Wednesday, October 23, 2013

பொய்யிலே பிறந்து ,

பொய்யிலே வளர்ந்த ,

பா.ஜ.க .......!!!


இந்திய சுதந்திரத்திற்காக முதன் முதலாக போராடியவர்கள் யார் ? என்று கேட்டால் தமிழகத்தில் வெல்லூர் புரட்சி என்பார்கள். சிலர் கட்டபொம்மன் என்பார்கள் வேறுசிலர் பூலித் தேவன் என்பார்கள் !

வடக் கே  என்றால் சந்தால் பழங்குடி மக்களின் எழுச்சி என்பார்கள் !

வடக்கே நடக்கும் பொது தென் பகுதி அமைதி காத்தது ! தெற்கே நடக்கும் போது வட பகுதி அமைதி காத்தது ! ஒரேசமயத்தில் எழுச்சி அலை வீசவில்ல்லை !

இந்தியாவின் மெற்கில்பூனெ நகரத்திலிருந்து கான்பூர் வரை வடக்கே பஞ்சாபிலிருந்து சந்தா காடுகள்  வரை ஒரெசமயத்தில்பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து ,நவாபுகள், ஜமீந்தர்கள்,சிற்றரசர்கள், விவசாயிகள் போர்வீரர்கள் சாதாரண மக்கள் என்று அத்துணை பேரும் ஒரேசமயத்தில் எழ 1857ம் ஆண்டு எழுந்தார்கள் ! வரலாற்றாளர்கள் அதனை இந்தியாவில் முதல்சுதந்திர போராட்டமென்று கூறினார்கள் !

இந்திய கம்யூனிஸ்கட்ட்சியின் தலைவர் பி.சி.ஜோஷி "இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் "என்று வர்ணித்தார் !

அரசியல் கட்சிகள் அத்துணை பேரும் இதனை ஏற்றுக்கொண்டார்கள் ! இந்துத்வா வாதிகள் மட்டும் இதனை ஏற்று கொள்ள தயாராக இல்லை  !

இந்த எழுச்சிக்கு திட்டம் தீட்டி ராஜாக்கள் ,நவாபுகள்,ஜக்மீந்தார்கள் ,படைவீரர்கள்,மற்றும் சாதாரண் மக்கள் ஆகியோரை  ஒன்று  திரட்டி  இந்த போராட்டத்தை நடத்தியவர்  அஜிமுளா கான் என்ற முகம்மதியர் ஆவார் ! இதுவே இந்துத்வா வாதிகளின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கிறது !

அதேசமயம் இந்த பிரம்மாண்டமான எழுச்சியை  நிராகரிக்கவும் அவர்களால் முடியவில்லை ! அவர்களுக்கே உரிய இரட்டை நாக்குடன் இந்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர் "மங்கள்பாண்டே " அதற்குக் காரணம் மத சம்மந்தப்பட்டது என்றும் திரித்துக் கூறினர் !

சாவர்கர் எழுதிய "எரிமலை " என்ற நூலிலிரூந்து "மங்கள்பாண்டே -ஒருஎழுச்சி" என்ற திட்டப்படம் வரை இதனை வலியுறுத்தினர் !

"யுக் தரண் " என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் சத்யா பால் படாயித் என்பவராவார் ! இவர் அன்றைய ஜனசங்க அமைப்பின் உறுப்பினராக இருந்தார் !ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் செயல் வீரராகவும் இருந்தார் ! அஜிமுல்லா கானின் பெயரை  தான் சார்ந்த இயக்கம் மறுப்பதையும்,மறைப்பதையும்கண்டு வெகுண்டு எழுந்தார் ! ஆர்.ஆர்.யாதவ் என்பவர் மூலம் குவாலியர்,கான்பூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பி அங்குள்ள வருவாய்த்துறை ஆவனங்கள சேகரித்து வரச் செய்தார் ! அஜிமுல்லாகான் பற்றிய செய்திகளை சரிபார்த்து யாதவ் ஒரு சிறு நூலை எழுதினார் ! 

அதனை படாயித் சரிபார்த்து அதில் ரங்கோ பாபுஜி,அஜிமன் பாயி ஆகியோரின் வீரம் செறிந்த போராட்டங்களையும் சேர்க்கச்  சொன்னார் 1இந்த பிரசுரத்தை புராக்ரசிவ் பிரசுரத்தார்கள் "ப்டாயித்-யாதவ் "பெயரில் பிரசுரித்துள்ளனர் !(2003) !

இந்தியிலிருந்து தமிழிலும்,தமிழிலிருந்து இந்தியிலும் முற்போக்கு இலக்கியங்களையும், பிர்சுரங்களையும்மொழிபெய்ர்த்துவரும் முத்து மீனாட்சி அவர்கள் 2007ம் ஆண்டு தமிழில் கொண்டுவந்துள்ளார்கள் ! முத்து மீனாட்சி அவர்கள் தென்சென்னை தமு எ சவின் உறுப்பினர் என்று பெருமையோடு  கூறிக்கொள்கிறார் ! 

பதிப்பகம் :
தி டீப் அறக்கட்டளை ,
14a , சோலையப்பன் தெரு,
சென்னை-600014.
( பாரதி புத்தகாலயத்திலும் கிடக்கலாம் )
 6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாத செய்திகள் ஐயா. நன்றி. தமிழில் வெளியான நூலின் பெயரை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் ஐயா.

அப்பாதுரை said...

மிக மிக சுவாரசியமான தகவல்கள்.
புத்தகத்தை அவசியம் படிக்கிறேன்.

kashyapan said...

கரந்தை அவர்களே! மன்னிக்கவும் ! அது ஒரு சிறு பிரசுரம் ! "அஜிமுல்லாகான் " என்ற பெயரில் வெளிவந்தது ! (பக்;20 விலை 10ரூ)---காஸ்யபன் .

சே. குமார் said...

அறியாத செய்திகளை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா....

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா. புத்தகத்தினை அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா

s suresh said...

அறியாத பல தகவல்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!