Friday, November 22, 2013

தரிசனம் .....!


மாதுரை பகுதி காப்பீட்டு உழியர் சங்கத்தின் "எடுபிடிகளில்"நானும் ஒருவன் ! அகில இந்திய தலைவர்கள் வரும் பொழுது அவர்களின் சொந்த தேவைகளை கவனிக்கும் பொறுப்ப்பை சங்கத்தலைமை எனக்குத்தரும்! மிகவும் விருப்பத்தோடு அதனைச்செய்வேன் !  அந்த மாபெரும் தலைவர்கள் தனிமையில் விகசிக்கும் மாண்பைப் பார்ப்பதில் எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம் !

ஒருமுறை சரோஜ் சவுத்திரி அவர்கள் வந்திருந்தார்கள்.அவர்களை ரயில் நிலையத்திலிருந்து தங்கும்விடுதி அழைத்து திருப்பி அனுப்பும் வரை பொறுப்பு கட்டியிருந்தார்கள் !

மதுரைமேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் விடுதி ! காலைசிற்றுண்டி அருமையாக ஏற்பட்டு செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ! 

"com ! morning breakfast ?"

"one idli and a cup of milk" என்றார் 

என் முகத்தில் தோன்றிய அதிருப்தியை புரிந்து கொண்டவர் போல பேசினார் !

"நான் விருந்து சாப்பிட்டு வயிற்று வலியில் படுக்க வரவில்லை  ! நூற்றுக்கணக்கான தோழர்களை சந்திக்க வந்திருக்கிறேன் ! necserily  i will restrict my diet "என்றார் !

இட்லி வந்தது ! பிய்த்து பாலில் முக்கி சாப்பிட்டார் !

மதிய உணவிற்கு அழைத்துச் சென்றேன் ! விடு \தியை விட்டு இறங்கினோம் !
வாசலில் ஒரு வயதான பெண் "பாபு பாபு " அவரை நச்சரித்தார் ! அந்த பிசைக்கரியை விரட்டி  விட்டு அவரை  டவுண்  ஹால்  ரோட்டில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றேன் ! அந்தக் கிழவி விடவில்லை ! துரத்திக் கொண்டே வந்தார் ! நாங்கள் உணவு விடுதிக்குள் சென்று விட்டோம் ! அரைமணி நேரமாவது ஆகியிருக்கும் ! வெளியே வந்தோம் ! காத்திருந்த அந்தக் கிழவி மீண்டும் சரோஜினை  நச்சரிக்க ஆரம்பித்தாள் ! எனக்கு கோபம் வந்தது !

"ச்சீ !  நாயே வழிய விடு ! " என்று அதட்டினேன் !

இரண்டு அடி முன்னே சென்ற சரோஜ் திரும்பினார் ! எங்கள் அருகில் வந்தார் !

தன் ஜிப்பா பாக்கட்டில் கைவிட்டு துழாவினர் ! ஒரு ரூ பாய் நாணயத்தை எடுத்து அந்தக் கிழவியின் தட்டில்  போட்டா ர் !  

அவர் பின்னால் நடந்த என் தோளில் கையைப்  போட்டு 

"it is not her mistake comrade !" என்றார் !


அவர் கண்களைப் பார்த்தேன் !

கலங்கி இருந்தது !

அந்த முகத்தில் 
 மார்க்சை,எங்கல்சை,லெனினை ,ஸ்டாலினை,மாவோவை ,இ.எம் எஸ்ஸை 

தரிசித்தேன் !!! 





 


 








3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றாலே இராமலிங்க அடிகளார் அவரின் நினைவுதான் வந்தது. நன்றி ஐயா

'பரிவை' சே.குமார் said...

அந்த நல்ல உள்ளம் வாழ்க...
அருமை.

S.Raman, Vellore said...

படிக்கும் போதே மிகவும் பெருமிதமாக உள்ளது தோழர். தோழர் சரோஜ் ஓய்வு பெற்ற பிறகு பணியில் சேர்ந்ததால் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரது எழுத்துக்கள் அவரோடு ஒரு நெருக்கத்தை கொடுத்து விடுகிறது.