Thursday, March 21, 2013

"குறும்படம் "

"CARELESSNESS "


70ம் ஆண்டுகளின் இறுதியில் த.மு.எ.ச வின் மாவட்ட மாநாடு பரமக்குடியில்   நடநதது  மையத்திலிருந்து கே. முத்தையா அவர்களும்,நானும் சென்றிருந்தோம்! சென்னையிலிருந்து  சிகரம் பத்திரிக்கை ஆசிரியர் செந்தில் நாதன் அவர்கள் வந்திருந்தார்கள்!

எனக்கு திரைப்படம் பற்றி பேசவேண்டும் என்று சொல்லியிருந்தனர்! குறும்படம் பற்றி பேச விரும்பினேன்! நினைவில் இயக்குனர் பெயர் இல்லை என்றாலும் அப்போது பலபத்திரிகைகளி ல்  வந்திருந்த படம் பற்றி பேசினேன்! 

அது ஒரு சிறுகுடும்பம்! கணவன் ,மனைவி மூன்று  வயது சிறுவன் கொண்ட குடும்பம்! குழந்தையின் மீது பாசம்கொண்ட தம்பதியர் ! தினம் குழந்தையோடு விளையாடாமல் இருக்கமாட்டன் தந்தை ! சந்தோஷத்தில் குழந்தையை தலைக்கு மேல் போட்டு கொஞ்சுவான்! இரு கைகளிலும் தூக்கிபோட்டு குழ்ந்தை கலகல வென்று சிரிக்கும்போது பிடிப்பான்! அவனுக்கு சந்தொஷம்வந்தால் இதனசெய்து குழந்தையை  முத்தமிடுவான்!

அன்றுகாலை அவன் முகவசீகரம் செய்துகொண்டிருந்தான்! அருகில் இருந்த மகன் பிரஷ்ஷை எடுத்து முகம்பூராவும் சோப்பைத் தடவிக் கொண்டான்! கணவனும் மனைவியும் அதனப்பர்த்து மகிழ்ந்தார்கள்! குழந்தையை உச்சி மோந்தார்கள்! 

பிறி தொருநாள் காலை அவன் அலுவலகம் சென்றான்! திடீரென்று அவனுக்குநினைவு  தட்டியது ! வீட்டில் மேஜைமேல் முகவசீகரம் செய்துவிட்டு பிரஷ்,பிளேடு ,சோப்பு ஆகியவற்றை எடுக்கா
ல் வந்தது நினைவுக்கு வந்தது! அடிவயிறு கலங்கியது! சுட்டிப்பயல் ,பிளேடினை எடுத்து ....நினைக்கவே கதி கலங்கியது! வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி விட்டிற்கு ஓடினான்!  அவசர் அவசர மாக உள்ளெ சென்றவன் மகன் விளையாடிக் கொண்டிருப்பதிப் பார்த்து உச்சி மோந்தான்! அவனை  அள்ளி எடுத்து தலைக்கு மேல் தூக்கி மேலே போட்டன்! 

"வீல்" என்ற சத்தத்தோடு சில துளி ரத்தம்    அவன் சட்டையின் மீது தெரித்தது !

மெலே சுத்திக் கொண்டிருந்த மின் விசிறியில் ......\

கால தூர வர்த்தமானத்தில் இதனை எடுத்தவர் படத்தின் பெயர் நினைவில் இல்லை !

ஆனாலும் மனத்தை விட்டு  அகலாது !!!






3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ... குழந்தைக்கு சிறு காயம் தானே...? வேறு ஏதும் ஆகவில்லையே...?

படமாக இருந்தாலும் மனசு பதறுகிறது...

அப்பாதுரை said...

மேலே தூக்கிப் பிடிக்கும் setup ஒரு clue. திடுக்கிடும் முடிவுகள் நினைவில் நிற்பவை. interesting film.

S.Raman, Vellore said...

தோழரே, எங்கள் வேலூர் கோட்ட வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 20.04.2013 அன்று குறும்பட விழா நடத்தவுள்ளோம். மாறுபட்ட ஒரு அனுபவத்தை தோழர்களுக்கு அளிக்கலாம் என்று திட்டம். எந்தெந்த குறும்படங்களை திரையிடலாம் என்று தோழர் கருணாவோடு விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.