சென்னை நகரத்தின் மையமான பகுதியில் உள்ள பிரும்மாண்டமான மைதானம் அது.அதன் இரண்டு புறமும் நிழலுக்காக மரங்கள் உள்ளன. கிராமங்களிலிருந்து பிழைப்பைத் தேடி நகரம் வந்துள்ள ஒன்றிரண்டு கிராமத்து ஜனங்கள் சிலர் அந்த நிழலையே தங்கள் தங்குமிடமாக குடித்தனம் நடத்துகிறார்கள் .
அரசுவிழாக்கள் நடைபெறுவதும் அங்குதான். கட்சிகளின் பேரணிகள் நடை பெறுவதும் அங்குதான்.இப்படிப்பட்ட சமயங்களில் போலீஸின் தொந்திரவுக்குப் பயந்து அந்த மக்கள் தங்கள் சட்டி பானையைத் தூக்கிக் கொண்டு பக்கத்திலுள்ள பாலத்தினடியில் பதுங்கிக்கொள்வார்கள்.ஆண்கள் கூலி வெலைக்குப் போகிறார்கள். பெண்கள் குழந்தைகளொடுமரத்தடியில் சமைப்பது முதல் சகல வேலைகளையும் பார்த்துக்கொள்வார்கள்.சில பெண்கள் வருமானமில்லாத நேரத்தில் "நடுநிசி உழப்பாளர்"களாக மாறுவார்கள்.
அன்று அரசுவிழா. மந்திரி வந்து தேசீயக் கொடியை எற்றவிருக்கிறார்.கூட்டம் குவிந்துள்ளது. மரத்தடியில் இரண்டு நாளாக வருமானமிலாமல் ஒருபெண் தன் ஐந்து வயது மகளோடு நிற்கிறாள்.மைதானம் நிரம்பியிருக்கிறது.அந்தச்சிறுமி ஒரத்தில் இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதரை நெருங்குகிறாள்.அவன் தனியாக இருக்கிறான். அவன் தொடையை அந்தச்சிறுமி தட்டுகிறாள். இரண்டு தொடைக்கும் நடுவில் லேசாக தடவுகிறாள்.அவன் சிறுமியைப்பார்க்கிறான்.அவள் " அந்தா அம்மா" என்கிறாள் அவன் புரிந்து கொள்கிறான்.மரத்தடியில் நிற்கும் அவளை ப்பார்த்து கண் சாடை காட்டுகிறான்.மெதுவாக மரத்தடியை நோக்கி நகர்கிறான். சிறுமியும் அவனைப் பின்தொடர்கிறாள் .
தலைவர் கொடியேற்ற "ஜன கண மன" என்று பின்னணியோசை கேட்கிறது
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் - ஒருகுறும்படத்தின் திரைக்கதை இது. சென்னை திரைப்படக்கல்லூரி மாணவர் தயாரித்த படம்.அந்த மாணவர் பெயர் ருத்ரையா .
"அடர் கருப்பு" காமராஜ் தன் இடுகையில் "அவள் அப்படித்தான்" என்றபடம் எடுத்த ருத்ரையா வைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அற்புதமானபடம். கமல ஹாசனும் , ரஜனி காந்த்தும் தங்கள் வாலைச்சுருட்டிக்கொண்டு ருத்ரையா சொன்னது போல் நடிதிருப்பார்கள். இளம் வயது ஸ்ரீப்ரியாவின் மிகச்சிறந்த நடிப்பு இரண்டு சூப்பர் ஸ்டார்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் இருக்கும்.
கருப்பு வெள்ளை படம் தான்.திரைப்படத்திற்கு நீளமும் அகலமும் மட்டுமே உண்டு. அவள் அப்படித்தான் திரைப்படத்தில் மூன்றாவது பரிமாணத்தை வெளிப்படுத்தும் வகையில் காமிரா பளிச்சிடும்.இருட்டையும் வெளிச்சத்தையும் கலந்து குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் மிகச்சிறப்பான ஒளிப்பதிவு அருமையாக இருக்கும்.
அசோக்குமாரும்,பாலுமகேந்திராவும் ,கண்ணனும் ,வாசும் தலை எடுப்பதற்கு முன்பே காமிரா வை ராபர்ட் சிறப்பாக கையாண்டுள்ளார்.
ருத்ரையா" கிராமத்து அத்தியாயம் " என்ற படத்தையும் எடுத்தார். கமல ஹாசனின் அண்ணனும் சாரு ஹாசனின் தம்பியுமான சந்திர ஹாசன் நடித்த படமாகும் . தமிழகத்து ரசிக மகாஜனங்கள் ருத்ரையாவை புறக்கணித்தனர். அவர் "போங்கடா பொங்க " என்று கோயம்புத்துருக்கு ரயிலேறி விட்டார்.
2 comments:
சுவாரசியமான பதிவு.
அவள் அப்படித்தான் படம் ரசிக்க முடிந்ததென்றால் அதற்குக் காரணம் வித்தியாசமான வசனங்கள், கதை. ஸ்ரீப்ரியா, ரஜனி, கமல் (அந்த வரிசையில்) நடிப்பு. திரைக்கதையும் டைரக்சனும் சுமார் தான். திரைக்கதை ரொம்ப சுமாரென்றே நினைக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை வைத்துப் பார்க்கும் பொழுது ருத்ரய்யா ரயிலேறியதால் அவருக்குத் தான் நஷ்டமோ என்று நினைக்கிறேன். ஒரு வகையில் அவள் பட ஸ்ரீப்ரியா பாத்திரத்தின் alter egoவோ ருத்ரய்யா?
இந்த கமெந்டை ஏற்கனவே ஒரு தடவை போட்டிருந்தேனே சார்?
Post a Comment