Wednesday, December 14, 2011

நண்டு கொழுத்தால்......

நண்டு கொழுத்தால்......

ஜனாதிபதிக்கான தேர்தல் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடை பெற உள்ளது. தற்பொது ஜனாதிபதியாக இருப்பவர் ஒபாமா.இவர் மீண்டும் ஜனாதிபதியாக விரும்புகிறார்.இ வர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர். இவரை எதிர்த்து ரோம்னி என்பவர் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரோம்னி குடியரசுக்கட்சசி உறுப்பினர்.இரண்டு கட்சியுமே பெரும் பணக்காரர்களை அண்டிபிழைக்கும்கட்சிகள் தான் . தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன வித்தியாசம்!அதேதான் இவை இரண்டுக்கும்

அமேரிக்கா தற்பொது . கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. சென்ற தேர்தலின் பொதும் இதே நிலமைதான்.வேலையின்மை அதிகரிப்பு,மக்களுக்கான நிவாரண உதவிகள் ரத்து, நிதி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திவாலாவது, என்று திணறியது. இவற்றிலிருந்து மீளமுடியுமா? என்று திகைத்து நின்ற போது "ஆம்! நம்மால் முடியும்" என்ற கோஷத்தை முன் வத்து ஒபாமா பொட்டியிட்டார். மக்கள் நம்பினர்.அவர்கள் ஆதரவோடு வெற்றி பெற்றார்..

நிலைமையில் மாற்றம் எதுவும் இல்லை. மக்கள் ஆதரவு நடவடிக்கை களுக்குப் பதிலாக, தனியார் நிதிநிறுவனங்களுக்கு அரசு உதவிகளைச்செய்வதின் மூலம் நிலமையைச்சமாளிக்க முயன்றார்.தாங்கமுடியாத சுமைகளை மக்களின் மீது ஏற்றிய பொது அவர்கள்நிதி நிறுவனங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் "வால் ஸ்ட்றிட்டை " தாக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலமையில் அடுத்த ஆண்டு தெர்தலை சந்திக்க ஜனநாயகக் கட்சியும் ,குடியரசுக்கட்சியும் களமிறங்க உள்ளன. இரண்டு கட்சிகளிடமும் நலிந்து போன் முதலாளித்துவ தீர்வினைத்தவிர எதுவும் இல்லை . ஆகவே இரண்டு கட்சிகளுமே மக்களின் கவனத்த திருப்ப யுத்தவேறியை பயன்படுத்த முடிவு செய்துள்ளன என்பது சமீப பெச்சுகளிலிருந்து வெளிப்படுகிறது. அவர்களு க்கு ஒரு எதிரி வேண்டும்.

தோதான எதிரியாக அவர்களுக்கு தற்போது ஈரான்கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான,ஈராக், லிபியாஎன்று முடிந்தநிலையில் இன்று ஈரானை அமுக்க நினைக்கிறார்கள் .

அமெரிக்காவில் உள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டது. அதன் தூதுவரைக் கொல்ல ஈரான் சதி செய்தாதாக அமேரிக்கா குற்றம் சாட்டுகிறது. இந்த தாக்குதல் சம்மந்தமாக அப்ரசியாஎன்ற நபர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவர் ஈராணிய வம்சத்தை செர்ந்தவர். அப்ரசியாவின் உறவினர் .கோலம் சாவ்ரி. இவர் ஈரான் நாட்டிற்குள் ஈரானை எதிர்த்து கலகம் செய்யும் குழுவை சார்ந்தவர். சவுதி துதரகத்தைத்தாக்க இவருக்கு இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு உதவியுள்ளது. இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ஈரான் மீது யுத்தம் தொடுக்க பவேலை நடக்கிறது. சர்வதேச அணுசக்தி இணையம் அமெரிக ஆதரவு நிலை எடுத்து ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.இதில் வேடிக்கை என்ன வென்றால் சி.ஐ.ஏ வும், எஃப்.பி.ஐ யும் இதனை எதிர்க்கிறது.போதுமன ஆதாரம் இல்லை என்று இவை கருது கின்றன

அமெரிக்க ஜனதிபதிதேர்தலுக்கு முன் இரான் தாக்கப்படலாம்.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். அமெரிக்கவில் ஜனதிபதி தேர்தல் வந்தால் ஏழை நாடு ஒன்று தாக்கப்படத்தான் வேண்டுமா!!

7 comments:

திசைசொல் said...

அழகான சின்னசின்ன பதிவுகள்;தெளிவான பதிவுகள்;மகிழ்ச்சி

suvanappiriyan said...

//அமெரிக்க ஜனதிபதிதேர்தலுக்கு முன் இரான் தாக்கப்படலாம்.//

நடக்கலாம்.!

Gurumurthy said...

I have just now read with interest all your posts (5 posts of Dec 2011). Short writings (and focused & sharp too) always create interest in the reader. I liked them.
- J.Gurumurthy

அப்பாதுரை said...

அமெரிக்காவில் >50% சதவிகிதம் ஏழைகள் என்று 2010 சென்சஸ் சொல்கிறது காஸ்யபன் சார்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! தினம் 32 ரூ க்கு மேல் சம்பளம் வந்தால் (உங்கள் ஊர் கணக்கில் 60 செண்ட்) அவன் வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவன் என்பது எங்கள் ஊர் கணக்கு.இந்தகணக்கைக்கொடுத்தவர் மாண்டெக் சிங் அலு வாலியா. மன்மொகன் பிரதமர், சிதம்பரம் , அலுவாலியா அமைச்சர்கள் , என்று தலையங்கம் மூலம் சோனியாகாந்திக்கு நிர்பந்தம் கொடுத்தது "வால் ஸ்ற்றீட் ஜெர்னல்".உங்கள் ஊரில் 50 சதம் எழைகள் . ஆனால் 90சதம் செல்வத்தையும் 100சதம் அதிகாரத்தையும் அனுபவிப்பவர்கள் .5சதத்திற்கும் குறைவான வசதி மிக்கவர்கள். சமமான பங்கீடு இரண்டு நாட்டிலும் இல்லை ---காஸ்யபன் .

veligalukkuappaal said...

அமெரிக்காவின் கடைசி ராணுவவீரனும் இராக்கிலிருந்து இன்று ’முறையாக’ வெளியேறி விட்டதாக தொலைக்காட்சி காட்டியது. ‘முறையாக’ இராக்கின் உள்ளே வந்தார்களா என்று எந்த தொலைக்காட்சியும் சொல்லவில்லை! நீங்கள் சொன்னதுபோல இரானை நோக்கித்தான் பெட்டி படுக்கை துப்பாக்கிகளோடு போகின்றார்கள்!

சிவகுமாரன் said...

எங்கே தான் இருக்கிறது மக்களுக்கான அரசு? ( சோவியத் என்று சொல்லாதீர்கள் )