Friday, March 15, 2013

"பவந்தர் "

(sandstorm )-பாலைவனப்  புயல் 


(பதிவுலக நண்பர் ஹரிஹரன் நல்ல திரைபடம் பற்றி எழுதுங்களேன் என்றுகேட்டிருந்தார் ! பதினைந்து ஆண்டுகளுக்குமுன் இந்தி ,ராஜஸ்தானி ,ஆங்கில மொழியில் வந்த "பவந்தர்" படம் பற்றி இதோ ) 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வந்த செய்தி!ராஜஸ்தான் மாநிலத்தில்பதேறி என்ற கிராமம்! அங்கு கிராமசெவகியாக பன்வாரி என்ற பெண் வசிக்கிறாள்! கிராமத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவது அவளுடைய பணிகளில் ஒன்றாகும் ! அவள் வந்த பிறகுஅத்தகைய திருமணங்கல்தடுத்து நிறுத்தப்பட்டன! ஒருகட்டத்தில்  மேல் சாதியினர் இதனல்கோபம்கோள்கிறார்கள்! பன்வாரிக்கு பாடம் கற்பிக்க முயலுகிறார்கள்! ஒருநாள் பன்வாரியும் அவள் கணவன் மோகனும் விறகுவெட்ட போகிறார்கள்! அப்போது மேல்சாதியின்ர் ஐந்து பேர் மோகனிய  அ டித்து கட்டிபோட்டு அவன் கண்ணெதிரிலேயே அவளை கூட்டாக கற்பழிக்கிறார்கள் ! 
 மோகனும் ,பன்வாரியும் போலீசிடம் போகிறார்கள் ! போலிஸ் மருத்துவ சான்று இல்லை!என்பதால் புகாரை எற்கமறுக்கிறது! மாவட்ட தலைநகர் சென்று மருத்துவ சான்று வாங்குகிறார்கள்! வழக்கு பதிவாகிறது !

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்சாதியினர்! வேதமந்திரங்கள்  ஓது பவர்கள்!  நீதிபதி  முன்னால் குற்றத்தை மறுக்கிறார்கள்! புனித கங்கை  நீ ரை கையில் வைத்துக் கொண்டு சத்தியம்செய்கிறார்கள்! இவ்வளவு புனிதமானவர்கள் இத்தகைய ஈனத்தனமான குற்றங்களை செய்திருக்க மாட்டார்கள் என்று கூறி நீதிபதி அவர்களைவிடுதலை செய்கிறார்! பன்வாரி நியாயம் கேட்டூஉயர் நீதி மன்றம் செல்கிறார் !........!

இதனைத்தான் "பவந்தர்" என்ற திரைப்படமாக கொண்டுவந்தார்கள் ! சட்டச் சிக் கலைத்தவிர்க்க ,பன்வாரி  சன்வரியாகவும் மோகன்  சோகன் என்றும் பாதேரி கிராமம் தாபேரி என்றும்பெயர் சூட்டப்பட்டது! 

நந்திதாதாஸ் சன்வரியாகவும், ரகுவீர் யாதவ் சொகனாகவும் ,நடித்தார்கள் ! சொகனை அடித்து குற்றுயிராக போட்டுவிட்டு அவன் முன்னலேயெ சந்வாரி கற்பழிக்கப்படும் காட்சி மனதை உருக்கிவிடும்! மயங்கிய நிலையில் சந்வாரி அரூகில் வந்து சோகன்   கையறு நிலையில் கதறும் காட்சியும், சந்வாரி கணவன கட்டிக்கொண்டுஅழும்காட்சியும் நம்   ஆஸ்கார் நாயகர்கள் 
பாடம் கற்க வேண்டிய ஒன்றாகும்! 

சந்வாரியின் துணிச்சலைப் போற்றி பிரதமர் நரசிம்மராவ் விருது வழங்கும் போது எனக்குவிருது வேண்டாம் நீதி வேண்டும் என்று சன்வாரிமுழங்குவதோடு படம் முடியும்1

ஜக் முந்திரா என்ற இளைஞர் இயக்கிய இந்த படம் 2000 ஆண்டு வெளிவந்தது! நாகபுரி சென்றிருந்தபோது !என் மகன் " அப்பா! ஒரு அருமையான காசட்! இந்தாருங்கள்! "என்றுகொடுத்தான்!

மதுரை வந்ததும் நண்பர்களுக்கு போட்டுகாட்டினேன்! மதுர புறநகர் செய்லாளர் ,மற்றும் மற்றும்மாதர்சங்கத்தை சேர்ந்த பொன்னுத்தாய் போன்ர தோழர்கள் பார்த்தார்கள்! 

நண்பர் யாரோ காசட்டை வாங்கிச் சென்றார்கள் !நண்பர் பெயரும்மறந்து விட்டது! காசட்டும் திரும்பிவரவில்லை !

u tube ல் உள்ளது ! தயவு செய்து பாருங்கள்!

  
 










5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் எழுத்துக்கள் படத்தின் அருமையை சொல்கின்றன... நன்றி ஐயா... you tube முகவரியை தேடிப் பார்க்கிறேன்...

hariharan said...

மிக்க நன்றி தோழரே! திரைப்படம் பார்த்தேன் நேற்றிரவு. வட இந்தியாவின் நடப்பை அப்படியே படமாக வந்திருக்கிறது. ஆனால் பிரதம மந்திரிவரை இந்த சம்பவம் சென்றும் தீர்ப்பு விலைக்கு உயர்சாதியால் வாங்கப்படுகிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி அய்யா. அவசியம் பார்க்கின்றேன்

அப்பாதுரை said...

பார்க்கத் தூண்டுகிறது. இன்றைய கட்டத்துக்கு இத்தகைய விழிப்புணர்வு படங்கள் அத்தனை ஈர்க்குமா தெரியவில்லை.
இந்தப் படம் எதனால் நல்ல படம் என்கிறீர்கள்? கதையமைப்பா, நடிப்பா? அதையும் சொல்லுங்களேன்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! நல்ல படம் என்பதற்கு இலக்கணம் வேறுபடலாம்! ஒவ்வொருவரின் தத்துவ பின்னணிக்கு தகுந்து மறுபடலாம்! ஏலியா காஜனின் இயக்கத்தில் மர்லன் பிறாண்டோ நடித்த "On the water front" எனக்கு மிகவும் பிடித்தபடம்! நடிப்பிலும் சரி, சமூக விமரிசனம் செய்த வகையிலும்சரி! அன்றய கால கட்டத்தில் (டல்லஸ், மக்கார்த்தி) காலத்தில் இப்படியோரு படமெடுக்க துணிவதே பெருமைக்குறியது ! உண்மையில் நடந்த நிகழ்ச்சி தான் "பவந்தர்"! மிகச்சிறந்த நடிகர்கள்மிகச்சிறந்த நடிப்பை வேளிப்படுத்தி, மிகச்சிறந்த கருத்தினை சொல்கிறார்கள்! ஆகவே நல்ல படமென்று கருதுகிறேன்! வேதம் ஓதும் மேல் சாதியினர்புனித கங்கை நீரை அர்க்கியமாக கொடுத்து குற்றத்தை மறுக்கிறார்கள்! அதனை -அதனை மட்டுமே சான்றாகக் கொண்டு நீதிபதி அவர்களை விடுவிக்கிறார்! இது நடந்த கதை! அது தான் படம்---கஸ்யபன்.