Thursday, January 17, 2013

 

Thursday, 17 January 2013

 

 "அஜிமுல்லா கான் "






1857மாண்டு நடந்த புரட்சி பற்றி பல்வேறு வகையான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன ! பிரிட்டிஷ் வரலாற்றாளர்கள் இதனை சிப்பாய் கலகமென்று வர்ணித்து சிறுமைப்படுத்தினர் !ஒன்றாய் இருந்த இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் தலைவர் பி.சி. ஜோஷி "இது தான்  இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் " என்று வர்ணித்தார் !  அரசியல்கட்சிகள்  அத்துணையும் இதனை ஏற்றுக் கொண்டன! இந்துத்வா  வாதிகள்  எற்றுக்கொள்ள தயாராக இல்லை !


இந்த எழுச்சிக்கு திட்டம் தீட்டி,ராஜாக்கள்,நவாபுகள்,ஜமீந்தார்கள்,
படைவீரர்கள்,மற்றும் சாதாரண மக்கள் ஆகியோரத்திரட்டி இந்தப் போராட்டத்தை நடத்தியவர் அஜிமுல்லா கான் என்ற முகம்மதியர் ஆவார் ! இதுவே இந்துத்வா வாதிகளின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கிறது! அதே சமயம் இந்த எழுச்சியை  நிராகரிக்கவும் அவர்களால்முடியவில்லை!    அவர்களுக்கே உரிய இரட்டை நாக்குடன் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்  மங்கள் பாண்டே என்றும், அதற்கான காரணம்மத சம்மந்தப்பட்டது என்றும் திரித்துக் கூறினர் ! சவர்க்கார் எழுதிய எரிமலை என்ற நூலிலிருந்து  அண்மையில்  அமீர்கான் நடித்து வெளியான "மங்கள் பாண்டே - ஒரு எழுச்சி " என்ற
   திரைப்படம்வரை இதே கருத்து வலியுறுத்தப்பட்டது. !

"யுக தரண் "என்ற பத்திரிகையின் ஆசிரியராக   இருநதவர் சத்யா பால் படாயித்  என்பவர் !இவர் அன்றைய ஜனசங்க உறுப்பினர் ! ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் வீரர் ! அஜிமுல்லா  கானின்  பெயரை  தான் சார்ந்தஇயக்கம் மறுப்பதையும் மறைப்பதயும்கண்டு வெகுண்டு  எழுந்தார் ! ஆர்.ஆர். யாதவ் என்பவர் மத்திய   பிரதேசத்தில் உள்ள குவாலியர் மற்றும் உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூர்  ஆகிய  இடங்களுக்குச் சென்று வருவாய்த்துறை ஆவணங்களை அலசி ஆராய்ந்து
 அஜிமுல்லா கான்    பற்றிய செய்திகளையும்,உண்மைகளையும் நூலாக
எழுதினார்! அதனை சத்யபால் படாயித்திடம் கொடுத்து சரி பார்க்கச்
சொன்னார் ! அவர் வேரு  சில விபரங்களையும்  சொல்லி நூலில்   இணைக்கும்படி கேட்டுகொண்டார் !


நஜிமுல்லகானின் மகன் தான் அஜிமுல்லா கான்.! ஒரு ஆங்கிலேய அதிகாரி, நஜிமுலாகானின் மீது கோபம்கொண்டு அவரை வீட்டு மொட்டை
மாடியிலிருந்துகீழே தள்ளிவிடுகிறான்! சிறுவன் அஜிமுல்லாகானின் இதயத்தில் இது நீங்காத வடுவாக விழுந்த்தது .! 
கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம்,பிரெஞ்சு மொ ழிபயீன்று  முன்னேறுகிறான்,ஆங்கிலேயகுழந்தகள்  பயிலும் பள்ளி ஆசிரியராகிறான்  

ஆங்கில அதிகாரிகளிடையே அவன் செல்வாக்கு உயருகிறது ! நவாபுகள் ஜமீந்தார்கள் ஆகியோரின் பிரச்சினையைத் தீர்க்க உதவுகிறான்! நானா சாகிபுக்கு ஆங்கிலேயர் பென்ஷன் தர மறுத்ததை வாதாட லண்டன் செல்கிறான் ! அதேசமயம் ஆங்கிலேயர் மீதிருந்த கோபம் கொந்தளிக்கிறது ! இதற்கெல்லாம் தீர்வு ஆங்கிலேயரை இந்த நாட்டை விட்டு வெளியேற்றுவது தான் என்று திட்ட மிடுகிறான் ! மிகவும் ரகசியமாக திட்டம் உருவாகிறது ! புரட்சியின் சின்னமாக  சிவப்புத் தாமரையும்    ரோட்டியும் என்றாகிறது ! 

1857  மே மாதம் 31ம் தேதி ஒரே சமயத்தில்தாக்குதல் நடத்த திட்டமிடப்படுகிறது !

துரதிர்ஷ்ட வசமாக மீ மாதம் 10 தேதி மங்கள்பாண்டே பிட்டிஷ் அதிகாரிய சுட்டுவிடுகிறான் !  ஆனாலும் புரட்சியாளர்களை அஜிமுல்லாகான் தலைமை தாங்கி நடத்துகிறான்
!  ரகசியம்காக்கப்ப்டாத்தால் தோல்வியைசந்திக்கிறார்கள்  !


 அஜிமுள்ள கான் என்ற இந்த    சிறு நூல் 2007ம  ஆன்டு தமிழில் வெளி வந்தது !
மொழிபெயர்த்தவர் முத்து மீனாட்சி !
தி டீப் அறக்கட்டளை ,
14எ ,சோலையப்பன் தெரு ,
சென்னை - 600014.  
விலை -10ரூ

(பிரதிகள் பாரதி புத்தகாலயத்தில் இருக்கலாம்) 

0 comments: