சிறு கதை.
பேராசிரியர்
திப்புசாமி "மும்பை-கன்னியாகுமரி "எக்ஸ்பிரசில் ஏறினார்.'ஏ.சி"கோச்சானதால் தன் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டார்.அனுப்ப யாரும் வரவில்லை .அணுசக்திநகரில் வீட்டைப்பூட்டினோமா என்று அடிமனதில் உளைச்சல் ஏற்பட்டது.பக்கத்து ஃப்ளாட் பார்த்தசாரதி சின்கா பார்த்துக்கொள்வான். அவனிடம் தான் சாவி இருக்கிறது.மனது சமாதானமடைந்தது.
மதுரைசென்று பேராசிரியர் டாக்டர்.எம்.எஸை பார்க்கவேண்டும்.ரயில் கிளம்பிவிட்டது.மிதமான "ஏ.சி"யின் குளிர்ச்சி இமை கனத்தை அதிகமாக்கி மூடச்செய்தது.
திப்புவுக்கு கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு இமைகள்கனத்தன.அப்பா மெதுவாககூப்பிடுவது கிணற்றிர்க்குள் இருந்து கூப்பிடுவதுபோல் கேட்டது. திப்புவுக்கு ஆறு வயது முடியவில்லை. கல்யாண வீடுகளில் அப்பாவும் அம்மாவும் "லைட்" தூக்குவார்கள். ஆளுக்குஒரு ரூ கிடைக்கும்."கலக்கு முட்டியை" குடித்துவிட்டு இருவரும் சண்டை போடுவார்கள்.சிலசமயம் ஊர்வலத்தின்போதே தலையில் லைட்டுடன் கைகளை ஆட்டி ஆட்டி கெட்டவார்த்தை சொல்லி இருவரும் சண்டைபோடுவார்கள் .
திப்பு இருவருக்கும் நடுவில் மவுனமாக வருவான்.சாமிகள் அதட்டியதும் இருவரும்கொஞ்ச நேரம் நிறுத்துவார்கள்.இந்த "லைட்"தூக்குவதில் ஒரு வசதி உண்டு.இரவு கல்யாண விருந்துமுடிந்ததும் எச்சிலையில் உள்ள மிச்சத்தை பொறுக்கிக் கொள்ளாலாம்.. அதற்காகஒரு ஒலைப்பெட்டியை திப்புவின் தலையில் ஏற்றி வைத்திருப்பார்கள்..சாமிமார் சாப்பிட்டு எச்சிலிலையை போடும் போது "ஏ!சாமி!ஏ!சாமி!" இரண்டு முன்று குடும்பங்கள் அலை பாயும்.
இலைகள் யார் முன்னால் விழுகிறதோ அவர்கள் முதலில் பொறுக்கிக் கொள்ள வேண்டும்.லட்டு,வடை,உருளைக்கிழங்கு கறி,அவியல் ,அப்பளம் என்று திப்பு, அவனுடைய அம்மா, அப்பா ஆகியோர் தனித்தனி எச்சில் இலைகளில் பிரித்து பெட்டியில்வைத்துக் கொள்வார்கள்.
அன்று ஊர்வலம் கொஞ்சம் நேரமாகிவிட்டது.திப்புவுக்கு கால் வலித்தது.நடுரோட்டில் குப்பைமேட்டில் உட்கார்ந்து கொண்டான் தூக்கக் கலக்கத்தில் மண்டபத்திற்கு . வரும்போது பசி வயிறை கிள்ளியது.பந்தலுக்கு வெளியில் படுத்துக் கொண்டான்.அப்பவும். அம்மாவும் "லைட்"டை இறக்கிவிட்டு அவன் அருகில்வந்தூட்கார்ந்து கொண்டது அவனுக்கு நினைவிருக்கிறது.
"திப்பு!ராசா! எச்சல வந்திட்டுதில!எந்தில!ராசா!" என்று அப்ப கூப்பிட்டது கிணற்றுக்குள் இருந்து கேட்டது. "நாயி! எந்தி நாயி!" என்று அம்மா முதுகில் அடித்தாள்.
ரயில்குலுங்கியதா.இல்லை உமைச்சலா தெரியவில்லை திப்புசாமி திடுக்கிட்டு விழித்தார்.மனி இரவு ஒன்பதாகி விட்டது.கையைக்கழுவிக்கோண்டு ஹோட்டல் மெரிடியனிலிருந்து ஸ்டாஃப் கொண்டு வந்து வைத்த டின்னர் கவரைத் திறந்தார்.
பொன் வறுவலில் உருளைக்கிழங்கு, உயர்ந்த வகை கோதுமையில் தயாரிகபட்ட இரண்டு பரோட்ட.நன்கு வறுத்து ஒரேமாதிர்யாக நறுக்கி மிதமான காரத்தோடு உள்ள ஆட்டிறைச்சி.மடியில் டவலை விரித்து அலுமினிய ஃபாயில் தட்டை வைத்துக்கொண்டார்.மினரல் வாட்டர் பாட்டிலைத் திறந்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். உருளைக்கிழங்கை விட்டுவிட்டு ஆட்டிறைச்சியில் பரோட்டவை தோய்த்து வாயில் பொட முன்வரும்போது "குபுக் என்று நெஞ்சக்குழியில் இருந்து சத்தம் வந்தது.கண்கள் குளமாகியது.எதிர் சீட்டுக்காரன் பார்க்கவில்லை ஒவ்வொரு சீட்டுக்கும் திரை போட்டு மறைத்திருந்ததால்.அவர் வாய் முணுமுணுத்தது"எம்.எஸ்!எம்.எஸ்! என்று.
திப்பு மூன்றாவது படிக்கிறான் அன்று பள்ளிக்கூடம்போகவில்லை.ரங்கசாமிக் கோனார் வீட்டில் மாடு செத்துவிட்டது.அப்பாவொடுஅங்கு போய்விட்டான்.மாடு செத்தால்மாட்டுக்கறி திங்கலாம்.பள்ளிகூடம்போனால்திங்கமுடியுமா? திப்பு இந்த மாதிரி சமயங்களில் அப்பவோடு ஒடிக் கொள்வான்.மாடு செத்தால் இரண்டு மூனேஉ நாள் பள்ளீக்கூடம் போகமாட்டன்.வத்தியார் அடிப்பாரு!அடிச்சா என்ன? அப்பதான வலிக்கும்! என்று திப்பு சமாதனம்செய்து கொள்வான்.
திப்புசாமியால் முழுவதும் சாப்பிட முடியவில்லை."டின்னர்' கவருக்குள் வைத்து வெளியில் எறிய எழுந்து ...அதிர்ச்சியில்திப்புசாமி மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.கவரை சேதமில்லாமல் மூடி வைத்திருந்து காலையில் பிளாட்பாரதில் வரும்பிச்சைகார ..."ஏம்.ஏஸ்.!எம் எஸ்" வாய் முணுமுணுத்தது.
திப்பு இப்போது ஐந்தாவது படிக்கிறான்.குழி வெட்ட அப்பவுக்கு உதவுவான். நாடாக்கமாறு இடுகடு இவங்க பராமரிப்புல தான் இருக்கு.எரிக்கவுமிவனுக்குத் தெரியும்.என்ன என்ன வேணும்,எந்த எந்த சாமிமாருக்கு எப்படிச் செய்யணும்.. எல்லாம் தெரியும். பள்ளிகூடம்போனாலும் எழவு,கேதம்னு வந்தாசைகிளை எடுத்துக்கொண்டு எழவு சொல்லப்பொயிடுவான்.அப்படிப் போன இடத்துல தான் "ஏம்.ஏஸ்"சாரை பார்த்தான்.
அருப்புக்கோட்டைக்கு பக்கத்துலைருக்கிற கிராமத்துல தான் "எம்.எஸ்"சாரை பார்த்தான்.அவரு இவனை விசாரிச்சாரு.வீட்டுக்குள கூப்பிட்டாரு.போகாம பிடிவாதமா தெருவில நீன்னான்.சாரு வெளில வந்து அவன் தொளை அணைச்சு கூட்டிட்டு போனாரு.காப்பி குடுத்தாரு.நாற்காலியில் உட்கார்ந்து குடிக்கச்சொன்னாரு.திப்புவுக்கு பயமா இருந்தது.வெளில போனா அடிப்பாங்களோ! ...சாருஇருக்காரு.. என்று சமாதனம் செய்துகொண்டான்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரச்சொன்னாரு."மேல படி. குழிவெட்டப் போகாத.எழவு சொல்ல நீ போகவேண்டாம்..உங்கப்பாவ வரச்சொல்லு"ந்னு சார் சொன்னார் அப்பா ஐஞ்சாப்போட .நிறுத்த சொன்ன போது தான் சார் அவன் வீட்டுக்கு முத முத வந்தாரு திப்புவ கூட்டிக்கிட்டுபோய்பாளையங்கோட்டை.ஆஸ்டல்ல சேத்தாரு.
ஆறாப்பும் ஏழாப்பும் படிக்கும் போது திப்புவுக்கு மாட்டுக்கறியும், எச்சில் இலை லட்டு வடை நினைவு வரும்.கழுத்தை திருப்பி, உடம்பை ஒரு உலுக்கு உலுக்கி ..ஏன்? தெரியாத் ஒரு ஒக்களிப்பு வரும்.திப்பு பாத்தாவது ப்படிக்கும் போது அவன் அம்மாவும் அப்பாவும் விஷச்சா சாராயம் குடிச்சு செத்துட்டாங்க. அப்ப அவனுக்கு ஆறுதலாயிருந்தது "எம்.ஏஸ்."சாருதான்.
பிளஸ்-2 முடிச்சதும் பி.எஸ் சி ல சேத்தாரு.நுக்ளியர் பிஸிக்ஸ் சிறப்பு பாடம்.திப்பு எம்.எஸ்.சி ரிசல்ட் வந்த அன்னக்கி சாரை பார்க்கப்போனான். சார் திப்புவைக் கட்டிக் கொண்டு விம்மினார்...சார் மகன் பாசு அவனுக்குகைகுலுக்கி பாராட்டினான். சார்விட்டு அம்மா அவனுக்கு இனிப்பு ஊட்டினார்....சாரப் பார்த்தான்...காண் கலங்கியிருந்தது.
" பேராசிரியர் திப்புசாமி--நுக்ளியர் பிஸிசிஸ்ட் " அட்டையொடு டிரைவர் நிறக திப்புசாமியைவரவேற்க எம்.கே யுனிவெர்சிட்டியின் பி.ஆர்.ஓ அருகில் நின்றார்.அவ்ர்கள் டி.வி.எஸ் கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸை அடையும் போது மணி எழாகியது .பி.ஆர்.ஓ. அவருடைய நிகழ்ச்சியைப் பற்றி பெசினார்.காலை எட்டு முப்பதிலிருந்து ஒன்பது முப்பது வரை தனக்கு வேலையிருக்கிறது கூறிய திப்புசாமி குளித்து உடை மாற்றிகொண்டு காரில் ஏறினார்
"சார்! எந்தப்பக்கம்"
"டி.வி. எஸ் நகர் பக்கம்"
"சரி சார்"
காரிலிருந்து இறங்கிய திப்புசாமி எதிரில்வந்தவரிடம்கேட்டார்.
"ஐயா! எம்.எஸ் வீடு எது?"
"எஸ்! என்னகேட்டீங்க?
"எம்.எஸ்.வீட்டு எது?"
"யூ மீன் புரபசர் ... "
"யெஸ் "
"அதோ "
ஐந்தாறு வீடுகள் தாண்டி காட்டினார்
தூரத்தில் வேப்பமர நிழலில் காம்பவுண்டிற்குள் எம்.எஸ சார் ... திப்பு என்ற திப்புசாமியின் இதயம் தொண்டைக்குள் சென்று அடைக்க ...தூரத்தில் பேராசிரியர் எம்.எஸ் ... ...அந்த உருவம் மிக மெலிதாக மறைந்துவர...பனித்த கண்களை திப்புசாமி துடைத்துக் கொண்டார்...அது யார்...எம்.எஸ் தானா...நடக்க ஆரம்பித்தார்.
.
10 comments:
அருமையான கதை. சொன்ன விதமும் அழகு.
மாறி மாறி இறந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் பயணிக்கும் நடை.. நன்றாக இருந்தது!
அருமையான கதை.
நன்றி ஐயா.
சேதமில்லாமல் மூடி வைத்திருந்து காலையில் பிளாட்பாரதில் வரும்பிச்சைகார ..."ஏம்.ஏஸ்.!எம் எஸ்" வாய் முணுமுணுத்தது.//
அருமையான உணர்வை உணரவைத்த பகிர்வுக்கு பாரட்டுக்கள்.
அருமை குமார்,பந்து,ரத்னவேல், இராஜேஸ்வரி ஆகியோருக்கு நன்றி. திப்பு என்ற சிறுவனையும்,திப்புசாமி என்ற பேராசிரியரையும்,வேறுபடுத்தவும் ,இணைக்கவும் நிகழ் காலத்தையும், கடந்தகாலத்தையும் மாற்றி மாற்றி காட்டினேன். பந்து அவர்களே நுணுக்கமான உங்கள் ரசனை அருமை. திப்புவின்வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் வாசகனை சென்றடைய அதனை அதன் உணர்வுகளோடு சொல்ல விரும்பினேன். இராஜெஸ்வரிஅம்மையார் அதனை ரசித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் கதை மாந்தர்கள் இன்றும் உயிரோடு இருக்கிறார்கள். கதை எழுதி இருபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் "செம்மலர்"பத்திரிகையில் வந்தது.---காஸ்யபன்
காட்சிகள் கண்முன்னே படமாய் விரிகின்றன அய்யா. நெகிழ வைக்கும் கதை.
சில வேர்களை அறுக்க முடியாதவை என்று சொல்லும் கனமான கதை. பிரமாதம்.
ஆசிரியர் மாணவர் உறவு பற்றி எழுதுகையில் நல்ல ஆசிரியர்கள் பற்றியே எழுத்துக்கள் இருப்பதாக நான் உணர்கிறேன்.
இன்னும் சில ஆசிரியர் இருக்கிறார்கள் அவர்கள் அறிந்தும் அறியாமலும் பிள்ளைகளின் இதயத்தை காயப்படுதுகிறார்கள். அவர்களை பற்றியும் எழுத வேண்டும் என்று நான் நினைக்கிறன்
பதிவு உறவுகளின் அழகை வெளிப்படுத்துகிறது
அன்புள்ள ஐயா,
காலத்தை மாற்றி சொன்னதில் எனக்கு ஒரு ஆறுதல், எப்படியும் திப்பு என்ற சிறுவன் , பிற்காலத்தில் , ஐந்து நட்சத்திர வசதிகளோடு இருப்பான்(ர்) என்று. என் நம்பிக்கையும் எம் எஸ் சாரின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.
Post a Comment