Saturday, December 10, 2011

நல்லவரா...? கெட்டவரா...?

நல்லவரா? கெட்டவரா?.........

இந்தியாவில் அவசரநிலைக்காலம் முடிந்து ஜானதா ஆட்சிஏற்பட்டது. இந்திய -சின எல்லைத்தாவாவை தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட பல யோசனைகள்கூறப்பட்டன .பாதுகாப்புத்துறையில் ஆலோசகராக கே.சுப்பிரமணியம் என்பவர் இருந்தார். இந்திய அரசோடு ஒரு உடன் படு கொள்ள இது தான் சரியான நேரம் என்று அவர் சீனாவிடம் கூறினார்.

"காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தால் எந்த ஒப்பந்ததைப் போட்டாலும்எதிர்க்கட்சி வலது சாரிகள் எதிர்க்கவே செய்வார்கள் . இப்போது அவர்கள் அதிகமாக உள்ள ஜனதா ஆட்சியில் ஒப்பந்தம் போடுவது சரியாக இருக்கும்.சீனா ஒரு கம்யூ நிஸ்ட் நாடு என்பதால் இதனைசொல்கிறேன் "என்று ஒரு விசித்திரமான காரணத்தையும் அவர் கூறினார்.

இந்தக் கருத்தை சுப்பிரமணியம் சாமியும் ஏற்றுக் கொண்டிருந்தார்.சுப்பிரமணியம் சாமிக்கு "மாண்டரின் சீனமொழி " எழுதவும் பேசவும் தெரியும் .அவர் சீனநாட்டுக்குச்சென்றார்.அங்கு சென்று மக்கள் சீன குடியரசுத்தலைவர் டெங்க் ஷியோ பிங்க் அவர்களைச்சந்தித்தார்." இந்திய அரசாங்கத்தோடு எல்லை பிரச்சினை பற்றி ஒரு தீர்வு ஏற்பட இது ஒரு நல்ல தருணம்.அரசாங்கத்தில் பழய ஜனசங்கத்தினர் அதிகம் உள்ளனர். அவர்கள் இந்துத்துவ வாதிகள்.அவர்களை சரிசெய்ய ஒரு நல்லெண்ண நடவடிகை எடுங்கள்". என்று கேட்டுக்கொண்டார்.

"இந்துக்களுக்கு மிகவும் புனிதமானது "கைலாச யாத்திரையும் ,மானசரோவர் ஏரியில் நீராடுவதும்.1962 தாவாவுக்குப் பிறகு இந்த யாத்திரை செல்வது தடைபெற்றுள்ளது..இதனை மீண்டும் அனுமதிப்பதின் மூலம் சீனா தன் நல்லெண்ணத்தை வெளிபடுத்த வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக சுப்பிரமணியம் சாமியின் தலைமையில் "கைலாச" யாத்திரை மீண்டும் துவங்கியது.

பாதரசம் வெப்பத்தைத் தாங்காது.மிகக் குறந்த வெப்பமானாலும் அது சுருங்கி விரியும் .அதனால் தான் அதனை " உஷ்ணமானி" யாக பயன்படுத்துகிறார்கள்.சுப்பிரமனியம் சாமியும் அதே போன்று எப்போது என்ன சொல்வார் செய்வார் என்பதை சொல்லமுடியாது.வாஜ்பாய் பற்றி "அவர் குடிகாரர், சபல புத்திக்காரர்" என்று குற்றம் சாட்டியதும் அதனால் ஜனதா கட்சியில் ஏற்பட்ட விளைவுகளூம் வரலாறாகும்.

"ராமர் பாலம் " இருந்தது . இலங்கைக்கு நடந்தே இப்போதும் போகலாம் "என்று கூறி தனுஷ்கோடியிலிருந்து தன் துணைவியாரோடு நடக்க முயன்று தோல்வியச்சந்தித்தவர்.

இந்திராகாந்தி அம்மையார், வாஜ்பாய், கருணாநிதி ,ஜெயலலிதா என்று அத்துணைபேரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர்.

சுப்பிரமணியம் சாமி மதுரை அருகில் உள்ள சோழவந்தானை பூர்வீகமாகக் கொண்டவர்.மயிலாப்பூரில் பிறந்தவர்.தந்தை சீதாரமன் சுப்பிரமணியம் ,மத்திய அரசில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் . சுத்தமான ஐயர்(பாப்பான்).சாமியின் தாயார் தமிழ் பேசும் திருச்சூரைச்சேர்ந்த கெரளத்துப் பெண்மணி.சாமியின் அத்திம்பெர் யூத மதத்தைச்செர்ந்தவர். அவருடைய மகள் சுபாஷினியை ஹைதர் என்ற முஸ்லீமுக்கு மணமுடித்திருக்கிறார். அவருடைய மைத்துனியின் கணவர் கிறிஸ்துவர். அவர் மனைவி டாக்டர் ரொஹனா பார்சி மதத்தைச்செர்ந்தவர்.

சுப்பிரமணியம் சாமி நல்லவரா? கெட்டவரா?

14 comments:

S.Raman, Vellore said...

அடிப்படையில் அவர் ஒரு அரசியல் தரகர். அமர்சிங்கிற்கெல்லாம் முன்னோடி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கெட்டவர் போல தோன்றும் நல்லவர் சில சந்தர்ப்பங்களில்

புதுச்சேரி அன்பழகன் said...

'சுப்பிரமனியம் சாமி எப்போது என்ன சொல்வார் செய்வார் என்பதை சொல்லமுடியாது' என்ற உங்கள் வாசகமே நல்ல பதிலாக இருக்கிறது

suvanappiriyan said...

கெட்டவர்

சித்திரவீதிக்காரன் said...

நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.

அழகிய நாட்கள் said...

அடிப்படையில் கருணா நிதியைப்போல் சு சாமியும் கெட்டவரே. தன்னுடைய சனாதனத்தை விட்டுக்கொடுக்காமல் எல்லோரும் ஒரு காலத்தில் இந்துக்கள்தான் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயமில்லையோ அதே போல நியாயமில்லாமல் கிறித்துவ, முஸ்லீம், யூத தனது பந்துக்களுக்கும் சொல்லட்டும் பார்க்கலாம். கருணா நிதி சொல்லுவாரே நான் பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் கம்யூனிஸ்ட் ஆஹயிருப்பேன் என்று. அதே போலத்தான் இவரும் வேறென்ன?

venu's pathivukal said...

சுப்பிரமணிய சாமி நல்லவரா கெட்டவரா என்று
எல்லாம் கேள்வி வைக்கக் கூடாது
அதற்கெல்லாம் பதிலும் தேவைப் படாது.
சமூகத்தை
முற்போக்கு திசையில் நகர்த்த
எப்போதெல்லாம் முயற்சி நடக்கிறதோ
அதற்கெல்லாம் தடை போடத் துடியாய்த் துடிக்கும் ஒரு
நபரை, நல்லவர்-கேட்டவர் என்று எதற்கு வகைப்படுத்த வேண்டும்?

மேல்தட்டு மனிதர்கள்
தங்களது
உணவுப் பழக்கங்கள், தனிப்பட்ட மத உணர்வுகள்,
குடும்பங்களில் கொள்வினை கொடுப்பினை விவகாரங்கள்,
உடை உடுத்தல், பண்டிகை கொண்டாடுதல்
இன்ன பிறவற்றில் என்ன வேண்டுமானாலும் சமரசம் செய்து கொள்வார்கள்

இவற்றுக்கு எல்லாம், சுவராசியமான துணுக்கு செய்தி அந்தஸ்துக்கு மேலாக
புரட்சிகர சரக்காக ஏற்க இம்மியளவும் இடம் கிடையாது..

நாடாளுமன்ற ஜனநாயகம் விரும்பாதவர் சு சாமி. ஆர் எஸ் எஸ் கருத்தோட்டத்தின்படி
குரு சபா என்ற மேலாண்மை மிக்க அமைப்பை வேண்டி அவர் விரிவாகப் பிரச்சாரம் செய்பவர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியமிக்க இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து அவரது பார்வை நேர்மாறானது.

அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த அவர் அவஸ்தைப் படுவதை விட
அடிப்படை அமைப்பின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்த அவர் ஏன் மெனக்கெடுவதில்லை?

நல்லவர், கேட்டவர் என்பது தேவையில்லை...

வெகுஜன மக்களின் உள்ளார்ந்த மேம்பாடுகளுக்குச் சிந்திப்பவரா, அதற்கு எதிரான நீரோட்டத்தின்
பயணியாக இருந்து கொண்டு பரபரப்பு அரசியல் மூலம் தம்மைக் குறித்த போலி சித்திரம் உருவாக்குபவரா
என்று கேட்டால் கேள்வியும் பதிலும் இரண்டும் அர்த்தப் படும்..

எஸ் வி வேணுகோபாலன்

Suresh Subramanian said...

கெட்டவர் போல தோன்றும் நல்லவர்....

please read my tamil kavithaigal in www.rishvan.com

அப்பாதுரை said...

காலையில் படித்ததும் பின்னூடமிட நினைத்தேன்.. எஸ்.வி.வேணுகோபாலின் கேள்விதான் எனக்கும் தோன்றியது. (பின்னூட்டத்தை அனுபவித்துப் படித்தேன். அவரைப் போல அருமையாக எனக்கு எழுத வராது.)

நீங்கள் எந்த நோக்கத்தில் அந்தக் கேள்வியை முன்வைத்தீர்களோ தெரியாது - இருப்பினும் அதைப் படித்தவர்கள் கேள்வியை விஷமம் என்று எண்ணக்கூடும் என்று சொல்ல அனுமதியுங்கள்.

உங்கள் முந்தையப் பதிவுக்குப் பிறகே இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு உங்களுக்கு நன்றி.

eccentric என்ற சொல் மனதில் உதித்தது. இவருடைய துணிச்சலும் சில சாதனைகளும் படித்த போது பிரமிக்க வைத்தன. தனிமனிதனாக ஊழல் பெருச்சாளிகளை எதிர்த்த வகையில் இவருடைய துணிச்சலும் தீர்க்கதரிசனமும் பாரதிக்கு நிகராக சில நேரம் தோன்றியது. சுவாமியின் உரையொன்றை யுட்யூபில் காண நேர்ந்தது - ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் பற்றிய பேச்சு - எழுச்சியூட்டும் விதத்தில் இருந்தது.

நிறைய சாதனையாளர்கள் மத வெறியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மதவெறி கண்ணை மூடி நடக்கையில் சாதனைகளும் சாதனையின் நோக்கமும் முறையும் முடங்கி விடுகின்றன. சுவாமியின் செயல்பாடுகளும் அத்தகையதே என்று நினைக்கிறேன். அங்கே தான் சறுக்குகிறார். மதம் சடங்கு என்று படித்தவர்கள் இடறிவிழும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அடிப்படையில் என்னதான் புத்திசாலித்தனமும், மேதாவிலாசமும், துணிச்சலும், தியாக மனப்பாங்கும் இருந்தாலும் - மதம் தாண்டிய மனித நேயத்தைப் புரிந்து கொள்ளாத வரையில் அவர்களின் பிற வன்மைகளால் ஒரு பயனும் இல்லை. அந்த வகையில் சுவாமி ஒரு ஏமாற்றம்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! இம்பிச்சி பாவா என்று கேரளத்தில் மார்க்சிஸ்ட் அமைச்சர் இருந்தார் .அவசர நிலைக்காலத்தில் எம்.பி யாக இருந்தார்.தலைமறைவானார். ஆனால் எப்படியோ நாடாளுமன்ற அலுவலகம் சென்று யாருக்கும் தெரியாமல் சம்பளப்பணத்தை வாங்கிவிடுவார். தலைமறைவு வாழ்க்கயில் பல வேலைகளைசெய்த சூரர். சு.சாமி அதெபோல் முதல் மாதம் சம்பளத்தை வாங்கிக் கொண்டு தப்பித்து அமெரிக்கா ஒடிவிட்டார். சு.சாமியின் சாதனயாக இது ஊடகங்களின் வர்ணிக்கப்பட்டது.சு.சாமி ஒருநபர் மெம்பரைக் கொண்ட ஜனதா கட்சியின் ஒரே தலைவர். அவருடைய அறிக்கைகள் தினம் ஊடகங்களில் வரும். அவர் பற்றிய விலாவாரியான தகவல்கள்,கருத்துக்கள் உங்களைபோன்ற ,வேணு போன்ற நண்பர்கள் மூலம் வரவழைப்பது தான் நோக்கம். சு. சாமியை புகந்து தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதுகின்றன அவருடைய முகம் அது மட்டுமல்ல என்று வெளிச்சம் பொடுவதும் நோக்கம்.---காஸ்யபன் .

அப்பாதுரை said...

ஒரு நபர் ஜனதா கட்சியா?!

veligalukkuappaal said...

தோழர் எஸ்விவியின் கருத்துக்கு மேல் என்ன சொல்ல? ராமன் சொன்னதுபோல அவர் ஒரு அரசியல் தரகர். சாமானிய மக்களுக்காக அவரது அறிவை என்றும் அவர் பயன்படுத்தியதில்லையே! கற்றதனால் ஆய பயன் என்கொல்...!

சிவகுமாரன் said...

சு. சாமியால் பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன என்பதை யாராலும் மறுக்க முடியாது.மற்றபடி அவருடைய கட்சி அரசியல் பற்றி எல்லாம் யாரும் கவலைப் படத் தேவையில்லை.

Gurumurthy said...

I have just now read with interest all your posts (5 posts of Dec 2011). Short writings (and focused & sharp too) always create interest in the reader. I liked them.
- J.Gurumurthy