முத்து கிருக்ஷ்னன் என்ற நெல்லைச்செல்வன்....
1962ம் ஆண்டுவாக்கில் மதுரையில் பொது நிகழ்ச்சி "அழகப்பன் ஹாலி"ல் தான் நடக்கும். மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு சொந்தமானகட்டிடம், மெற்கு வெளிவீதியும் வடக்கு வெளிவீதியும் சந்திக்கும் குட்ஷெட்டுக்கு எதிர்த்த கட்டிடம் தன் "அழகப்பன் ஹால்".
கலை இலக்கிய பெருமன்றத்தின் நடவடிக்கைகளில் தயங்கியபடியே பங்கெடுத்து வந்தோம். அதெசமயம் "வாசகர் வட்டம்" என்ற அமைப்பும் இருந்தது.குன்றக்குடி அடிகளார் அறக்கட்டளை,தீபம் நா.பா அறக்கட்டளை என்று நிகழ்ச்சிகள் நடக்கும். பெராசிரியர்.எஸ்,ராமகிருஷ்ணன், கனக சபாபதி,தி .க.சி,க.நா.சு, என்று கருத்தரங்கங்கள் நடக்கும்.அந்த ஆண்டு நாவல் போட்டி நடந்தது. வாசகர்களின் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யப்படும். அபோது, சுந்தர ராமசாமியின் "புளியமரத்தின் கதை "போட்டியிலிருந்தது. நான் மதிய நேரத்தில் "சு.ரா" வுக்கு வாக்களிக பிரச்சாரம் செய்தேன்.மற்றொரு இளைஞரும் பிரச்சாரம் செய்தர்.அவர்தான் முத்து கிருஷ்ணன்.செக்கச்சிவந்த மெனி.கட்டுக்குட்டான உடல்வாகு. சொடா பாட்டில் கண்ணாடி. வெத்திலை போட்டு சிவந்த வாய்.அப்போது அவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் டியூடர் ஆகவும் விடுதிகாப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
மிகச்சிறந்த பேச்சாளர்.கடுமையான தத்துவார்த்த விஷயங்களைகூட எளிமையாக சொல்லும் ஆற்றல் படைத்தவர்.நெருக்கமான நண்பர்கள் ஆனோம் .நெல்லையைச்சேர்ந்த அவர் நெல்லை செல்வன் என்ற பெயரில் எழுதிவருகிறார். நெல்லை மாவட்டத்தில் பின்னளில் ஜனநாயக மாதர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல்மாவட்டத்தலைவராக செயல் பட்டவர் அவருடைய தாயர் கிருஷ்ணம்மாள் அவர்கள்.
டவுண் ஹால் ரோடில் இருந்த "பாரதி புக் ஹவுஸ்" தான் எங்கள் சந்திப்புக்கான இடம்.நிறைய பேசுவோம் .தத்துவார்த்த விஷ்யங்களை எளிமையாய் எழுத வேண்டும் என்பார்.பிரபஞ்சத்தில் எற்பட்ட மாற்றங்களையும் பூமி உருவானதையும் எழுத ஆரம்பித்தார்.
"விண்ணும் மண்ணும்" என்ற அவருடைய தொடர் "செம்மலரி"ல் வந்தது. மிகப்பெர்ய வரவேற்பும் அறிவு ஜீவிகளின் பாராட்டையும் பெற்றது..அது முடிந்ததும் "மண்ணூம் மனிதர்களும்" என்ற தொடர எழுதினார்..
சேலத்தில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சென்றார். திருமணமாகி அங்கேயே குடும்பத்தோடு வாழ்ந்தார்.
உடல் நலம் பாதிக்கப்ப்ட்டது. புற்று நோய் என்றார்கள். காப்பாற்ற முடியவில்லை.
இளம் வயதில் ஒரு அற்புதமான அறிவு ஜீவியை இழந்தோம்.
ஒரு முறை நெல்லை யிலிருந்து மதுரைக்கு அ.சவுந்தர் ராசன் அவர்களொடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது..நெ ல்லை செல்வனின் மைத்துனர் அவர்".விண்ணூம் மண்ணூம்" நூலையும் "மண்ணூம் மனிதர்களும்" நூலையும் பதிப்பிகலாமே என்று கூறினேன்.
3 comments:
புகைப்படம் இருந்தால் வெளியிடுங்களேன்
என்னிடம் இல்லையே ஐயா!---காஸ்யபன்
மறைந்த தோழர் என்.வரதராஜன் அவர்களைப் பற்றி இடுகை இடுங்கள்.
அதிகம் அறிந்திருக்கவில்லை அவரைப்பற்றி நான்.
Post a Comment