பற்றி நமக்கு அக்கரையில்லை. இது தான் திரைப்படத்தின் உளவியல். Dr. சியாமளா வனரசே என்ற அம்மையார் திரைப்பட பயிற்சி முகாமில் வெகுஜன உளவியல் பாடத்தில் எனக்கு சொல்லிக்கொடுத்தது.யாருமே இரட்டை வேடம் பொடுவதாகச்சொல்ல முடியாது. அது இயற்கை.அந்தரங்க உணர்வை கணநெரமே தோன்றினாலும் வெளிச்சம் பொட்டு காட்டினேன். கதை பிரசுரமான போது கண்டனமும் வந்தது--- காஸ்யபன்

vasan said...

'ச‌ரியான சூழல், ச‌ரியான ந‌ப‌ர், ச‌ரியான நேர‌ம்'. மூன்றும் ஒன்றாய் சேர்ந்த வாய்ப்பு கிட்டும் எனில், அவ‌ன் இராம‌னே ஆயினும் ..... என்ற‌ ஒரு வ‌ழக்குச் சொல் கேள்விப் ப‌ட்டுருப்பீர்க‌ள் தானே!

சிவகுமாரன் said...

மனித மனத்தின் குரங்கு குணத்தை படம் பிடித்து காட்டியது கதை.
அருமை அய்யா