சென்னை திரைப்பட சங்கமும் ,
சங்கங்களும் ........!!
சென்னை திரைப்பட சங்கத்தின் ஆண்டுவிழா ஆழைப்பிதழைப் பார்த்தேன்! பெருமையாகவும் பொறாமையாகவும் இருந்தது !
த.மு.எ.ச.வின் வளர்ச்சி பார்த்து பெருமை ! நான் ஓரமாக ஒதுங்கி இருக்க, கருணாவும்,விஜயனும்,முத்துவும் ஓடியாடி செயல்படுவது பார்த்து
பொ றாமை !
film society என்ற கருத்தாக்கமே 70ம் ஆஅண்டுகளில் தான் எனக்கு அறிமுகமாயிற்று! வியாபாரிகளின் குடும்பங்கள் பல எனக்கு பழக்கமுண்டு. (காப்பீடுதுறை )வட்டிக்கடை செட்டியார்கள்,பலசரக்குகடை முதலாளிகள், நகைவியாபாரிகள் என்று பல குடும்பங்களைச்ச் சார்ந்த இளைஞர்கள் எனக்கு பழக்கம்! இவர்கள் எல்லாருமாக சேர்ந்து ஒரு பிலிம் சொசைட்டி வைத்திருந்தார்கள் ஒருமுறை அழகேசன் என்ற நண்பர் என்னையும் அழைத்துக் கொண்டு போனார்!
பிரெஞ்சு படம்! thy name is hioshimaa !கோதார்டு என்ற இயக்குனரின் படம்! அந்த படத்தில் படுக்கையறைக் காட்சி ! இருவருமே நிர்வாணமாக இருப்பர்கள் !அவர்கள் இருவரும்,யுத்த அபாயம்,அணுகுண்டு அபாயம்,சமூக பிரச்சினைகள் என்று பேசிக்கொண்டே இருப்பார்கள் !"வேலையே பாருங்கடா! பேசிக்கிட்டே இருக்கனுங்க! என்றான் அழகேசன் ! எனக்கு எரிச்சலாக இருந்தது
இவர்கள் சொசைட்டி வைத்திருப்பதே இத்தகைய சென்சாராகாத படங்களப் பார்பதற்கே என்பதை புரிந்து கொண்டேன் ! பார்வையாளர்கள் மொத்தம் முப்பது நாற்பது பேர் இருக்கும் ! அதில் வங்கி ஊழியர்கள் வெங்கடேஸ்வரன்,சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர் !
நாங்கள் புதிதாக ஒரு சொசைடி ஆரம்பிக்க முடிவு செய்தோம்! யதார்த்தா பிற ந்தது!, டாக்டர் .கோவிந்தன், ஸ்ரீதர் ராஜன், டாக்டர் மோகன் என்று ஒரு ஜமா சேர்ந்தது உலகத்தின் மிகச்சிறந்தபடங்களைப் பார்க்க முடிந்தது. யதார்த்தாவின் மூலம் புனே திரைப்பட கல்லூரி நடத்திய "திரைப்பட ரசனை வகுப்புகளில் கலந்துகொண்டோம் !
ஒரு கட்டத்தில் யதார்த்தாவை நடத்துவதில் சிரமம் எற்பட்டது! மாற்றல்,குடும்பம் என்றுஆகியது ! த.மு.எ.ச எடுத்து நடத்த வேண்டும் என்று நான் விரும்பினேன்.சம்மந்தப்பட்டவர்களிடம் கலந்து கொண்டேன் ! அனுமதி கிடைக்கவில்லை ! அப்போது நகரச் செயலாளராக இருந்த mm என்ற முனுசாமி தோழர ஏற்றுக்கொண்டார ! ஆனால்மாவட்ட அளவில் அனுமதி கிடைக்க வில்லை ! நொந்து நூலாகி விட்டேன்!
அதனால் என்ன !!
என் வாரிசுகள் வந்துவிட்டார்கள் !!
பின்னி பெடலெடுக்கிறார்கள் !!!
(1930 ஆண்டுகளில் madras film society ஆரம்பிக்கப்பட்டது! ஆரம்பித்தவர் காங்கிரஸ் தலைவர் தீரர் சத்திய மூர்த்தி! அது பற்றி தனி இடுகை போடவேண்டும்)
1 comments:
ந்ல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்யுங்கள்.
Post a Comment