கிருஷ்ணா டவின்சி என்ற பவர்ஃபுல் எழுத்தாளரை பறிகொடுத்துவிட்டோமே..........
விகடன் 18-4-12 இதழில் வெளிவந்த "காலா...அருகே வாடா" என்ற கதையைப் படித்தேன். என்ன பவர்ஃபுல் எழுத்து என்று வியந்து போனேன். கிருஷ்ணா டாவின்சி எழுத்துக்களை விடாமல் படி.த்து வருபவன் நான். பிறகு தான் தலைப்பு பக்கத்தில் ஆசிரியர் குறிப்பில் அவர் மறைந்த செய்தியை கண்டு அதிர்ச்சி யடைந்தேன்.
கிருஷ்ணாவைத்தெரிந்தவர்கள் அவர் எழுத்தின் மூலம் அவரைப் புரிந்து கொண்டவர்கள் ,என் போன்றவர்களின் சோகம் தாங்கமுடியாதது.எந்த அளவுக்கு அவர் விஷய ஞானமூள்ளவர் என்பதற்கு ஒரே ஓரு உதாரணம் "விஜய் டிவி "யில் வரும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய பங்கு பற்றி நான் கேள்விப்பட்டதை குறிப்பிட்டாலே போதும். அந்தநிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அதனை நடத்தவிருக்கும் நடிகர் சூர்யாவிற்கு பயிற்சி அளிக்க விரும்பினார். சரியான நபராக கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்தார். "ஹாட் சீட்டில் "கிருஷ்ணா "அமர சூர்யா ஒரு பாடலை ஒலிபரப்ப அது எந்த படம் என்பதை சோல்லவேண்டும்.பாடல் ஒலித்ததும்" சாய்ஸ்" வேண்டாம் அது "நீழல்கள்" படத்தில் வரும் பாடல் என்றார் கிருஷ்ணா. "மடைதிறந்து பாடும் நதி அலை நான்" என்று வாலி எழுதிய படல் தான் ஒலித்தது..
"டாவின்ஸி" உலகப் புகழ் பெற்ற ஓவியர் மட்டுமல்ல.கணிதமேதை.பொறியியல் மேதை. "பழைய ஏற்பாட்டை" முழுமையாகபுரிந்து கொண்ட மேதை. அதனால் தான் நானும் அந்தப் பெயரை என் பெயரோடு "டாவின்ஸியை" செர்த்துக்கொண்டேன்." என்று தன் பெயருக்குவிளக்கமளித்தவர் கீருஷ்ணா.
திரப்படத்துறையினரோடு மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.இயக்குனர்கள் ராம், லிங்குசாமி ஆகியொர் அவருக்கு வேண்டியவர்கள். குமுதம் பத்திரிகையிலிருந்த போது "அரசு" பதிலகளை எழுதியவர்.
தபால்துறைதொழிற்சங்கதலைவர் தோழர் பஞ்சாபகேசனுக்கு உறவினர்.மார்க்ஸீய சிந்தனை வசப்பட்டவர்.
விகடனில்வந்த அவருடைய கதையின் நாயகன் பெயர் முருகேசன். அது அவர்தான் என்பதை நீனைக்கும் போது தொண்டைஅடைக்க இதயம் விம்முகிறது.'
5 comments:
அரசு பதில்கள் எழுதியது இவரா?
அப்பதுரை அவர்களே!அரசு பதில்களை யார் எழுதுகிறார்கள் என்பது ரசியமாகவே இருந்தது. ஒருமுறை "உங்களுக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்? என்ற கேள்விக்கு "அ.முத்துலிங்கம்" என்று பதில் வந்துள்ளது. அன்றய நிலையில் இவரை யார் என்பது தெரியாது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து கானடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் இவர். முத்துலிங்கம் அவர்களுக்கு குமுதத்திலிருந்து விலகிய பின் கிருஷ்ணா டாவின்சி எழுதிய கடிதமொன்றில் இதனை குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் அண்ணாமலை ரங்கராஜன்,சுந்தரேசன்(அரசு) மூன்று பேரும் எழுதுவதாக சொல்வார்கள். பின்னர் அண்ணாமலையின் மறைவிற்கு பின் மாறியிருக்கவலாம்.---காஸ்யபன் (பி.கு. தோழர் எஸ்.வி வேணு கோபால் அனுப்பிய மின் அஞ்சல் மூலமிதனைத் தெரிந்து கொண்டேன்.)
இப்படித்தான் நிறைய பேரைப் பற்றி அவர்கள் உயிருடன் இருக்கும் போது தெரியாமலேயே போய் விடுகிறது. அவரின் எழுத்தால் கவரப்பட்ட வாசகர்களில் நானும் ஒருவன்.
குமுதத்தில் அவர் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்.
அரசு பதில்களை ஒரு கட்டத்தில் சுஜாதா கூட எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
மிக அருமையான பதிவு, சந்திப்பு, மாமனிதர் பற்றி அறிந்தது மகிழ்வு. ஏன் எனக்கு மிக நீண்ட நாள் எடுத்துள்ளது இரத்தினவேல் ஐயாவின் இணைப்பைப் படிக்க என்று தெரியவில்லை. ஆயினும் இன்றாவது வாசித்தேன் என்று மகிழ்கிறேன். தாங்களும் சகோதரர் காசியப்பனும் ஆரோக்கியமாக பல சேவைகள் செய்து வாழ இறையருள் கிட்டட்டும். மிக நன்றி இவைகளை அறியத் தந்ததற்கு. (தாங்கள் கேட்டபடி இந்தக் கருத்தைச் சகோதரரின் வலைக்கும் சேர்க்கிறேன்.)
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment