Friday, February 25, 2011

வெளி (SPACE) என்றால் என்ன?

" வெளி" (SPACE) என்றால் என்ன?........


நமது இந்தியத் தத்துவ ஞானிகளில் ஒரு பகுதியினர் இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்று கருதுகிறார்கள்.

நிலம,நீர் ,நெருப்பு,காற்று, வெளி,(SPACE) என்ற ஐந்தும் சேர்வதால் பொருள்கள் உருவாகின்றன என்றும் கூறுகின்றனர். இந்தப் பஞ்ச பூதங்களைப்பற்றியும் அவை எப்படி உலக ஆக்கத்தில் பங்கெடுத்துக்கொள்கின்றன என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார்கள்.

போருள்கள் பஞ்ச பூதங்களால் ஆனது என்றால் மனிதனும் அப்படித்தானா? ஆம் . காற்றும் ஒரு பொருளா? அவை எப்படி உடலை உருவாக்க முடியும்?இறந்த பிறகு மனித உடல் என்னாகிறது? அதிலிருந்து நீர் வடிந்து வெளியேருகிறது உடலின் வெப்பம் போய் குளிர்ந்து விடுகிறது.எரித்தாலும், புதைத்தாலும் உடலின் சதையும் எலும்பும் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.இழையும் மூச்சுக்காற்றும் நின்று விடுகிறது.நிலம், நீர் ,நெருப்பு,காற்று உடலிலிருந்து வேளியேறியதாலேயே அந்த உடல் உயிரற்றுப்போகிறது. அப்படியானால் அது உயிரோடு இருப்பதற்கு இந்த நான்கும் இருந்ததுதான் காரணம் என்றாகிறது.

ஐந்தாவதாக வெளி அல்லதுஇடம் என்பது எப்படி ஒரு பொருளை உருவாக்கமுடியும் என்ற முக்கியமான கேள்வியும் எழத்தான் செய்யும்.இதற்கு தர்க்கரீதியாக ஒரு அருமையான விளக்கத்தை தருகிறார்கள் நமது முன்னோர்கள்.

ஒரு அடி நீளமும் ஒரு அடி அகலமும், ஒரு அடி உயமும் கொண்ட ஒரு கலத்தை எடுத்துக் கோள்வோம்.அதில் நீர் வார்த்தால் அது ஒரு கன அடி நீராகிறது.அதற்கு மேல் ஒரு சொட்டு நீரையும் அது ஏற்றுக்கொள்வதில்லை.அப்படி நீரை வார்த்தாலும் அந்த நீர் வழிந்து விடுகிறது.அந்தக் கலத்தின் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவுதான் அதனால் கொள்ளமுடியும்.அதேபோல் ஆறு அடி நீளமும் மூன்றடி அகல உயரமும் கொண்ட உடல் இந்தப் பூமியில் இருக்க இடம் அல்லது வேளி(SPACE) ஒன்று இருந்தால் தானே அது இருக்கமுடியும்.நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகியவற்றால் உருவான பொருள் இருக்க அதனை வைக்க ஒரு இடம் வெளி(SPACE) வேண்டுமே! ஆக வெளி (SPACE) என்ற ஒன்று இல்லாமல் பொருள் இருக்க முடியாதே! வெளி(SPACE)என்பதற்கு குணங்கள் உண்டுஅவை அதன் நீளம்,அகலம் உயரம் என்பவையாகும். பொருள்கல் .முன்னும் பின்னும் உயரத்திலும் நிலை கொண்டிருக்கின்றன.

நாம் எந்த திசைவழியில் அசைந்து செல்கிறோம் என்பது பிரச்சினை இல்லை.நமது ஆரம்ப நிலையிலிருந்து எவ்வளவு தூரம் பொகீறோம் என்பதும் பிர்ச்சினை இல்லை. எல்லை எதுவும் இல்லை. அதற்கு அப்பால் நாம் செல்வத்ற்குமில்லை.வெளி.(SPACE) எல்லையற்றது மட்டுமல்ல. அனந்தமானதும் கூட.

நாம் வாழும் அண்டம் எவ்வளவு பிரும்மாண்டமானது என்பதை உணர நமது பால்மண்டலம் நட்சத்திர கூட்டமைப்பு, சூரியன் ஆகியவற்றை அடக்கிய அந்த வெளியை(SPACE) கற்பணை செய்து தான் உணர முடியும்.

இந்த பிரும்மாண்டம் கூட இதனைவிட பிரும்மாண்டமன வெளி (SPACE)யின் ஒரு அங்கம்தான் என்கிறது விஞ்ஞானம். இந்த வெளி(SPACE) க்குள் விஞ்ஞானம் நுழந்து விட்டது.ஊடுருவிக் கொண்டிருக்கிறது.வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ தூரம் பயணம் செய்யும் ஒளியானது,ஆயிரம் கோடி ஆண்டு களில் எவ்வளவு தூரம் சென்றிருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.இங்கு தத்துவமும் விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று கவர்ந்து,பின்னிப்பிணந்து மனித குலத்தை முன்னேற்ற வருகிறது என்பதுதான் மிக முக்கியமானதாகும்.

பாண்டியன் விரவு வண்டியில் முன்பதிவு செய்து இடம் பிடிக்கிறோம்.சிலசமயம் இடம் இல்லாமல் போய்விடலாம்.அனால் இந்த அண்டம் என்பது அப்படி அல்ல.அது மேலும் மேலும் தன்னை விரிவு படுத்திக்கொண்டே இருக்கிறது.

மனிதன் தோன்றுவதற்கு முன்பே,அவனிடத்தில் கருத்துருவாக்கங்கள் உருவாவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பூமி இருந்திருக்கிறது.இது வெளி(SPACE)யில் அண்டத்தில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து நிலை கொண்டிருக்கிறது.

இவற்றை பற்றி நினைத்தால் திகைப்பும் அதிர்வும் ஏற்படுகிறது என்பது தான் உண்மையாகும்

22 comments:

ராம்ஜி_யாஹூ said...

புதுமையான சுவாரஸ்யமான பதிவு சார்,
பகிர்விற்கு நன்றிகள்.
ஆனால் அக்னி (தீ) யை நீங்கள் விட்டு விட்டீர்கள். எதனால்


அக்னி வாயு அர்க்க வாகீச வருண இந்த்ரோ தேவதா தானே

kashyapan said...

ராம்ஜி அவர்களே! நிலம்,நீர்,நெருப்பு, காற்று வெளி என்று ஐந்தையும் குறிப்பிட்டுள்ளேனே! அக்னி என்பதற்குப் பதிலாக, நெருப்பு, வெப்பம் என்று கூறியிருக்கிறேன். சரிதானே---காஸ்யபன்.

அப்பாதுரை said...

அற்புதம்!
என்றைக்கும் எப்போதும் விரிந்து கொண்டிருக்கும் ஒன்றை எப்படிப் படைக்கமுடியும் என்று கேட்கத் தோன்றுகிறது - அதுதான் உங்கள் பதிவின் உட்பொருளோ? ஆகாகா!

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! என்னை வம்புக்கு இழுக்காதீர்! உம்முடைய பின்னூட்டம் மனநிறைவைத் தருகிறது. கைப்பந்து விளையாட்டில் lifter என்ரு ஒருவன் உண்டு. பந்தை வலை அருகில் தூக்கிக் கொடுப்பான்.striker எதிரியின் பகுதிக்கு அடித்துத் தள்ளுவான்.நீர் lifter ஆ?striker ஆ?__காஸ்யபன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அற்புதமான பதிவு காஸ்யபன் சார்.

பஞ்ச பூதங்களில் தன் வாழ்வை வாழ்ந்து தீர்க்கும் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள இந்த மாபெரும் அதிசயத்தை தலை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை.

ஆனாலும் மனிதனுக்குக் கற்றுக்கொள்ள ஆசையெதுவுமில்லை.

ராம்ஜி_யாஹூ said...

ஐந்தாவதாக வெளி அல்லதுஇடம் என்பது எப்படி ஒரு பொருளை உருவாக்கமுடியும் என்ற முக்கி

மன்னியுங்கள் காஷ்யபன். இந்த வரியில் ஐந்தாவதாக என்ற உடன் நான் நெருப்பை விட்டு விட்டீர்களோ என்று நினைத்தேன்

ஆனால் வெளி என்பதில் இருந்துதானே அனைத்தும் கிடைக்கிறது (அக்னி = நெருப்பு= சூடு= சூரியன், வாயு= மூசுக் காற்று= வெளி...)

இதை நீண்ட விவாதம் செய்ய ஆசை. உங்கள் தொடர் பதிவுகளை படித்த பின்பு விவாதிப்போம்

மோகன்ஜி said...
This comment has been removed by the author.
மோகன்ஜி said...

அண்டத்தில் இருந்து பிண்டம். இந்த சிறுவாழ்க்கையை நிரந்தரம் என்றே எண்ணியே மனிதன் வேறேதும் சிந்திப்பானில்லை. சுந்தர்ஜீயின் கருத்து, பட்டினத்தார் பாட்டை நினைவூட்டுகிறது.

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே!-பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப, நாய் நரிகள், பேய்,கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்!

காமராஜ் said...

தோழர் வணக்கம்....
இந்த துவக்கம் அழகாக இருக்கிறது.
ஆனால் அதை விவாதிக்கத்தான் இங்கு யாருக்கும் தேரமில்லை.ஒரு இரு முறை எனபடிக்க படிக்க அறிவு சூடு பிடிக்கிறது உங்களது கடைசி வரிபோல திகைப்பும் கிடைக்கிறது.க்ரேட்.

அப்பாதுரை said...

'மனிதனுக்குக் கற்றுக்கொள்ள ஆசையெதுவுமில்லை' சுவாரசியமான கருத்து சுந்தர்ஜி. வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் வெளியுணர்வுகள் நம் மேல் பட்டு உள்புகாமல் வெளியே தெறித்து நின்றுவிடுகின்றன - ஏன் கற்கும் ஆசையை இழக்கிறோம் - என்று நானும் அடிக்கடி நினைப்பதுண்டு.

அப்பாதுரை said...

வம்புக்கு இழுக்கவில்லை காஸ்யபன் ஐயா. 'எல்லாம் வல்ல' என்று ஒரு புஸ்வாணத்தை ஏற்றாமலே வைத்துக் கொண்டு, அதன் அடிப்படையில் இன சாதி வெறியில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் அத்தனை மானிடத்தையும் ஒரு magic wandனால் ஜீபூம்பா என்று மாற்றிவிட முடியாது. ஆனால் உங்களைப் போல் அறிவைப் பற்ற வைக்கும் பொழுது கொஞ்சம் தூண்டிவிடுவோமே என்று நினைத்தேன், அவ்வளவு தான். ஒரு முறை, நண்பர்களுடனான ஒரு உரையாடலில், 'கோள் வெடித்து இரண்டு பிலியன் ஆண்டுகள் வரை வல்லவர் என்ன செய்தார்' என்று கேட்டேன். 'எல்லாவற்றுக்கும் பொறுமை வேண்டும் என்பதை உணர்த்தவே இரண்டு பிலியன் ஆண்டுகள் காத்திருந்தார்' என்றார் ஒரு நண்பர். existentialism இரண்டு பக்கமும் உண்டு போல!

அப்பாதுரை said...

பட்டினத்தார் வரிகளை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி மோகன்ஜி. உங்கள் படிப்பின் ஆழம் வியக்க வைக்கிறது!

hariharan said...

ஒளியைவிட நாம் வேகமாக பயணம் செய்தால் கற்காலத்தையும் நம்முடைய செத்துப்போன முன்னோர்களையும் காணமுடியும் என்கிறார்களே அது நிஜம் தானா?

kashyapan said...

ஹரிஹரன் அவர்களே! முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் பெர்ற்றண்டு ரஸல் எழுதிய புத்தகம் ஒன்றை வாசித்தேன். ABC of Relativity என்று பெயர். அதைப் படித்தபிறகு அப்படிப்பயணம் செய்வது Theoritically possible என்றுதான் தோன்றுகிறது. அது சாத்தியப்படும் அளவுக்கு விஞ்ஞானம் வளரவில்லை என்றே படுகிறது---கஸ்யபன்

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! நான் ஆட்டைக்கு வரல சாமி! ஆமாம் நீர் யார் கட்சி?---காஸ்யபன்

அப்பாதுரை said...

'யார் கட்சி?' என்றால்? புரியவில்லையே?

அப்பாதுரை said...

'எல்லாம் வல்ல' பற்றிக் கேட்கிறீர்களா?
கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்று ஒதுங்கிவிட்டவன் நான்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! அருமையான பதில் நான் விரும்பும் பதில் கூட!---காஸ்யபன்

சிவகுமாரன் said...

அய்யாவும் அப்பாத்துரையும் கட்சி சேர்ந்திட்டாங்க.
என் பாடு திண்டாட்டம் தான்.

kashyapan said...

சிவகுமரன் அவர்களே! மனிதனுக்கு உயிர்வாழ உரிமை இருக்கிறது.மூச்சுவிட உரிமையிருக்கிறதுஇறைவனை.நம்ப உரிமையிருக்கிறது.மறுக்கவும் உரிமை இருக்கிறது.கேரளத்தில் "ஏ.கே.ஜீ ஜிந்தாபாத், சாமி சரணம் ஐயப்பா" என்று கோஷம் போடும் மக்களை நான் பர்த்திருக்கிறேன்.வாழ்வு என்பது சமரசத்தில் தான் ருசிக்கும்---காஸ்யபன்

veligalukkuappaal said...

சமீபத்தில் டிஸ்கவேரி சானலில் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபென் ஹாக்கிங் நீண்ட ப்ரோக்ராம் ஒன்று அளித்தார், நமது அண்டம், space, விண்வெளிப்பயணம் பற்றியது. இரண்டு முறை ஒளிபரப்பானது, இரண்டு முறையும் பார்த்தேன், மிக மிக சுவாரஷ்யம்! பார்க்காதவர்கள் பாவம்! இந்த பூமியை ஒரு வினாடி நேரத்தில் ஏழு முறை சுற்றி வரும் ஒரு அதிவேக விரைவு ரயிலில் நாம் விண்வெளிப்பயணம் மேற்கொண்டால், பூமியில் ஒரு வாரக் கணக்கில் நாம் விண்வெளியில் நூற்று ஐம்பது வருடங்கள் பயணம் செய்திருப்போம் என்றார்! அதாவது மார்ச் ஒன்றாம் தேதி புறப்பட்டு ஏழாம் தேதி திரும்பி வந்தால், நாம் விண்வெளியில் நூற்று ஐம்பது வருடங்கள் பயணம் முடித்திருப்போம்! அப்படியான ஒரு வாகனமோ வேகமோ சாத்தியம் இல்லை என்றாலும் பவ்தீக, கணித விஞ்ஞான அடிப்படையில் இந்த கணக்கு உண்மை என்று ஸ்டீபன் ஹாகிங் சொல்கின்றார். என்னை எப்போதுமே கவர்ந்த விஷயம் space, time, விண்வெளிப்பயணம். ஐன்ஸ்டீனின் space, time போன்ற விஷயங்கள் எப்போதுமே சுவாரஷ்யமானவை! எனது அடுத்த பின்னூட்டத்தில் காலம் பாற்றிய ஒரு கவிதையை சொல்வேன்! ஸ்டீபன் ஹாகிங் சக்கர நாற்காலியில் மட்டுமே பயணிப்பவர், அவரால் பேச முடியாது, உணர்வுகளை, பேச்சுகளை கணினி மூலம் மட்டுமே வெளிப்படுத்துகின்றார் என்பதையும் ஒரு தகவலாக பதிவு செய்கின்றேன்.
இக்பால்

kashyapan said...

வாருங்கள் தொழரே! ஹரிஹரன் அவர்களுக்கு எழுதிய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.பேற்றண்டு ரசல் எழுதியA,B.C of Relativity யிலும்குறிப்பிடுகிறார்.---காஸ்யபன்