சசி குமார் என்ற ஊடகவியலாளர்...
சமீபத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த போது ஊடகம் பற்றிய கருத்தரங்கிற்குச்சென்றிருந்தேன்.சசிகுமார் அவர்கள். கருத்துரை ஆற்றினார்கள்.ஊடகத்திற்கு விடுதலை - ஊடகத்திலிருந்து விடுதலை என்று எடுத்துரைத்தார்கள்.அவர் ஆற்றிய உரை பற்றியது அல்ல என் பதிவு.
சசிகுமார் எண்பதுகளின் கடைசியில் தூர்தர்ஷனில் செய்திவாசிப்பார்.அவர்வாசிக்கிறார் என்றால் எந்தபணியாக இருந்தாலும் நிறுத்திவிட்டு செய்தி கேட்கப் போய்விடுவேன்.உச்சரிப்பு,கைதேர்ந்த கவிஞனின் கவிதையை ஒத்திருக்கும். சென்னையில் ஒரு மூறை லட்சுமிபுரம் இளைஞனர்சங்கத்தில் சி.பி.ராமசாமி அய்யர்பேசுவதை கேட்டிருக்கிறேன். அதன் பிறகு சசிகுமார் தான் என் நினைவுக்கு வருவார்.செய்தி வாசிக்கும்போது, காலப்பிரமாணத்தை அவர் பயன்படுத்துவத்துவது அற்புதமாக இருக்கும் .
நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது "காலமும் குறியீடுகளும்" என்ற பாடம் இருந்தது .அவன் வருகிறான் (.) வந்தவன் ரயிலை பார்க்கிறான்.(.)ஒரு வாக்கியத்திற்கு மற்றொரு வாக்கியத்திற்கும் இடையில் முற்றுப்புள்ளி போடுகிறோம். ஒருவாக்கியம்முடிந்து அடுத்த வாக்கியம் ஆரம்பிக்க எவ்வளவு இடைவெளி வேண்டும் . முற்றுப்புள்ளி என்றால் நான்கு மாத்திரை. கோலன் என்றால் மூன்று மாத்திரை. செமிகோலன் என்றால் இரண்டு மாத்திரை.கமா என்றால் ஒரு மாத்திரை. ஒரு மாத்திரை என்பது கண் சிமிட்டும் நேரம் .எங்களை வாசிக்கச்சொல்லி வாத்தியார்கள் பயிற்சி அளிப்பார்கள். சசிகுமார் செய்தி வாசிக்கும் போது இதனை அனுபவிப்பேன்.
அவசர நிலை முடிந்ததும் சென்னை ஜெர்மனி தூதரகத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. sex,censor, cinema என்பது தலைப்பு .பொன். பரமகுரு நடுவராக இருந்தார்.திரைப் பத்திரியாளர்கள் ரண்டார் கை ,என்று எழுத்தாளர்கள் மனித உரிமையாளர்கள், என்று கருத்துரையாளர்கள் வந்திருந்தனர்.ஊடகங்களுக்கு தணிக்கையிலிருந்து விடுதலை என்ற கருத்து முன்னின்றது.பார்வையாளர்களில் சிலர் அனுமதிக்கப்பட்டனர். எனக்கும் அனுமதி கிடைத்தது."பத்திரிகயாளர்கள் அரசு,அதிகாரரிகள் ,காவல்துறை ,என்று விமரிசிக்கும் பொருப்புள்ளவர்கள்.அவசர நிலைக்காலத்தில் பல பத்திரிகை ஆசிரியர்கள் போக்குவரத்து காவலர் காலில் விழுந்த கதை.எனக்குத்தெரியும். சுதந்திரம் எதற்கக? யார் நலனுக்காக " என்று கூறி முடித்தேன். அரங்கத்தின் மூலையிலிருந்து மிகவும் பலகீனமான கர ஒலி வந்தது. மதிய உண்வு இடைவேளையின் போது என்னை கை குலுக்கி பாராட்டினார். ஒல்லியான நீண்ட முகத்தில் கருத்த தாடியோடு இருந்த சசிகுமார்.
சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு டெல்லியில் அவர்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது .நான்கு நாள் விழா .சப்தர் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.நெஞ்சை உருக்கும் அதனைதயாரித்தவர் சசிகுமார்.
இந்திரா அம்மையார் கொலைசெய்யப்பட்டபொது சீக்கியர்களுக்கு எதிரன வன்முறை ஏவிவிடப்பட்டது.இதனை சித்தரிக்கும்படம் வந்தது சீமா பிஸ்வாஸ் நடித்த இந்தப்படத்தில் வன்முறையாளர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும்.படத்தில் வன்முறையை காட்டமலேயே சசிகுமார் இயக்கி இருப்பார்.
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கான கல்லூரி ஒன்றை நடத்திவரும் சசிகுமாருக்கு வாழ்த்துக்கள்.
18 comments:
நல்ல பயனுள்ள தகவல்கள்.
நன்றி ஐயா.
எனக்கும் மிகவும் பிடித்த ஊடக ஆளுமை சசிகுமார்.அவரை சமீபத்தில் ஆசியாநெட் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னையில் சந்தித்தபோது தூர்தர்ஷன் நாட்களைப் பற்றிய அசைபோடலுடன் துவங்கி முடிந்தது.
அருமையான நினைவுகூறல் காச்யபன் ஐயா.நலமாக இருக்கிறீர்களா?
சுந்தர் ஜி அவர்களே! இரண்டுமாதம் தமிழ் நாட்டில் சுற்றினேன் . வந்ததும் மருத்துவமனையில் 10 நா தவம். இப்போது வீடு வந்துவிட்டேன்.இந்தப் பதிவை சசிகுமார் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியுமா என்று பாருங்கள். அவருடைய மின் அஞ்சல் முகவரி கிடைத்தால் தெரிவியுங்கள்...காஸ்யபன்
சசிகுமார் யாரென்று தெரியாது.
உங்கள் பயணம் நன்றாக முடிந்தமையில் மகிழ்ச்சி. உடல்நலம் சிறக்க வாழ்த்துக்கள்.
அப்பதுரை அவர்களே! உங்களைப் போன்ற வெளிநாட்டு அன்பர்களை மனதில் கோள்ளாமல் எழுதி விட்டேன்.80ம் ஆண்டுகளில் தூர்தர்ஷனில் ஆங்கிலத்தில் செய்தி வாசிப்பாளராக சசிகுமார் பணியாற்றினார். பின்னர் மேற்கு ஆசியாவின் செய்தியாளராக " இந்து" பத்திரிகையில் பணியாற்றினர்."ஏசியானெட் " தொலைக்காட்சியை உருவாக்கினார். தற்போது ஏசியன் ஸ்கூல் ஆப் ஜெர்னலிசம் என்ற கல்லுரியை சென்னையில் நடத்தி வருகிறார். சில்வர் டங்கிடு சினிவாச சாஸ்த்ரி யின் ஆங்கிலப் புலமை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் நேரடி அனுபவமில்லை. சர் சி.பி ராமசாமி அய்யரின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டிருக்கிறேன்.சசி குமார் அவர்களுக்கு ஈடான ஆங்கிலப் புலமை உள்ளவர். இடதுசாரியும் கூட ---காஸ்யபன்
சசிகுமார் பற்றிய சில முன்னோட்டங்களுடன் குறிப்பிட்டிருக்கலாம். சசிகுமாரை அனைவருக்கும் தெரியும் என்கிற பாணியில் கட்டுரையின் எழுத்துத் தொனி அமைந்துள்ளது. சசிகுமார் பற்றிய கூடுதல் விவரங்களை அளிக்கிற நல்ல அறிமுகம். சசிகுமாரின் கருத்தியலையும் வெளிப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
அவர் செய்தி வாசித்தது எல்லோருக்குமே பிடித்திருக்கும். அவ்வளவு அருமையாய் வாசிப்பார்.
சசிகுமாரைப் பார்த்திராதவர்களுக்காய் இந்த இணைப்பு.இதையும் விட சிறப்பாய் வேறேதும் இணைப்புக் கிடைக்கிறதா பார்க்கிறேன்.
http://www.youtube.com/watch?v=r_MUAYEI2fE
அறியாத தகவல்கள் , பகிர்வுக்கு நன்றி .
\\இடதுசாரியும் கூட///
விஷயமே இங்கு தான் இருக்கிறது.
அன்புள்ள சிவகுமரன் அவர்களே! உங்களால் கம்யூனிஸ்டுகளை வெறுக்க முடியாது.என்னச்சீண்ட எதை எழுதினாலும் சம்மதமே ---காஸ்யபன்
வணக்கம் தோழரே!,எப்படி இருக்கிறீர்கள் உங்கள் (பதிவுகளை)பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. தமுஎச மாநாட்டிற்குப் பிறகு இப்போது தான் எழுதிகிறீர்கள்.
சசிகுமார் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை வாசித்தேன். ஊடகத்தைப் பற்றி நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயம் மக்கள் ஒரு நாள் ஒந்தெ செட் டாப் பாக்ஸை தூக்கி வீசுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நல்ல பயனுள்ள தகவல்கள்.
நன்றி ஐயா.
சசிகுமார் பற்றிய நல்ல அரிய பதிவு...இதை இன்னும் சற்று விஷயங்கள் சேர்த்து நீங்கள் ஒரு முழு கட்டுரையாக்கம் செய்யலாம் என்பது எனது அன்பான கருத்து. வாழ்த்துக்கள். அவரது புகைப்படங்கள் கொள்ளை கொள்ளையாக கூகிள் சர்ச்சில் கிடைக்கும். எடுத்துப் போடுங்கள்.
சசிகுமார் உச்சரிப்பு ஒரு கிதாரின் கிர் கிர் கணீர் வாசிப்பு போலக் கேட்கும்...
எழுத்துக்களை எழுதும் போது தான் ஒவ்வொரு வரியும் தொடங்கி ஓடிச் சென்று அடுத்த முனையில் தலை மோதிக் கீழிறங்கி மீண்டும் தொடர் ஓடி மூச்சு வாங்கி முற்றுப் புள்ளியில் முடியும் கதை. பேசும் போது அப்படி ஒரு கவனத்தோடு எதிரே இருப்போர் தங்களது குடத்தில் வாங்கிச் சிந்தாமல் சிதறாமல் நிறைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பக்குவத்தில் அவர் உரை ஆற்றும் அழகே அழகு..
விஜயசங்கர் அவர்களின் நூல் வெளியீட்டில் அவர் ஆற்றிய உரை மார்க்சிய தத்துவ ஒளியில் ஆழமான அரசியல் உட்கருத்தொடும், தெளிவான பார்வையோடும் பளிச்சென்று இருந்தது...
ஊடகவியல், பத்திரிகைத் துறை குறித்த கல்வியை அவரது நிறுவனம் மூலம் கற்பித்துக் கொண்டிருப்பதும், அவ்வப்பொழுது சிறந்த சிந்தனையாளர்களை அங்கு அழைத்து மாணவர்களோடு உரையாட வைப்பதும் மெச்சத் தகுந்த விஷயம்...
உங்களது வலைப்பூ கட்டுரையை விஜயசங்கர் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவரது மூலம் சசி அவர்களைச் சென்றடையச் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்...
எஸ் வி வேணுகோபாலன்
நன்றி சுந்தர்ஜி. இவர் செய்தி வாசிக்கக் கேட்டிருக்கிறேன். சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
கண்டிப்பாய் முடியாது அய்யா. இரத்தத்தில் இருந்து தொலைக்கிறதே.
இந்தத் தலைப்பைப் பார்த்தே உள்ளே வந்தேன். தூர்தர்ஷன் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த/ ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலத்து அனைவருக்கும் அல்லது நடுத்தற வயதினர் அனைவரும் அவரை அறிவர்.
நல்ல முகத்தோற்றமும் குரல் வளமும். இன்னும் கண்களில் நிற்கிறார்.பிற செய்திகள் அறியாதவை. பகிர்வுக்கு நன்றி.
Thank you ayya for the lucid depiction of Sasikumar. inspiring narration
Post a Comment