Saturday, July 02, 2011

எலிகளைப் பிடித்து பெருச்சாளிகளை விட்ட கதை........

__அலைக்கற்றை ஊழல்---
எலிகளைப்பிடித்து பெருச்ச்சாளிகளைவிட்டகதை !

அலைக்கற்றை ஊழல் உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டம் அதன் கடமையை செய்யுமாம். முன்னாள் முதல்வரின்மகள் சிறையில் .முன்னாள் மத்திய அமைச்சர் சிறையில் .மற்றுமொரு அமைச்சர் கம்பி எண்ண காத்திருக்கிறார் என்று கூறப்படுகிற்து

ஊழலில் அரசுக்கு இரண்டு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நட்டமாம்.சி.பி.ஐ.புலிகள் இப்பொது போட்டிருக்கும் வழக்குகள் மூலம் முப்பத்தைந்தாயிரம் கோடி தேறலாம். பாக்கி நாமம் தான்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு 210 கொடி ரூ ஒரு பாய் கடன் கொடுத்திருக்கிறார். நாம் 50 ரூ கேட்டால் அரைவேட்டியையும் அரணாக்கயிரையும் பிடுங்கி வைத்துக் கொண்டு கொடுப்பார்கள்.இவர்களுக்கு வார்த்தையிலேயே எல்லாம் முடிந்துவிட்டது.பவம் !இதற்காகத்தான் கனிமொழியம்மையார் சிறையிலிருக்கிறார்.தப்பு தப்புதான் யார் செய்தாலும் !

சென்னையில் அயனான இடம். மவுண்ட் ரொடு பக்கமாம்.வோல்டாஸ் கம்பெனிக்கு சொந்தமானது. அதனை ரெவதியம்மள் என்பவருக்கு விற்றிருக்கிறார்கள். விலை 600 கோடி . வொல்டஸ் கம்பெனி டாடாவுக்குச் சொந்தமானது. அந்த இடம் சந்தைவிலைக்கு 6000கொடி பெருமாம். டொகொமோ டொகொமோ என்று தொலைக்காட்சியில்வருகிறதே அது யார் கம்பெனி?

எங்களிடம் யாரும்தப்பமுடியாது என்று சி.பி.ஐ சவால் விடுகிறது..ADAG கம்பெனியின் உயர் அதிகாரிகளை பிடித்து சிறையில் பொட்டிருக்கிறொம் என்கிறார்கள். Anil Dhirubai Ambani Group தான் ADAG என்பது . அம்பானியை இவர்களால் தொட முடியாது.நிதிபதி பாரிஹோக் பெரியவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள் என்று தோன்றுவதாகச்சொல்கிறார். அனில் அம்பானியை ஏன் பிடிக்கவில்லை?. அலைகற்றை உரிமம்பெற கட்டணம் காசோலையாக கொடுக்கப்ப்ட்டுள்ளது. அம்பானியும் அவர் மனைவியும் 100கோடிக்குமெல்தான் கையெழுத்துப்பொடுவார்கள். ஆகவே அவர்களை சம்மந்தப்படுத்தமுடியாது என்கிறார்கள்.50கொடியாக பத்துகாசோலையில் கையெழுத்துப்போட்ட அதிகாரிகள் கம்பி எண்ணுகிறார்கள். அலைக்கற்றையின் பலன் அம்பானிக்கு போகும்.

விடியோகொன் கம்பெனி தெரியும். முதன் முதலாக தொலைகாட்சி பெட்டி செய்ய உரிமம்பெற்ற கம்பெனி .இன்று இந்தியாவின் பணக்காரர்களில் 11 இடத்தில் அதன் முதலாளி வேணுகொபால் தூத் இருக்கிறார். இவ்ருடைய தம்பி ரஜ் குமார் தூத். ஏம்.பி .அலைக்கற்றை உரிமம் வாங்க ராஜ்குமார் தான் ஏற்பாடு.

ESSR கம்பெனியின் முதலாளி ரூயா.அலைகற்றை உரிமம் பெற்றவர். இவர்களை ஒன்றும் செய்யவில்லை.செய்யமுடியாது.சிதம்பரம் நமக்கு உள் துறை அமைச்சர். அவர்களுக்கு காசு கொடுத்தால் கோர்ட்படி எறி வாய்தா வங்கும் வக்கீல்.

தினம் கனிமொழி பற்றி செய்திகள்வரும் . கழிப்பறைக்கு திரைபோட்டிருக்கிறார்ர்கள் . அவர் மிழுகு வர்த்தி தயாரிக்கிறார்..வெப்பம் தாங்க முடியாமல் உடலில் கொப்புளங்கள் வருகிறது. என்று பத்திரிகையில்படித்துவிட்டு தூங்கி விடுவோம் .

அன்ன ஹசாரெயும் ராமதேவும் சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள் .செய்திகளை வாசிப்போம் .

ரூயா,டாடா, அம்பானி, தூத் போன்ற பெருச்சாளிகள் புகுந்துவிளையாடும்

11 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சார்..இவர்கள் வளர்ந்து விட்டார்கள். ஒன்றுமே செய்ய முடியாது நம் சட்டங்களால்...

hariharan said...

பெருச்சாளிகளைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்பதற்காகத்தான் ஹசாரேவும் ராம்தேவும் அரசியல்வாதிகள் மட்டும் தான் ஊழல்பேர்வழிகள் என்ரு லாலி பாடுகிறார்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

சிவகுமாரன் said...

யார் ஆட்சிக்கு வந்தாலும் , ஜெயிலுக்குப் போனாலும் , ஆளப்போவது அம்பானியும் , டாட்டாவும் தான். அல்லாடப் போவது நானும் நீங்களும் தான்.

veera said...

ஐயா உங்கள் பதிவை www.tamizharuvi.com மில் வெளியிடலாமா..

kashyapan said...

வெளியிடலாம்..!kashyapan

'பரிவை' சே.குமார் said...

தமிழ்வாசி சொல்வதுபோல் நம் சட்டங்களால் இவர்களை ஒன்றும் செய்யமுடியாது. இதை அவர்களும் உணர்ந்துதான் பெருச்சாளிகளாக வாழ்கிறார்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உலகமயமாக்கலின்-தாராளமயமாக்கலின் பெருமைகளை அநுபவித்துக் கொண்டிருக்கிறோம். 90களுக்கு முன்னால் நடந்தபடியிருந்த சுரண்டல்களிலும் ஊழல்களிலும் ஒன்றுக்குப் பின்னால் பூச்சியங்கள் அதிகமாகிவிட்டன.மற்றவையெல்லாம்அப்படியே இருக்கின்றன.

அப்பாதுரை said...

ஆதங்கமும் வெறுப்பும் அடங்கியிருப்பது போல் தோன்றினாலும் புரிகிறது. திருடனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் என்ன வேறுபாடு? அனுபவம். நம் சட்டதிட்டங்கள் திருடனைப் பிடிக்க ஏற்படுத்தப் பட்டவை.

Unknown said...

காட்சிகளுக்கு பின் உள்ளவற்றைக் காட்சிப்படுத்திய பதிவு. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை களையலாம்.

bandhu said...

கொடுமை சார்! இவர்களெல்லாம் Too Big to Fail கேட்டகிரியில் வந்து விட்டார்கள்!