Friday, July 13, 2012

அறுபது லட்சம் தான் வெல்லமுடியும் ............!!

                   நடிகர் சூர்யா நடத்திவந்த தொடர் வெள்ளிக்கிழமை இரவோடு முடிவுற்றது. சிறப்புக்காட்சியாக அன்று இரவு பதினோரு மணிவரை நடத்தினார்கள் கடந்த ஐந்து மாத காலமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்குபெற்று வென்ற 116 பேரை அழைத்திருந்தார்கள் .சிறப்பு அழைப்பாளராக சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

                  இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் கீழ் மத்தியதரத்தினரே ஆகும். குறிப்பாக இளம் பெண்கள் இந்தஒரு போட்டியை  சவாலாக எடுத்துக்கொண்டு தங்களின்  தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக கலந்து கொண்டனர்.தங்கள் கல்வி,தங்கள் தங்கை,தம்பிமார்களின்படிப்பு,தாயின் மருத்துவம்,தந்தைக்கு உதவியாக என்று ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு வந்திருந்தார்கள்.கேள்விகளுக்கு பதில் சொல்லி அது சரியாக இருக்க வேண்டுமே என்று அவர்கள் தவிக்கும் அந்தக்கணங்கள் தான இந்த நிகழ்ச்சியின்  U.S.P.(unique selling preposition).பார்வையாளர்களை ஈர்க்க இது மிக்கவும்பயன்பட்டது என்று  கூறலாம்.அந்தச்சின்னஞ்சிருபெண் கள்,தங்கள் கனவுகள்,ஆசைகள், நிராசையான பொது விம்மி,வெடித்தபோது அரங்கத்தை துயாரத்திலாழ்த்தியது  .  
    

                      மிக அதிகபட்சமாக வென்றது 25 லட்சம் தான் இரண்டுபேர் தான் வென்றார்கள். அதிகமாக 10,000 ரூ , அடுத்து 3,20,000ரூ என்றாகியது. எனது ஆடிட்டர் நண்பர் ஒருவர் கூறினார்.""ஒரு கோடி என்று அறிவிப்பதே தவறு.அரசாங்கம் சும்மா இருக்குமா! வருமானவரி உண்டே!என்றார்

 எவ்வளவு இருக்கும்?

முன்பு 30 சதமாக இருந்தது.!


இப்போது?

"40 சதம்!
ஒருகோடி விழுந்தால் 40லட்சம் வரி ,60லட்சம் கையில் !!".

2 comments:

saambaldhesam said...

1) தோழர்,நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது உண்மைதான். 15 கேள்விகளுக்கு பதில் சொன்னால் கோடீசுவரன் என்பது ஒரு குறுக்குவழி இல்லையா? இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுப்பப்படும் எஸ் எம் எஸ் மூலம் மட்டுமே பல கோடி ரூபாய் வருமானம் விஜய் டிவியும் செல்ஃபோன் கம்பெனிகளும் பங்கு போட்டுக்கொள்கின்றார்கள் என்பது சாமானியனை ஏமாற்றும் வேலைதானே?

2)இந்திய ரூபாய் நோட்டில் நோட்டின் மதிப்பு எத்தனை மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு 15 என்று பதில் சொன்னார்கள். இந்தியையும் ஆங்கிலத்தையும் சேர்த்தால் 17 அல்லவா?
3)கடந்த +2வில் மானிலத்தில் இரண்டாவதாக இடம் பெற்ற ஒரு இளம்பெண்ணிடம் உன்னைப்போல் ஒருவன் படத்தில் மோஹன்லால் நடித்த பாத்திரத்தின் பெயர் என்ன என்று கேட்டார்கள். தேர்வுக்கான 4 option களுமே தவறு! அங்கே ஒரு சுவாரசியமான குழப்பமும் நடந்தது! அதாவது மோஹன்லாலில் பாத்திரத்தின் பெயர் 4 option களிலுமே இல்லை! ராகவன் மாரார் என்ற பதிலை அவர் தேர்ந்தெடுத்தார் (அவர் மனதில் நினைத்தது வேட்டையாடு விளையாடு படத்தை நினைத்து). இப்படி 4 option களுமே தவறாக இருந்தால் நியாயமாக அந்தக் கேள்விக்கான பரிசுத்தொகை முழுவதுமே போட்டியாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதானே நீதி? கொடுத்தார்களா? இன்னொரு நீதி: பள்ளிப்பாடத்தில் டாப் ரேங்கராக இருந்த்தாலும் பொதுஅறிவில் டாப்பராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை! (அவர் வென்ற தொகை 0).
...இக்பால்

ஹரிஹரன் said...

இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் வெறூப்பாக இருகிறது. மக்களும் எரிகிற வீட்டில் பிடுங்குகிற மாதிரி நடந்துகொள்கிறார்கள்.

ஷப்பிங் மால்களில் 100ரூக்கு பொருள் வாங்கினால ஒரு கூப்பன் தருகிறான், அதை நிரப்பிப் போடுகிரார்கள், அதை குலுக்கி ஒரு கார், 10 மொபைல் போன் தருகிறான். எல்லாம் லாட்டரியின் இன்னொருவடிவம். ஆனல் தனியாக சீட்டு வாங்காமல்.
இப்போதெல்லம் வாரவிடுமுறை நாட்களுக்கு முன் ஏகப்ப்ட ஆபர்கள், தினசரியில் விளம்பரங்கள் மக்கள் ஏமாந்துபோகிறார்கள். என்ன செய்ய? ச்மபாதிப்பதை செலவு செய்யவேண்டாமா?