Saturday, March 09, 2013

"ரெட்டைமடி" வலையும் ,

தமிழக மீனவர்களும் .....!!!


மூன்று  பக்கமும் கடல் சூழ்ந்த இந்தியாவின் மொத்த மீனவர்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் இலங்கையின் மக்கள் தோகையை விட அதிகமாக இருக்கலாம். இந்தக் கொள்ளையில் தினம் மீனவர் இலங்கை கடல் பகுதியில்தாக்கப்படுகிறார்கள்! திமுக  ஆட்சியில் இருந்தபோதும் கடிதங்கள் எழுதப்பட்டன! தற்போதும்  எழுதப்பட்டு  வருகிறது! மத்திய அரசும் எதாவது பதில் சொல்கிறது !

"உள்குத்து " ஏதாவது உள்ளதா? அப்படியானால் திமுக ,அதிமுக தலைமைக்கு  தெரியாதா?   தமிழ்  தேசீய சிங்கங்களுக்கு தெரியாதா ? இந்த கேள்வி குடைந்து கொண்டே இருந்தது !  

ராமநாதபுரம்,உச்சிபுளி,மண்டபம்,நாகை என்று விசாரித்ததில்கிடைத்த தகவல்களை பதிவிடுகிறென்!  

பொதுவாக தமிழக மீனவர்களீடையேயே போட்டி உண்டு! வல்லத்தில் மீன் பிடிப்பவர்கள் ,படகில் செல்பவர்கள் ,விசைப்படகில் செல்பவர்கள் என்று போட்டி இருக்கும்!நமது கடற்பகுதியில் நண்டு,கடல்குதிரை,தான் கிடைக்கும்! 
இலங்கைகட்ற்பகுதியில் மின் வளம் அதிகம்! அந்தப் பகுதியில் மீனவர்களின்   எண்ணீக்கை குறைவு நம்மவர்கள் அங்கு சென்று மீன்பிடிப்பார்கள்! இலங்கை அரசும் "எதற்கு வம்பு" என்று வேடிக்கை பார்த்து வந்தது 

நம்ம ஊர் வியாபாரிக்கு "எச்சில்" ஊ ற  ஆரம்பித்தது ! ஒரு தரம் கடலுக்கு போக  50000 ரூ செலவழித்தாலும் இரண்டு முன்று லட்சம் கிடைக்கும் !

வலை பெரியதாகைருந்தால் பத்துலட்சம்கிடக்கும்! இதுல "ரெட்டைமடி " வலை ன்னு  ஒண்ணு இருக்கு! இதை போட்டா கடல்தரைமட்டம்வரைபோய் மீனை மட்டுமில்லாமல் குஞசுகுளுவான் ஒண்ணுமில்லாம  அ றிச்சிட்டு வந்துறும் !  அங்க ஆறு மாசத்துக்குமீன் இருக்காது ! வியாபாரிங்க இப்படி செய்வாங்கன்னு அரசாங்கங்களுக்கும் தெரியும் ! அதுனால தான் ஜூலை ஆகஸ்டு மாதத்துல 45 நாள் மீன்பிடிக்க தடை செய்யறாங்க! 

இலங்கை மீனவர்கள் பிடிச்சிட்டு போங்கப்பா! கொஞ்சம் எங்களுக்கும் விட்டுட்டு பிடிங்க ங்காங்க !   

வலைய அறுப்பதும், பிடித்த மீனை கடல்ல கோட்டரதுமதுக்காக தான் !மிஞ்சிய  முட்டை ,தலைபிரட்டையாவது வளரட்டுமே என்பதுதான் !

இது அம்புட்டு பேருக்கும் தெரியும்!

வியாபாரியை பகைச்சுக்க முடியுமா!

இது இலங்கை,தமிழக மீன் வியாரிகள் போடும் நிழற்சண்டை!! 





   

2 comments:

சிவகுமாரன் said...


இதுக்குள்ளே இவ்வளவு இருக்கா ?
எல்லை தாண்டி மீன் பிடிச்சா சுடத்தான் செய்வான்னு நம்ம தலைவர்கள் கூட சொன்னாங்களே

veligalukkuappaal said...

1)இரண்டு நாட்களுக்கு முன் புதியதலைமுறை தொலைக்காட்சியில் இது குறித்த விவாதம் பார்த்தேன். இலங்கையில் உள்ள ஒரு தமிழர் இதனை ஒட்டிய கருத்தையே கூறினார். விசயம் இதுதான் எனில் இரண்டு நாட்டு நிர்வாகங்களும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்துக்கு வருவதில் என்ன தவறு? பேச என்ன தடை? முக்கியமான விசயமாக நம் மீனவர்கள் சொல்லும் காரணம்: கடல் தண்ணியில் எல்லைக்கோட்டை நாங்கள் எங்கே கண்டுபிடிப்பது? அப்படியே எல்லை தாண்டினாலும் வலைகளை அறுப்பதும் துப்பாக்கியால் சுடுவதும் அடிப்பதும் நியாயமா?
2)இரண்டுதேச அரசுகளும் சரி தமிழக கட்சிகளும் சரி எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்...?