சமணர்களும் துறவறமும் ......!!
பதிவர் தோழர் ராமன் அவர்கள் "முரண்பாடாய் ஒரு துறவரம்" என்று இடுகையிட்டிருந்தார்! சமணர்கள் கூடுதலாக வாழும் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு சமண பெண் துறவரம் மேற்கொண்டது பற்றிய பதிவு அது!
மிகவும் விமரிசையாக நடத்தப்பட்ட நிகழ்வாக இருந்தது என்றும் உலகத்தைத் துறந்து வாழப்போகும் நிகழ்ச்சிக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா என்றும் கேட்டிருந்தார் !
ஏனோ தெரியவில்லை எல்லா மதத்திலும் இப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது !
ஏசுவுக்கு ஊழியம் செய்ய பெண்கள் வரும்போது அதனை விழாவாக கொண்டாடுகிறார்கள் !
காஞ்சி சாமியார் குளத்தில்குளித்து பூணுலை அறுத்து சந்நியாசம் வாங்குவது ஒரு திருவிழாவாக நடந்தது !
குஜராத்திலும்,ராஜஸ்தானிலும் இன்னும் பெரியதாக சமணர்கள் நடத்துவார்கள்!
தமிழ் இலக்கியத்திற்கும்,வாழ்க்கை நெறிமுறைகளுக்கு, சமணர்களின் பங்களிப்பு மகத்தானது !
ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று கூட சைவ வைணவ புலவர்களால் வந்ததில்லை!
நாகமலை,ஆனமலை,திருப்பரம் குன்றம்,கழுகுமலை குடக்கோவில்கள் சமணர்கள் தந்தது !
இன்று ஆனமளையிலும், நாகமலையிலும் உள்ள சிற்பங்களும்,பள்ளி,படுகைகளும் "கல்குவாரி" களாக மாறிக் கொண்டு வருகின்றன!
கேட்க நாதியில்லை !
சமண மதத்துப் பெரியவர்கள் தங்கள்மதச் சின்னங்களைக் காக்கவாவது இதில் தலையிடலாம்!
வசதி படைத்தவர்கள் அதிகம்கொண்ட இந்தசமூகத்தினரின் பார்வைஇந்த திசைவழியில் செல்ல வேண்டும்!
வர்த்தகச் சூழல் அவர்கள் கண்ணை மறைக்கிறது !
மும்பையில் நான்கு இடங்களில் ஆடுமாடுகளை வெட்டி மாமிசம் தயாரிக்குமிடம் உண்டு !
அதில் மூன்று இடங்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் சமணர்கள் !
ராமன் அவர்களே! மதமே முரண்பாடாய் இருக்கிறதே!!
என்ன செய்ய?

7 comments:
மதங்கள் மாறுவதில்லை! மனிதர்கள் மாற்றி விட்டார்கள்! நன்றி!
துறவறம் பூணுவது ஒருவர். மாமிசக் குத்தகை இன்னொருவர். இதில் என்ன முரண்? இருவரும் வெவ்வேறு மனிதர்கள், மதத்தால் இணைவது என்பது என்றைக்குமே போலி தானே?
அப்பாதுரை அவர்களே! சிஸ்டர் ஜெஸ்மி அவர்கள் "ஆமென்" என்று புத்தகம் எழுதியுள்ளர்! இப்பொது 60 வயதாவது இருக்கலாம்!ஏசுவுக்கு ஊழியம் செய்ய கன்னியாஸ்திரி ஆனவர் ! கத்தொலிக்க திருச்சபையின் கள்ளத்தனமான நடவடிக்கைக்கு ஆளாகி வெம்பி, வெளியேறி உண்மை உலகிற்கு தெரியவேண்டுமென்று எழுதிய புத்தகம் அது ! வட இந்தியாவில் கள்ளம் கபடமற்ற 15-18 வயது பெண்கள் சமணத்துற்வியாவதைபார்த்திருக்கிறேன்! இவர்கள் இத்தகைய முடிவினைஎடுப்பது தன் ஆர்வத்திலா! கொல்லமையை கடுமையாககடைப்பிடிப்பவர்கள் சம்ணர்கள்! மூச்சில்கிருமிகள்கலந்து உட்லுக்குள்போய் இறந்து விடக்கூடாது என்று மூக்கிலும் வாயிலும் துணியைக் கட்டிகோண்டு நடப்பவர்கள்! அந்த மதத்தினர் மாமிச விற்பனை wholesale ல் ஈடுபடுகிறார்கள்! சமண மதம் அறிவியல் ரீதியாக சிந்தித்த ஒன்று! இத்தகைய முரணை சித்தரித்துள்ளேன்!---காஸ்யபன்.
ஒரு நல்ல விவாதம் தொடங்க காரணமாய் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் இந்த பதிவிற்கு
எனது பக்கத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன்.
மதத்தை விட மனிதத்தை தெரிந்து கொள்வோமே... நன்றி...
வணக்கம் தோழர் ,
முரண்பாடுகள் இல்லா மதம் கிடையாது. நிகழ்கால வாழ்வில் பொருளாதாரம்,சுகவாழ்வு உள்ளிட்ட நலன்களுக்கு முரண் ஆன மதக் கோட்பாடுகளை எவரும் சட்டை செய்வதில்லை என்பதற்கு சமணம் மட்டும் விதிவிலக்கா?
மதச்சடங்கு ஒரு விதம்,எதார்த்த வாழ்வு இன்னொரு புறம். மதச்சடங்கிலும் எதார்த்த வாழ்வு சார்ந்து விளம்பரம் கொடுக்கிறார்கள்.
துறவறம் என்பதன் வரையறையும் மதம் சார்ந்து வித்தியாசப்படும்.இதிலும் எதார்த்தம் மறைக்கப்படும்.
துறவறம் என்பது தேவையற்றது என்பதே நம் கருத்து. நடைமுறை வாழ்வில் அதீத நுகர்வைக் குறைத்து, அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதாரம் என்னும் நோக்கம் எந்த துறவினை விட உயர்ந்தது.
ஆகவே மதம்,சடங்குகள் கூடாது என சொல்லுங்கள் மிக மிக நல்லது.
மாமிசம் உண்ணா சமணர், மாமிசக் கடைகளை நடத்தக் கூடாதா?
மாமிசம் உண்பதை தவிர்க்க வேண்டும் என நீங்களும் வலியுறுத்துவது போல் உள்ளது.
நன்றி!!!
மழித்தலும் நீட்டலும் வேண்டாவாம் உலகம்
பழித்தது ஒழித்து விடின்
Post a Comment