Friday, April 01, 2011

1967ம் ஆண்டு தேர்தல்..................

1967ம் ஆண்டு.சுதந்திரம்வாங்கியதிலிருந்து 20 ஆண்டுகளாக கங்கிரசுதான் ஆள்கிறது.இதனை மாற்ற வேண்டும். எப்படி மாற்ற? எதிர்கட்சிகள் ஒன்று பட்டு நின்றால் தான் அதுமுடியும். தலைவர்களிடையே திவிரமாக விவதம் நடந்த்து.காங்கிரஸ் சிறுபான்மை வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை இடங்களை பெறுகிறது. ஆட்சியையும் அமைக்கிறது. இதனை மாற்ற காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் செய்ய வேண்டும். பலவிதமான ஏற்பாடுகள் விவாதிக்கப்பட்ட்ன.வடமாநிலங்களில் சம்யுக்த விதாயக் தள் என்றார்கள்.S.V.D என்று உருவானது. காங்கிரசை எதிர்த்து ஒரேஒரு வெட்பாளர் நிற்பார்.அவருக்கு காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆதரவு அளிக்கும். இது 1967மாண்டு மிகப் பெரிய மாற்றததை இந்திய அரசியலில் உருவாக்கியது..
பஞ்சாப்,பீஹார்,உ.பி,மத்தியபிரதேசம்,ஒரிசா,என்று காங்கிரஸ் அல்லாத ஆட்சிகள் வந்தன.இடது ஜனநாயக முன்னணி மே.வங்கத்திலும், ஜனநாயக இடது முன்னணி கேரளத்திலும் வந்தது. தமிழகத்திலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.காலம் சென்ற முதலமைசரும் தி.மு.க.தலைவருமான சி.என். அண்ணாத்துரை அவர்கள் இதில்முழு மூச்சாக இறங்கினார். திமுக வொடு ஆறுகட்சிகள் சேர்ந்து செயல் பட முன் வந்தன.
தமிழகத்தில் அப்போது ராஜாஜி தலைமையில் முழுக்க முழுக்க வலதுசாரி பிற்போக்கு தன்மையோடு " சுதந்திரா" கட்சி செல்வாக்கொடு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திராக்கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தது. காங்கிரஸ் எதிர்ப்பு முனைமழுங்கும் நிலை கிடத்தட்ட உருவாகியது.அண்ணாதுரை அவர்களும், மார்க்சிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி அவர்களும் இது பற்றி விவாதித்தார்கள்.
"எந்த எந்த தொகுதியில் யார்யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்கள் நிற்கட்டும். மற்றவர்கள் தங்கள் ஆதரவை செல்வாக்குள்ள கட்சிக்கு போடுவோம். நாம் நமக்குள் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு உடன்பாடு காண்பொம்" என்று பிராமமூர்தி கூறினார். "சுதந்திராகட்சி எங்கு நின்றாலும் நாங்கள் எதிர்ப்போம். உடன் பாடு என்பது தி.மு.க. மற்று முள்ள கட்சிகளுடன் தான். அவரவர் கொள்கை அவரவருக்கு." என்றும் அவர் கூறினார்.
. சென்னை விருகம் பாக்கத்தில் நடந்த மாநாட்டில் உடன் பாடு பற்றி அறிவித்த அண்ணாத்துரை அவர்கள்"தி.மு.க வொடு மார்க்சிஸ்ட் கட்சி, தி.மு.க வொடு சத்ந்திராகட்சி, திமுகவொடு சொசலிஸ்டு கட்சி ........... என்று தொகுதி உடன்பாடு உருவாகியுள்ளது என்று அறிவித்தார்.
நாகர் கோவில் நாடளுமன்ற தொகுதியில் சுதந்திரா கட்சி வேட்பாளர எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக எம்.எம்.அலி நின்றர்கள். மதுரையில் பி.ராமமூர்த்தி அவர்கலை எதிர்த்து டாக்டர் சந்தொஷம் சுதந்திராகட்சியின் சார்பில் நின்றார்கள்.அப்போது கிழே விழுந்த காண்கிரஸ் தமிழ்கத்தைப் பொறுத்தவரை இன்னும் எழவில்லை.
என்ன செய்ய? தமிழகத்தின் துரதிர்ஷ்டம்! அண்ணாத்துரை அவர்கள் 1969 ம் ஆன்டு மறந்தார்கள்.கருணாநிதி முதலமைச்சாரானர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்யலாம் என்றாலும் நாலாவது ஆண்டே சட்டமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு உத்திரவிட்டார்.
. "குஷ்டரொகியின் கையில் இருக்கும் வெண்ணை" என்று காங்கிரசை வர்ணித்தார் அண்ணாத்துரை அவர்கள். முதன் முதலாக தி.மு.க தேர்தலை காங்கிரசோடு கைகோர்த்து சந்தித்தது.அப்போது திமு.க வின் தலைமையை அலங்கரித்தவர் கருணாநிதி. என்ன நிர்ப்பந்தமோ!

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

மலரும் நினைவுகள்.

அப்பாதுரை said...

அரசியலில் நிரந்தர நட்பும் இல்லை; நிரந்தரப் பகையும் இல்லை என்பார்கள். அண்ணாதுரையும் காங்கிரசோடு கூட்டு சேர்ந்திருப்பார் - அவசியமானால். "மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்பது அவரும் ஆதரித்த ஒரு நிலை என்று நினைக்கிறேன். 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பது கழகங்களுக்கு மட்டுமல்ல, சந்தர்ப்பவாத இந்திய அரசியலுக்கே பொருந்தும். கருணாநிதி ஒரு திறமையான அரசியல்வாதி என்பதில் சந்தேகமில்லை - திருடனான அரசியல்வாதி என்பதில் தான் வருத்தம்.

அப்பாதுரை said...

இந்திய அரசியலில் திருடர்கள் என்பது புருவத்தை உயர்த்தும் அளவுக்குக் கூட வியப்பைத் தருவதில்லை. நேருவிலிருந்து தொடங்கியது தானே? யார் மோசமான திருடன் என்பது தான் சர்ச்சை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கருணாநிதியின் தலைமை பிறரின் தலைமையை விட மோசமானதா? சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. மார்க்சிஸ்ட் போன்ற சில்லறை கட்சிகள் பேசுவார்களே தவிர, ஒருவருக்கும் rallying சக்தியோ மக்களைக் கவரும் சக்தியோ இல்லை - சும்மா புலம்பி என்ன பயன்? அத்தனை சில்லறை கட்சிகளும் எப்படியாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று தங்கள் கட்சிக்குள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதில் குறியாக இருக்கிறார்கள். பிற்போக்கு முற்போக்கு சாதி என்று மேளமடிக்கும் கட்சிகள் வாக்குகளைச் சேகரிக்க முடியவில்லையே? கழகங்களுக்குத் தான் அந்தத் திறமை இருக்கிறது. என்ன செய்ய?

சிவகுமாரன் said...

மலரும் நினைவுகள் படிக்க சுவையாக இருக்கிறது. ஆனால் பழங்கதை பேசிப் பலன் என்ன?
கருணாநிதியுடன் இருந்திருந்தால் மார்க்சிஸ்டுகளுக்கு மதிப்பாவது இருந்திருக்கும். இப்போது அம்மாவுடன் கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் கேவலப்பட்டு நிற்கிறார்கள்.

Subu said...

உங்கள் கணிப்பில், இனி வரும் ஆண்டுகளைல், தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளின் நிலையென்ன ? யாரையாவது அண்டியே தான் பிழைப்பர்களா ? ஒரு பதிவாய் எழுத/சொல்லமுடியுமா ? முன் நன்றிகள் ...

உங்கள் எழுத்துகளில் கம்யூனிஸ்டுகளின் மீது ஒரு பச்சாத்தாபம் / soft corner தோன்றுகிறது ... அதான் கேட்டேன்

தனி ஆளான திரு வைகோ தனியாய் நிற்க தயாராய் இருக்கிறார். ஒண்ணும் வேண்டாம் என்று விட்டு விட்டுக்கூட நிற்க தயாராய் இருக்கிறார். கம்யூனிஸ்டுகள் தயாராய் இல்லையே .. ஏன் ?

த.நா.வில் இவ்வளவு ஏழ்மை இருந்தும், மக்களிடையே அதிருப்தி இருந்தும், கம்யூனிஸ்டுகளால் ஒரு அலையை உருவாக்க முடியவில்லையே ? ஏன் ?

அம்மாவையையும் , ஐயாவையையும் சார்ந்ததாலா ?


அன்புடன்


பி கு : தீக்கதிர், செம்மலர் - அரசியல் பத்திரிக்கைகளா ?