Thursday, December 08, 2011

வாய் கொழுப்பு....

வாய் கொழுப்பு....

சோழவந்தான் முல்லிபள்ளம் தெரு சுப்பிரமணியம் சாமியின் வாய்க்கோழுப்பு உலகமறிந்த ஒன்று.1965ம் ஆண்டு அமெரிக்கபல்கலையான புகழ் பெற்ற ஹார்வர்டு பலகலைகழகத்தில் முனவர் பட்டம் பேற்றார். அதே பல்கலையில் பெராசிரியராகப் பணியாற்றினார்.

இந்தியா வந்த பிறகும் அந்த பல்கலையின் கோடை கால பள்ளியில் பெராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.இவ்வளவு இருந்தும் "இந்துத்துவா " மோகம் அவரை ஆட்டுவிக்கும் .சமீபத்தில் ஒரு பதிப்பகத்தின் இதழ் ஒன்றில் அவர் எழுதியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"இந்த்தியாவில் உள்ள மசூதிகளை யெல்லம் இடித்து விட வேண்டும். தங்கள் முன்னோர்கள் இந்துக்கள்தான் என்று ஏற்றுக்கொள்ளும் முஸ்லீம்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார். நம்மூரில் உள்துறை iஅமைச்சர் ப .சிதம்பரம் வாயில் கட்டை விரலை வைத்துக்கொண்டு இருந்தார். கூகிள்,யாகு,ஃபேஸ் புக் மீது பாய்ந்துவிழும் கபில் சிபல் மூச்சு விடவில்லை.

ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மதக்கல்வித்துறை பேராசிரியர் தியானா என்ற அம்மையார் இதன கடுமையாக சாடினார். இப்படிப்பட்ட ஒரு மத குரோத உணர்வு கொண்ட ஒருவர் நமது பல்கலையில் ஆசிரியராக இருப்பது கேவலமானது. அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கமிட்டியில் தீர்மானம் கொண்டுவந்தார். பெரும்பான்மையினர் ஆதரிக்க நிறை வேறியுள்ளது. "சாமியின் கூற்று பொதுவானதல்ல.தேவையற்றதும் கூட" என்று தியானா அம்மையார் கூறியுள்ளார்.

"இது யூத அமெரிக்கர்களும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஆங்கிலோ சாக்ஸன் ப்ராடெஸ்டெண்ட் சர்ச்தான் எங்கள் முன்னோர்கள் என்று சொன்னால் தான் வாக்குப் போட அனுமதிக்க முடியும்" என்பது போல் உள்ளது என்று ஹார்வர்டு பல்கலையின் வரலாற்றுப் பேராசிரியர் சுகதா போஸ் கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சாமியின் வாய்க்கொழுப்பு அவர் வேலையை நேற்று பறித்து விட்டது.

10 comments:

S.Raman, Vellore said...

It is a Very Good Thing. He is also a face of Sangh Pariwar with a Different Party's Name

hariharan said...

நல்ல தகவல் தோழரே!, ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட விசயம் இது தானா? ஒன் மேன் கட்சித்தலைவருக்கு ஏன் இத்தனை பெரிய பாதுகாப்பு இந்தியரசு கொடுக்கிறது? அவரை சிலர் ஹீரோ என்கிறார்கள் ஏனென்றால் அவர் ஊழல்வாதிகளுக்கு எதிராக வழக்கு பொடுகிறாராம், அப்படின்னா ஏன் பிஜேபி காரங்க மேல போடலன்னு கேட்டா, அது வேறொரு ஆளு அதுகு கேசு பொடனும்னு பேசுறாங்க.

சுப்ரமணிய சுவாமி ஒருவாட்டி சொன்னாரு, ராஜிவ் கொலையில் என்னை இந்திய அரசு விசாரிக்க தவறிவிட்டது, இதற்கு நான் பொறுப்பல்ல். ஆனால் இந்திய அரசின் உயர்பதவியில் வகிக்கிற சங்கராச்சியர் ரெக்கம்ண்டேசனில் போன அதிகாரிகள் குறிப்பாக பார்ப்பன அதிகாரிகள் சுவாமிக்கு தகவல் கொடுத்து உதவுகிறார்கள்.

சிவகுமாரன் said...

வாய்க்கொழுப்பு என்றதும் என்னைத்தான் சொல்கிறீர்களோ என ஒரு கணம் பயந்தே போய்விட்டேன்.(ஆசை ஆசை -.. காஷ்யபன் அய்யா பதிவில எழுதுற அளவுக்கு பெரிய ஆளா நீ ?)

சு.சாமி ஒரு அரசியல் கோமாளி. அவரையும் நம்பி ஒரு அதிகாரி பின்னால் போனார் பாருங்கள். அதிகம் படித்தால் அறிவு மழுங்கி விடுமோ என எனக்குத் தோன்றியது.
சு.சாமி மாதிரி காங்கிரசில் ஒரு கோமாளி இருக்கிறார். என் மாமனார் ஊர் மயிலாடுதுறையில்.

அப்பாதுரை said...

ஹிஹ்ஹிஹ்ஹி.. சட்னு நானும் அப்படித் தான் நினைச்சேன் சிவகுமாரன்..
சுப்ரமண்ய சுவாமி என்ன கட்சி?

kashyapan said...

சிவகுமரன் அவர்களே ! மயிலாடுதுறை ஆள் "மணி"யனவர். ஆரம்பத்தில் நன்றகவே இருந்தார். இந்த காங்கிரஸ் நண்டுகள் அவர்காலைப் பிடித்து இழுத்துவிட்டான.பாவம்---காஸ்யபன்.

அப்பாதுரை said...

இப்பொழுது தான் இவரைப் பற்றி அறிந்து கொண்டேன்.. இவருடைய சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. கிறுக்குத்தனங்களும்.

இந்து வெறியர் போலத் தோன்றும் இவரைப் பற்றிய விகிபீடியாக் கடைசி வரி: His brother-in-law is Jewish, his son-in-law Muslim, his sister-in-law Christian, and his wife Parsi.

அப்பாதுரை said...

சுப்ரமணிய சுவாமியின் தனிப்பட்டக் கருத்துக்களின் அடிப்படையில் இவருடைய வகுப்புகளை ரத்து செய்தது மடத்தனம். ஹார்வர்டு வம்பில் மாட்டிக் கொள்ளப் போகிறது என்றே நினைக்கிறேன். ஒரு பேராசிரியரின் வகுப்பை ரத்து செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அதுவும் கோடைகால வகுப்புகள். மாணவர்கள் அதிகம் இல்லாவிட்டால் கல்லூரிக்குத் தான் செலவு. மாணவர்கள் அதிகமிருந்தால் ஹார்வர்டு நிச்சயம் ரத்து செய்திருக்காது - பணவரவை ஒதுக்கும் பார்வை எவருக்குமே இல்லை.

suvanappiriyan said...

அரசியல் கோமாளியைப் பற்றின உண்மைகளை வெளிக் கொணர்ந்ததற்கு நன்றி! இவரை கோமாளி என்று சொல்வதை விட விஷம் என்பதுதான் பொருந்தும்.

மோகன்ஜி said...

சு.சுவாமியின் சொந்தக் கருத்துக்களை மட்டும் காரணமாய்க் கொண்டு பல்கலைக்கழகம்அவர் வகுப்புகளை ரத்து செய்திருக்குமா என்றே எனக்கும் தோன்றுகிறது.? நமது ஆங்கில சேனல்களுக்கும் தீனி வேண்டாமா?

Gurumurthy said...

I have just now read with interest all your posts (5 posts of Dec 2011). Short writings (and focused & sharp too) always create interest in the reader. I liked them.
- J.Gurumurthy