Monday, December 05, 2011

சங்கீதாவின் கணவர்.....

சங்கீதாவின் கணவர்.....

என் துணைவியாருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருக்கும் அம்மையார்தான் சங்கீதா.அவருடைய கணவர் தினம் காலையில் எழுந்ததும் 1000 ரூ கடன் வாங்குவார், அதற்கு காய்கறி வாங்கி தள்ளூவண்டியில் வைத்து தெருதெருவாகச்சென்று விற்பார்.இரவு 7மணிக்கு கடனை வட்டியோடு திருப்பிக் கொடுப்பார். ராக்கெட்வட்டி என்றோ மீட்டர் வட்டி என்றோ அந்த அம்மையார் சொல்வார்கள்

இவர்களுக்குப் பதிலாகத்தான் "வால்மார்ட்" வரப் போகிறது. மிகப் பிரும்மாண்டமான அமெரிக்கக் கம்பெனி.அதனுடைய விற்று வரவு 18 லட்சத்து 95 ஆயிரம் கோடிரூபாய். சங்கீதாவின் கணவர் இந்த கம்பேனியோடு போட்டியிடவேண்டும். டிஸம்பர் மாதம் 1ம் தேதி சங்கீதாவின் கணவர் வியாபாரம் செய்யவில்லை. கெட்டதற்கு சங்கீதா
"ஹர்த்தால் ஐயா!

" எதற்காகத்தெரியுமா?

" தெரியாது.என்னமோ எங்க பொழப்புல மண்ணை பொடுதாங்கனு எங்காஆளு சொல்லிச்சு"

நான் விவரத்தச்சொன்னேன் .

"ஐயா இது சர்க்காருக்கு தெரியாதா?"

"நல்லாதெரியுமே"

"தெரிஞ்சும் ஏன் செய்தான் செத்த பயலுக"

நான் பதில் சொல்லவில்லை .

"அடுத்த தடவை இவனுகளுக்கு ஒட்டு போடக்கூடாது "

"வாரவன் மட்டும் யொக்கியமா?"
சங்கீதா மவுனமானாள். திடீரென்று அவள் முகத்தில் பிரகாசம்."நீங்க நில்லுங்களேன் ஐயா! நாங்க எல்லாம் செர்ந்து ஓட்டு பொடுதோம்".
தனக்கு தெரிந்தவர்,நெருக்கமனவர் தெர்தலில் வருவது சங்கீதாவுக்குப் பிடித்திருந்த்தது என்பதை அவருடைய முகம் ஜொலித்ததில் புரிந்த்தது.நான் பதில் சொல்லவில்லை.மையமாக தலையை ஆட்டிவத்தேன்.

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

"அடுத்த தடவை இவனுகளுக்கு ஒட்டு போடக்கூடாது "

"வாரவன் மட்டும் யொக்கியமா?"

மையமாக தலையை ஆட்டி வைக்கவேண்டிய கனமான விடை தெரியாத கேள்விகள்...

சிவகுமாரன் said...

\\\"நீங்க நில்லுங்களேன் ஐயா! நாங்க எல்லாம் செர்ந்து ஓட்டு பொடுதோம்".///


அய்யா நிப்பாரு, யாரு கூட கூட்டணி வக்கிறதுங்கிரதுல தான் பிரச்சினை .

kashyapan said...

சிவகுமரன் அவர்களே ! கற்பனையில் கூட அனுபவிக்க விட மாட்டீர்களா? கொஞ்சம் கொழுப்பு அதிகம் தான்!...காஸ்யபன்

அப்பாதுரை said...

:)

Gurumurthy said...

I have just now read with interest all your posts (5 posts of Dec 2011). Short writings (and focused & sharp too) always create interest in the reader. I liked them.
- J.Gurumurthy