Sunday, July 24, 2011

கெல்வின் பீட்டெர்சனும் இடஒதுக்கீடும்.....

கெல்வின் பீட்டர்சனும் இட ஒதுக்கீடும் .....

இங்கிலாந்துக்குப் போய் இந்தியா கிரிக்கெட் விளாயாடுகிறது.பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இரவும் பகலும் அதுபற்றிய செய்திகளை கொட்டி வருகின்றன.

கெல்வின் பீட்டர்சன் என்ற வீரர் இரட்டைசதம் அடித்தார் என்று . குதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிலந்து வீரரான கே.பி என்ற பீட்டர்சன் தென் ஆப்பிரிகாவின் வீரர். அங்கிருந்து கிளம்பி இங்கிலாந்து அங்கே குடியுரீமை பெற்று விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்கா ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்களின் நிற வேற்றுமை காரணமாக கருப்பர்களை அனுமதிப்பதில்லை .முற்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே ஆடுவார்கள். ஒருகட்டத்தில் நிறவேற்றுமை காரணமாகபுதிதாக விடுதலை பெற்ற நாடுகள் வெள்ளை ஆப்பிரிகாவுடன் விளையாடமறுத்தன .இதற்கு தலைமை தங்கிய நாடுகளில் முக்கியமான நாடு இந்தியாவாகும்.

பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு தென் ஆப்பிரிகாவில் நிலமை மாறியது.கருப்பின மக்கள் விளையாட்டுத்துறையில் முன்னுக்கு வந்தனர். சிறுபான்மையினரான வெள்ளையரையும் ஆதரிக்கும் வகையில் தென்னாப்பிரிக்க அரசு வெள்ளையர்களுக்கு என்று சில சலுகை களை அளித்தது. அவர்களுக்கு என்று சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. கிரிகெட்விலையாட்டில் குறைந்தபட்சம் நான்கு பேராவது வெள்ளையர்களிருக்க வேண்டும் என்றுஒரு விதியைக்கொண்டு வந்தது.

பீட்டர்சனின் தந்தை கருப்பர். தாயார்வெள்ளைக்காரி. மிகச்சிறந்த விலையாட்டு வீரரக இருந்தாலும் ஒதுக்கீடு முறையில் பீட்டர்சனுக்கு தென் ஆப்பிரிக்க அணியில் இடம் கிடக்கவில்லை. அதனால் அவர் இட ஒடுக்கீடு முறையை கடுமையாக எதிர்த்தார். அவருடைய தாயார் வெள்ளைகாரி என்பதால் அவருக்கு இங்கிலாந்தில் குடியுரிமை கிடத்தது. இப்போது இங்கிலாந்து அணியில் பீட்டர்சன் அணியில் விளையாடி வர்கிறார். அவரிட ஓதுக்கீட்டை கடுமையாக எதிர்ப்பவர்.

அறுபது ஆண்டுகளுக்கும்மேலாக இந்தியாவில் இட ஒதுக்கிடு இருக்கிறது. 130 கோடிப்பேரில் அரசு,மற்றும் வேலை வாய்ப்பில் தலித்துகள் எத்துணை சதம் வந்திருப்பார்கள். இன்று சுமார் 34 கோடி தலித்துகள் இருப்பதாக சொல்கிறார்கள் ஒரு கோடி பேருக்கு கூட வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதா என்றால் இல்லை. இங்கும் இட ஒதுக்கீடை எதிர்க்கும் சக்திகள் கத்துகின்றAன. அவர்களுக்கு தலைமை இங்கும் அரசியல் சக்திகளிருக்கின்றன்.

பீட்டர்சனை அழைத்து அவர் தலமையில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடத்தினாலும் நடத்துவார்கள். நம்ம ஊர் கிரிக்கெட் ரசிகர்களும் கூட்டமாய்ச்செல்வார்கள்.

10 comments:

அப்பாதுரை said...

இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா, தேவை என்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா?

kashyapan said...

அப்பதுரை அவர்களே! இட ஒதுக்கீடு கண்டிப்பாக தேவை.தீண்டாமை ஒழிந்துவிட்டது
என்று சினிமாக் கொட்டகையில் " ஸ்லைடு"போட்டு
மகிழ்ந்து கொள்ளலாம்.உண்மையில் அது இருக்கத்தான் செய்கிறது.---காஸ்யபன்.

அப்பாதுரை said...

இட ஒதுக்கீட்டின் காரணம் வாய்ப்பைப் பயன் படுத்துக்கொள்ளும் சாத்தியமற்ற தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவுவது என்றால் இட ஒதுக்கீட்டின் அலகினை மாற்ற வேண்டும். வறுமைக்கோடு என்கிறார்களே - அதை அடிப்படையாக வைத்து வழங்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தற்காலிக, தொலைநோக்கற்ற, பிற்போக்கான தீர்வு என்று நினைக்கிறேன்

தமிழ்நாடு போன்ற இடங்களில் நன்கு படிக்கக்கூடிய so called forward community ஏழைப் பிள்ளைகள், இட ஒதுக்கீடு காரணமாக படிக்க முடியாமல் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே!மீண்டும் மீண்டும் இது விவாதிப்படுகிறது . ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பாரபட்சமாக நடத்தப்பட்ட்வன் discrimination is rectified by a ducriminaative justice.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணய்யரும், ஜீவன்ரெட்டியும் தீர்ப்பளித்துள்ளார்கள்.பார பட் சமாக நடத்தப்பட்ட பாமரனுக்கும், தீண்டாமையை அனுபவிக்கும் மனிதனுக்கும் ஏற்படும் வேதனையை புரிந்து கொள்ள அவன் செருப்பை அணிந்து கொள்ள வேண்டும்.---காஸ்யபன்

அழகிய நாட்கள் said...

//பாரபட்சமாக நடத்தப்பட்ட பாமரனுக்கும், தீண்டாமையை அனுபவிக்கும் மனிதனுக்கும் ஏற்படும் வேதனையை புரிந்து கொள்ள அவன் செருப்பை அணிந்து கொள்ள வேண்டும்// தீண்டாமையினால் அழுந்துபவன் செய்கின்ற செருப்பை மற்றவர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து தொக்கி நிற்கிறது. பாட்டாவில் பிராமணர்களும்தான் வேலை செய்கிறார்கள். காலத்தின் கோலம் இவனுக்கு வாய்ப்பு இல்லை அங்கே. நிற்க...விருது நகரில் பி எஸ் என் எல் நிறுவனத்தில் வேலை பார்க்கிற அதிகாரிகள் சுமார் 200 பேரில் ஒரு அருந்ததியர் மட்டும்தான் இருக்கிறார். இதில் 3% உள் ஒதுக்கீடு என்ற பட்டுக்குஞ்சம் வேறு...
என்றென்றும்,
திலிப் நாராயணன்.

kashyapan said...

திலீப் நராயணன் அவர்களே ! to understnd his pain you must were his shoe
என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் .அதனை தமிழ்ப்படுத்த முற்பட்டேன் .அவ்வளவு தான்.---காஸ்யபன்

அப்பாதுரை said...

நிலமை புரிகிறது. இட ஒதுக்கீடு என்பது உலகெங்கும் இருக்கிறது. இட ஒதுக்கீடு இருந்தும் அதனால் பயனில்லை போலிருக்கிறதே என்பதே என் கேள்வி.

இட ஒதுக்கீட்டினால் ஒடுக்கப்பட்டவ்ர்களுக்குள் முழுமையான பரந்த வளர்ச்சி ஏற்பட்டதற்கு ஆதாரம் இல்லை. இட ஒதுக்கீடு போன்றவை ஆதாயம் தொட்ட அரசியல் சாதனங்கள்.

சொந்த மண்ணிலிருந்து அத்தனையும் இழந்து ஐநூறு வருடங்களாகத் தெருவில் நிற்கும் அமெரிக்கக் குடியினர் (native american) இன்றைக்கும் - இத்தனை இட ஒதுக்கீட்டின் இடையிலும் - மிகவும் சிரமத்துடன் தங்களை சமூகத்தில் இணைத்துக் கொள்ள முடியாமல் துன்பப் படுகிறார்கள். இணைத்துக் கொள்ள முற்படவில்லையா, இணைத்துக் கொள்ள முடியவில்லையா? native american என்றாலே சமூகத்தின் அடித்தட்டு என்ற எண்ணமே முதலில் உதிக்கிறது. இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் அவர்களே. இருந்தாலும் அவர்களுக்கு வாழ்வில் பிடிப்பே இல்லாது போய்விட்டது. இடஒதுக்கீடு இன்னும் மோசமாக்கி விட்டது அவர்கள் நிலமையை என்று இன்றைக்கு சமூகவியல் சோதனைகளும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

இட ஒதுக்கீட்டினால் எதிர்பார்த்த இடத்தில் எதிர்பார்த்த அளவுக்கு நன்மை இல்லை, எதிர்பாராத இடத்தில் எதிர்பாரத அளவுக்குத் தீமை உண்டு.

இட ஒதுக்கீடு இருந்தும் சமூகத்தில் அது சேர வேண்டிய இடத்தில் ஏன் சேரவில்லை என்று பார்க்கிறோமா தெரியவில்லை. உதாரணத்துக்குச் சொல்கிறேன்.. நிறைய நரிக்குறவர்கள் இன்றைக்கு கலெக்டர்களாக இல்லை என்பதற்காக இடஒதுக்கீட்டைப் போட்டு இடித்துக் கொண்டிருக்கிறோம். அந்தச் சமூகத்தின் பிஞ்சுகளை வலுக்கட்டாயமாகப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைக்க முயற்சி செய்வதில்லை.

தமிழ் நாட்டில் ஓரளவுக்கு இட ஒதுக்கீடு எதிர்பார்த்த இடங்களில் ஓரளவுக்கு முன்னேற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. எதிர்பாராத இடங்களில் சிக்கல்களைத் தோற்றுவித்தாலும். என் கருத்து முரணாக இருக்கலாம். சிறுவயதில் என் நண்பர் குழாமும், நான் வளர்ந்த ஊரில் ஒரு சேரிப் பிரதேசம் முழுதும் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள் - அதைவிட முக்கியம் அவர்களுடைய சந்ததிகள் தன்முனைப்போடு கசடற்ற சிந்தனைகளுடன் செயல்படுகிறார்கள். இடஒதுக்கீடு இவர்களுக்கு உதவி செய்திருக்கிறது என்பது உண்மையே என்றாலும் இடஒதுக்கீடு என்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள இவர்களுள் சிலர் வழிகாட்டியாகவும் ஒளிவிளக்காவும் இருந்தனர். அரசியல்வாதிகள் மற்றும் சமூகப்புலம்பிகளிடமிருந்து தங்கள் வட்டங்களைக் காத்து மீட்டனர்.

நூற்றுக்கணக்கான வருடங்களாக ஒடுக்கப்பட்டு வந்ததால் அதன் பாதிப்பு நம் மரபணுக்களில் கலந்து, முனைப்புடன் செயல்படுவதையே பாதிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இன்றைக்கு நிறைய உள்ளன. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட இனங்களின் நிலையை தீவிரமாகக் கவனித்து முன்னேற்றப் பாதையில் தொடர்ந்துச் செலுத்த வேண்டியது நம் கடமை. அதே நேரம் இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்கள் போலியானவை, தற்காலிகமானவை என்பதை உணரவேண்டும் - ஒரு பக்கம் வளர்ந்தால் இன்னொரு பக்கம் தேயும் அபாயம் உண்டு என்பதையும் உணரவேண்டும் என்று நினைக்கிறேன்.

இட ஒதுக்கீடு போன்ற 'நோய் முதல் நாடாத குணங்கள்' காலத்தால் துருப்பிடித்து அழிவன. சட்டம் போட்டு செயலாவது அல்ல சமூக முன்னேற்றம் என்று நினைக்கிறேன். சமூகப் புரட்சி சலுகையினால் வராது. வண்ணக்கொடிகளால் வராது.

நல்லெண்ணப் பதிவு. எத்தனை பேர் சிந்திப்போம், செயல்படுவோம் என்பது ?.

இராஜராஜேஸ்வரி said...

பீட்டர்சனை அழைத்து அவர் தலமையில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடத்தினாலும் நடத்துவார்கள். நம்ம ஊர் கிரிக்கெட் ரசிகர்களும் கூட்டமாய்ச்செல்வார்கள்.//

காயப்படுத்திவிட்டு மருந்து தடவுவது போல..

இராஜராஜேஸ்வரி said...

அடிமைப் படுத்திவிட்டு இடஒதுக்கீடு, விவாதம்.

அழகிய நாட்கள் said...

சுதந்திரம் அடைந்தது முதல் இன்றைய நாள் வரையில் 200 பேரில் ஒருவர் கூட இட ஒதுக்கீட்டில் டெல்லி செக்ரிடேரியேட்டில் இடம் பெறவில்லை.சென்னை ஐ ஐ டியில் 400 பேரில் ஒருவரோ அல்லது இருவரோதான் தலித்துகள். மனுவின் ஆட்சி கடுமையாகக்கோலோச்சிக்கொண்டிருக்கும் நாடு இது இன்றைக்கும் கூட.